Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Monday, February 20, 2012

உடும்பன் - தனியார் கல்வி எதிர்ப்பு வேள்வி - சினிமா விமர்சனம்

http://www.cineikons.com/wp-content/uploads/2012/02/udumban.jpg

ஹீரோ கழக எம் எல் ஏ மாதிரி ஒரு சாதா திருடன்.. அவனுக்கு ஆ ராசா மாதிரி பல்க்கா கொள்ளை அடிக்கனும்னு ஆசை வந்துடுது.. உடனே என்னா பண்றான்.. ஈரோடு  என் கே கே பி ராஜா ஈரோடு ராயல் தியேட்டரை வளைச்சுப்போட ஐடியா செஞ்சாரே அது மாதிரி திருடுன பணத்தை எல்லாம் சேர்த்து ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கறான்.. அதாவது கட்டறான்..

ஹீரோவுக்கு ஒரு அண்ணன்.. அவனும் ஒரு திருடன் கம் ரவுடி தான் . பின்னே மொள்ள மாரிக்கு அண்ணன் ஒரு முடிச்சவுக்கியாத்தானே இருக்க முடியும்? ஹீரோ சரியா மாமூல் தராததால் போலீஸ் பிடிச்சு ஜெயில்ல போட்டுடுது.. இப்போ அந்த ஸ்கூல்க்கு அண்ணன் தான் இன்சார்ஜ்.. 

அண்ணன் ராகுல் காந்தி மாதிரி ஒண்ணுமே தெரியாம இருந்தவர் திடீர்னு அஞ்சா சிங்கம் அழகிரி மாதிரி செம டேலண்ட் ஆகி மக்கள்ட ஃபீஸ்ங்கற பேர்ல கொள்ளை அடிக்கறார்.

ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆன தியாகி ஹீரோ உடனே அண்ணனை போட்டுத்தள்ள வீராவேசமா கிளம்பறார்.. அப்போ அவங்கம்மா வந்து தடுத்து ஒரு சொம்பு பால்ல கை அடிச்சு சத்தியம் வாங்கிக்கறாங்க, எந்த சூழ்நிலையிலும் நீ அண்ணனை எதுவும் செய்யக்கூடாதுன்னு..


http://123tamilcinema.com/images/2012/02/7c284d18-3f35-47dc-aed4-c36e4cee8a0e_S_secvpf.jpg

கலைஞர் - அழகிரி - ஸ்டாலின் - தயாளு அம்மாளை நக்கல் அடிக்கறாங்களா?அல்லது தனியார் கல்வி மையங்களை காய்ச்சறாங்களா? அப்டின்னு முடிவு எடுக்கறதுக்குள்ள படம் முடிஞ்சுடுது அவ்வ்வ்வ்வ்

ஹீரோ ஏதோ பைக் வீரராம் பேரு திலீப்பாம்.. சுமாரா நடிப்பு எட்டி பார்க்குது.. ஆனா அவர் தன் எக்சசைஸ் பாடியை காட்டறதுக்கு காமிரா ஆங்கிள்ல 13 டைம் க்ளோசப்ல கட் பண்ணி கட் பண்ணி காட்றது ரொம்ப ஓவருங்கோவ்.. தானைத்தலைவி கும்மீதா சாரி நமீதாவைக்கூட அப்டி கட்னது இல்ல அடச்சே காட்னது இல்ல ..

படத்துல நமக்கு புதுசு அந்த உடும்புதான்.. உடும்பு பிடின்னு நாம கேள்விப்பட்டிருப்போம் .. ஆனா அது பாருங்க ஒரு பெரிய பில்டிங்க் மொட்டை மாடில கயிற்றுல கட்டி தூக்கிப்போட்டா கெட்டியா பிடிச்சுக்குது. ஹீரோ இன்னொரு முனையை பிடிச்சு ஏறிடறாரு.. அவ்ளவ் வெயிட் எப்படித்தான் தாங்குதோ..? லாஜிக் மிஸ்டேக்ல இதையும் சேர்த்திருப்பேன், நல்ல வேளை ஒரு உயிரியல் நிபுணர்ட்ட கேட்டேன், ஆமா அப்டி தாங்குனுட்டாரு.. ( நல்ல வேளை நான் பல்பு வாங்கலை.. )

ஹீரோயின் ஏதோ சனாவாம்.. எனக்கே பிடிக்கலை.. ( பொதுவா 40 மார்க் ஃபிகரைக்கூட நாம நல்லாலைன்னு சொல்ல மாட்டோம் ஹி ஹி )பாப்பா தேமேன்னு கடனுக்கு வந்துட்டு போகுது.. 

படத்துல செம காமெடி என்னன்னா ஹீரோயின் மாறு வேஷத்துல வருது.. எப்படின்னா தேங்காய் எண்ணெய் தலைக்கு தேச்சு அழுந்தப்படிய  தலை வாரி சேலை கட்டுனா டீச்சர்.. தலைக்கு குளிச்சு சுடிதார் போட்டிருந்தா டார்ச்சர் டூ வில்லன்.. அடங்கப்பா சாமி முடியல..

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=9079&option=com_joomgallery&Itemid=78

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. தனியார் கல்விக் கொள்ளையை தைரியமாகச் சாடி  எடுத்துக் கொண்ட கதையில் எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் தராமல் உடும்புப் பிடியாக நின்று சொல்ல வந்த விஷயத்தை நயன் தாரா பச்சை குத்தியது போல் பதியும் படி சொன்னது..

2.  உடும்பு பற்றி ஓரளவு பதிவு செய்த முதல் தமிழ் படம் என்ற பெயர்..

3. தனியார் நிறுவனக்கல்வி நிறுவனங்களை நேரடியாக தாக்கிய முதல் தமிழ்ப்படம் என்ற அளவில்.. ( ஜெண்ட்டில்மேனில் லைட்டாக)

4. வசனகர்த்தா நறுக் சுருக் வசனங்கள்..

5. வானுக்கு நிலவு வேண்டும், வாழ்வுக்கு புகழ் வேண்டும்.. பாட்டு, ஓரம் கிழிஞ்சாலும் பாட்டு, காற்றினில் தான் இன்பம், பள்ளிக்கூடம் 1 மணிக்கே பாடல் 4ம் கேட்கற அளவு இருக்கு.. 


http://www.newsonweb.com/newsimages/February2012/bdc443ee-6e0c-455b-92e8-5f8fdd12e8711.jpg

இயக்குநர் பல்பு வாங்கும் இடங்கள்


1.  ஹீரோ ஒரு இடத்துல 100 பவுன் நகையை கொள்ளை அடிக்கறான், அப்போ போலீஸ் மாமூல் கேக்குது, என்னமோ கர்ண மகாராஜாவுக்கு தம்பி மாதிரி அப்படியே குடுக்கறார் ஹீரோ.. போலீஸ்னா அதிக பட்சம் 40% குடுத்தா போதாதா? ஈரோடு மாவட்டம் எவ்லவோ தேவலை ஹி ஹி

2. எந்த கேனயனாவது 2 ஃபிகர்சை ஒரே டைம்ல கரெக்ட் பண்ண பார்த்து 2 பேர்ட்டயும் மாட்டுவானா? இந்த படத்துல ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஜிகிடி கிட்டே பூ தர்றான்.. அவ தலையை குனிஞ்சிருக்கும்போதே அவ தோழிக்கும் தந்து மாட்டிக்கறான்.. கேட்டா காமெடியாம் அவ்வ்வ்வ்வ்வ்

3.  இன்ஸ்பெக்டர் தங்கச்சி படு கேவலமா இருக்கற ஹீரோ ஃபிரண்டை பார்த்து அப்படி வழியுதே.. பாப்பா ஆம்பளைங்களையே பார்த்திருக்காதா?

4. ஹீரோயின் ஹீரோ கிட்டே எதோ லெட்டர் தருது.. லவ் லெட்டர்னு டெம்போ ஏத்தறாங்களாம்.. அப்புரம் பார்த்தா.  “ பள்ளிக்கூடத்தில் சமூக விரோத செயல் நடை பெறுகிறது” அப்டினு எழுதி இருக்கு.. இந்த ஈர வெங்காயத்தை நேர்லயே சொல்றதுக்கு என்ன? வாய்ல கொழுக்கட்டையா?


5. வில்லன் கொலை பண்ற சீனை ஹீரோயின் மரத்துல செல் ஃபோனை ஃபிட் பண்ணி வெச்சுட்டு 10 அடி தூரம் நடக்கறா.. டக்னு ஹீரோயின் கைல அதே ஃபோன் வந்துடுது அது எப்படி?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Sana/sana-udumban-actress-065.jpg

6. வில்லனுக்கு டவுட்.. ஹீரோயிண்ட்ட இருக்கற செல் ஃபோனை வாங்கி செக் பண்ண கேட்கறான். டக்னு ஹீரோ அதே மாடல் செல்ஃபோனை தன் கிட்டே இருந்து எடுத்து கை மாத்தி விடறான்.. அது எப்படி அவனுக்கு முன் கூட்டியே தெரியுமா?

7. வில்லன் ஹீரோயினை துரத்திட்டு வர்றான்,, ஹீரோயின் சேலை கட்டி இருக்கா.. ஒரு இடத்துல வந்து சுடிதார் மாத்திட்டு வர்றா.. அப்போ அடையாளம் தெரியாதா?  டக்னு செல் ஃபோன் ரிங்க் டோன் கேட்குது.. உடனே தான் வில்லன் கண்டு பிடிக்கறான்.. அடங்கோ..

8,  நாக்கை பிடுங்கிட்டு சாவுன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம்.. நிஜமாவே ஃபீஸ் குடுக்க முடியாம ஒருத்தர் நாக்கை புடுங்கிட்டு சாகிற மாதிரி ஒரு சீன்.. சில டாக்டர்களிடம் கேட்ட போது அப்படி சாக சான்ஸ் இல்லங்கறாங்க. அப்படியே செத்தாலும் வாய்ல ரத்தம் ஒரு சொட்டு கூட வராம இருக்குமா?

9. வில்லன் கிட்டே இருக்கற அடியாளுங்க 4 பேரும் நம்பியார் கணக்கா ஓவர் ஆக்டிங்க் பண்ணிட்டு அங்க சேஷ்டை எல்லாம் பண்ணிட்டு முறைக்கறாங்க.. 100 பேட்டா வாங்கிட்டு எதுக்கு 1 லட்சம் ரூபா நடிப்பு?

10. காதல்ங்கறது தானா வரனும்.. ஆனா ஹீரோயின் வியாபாரம் பேசறா.. உங்க அண்ணன் செய்யற கல்வித்திட்ட மோசடிகளை அழி.. அப்போதான் லவ்வுவேன்கறா.. அதுக்கும் ஹீரோ ஓக்கேங்கறார் இதுதான் உங்க ஊர்ல =லவ்வா?


11. ஹீரோ ஓப்பனிங்க்ல ஹீரோயினை கவர டான்ஸ் போட்டில கலந்துக்கிட்டு  டான்ஸ் ஆடாம எதுக்கு ஜிம்னாஸ்டிக் வேலை எல்லாம் செய்யறாரு?

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=9086&option=com_joomgallery&Itemid=78

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 

சி .பி கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம்


ஈரோடு அண்ணா தியேட்டர்ல பார்த்தேன்

படத்தில் உள்ள சாட்டையடி வசனங்கள் தனிப்பதிவாக விரைவில்

http://www.tamilkurinji.in/images_/udumban-poster-10_1328195612.jpg

Friday, February 10, 2012

புற்று நோயை வெற்று நோய் ஆக்குவது எப்படி? -நேசம்+யுடான்ஸ் கேன்சர் விழிப்புணர்வுப் போட்டி

1980 களில் வந்த சினிமா படங்கள் நம் மக்கள்ட்ட ஏற்படுத்துன பயம் இன்னும் போகலை..அதாவது கதைப்படி ஹீரோ அல்லது ஹீரோயின்க்கு கேன்சர் வந்திருக்கும்.. டாக்டர் தேதி குறிச்சுடுவார்.. நிர்ணயிக்கப்பட்ட மரணம் என்பது போல் ஒரு தவறான  கற்பிதம் மக்கள் மனதில் பரவிடுச்சு.. அது இன்னும் நிலைத்திருப்பது வேதனை தான்..

சினிமா பிரபலங்களான லிசா ரே, கவுதமி , மம்தா மோகன் தாஸ் உட்பட பல நடிகைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களே.. அதனால் யாரும் கேன்சர் என்றால் மரணம் தான் என எண்ணத்தேவை இல்லை..



இன்று மாடர்ன் டெக்னாலஜிகள் வந்து விட்டது.. கீமோதெரபி உட்பட்ட பல சிகிச்சைகள் குணம் அடைய போதுமான மருத்துவ முறைகள் வந்து விட்டன.. எனவே எந்த விதமான மரண பயமும் இல்லாமல் இந்த நோயை அணுகலாம்.. எய்ட்ஸ் போல் இது உயிர்க்கொல்லி நோய் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..


புற்று நோய் என்பது என்ன? அதுல என்னென்ன வெரைட்டி இருக்கு?நோய் வரும் முன் காப்படு எப்படி? வந்த பின் சிகிச்சை மூலம் குணம் ஆவது எப்படி? நோயின் தீவிரத்தை குறைப்பது எப்படி? என்பதை எளிமையா, பாமரனுக்கும் புரியற மாதிரி பார்ப்போம்.. 

புற்று நோய் என்பது குறிப்பிட்ட வயது வந்த ஆட்களைத்தான் தாக்கும் என்றில்லை, அது யாரை வேணும்னாலும் தாக்கலாம்.. ஆனாலும் வயது அதிகம் ஆக ஆக வாய்ப்பு அதிகம்,, 

நம்ம உடம்பு பல செல்களால் ஆனது.. செல்கள் பிரிந்து பல புதிய செல்களை உருவாக்குது.. பழைய செல்கள் இறந்து வெளியேறாமல் உள்ளேயே தங்கிடுது.அதுதான் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம்

புற்றுநோய் அதிகமாக பெண்களை தாக்குகிறது..

 புற்று நோய் வருவதற்கான காரணங்கள் +.யார் யாருக்கெல்லாம் நோய் தாக்கும் அபாயம்?
1. அதிகமாக உடலில் படும் சூரிய ஒளி

2. அதிக உடல் எடை போடுதல்

3. உடல் பயிற்சி செய்யாமல் உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல்

4. கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உபயோகம் செய்யும் பெண்கள்

5.மிக தாமதமாக முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள்

6. மிகச்சிறிய வயதில் பூப்டையும் பெண்கள்

7. தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு

8. மிகத்தாமதமாக மாத விலக்கு நிற்கும் பெண்கள் ( மெனோபாஸ் லேட்)

9. கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் உண்பவர்கள், மாமிச உணவு அதிகம் உண்பவர்கள்

10. குடும்பத்தில் அம்மா அல்லது சகோதரர்களுக்கு இருந்தால் அந்த பெண்ணுக்கு வர வாய்ப்பு அதிகம்

 புற்று நோய்களின் வகைகளும், வருவதற்கான காரணங்களும்

 1. செஸ்ட் கேன்சர் - ( மார்புப்புற்று) பெரும்பாலும் இது பெண்களுக்கே வரும், ஒரு குழந்தை மட்டுமே பெற்ற பெண்கள்,தாய்ப்பால் தராத பெண்கள்,குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், குண்டான உடல் வாகு கொண்ட பெண்கள்க்கு செஸ்ட் கேன்சர் வருகிறது

2. லங்க்ஸ் கேன்சர்  - (நுரையீரல் புற்று ) புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்க்கு வரும் வாய்ப்பு அதிகம்.. ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கான் தொழிற்சாலைகளில்  பணி புரிபவர்கள் , சிமெண்ட் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள்க்கு வரும் வாய்ப்பு அதிகம்

3. மவுத் கேன்சர்  - (வாய்ப்புற்று) -புகையிலை உபயோகிப்பவர்களுக்கு,பான் பராக், ஜர்தா பீடா அடிக்கடி சாப்பிடுபவர்கள், பற்களை முறையாக பராமரிக்காமல் அஜாக்கிரதையாக இருப்பவர்கள்க்கு இது வரும் வாய்ப்பு அதிகம்.

