Showing posts with label சர்வதேச சினிமா. Show all posts
Showing posts with label சர்வதேச சினிமா. Show all posts

Friday, April 10, 2015

AMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ) 8ஆஸ்கார் அவார்டு பெற்ற படம் - 1984

ஒரு பெரும் நிலப்பரப்பை, கானகத்தை, பிரம்மாண்டமான அரங்கின் பேரமைதியை, மூடிய கண்களுக்குள் காட்சிப் படிமமாக விரிக்க, தேர்ந்த இசைக்கலைஞர்களால் முடியும். இரவின் நிசப்தத்தை, பனி மலையின் உறைந்த அழகை இசைக் கருவிகளாலேயே காற்றில் வரைந்து காட்ட அவர்களால் முடியும்.



உலகின் மாபெரும் இசைமேதைகள் தங்கள் கற்பனை மூலம் எத்தனையோ ஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மொசார்ட். அமேடியஸ் வுல்ஃப்காங் மொசார்ட். பீத்தோவன், சைக்காவ்ஸ்கி போன்ற இசை மேதைகளுக்குத் தாக்கம் தந்த பெருங்கலைஞர்.
அவரது சமகாலத்தில் இயங்கிய மற்றொரு இசைக்கலைஞர் ஆன்டானியோ சலியேரி. மொசார்ட்டை விட 6 வயது மூத்தவர். இருவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பெருமளவில் கற்பனை கலந்து ‘மொசார்ட் அண்ட் சலியேரி’ எனும் நாடகமாக எழுதினார் ரஷ்யக் கவிஞரும் எழுத்தாளருமான அலெக்சாண்டர் புஷ்கின்.
இந்த நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அமேடியஸ்’. 1984-ல் வெளியான இப்படம், 8 ஆஸ்கர் விருதுகள் உட்பட, 40 சர்வதேச விருதுகளை வென்றது. உலகமெங்கும் உள்ள திரைப்பட ஆர்வலர்களால் கொண்டாடப்படும் படைப்பு இது.
சலியேரி மூத்தவர் என்றாலும், அவருக்கு முன்னதாகவே இசையுலகுக்கு வந்துவிட்டவர் மொசார்ட். அவரது தந்தை லியோபோல்ட் மொசார்ட்டும் இசைக்கலைஞர்தான். தனது மகனுக்கும் மகள் மரியா அன்னாவுக்கும் இளம் வயதிலேயே இசை கற்றுத் தந்திருந்தார்.
‘சின்னப்பயல்’ மொசார்ட்டின் அசாத்தியமான இசைப் புலமை, அவரது இசைக்கு இருந்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாகப் பொறாமை கொள்ளும் சலியேரி, ஒரே நேரத்தில் அவரது இசையை ரசிப்பவராகவும், அவரது இருப்பை முற்றிலும் வெறுப்பவராகவும் உருவாவதைப் படம் சித்தரிக்கிறது.
வயதான சலியேரி தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயல்கிறார். நீண்ட நாட்களாகவே, மொசார்ட்டின் இறப்புக்குத் தான்தான் காரணம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படும் சலியேரியைச் சந்தித்துப் பாவமன்னிப்பு வழங்க வருகிறார் பாதிரியார் ஒருவர். அவரிடம் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறார் சலியேரி.
மொசார்ட் முழுமையான இசைக்கலைஞராக உருவான காலத்தில், விளையாட்டுப் பையனாகத் திரிந்தவர் சலியேரி. மொசார்ட்டின் தந்தையைப் போல் அல்லாமல், தனது இசையார்வத்துக்குத் தடைவிதிக்கும் தனது தந்தை மீது வெறுப்புடன் இருக்கிறார்.
தந்தை இறந்துபோனதை கடவுள் ஏற்பாடு செய்த ‘அதிசய நிகழ்வாக’க் கருதி தனது இசைக்கனவை நனவாக்கிக் கொள்கிறார். இத்தாலியையும் ஜெர்மனியையும் ஆட்சி செய்த ரோமப் பேரரசர் இரண்டாம் ஜோசப்பின் அரண்மனையின் தலைமை இசைக் கலைஞராக உயர்கிறார்.
அவரது மகிழ்ச்சியை, மனநிறைவைக் குலைக்கும் வகையில் அமைகிறது மொசார்ட்டின் வருகை. ஆர்ப்பாட்டமான சிரிப்பும், துள்ளும் இளமையும், வேடிக்கை குணமும் கொண்ட மொசார்ட்டை ஒரு அசந்தர்ப்பச் சூழலில் சந்திக்கிறார் சலியேரி. மொசார்ட்டின் இசைக்குறிப்புகளில் தெறிக்கும் மேதைமை தனது இருப்பைக் கேள்விக்குரியதாக்குவதை உணர்கிறார்.
