Showing posts with label கேப்டன். Show all posts
Showing posts with label கேப்டன். Show all posts

Saturday, October 27, 2012

சிதறிய தேமுதிக , பதறிய கேப்டன், கதறிய பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்

தின மணி செய்தி 1 - மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


நேற்று இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர். இன்றும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் தேமுதிக.வில் இருந்து விலகுவார்கள் என்று கூறப்படும் தகவல்கள் குறித்து, அவர் கட்சியினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.


முன்னதாக, இன்று காலை மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கட்சியினர் யாரும் வரவேற்க வரவேண்டாம் என்று தடை விதித்துவிட்டார் விஜயகாந்த்.



 தின மணி செய்தி 2

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்து, அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


மதுரை மத்திய தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி  தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்தனர். முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர்கள், தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறி பாராட்டினர். மேலும், தங்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசின் உதவியையும் ஆதரவையும் கோரினர்.


இந்நிலையில், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் முதல்வரைச் சந்திக்கச் சென்றதால், அவர்கள் இருவரும் அதிமுகவில் இணையவுள்ளதாகவும், அதற்காகவே அவர்கள் முதல்வரைச் சந்திக்கச் சென்றதாகவும் மதுரையில் இன்று காலை முதல் பரபரப்பாகப் பேசப்பட்டது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அரசையும் ஆட்சியையும் விமர்சித்து பல இடங்களில் பேசி வருகிறார். இந்நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் இருவர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கட்சிக்குள்  ஏற்படுத்தியுள்ளது. எனவே விஜயகாந்த் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முற்படுவார் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


 தின மணி செய்தி 3
தேமுதிக எம்எல்ஏக்களான அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று தமிழக முதல்வரை சந்தித்துள்ளனர்.
பேராவூரணி தொகுதி தேமுதிக எம்எல்ஏ அருண்பாண்டியனும், ராதாபுரம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனும் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து, அவரது தலைமையிலான அரசின் நடவடிக்கை குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நேற்று  தேமுதிக எம்எல்ஏக்கள் தமிழ்அழகன் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்துள்ள நிலையில், இன்று அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் முதல்வரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஒன் இண்டியா தட்ஸ் தமிழ் செய்தி 

நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. பத்திரிகையாளர்களை கேவலமாக திட்டிய விஜயகாந்த்




 Vijayakanth Slam Media

சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த்.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.


இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் செய்தியாளர்கள், ஜெயலலிதாவுடனான எம்.எல்.ஏக்கள் சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர். இதில் கடுப்பாகிப் போன கேப்டன் விஜயகாந்த், பத்திரிகையாளர்களை கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டார்.


ஒருகட்டத்தில். நாய்..நாய்களா.. எங்க போனாலும் மைக்கை தூக்கிட்டு வந்துடுவீங்களா..உங்களுக்கு சம்பளம் கொடுக்கலையா? என்று ஏகத்துக்கும் ஒருமையில் பேசினார்.


பத்திரிகையாளர்களைத் திட்டுவதில் மட்டுமே குறியாக இருந்த விஜயகாந்த் கடைசிவரை கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமலேயே எஸ்கேப் ஆகிவிட்டார்.



கூட்டணியில் இருந்து விலகிய விஜயகாந்த், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சியைசேர்ந்த இரு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., வலையில் விழுந்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, நேற்று காலை, 8:50 மணிக்கு, தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் மற்றும் திட்டக்குடி எம்.எல்.ஏ., தமிழழகன் ஆகிய இருவரும், திடீரென சந்தித்தனர். பின், இரு எம்.எல்.ஏ.,க்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நற்சான்றிதழ்:

பத்து நிமிட சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு கொடுத்‌‌தோம்; இந்த அரசு, நல்ல அரசாக செயல்பட்டு வருகிறது' என, நற்சான்றிதழ் அளித்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும், அக்கட்சியின் கரைவேட்டியுடன், கட்சி கொடி கட்டிய காரில் வந்திருந்தனர். இவர்களது சந்திப்பு,தே.மு.தி.க., வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் ஆலோசனை :

சென்னை, விருகம்பாக்கம் வீட்டில் இருந்த விஜயகாந்திற்கு, எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு குறித்த செய்தி, உடனுக்குடன், மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்தஅவர்,கட்சி நிர்வாகிகள் இருவரையும், உதவியாளரையும்,மைத்துனர் சுதீஷையும்,போனில் தொடர்பு கொண்டு, ஆலோசனை நடத்தினார். பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள், கட்சி அலுவலகத்தில், காத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விஜயகாந்த் அலுவலகம் வருவதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது
. அதேநேரத்தில், மதுரை கோரிப்பாளையம் தர்காவில், தே.மு.தி.க., சார்பில், தனது தலைமையில் இன்று, மாலை 4:00 மணிக்கு, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும், என்ற அறிக்கையை, விஜயகாந்த் வெளியிட்டார்.கட்சி அலுவலகத்திற்கு வந்த, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன் எம்.எல்.ஏ., உள்ளிட்@டாரும், எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கவலையில்லை :

தன்னை தொடர்பு கொண்ட கட்சி நிர்வாகிகள் சிலரிடம்பேசிய விஜயகாந்த், "யார் கட்சியை விட்டுப் போனாலும், எனக்கு கவலையில்லை. வேறு கட்சிக்கு போக திட்டமிட்டவர்கள், போய்த்தான் தீருவார்கள்; அவர்களை என்ன செய்தாலும், தடுக்க முடியாது' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும், "கடந்த ஆட்சியில், அ.தி.மு.க., முக்கியப் புள்ளிகள் பலர், தி.மு.க.,வுக்கு தாவினர். எனவே, அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் அரசியல் நடத்த முடியாது; எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்ள, எம்.எல்.ஏ.,க்களை அழைத்து கெஞ்சப் போவதில்லை' என்று, கூறியதாக தெரிகிறது.
Advertisement
இன்று தெரியும்:முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல், தே.மு.தி.க., வட்டாரத்தில் பரவியுள்ளது. இது தொடர்பாக, சட்ட நுணுக்கங்கள் குறித்து, அக்கட்சி வழக்கறிஞர்களுடன், விஜயகாந்த், நேற்று மாலை நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.இன்று மதுரையில் நடக்கும் பக்ரீத் விழாவில், முதல்வர் - எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு குறித்து, தனது கருத்தை விஜயகாந்த், வெளிப்படையாக வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-