4. லிவர் கேன்சர் - (ஈரல் புற்று ) -  மது பான வகைகளை அதிகம் உபயோகிப்பவர்கள், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்கள்க்கு வர வாய்ப்பு அதிகம்

5. ஸ்டொமக் கேன்சர்  -( வயிற்றுப்புற்று) -  முறையில்லாமல் கண்ட நேரத்தில் சாப்பிடும் உணவுப்பழக்கம் கொண்டவர்கள் அதாவது நினைச்ச நேரம் சாப்பிடுபவர்கள்க்கு,ஜங்க் ஃபுட் எனப்படும் பாக்கெட்களில் விற்கப்படும் நொறுக்ஸ்களை அதிகம் உண்பவர்கள்க்கு,சரக்கு அடிக்கற குடிமகன்கள்க்கு, தம் அடிக்கற ஆட்களுக்கு இது வர வாய்ப்பு அதிகம்

6.  ஸ்கின் கேன்சர் - ( தோல் புற்று  ) - சோரியாசிஸ் எனப்படும் தோல் வியாதி வந்தவர்கள், நாட்பட்ட ஆறாத புண்கள் உள்ளவர்களுக்கு, அதிகமாக வெய்யில்லில் உடல் காய்பவர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்

7. யூட்ரஸ் கேன்சர் -(கருப்பை புற்று) - கணக்கு வழக்கே இல்லாம ,வகை தொகை இல்லாம குழந்தை பெத்துக்கற பெண்கள்க்கு,ஹெச் பி வி வைரஸ் தாக்கிய பெண்கள்க்கு இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம்.. பல ஆண்களுடன் உறவு வைக்கும் பெண்கள்,பிறப்பு  உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளாத பெண்கள்க்கு வர வாய்ப்பு அதிகம்

8.  பிளட் கேன்சர்  ( ரத்தப்புற்று) - புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்க்கு, சில சிகிச்சைகளின் போது இன்ஃபெக்‌ஷன் ஏற்படுபவர்களுக்கு இது அதிகம் வருகிறது.. பரம்பரைத்தன்மையும் ஒரு காரணம்.. அதிக வயது ஆனவர்களுக்கும் வரலாம். 

விந்தையான விஷயம் - மேற்கொண்ட எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களுக்கும் கேன்சர் வர வாய்ப்பு உண்டு.. நமக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லையே என ஜாலியாக இருக்கக்கூடாது.. 35 வயதுக்கு மேல் முழு உடல் செக்கப் செய்து கொள்வது அவசியம்.. 

புற்று நோய் வராமல பாதுகாப்பது எப்படி?

1. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்தல்

2. பச்சை காய்கறிகள் அதிகம் உட் கொள்தல்

3. வைட்டமின் டி குறைபாடு வராமல் பார்த்துக்கொள்ள  அந்த வைட்டமின் சத்து உள்ள உணவு வகைகளை உண்ணுதல்

4. பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் குடிக்காமல் தவிர்த்தல்,அழகு சாதனப்பொருட்கள் அதிகம் உபயோகிக்காமல் இருத்தல் நலம்..

5. ரோட்டோரம் விற்கும் நடைபாதை கடைகளில் பஜ்ஜி, போண்டா சிப்ஸ் வகைகள் சாப்பிடாமல் தவிர்த்தல் நலம், ஏன் எனில் அவர்கள் ஒரே எண்ணெயை மீண்டும் , மீண்டும் உபயோகிப்பதால் அது உடல்க்கு கெடுதல் விளைவிக்கிறது

 புற்று நோய் வந்ததற்கான அறி குறிகள்

1. வாயில் கொப்புளங்கள் வந்து ஆறாமல் இருத்தல்

2. வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படுதல்

3. மார்பில் வலி உள்ள அல்லது வலி அற்ற கட்டிகள் தோன்றுதல்

4.மார்பகம் வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருத்தல்

5. உடல் உறவின்போதோ, அதற்குப்பின்போ ரத்தக்கசிவு இருப்பது

6. நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் இருத்தல்

7. அதீத இருமல், உணவு உண்ணுவதில் ஏற்படும் மாற்றங்கள்

8. இயற்கை உபாதைகளில் வழக்கத்திற்கு மாறான சில மாற்றங்கள்


சிகிச்சை முறைகள்

1. கதிர் இயக்க சிகிச்சை 2.  அறுவை சிகிச்சை 3  மருத்துவ சிகிச்சை

இப்போதெல்லாம் பெரும்பாலும் கதிரியக்க சிகிச்சையே அளிக்கப்படுகிறது..

பீட்ரூட், கீரை வகைகள் சேர்த்துக்கொள்வது நல்லது..

செல் ஃபோன்கள் அதிகம் பயன் படுத்துவதால் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.. இது முழுதாக நிரூபிக்கப்படலை, இருந்தாலும் அனைவரும் செல் ஃபோன் பயன் பாட்டை குறைக்கனும். தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒரே காதில் வைத்துப்பேசுவது கூடாது.. .

கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மையம் மிக புகழ் பெற்றது.. அது போக அனைத்து முக்கிய நகரங்களில் புற்று நோய்க்கான சிகிச்சை மையங்கள் உள்ளன..

நாம் செய்ய வேண்டியது ஒன்று தான் . 35 வயது டூ 40 வயது ஆனவர்கள் உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்வதே ..

புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபலங்கள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்க்.. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.. இதில் சோனியாவுக்கு சிகிச்சை முடிந்தது.. நலமாக உள்லார்.. யுவராஜ்க்கு இப்போதான் சிகிச்சை ஆரம்பித்து உள்ளார்கள்

புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவோம், அதை வெற்று நோய் ஆக்குவோம்.. ஆரோக்யமான உலகம் படைப்போம்.. நாளைய உலகமும், இன்றைய உலகமும் நம் கையில்..

ஆகவே செக்‌ஷன் 302-ன் படி - சிறுகதை -நேசம்+யுடான்ஸ் கேன்சர் விழிப்புணர்வுப் போட்டி

கோர்ட் வளாகமே மகளிர் அமைப்புகளாலும், மனித உரிம கழகத்தினராலும் பரபரப்பாக கூச்சலுடன்,  இன்னும் கொஞ்ச நேரத்தில் கூண்டில் ஏற இருக்கும் தணிகைவேலுவுக்காய் காத்திருந்தது.

யார் இந்த தணிகைவேலு ?அவனுக்காக ஏன் இவர்கள் காத்திருக்கிறார்கள்? முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கைதானவனா? இல்லை எதாவது பெண்ணின் மானத்தை  காப்பாற்ற போய் ஜெயிலுக்கு போனவனா?

ம்ஹூம் வேறொரு பெண்மீது கொண்ட ஆசையினால் தாலி கட்டிய மனைவியையும், தன் ஒரே வாரிசான 24 வயது மகளை அவள் நிச்சயதார்த்த தினத்தன்று எரித்து கொன்ற கொலைக்காரன்.

அவனை தூக்கில் இட வேண்டிதான் இத்தனை பேரும் சத்தமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

போலீசின் வண்டியிலிருந்து இறங்கும் தணிகைவேலுவை அடிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி அவனை பாதுகாப்பாய் கோர்ட் வளாகத்திற்குள் கொண்டுவருவதற்குள் போலீஸ்காரர்களுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

நீதிபதி வந்து இருக்கையில் அமரும்வரை அவனை பிய்த்து எடுக்குற சான்ஸ் கிடைக்காதான்னு  எல்லாரும் காத்து இருந்தவங்க நீதிபதி வந்ததும் அமைதியானார்கள்.

நீதிபதி: வழக்கை ஆரம்பிக்கலாம்.

அரசு வக்கீல்: யுவர் ஆனர்,இதோ கொலை குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்கும் தணிகைவேலு காதலித்து கல்யாணம் கட்டிக்கிட்டு, 25 வருசம் ஒண்ணா  வாழ்க்கை நடத்திய  மனைவியையும், ஆசையாக வளர்த்த ஒரே மகளையும் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்ததால் அந்த பெண்ணின் நிச்சயதார்த்தன்னிக்கு எரித்து கொலை செய்த கொடூர மனம் கொண்டவன்.

நீதிபதி: இதை உங்களால் நிரூபிக்க முடியுமா? அதற்கு சாட்சிகள் இருக்காங்களா?

அரசு வக்கீல்: முடியும், தணிகை வேலுவின் பக்கத்துவீட்டில் இருக்கும் ”கோகிலா”வை விசாரிக்க அனுமதிக்குமாறு வெண்டிக்கொள்கிறேன்.

நீதிபதி: சரி, விசாரிக்கலாம்

அரசு வக்கீல்:என்ன நடந்ததுன்னு சொல்லுங்கம்மா.

கோகிலா: சார், அந்தம்மா பேரு தங்கம். பேருக்கேத்த மாதிரி குணத்திலும் தங்கம் சார், அந்த பொண்ணோட பேரு செல்வி. எம்.சி.ஏ படிச்சு, வெளிநாட்டு கம்பெனில வேலை செஞ்சாலும் அடக்கமான பொண்ணு சார். தணிகைவேலு ஐயாவும் ரொம்ப நல்லவர்தான், அக்கம் பக்கம் வீட்டாரோட நல்லா பழகுவாங்க. எல்லா பெண்களையும் தாயா, மகளாதான் டிரீட் பண்ணுவார். இப்படி ஒரு குடும்பம் நமக்கு அமையலையேன்னு எங்க ஏரியாவுலயே எல்லாரும் பொறாமைப்படுற மாதிரி தான் வாழ்ந்தாங்க.

இதெல்லாம் 3 மாசம் முன் வரைக்கும்தான். குடும்பத்தோட திருப்பதிக்கு போய்ட்டு வரும்போது ஆக்சிடெண்ட் ஆச்சு சார். அப்போ அந்தம்மாவுக்கு பலத்த அடி பட்டு ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்து கொஞ்ச நாளில் நல்லபடியா திரும்பி வந்தாங்க.

ஹாஸ்பிட்டலில் அந்தம்மா தங்கியிருந்த சமயத்துல அந்த ஹாஸ்பிட்டலில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த நர்ஸ் கூட எதோ கசமுசா ஆகிடுச்சு போல. வாரத்துல ஒரு நாள் , அந்த பொண்ணு ஆபீஸ் போனதுக்கப்புறம் அந்த நர்ஸ் வீட்டுக்கு வரும் சார். ரெண்டு மணி நேரத்துக்கும் மேல இருக்கும். அப்போ அவங்க வீட்டுல கசமுசான்னு சத்தம் வரும். போகும்போது அந்த நர்ஸ் உடை கலைஞ்சு, ஒரு மாதிரியா களைப்பா போகும் சார்.

சம்பவம் நடந்தன்னிக்கு செல்விக்கு நிச்சயதார்த்தம் சார். எல்லாரும் மண்டபத்துக்கு போக ரெடியாகிட்டு இருந்தோம். சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு எல்லாரும் தணிகைவேலு வீட்டுல இருந்தோம். அந்த நர்சும் வந்திருந்தாங்க. நர்சும், தங்கம்மாவும், தணிகைவேலுவும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அந்த ரூமுக்கு போன செல்வியம்மா சத்தமா என்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்க. அது ஏசி ரூம். சத்தம்தான் கேட்டுதே தவிர என்ன பேசுறாங்கன்னு தெரியல.

கொஞ்ச நேரத்துல நர்ஸ்  வெளில வந்து கிளம்பி போய்ட்டாங்க. தணிகைவேலு ஐயா ரூமுக்குள்ள இருந்து வெளிய வந்து மண்ணேன்ணெய் கேன் எடுத்துக்கிட்டு ரூமுக்குள்ளாற  போனார். போன கொஞ்ச நேரத்துல திடீர்னு செல்வி அலறுன சத்தம் கேட்டுது. தங்கம்மாவும் அலறும் சத்தம் கேட்டுது. நாங்களெல்லாம் கதவை உடைச்சுக்கிட்டு உள்ள போய் பார்த்தா..., செல்வியும், தங்கம்மாவும் எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க. செல்வி அப்பாவை பிடிச்சு இழுத்துக்கிட்டு இருந்தா..., நாங்க எவ்வளவோ போராடி பார்த்தும் செல்வியும், தங்கம்மாவும்  செத்துட்டாங்க. தணிகை வேலு ஐயாவை மட்டும்தான் லேசான தீக்காயத்தோடு காப்பாத்த முடிஞ்சுது, இதுதான் ஐயா நடந்தது.

அரசு வக்கீல்: நன்றிம்மா நீங்க போலாம். அடுத்து தணிகை வேலுவோட தெரு முனையில  தள்ளு வண்டில துணி அயர்ன் பண்ணும் முத்துவை விசாரிக்க வேண்டுகிறேன்

நீதிபதி: சரி  முத்துவை விசாரிக்கலாம்

அரசு வக்கீல்: முத்து உனக்கு தெரிஞ்சதை சொல்லுப்பா.

முத்து: ஐயா,அந்த நர்சம்மா, ஒவ்வொரு வாரம் செவ்வாய் கிழமை டான்னு மூணு மணிக்கு ஆட்டோவுல வந்து தெருமுனைல இறங்கி யாருக்கோ போன் பண்ணும் சில சமயம் நேரா தணிகைவேலு சார் வீட்டுக்கு போய்டும். சில சமயம் தெருமுனைலயே காத்திருக்கும். நான் என்னடான்னு சில நாள் மண்டையை பிச்சுக்கிட்டது உண்டு. அதற்கப்புறம்தான் தெரிஞ்சுச்சு. செல்வியம்மாவுக்கு ஷிப்ட் முறைல வேலை. செல்வியம்மா போறதுக்காக காத்திருந்துட்டு வீட்டுக்கு போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன் சார்.

