Showing posts with label பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு ; சதி செய்தது யார் ?;. Show all posts
Showing posts with label பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு ; சதி செய்தது யார் ?;. Show all posts

Sunday, October 27, 2013

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு ; சதி செய்தது யார் ?;

பாட்னா: பீகாரில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உரையாற்ற விருந்த பிரசார மேடை , ரயில்வே ஸ்டேஷன், மைதானம் என 8 இடங்களில் இன்று பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாகியிருப்பதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. 90க்கும் மேற்பட்டோர், பலர் காயமுற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்தாக சந்தேகிக்கப்படும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.



பா.ஜ., கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் மோடியை கொல்ல திட்டம் தீட்டப்பட்டு இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டுகள் சக்தி வாய்ந்ததது இல்லாமல் இருந்ததால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. இந்த குண்டு வெடிப்பு மத்தியிலும் மோடி தனது பிரசாரத்தை ரத்து செய்யாமல் மேடைக்கு வந்து தொண்டர்களிடம் பேசினார்.

5 அடுக்கு பாதுகாப்பு : நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடு பல்வேறு மாநிலங்களில் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக மத்தியபிரதேசம், சட்டீஸ்கள், டில்லி, மும்பை, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், தமிழகம், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இவர் செல்லும் இடமெல்லாம் பா.ஜ., தொண்டர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றனர். மத்திய அரசுக்கு பெரும் சவால்கள் விட்டு வரும் மோடிக்கு தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர் பங்கேற்கும் கூட்டங்களில் போலீசார் முழு அளவில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்து வந்தனர்.

ஆனால் இன்று பீகாரில் அனைத்து பாதுகாப்பையும் மீறி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் ஆளும் இங்கு பாட்னாவில் மோடி முதல் பிரசாரத்தை துவக்கினார். இங்குள் காந்தி மைதானத்தில் பிரசாரம் துவங்கும் முன்னதாக காலை 9. 50 மணியளவில் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள பாத்ரூம் மற்றும் கழிப்பறையில் ஒரு குண்டு வெடித்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் , வெடிகுண்டு நிபுணர்கள் சில நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி செயல் இழக்க செய்தனர். தொடர்ந்து மோடி மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக மேடை அருகிலும், மைதானத்திலும் சில குண்டு வெடிப்புகள் நடந்தன. மொத்தம் இதுவரை 6 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சதி திட்டத்திற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. வெடித்தது குறைந்த சக்தி கொண்டதாக தெரிகிறது. இதனால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தை பொருட்படுத்தாத மோடி மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். தங்களின் பிரசார கூட்டத்தை துவக்கினர்.

முதல்வர் அவசர ஆலோசனை: இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார், பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில் பீகாரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முழு அறிக்கை கேட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தேசி புலனாய்பவு படையினர் விரைந்துள்ளளனர்.

மோடி பேச்சு : இந்த கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசுகையில்: பீகார் மாநிலம் புத்தர், மகாவீரர் உள்ளிட்ட கடவுளை தந்தது. பீகார் மக்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தபோது ஜெய்பிரகாஷ் நாராயணன் இந்த மாநிலத்தில் இருந்து அவதரித்தார். இவருடன் நான் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது. இன்று நடப்பது பேரணி மட்டுமல்ல. இந்தியாவின் எதிர்காலத்திற்கான அடித்தளம் அமைக்கும் பேரணி. பீகார், மற்றும் உ.பி.,யில் உள்ள யாதவ இன மக்களுக்கு நான் சொல்லி கொள்வதென்னவென்றால் , உங்களின் கவலைகளை நான் அறித்து வைத்துள்ளேன். இதனை நிறைவேற்றுவேன். நான் இதற்கு உறுதி அளிக்கிறேன். பிரதமர் வழக்கம் போல் முதல்வர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

பீகாரில் நாங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தோம். ஆனால் நிதீஷ் பா.ஜ.,வை ஏமாற்றினார். பா.ஜ., அமைச்சர்கள் இங்கு நல்ல பணிகளை செய்துள்ளனர். மாநில முதல்வர் நிதீஷ் கபட வேடதாரி. இவர் காங்கிரசுடன் மறைமுக உறவு வைத்துள்ளார். பீகாரில் காட்டாட்சி நடக்கிறது. இவர் தான் பிரதமர் ஆக வேண்டும் என கனவு காண்கிறார். இவரது அமைச்சர் ஒருவர் சொல்கிறார், ராணுவத்தில் சேருவதே சாவதற்குத்தான் என்கிறார். பீகாரில் உள்ள முஸ்லிம்கள் ஏழைகளாக இருக்கின்றனர். ஆனால் குஜராத் வாழ் முஸ்லிம்கள் வளம் மிக்வர்களாக உள்ளனர்.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை : 100 நாட்களில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக காங்., உறுதிமொழி கொடுத்தது காங்., அரசு, ஆனால் 10 ஆண்டுகளாக இவர்களால் இதனை செய்ய முடியவில்லையே. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முடியும் காலம் வந்து விட்டது. காங்., அரசை வேரறுக்க வேண்டும். காங்,. குடும்ப அரசியலை நிறுத்தட்டும் . நான் இளவரசர் என்று ராகுலை அழைப்பதை நிறுத்துகிறேன். கட்சியை விட நாடே முக்கியம். ஏழைகளை திட்டக்கமிஷன் கேலிப்பொருளாக பார்க்கிறது. காங்., அமைச்சர்கள் ரூ. 12 போதும் மதிய சாப்பாட்டுக்கு என்று சொல்கின்றனர். இவர்கள் ஏழைகள் பசியை அறியாதவர்களாக இருக்கின்னறனர். முஸ்லிம் - இந்துக்கள் யாரும் மோத வேண்டாம். இருவரும் இணைந்து வறுமையை ஒழிக்க போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை : இந்த மேடையில் இவர் குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் கண்டனம்: இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ப்பட வேண்டும். இவர்ள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

டுவிட்டரில் மோடி இரங்கல்: இந்த சம்பவம் தொடர்பாக நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் தனக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த தருணத்தில் அனைவரும் அமைதி காத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

உளவுத்துறை தோல்வி: சுஷ்மா கண்டனம்: இன்றைய சம்பவம் உளவுத்துறையினரின் பணியில் தோல்வியையே காட்டுகிறது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன் என எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கண்டனம்: குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்நேரத்தில் அனைவரும் அமைதி காத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகதின் மீது தாக்குதல்: சோனியா ; காங்கிரஸ் தலைவர் சோனியா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஜனநாயகத்தை குறிவைத்து நடத்தப்படுகின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதிமுன் நிறுத்தப்பட வேண்டும். குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்: இது குறித்து காங்., கட்சி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது போன்ற சதிச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த கொடூர செயலுக்கு காங்., கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


அமைதியை குலைக்க முயற்சி : முதல்வர் நிதீஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 83 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவித தகவலும் மாநில அரசிற்கு வரவில்லை. மாநில சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. பீகாரில் நிலவும் அமைதியை குலைக்க ஒரு சிலர் முயற்சி செய்துள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவ இடத்திலிருந்து சந்தேக நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார். தொலைபேசி எண்கள் மற்றும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மோடி பங்கேற்கும் பேரணியை குறிவைத்து முன்கூட்டியே குண்டு வெடிப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் பழக்கம் பீகார் மாநிலத்திற்கு இல்லை என கூறினார்.
 
 
thanx - dinamalar