நன்றி - தினமணி , ஒன் இண்டியா,தினமலர்

diSki - விஜயகாந்த் நிருபரை கேவலமாகத் திட்டிய வீடியோ காட்சி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_4792.html

Thursday, September 13, 2012

ஜெவின் நிறவெறி! கேப்டன் மீது பகிரங்கதாக்குதல்!

http://moonramkonam.com/wp-content/uploads/2012/02/vijayakanth-dm-2.jpgஸ்ரீரங்கம்: உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை முதல்வர் ஜெயலலிதா மறைமுகமாகத் தாக்கினார்.
முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்தது. மேலும் இந்தத் தொகுதியில் பல்வேறு புதிய நலத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஜெயலலிதா பேசுகையில்,



சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவிரி ஆற்றினால் சூழப்பட்டும், மிகப் பெரிய ராஜகோபுரத்தினை உடைய திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளதுமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு, உங்களிடையே உரையாற்றுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



என் மீதும், எனது அரசு மீதும் நீங்கள் பொழியும் பாசத்தை, நீங்கள் வைத்திருக்கும் அன்பை, அளவு கடந்த நம்பிக்கையை உங்கள் முகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.



இது ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் மூன்றாவது அரசு விழா. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியும் என்னுடைய தொகுதி தான் என்றாலும், இது என்னுடைய சொந்தத் தொகுதி. நான் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்தாலும், என்னுடைய எண்ணம் எல்லாம் மலைக் கோட்டையைச் சுற்றித்தான்.



என்னை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியவர்கள் நீங்கள். நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே என்னுடைய புனிதக் கடமை, நன்றிக் கடன் என கருதுகிறேன். ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் ஒரு போதும் தவறியதில்லை என்றவர், இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன் என்று கூறி ஒரு கதையைக் கூறினார்.


பெரு வணிகர் ஒருவரும், சிறு வணிகர் ஒருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்தனர். திடீரென இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். உடனே, அந்த பெரும் வியாபாரி, இந்த சிறிய வியாபாரி தவறு செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும், அவரிடம் பணிபுரிபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் கூறி சிறு வியாபாரி மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார்.



இந்தக் வழக்கால் கவலையடைந்த அந்த சிறிய வியாபாரி, தனது நண்பன் மூலம் ஒரு பெரிய வழக்கறிஞரை அணுகினான். ஆனால் அந்த வழக்கறிஞரோ, தன்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும், அன்று மாலை அந்த சிறிய வியாபாரி மீண்டும் வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்று காத்துக் கொண்டிருந்தார். வழக்கறிஞர் வந்தவுடன், தன் வழக்கிற்காக வாதாட வேண்டும் என்று அவரிடம் மீண்டும் மன்றாடினார் அந்த வியாபாரி.



அந்த வியாபாரியின் மீது பரிதாபப்பட்டு, வழக்கை ஏற்று நடத்த சம்மதம் தெரிவித்தார் அந்த வழக்கறிஞர். வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து வருமாறு அந்த வியாபாரியிடம் தெரிவித்தார் வழக்கறிஞர்.



இதையடுத்து, மறுநாள் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார் அந்த வியாபாரி. ஆவணங்களைப் படித்துப் பார்த்த வழக்கறிஞர், இந்த வழக்கினை தன்னால் நடத்த முடியாது என்றும், நீங்கள் வேறொரு வழக்கறிஞரைப் பார்த்து கொள்ளுங்கள் என்றும் மீண்டும் கூறினார்.



ஆனால் அந்த வியாபாரி, உங்களைத்தான் நம்பி வந்துள்ளேன். இந்த வழக்கை நீங்கள்தான் வெற்றிகரமாக முடித்துத் தரவேண்டும் என்று வேண்டினான். வியாபாரியின் இந்த வேண்டுகோளைக் கேட்ட வழக்கறிஞர், தனது பிற பணிகளை ரத்து செய்துவிட்டு வியாபாரியின் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.



வெகு விரைவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கறிஞரின் வாதத்தால், அந்த சிறிய வியாபாரி வழக்கிலிருந்து விடுபட்டார். ஆனால் பிறகு அந்த வழக்கறிஞரை சந்திக்கவும் இல்லை; நன்றியும் கூறவில்லை.



அந்த சிறு வியாபாரியின் நண்பன் வழக்கறிஞரின் வாதத் திறமையால்தான் இந்த வழக்கு வெற்றி பெற்றது என்றார். அதற்கு அந்த சிறு வியாபாரி என் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு உண்மையிலேயே பலவீனமானது. இதில் வழக்கறிஞரின் பங்கு ஒன்றும் இல்லை. பணத்திற்காகத்தான் இந்த வழக்கறிஞர் இதர பணிகளை விட்டு விட்டு வாதாடினார் என்று அந்த வியாபாரி என்று அவதூறாகப் பேசினார்.



கதையில் வரும் இந்த சிறு வியாபாரி கருப்பாக இருப்பார். அவர் நிறம் மட்டும் கருப்பாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் உள்ளமும் கருப்பு என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.



இவரைப் போலவே சிலர் உள்ளனர். நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டு, பிறகு நம்மையே எதிர்த்தும், பழித்தும் பேசி வருகிறார்கள்.



ஆனால், யார் என்ன பேசினாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற குறிக்கோளுடன் மக்கள் நலத் திட்டங்களை நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.



இது தேமுதிக தலைவர் விஜய்காந்தை குறி வைத்து சொல்லப்பட்ட கதை என்பதை சொல்லவும் வேண்டுமா?!