அரசு வக்கீல்: தணிகைவேலுவுக்கும், அந்த நர்சுக்கும் இடையிலான கள்ள உறவை நிரூபிக்க இந்த இரு சாட்சிகளே போதுமானதாக இருக்கும்ன்னு நினைக்குறேன். கோர்ட்டுக்கு இன்னும் சாட்சிகள்  தேவைப்பட்டால் சமர்ப்பிக்க தயாராய் உள்ளேன்.  தணிகைவேலுவுக்கும் நர்சுக்கும் இருந்த ரகசிய உறவும், தணிகைவேலு தன் மகளையும், மனைவியையும் எரிச்சு கொன்றது இப்போதளித்த சாட்சிகளின் வாக்குமூலங்களின் மூலம் தெளிவாகிறது..என்வே குற்றவாளிக்கு அதிகப்பட்ச தண்டனையான மரண தண்டனை அளிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி: மிஸ்டர் தணிகைவேலு, நீங்க அமைதியா இருந்தா எப்படி ?உங்களுக்குன்னு வாதாட எந்த வக்கீலையும் நீங்க நியமிக்கலை. வாயை திறந்து பேசவும் மாட்டேங்குறீங்க. எதாவது சொன்னால்தானே வழக்கை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியும்.?

முதன் முறையாக வாய்திறந்த தணிகைவேலு..., என் மனைவி மற்றும் மகளின் சாவுக்கு முழு காரணமும் நானே. அதனால் என்னை தூக்கில போட்டுடுங்க ஐயான்னு முகத்தை மூடிக் கொண்டு அழுதான்.

நீதிபதி: தணிகைவேலுவே குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாலும் நீதிமன்றத்திற்கென்று வழிமுறைகள் சிலது  இருக்கு.அதனால அரசே குற்றவாளிக்கு ஆதரவா வாதாட ஒரு வக்கீலை நியமிக்குது. அவர் அடுத்த வாரம் தன் தரப்பு வாதத்தை முன் வைப்பார். அதுவரை கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன்.

அடுத்த வாரம்

தணிகைவேலுவின் வக்கீல்: கணம் நீதிபதி அவர்களே,  எனது கட்சிக்காரரான தணிகைவேலுவின் மீது சாட்டப்பட்ட குற்றம் முற்றிலும் தவறானதாகும். அவருக்கு எதிராக சொல்லப்பட்ட சாட்சிகள் ம் சொன்னவை அனைத்தும் உண்மையானாலும், அவை அனைத்தும் தவறான ரீதியில்  புரிந்து கொள்ளப்பட்டவையே.

நீதிபதி: அவற்றை உங்களால் நிரூபிக்க முடியுமா?

தணிகைவேலுவின் வக்கீல்: முடியும் ஐயா, எனது சாட்சியாக தணிகைவேலுவுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட அந்த நர்சை முதலில் அழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி: அனுமதி அளிக்கின்றேன்

தணிகைவேலுவின் வக்கீல்: உங்க பேரு?

நர்ஸ்: என் பேர் ஜானகிங்க 

தணிகைவேலுவின் வக்கீல்: எங்கேம்மா வேலை செய்றீங்க?
நர்ஸ்: இந்திரா நர்சிங்க் ஹோம்ல


தணிகைவேலுவின் வக்கீல்: உங்களுக்கும் அவருக்கும் எப்படி பழக்கமேற்பட்டுச்சு?

நர்ஸ்: தங்கம் ஆக்சிடெண்ட்ல அடிப்பட்டு எங்க ஆஸ்பிட்டலில்தான் சேர்த்தாங்க. அப்போ அவர் பழக்கமானார்.

தணிகைவேலுவின் வக்கீல்: அப்பிடியா, சரி உங்களுக்கும் தணிகைவேலுவுக்கும் ரகசிய உறவு இருந்ததா எல்லாரும் சொல்றாங்களே, அப்படியா?

நர்ஸ்: அப்படிலாம் இல்லை சார்.

அரசு வக்கீல்: அப்புறம் ஏன் அவங்க வீட்டுக்கு போனீங்க. நீங்க  அங்க போகும்போதெல்லாம் சண்டைன்னும், திரும்பி வரும்போது  உடை களைஞ்சு வருவதாக எல்லரும் சொன்னாங்களே? 

நர்ஸ்: நீதிபதி ஐயா, இந்த நேரத்துல உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்ல விரும்புறேன். 

நீதிபதி: சொல்லுங்கம்மா.

நர்ஸ்: ஐயா, தங்கத்தை எங்க ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கும்போது அவங்க உடம்பை செக் பண்ணோம். அப்போ, அவங்களுக்கு மூளையில புத்து நோய் இருப்பது கண்டுபிடிச்சோம். 

அவங்க அடிக்கடி தலைவலி வந்து அலட்சியபடுத்தி இருக்காங்க.  அதுமட்டுமில்லாம அவங்க 40 வயசுல அடியெடுத்து வைக்குறவங்க வருசத்துக்கு ஒருமுறை உடம்பை ஃபுல் செக்கப் செஞ்சுக்கனும்ன்னு அரசாங்கம் எவ்வளவோ அறிவிப்புகள் செய்யுது.  இருந்தாலும் இப்படி படிச்சவங்களே இப்படி அலட்சியப்படுத்தியதன் விளைவு  நோய் முற்றி போய் சிக்கிச்சை கொடுத்தாலும் பலனில்லாத நேரத்துல இருக்குறது தெரிஞ்சது. 

     முதல்லயே ஃபுல் செக்கப் செய்திருந்தா.., ஆரம்ப கட்டத்துலயே நோயை கண்டுப்பிடிச்சு குணப்படுத்தியிருக்கலாம். பெண்கள் தலவலி, வயிற்றுவலி, மார்பு வலின்னு வந்தால் ஏன் வீண் செலவுன்னு ஆஸ்பிட்டலுக்கு போகாம கைவைத்தியம் செஞ்சுக்குவாங்க. அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுங்களா? பெண்கள் அலட்சியப்படுத்தினாலும் ஆண்கள் அவங்களை வற்புறுத்தியாவது ஆஸ்பிட்டலுக்கு கூட்டி போய் காட்டனும் சார்.

சிகரெட், புகையிலை யூஸ் பண்றவங்களுக்குத்தான் புற்று நோய் வரும், மற்ரவங்களுக்கெல்லாம் கேன்சர் வராதுன்னு தப்பான நம்பிக்கை மக்களிடையே பரவுனது வருத்தமான விஷயம்.. 

   அப்போதான் தங்கம் , எனக்கு இருப்பது ஒரே பொண்ணு அவளுக்கு கல்யாணம் கட்டுறவரைக்கும் எனக்கு நோய் இருப்பதை சொல்லாதீங்க. சொன்னால்,என் பொண்ணு மனசொடிஞ்சு போய்டுவாள்ன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டதால யாருக்கும் தெரியாம இந்த நோய் இருப்பதை மறைச்சுட்டோம். அதற்கான ஆதாரம் இந்த ஃபைலில் இருக்கு சார். அவங்களுக்கு வந்த நோய், அதற்கெடுத்த டெஸ்ட்டுங்க, குடுத்த மருந்துங்க, என்னென்னிக்கு குடுத்ததுன்ற விவர்ங்களும் இந்த ஃபைலில் இருக்குங்க.

 நான் வட நாட்டுக்கு குடும்பத்தோட டூர் போனதால் இந்த விசயங்கள் எனக்கு தெரியாம போய்டுச்சு. அதனாலதான் முன்னாலயே வந்து இந்த விவரங்களை சொல்லியிருப்பேன் சார்.

  நோயோட தீவிரத்தால அவங்களுக்கு கண்பார்வை மங்கல், ஞாபகமறதி நோய்லாம் வர ஆரம்பிச்சது. அடிக்கடி ஹாஸ்பிட்டலுக்கு வந்து பார்த்துக்கிட்டால் பொண்ணுக்கு தெரிஞ்சு போய்டுமோன்னு என்னை வீட்டுக்கே வரச்சொல்லி எங்க டாக்டர் அட்வைசில நான் டிரீட்மெண்ட் எடுதேன். இதான் நடந்ததே தவிர அவங்கள்லாம் சொல்ற மாதிரி ஒண்ணுமில்லை சார்.

நீதிபதி: தணிகைவேலுவுக்கும் நர்சுக்கும் தவறான உறவு இல்லைன்னு தெள்ளத்தெளிவா புரிஞ்சுடுச்சு. அப்புறம் ஏன் ரெண்டு பேரையும் கொலை பண்ணார். மிஸ்டர் தணிகைவேலு இப்பவாது  சொல்லுங்க அன்னிக்கு என்ன நடந்தது.

தணிகைவேலு: சார், அன்னிக்கு நான், நர்ஸ் ஜானகி, என் மனைவிலாம் பேசிக்கிட்டு இருந்ததை என் பொண்ணு எப்படியோ கேட்டுட்டா. அவளுக்கு அவ அம்மாவோட நோய் தெரிஞ்சு போச்சு. இந்த நிலைமைல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொல்லி என் பொண்ணு ரொம்ப பிடிவாதம் பிடிச்சா. இப்படிலாம் பிடிவாதம் பிடிச்சால் நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு  மண்ணென்னெய் கொண்டுவந்து என்மேல ஊத்திக்கிட்டு  மிரட்டினேன்.

    என்னாலதானே இவ்வளவு பிரச்சனை நான் செத்து போய்டுறேன் ந்னு என் மனைவியும் தன் மேல ஊத்திகிட்டு பத்த வச்சுக்கிட்டா. காப்பாற்ற போன என் மகளையும் தீப்பிடிச்சுடுச்சு. ஆனால், அந்த தீக்கும் என் மேல் என்ன கோவமோ தெரியலை. என்னை பொசுக்கலை. இப்பவும் நான் வாயை தொறந்து சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் ஒரு நல்ல பொண்ணு மேல களங்கம் வந்துடக்கூடாதேன்னுதான் இப்பவாச்சும்  சொல்றேன். என்னை தூக்குல போட்டுடுங்க. என் குடும்பத்தோட நானும் போய் சேர்ந்துடுறேன் ப்ளீஸ்ன்னு கதறி கையெடுத்து கும்பிட்டு அழ ஆரம்பித்தார்..,


நீதிபதி: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அறிந்தப்பின் தணிகைவேலுவின் மேல் எந்த குற்றமுமில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும் தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக அவரை தண்டிக்க வேண்டியுள்ளது. அவர், காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு வருடம்  சேவை செய்ய வேண்டுமென தீர்ப்பு வழங்குகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு பின்..., 
தண்டனைக்காலம் முடிந்தும் வெளியே போக மனசில்லாம, புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகளை செய்தும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கதை சொல்லி, அவரக்ளுடன் விளையாடி மகிழ்வித்து வயதானவர்களுக்கு ராமாயாணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படித்து காட்டியும், தன் சொத்து முழுதும் அம்மருத்துவமனைக்கு எழுதி வைத்து  அவர்கள் உருவில் வாழும் தன் மகளுடனும் மனைவியுடனும் சந்தோசமாய் தன் இறுதி நாளை கழிக்கின்றார்.

Wednesday, February 08, 2012

சீன் படம் பார்த்த மினிஸ்டர் - கில்மா செமஸ்டர் - காமெடி கும்மி

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல்போனில், ஆபாச படம் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த, பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் உற்சாகமாகப் பார்த்தார்.


சி.பி - யோவ், அது கர்நாடகா சட்டசபையா? ஈரோடு நடராசா தியேட்டரா? ந்கொய்யால.. மக்கள் வரிப்பணத்துல அங்கே போய் உக்காந்துட்டு பிட்டுப்படம் பார்த்துட்டு இருந்திருக்கானுங்க ராஸ்கல்ஸ்.. 

கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம்,எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார்.


சி.பி - அண்ணன் நம்ம கலைஞர் மாதிரிதான், மின்வெட்டு அதிகமா இருக்குன்னா அதுக்கு பதில் தர மாட்டார்.. எங்கெங்கே எல்லாம் மின் வெட்டு இருக்குன்னு புள்ளி விபரம் குடுத்து சமாளிப்பார்.. 

இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.


சி.பி - ம்க்கும், இந்த ஆள் தான் பெண்கள் நலத்துறை அமைச்சரா? வெளங்கிடும்.. நாடு.. 

முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிடுகையில், "அமைச்சர் ஆபாச படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் கறுப்பு தினமாகும்.


சி.பி - கறுப்பு தினம் உங்களுக்கு.. நீல தினம் அவங்களுக்கு ஹி ஹி 

அமைச்சர் லட்சுமண் சவதி, அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றனர். என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என்றார்.


சி.பி - என்ன நடவடிக்கை எடுத்திடப்போறாங்க? இனிமே இப்படி பப்ளிக்கா பிட்டுப்படம் பார்க்க மாட்டேன், முக்காட்டை போட்டுட்டு வீட்லயே பார்த்துடறேன்னு பம்புவான்.. 

 பிட்டுப்படம் பார்த்த அட்டுப்பசங்க

கர்நாடகா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக அமைச்சர்கள்.............!! #Karnataka #BJP #MLA's

கர்நாடக அமைச்சர் லட்சுமண் சவதி குறிப்பிடுகையில், "மொபைல் போனில் ஆபாச படம் எதுவும் பார்க்கவில்லை. அதை பார்த்ததில் தவறு எதுவுமில்லை. என்னிடம் இருந்தது என் மொபைல் போனல்ல. நான் பார்த்தது, டாக்குமெண்ட்ரி படம். இதை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தேன் என்று கூறுவது சரியல்ல. அமைச்சர் கிருஷ்ண பலேமர், இந்த மொபைல் போனை என்னிடம் கொடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதை பாருங்கள் என்று என்னிடம் கொடுத்தார். கிருஷ்ண பலேமருக்கு யாரோ அவரது மொபைல் போனுக்கு "எம்.எம்.எஸ்.,' அனுப்பியுள்ளனர்' என்றார்.


சி.பி - பார்த்தது பிட்டுப்படம், இதுல என் செல் ஃபோன் இல்ல, அவருதுன்னு ஒரு சப்பைக்கட்டு வேற.. இது எப்படி இருக்குன்னா கொலை செஞ்சு கையும் களவுமா மாட்டிக்கிட்டவன் குத்துன கத்தி என்னுது இல்லை, கடைக்காரனுதுன்னு சொல்ற மாதிரி.. 

இச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் இன்று, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். 

 மக்கள் கருத்து 

1. அந்த மான் - மனுநீதி பாண்டியன் -அரசியல் வாதிகள் அதிகாரம் இருக்கும் தெம்பில், பயமில்லாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் நியாய படுத்துகின்றனர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க தண்டனை கிடைத்தால் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். பாரதிய ஜனதா , காங்கிரஸ் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டை எங்கு கொண்டு போய் விட போறார்களோ தெரியவில்லை, அதற்குள் மக்களாகிய நாம் அனைவரும் விழித்து கொள்ள வேண்டும்.

சி.பி - ம்க்கும் தூங்குனாத்தானே விழிக்க, இன்னைல இருந்து 8 மணீ நேரம் கரண்ட் இருக்காது,, பெக்கே பேக்கேன்னு முழிச்சுட்டே இருக்க வேண்டியதுதான்


2. ஆரூரன், சென்னை - சட்டசபை உறுப்பினர்களை அவ்வபொழுது குஷிப் படுத்த "சீர் கேர்ள்ஸ்களை" ஆட விடலாமே. அரசவை நடனங்கள் நம் நாட்டுப் பாரம்பரியம்தானே? இருவர் மட்டும் ரகசியமாக படம் பார்த்தால்தானே தவறு?