இரண்டாம் ஜோசப்பின் அரண்மனைக்கு அழைக்கப்படும் மொசார்ட்டை வரவேற்க சலியேரி எழுதிய ‘மார்ச் ஆஃப் வெல்கம்’ இசைக் குறிப்பை, பேரரசர் இசைத்துக் காட்டும் காட்சி படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிடும். அந்த இசைக் குறிப்பை ஒரு முறை கூட பார்க்காமல், ஒரே ஒரு முறை கேட்டதை நினைவில் வைத்து அப்படியே வாசித்துக்காட்டுவார் மொசார்ட். சலேரியின் இசைக்குறிப்பில் இருந்த ‘சாதாரணத் தன்மையை’ மெருகேற்றி வாசித்துக் காட்டும் மொசார்ட் மீது ஆத்திரம் கொள்வார் சலியேரி. மொசார்ட்டின் வாழ்வில் விதியின் நிழலைப் போல் விளையாடத் தொடங்குவார்.
வறுமையையும், புறக்கணிப்பையும் சந்திக்கும் மொசார்ட் இளம் வயதிலேயே மரணமடையும் வரை தொடர்கிறது சலியேரியின் வன்மம். தனது தந்தை இறந்த அதிர்ச்சியில் இருக்கும் மொசார்ட்டை வீழ்த்த, முகமூடி அணிந்த மர்ம மனிதராக வந்து ‘ரெகுயெம் மாஸ்’ எனும் இசைக்கோவையை எழுதப் பணிப்பார். உடனடியாகப் பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால், அதை எழுதத் தொடங்கும் மொசார்ட் குடிப்பழக்கம், ஓய்வில்லாத உழைப்பு காரணமாக அகால மரணமடைவார்.
படத்தின் மொத்த பாரத்தையும் சுமந்திருப்பவர் சலியேரியாக நடித்த முர்ரே ஆபிரஹாம். உயர்தர இசையை உருவாக்கி மறைந்துவிட்ட மொசார்ட், அவரை ஆராதிக்கும் ரசிகர்கள் ஒருபுறம் என்றால் வெறுப்பின் உடல் வடிவமாக, தோல்வியின் ஆராதகராக மேன்மையான கலையைக் கேலிசெய்துகொண்டே தனது இருப்பை நிலைபெறச் செய்யும் முயற்சியில் இருக்கும் பாத்திரம் அது.
தனது திறமையைக் கேலிசெய்யும் மொசார்ட் மூலம் தன்னிடம் வெறுப்பைக் காட்டுவது கடவுள்தான் என்று முடிவுசெய்யும் பாத்திரம். முகபாவனை, உடல்மொழி, கண்ணசைவு என்று நடிப்பின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தி அந்தப் பாத்திரத்தை மேன்மைப்படுத்தியிருப்பார் முர்ரே ஆபிரஹாம்.
தான் இசையமைத்த மெட்டுக்களை இளம் பாதிரியாரிடம் பியானோவில் சலியேரி வாசித்துக் காட்டும் காட்சியைச் சொல்லலாம். அவர் இசையமைத்த மெட்டு எதையும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பாதிரியார் கேள்விப்பட்டதில்லை; கடைசியாக சலியேரி வாசிக்கும் இசைக்குறிப்பைக் கேட்டதும் பாதிரியாரின் முகம் மலர்கிறது. ‘ஆமாம், இதை நான் கேட்டிருக்கிறேன்’ என்று சொல்லி, கூடவே பாடுகிறார்.
நொந்துபோகிறார் சலியேரி. “இது என்னுடைய இசை அல்ல. மொசார்ட்டுடையது “ என்று வெறுப்புடனும், அவமானத்துடனும், அதை மறைக்க முயலும் வெற்றுப்புன்னகையுடனும் சொல்லும் காட்சியில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார் முர்ரே ஆபிரஹாம். மொசார்ட்டாக நடித்திருக்கும் டாம் ஹல்ஸ் துள்ளலும் துடிப்புமாக அந்தப் பாத்திரத்தைச் செதுக்கியிருப்பார்.
உண்மையான திறமையைப் புரிந்துகொள்ளத் திராணியற்ற அதிகாரவர்க்கம், அதைச் சுற்றியிருப்பவர்களின் அசட்டுத்தனம் என்று பல்வேறு விஷயங்கள் படத்தின் அடிநாதமாகப் பின்னப்பட்டிருக்கும். இன்று வரை இந்தப் படத்தைப் பிரதியெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அது வெற்றிகரமாகவில்லை. ஏனெனில், இந்தப் படத்தின் ஆன்மா அத்தனை மேன்மையானது. மொசார்ட்டின் சாகாவரம் பெற்ற இசையின் ஆன்மாவுக்கு ஒப்பானது அது!