நன்றி - தட்ஸ் தமிழ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXyMZ6SC4XiFtKLQf79bx5BHtgMiqf1cyTVBtB_RyN7JX7pXIf0puU3z8hDlLqDXOX4oXY5kQbjECrN30S0qV0Mt_6DvHaTQeAIRp3QRWYQgkG2YarqfqQB8ozJXlDOAY4XDUqN06MvFw/s320/VIJAYKANTH+IN+THE+PRESS+MEET.jpg


1. விஜயகாந்த் உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர் - ஜெ # ஓஹோ, அப்போ அடுத்த எலக்‌ஷன்ல சிவப்பானவங்க ஓட்டு மட்டும் போதுமா? 




2. ஜெ - எனக்கு கறுப்பு ஆகாது # எம் ஜி ஆர் - நம்ம கட்சிக்கொடிலயே கறுப்பு இருக்கே? 




3. தமிழ்நாட்டில் கறுப்பாக, மாநிறமாக இருப்பவர்களுக்கு அரசுப்பணி கிடையாது, சிவப்புக்கே முன்னுரிமை - சி எம் ஜெ அறிவிப்பு 




4. தனது கூந்தல் நிறத்தை கறுப்பில் இருந்து மெரூன் ஆக்க ஜெ பியூட்டி பார்லர் விரைந்தார் 




5. ஜெ செல்லும் விமானத்தில் கூட கறுப்புப்பெட்டி என சொல்லப்படும் பிளாக் பாக்ஸ் வேண்டாம் என அடம் , அதிகாரிகள் திகைப்பு 



6. தமிழகத்தில் உள்ள தார் ரோடுகள் அனைத்துக்கும் சுண்ணாம்பு அடிக்க சொல்லி உத்தரவு , ரூ 12 கோடி ஒதுக்கீடு, சுண்ணாம்பு பூசுபவர்கள் மகிழ்ச்சி



7. கூந்தல் கறுப்பு ஆஹா ,கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ஜு ஜூஜும், கருத்த மச்சான் கள்ளத்தனம் எதுக்கு வெச்சான் பாடல்களுக்கு திடீர் தடை



 8. அம்மையார் கண்ணுக்கு ஐ டெக்ஸ் மை கறுப்பில் தானே பயன்படுத்துகிறார்? - கலைஞர் நக்கல் கேள்வி?




9. மெட்ரிகுலேஷன் குழந்தைகள் பாபா பிளாக் ஷீப் பாடத்தடை, பிளாக்கர்ஸ் ( வலைப்பூ வாதிகள்) பதிவு போட தடை




`10/ தமிழ் நாட்டில் மட்டும் சதுரங்க கட்டங்கள் , காய்கள் கறுப்பு வெள்ளைக்குப்பதிலாக சிவப்பு , வெள்ளை என மாற்றப்படும் - ஜெ தடாலடி



11. நடிகர் கஞ்சா கறுப்பு தன் பெயரை அரசாங்க கெஜட்டில் அவசர அவசரமாக  கஞ்சா பிரவுன் என மாற்றிக்கொண்டார் - ஜெ மகிழ்ச்சி



12. நிருபர் - மேடம்,கருப்பு சர்ச்சை குறித்து என்ன சொல்றீங்க?



குஷ்பூ - ஒண்ணும் சொல்லலை, ஆல்ரெடி கற்பு பற்றி கருத்து சொன்னதுக்கே 130 கேஸ் போட்டாங்க


13. நயன் தாரா - கற்பு பற்றியோ, கருப்பு பற்றியோ நான் எந்நாளும் கவலைப்பட்டதில்லை



14. மாதா மாதம் வரும் அமாவாசை இருட்டை நீக்க அரசு செலவில் மெர்குரி விளக்குகள் ரூ 54 கோடியில் தெருவுக்கு தெரு அமைக்கப்படும் - ஜெ



15. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கருப்பண்ண சாமி கோயில்களும் அகற்றப்படுமா? - கேப்டன் கேள்வி




16. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் எம் ஜி ஆருக்கு , வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கும் கறுப்பு உள்ளம் ஜெ வுக்கு







Wednesday, September 05, 2012

திருப்பூர் எஸ்.பி ஆஸ்ரா கர்க் , கேப்டன் , ஜெ -ஈகோ ?- ஜு வி கட்டுரை

ஆஸ்ரா கர்க் டிரான்ஸ்ஃபருக்குக் காரணம் விஜயகாந்த்?
 
 

பரபரக்கும் திருப்பூர்
 
 
திருப்பூர் எஸ்.பி-யாகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்குள் மீண்டும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார் அதிரடிக்குப் பெயர் போன ஆஸ்ரா கர்க். குற்றச் செயல்கள் மலிந்துபோன திருப்பூரை, தனது கட்டுக்குள் கொண்டு வந்த ஆஸ்ரா கர்கை ஏன் திடீரென மாற்றினார்கள் என்று புரியாமல் பொதுமக்கள் விழிக்கிறார்கள். 


நம்மிடம் பேசிய சில  போலீஸார், ''ஆஸ்ரா கர்க் வந்ததில் இருந்து திருப்பூர் ஓரளவு அமைதியான மாவட்டமாக மாறிவிட்டது. யார் மீது புகார் என்றாலும், புகார் உண்மையாக இருப்பின் தைரிய​மாக நடவடிக்கை எடுத்தார். அதுதான் இப்போது அவருக்கு வினையாகி விட்டது. மணல் கொள்ளை பற்றித் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தார். அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிவந்த லாரிகளுக்குக் கடுமையான அபராதம் விதித்தார். 


இதை முக்கிய அமைச்சர் ஒருவர் கண்டித்தும், அசராமல் தனது நடவடிக்கையைத் தொடர்ந்தார். அதனால் முன்பே இவர் மாற்றப்படலாம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்தச்செய்தி ஊட கங்கள் மூலம் வெளியே வந்துவிட்டதால், அப்போது நடவடிக்கை பாயவில்லை.


தமிழகம் முழுக்க மணல் அள்ளும் தொழிலில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கியப் பிரமுகருக்கும் ஆஸ்ரா கர்க்கின் செயல் எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் ஆஸ்ரா கர்க்குக்கு போன் செய்த அவர், 'மணல் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு எஸ்.பி., 'சட்டவிரோதமாக வரும் லாரிகள் என்றால் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும்’ என்று உறுதியாகப் பதில் சொன்னாராம். 