சி.பி - அது சட்ட சபையா? செட்டப் சபையா? விட்டா தொழில் நடத்த சொல்வாரு போல.. 

3. மதுரை விருமாண்டி - தொலைபேசி நிறுவனத்தில் இருந்து மாண்புமிகு அமைச்சரின் தொலைபேசியிலும், தொலைபேசி அலைவரிசையிலும் டெக்னிகல் கோளாறு ஏற்ப்பட்டதற்கு உரிய சான்றுகளும், மாண்புமிகு சபாநாயகரிடமும், மாண்புமிகு முதலமைச்சரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன...பொய் வீடியோ எடுத்து பிரசுரித்த சானல் மீது, மாண்புமிகு அமைச்சரின் அலுவல்களில் அத்து மீறி நுழைந்ததாக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு சபாநாயகர், மாண்புமிகு முதல்வரின் அனுமதி கேட்டுள்ளார்... மாண்புமிகு முதல்வர் இதை எதிர்க்கட்சிகளின் சதியாக இருக்கும் என்று நம்புகிறார்...கேஸ் குளோஸ்டு..

சி.பி - அது சரி.. ஐடியா எடுத்துக்குடுக்கறீங்களா? அதுதான் நடக்கப்போகுது ஹூம்.. 

4. ராஜா , யுனைட்டட் கிங்க்டம் - அப்புடி போடு போடு போடு போடு.. இப்படி போடு மொபைலிலே..

சி.பி - சிச்சுவேஷன் சாங்க்?ஒரு மந்திரி இப்போ வந்தார் கில்மாவா.. அவர் சீன் படம் பார்த்தார் செல் ஃபோனில் ஒரே ஜொள்மாவா..

5. அருள், சிங்கப்பூர் - ரொம்ப போரியடிக்குதுன்னு நாளைக்கு ரெண்டு குட்டிகள தள்ளிகிட்டு வந்துடாம. மானம்கெட்ட மக்கள் நல அக்கறை இல்லாத அமைச்சர்கள். இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யனுமின்னு தெரியலப்பா

சி.பி - சொல்ல முடியாது, மாறு வேஷம் போட்டு கூட்டிட்டு வந்தாலும் வந்துடுவாங்க.. 

6. கோவிந்த் - டெல்லி - காங்கிரஸ் N D திவாரி ஆந்திரா ராஜ் பவனுக்குள் பலான பெண்களை கூட்டி கொண்டு போய் கூத்தடித்தது வீடியோ ஆதரங்களுடன் வந்தது. அய்யா இங்க பிஜேபி யை சேர்ந்த இரண்டு வெத்துவேட்டுகள் செய்த தவறை யாரும் சரி என்று சொல்ல வில்லை. இவர்களை மிக கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்பது தான் என் வாதம். அதே நேரத்தில் 2G , 4G அதில் 1 76 ஆயிரம் கோடி , 2 இலட்சம் கோடி என்று தவறு செய்து நாட்டை சுரண்டும் காங்கிரஸ் முன்னர் இந்த இரண்டு பேரும் எம்மாத்திரம். அவர்கள் சபைக்குள் இருந்து கொண்டு படம் பார்த்தது தான் தவறு. அதற்காகவே அவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால் இந்த செய்கையினால் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறைந்த பட்சம் நஷ்டம் ஏற்படவில்லை என்றாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டும்....

சி.பி - பி ஜே பி.னா  பயங்கர ஜொள்ளு பார்ட்டின்னு ப்ரூஃப் பண்ணிட்டாங்க..

 இனி ஜோக்ஸ் 

1. ஜட்ஜ் - செல்ஃபோன்ல சீன் படம் பார்த்தீங்களாமே? ஏன்? 


எம் பி - என் லேப்டாப் ரிப்பேர் யுவர் ஆனர்

----------------------------------

2. ஜெ - இனி மின்வெட்டு தினசரி 8 மணி நேரம்..

மக்கள் - பிரமாதம் மேடம்,கலைஞரை விட நீங்க பல மடங்கு டேலண்ட் தான்

-----------------------------

3. இன்று முதல் காலை 6-9 மதியம் 12-3 மாலை 6-7 இரவு 8-9 அறிவிக்கப்பட்ட மின்வெட்டு

தமிழ் நாடு மின் வாரியம்  சினிமா தியேட்டர் மாதிரி ஆகிப்போச்சு.. 

-----------------------------

Wednesday, February 01, 2012

தேனி மாவட்டம் - விளைநிலங்கள்,விவசாயம் வாழ - சினிமாவிமர்சனம்

http://runtamil.com/wp-content/uploads/2012/01/00-00-2373.jpg 

பெரிய பெரிய மாஸ் ஹீரோக்கள் எல்லாம் தன் இமேஜை பில்டப் பண்ற கதைல மட்டும் தான் பெரும்பாலும் நடிக்கறாங்க.. சின்ன பட்ஜெட் படங்கள்ல பல சமயம் அரிதான மெசேஜ்கள் அசால்ட்டா சொல்லிட்டு சத்தம் இல்லாம நகர்ந்துடறாங்க.. சரியான மார்க்கெட்டிங்கோ, நல்ல ஓப்பனிங்க்கோ இல்லாம அமுங்கிடுது.. அந்த மாதிரி நல்லதொரு கதைக்கரு உள்ள படம் தான் தேனி மாவட்டம்..
வில்லி ஐஸ்வர்யா சசிகலா மாதிரி.. கிடைச்ச நிலத்தை மடக்கிப்போடு, எதிர்க்கறவங்களை அடக்குப்போடு டைப்.. அவர் இருக்கற கிராமத்துல ஹீரோவோட அப்பா நல்ல செல்வாக்கா நில புலன்களோட இருக்கார்.. ஃபாரீன் ஆட்கள் அந்த கிராமத்துல தொழிற்சாலை கட்ட விளைநிலங்களை விலை பேச வர்றாங்க.. ஹீரோவோட அப்பா தர்லை.. தொழிற்சாலை கழிவுகளால் விளைநிலங்கள், எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும்னு சொல்லி தானும் நிலங்களை தராம வேற யாரும் தராத மாதிரி பிரச்சாரம் பண்றாரு.. 

வில்லி ஹீரோவோட அப்பாவை போட்டுத்தள்ளிடறா.. ஹீரோ தன் அப்பாவை கொலை செஞ்சவளை பழி வாங்க கிளம்பாம தன் கிராமத்து  மக்களின் நன்மைக்காக பாடு படறார்.. வில்லி தன் நிலத்தை ஃபேக்டரி கட்ட தர முயலும்போது அதை கோர்ட் உத்தரவு மூலம் தடுக்கறார்.. கிடைச்ச கொஞ்ச நஞ்ச கேப்ல ஹீரோயினை லவ்வறார்.. 

தயாரிப்பாளர் ஜி கே தான் ஹீரோ.. இவர் செஞ்ச புத்திசாலித்தனமான 2 விஷயம்.. கதைக்கரு விளைநிலங்களை விற்கக்கூடாது. அப்டினு எடுத்துக்கிட்டது.. ஹீரோயின் கசக்கு மொசக்குன்னு அதாவது கும்முனு 2 பேரை புக் பண்ணது.. 

ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவருக்கு ஒரு ஜோடி.. ஹீரோ -ஹீரோயின் ஜோடி போரடிச்சா இந்த ஜோடியை குளிர பார்த்துக்கலாம்.. ஆஹா என்னே ஒரு ஐடியா.. 

ஹீரோ ஜி கே கறுப்பு ராமராஜனா , லோ பட்ஜெட் எம் ஜி ஆரா உலா வர்றார்.. க்ளோசப் காட்சிகள்ல பயப்படுத்தறார்.. பெரும்பாலும் லாங்க் ஷாட் தான், அதனால தப்பிச்சோம்.. :)ஆள் காட்டி விரல்ல தங்க மோதிரம் போட்ட முதல்  தமிழ் சினிமா ஹீரோ என்ற அந்தஸ்தை பெறுகிறார்:) சின்னக்கவுண்டர் விஜயகாந்த், புதுப்பாட்டு ராமராஜன் இருவரையும் மிக்ஸ் பண்ணுன நடிப்பு..

ஹீரோவின் அப்பாவாக வரும்  மகாதேவன் அமைதியான நடிப்பு..  பாராட்ட வைக்கும் தோற்றம்.. 

ஹீரோயின் நெம்பர் 1 -வர்ஷா 

http://www.cinehour.com/gallery/events1/audioreleases/Theni%20Mavattam%20Audio%20Launch/21524487Theni_Mavattam_Movie_Audio_Launch-(31).jpg

ஹீரோயின் நெம்பர் 1 உடல் சைஸ்   42 -42-42 என ஒரே அளவாக தென்பட்டாலும் ரசிக்க வைக்கிறார்.. கொழுக்கட்டை மாதிரி இருப்பதால் சி செண்ட்டர் ரசிகர்கள் விசில் அடிச்சு ரசிப்பார்கள்.. ( நான் அடிக்கலை.. எனக்கு விசில் அடிக்க தெரியாது)

ஹீரோயின் நெம்பர் 2 பாரதி ராஜா படத்துல அறிமுகம் ஆகும் கிராமத்து ஹீரோயின் ரஞ்சனி ( கவனிக்க ரஞ்சிதா அல்ல) மாதிரி பாந்தமாக வர்றார்.. அவருக்கு காட்சிகள் கம்மிதான் .. இருந்தாலும் மனசுல நிக்கறார்.. உக்காந்திருக்கார். 

வில்லி ஐஸ்வர்யா தெனாவடான நடிப்பு.. அவரது ஆண்மைத்தனமான  கர கர குரலே பாதி வேலையை செஞ்சுடுது.. ஆனா அவர் பொருத்தமே இல்லாம விக் வெச்சிருக்கறது கண்ணில் உறுத்தல்.. அந்தக்கால சரோஜா தேவி ,மஞ்சுளா போட்டிருக்கும் டோப்பா மாதிரி நல்லாவே இல்ல.. 

http://chennai365.com/wp-content/uploads/Audio-Launch/Theni-Mavattam-Audio-Launch/Theni-Mavattam-Audio-Launch-Stills-026.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  படத்தோட விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாத ஆனா கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம்.. படத்துல வர்ற எல்லா பெண் கேரக்டர்களுக்கும் பிரமாதமான நெக்லஸ் டிசைன், அதுக்கு மேட்சா தோடு ஜிமிக்கி எல்லாம் போட வெச்சு கலக்கியது.. குறிப்பா வில்லி ஐஸ்வர்யா, சபீதா ஆனந்த், ஹீரோயின் நெம்பர் 1 இந்த 3 பேரும் அணிந்து வரும் நெக்லஸ், மற்றும் பட்டுப்புடவை டிசைன் செம செம.. 
2. ஹீரோயின் நெம்பர் ஒன் ( பேரு வர்ஷா) திமிசு, சொகுசு,தினுசு, ரவுசு என நாட்டுக்கட்டையா இருந்தாலும் கண்ணியமா படத்துல காட்டிய இயக்குநரின் பொறுப்பு.. 


3. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி பாடல் ரீ மிக்ஸ்ல ஸ்கூல் குழந்தைங்க எல்லாம்  தேடியக்கொடி டிசைன் பண்ணும், ஆடும் சீன் செம கலக்கல்.. 

4. ஆக்க பூர்வமான திட்டமாக ஹீரோ சொல்லும் ஏ டி எஃப்  ( ATF ) எனி டைம் ஃபுட் செயலாக்க நடைமுறை விளக்கம் செம.. 

5.  பாடல் காட்சிகள் யதார்த்தம்.. யக்கா யக்கா டப்பாங்குத்து,கண்ணாலே கடிதம் போட்டு, சாமிக்கு உறக்கம் இல்ல, பொய் தானே,பூவுக்கும் காற்றுக்கும் திருமணம் செம ஸ்பீடு பாட்டு, கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி பாடல் ரீ மிக்ஸ் என எல்லா பாட்டுமே தியேட்டர்ல கேட்கற அளவு இருக்கு.. 

ஹீரோயின் நெம்பர் 2 -ரேணு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUpDvJDb-9WQ8y5t-Mt2uTPolXj43_T4AjaffhmXERkX3rVUPB0ad8qEAIkyGVgXjSlt43iHT-dKydzipozWa7oJKZAt4PxxdLAg9fyIAhpMgo1-z5iehZw7KlfFNRIbDNfkMoxZRC6fA/s1600/theni_mavattam.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1.  கோடீஸ்வரியா வர்ற வில்லி ஐஸ்வர்யா ஒரு சீன்ல கோயில் அர்ச்சகர் சீட்டு தர்ற ஆள் கிட்டே அர்ச்சனை சீட்டு எவ்ளவ்?என கேட்டு அவர் ரூ 25 என சொன்ன பிறகு வாங்கறார்.. இந்தக்காலத்துல யார் ரேட் எல்லாம் கேட்கறாங்க?

2. வில்லி ஐஸ்வர்யாவை அரெஸ்ட் பண்ண பொலீஸ் வருது.. பெண் போலீஸ் யாருமே  கூட இல்லை.. ஒரு ஊரின் வி ஐ பி லேடியை இப்படி அரெஸ்ட் பண்ண முடியுமா? ( கோர்ட் ஆர்டர் படி ஒரு பெண்ணை கைது செய்ய கூட 2 பெண் போலீஸ் இருக்கனும்)

3. ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோவோட அப்பாவோட தம்பி அவர் சொந்த ஊர்ல பஞ்சம்.. அவரை வேற ஊருக்கு அழைக்கறாங்க.. பிடிச்சா போகனும்.. பிடிக்கலைன்னா வர்லை.. இங்கேயே இருந்துக்கறேன்னு சொல்லனும்.. யாராவது இதுக்காக தற்கொலை செஞ்சுக்குவாங்களா? அதுவும் 5 வயசு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு கணவன், மனைவி 2 பேரும் சாகறாங்க கிணத்துல விழுந்து. ஏத்துக்கவே முடியலை.. 

4. விவசாயிகள் விழிப்புணர்வுக்கூட்டத்துல ஹீரோ பேசறப்ப “ உங்களை மாதிரி இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை”ங்கறார்.. ஆனா கூட்டத்துல எல்லாம் 60 வயசான பெருசுங்க தான் இருக்கு.. 

5. ஒரு சீன்ல ஹீரோ கார்ல போறாரு.. வில்லன் ஜீப்ல சத்தம் இல்லாம பின்னாலயே போய் இருந்தா ஈசியா பிடிச்சிருக்கலாம். ஆனா வில்லன் லூஸ் மாதிரி டாஆஆஆஆஅய்னு கத்தி ஊரைக்கூட்டி சேஸ் பண்றாரு.. ஹீரோ எஸ் அவ்வ்வ்வ்

6. ஒரு சீன்ல ஹீரோவோட தம்பியை குற்றுயிரும் கொலை உயிருமா வெட்டிட்டு போறார்.. காயம் பட்ட ஆள் கம்முனு இருக்காம என்னமோ அர்னால்டு கணக்கா  “ என்னை  முழுசா கொன்னுட்டு போயிடு, இல்லைன்னா உன்னை அழிச்சிடுவேன்னு வார்னிங்க் தர்றார்..திரும்ப வந்த வில்லன் சதக்.. அவ்வ்வ் 

http://www.funrahi.com/photos/tollywood/rwx/theni-mavattam-movie-audio-launch-event-007.jpg

மனம் கவர்ந்த வசனங்கள் (GOWMAARIMUTHTHU)

1.  இயற்கையை அழிக்க நம்ம யாருக்குமே உரிமை இல்ல.. மரம் பட்டுப்போனா வனம் கெட்டுப்போகும்.. 

