Showing posts with label வி-கார்ட் ஸ்டெபிலைஸர் நிறுவனர் பேட்டி. Show all posts
Showing posts with label வி-கார்ட் ஸ்டெபிலைஸர் நிறுவனர் பேட்டி. Show all posts

Monday, September 22, 2014

வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை கொடுங்கள்: வி-கார்ட் ஸ்டெபிலைஸர் நிறுவனர் பேட்டி

கொச்சோசப் சிட்டிலபில்லி, நிறுவனர். வி-கார்ட்.
கொச்சோசப் சிட்டிலபில்லி, நிறுவனர். வி-கார்ட்.
மீன் பிடித்தலையும், சுற்றுலா வையும் நம்பி இருந்த கேரளாவில், 1980களின் ஆரம்பத்தில் ஒரு தொழில் முனைவை ஆரம்பித்தவர் கொச்சோெசப் சிட்டிலபில்லி. வி-கார்ட் நிறுவனத்தின் நிறுவனர். இவரது ஆரம்பகால வாழ்க்கை, தற்போதைய நிலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கொச்சியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அந்த உரையாட லிலிருந்து...
ஸ்டெபிலைஸர் தயாரிக்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?
நான் இயற்பியல் படித்தவன். படிக்கும்போது இஸ்ரோ உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதிர்ஷ்ட வசமாகவோ, துரதிர்ஷ்டவசமா கவோ எனக்கு வேலை கிடைக்க வில்லை. அதனால் எனது கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
சேர்ந்த சில காலங்களில் அந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை செய்தேன். அந்த சமயத்தில் பலர் தனிப்பட்ட முறையில் பழுதுபட்ட ஸ்டெபிலைஸர்களை கொடுத்து சரி செய்யச் சொன்னார்கள். அவ்வப்போது அதை சரி செய்தேன்.
அந்த நிறுவனத்தில் மூன்று வருடங்கள் வேலை செய்தேன். 150 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்து 800 ரூபாய்க்கு வளர்ந்திருந்தேன். அந்த நிறுவனத்தில் பெரிய வளர்ச்சி இருப்பது போல தெரியவில்லை.அதனால் அங்கிருந்து வெளியேறி அப்பாவின் உதவியுடன் சிறிய தொழிற்சாலை ஆரம்பித்தேன். எனக்கு தொழில் முனைவோ, நிர்வாகமோ எதுவும் தெரியாது. 800 ரூபாயை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும். ஒரு ஸ்டெபிலைஸர் விற்றால் 50 ரூபாய். 25 விற்றால் 1250 ரூபாய். இதுதான் என் எண்ணம்.
வி-கார்ட் பெயரை எப்படி வைத்தீர்கள். வி என்றால் வெற்றியா என்று பலரும் இப்போது கேட்கிறார்கள். ஆனால் வி என்றால் வோல்டேஜ். அதை பாதுகாப்பது வி-கார்ட். அவ்வளவுதான் என் எண்ணம்.
சந்தை உங்களை ஏற்றுக்கொண்டதா?
ஆரம்பத்தில் நான் தனியாக தயாரித்ததால் நிறுவனங்கள் தயாரிப்பதை விட கொஞ்சம் விலை அதிகம். இருந்தாலும் மெக்கானிக்குகளிடம் பேசினேன். கடைகளில் விற்றால் பணம் கொடுங்கள் என்று பேசித்தான் விற்பனை செய்தேன். இருந்தாலும் அப்போது இருந்த மின்சாரம் சீரற்ற தன்மை இருந்தது. அப்போது கல்ப் நாடுகளில் இருந்து பணம் வந்ததால் குளிர்சாதனபெட்டி, டிவி உள்ளிட்டவை வாங்கும் போக்கு அதிகமாக இருந்த காரணங்களால் விற்பனை நடந்தது. ஆரம்பத்தில் மத்திய கேரளாவில்தான் விற்றுவந்தோம். அதன் பிறகுதான் விரிவாக்கம் செய்தோம்.
எப்போது உங்களது தயாரிப்பை டைவர்சிபை செய்ய ஆரம்பித்தீர்கள்?
1985களில் பம்ப் தயாரிக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் வீடுகளுக்கு பம்ப் தேவைப்பட்டது.
35 வருடங்கள் முடிந்தாலும் விகார்ட் என்றாலே ஸ்டெபிலைஸர் என்றுதானே நினைவுக்கு வருகிறது. இது உங்களுக்கு பாதகம் இல்லையா?