உடனே மணல் புள்ளி, 'நீங்க இங்கே தொடர்ந்து எஸ்.பி-யாக இருக்கணுமா... வேண்டாமா?’ என்று அதட்ட... 'உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி வைத்து விட்டாராம் ஆஸ்ரா கர்க்.



சில நாட்களுக்கு முன், திருப்பூரில் உள்ள கிளப் ஒன்றில் சீட்டு விளையாடிய பெரும்புள்ளிகள் கைது செய்யப்​பட்டனர். அதில், சாதி கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேசியக் கட்சியைச் சேர்ந்த தலைவர்  ஒருவருடைய உறவினரும் அடக்கம். எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டார் ஆஸ்ரா கர்க். இதை மானப் பிரச்னையாக கருதிய பெரும் புள்ளிகள் தங்களின் மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி, இவரை மாற்றுவதற்குத் தொடர்ந்து முயன்று வந்தனர்.  



இந்தப் பிரச்னைகளுக்கு இடையில் கடந்த மாதம் திருப்பூர் வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைச் சகட்டுமேனிக்கு திட்டினாலும், 'ஆஸ்ரா கர்க் மிக நேர்மையான அதிகாரி’ என்று அவரைப் பாராட்டிப் பேசிவிட்டார். இது போதாதா மேலிடத்தைக் கடுப்பேற்ற? இத்தனை விஷயங்களும் ஒன்று சேர்ந்துதான், அவருடைய டிரான்ஸ்ஃபருக்குக் காரணமாகி விட்டது'' என்றார்கள்.


ஆனால் வேறு சில அதிகாரிகளோ, ''மதுரை கிரானைட் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர் ஆஸ்ரா கர்க். அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சில தர்மபுரியிலும் தொழில் செய்கின்றனர். அதனால், ஆஸ்ரா அங்கு இருந்தால் அதிரடி நடவடிக்கைளை எடுக்க அரசுக்குச் சுலபமாக இருக்கும் என்பதால்தான் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.


 டி.என்.பி.எஸ்.சி. தேர்வுத்தாள் வெளியான விஷயத்தில் இன்னும் போலீஸார் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தர்மபுரியில்தான் கேள்வித்தாள் அவுட்டானது என்று கருதப்படுவதால் இதில் இன்னும் வேகமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆஸ்ராகர்க்தான் சரியான நபர் என்று நினைப்பதால்தான் இந்த மாற்றம்'' என்கிறார்கள்.


தனக்கு மாற்றல் உத்தரவு வந்த கடந்த சனிக்கிழமை மாலை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரிய செங்கல் சூளைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தார் ஆஸ்ரா. 'விளைநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக செம்மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.


 சேம்பர்களில் பலரைக் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகின்றனர்’ என்று அவருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி ஆய்வு நடந்தது. முறைகேடாக இயங்கி வந்த நான்கு சேம்பர்களைக் கண்டுபிடித்து, ஆறு பேரை உடனடியாக கைது செய்தார். நான்கு சேம்பரில் ஒன்று... நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நின்ற ஒருவருடையது. மற்றவை ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்குச் சொந்தமானது.



செங்கல் சூளைக்காக செம்மண் எடுத்ததில் பல நூறு கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு கனிமவளத் துறை அதிகாரிகள் சிலர் துணை போய் உள்ளனர் என்பதையும் கண்டுபிடித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகும் முன் ஆஸ்ரா கர்க்குக்கு மாற்றல் உத்தரவு வந்ததால், அனைவரும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.



இந்தச் செம்மண் விவகாரம் தொடர்பாக ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''முறைகேடுகளில் ஈடுபட்ட நான்கு சேம்பரைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைதுசெய்து இருக்கிறோம். தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்'' என்றார். தர்மபுரிக்கு மாற்றம் செய்துள்ளதைப் பற்றி கேட்டபோது சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.



திருப்பூரைத் தொடர்ந்து தர்மபுரி களைகட்டப் போகிறது!



கழுகார் பதில்கள்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.


 'நிலா மனிதன்’ நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி...? 


இந்த நூற்றாண்டின் இணையில்லா மனிதர் ஆர்ம்ஸ்ட்ராங். உயிர் வாழ்வதற்கு அவசியமான எதுவும் இல்லாத ஓர் இடத்தில் காலடி வைத்துத் திரும்பிய முதல்மனிதர் அவர்!


அவர் மறைந்த இந்த நேரத்தில் நினைக்கத்தக்க இன்னும் இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்கள், ஆர்ம்ஸ்ட்ராங் உடன் சென்ற ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோர். மூவரும்தான் நிலவுக்குச் சென்றவர்கள். முதலில் கால் வைத்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். இரண்டாவது காலடி வைத்தவர் ஆல்ட்ரின். இவர்களோடு வந்து ராக்கெட்டில் இருந்தவர் காலின்ஸ். மூவருக்குமே சரி மரியாதையை நம்மனதில் இருத்துவதுதான் முறையானதாக இருக்கும்!


 கலைஞர்ப்ரியா, வேலூர்(நாமக்கல்).


அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு சசிகலா போகவில்லையே? 


ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் கூப்பிடவில்​லையே!


 அர்ஜுனன்.ஜி., திருப்பூர்.


6.72 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனரே? 



கேள்வித்தாள் மிகமிகக் கடினம் என்பது பெரும்பாலானவர்களின் பொதுவான கருத்து. ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரமும் இதில் இருந்து தெரிகிறது. பணம் காய்க்கும் மரங்களில் ஒன்றான இந்த பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வரக்கூடியவர்கள் எத்தகைய தகுதி உடையவர்கள் என்பது இந்தத் தேர்வு முடிவின் மூலமாகத் தெரிந்து விட்டது. இனிமேலாவது, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப் பதில் தொடங்கி, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது வரை அரசு கறாராக இருந்தால் மட்டுமே இந்த 'புத்திசாலி’ வாத் தியார்களிடம் இருந்து  பிள்ளைகள் தப்ப முடியும்!