2.  அவனைப்பாரு.. சைலண்ட்டா பிள்ளை பிடிக்கறவனாட்டமே போறதை.. டேய்.. இது உன் வீடுடா.. ஏன் பம்பறே?

3.  மாப்பி.. நேரா கிணத்துக்குப்போறோம்.. குளிக்கறோம்.. குடிக்கறோம்..

நோ முதல்ல . குடிக்கறோம்.. அப்புறமா குளிக்கறோம். ஹி ஹி 

4.  நீ ஏன் எப்போ பாரு பாட்டிலும் கையுமா இருக்கே?

அடிக்கடி தொண்டை நனைஞ்சிடுது.. நனைக்க வேணாமா?

5. ஏம்மா, எங்கம்மா லைசன்ஸ்? கவர்மெண்ட்டே அதை ரிட்டர்ன் வங்கிடுச்சா?

லைசன்ஸா?அப்டின்னா என்ன?

6. யோவ்.. யோவ்.. வண்டி நின்னுடுச்சு.. என்ன ரிப்பேர்னு கொஞ்சம் பாருய்யா.. 

அந்த நிப்பிளை தூக்கி விட்டா ஸ்டார்ட் ஆகிடும்.. 

யோவ்!!!!!!

ஓ சாரி.. நான் இக்னீஷியனை சொன்னேன்..

7.  ஏம்மா.. சாம்பாரை பார்த்து ஊத்து.. 

நீ இப்போ டாஸ்மாக்ல ஊத்திட்டு வந்ததுக்கு இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

8. நீங்க பாட்டுக்கு 500 ஏக்கர்ல ஃபேக்டரி கட்டுவீங்க, அது வெளீப்படுத்தும் கழிவுகள் 2000 ஏக்கரை பாதிக்கும்.. 

9. அந்தக்காலத்துல மிலிட்ரிக்கு ஆள் எடுக்கத்தான் அரசாங்கம் கூவி கூவி ஆட்களை அழைச்சுது.. அந்த நிலைமை இப்போ விவசாயத்துக்கும் வந்துடும் போல.. 

10.. நாம எல்லாம் சேர்ந்து விவசாயம் பண்ணலாமா?

அண்ணே, உங்களோட சேர்ந்து இப்போதான் சரக்கு அடிக்க கத்து இருக்கோம்.. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் பழகிக்கறோம்.. 

11.. எந்தத்தொழிலும் த்தெரியாமகூட ஒருத்தன் பொழப்பை ஓட்டலாம், ஆனா எந்த ஒரு குடி மகனும் விவசாயம் தெரியாம இருந்திடக்கூடாது..

டி வில போட்டா அவசியம் பாருங்க ஹி ஹி ஹி 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - ராமராஜன் ரசிகர்கள், விவசாயிகள், கிராமத்தில் சொந்த நிலம் வைத்திருப்போர் பார்க்கலாம்.. விழிப்புணர்வுப்படம்

ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்.

இந்தப்படம் 7 நாட்கள் தான் ஓடும். இதை எப்படி கண்டு பிடிச்சேன்னா தியேட்டர்லயே 3.2.2012 முதல் மெரீனா வருகிறதுன்னு ஸ்லைடு போட்டாங்க ஹி ஹி

Tuesday, December 06, 2011

பிரபல பத்திரிக்கைகளின் கவனத்திற்கு.. இது நியாயமா?

வலைத்தளங்களில் ட்விட்டரின் சேவை, பங்களிப்பு மகத்தானது,,அப்பப்ப நடக்கும் உலக நடப்புகளை ட்விட்டரில் உடனுக்குடன் அறிய முடிகிறது .17.7. 2010 -ல் நான் வலைத்தளம் தொடங்கி விட்டாலும்  ஆனந்த விகடனில் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்ஸ் அப்டேட் பார்த்து 1.2.2011 -ல் தான் ட்விட்டர் உலகத்திற்கே வந்தேன். 

ஆனால் வாசகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்ற வலை பாயுதே ட்வீட்ஸ்க்கு சன்மானம் இல்லை.. இது ஏன்? வாரா வாரம் 8 லட்சம் புத்தகம் விற்கும் ஆனந்த விகடன் ட்வீட்ஸ் போட 2 பக்கங்கள் ஒதுக்குகிறது. அதில் மினிமம் 20 ட்வீட்ஸ் வருகிறது.. அதில் ஒரு ட்வீட்டுக்கு ரூ 100 பரிசு கொடுத்தால் என்ன? எழுதுபவர்களுக்கு உற்சாகமாக இருக்குமே?

அதே போல் படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்புவதில்லை.. ட்வீட் போடுபவர்களின் பயோ செக் பண்ணி பார்த்தால் அவர்கள் வலை தள முகவரி அல்லது ஃபோன் நெம்பர், அல்லது மெயில் ஐ டி இருக்கும்.. அதன் மூலம் முகவரி விசாரித்து  சன்மானமும் , காம்ப்ளிமெண்ட்ரியும் அனுப்பலாமே?

அதே போல் குமுதம் ரிப்போர்ட்டரில் ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் 2 வாரங்களாக ட்வீட்ஸ் போடுகிறார்கள்.. அதை தொகுப்பவர் குமுதத்தில் பணியாற்றும்  வந்தியத்தேவன் என்பவர்..  இவர்களும் சன்மானம், புத்தகப்பரிசு அனுப்ப பரிசீலனை செய்ய வேண்டும்.. 

தின மலர் பேப்பரில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முழுப்பக்கமும்  ஃபேஸ் புக், ட்விடர் கமெண்ட்ஸ்க்கு ஒதுக்குகின்றனர்... அவர்கள் பேப்பரை அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை.. சன்மானமாவது அனுப்ப வேண்டும்..தினமலரில் ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு தருவதால் ட்வீட்க்கு ரூ 250 தாராளமாக தரலாம்.

மல்லிகை மகள்  எனும் பெண்கள் மாத இதழை நண்பர்  திரு ம கா சிவஞானம் நடத்துகிறார்.. அவர் வலைப்பூவும் வைத்துள்ளார்...  அவர் தன் பத்திரிக்கையில் வரும் ஜோக்கிற்கு ரூ 50 பரிசு தருகிறார்.. அவர் அந்த இதழில் ட்விட்ஸ் க்கு ஒரு பக்கம் ஒதுக்குகிறார்.. அந்த புக் சேல்ஸ் குறைவு என்பதால் அவர்கள்  புக் மட்டுமாவது அனுப்பலாம்.. 

புதிய தலை முறை புக் ஆசிரியர் மாலனின் மேற்பார்வையில் நடை பெறுகிறது..ஆரம்பத்தில் 3 வாரங்கள் ட்வீட்ஸ் போட்டாங்க.. இப்போ போடறதில்லை .. ஏன்னு தெரியலை. 


இந்தியா டு டே புக்கில் ஒரே ஒரு இதழில் ட்வீட்ஸ் போட்டாங்க.. அப்புறம் போடறதில்லை.. 


பாக்யா வார இதழில் நெட்டில் இருந்து சுட்டவை என்ற டைட்டிலில் இரு வாரங்களாக ஜோக் போடறாங்க..

நிற்க.. மாறி வரும் உலகில் ட்விட்டரின் பங்களிப்பை இணைய  இணைப்பு இல்லாத மக்களிடம் கூட அதை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளின் பணி மகத்தானது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.. ஆனால் அதே சமயத்தில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானமும், பத்திரிக்கைகளை அதாவது படைப்பு வந்த புக்கை படைப்பாளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. 

அப்புறம்.. ட்விட்டர்களில் ரெகுலராக சிலரது ட்வீட்ஸ்களே மீண்டும் மீண்டும் வருகிறது.. புது முகங்களுக்கு வாய்ப்பு அதிகம் வருவதில்லை.. இதை தவிர்க்க பத்திரிக்கைகள் பிரசுரம் ஆகும் ட்வீட்ஸ்களில் பாதி பிரபல ட்வீட்டர்ஸ்.. மீதி பாதி புது முகங்களுக்கு என ஒதுக்கலாம்.. ட்விட்டரில் இருக்கும் பிரபல ட்வீட்டர்களும் அதாவது தங்களிடம் அதிக ஃபாலோயர்ஸ் உள்ள ட்வீட்டர்களும் புதுமுக ட்வீட்டர்ஸ்க்கு RT செய்து அவர்களுக்கு உதவலாம்.. 

ஆல்ரெடி பலர் பலரது ட்வீட்களை ரீ ட்வீட் செய்து கொண்டு தான் இருக்காங்க.. அதை எல்லோரும் செய்ய முற்பட வேண்டும்.. 

இப்போது நான் சொன்னது எல்லாம் சுட்டிக்காட்டலே, சொல்லிக்காட்டல் அல்ல.. எனவே பத்திரிக்கைகள் இக்கட்டுரையின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பதிவில் கமெண்ட் போடும் ட்வீட்டர் நண்பர்கள் , பதிவர்கள் தங்கள் ஆதங்கத்தை, கருத்தை த்தெரிவிக்கலாம்..

Monday, December 05, 2011

புரட்சிப்பதிவருடன் ஒரு நேர் காணல் - காமெடி கும்மி கலாட்டா

சார்.. இங்கே புரட்சிப்பதிவர் எங்கே குடி இருக்கார்? நான் அவரை பார்க்கனும்... 

அதோ நேரா போனா ஒரு காஃபி கஃபே வரும் பாருங்க.. அந்த கடைக்கு எதிர்ல தான் குடி இருக்கார்..

சபாஷ், பலே ,காபி பேஸ்ட்டுக்கு எதிரானவர்ங்கறதால காஃபி ஷாப்க்கு எதிர்லயே குடி இருக்கார் போல..

அக்கா, வணக்கம்க்கா ..அண்ணன் இருக்காருங்களா?

அவர் தூங்கிட்டு இருக்காருப்பா.. 

என்னது? தூங்கறாரா? அவர் ஒரு விழிப்புணர்வுப்பதிவர் ஆச்சே? எதுக்கு தூங்கறாரு?எழுப்புங்க.. 

தம்பி.. மதியாதார் தலை வாசல் மிதியாதேன்னு பழமொழி தெரியுமில்ல.. என் வீட்டுக்கு எதுக்கு வந்தே?

அண்ணே, அக்காவை கேட்டுப்பாருங்க.. நான் வாசப்படியை மிதிக்கலை, தாண்டித்தான் வந்தேன்.. 

சரி சொல்லு இன்னா மேட்டரு?

நீங்க தான்னே சொல்லனும்.. உங்க பிளாக்ல உங்க ஃபோட்டோ பார்த்தேன், சூப்பரா இருக்குண்ணே.. அது உங்க 25 வயசுல எடுத்ததுங்களா?

ச்சே, ச்சே  அது என் சொந்த முகம் கிடையாது.. கூகுள் ல போய் காபி பண்ணி என் பிளாக்ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன்.

அடடா.. என்னண்ணே.. ஓப்பனிங்க்லயே டக் அவுட் ஆகி சொதப்பறீங்க? நீங்கதான் காபி பேஸ்ட்க்கு எதிரானவர் ஆச்சே.. சொந்த முகத்தையும், உங்க ஃபோன் நெம்பர் , அட்ரஸ் எல்லாம் போடலாமே? அதானே வீரனுக்கு அழகு? இப்போ பாருங்க நான் ஒரு டம்மி பீசு.. நானே என் ஃபோட்டோ , ஃபோன் நெம்பர் எல்லாம் தில்லா போட்டிருக்கேன், நீங்க ஏண்ணே பம்பறீங்க? ஆமா, இதானே உங்க டைரி.. என்னமோ எழுதி இருக்கே?

அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன்  முதற்றே உலகு-

இது திருக்குறள் ஆச்சே.. ஆல்ரெடி திருவள்ளுவர் எழுதிட்டாரே, நீங்க ஏன் மறுபடி அதை எழுதினீங்க?

லூஸ் ,மாதிரி பேசாதேப்பா.. நம்ம முன்னோர்கள் எழுதுன நல்ல விஷயங்கள் எல்லாருக்கும் போய்ச்சேர வேண்டாமா?

என்னண்ணே, உங்களுக்கு ஒரு நியாயம்  ஊருக்கு ஒரு நியாயம்.. வேடந்தாங்கல் கருணையும், கவிதை வீதி சவுந்தரையும் திட்டி  8 போஸ்ட் போட்டிருக்கீங்களே? அது ஏன்?

ஹி ஹி எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல் தான்.. ஈசியா ஹிட்ஸ் வாங்கறாங்க..மற்ற பதிவர்கள் எல்லாம் நல்ல போஸ்ட் எழுதியும் ஹிட் ஆக மாட்டேங்குது.. 

சரி... இதென்ன நோட்டு?

அதுவா? எங்க மேரேஜ்க்கு சொந்தக்காரங்க மொய் வெச்சாங்க இல்லையா அந்த நோட்டு, யார் யார் எவ்வளவு மொய் வெச்சாங்க?ன்னு கணக்கு.. நான் அவங்க வீட்ல விசேஷம் நடக்கறப்ப பதில் மொய் வைக்கனும் இல்லையா? அதுக்குதான்..

ஓஹோ.. இதே ஃபார்முலாவை அவங்க ஃபாலோ பண்ணுனா மட்டும் ஏன் திட்டறீங்க? பிளாக் உலகம் ல 10 பேர் பிளாக் போய் நாம கமெண்ட் போட்டாத்தான் அவங்க நம்ம பிளாக் வருவாங்க.. நாம ஓட்டு போட்டாத்தான் அவங்க ஓட்டு போடுவாங்க.. இதுல என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?

அதில்லை, 1689 பேர் பிளாக் உலகத்துல இருக்காங்க, ஆனா இந்த 3 பேர் மட்டும் டாப் 20 ல வந்துடறாங்க, அதான் வயிற்றெரிச்சலா இருக்கு.. அதுவும் காபி பேஸ்ட் போஸ்ட்டா இருக்கு.. 

சரி, காபி பேஸ்ட் சரியா தப்பா?ங்கற விவாதம் அப்புறம் வெச்சுக்கலாம், உண்மைத்தமிழன் அண்ணன் கூட ஜூனியர் விகடன் போஸ்ட்டை ரெகுலரா போடறார்..  ஆரூர் மூனா செந்தில் கூட ஒரு போஸ்ட் சொந்த போஸ்ட், ஒரு போஸ்ட் காபி பேஸ்ட் போடறார்.. அவங்களை எல்லாம் எதுவுமே சொல்லாம ஏன் குறிப்பிட்ட இந்த 3 பேரை மட்டும் குறி வைக்கறீங்க?