நன்றி  - த இந்து

Wednesday, April 02, 2014

THE GREAT BEAUTY -(La grande bellezza) (2013)


சர்வதேச சினிமா: தி கிரேட் பியூட்டி - நினைவுகளை அசைபோடும் மனம்


நியோ ரியலிச சினிமா எனும் வேள்வியில் புடம்போட்ட இடம் ரோம். சாம்ராஜ்யங்களுக்கும், அமர இலக்கியங்களுக்கும் பெயர் பெற்றது. அதில் மேலும் ஒரு வைரம் அதன் பெயர், த கிரேட் பியூட்டி (2013).


இப்படத்தின் காட்சிகள் எதுவும் நேர்க்கோட்டுத் தன்மையில் இல்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. புகழ்பெற்ற நாவசாசிரியர் ஜெப் காம்பர்டலா (டோனி செர்வில்லோ) எனும் கற்பனைக் கதை மாந்தரின் மனநிலைப் பிரதிபலிப்பாகக் காட்சிகள் சுழன்று திரிகின்றன. கூட்டத்திலிருந்து தப்பித்துத் தனிமையின் உலகில் நீந்திக் களிக்கும் மனம் அவருடையது.


ஜெப் காம்பர்டெலாவின் 65ஆவது பிறந்த நாளை, இந்த முறை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டவர், அவர் மீது அபிமானம் கொண்ட அவர் பணியாற்றும் பத்திரிகையின் ஆசிரியர் ஜியாவென்னா விக்னோலா.


மாலையிலிருந்தே நட்சத்திர விடுதியில் நடன விருந்தில் எல்லோருடனும் கூடியிருக்கும் அன்புத் தொல்லையிலிருந்து விடுபடவே விழைகிறது அவரது மனம். ஏனெனில் தன் பதின்ம வயதில் காதலித்த பின்னர் என்றென்றுமாகப் பிரிந்துவிட்ட ரமோனா (செபரினா பெர்லினி)வின் அந்த அழகான முகம் இன்றும் அவரது மனதில். இதே கூட்டத்தில் ஒருத்தியாக 40களின் தோற்றத்தில் அப்பெண் அவருடன் ஆடும் நடனம் உண்மையான காட்சியல்ல.


நடன விருந்துக்கு முன்னதாக மாடியில் ஒரு காட்சி.



மாலை சூரியனின் இதமான வெப்பத்தில் கயிற்றுவலைப் பின்னல் ஊஞ்சலில் படுத்திருக்கும் ஜெப் மதுக்கோப்பையோடு எழுந்து வருகிறார். எதிரே குளோசியம் பழங்கால விளையாட்டு அரங்கம். அருகே பிரதான சாலைகள். இந்தப் பக்கம் தேவாலயத்தின் பூங்கா. ஆள் அரவமற்ற அந்தப் பூங்காவைப் பார்க்கிறார். அதில் திடுமெனச் சில உருவங்கள்... கருணையே வடிவான கன்னியாஸ்திரீயின் மலர்ந்த முகம். மூன்று குழந்தைகள் அவரைத் துரத்துகின்றனர்.