ஆசிரியர் தேர்வில் தகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்!


 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.



இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேலான 129 அதிகாரிகளுக்கு எதிராக, 97-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி சொல்லி இருக்கிறாரே? 


பதிவுதானே செய்திருக்கிறார்கள். பயமில்லை! சி.பி.ஐ. இதற்கான தண்டனையை வாங்கித் தருவதற்குள் அவர்கள் எல்லாம் ஓய்வு பெற்று நிம்மதியாகப் போய்விடுவார்கள்!



 எஸ்.ஸ்ரீதர், கொடுங்கையூர்.


ஒன்றுமே புரியவில்லை... இத்தனை காலமும் பதுக்கி, மறைத்து, அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஏமாற்றிச் செய்யக்கூடிய காரியமா இந்தக் கிரானைட் முறைகேடு...? 


பதுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. பட்டப்பகலில் அதி​காரிகள் துணையோடு அமைச்சர்​களின் ஆசீர்வாதத்​தோடுதான் இந்தக் கொடுமை கடந்த 15 ஆண்டுகளாக நடந்துள்ளது. இதை ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேதான் இருந்தன. 


 ஜூ.வி-யைப் பொறுத்தவரை இந்த ஆட்சி மறுபடி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 12 முறைக்கு மேல் எழுதி இருக்கிறோம். எல்லாமே கைமீறிப் போன பிறகுதான் நடவடிக்கை வருகிறது. சரி... இப்போதாவது உஷாரானார்களே என்று சந்தோஷப்படுவோம். கடைசி வரை, கறாராக இருக்கிறார்களா என்பதையும் கண்காணிப்போம்.


 எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.


தி.மு.க-வில் 'சகோதர யுத்தம்’ தணிந்துள்ளதா? 


ஆம்! தணிந்துள்ளது. ஆனால், தந்தை - மகன் யுத்தம்’ சூடுபிடித்து விட்டது. எந்த இடத்தை நோக்கி ஸ்டாலினை வளர்த்து விட்டாரோ... அந்த இடத்தை தரத் தயங்குகிறார் கருணாநிதி. இது, வெளியே தெரியவேண்டாம் என்பதற்காகவே 'சகோதர யுத்தம்’ திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது!



 சோ.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


எத்தகைய கருத்தை மக்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போதிக்கிறார்கள்? 


'எங்களில் யாரும் யோக்கியமில்லை’ என்பதைத்தான்!


ரேவதிப்ரியன், ஈரோடு-1.


தீண்டாமையை ஒழிப்பதில் சிறப்பாகச் செயல்படும் கிராமங்களுக்குத் தலா 10  லட்சம் தரப்போவதாக முதல்வர் சொல்லி இருப்பது நடைமுறைக்கு ஏற்ற நல்ல முடிவுதானே..? 


நிச்சயமாக! ஆனால், தீண்டாமை ஒழிப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து இந்தப் பரிசுகள் தரப்பட வேண்டும். கோயில்களில் சமபந்தி போஜனமோ, நடுவில் போலீஸ்காரரை நிறுத்திக் கொண்டு இரண்டு பக்கமும் வெவ்வெறு சாதிக்காரர்களை நிற்க வைத்து டீ குடிப்பதோ மட்டுமே தீண்டாமையை ஒழித்து விடாது.


ஊர்க் கிணற்றை பொதுவாக்குவது, எந்தத் தெருவிலும் யாரும் நடக்கும் உரிமையைக் கொடுப்பது, கோயில் களுக்குள் தயக்கம் இல்லாமல் அனைவரும் சென்று வணங்குவது, ஊர் விழாக்களில் சமமாகப்  பங்கேற்பது, பள்ளிக்கூடங்களில் பாகுபாடு இன்மை, கலப்புத் திருமணங்கள்... ஆகிய செயல்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கும் கிராமங்களுக்கு ஓராண்டு கவனித்துப் பார்த்த பிறகு விருதும் நிதியும் தரப்பட வேண்டும்.



இப்படிப் பரிசு வாங்கிய கிராமத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் நேரடி அல்லது மறைமுக ஆதரவோடு மறுபடியும் தீண்டா மைச் செயல்பாடு எப்போது நடந்தாலும்... அளித்த நிதியைவிட இரண்டு மடங்கு பணத்தை அரசாங்கத்துக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிப்பது அதைவிட முக்கியம். கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக விருது வாங்கியவர்கள், பிறந்த குழந்தையின் சான்றிதழில் எந்தச் சாதியைப் போடுவது என்று சண்டை போடுவது எந்த அளவுக்கு அபத்தமோ... அதுபோன்ற விளைவுகள் இதிலும் வராமல் பார்த்துக்​கொள்ள வேண்டும்.



 செ.அ.ஷாதிலி, கோனுழாம்பள்ளம்.


இப்போதைய மாநில அரசின் நிர்வாகம் பற்றி...? 


நிர்வாகத்தில் தேக்கம் இருப்பது உண்மை. எல்லா விஷயங்களையும் முதல்வரே செய்ய முடியாது. முதல்வர் இடத்தில் இருந்து யோசித்துச் செயல்படும் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் ஒரு சிலராவது வேண்​டும். ஆனால், பலரும் முதல்வர் 'கேட்டால் மட்டும்’ செயல்படு​கிறார்கள். தானே படிக்கும் குழந்தைக்கும், 'அம்மா’ பார்க்கும்போது பயபக்தி​யாகப் படிக்கும் குழந்தைக்கும் உள்ள வித் தியாசம்​தான் இது!


 அ.குணசேகரன், புவனகிரி.



ஆ.ராசா, இன்று பிரதமரைச் சந்தித்தால் என்ன கேட்பார்? 


'மாட்டிக்கினீயா!’



நன்றி - ஜூ வி 

Thursday, August 30, 2012

கேப்டனுடன் கூட்டணி -ஸ்டாலின் சூசக பேட்டி @ ஆனந்த விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 

நண்பர் விஜயகாந்த் நிச்சயம் ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிப்பார்!"