நீ லூஸாப்பா.. அவங்க 2 பேரையும் பார்க்கவே பயமா இருக்கு.. எனக்கு பயந்த சுபாவம் வேற.. ஆனா கருண், சவுந்தர் எல்லாம் புள்ளப்பூச்சிங்க.. பயந்துக்குவாங்க.. அதான்

சரி.. நீங்க இதுவரை எத்தனை  போஸ்ட் போட்டிருக்கீங்க?

23

அதுல மக்கள்க்கு யூஸ் ஆகற மாதிரி போஸ்ட் எத்தனை?

ஹி ஹி  எல்லாமே அடுத்தவனை குறை சொல்லி போட்ட போஸ்ட் தான் 

சரி, என் போஸ்ட் இதுவரை எத்தனை தெரியுமா? 912.. அதுல ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன், அவள் விகடன்  காபி பேஸ்ட் பதிவு மொத்தம் 230.. மீதி எல்லாமே சொந்தப்பதிவுதான் ஜோக்ஸ், சினிமா விமர்சனம் , கட்டுரைன்னு போகுது..இதுல உங்களுக்கென்ன கஷ்டம்? சொல்லுங்க?

அதாவது ஒருத்தனே நெம்பர் ஒன்னா வர்றது எனக்குப்பிடிக்கலை... எல்லாருக்கும் வாய்ப்பு வேணும்.. 

அண்ணே, ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வரனும்னா முதல்ல ஓடி வர்றவனை விட வேகமா ஓடனும்.. அதை விட்டுட்டு அவன் காலை வாரக்கூடாது.. எங்களுக்கும் குடும்பம் இருக்கு, ஆஃபீஸ் வேலை இருக்கு.. எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு பிளாக் வேலையையும் பண்றோம்.. சும்மா திடீர்னு யாரும் ஜெயிக்க முடியாது.. இதுலயும் உழைப்பு இருக்கு.. 2010 ஜூலை 17 ல பிளாக் உலகத்துக்கு வந்தேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு எழுதிட்டு இருக்கேன்.. அடுத்தவங்க வம்பு தும்புக்கு போறதில்லை.. நீங்க ஏண்ணே இப்படி இருக்கீங்க? ஏதாவது மன வியாதியா? டாக்டரை போய் பாருங்கண்ணே?

ஆங்க்.. ஒரு குறை கண்டு பிடிச்சுட்டேன்,,.. டைட்டில் ஏன் கிளாமரா வைக்கறே?இதுக்கு பதில் சொல்லு.. 

அண்ணே.. ஒரு சினிமாக்கு டைட்டில் எப்படி முக்கியமோ.. போஸ்டர் டிசைன் எப்படி முக்கியமோ அதே மாதிரி ஒரு பதிவுக்கு டைட்டில் ரொம்ப முக்கியம், மக்களை சுண்டி இழுக்கற மாதிரி டைட்டில் வைக்கனும்.. இது எல்லாம் பேசிக் லெசன்.. அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமாண்ணே. கருண், கவிதை வீதி சவுந்தர் 2 பேரும் ஆவரேஜ் பிளாக் ஹிட்ஸ் 1000 டூ 2000 தான், நீங்க அவங்களை தாக்கி போஸ்ட் போட்ட அன்னைக்கெல்லாம் 3000 ஹிட்ஸ் ஆகிடுச்சாம்.. 

அய்யய்யோ.. எனக்கு வயிறு எரியுதே.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் அவங்களை தாக்கியே இருக்க மாட்டேனே..

இன்னும் சொல்றேன் கேளுங்க . ஒரு பிரபல பதிவர் தன்னோட பஸ்ல என் போஸ்ட் லிங்க் குடுத்து எவ்வளவு மோசமா விமர்சனம் எழுதி இருக்கான் பாருங்க.. அப்டினு கமெண்ட் போட்டாரு.. உடனே அதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்க அவரோட ஃபாலோயர்ஸ் 2000 பேரும் வந்து என் ஹிட்ஸ்ஸை ஏத்துனாங்க.. ரொம்ப நன்றிண்ணே அப்டின்னு நான் கமெண்ட் போட்டேன் , உடனே உங்களை மாதிரியே அவரும் பதறி அந்த லிங்க்கை அவர் பஸ்ல இருந்து தூக்கிட்டார்..

என் நல்ல எண்ணத்தை புரிஞ்சுக்காம பேசாதே.. நல்ல நல்ல பதிவுகள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கு.. உன்னை மாதிரி குப்பை ஆளுங்கதான் திரும்ப திரும்ப சூடான இடுகைல வர்றீங்க.. அதை தடுக்கனும்..

ரைட்டு.. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. உங்களூக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. நீங்க நல்ல இடுகைகளை மக்களூக்கு அடையாளம் காட்டுங்க.. எதெல்லாம் நல்ல இடுகையோ அதுக்கு லிங்க் கொடுத்து வலைச்சரம் மாதிரி செயல்படுங்க, 4 பேருக்கு நல்லது நடக்கும், அவங்களூக்கும் ஹிட்ஸ் கிடைக்கும்..

சாரி , அது என் வேலை  இல்லை.. எனக்கு யாரையாவது ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கனும்.. இப்போ உன் பிளாக்ல சினிமா விமர்சனம் போடறப்ப எதுக்கு கூகுள்ல போய் நடிகைங்க ஃபோட்டோவை போடறே?


அண்ணே, இதுக்காக நான் சென்னையோ, மும்பையோ  போயா ஃபோட்டோ எடுக்க முடியும்.. கூகுள்ல தான் எடுக்க முடியும்..


சரி.. எல்லாரும் வாரம் 5 போஸ்ட்  போடறாங்க, நீ மட்டும் ஏன் டெயிலி 2 போஸ்ட் போடறே? உன்னால பல தரமான பதிவர்கள் வெறுத்துப்போய் பிளாக் எழுதறதையே விட்டுட்டாங்க..

அண்ணே.. லூஸ் மாதிரி பேசாதீங்க.. ராமநாராயணன் மாசம் ஒரு  படம் எடுத்து ரிலீஸ் பண்றதால ஷங்கரோ, மணி ரத்னமோ சினி ஃபீல்டை விட்டு போய்ட்டாங்களா? அவங்கவங்களுக்கு உள்ள மரியாதை அப்படியே தான் இருக்கும்.. டெயிலி 2 போஸ்ட் போடறதால ஒருத்தன் நல்ல பதிவர்னு பேர் வாங்கிட முடியாது.. குறிஞ்சி மலர் போல் அரிதாக பதிவு போடுவதால் ஒரு நல்ல பதிவரை யாரும் குறை சொல்லவும் முடியாது

ஓஹோ, இத்தனை வியாக்கியானம் பேசறியே.. அப்புறம் ஏன் தமிழ்மணம் ரேங்கிங்க் வேணும்னு அலையறே.. அதை விட்டுட்டு நீ பாட்டுக்கு இருந்தா எனக்கு வயிறு எரியாதுல்ல?


அண்ணே.. ஸ்கூல்ல படிக்கறப்பதான் ஒழுங்கா ரேங்க் எடுக்க முடியல.. இங்கயாவது எடுக்கலாம்னுதான் , இதெல்லாம் ஒரு ஜாலிதான்.. இதுனால யாருக்கும் 10 பைசா லாபம் இல்ல.. அப்படி ஏதாவது வருமானம் இருந்தாலாவது உங்க குய்யோ முறையோ அரற்றலுக்கு ஒரு  காரணம் சொல்லலாம்..

சரி.. என் பிளாக்ல ஒரு எதிர் பதிவு போடறேன்.. அங்கே சந்திக்கலாம்..

Tuesday, November 22, 2011

சைக்கோ கணவனை கொலை செய்த ஒரு தேவதையின் டைரியிலிருந்து..

image0042


1993 செப்டம்பர் 16: இன்று 16 பிறந்த நாள். ஸ்கூல் விட்டு சீக்கிரம் வந்துடு. ஈவினிங்க் மலைக்கோவிலுக்கு போலாம்னு அம்மா சொன்னாங்க. சரின்னு நானும் வந்துட்டு, குடும்பத்துடன் கிளம்பினோம். போகும்போது, எதிர்வீட்டு பாட்டி, நல்ல மாப்பிள்ளையா கிடைக்கனும்ன்னு சாமியை  நல்லா வேண்டிக்கோடினு சொல்லிச்ச்சு. போ பாட்டி! இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு சொன்னாலும், சாமி கும்பிடும்போது...,சாமி! நல்லா சிவப்பா, என்னைவிட உயரமா, கரு கருன்னு மீசையோட காதல் கடலில் என்னை மூழ்கடிக்குற, அந்தஸ்துல எப்படி இருந்தாலும் பசி, வறுமையைக்கூட மறக்கடிக்கற காதலுடன் என்னை மட்டுமே உலகமா நினைக்குற புருசன் எனக்கு வரனும்,  வேணும்னு வேண்டிக்கிட்டேன்.

1993 நவம்பர் 6: இன்றுதான்  அவனை பார்த்தேன். கூட வரும் சுஜிக்கு தெரிஞ்சவனாம். சுஜி அவன்கிட்ட பேசிட்டு வந்தாள்.. . திரும்பி திரும்பி மீண்டும், மீண்டும் பார்த்தேன். ஏற்கனவே, டைப்பிங் இன்ஸ்டிடியூட்ல போகும்போதும், வரும்போதும் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இன்று புதிதாய், அழகாய் தெரிந்தான். ஏன்?? அவன் பேர் என்னனு தெரிஞ்சுக்க ஆசையா இருந்துச்சு.  இந்த சுஜி பிசாசுக்கிட்ட கேட்கலாம்னு பார்த்தால். அப்புறம் எல்லா பிசாசுங்ககிட்டயும் சொல்லி மானத்தை வாங்குமே? அதான் சைலண்ட்டா இருந்துட்டேன்.

1993 நவம்பர் 16: இன்னிக்காவது அவன் பேர் என்னனு தெரிஞ்சுக்க முடியுமா? படிக்குற பாடத்தில் இருந்தாலாவது  ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும், டீச்சர்கிட்டயும் கேட்டு தீர்த்துக்கலாம். அவன் பேர் என்னனு யார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறது. அட ஆண்டவா ஹெல்ப் மீ.

1993 நவம்பர் 23: அப்பாடா! ஒரு வழியா இன்னிக்குதான் அவன் பேர் குமரவேல்ன்னு  தெரிஞ்சுது. பேர் கொஞ்ச கர்நாடகமா இருந்தாலும் நல்லா உயரமாய், சிவப்பாய், கருகருன்னு மீசையோட நான் எதிர்பார்த்த மாதிரியே அழகாத்தான் இருக்கான். எங்க டைப்பிங் இன்ஸ்டிடியூட்ட்லயே கோச்சரா சேர்ந்திருக்கான். 

1993 நவம்பர் 28:அவனுக்கு பிறந்த நாளாம். எல்லாருக்கும் சாக்லேட் குடுத்தான். எனக்கும் குடுத்தான். பர்த் டே விஷ் பண்ண அவன் கையை பிடிச்சு விஷ் பண்ணேன். அப்ப்ப்பா !!!!!அவன் கை என்னமா சில்லுன்னு ஷாக்கடிச்ச மாதிரி இருந்துச்சு. அவன்  பிறந்த நாளில், என்னுள் காதலும் பிறந்ததா? 

1993 டிசம்பர் 12: ரொம்ப நாள் தவிச்ச தவிப்புக்கு இன்றுதான் விடுதலை. இன்னிக்குதான் தைரியம் வந்து அவன்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லிட்டேன். என்ன பதில் சொல்வானோ?! தெரியலையே.

1994 ஜனவரி 1: தைரியமா காதலை சொல்லிட்டேனே தவிர ஒத்துக்குவானா? இல்லை மறுப்பானா? அப்பாக்கிட்ட சொல்லிடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். ஆனால், இன்ஸ்டிடியூட் படிக்கட்டில் வைத்து தானும் காதலிப்பதாக சொல்லி, ஒரு லிப் கிஸ்ஸடிச்சானே! ஒரு கிஸ்ஸுல சொர்க்கமே என் காலடியில்...,

1994 ஜனவர் 28: வெளியேலாம் கூப்பிடுறானே. அவன் ரொம்ப நல்லவனாத்தான் இருக்கான். எல்லை மீற மாட்டான்னு நம்பிக்கை இருக்கு ஆனால்,அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் கொன்னே போட்டுடுவார்.

1994ஃபிப்ரவரி 4: பாசாகி இஞ்சினியராகிட்டானாம்.அதை கொண்டாட வெளியே கூப்பிட்டான். போனேன். அப்பாவுக்கு தெரிஞ்சவங்க பார்த்துட்டு வந்து சொல்லிட்டாங்க. அப்பா அடி பின்னிட்டார். ஒரே ஜாதியில்லையாம், அந்தஸ்துலயும் தாழ்ந்தவங்களாம். மறந்துட சொல்றாரு. அவனை, மறக்க என்னால முடியாதே.., ஸ்கூலுக்கும், டியூசனுக்கும், டைப்பிங்க் கிளாசுக்கும் போகக்கூடாதுன்னு அப்பா சொல்ல, பாதியிலேயே நிறுத்திட்டால் எல்லாரும் சந்தேகம் வரும். அதனால, நீங்களே இந்த கழுதையை கூட்டிட்டு போய் கூட்டு வாங்கன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதானல அப்பா எப்பவும் பாடிகார்டு போல கூடவே வர்றாரு. அவன்கிட்ட பேசவே முடியலையே. ஆண்டவா எங்கள எப்படியாவது ஒண்ணா சேர்த்துடு..


1994 ஃபிஃப்ரவரி 15: டைப்பிங் கிளாஸுல வந்து மீட் பண்ணான், தனக்கு டெல்லில வேலை கிடைச்சிருக்கிறதாகவும், என்னையும் அவன் கூடவே வந்துட சொன்னான். அங்க போய் கல்யாணம் பண்ணிக்கலாம், கொஞ்ச நாள் கழிச்சு வரலாம்.  அதுக்குள்ள நம்ம வீட்டுங்கள்ல கோவம் போயிடும்னு சொன்னான். நாந்தான் அப்பா அம்மா பேர் கெட்டு போயிடும். உன்கூட நான் வரமாட்டேன்னு சொல்லிட்டேன். அப்போ என்னை பிரியனும்டின்னு சொன்னான். பரவாயில்லை. ஒரே பொண்ணான என்னை என் அப்பா அம்மா எப்படி எப்படியெல்லாமோ வளர்த்தாங்க. நோயிலிருந்து காப்பாத்தினாங்க. என் மேல உயிராய் இருக்காங்க. அவங்களுக்காக உன்னை பிரிய சம்மதம்னு சொல்லிட்டேன்.

அப்போ என்னை மறந்துட்டு இருப்பியாடின்னு கோவமா கேட்டான். ஒக்கே, என் அப்பா அம்மா கவுரவுத்துக்காக, உன்னை மறக்கவும் செய்வேன். “போடி, இதுக்காக நீ வருத்தப்பட போறே பாருன்னு சொல்லிட்டு போய்ட்டான். கண்டிப்பா, மாட்டேன், என் அப்பா அம்மா, எனக்கு நல்லதுதான் செய்வாங்க. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் ரொம்ப நல்லா இருப்பேன்னு சொல்லிட்டேன்.

