Showing posts with label டார்ச்சர். Show all posts
Showing posts with label டார்ச்சர். Show all posts

Saturday, April 23, 2011

ஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உயர் அதிகாரிகள்...வதம் செய்யக்கிளம்பிய வள்ளி..

http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/01/Sneha_In_Police_Dress_2.jpg 

ஈரோடு: போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில், பரபரப்பு புகார் கூறியுள்ள ஈரோடு பெண் போலீஸ் வள்ளியை, சென்னை பத்திரிகையாளர்கள் மொய்த்தனர். மன அமைதிக்காக, தான் பணிபுரியும், "ஸ்டோர் ரூமி'ல், சுவாமி படத்தை மாட்டியுள்ளார் வள்ளி.

ஈரோட்டை சேர்ந்தவர் வள்ளி (35); 1997ல் போலீசாக பணியில் சேர்ந்தார். தற்போது, ஈரோடு எஸ்.பி., அலுவலக, "ஸ்டோர் ரூமி'ல் பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக்கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்க கோரியும், சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கை, வள்ளி தாக்கல் செய்தார்.


இவ்வழக்கு, வரும் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், இவ்வழக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவர் புகார் கொடுத்துள்ள பட்டியலில், 2004 முதல் 2011 வரை ஈரோட்டில் பணிபுரிந்த, 10 உயர் அதிகாரிகள் உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

அவரை சமாதானப்படுத்தவும், வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றவும் வேண்டி, வள்ளியின் மொபைல் போனுக்கு பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதுபோல், வள்ளி புகார் கூறியுள்ள அதிகாரிகள் பட்டியலை வெளிச்சத்துக்கு கொண்டு வர, சென்னையில் இருந்து வார, மாத இதழ்களின் நிருபர்களும் அவரை நேற்று மொய்த்தனர்.

எந்த கேள்விக்கும் பிடிகொடுக்காமல், "இப்பிரச்னை குறித்து நீதிபதி தான் உத்தரவு வெளியிடுவார். நான் வக்கீலை மீறி, போலீஸ் துறையை மீறி செயல்பட முடியாது' என, ஒரே பதிலை கூறி வருகிறார் வள்ளி.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனம் தளராமல் வள்ளி தன்னுடைய பணிக்கு வழக்கம் போல் வந்து கொண்டுள்ளார். மன அமைதி வேண்டி, அலுவலகத்தில் சுவாமி படத்தை மாட்டி, பூ போட்டு வணங்கி வருகிறார்.

"ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், யாரேனும் மிரட்டுகின்றனரா?' என, வள்ளியிடம் கேட்டதற்கு, ""நீதி, நியாயத்துக்காக உழைக்கும் ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் இருக்கும் வரை பயமில்லை,'' என்றார்.

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு போல இன்னும் 10 நாட்களில் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன்.பல பெரிய தலைகள் உருளக்கூடும்..ஈரோட்டில் இப்போதே 4 உயர் அதிகாரிகள் லீவில் இருக்காங்களாம்.. 

என்னைக்கேட்டால் எவனெல்லாம் இந்த கேஸ்ல  மாட்றான்களோ.. அவங்க எல்லார் குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைக்கனும்.. எல்லா சினிமா தியேட்டர்களிலும் ஸ்லைடு போட்டு அவங்களை கேவலப்படுத்தனும்.. அப்பத்தான் இனி வரும் காலங்களில் தப்பு பண்றவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்.

அதை விடுத்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணி சமாளிச்சா அவன் அங்கே போய் அதே வேலையை வேற பெண் போலீஸ் கிட்டே காட்டுவான்..