செம பிளான் ஸ்டாலின்
 
ப.திருமாவேலன்
 
படங்கள் : சு.குமரேசன்
 
'தளபதி’ ஸ்டாலினைச் சந்திக்கச் சென்றால், சுட்டி குட்டி சோல்ஜர்கள் சூழ விளையாடிக்கொண்டு இருந்தார்.



 கையில் வைத்திருந்தால், தோளுக்கு மேல் ஏறுகிறாள் தன்மயா. அதைப் பார்த்துவிட்டு முட்டி மோதி தாத்தாவின் மறு தோளில் ஏறுகிறான் நளன். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து நடந்து காட்டும் நிலானி பாப்பாவையும் இழுத்து அணைத்துக்கொள்கிறார். 'என்னையும் சேர்த்துக்கோங்க’ என்று ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறான் இன்பா.


''பேரன், பேத்திகளுக்கான நேரத்தில் பேட்டிக்கு வந்திருக்கிறீர்களே'' என்று துர்கா ஸ்டாலின் வரவேற்க, ''அரசியல் சூட்டைத் தணிக்கும் சுகமான சுமைகள் இவர்கள்தானே'' என்று அர்த்தம் சொல்லிச் சிரிக்கிறார் ஸ்டாலின்!

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbZAR27ep4ytKPRtL7QtlGoNiCgOJ2Mz504pJufN3mmj821C50PfrT7n4VYqF5aWd7XrE9X8MortC0bC2sw5HsWRKPNs0caaFtGv1z5FtsKj1PQ1_LlyI-6GhCcw6g3EkXZFCFStw2OCQF/s1600/tamilmakkalkural_blogspot_muperum_vizha.jpg

''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மீது தொடர்ந்து வழக்குகளைத் தாக்கல் செய்து உஷ்ணத்தைக் கூட்டிவருகிறாரே?''



''அவருக்குத் தெரிந்ததே வழக்குப் போடுவதும் கைதுசெய்வதும்தானே. 'இம் என்றால் சிறைவாசம்... ஏன் என்றால் வனவாசம்’ என்பது பிரிட்டிஷார் ஆட்சியில் மட்டும் அல்ல; ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்கிறது.


 ஒரு நாட்டின் முதலமைச்சரின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதே தவறு, பொதுமக்களுக்கு நிகழும் சுகாதாரக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லவே கூடாது என்றால், எதிர்க் கட்சிகளே இருக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைக்கிறாரா? எதுவும் பேசக் கூடாதா? ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கிறாரா? இப்போது என்ன மிசா சட்டமா நடைமுறையில் இருக்கிறது?''



''எப்படி இருக்கிறது ஓர் ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி?''



''ஜெயலலிதா வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்து இருந்தால் ஏமாற்றம் அடைந்திருப்போம். அவர் ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், பேருந்துக் கட்டணம் உயரும், பால் விலை அதிகரிக்கும் என்பது தமிழ்நாட்டின் தலைவிதி. தேர்தல் நேரத்தில் அவர் கொடுக்காத இந்த வாக்குறுதிகளை மட்டும்தான் உடனடியாக நிறைவேற்றுவார். 



தலைமைச் செயலகத்துக்குச் சாதாரணமாக வந்து செல்லும் ஒரு அப்பாவி மனிதனுக்குக்கூடத் தெரியும், அந்தக் கட்டடத்தில் இட நெருக்கடி மிகுந்திருக்கிறது, பலவீனமாக இருக்கிறது என்று. அதனை மாற்றி புதிய தலைமைச் செயலகத்தை சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில், காண்பவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் அமைத்து, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கையால் திறப்பு விழாவும் நடத்தினார் கலைஞர்.


'அந்தக் கட்டடத்துக்குள் நான் வர மாட்டேன்’ என்று சிறு பிள்ளைத் தனமாகச் சபதம் போட்டு, கோடிக்கணக்கான அரசாங்கப் பணத்தை அப்படியே கேட்பாரற்றுத் தெருவில் கிடக்கட்டும் என்று நினைப்பவர் ஒரு பொறுப்புள்ள மாநில முதலமைச்சராக எப்படி இருக்க முடியும்?


ஆசியாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பில் அமைக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம். அந்தப் பெருமை கலைஞருக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, அதை மருத்துவமனையாக்கத் துடிக்கிறார்.


தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களை வைத்து மோதிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால், ஆட்சியைப் பிடித்த கட்சி, அரசியல் உள்நோக்கங்களை ஒதுக்கிவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். ஜெயலலிதாவிடம் கடந்த இரண்டு முறையும் அது இல்லை. இப்போதும் இல்லை. வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டார். இப்போது எதிர்க் கட்சித் தலைவர்கள் மீதும் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குகளைப் போடுகிறார்.


பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் - கைதுகள்; சரிந்து, சிதைந்துவரும் சட்டம் - ஒழுங்கு நிலை; குறுவை பொய்த்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குமுறல்; விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்களின் வேதனை; பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் பரிதவிப்பு... இவைதான் இந்த ஓர் ஆண்டு கால ஆட்சியின் சுருக்கம்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg


''தி.மு.க. புள்ளிகள் மீது நில அபகரிப்புப் புகார்கள் கொடுத்தது அனைத்துமே பாதிக்கப்பட்டவர்கள்தானே? அரசாங்கமோ, போலீஸோ, இந்த வழக்குகளைப் போடவில்லையே?''


''சம்பந்தப்பட்ட வழக்குகளின் தன்மைக்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஆனால், தி.மு.க-வினர் மீது புகார் கொடுத்தால் மட்டும் சட்டப்படி முதல் நிலை விசாரணை ஏதும் இன்றி உடன டியாக போலீஸ் கைதுசெய்த ஆர்வத்துக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்தானே இருக்கிறது?


இரண்டு மூன்று புகார்களைச் சேர்த்துக்கொண்டு உடனே குண்டாஸில் கைதுசெய்கிறார்கள். ஜெயலலிதா செய்தது நியாயமான நடவடிக்கை என்றால், குண்டாஸில் கைதான அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்கிறதே... அது எப்படி? இதில் இருந்தே பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்தக் கைதுகள் நடக் கின்றன என்று தெரியவில்லையா?''