1994 மார்ச் 28: வீட்டுல எனக்கு கல்யாண ஏற்பாடு செய்றாங்க. நான் இப்பதான் பிளஸ் டூ படிக்குறேன். நல்ல மார்க் எடுப்பேன். என்னை படிக்க வைங்க. காதல், அது இதுன்னு சுத்த மாட்டேன். நல்ல பிள்ளையா உங்க பேச்சை கேட்டு நடக்குறேன்னு கெஞ்சி கேட்டும், ஐந்து நாள் உண்ணாவிரதம் இருந்தும் நோ யூஸ். குமரவேல் டெல்லில ஒரு கம்பனியில் போய் வேலைக்கு சேர்ந்துட்டான். இனி என் முகத்துலயே முழிக்க மாட்டேன்னு  சுஜிக்கிட்ட சொன்னானாம்.

199 ஏப்ரல் 4:அம்மாவோட தூரத்து சொந்தமான சுந்தரம் இன்னிக்கு என்னை பொண்ணு பார்க்க வந்தார். என்னைவிட, குள்ளமா, கறுப்பா இருந்தாலும் முகம் களையாவே இருந்துச்சு. ஆனாலும், என் சம்மத்ததை கேட்கவே இல்லை..  ஜூன் 10 கல்யாணம்னு முடிவு பண்ணிட்டு போய்ட்டாங்க. 

1994 ஏப்ரல் 15: இன்று நிச்சயதார்த்தம். எல்லாரும் வந்தாங்களே. ஆனால், அவர் ஏன் வரலை? அவங்க அம்மா, அப்பா, அண்ணா, தம்பிலாம் நல்லா பழகுறாங்க. ஆனால், அவங்க அண்ணி டாமினேஷன் தான் ஓவரா இருக்கு. இதுதான் எனக்கு விதிக்கப்பட்டது போலும். காதலில் துரோகம் சரியோ, தவறோ தெரியாது. ஆனல், இதை முழு மனதுடன் ஏத்துக்கிட நான் முடிவு பண்ணிட்டேன். கல்யாணத்துக்குள் குமரவேலை முழுசா மறந்துடனும். இறைவா! அருள் புரி.

1994 மே 12: நாட்கள் வேகமா நகர்ந்துக்கிட்டு இருக்கு. கல்யாண நாள் கிட்ட வருது. கல்யாண மண்டபம், டிரெஸ், நகைன்னு பார்த்து பார்த்து எனக்கு பிடிச்சதா வாங்குறார் அப்பா. ஆனால், மாப்பிள்ளை? ம்ம்ம்ம்ம்

1994 ஜூன் 9: இன்னிக்கு மாப்பிள்ளை அழைப்பு. அவங்க வீட்டுக்கு நல்ல மருமகளா அவருக்கு நல்ல மனைவியா நடந்துக்கனும்னு இறைவனை வேண்டிக்கிட்டு மண்டபத்துக்கு செல்கிறேன். இந்த வீட்டுக்கும், எனக்குமான பந்தம் இன்றோடு முடியப்போகுது. நாளை முதல் நான் வேறொரு வீட்டு பெண். அப்பா, அம்மா தான் பாவம் இனி தனியா இருக்கனும், இதுவரை, அண்ணனோ, தம்பியோ இல்லாத குறை தெரிந்ததில்ல. முதன் முறையாக இன்றுதான் தெரியுது. ஆண்டவா எல்லாரையும் நல்லா வச்சுக்கோ. 

1995 ஜூன் 10: இதுவரை பூங்கொடியா இருந்த நான் இன்றிலிருந்து பூங்கொடிசுந்தரம். ஆயிரம்தான் இருந்தாலும் திருமணம்னாலே மகிழ்ச்சிதான் போல. உடம்பெல்லாம் இனம் புரியாத சிலிர்ப்பு.  ஓரக்கண்ணால் அடிக்கடி அவரை பார்க்கிறேன். யாருக்கும் தெரியாமல் மார்பினில் தவழும் தாலிக்கயிற்றை தொட்டு பார்க்கிறேன். உடலெங்கும் மின்சாரம் பாய்கிறது. எனக்கு இருக்கும் சிலிர்ப்பு அவங்களுக்கு இல்லை போல.

யாரும் கவனிக்காத போது, ஒரு கலாய்ப்பு, லேசா கையப்பிடிச்சு ஒரு கிள்ளு, போட்டோவுக்கு நிக்கும்போது ஒரு உரசல்னு ஏதுமில்லாமல்!? ஓ வீட்டுக்கு பயந்த பிள்ளைன்னு அப்பா சொன்னாரே. தனியா இருக்கும்போது பேசுவாரோ.

வீட்டுக்கு காரில் போகும்போது கூட பெரியவங்க யாருமில்லை.  அவங்க அண்ணன் பிள்ளைங்க மட்டும்தானே இருந்துச்சு. அப்பவும் எந்த பேச்சும் இல்லாம, எந்த சில்மிஷமும் இல்லாம தூங்கிட்டு வந்தாரே ஏன்?இன்னிக்கு நாள் நல்லா இல்லியாம். அதனால், மத்த சடங்குகளெல்லாம் ஒரு மாசம் கழிச்சுதானாம். மாமியார் வந்து சொன்னாங்க. 

1994 ஜூன் 25: கூட்டு குடும்பம் என்பதால் தனியா பேசும் சந்தர்ப்பம் அதிகம் வாய்ப்பதில்லை. எப்போதாவது சின்ன சில்மிஷத்தோடு சரி. அவங்க ரொம்ப பயப்படுறாங்க. நான் தான் அவரை முதல்ல கிஸ் பண்ணேன். 

1994 ஜூலை 4: இன்று என் வாழ்வில் மிக மோசமான நாள் போல. இந்த நாள் விடியாமலே போயிருக்கலாம். ஆனால் விடிந்து என் வாழ்க்கையை இருட்டாக்கியது. அவங்க சித்தப்பா வீட்டு கிரகப்பிரவேசம்ன்னு எல்லாரும் போயிட்டோம். அவங்க கடைக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. கொஞ்ச நேரத்துல எனக்கு தலைவலி வரவே வீட்டுக்கு போயிட்டேன். வீட்டுக்குள்ள ஏதோ சத்தம் வரவே போய் பார்த்தால், அங்கே அவரும், அவங்க அண்ணியும் ஒண்ணா.....,

சத்தம் போடக்கூட திராணியின்றி, அந்த இடத்தை விட்டு வெளியில் வந்து தனிமையில் யோசிக்குறேன். இதை யார்கிட்ட சொல்லலாம். என்ன செய்யலாம்ன்னு யோசிச்சேன். போடான்னு சொல்லிட்டு போயிடலாம்ன்னு அறிவு சொல்லுது. ஆனால், மனசோ..,

பொண்ணை நல்ல இடத்துல, கவர்ன்மெண்ட் வேலை செய்ற மாப்பிள்ளைக்கு கட்டிகுடுத்துட்டோம்ன்னு பெருமிதமா இருக்குற அப்பா அம்மா நிலைமை என்ன ஆகும்ன்னு யோசிச்சு பார்த்தியா? ஏற்கனவே, அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு இதை கேள்விப்பட்டால்..., 

பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு அப்பா உயிரையே விட்டுடுவார். இதெல்லாம் தேவையா? உனக்கு கிடைச்ச அதிர்ச்சியை துக்கத்தை முழுங்கு. மனசு வச்சால், எப்பேர்ப்பட்டவனையும் திருத்திடலாம். உனக்கு பிடிச்ச முருகர்சாமி துணைக்கு இருப்பார்ன்னு சொல்லவே மனசை தேத்திக்கிட்டு, நார்மல் லைஃபுக்கு வர முயற்சி செய்கிறேன்.

1994 ஜூலை 12: இன்று ஃபர்ஸ்ட் நைட். மனசு என்னவோ அவங்க கிட்டே ஒட்டவே இல்லை. கண்ணை மூடினால், அவங்க அண்ணியுடன் இருந்த கோலம்தான் மனசுக்கு வருது.

1994 செப்டம்பர் 10: இன்று டாக்டர்கிட்ட கூட்டி போகனும்னு அவங்கம்மாவும் பிள்ளையும் பேசிக்கிட்டாங்க. இன்னும் நான் பிள்ளை உண்டாகலைன்னு அவங்கம்மாக்கு பெரிய குறை. மாமியார் சொல்றாங்க.., என்னோட அம்மாவுக்கு ஒரே பொண்ணு. வேற குழந்தைங்க இல்லை. இதுக்கு அதாவது உண்டா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும் டாக்டர்கிட்ட போய் வாடான்னு சொன்னாங்க.

டாக்டர்கிட்ட போய் வந்ததுல எனக்கு எந்த குறையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அப்படின்னா, உங்ககிட்டதான் எதோ குறை இருக்கு, “நீங்க சரியா தாம்பத்யம் செய்யலையோன்னு கோவத்துல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டேன்.  நானா சரியா இல்லைன்னு சொல்லி, அவங்க அண்ணியை கூட்டி வந்து  பெட்ரூம் கதவை தாழ் போட்டு என் முன்னாடியே ஒண்ணா இருந்தாங்க. 


அப்புறம் அவர் சொன்னாரு -அதுமட்டுமில்லாம, என் கூட வேலை செய்ற காஞ்சனாவுக்கும், எனக்கும் தொடர்பு இருக்கு. அவ இப்போ 6 மாசம் முழுகாம இருக்கா சந்தேகம் இருந்தால் போய் கேட்டுக்கோன்னு சொல்லிட்டார். ஆடி போயிட்டேன். நான் என்ன பாவம் செய்தேன். இதையெல்லாம் தாங்க? என் அப்பா அம்மா என்னை பூப்போல வளர்த்தாங்களே!  இதுப்போல லோல்படவா? முருகான்னு அழத்தான் முடிஞ்சுது.

1994 அக்டோபர் 15: என் பெரியம்மா பையனை கூப்பிட்டுகிட்டு அந்த காஞ்சனாவை போய் பார்த்தேன், அவங்க மேடிட்ட வயிறே எல்லா கதையும் சொல்லிடுச்சு. அவங்க சொன்னாங்க -நான் ஒரு விதவை. அவர்கூடதான் வேலை செய்யறேன். எங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்கு. நான் இப்போ முழுகாமத்தான் இருக்கேன். என்னை மன்னிச்சுடுங்க, என்னை இந்த ஊர்க்காரங்க முன் அசிங்கபடுத்தாதீங்கன்னு சொல்லி கெஞ்சினாங்க. அந்த பொண்ணை அசிங்கப்படுத்தி என்ன ஆகப்போகுதுன்னு என் விதியை நொந்தவாறே வீட்டுக்கு வந்துட்டேன்..

1994 அக்யோபர் 16: அப்பா அம்மாகிட்ட சொல்லாதேடான்னு நான் சொல்லியும் கேட்காம் என் பெரியம்மா பையன்  அப்பா அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லி, பஞ்சாயத்துக்கு வந்துட்டாங்க. என் மாமனார் தலை குனிஞ்சு நின்னார். ஆனால், என் மாமியாரோ பிள்ளைக்கு வக்காலத்து வாங்கினாங்க. உங்க பொண்ணு மட்டும் யோக்கியமா? கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ணவதானே? என்ன பண்ணாளோ? ஏது பண்ணாளோன்னு ன்னு வாய் கூசாம என் மேல் சேறை வாறி இறைச்சங்க.  அப்பா அம்மா என்னம்மா பண்ண போறேன்னு கேட்டாங்க. என்னப்பா செய்றது. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறேன்பான்னு சொல்லி அனுப்பிட்டேன்.

1994 நவம்பர் 24 - அப்பா அம்மா வந்து பேசப்போறதா சொல்லி இருக்காங்க. அவங்கிட்ட சொன்னேன்.எனக்கு இதுலாம் புதுசு, இதுபோல கேவலங்களை சந்திச்சு பழக்கமில்லை. இனி உன்னோடு மனசு ஒத்து வாழ முடியும்ன்னு எனக்கு தோணலை. அதனால, நான் எங்கப்பாக்கூடவே நாளைக்கு போயிடப்போறேன்னு சொன்னேன். அதுக்கு அவங்க, போடி இப்பதான் தெரியுது நீ ஏன் என்னோடு மனசு ஒத்து  வாழ மாட்டேங்குறேன்னு.  உனக்கும்  உங்கப்பாவுக்கும் இருக்குற கள்ளதொடர்பாலதானே  நீ உங்கப்பா கூட போறேன்னு சொல்றே. ரெண்டு பேராலயும் பிரிஞ்சு இருக்க முடியலையோன்னு  தலையில நெருப்பை வாரி கொட்டுன மாதிரி பேசினாங்க.

ஒருவேளை என்னை பிரிஞ்சு நீ போயிட்டால்.., உங்க ரெண்டுபேருக்கும்
உறவிருக்குறதா  நான் ஊருல சொல்லி உங்க மானத்தை வாங்குவேன்னு சொல்றாங்க. அடிச்சாலோ இல்லை சூடு போட்டாலோ இல்லை வேறு எதாவது கொடுமை படுத்தினாக்கூட தாங்கிக்கலாம். ஆனால், இப்படி வார்த்தையால தேள் கொட்டுற மாதிரி கொட்டுனா?எப்படி தாங்கிக்கறது. அப்பா கூட போனால்,   அவங்க சொல்ற  மாதிரி ஊருக்குள்ள சொல்லி அசிங்க படுத்தி.., அதை அப்பா அமா கேட்டால் தூக்குல தொங்கிடுவாங்களே. என்ன நடந்தாலும் இனி வீட்டை விட்டு போகக்கூடாது. அதற்குண்டான மன பலத்தை எனக்கு குடு இறைவா!


1994 டிசம்பர் 1: மனசு  ஒட்டாமலே குடும்பம் நடத்துறேன். அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்ன்னு நினைச்சு வளர்த்த என் கனவுலாம் கருகி போச்சே. ஒரு குழந்தை பிறந்தாலாவது  எனக்கு ஆறுதலா இருக்கும்ன்னு பார்த்தால் எனக்கு அதுக்கு கூட குடுப்பினை இல்லை.

1995 பிப்ரவர் 5: காஞ்சனாவுக்கு பெண்குழந்தை பிறந்துச்சு. அதை போய் பார்த்துட்டு வந்தேன். குழந்தை அவ்வளவு அழகு. விட்டு பிரிஞ்சு வரவே மனமில்லை.

1995 மார்ச் 7: அவர் வேலை செய்யும் இடத்துக்கே தனிக்குடித்தனம் வச்சுட்டாங்க. காஞ்சனா வீடு என் வீட்டுக்கு பக்கத்து தெருதான். கல்பனாவும், என் வீட்டுக்காரரும் அப்படி இப்படி இருக்குறது எனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் அமைதியா இருக்க பழகிக்கிட்டேன். 