கடந்த 5 வருடங்களாக மற்ற பொருட்களையும் அதிகம் விளம்பரப்படுத்தி இருக்கிறோம். மேலும், உண்மை என்னவென்றால் எங்களது மொத்த விற்பனையில் ஸ்டெபிலைஸர்களின் பங்கு இரண்டாவதுதான். எங்கள் வருமானத்தில் அதிக பங்கு வகிப்பது வயர்கள்தான்.
கன்ஸ்யூமர் டியுரபிள் பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது பொருட்களை அனைத்தும் ஒரே ஷோரூமில் வைத்து விற்கிறார்களே? உங்களிடமும் பலவகையான பொருட்கள் இருக்கிறது? உங்கள் திட்டம் என்ன?
இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை. எங்களது வினியோ கஸ்தர்களிடம் நாங்கள் போட்டி போட விரும்பவில்லை.
பேக்வேர்ட் இண்டகரேஷன் திட்டத்தின் படி வேறு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா?
இப்போதைக்கு முழுமையான திட்டம் இல்லை. பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளை சந்தையில் உருவாக்க முடியாது.
ஆரம்பத்தில் தொழில்முனைவு பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொன்னீர்கள். தொழில்முனைவு ஆரம்பித்து 37 வருடங்கள் முடிந்துவிட்டது. உங்கள் நிர்வாக திறன் குறித்து சொல்லுங்கள்?
எல்லாமே Trial and Error. எத்தனை தவறு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒரே தவறை பல முறை செய்தால் நீங்கள் தோற்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கிடையே நான் பல பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன். இப்போதும் எனக்கு பைனான்ஸ் என்றால் போர்தான். தொழில் முனைவோர்களுக்கு அனைத்து துறைகளிலும் அனுபவம் இருக் காது. அதை பயிற்சி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். நான் தொழில் முனைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பேன்.
மேலும் மேனேஜ்மெண்ட் தியரி என்று ஒன்று பெரிதாக இல்லை. வாடிக்கையாளர்களுக்கு தேவை யானதை கொடுங்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள் அவர்கள் உங்களை பார்த்துக் கொள்வார்கள். அதிருப்தி வாடிக் கையாளர்கள் உங்களின் 10 வாடிக்கையாளர்களை தடுத்து நிறுத்த முடியும்.
வீகா லேண்ட் ஏன் ஆரம்பித்தீர்கள்?
நீண்ட கால வளர்ச்சிக்கு பிஸினஸை பிரிப்பது அவசியம். அதனடிப்படையில்தான் வீகா லேண்ட் உருவானது. 15 வருடங்களுக்கு முன்பு வெளிநாடு களுக்கு சென்றபோது அங்கு இதுபோல தீம் பார்க்குகள் இருந்தன. கொச்சியிலும் அதே போல ஆரம்பிக்கவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் வீகா லேண்ட். இது மட்டுமல்லாமல் வேறு சில பிஸினஸ்களிலும் இருக்கிறோம்.
வீகா லேண்டை ஏன் வொண்டர் லா என்று பெயர் மாற்றம் செய்தீர்கள்?
பெங்களூருவில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்போது வேறு பெயர் வைக்க முடிவு செய்து எங்களின் ஊழியர்களுக்கு போட்டி வைத் தோம். அதில் பல பெயர்கள் இருந்தது. வொண்டர் லேண்ட் என்ற பெயர் பிடித்தது. ஆனாலும் அதில் சுவாரஸ்யம் இல்லை என்பதால் வொண்டர் லா என்று பெயர் மாற்றி பெங்களூருவில் ஆரம்பித்தோம்.
இப்போது கொச்சியில் பெயர் மாற்றினாலும் வாடிக்கை யாளர்கள் வருவார்கள் என்பதால் அனைத்தையும் வொண்டர் லா என்ற பிராண்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம்.


thanx - the hindu