''கொடநாட்டில் இருந்தாலும், முதல்வர் அங்கிருந்தே அரசு நடவடிக்கைகளைக் கண்காணித்துச் செயல்பட்டு வந்ததாகத்தானே சொல்கிறார்கள்?''


''ஒன்றரை மாத காலம் அவர் கொடநாட்டில் இருந்தது அவரது விருப்புரிமை. அதனை விமர்சிப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை. பொதுமக்களின் எண்ண ஓட்டத்தைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம்!''


''தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சோர்வுதான் அதிகம் தெரிகிறது. எந்த எழுச்சியும் இருப்பதாகத் தெரியவில்லையே?''


''வெற்றி - தோல்விகளைக் கணக்கிட்டுச் செயல் படும் கட்சி அல்ல தி.மு.க. தோல்வியைப் பார்த்து சோர்வு அடைந்திருந்தால், தலைவர் கலைஞர் அறிவித்த சிறை நிரப்பும் போராட்டத்துக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருக்க மாட்டார்கள். இந்தத் தோல்விகூட, கழகத் தொண்டனை மேலும் எழுச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் சொல்வேன்.


அதேபோல், மிகக் குறுகிய இடைவெளியில் டெசோ மாநாட்டுக்குப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டார்கள். கட்சிப் பொதுக் கூட்டங்கள் அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடக்கின்றன. ஆலோசனைக் கூட்டங்கள் சின்னச் சின்னக் கிளைக் கழகங்களில்கூட முறையாக நடக்கின்றன. எனவே, கழகத் தொண்டர்கள் சோர்வு அடைந்து விட்டதாகச் சொல்வது, அவர்களைச் சோர்வுஅடையச் செய்ய வேண்டும் என்று நினைப் பவர்களின் அபவாதம்!''



''தொண்டர்களின் உற்சாகத்தைக் கோஷ்டி அரசியல்தான் குறைத்துவிடுகிறது என்கிறார்களே? ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி போன்று பிரிந்து செயல்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே?''



''திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமொத்தமாக கலைஞர் கோஷ்டி மட்டும்தான். நீங்கள் சொல்வது வெறும் காட்சிப் பிழை. இவை எல்லாம், ஊடகங்களின் கற்பனை.


 'ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாமல் தனித் தனி வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன் பிறப்புகள்தான்’ என்று பிரகடனம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. கட்சியில் அனைவரும் உடன்பிறப்புகளே என்ற ஒன்றுபட்ட சிந்தனையுடன், பாசத்துடன்தான் அனைவரும் செயல்பட்டுவருகிறோம். பேதங்களுக்கோ, பிரிவினைகளுக்கோ இங்கே இடம் இல்லை!''



''உங்களது தலைமையைக் கட்சியில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?''


''கலைஞர் நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே, இப்படிப்பட்ட கேள்விக்கே இடம் இல்லை!''




''உங்களுக்குத் தலைமைப் பதவியைக் கொடுத்து கருணாநிதி வழிகாட்ட வேண்டும் என்று உங்களது ஆதரவாளர்களில் சிலர் நினைக்கிறார்களே?''



''என்னுடைய ஆதரவாளர்கள் என்று பிரித்துக் கேள்வி கேட்பதே தவறு!''

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXXMIc-ITEjqBKGxaF6nghqb_zY1WSTVKvbphZ02wVTLthLPTRPG0_HbZ204nlzwj3i8s-p5TECzS9ziOkrulmITT3atrGPo9VD1QCbfDDw4SwWQAg57QjDHhdEttEl3O2SP0gqMFzLFXl/s1600/p10.jpg

''அடுத்த தலைமைப் பதவிக்காகத்தான் நீங்கள் ஓடியாடி உழைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?''



''பகவத் கீதையின் சிந்தனைக்கு நாங்கள் மாறுபட்டவர்கள் என்றாலும், 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பதற்கு ஏற்ப, பலனைப் பற்றிக் கவலைப்படாமல் எனது கடமையை நான் ஆற்றிக்கொண்டு இருக்கிறேன்.



மிகச் சிறு இளைஞனாக கோபாலபுரம் கிளைக் கழகத்தின் சார்பில் நாடகம் நடத்திய காலத்தில் என் உள்ளத்தில் இருந்த உற்சாகம் இன்னமும் இருக்கிறது. கட்சிரீதியாக இளைஞர் அணியில் இருந்தாலும், பொருளாளராகத் தொடர்ந்தாலும், ஆட்சிரீதியாக சென்னை மாநகராட்சி மேயராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும் என்னுடைய பொறுப்புகளின் தன்மையை உணர்ந்து நிறைவேற்றி இருக்கிறேன். 


எதிர்க் கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் என்னுடைய பயணங்களை நான் குறைத்துக்கொள்ளவில்லை. கழகத் தலைவர் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு இதுவரை 14 முறை சிறை சென்றுள்ளேன். அனைத்து அடக்குமுறைகளையும் சந்தித்து உள்ளேன். நான் உழைப்பது எனது உணர்வுகளின் வெளிப்பாடே தவிர, எந்தப் பதவியையும் குறிவைத்து அல்ல!''



''தலைவரின் மகன் என்பதால், கழகத்தில் தனி மரியாதை கிடைப்பது இயல்புதானே?''


''தலைவரின் மகன் என்பது பிறப்பால் நான் பெற்றிருக்கும் சிறப்பு. அந்தச் சிறப்பு மட்டுமே தனி மரியா தைக்கான தகுதியைத் தந்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''

http://img.photobucket.com/albums/v144/annakannan/risingson.jpg



''நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவது இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?''


''அப்படிச் சொல்பவர்களுக்கு பேரறிஞர் அண்ணா சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன்... 'அதிமாக முறுக்கேறிய கயிறு அறுந்துவிடும்’ என்றார் அந்தப் பெருந்தகை!''