முதல் முறை அடிபடும்போதுதான் வலிக்கும். மீண்டும், மீண்டும் அடிபட்டால், ஒரு கட்டத்திற்கு மேல்..., மரத்து போகும். அதுபோல்தான் என் நிலை
அவங்க நல்ல தோழியா நடந்துக்குறாங்க. அவங்க பெண்ணோ என்னுடன் முழுநேரமும் இருக்கும் அவளால்தான், என் துக்கங்களை மறந்துட்டு இருக்கேன்.  அவள் பெயர் இந்து  படுச்சுட்டி. கொள்ளை அழகு. அம்மான்னுதான் என்னை கூப்பிடுறா. 

1996 ஜனவர் 15: காஞ்சனா மீண்டும் முழுகாம இருக்காங்களாம்.

1996 நவம்பர் 24: இன்று மற்றொரு தேவதையால் என் உலகம் ஆசிர்வதிக்கப்பட்ட்து.காஞ்சனாவுக்கு இன்று மீண்டும் பெண்குழந்தை பிறந்தது. இரண்டாவது பெண்குழந்தை என்பதால், என் வீட்டுக்காரர் ஆஸ்பிட்டல் போய் ரெண்டு பேரையும் பார்க்கல. நான் போய் பார்த்துட்டு இந்துவுக்கு அவ தங்கச்சியை காட்டிட்டு வந்தேன்.  காஞ்சனாவுக்கு குளிர் ஜுரம் வந்திருக்கு. பாவம் அவங்க.

1996 நவம்பர் 25: குளிர்ஜுரம் அதிகமாகி ஜன்னி கண்டு இறந்துட்டாங்க.ன்னு ஹாஸ்பிடல்ல சொன்னாலும் அவளை என் கணவர் தான் கொலை செஞ்சிருக்கனும்னு ஒரு உள்ளுணர்வு எனக்கு. இவர் எந்தவித சடங்கும் செய்யலை. காஞ்சனாவோட அண்ணனை எப்படியோ சரிக்கட்டிட்டார் போல.  பிள்ளைங்களை காஞ்சனாவோட அண்ணன் எடுத்து போய்  வளர்ப்பதாய் முடிவானது. 

1996 டிசம்பர் 23: இவ்வளவு நாள் கழிச்சு கடவுள் எனக்கு அருள் கிடைச்சது. நான் முழுகாம இருக்கேனாம். டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டார். தாயாகப்போகும் சேதி தெரிஞ்சதும் இந்து முகம்,மனசுல நிழலாடியது. போய் பார்த்துட்டு வரனும்.

1997 ஜனவரி 1: குழந்தைளை பார்த்துட்டு வரலாம்ன்னு காஞ்சனாவோட அண்ணன் வீட்டுக்கு போனேன். அங்கே , ஐயோ என் இந்துவின் கோலம் ஐயோ ஆண்டவா நீ இருக்கியா இல்லியா? குழந்தை அழுக்கு பிடிச்ச டிரெஸும், உடலெங்கும் அழுக்கும் பிசுக்கு பிடிச்ச தலையுமா பார்க்கவே கண்றாவியான் கோலத்தில், சின்னஞ்சிறிய குழந்தை வீட்டை பெருக்கிகிட்டு இருக்கு அவ மாமி தூங்குறா. சின்னதுக்கு உடம்பு சரியில்லை. ஜுரத்துல இருக்கு. என்னை கண்ட்து இந்து அம்மான்னு ஓடி வந்து என் காலை கட்டிக்கிச்ச்சு. இதுக்கொரு முடிவு கட்டாம விடுறதில்லைன்னு மனசுல நினைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். 

1997 ஜனவர் 2: அப்பா அம்மா மாமியார், மாமனார் எல்லாரையும் கூப்பிடு பஞ்சாயத்து வச்சேன். இனி இவர் கூட வாழ மாட்டேன்னு சொன்னேன். டைவர்ஸுக்கு அப்ளைக்கு பண்ண போறேன். ஐயோ கவுரவம் போயிடும்ன்னு சொல்லி கெஞ்சுனாங்க. ஆனால், அவங்க நினைப்புலாம் என் மீது இருக்கும் ஐம்பது லட்சம் சொத்து மேலதான் இருக்குன்னு எனக்கு தெரியும். 

சரி நான் டைவர்ஸ் பண்ணலை. ஆனால் அந்த ரெண்டு குழந்தைகளை நான் தான் வளர்ப்பேன்.  இல்லாட்டி என் வயத்துல வளர்ற உங்க பையனோட கருவை கலைச்சுடுவ்வேன்னு மிரட்டினேன். வழிக்கு வந்து ஒத்துக்கிட்டாங்க. நாளைக்கே போய் பாப்பாக்களை கூட்டிக்கிட்டு வந்துடுறோம்ன்னு சொல்லிட்டாங்க. 

1997 ஜனவரி 4: அப்பா அம்மா முதல்ல முரண்டு பிடிச்சங்க. யார் பெத்த பிள்ளையையோ நீ ஏன் வளர்க்கனும்? உனக்கென்ன தலையெழுத்து?  பெத்தவனே சும்மா இருக்கான்னு திட்டினாங்க. இதுலாம் வேண்டாத வேலைன்னு திட்டினாங்க. இருந்தாலும் என் பிடிவாதம் கண்டு குழந்தைகளை கூட்டி வந்துட்டாங்க. 

1997 மார்ச் 6: இந்துவும் சின்னது சரஸ்வதியும் இப்போ என் அப்பா அம்மாகிட்ட நல்லா ஒட்டிக்கிட்டதுங்க. அப்பாவும், அம்மாவும் அதுங்க, அழகுலயும், சுட்டித்தனத்துலயும் ஈர்க்கப்பட்டு ரெண்டுத்தையும் பேத்திங்களாக ஏத்துக்கிட்டார்.

1997 நவம்பர் 1 - ரொம்ப நாள் வேண்டிய வரம் இன்று கிடைத்தது. ஆண் பிள்ளையால் ஆசிர்வதிக்கப்பட்டேன். ஆம், எனக்கு ஆண் பிள்ளை பிறண்ட்து. அவன் அப்படியே அவங்கப்பா ஜாடையில கறுப்பா, சுருட்டை முடியோட பிறந்தான். கறுப்பா இருக்குறது மனசுக்கு சங்கடமா இருந்தாலும்..., ஒருவேளை சிவப்பா அழகா இருந்திருந்தால் என்னை சந்தேகபட்டிருப்பாங்களோ!? அதனாலதான் ஆண்டவன் எனக்கு இப்படி அருளினானோ!

2007 பிப்ரவரி 12 - பல கஷ்டங்கள் இருந்தாலும் பிள்ளைகள் முகம் பார்த்து ஆறுதல் அடைகிறேன். பிள்ளைகள் எனக்கு அமைந்து விட்டார்கள். இனி என் வாழ்வில் பொற்காலமே. இன்று காலை தூங்கி விழிக்கும்போதே இந்துக்குட்டி வாயோரமும் கசிந்து தலையணை முழுக்க ரத்தம் காய்ந்து போயிருந்தது. இன்று ஆஸ்பிட்டலுக்கு கூட்டி போனேன். டெஸ்ட்லாம் போர்க்கால அவசரத்துல எடுக்கப்பட்டது.



இதயத்தில் பிரச்சனை என்றார்கள். இது ஜெனிட்டிக் சம்பந்தப்பட்டது என்று
டாக்டர் கூறினார். உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் மருந்தை தவறாமல்
எடுத்துக்கனும். அதுக்கு 20,000க்கு மேல் சொன்னாங்க. என் கணவர் - அதான்
உயிருக்கு ஆபத்தில்லைன்னு சொல்லிட்டாங்களே.  நான் பைசா தரமாட்டேன் னு சொல்லிட்டாங்க. அப்படின்னாலும் பரவாயில்லை. எனக்கு கடனா தாங்க. நான் திருப்பி தந்துடறேன்னு  வட்டிக்கு கடன் வாங்கி பாப்பாக்கு மருந்து வாங்கி குடுக்குறேன். அவ நல்லா இருந்தால், எனக்கு அதுவே போதும்.

2009 ஜனவரி 17 - என் கணவர்க்கு உடல் நிலை சுகம் இல்லை.. படுத்த படுக்கை ஆகிட்டார்.. பக்க வாதம்.. டாக்டர் வந்து பார்த்துட்டு ட்ரீட்மெண்ட் கொடுத்தும் நோ யூஸ்.. அது போக பல பெண்களிடம் போனதால் மற்ற வியாதிகளும்.... 

2011 மார்ச் 8 - இன்னைக்கு பெண்கள் தினம்.  குமரவேல் என் பள்ளி பருவ காதலனை பார்க்கனும்னு தோணுச்சு.. அங்கே இங்கே அலைஞ்சு அட்ரஸ் கண்டு பிடிச்சேன்.. அவன்  நெம்பருக்கு ஃபோன் பண்ணி என் அட்ரஸ் சொன்னேன்.. வரச்சொன்னேன்.. 


2011 மே 12 - நான் செய்யறது தப்பா? ரைட்டா?ன்னு தெரியல.. ஆனா என் மனசாட்சியை திருப்திப்படுத்த முடிவு செஞ்சேன்.. குமரவேல் வந்தான்.. படுத்த படுக்கையா கிடந்த என் கணவன் முன்னால நான் குமரவேல் கூட.... என் கண் முன்னால என் கணவர் தன் அண்ணி கூட என்ன செஞ்சாரோ அதை நான் செஞ்சேன்.. அப்போ அவர் கண்கள்ல தெரிஞ்ச இயலாமை , கோபம் எனக்கு குரூர திருப்தியை குடுத்துது.. 


2011 ஜூன் 10- என் கணவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்.. ஆனா போலீஸ் அதை கொலை கேஸா பதிவு செஞ்சிருக்காங்க.. அவருக்கு ஹார்ட் அட்டாக் வர நான் தான் காரணமாம்.. கோர்ட்ல கேஸ் நடந்திட்டிருக்கு

 டிஸ்கி - திருச்சியில் நடந்த உண்மை சம்பவம் இது.. கணவனின் சில சைக்கோ செயல்கள் கண்ணியம் கருதியும் , பெண்கள் படிக்க சங்கடங்கள் கூடாது எனவும் சென்சார் செய்யப்பட்டு உள்ளது.. 

Monday, November 07, 2011

ஈரோட்டில் அம்மன் சிலை கண் திறந்ததா? - ஸ்பாட் விசிட் ரிப்போர்ட்

3.11.2011 வியாழன் அன்று ஈரோட்டில் ஒரே பரபரப்பு , ஈரோட்ல ஒரு கோயில்ல அம்மன் கண் திறந்து பார்த்ததா... இது நம்ம தமிழ் நாட்ல ஒண்ணும் புதுசில்ல.. பிள்ளையார் பாலை குடிச்சார்.. அம்மன் சிலை கண்ல இருந்து ரத்தம் வழிஞ்சதுன்னு ஏதாவது  ஒரு பர பரப்பு நியூஸ் ஓடிட்டே இருக்கும்..அப்புறம் பார்த்தா அது ஏதாவது காரணத்துக்காக சொல்லப்பட்ட புரளியா இருக்கும், ஆனா ஜனங்க ஒவ்வொருதடவையும் கும்பலா போய் விழுவாங்க..

ஆனா இந்த டைம் இந்த நியூஸ் பரவுன அடுத்த நாள் கோயில் கலெக்‌ஷன் மட்டும் ரூ ஒரு லட்சத்து நாற்பதாயிரமாம்.. வழக்கமா அந்த கோயில்ல டெயிலி கலெக்‌ஷன் அதிக பட்சம் ரூ 400 தான் இருக்கும்.. அவ்வளவு ரஷ் வரக்காரணம் என்ன? ஒரு ஸ்பாட் விசிட் அடிச்சேன்..


ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் கில் இருந்து 2 கி மீ தொலைவில் ஈரோடு கோட்டை செங்குந்தர் கல்யாணம் மண்டபம் அருகே செங்குந்தர் சமூக திருமண  மண்டபம் இருக்கு.. அதுக்கு பக்கத்துல பத்ர காளியம்மன் கோவில் இருக்கு.. அதுதான் ஸ்பாட்.. 

அடேங்கப்பா.. என்னா கூட்டம்? அங்கே போய் அம்மனை பார்த்தேன்.. எப்பவும் போல் தான் இருந்தது.. அக்கம் பக்கம் விசாரித்தேன்.. 

அந்த கோயிலுக்கு ஐம்பொன் சிலை செய்யப்போறாங்களாம்.. அதுக்கு பொருள் உதவி கேட்டு கோயில்லயே விளம்பரம் பண்ணியும் ஒரு ஆளும் கண்டுக்கலையாம்.. அதனால ஒரு விளம்பரத்துக்காக பூசாரி தான் இந்த ட்ரிக்கை செஞ்சாராம்..

பெரிய பெரிய தலைவருங்க கூட என் கனவுல அண்ணா வந்தார் , எம் ஜி ஆர் வந்தார் அப்படி சொன்னார்.. இப்படி செய்ய சொன்னார்னு சொல்லி மக்களை ஏமாத்தறப்ப சாதாரண பூசாரி அப்படி செஞ்சதுல என்ன தப்பு? என நினைக்கத்தோணினாலும் இது ஒரு சமுதாயத்தை ஏமாற்றும் குற்றமே..



இதுதான் கோயில் 



அந்த விளம்பர போஸ்டர்







 

சப்போஸ் கடவுள் கண்ணை திறந்தால் நான் கேட்க விரும்பும் கேள்விகள்


1. கூடங்குளம் பிரச்சனைக்கு என்ன தீர்வு? மக்கள் உண்ணா விரதம் இருக்கறதும்  அதை அரசியல் ஆக்கும் சிலர் ஆதாயம் கண்பதும் ஏன்?

2. பிரதமர் மன்மோஹன் சிங்க் உண்மையிலேயே ஒண்ணும் தெரியாதவரா? இல்லை அப்படி நடிக்கிறாரா?

3. இலங்கைத்தமிழ் அகதிகள்க்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? எல்லாரும் உங்கள் குழந்தைகள் என்றால் ஏன் அவங்க சாவதை வேடிக்கை பார்க்கறீங்க?

4.  தமிழ் நாட்ல கலைஞர், ஜெ ஆகிய 2 தீய சக்திகளுக்கு மாற்று யாரும் இல்லையா? ஒருத்தர் மாற்றா வருவார்னு நினைச்சோம், அவர் வர்றேன் வந்துடுவேன், வரப்போறேன்னு சொல்லிட்டு வரவே இல்லை.. இன்னொருத்தர் எப்பவும் மப்புலயே இருக்கார்..

5. மாற்று அரசு அமையும்னு பார்த்தா தமிழ் நாட்ல எதையாவது டெயிலி மாத்திட்டே இருக்கற அரசாங்கம் அமைஞ்சிருக்கே.. அதுக்கு என்ன தீர்வு?

6. மாயாவதி மாதிரி சிலைப்பைத்தியங்களை நிஜமாவே சிலை ஆக்கிட்டா என்ன?

7. இந்த உலகத்துல  பாரதியார், பக்த்சிங்க் போன்ற நல்லவங்க அல்ப ஆயுசுல போயிடறாங்க.. கெட்டவங்க, அட்டூழியம் பண்றவங்க நீண்ட நாள் நலமா வாழறாங்க.. அது ஏன்?