 குரோட்டன்ஸ் செடிகளின் பாதைகளில் குதூகலமாக ஓடுகின்றனர். அதில் சின்னஞ்சிறு பையனை அள்ளி முத்தமிடுகிறார் கன்னியாஸ்திரி. இதுவும் ஒரு நினைவுதான். கண்கள் பனிக்க கோப்பையிலிருந்த மீதி மதுவை அருந்தி முடிக்கிறார். மேலும், பதின்ம வயதில் ரமோனாவிடம் தான் காதல் கொண்டதைப் பற்றி நடன விருந்தில் நண்பர்களிடம் கூறுகிறார்.


அவரிடம் ஒரு கேள்வி: “நீங்கள் ஒரு சிறந்த நாவலை எழுதி உலகப் புகழ் அடைந்தீர்கள். பின்னர், 40 வருடங்களாக எழுதவில்லையே...”



“ஒரு உன்னத அழகுக்காகக் காத்திருக்கிறேன்” - புன்னகைக்கிறார்.


அவரது காதலி தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக ரமோனாவின் கணவர், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர், ஜெப் வெளியே வரும்போது கூறுகிறார். மேலும் அவளது டைரியில் ஜெப் பற்றிய குறிப்புகள் இருந்ததையும் தெரிவிக்கிறார். அதிலிருந்து அவரது மனம் மேலும் தவிக்கத் தொடங்குகிறது.

பால்கனியில் வந்து நிற்கிறார். அவர் வந்து நின்றதும் அதுவரையில் சுவர் விளிம்பிலிருந்து பிளெமிங்கோ பறவைக் கூட்டம் பறந்து செல்கின்றது. விட்டு விடுதலையாக விரும்பும் மனதின் படிமக் காட்சியாக.


அங்கும் வந்து இளமையில் பார்த்த வடிவாய் அருகில் நிற்கிறாள் ரமோனா.


கடந்து வந்த வாழ்வை அசைபோட்டபடியே இருளும் ஒளியுமான வெளியில் ரோம் நகரின் கலைச் சின்னங்களில் மனம் தோய்ந்தவாறு வலம் வருகிறார்.


அரண்மனைப் பேழையைத் திறந்து சாவியை எடுத்து கேலரிக் கதவைத் திறந்து இருட்டுக்குள் நுழைகிறார். அழகழகான, அப்பழுக்கற்ற கிரேக்க தேவதைகளின் பளிங்குச் சிலைகள்.

...
அவரைப் போலவே அவருக்கு மிக அருகில் சன்ன மான வெளிச்சத்தில் ரமோனோ, சிலைகளை ரசிப்பவளாகத் தொடரும் சர்ரியலிசக் காட்சிகள்.


இறுதிக் காட்சி மரணத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.


வினாடிமிர் மார்டினோவ்வின் இசைக் கோவையில் குறைந்த ஒலியில் சோக கீதம்.


மங்கிய நிலவின் ஒளியில் டைபர் நதியில் படகு போய்க் கொண்டிருக்க முன்பக்கத்தில் ஜெப். அதன்பின் திரையில் லூகா பிகாசியின் ஒளிப்பதிவில் தண்ணீர் வெளி மட்டும். நதியின் எண்ணற்ற பாலங்களின் கீழ் பயணம் தொடர்கிறது.


பார்வையாளனோடு கைகுலுக்கும் பிம்பங்களின் காந்தம் சினிமா என்பதை இயக்குநர் பால் சொரண்டினோ இப்படத்தில் நிறுவியுள்ளார்.


thanx - the hindu

A


Journalist Jep Gambardella (the dazzling Toni Servillo, Il divo and Gomorrah) has charmed and seduced his way through the lavish nightlife of Rome for decades. Since the legendary success of his one and only novel, he has been a permanent fixture in the city's literary and social circles, but when his sixty-fifth birthday coincides with a shock from the past, Jep finds himself unexpectedly taking stock of his life, turning his cutting wit on himself and his contemporaries, and looking past the ... More
Unrated
 
 Paolo Sorrentino