''கட்சித் தொண்டர்களுடன் அதிக நெருக்கம் காட்டுவதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா?''


''ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுடன் உறவாட என்ன தயக்கம் இருக்க முடியும்? வீட்டிலும் அறிவாலயத் திலும் என்னைச் சந்திக்கக் காத்திருக்கும் அனைவருடனும் அன்போடும் நெருக்கமாகவும்  இருக்கிறேன்.


 வெளியூர் பயணங்களில் தொண்டர்கள் துணையுடன்தான் இருக்கிறேன். அவர்களது வீட்டு விசேஷங்கள் அனைத்துக்கும் உரிமையுடன் செல்கிறேன். கட்சித் தோழர்களோடு நெருங்கி இருப்பதை இன்பத்துள் இன்பம் என்று எண்ணி இருப்பவன் நான். அதில் தயக்கமும் இல்லை. கலக்கமும் இல்லை!''


''நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?''


''தலைவர் கலைஞரின் படை எப்போதும் எந்தப் போட்டிக்கும் தயாராகவே இருக்கும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே!''




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-4w42h7SXtRO2ri6YyWe9BtoVzTQ5KIMjDvTGBquho4FaqEwXTdgkgsApcQCCxj8KHCeTZFNns-ut5guNgrJw-r6SEBrhN_UE0fF7V4_AND0qGYP2DsEdNIQ_L7vK3UCRagi62ph9qRo/s400/dm25-07-09.jpg

''வெற்றி வாய்ப்பு?''


''சந்தேகம் என்ன... நாங்கள் பெரு வெற்றி பெறுவோம்!''


''ஒரு வலுவான கூட்டணியைச் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அமைத்தார். அது வெற்றியைக் கொடுத்தது. அப்படிப்பட்ட திட்டம் தி.மு.க-வுக்கு உண்டா? குறிப்பாக, விஜயகாந்தை உங்களது அணிக்குள் இணைத்துக்கொள்வீர்களா?''



''தலைவர் கலைஞர் எப்போதும் வலுவான அணியைத்தான் அமைப்பார். நண்பர் விஜயகாந்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஒரு தவறைச் செய்துவிட்டோம் என்று அவரே ஒப்புக்கொண்டு உள்ளார். ஜெயலலிதாவுக்குப் பாடம் கற்பிக்கத் தேவையான அரசியல் முடிவை நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்பார் என அவரது கட்சியினரே அவரிடம் எதிர்பார்க்கிறார்கள்!''

நன்றி - விகடன் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA9fHwjbkXXMwG_j1rUvZlHntVg43m4iV5N5qoKEZIywFwOSmyFDa_SOFsFftLiEXEt2ycA-kB91QTE1akrgEpT-Di0s7YrfG5sm2VGDDkO537ptqJYQNM0l7OIUE1-cACFoTJY6zL7yw/s1600/216413_178366115546485_100001192933610_417874_940375_n.jpg


டிஸ்கி - ஃபாத்திமா பாபு பேட்டி விரைவில் வர இருக்கு, அதுக்கான முன்னோட்ட படம் தான் மேலே உள்ளது, மற்றபடி  இந்த பதிவுக்கும், படத்துக்கு, எந்த ஒரு சம்பந்தமும் இல்லை ;-0

Thursday, July 05, 2012

ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் பம்முவது ஏன்? ஓ பக்கங்கள் ஞானி பேட்டி @ சூர்யக்கதிர்

http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_11835443974.jpg1. ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசையெல்லாம் உங்களுக்கு கிடையாதா?


இதில் நான் கலாம் கட்சி. எல்லா கட்சிகளும் சேர்ந்து வந்து என்னைப்
போட்டியின்றித் தேர்ந்தெடுத்தால் குடியரசுத் தலைவராவதில் எனக்கு ஒன்றும்
ஆட்சேபணையில்லை.



2. அப்பாவிகளிடம் நில அபகரிப்பு செய்ததன் விளைவே தி.மு.க. மாஜியினர்
ஜெயிலுக்கு போயுள்ளனர். ஆனால், குற்றம் செய்த அமைச்சர்களை கண்டிக்காமல்
அவர்களுக்கு ஆதரவாக அப்பாவி தி.மு.க. தொண்டர்களை சிறை நிரப்பும்
போராட்டம் என்ற பெயரில் சிறைக்கு அனுப்ப ஆசைப்படுகிறாரே கருணாநிதி?



ஜெயிலுக்குப் போயிருப்பவர்களின் நிதி ஆதாரத்தில்தானே கட்சி ஒவ்வொரு
மாவட்டத்திலும் நடக்கிறது ? அவர்களைக் காப்பாற்றினால்தானே கட்சியைக்
காப்பாற்றமுடியும் ? அப்பாவி தொண்டர்களால் கட்சிக்கு பணம் கொடுத்து
உதவமுடியாது அல்லவா. எனவே அவர்களால் முடிந்தது உடல் உழைப்பு. அதனால்
சிறைக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள்.



3. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி தான் காரணம் என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்
பி.ஏ. சங்மா குற்றம் சாட்டியுள்ளாரே?



தனி நபர் யாரையும் பொறுப்பாக்க முடியாது. மொத்த அரசாங்கமும் ஆளும்
கட்சியும் அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளுமே பொறுப்பு.



4. பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாக மக்களை
திரட்டுவேன் என்கிறாரே வைகோ?



செய்ய முடிந்தால் நல்லதுதான்.ஆனால் கிராமம் கிராமமாக மக்கள் திரண்டு
வந்து அமைதியாகப் போராடியும் அணு உலை விஷயத்தில் அரசுகள் காட்டும்
பிடிவாதத்தைப் பார்க்கும்போது, அணை விஷயத்திலும் அதேதானே நடக்கும் என்ற
கவலை எழுகிறது.



5. வெள்ளாட்டின் தலையை காட்டி ஓநாய் கறி விற்பதில் பிரணாப் கெட்டிக்காரர்
என்கிறாரே நாஞ்சில் சம்பத்?


பிரணாப் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளும் அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்தான்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW3cOnnmWSo-6pSGMqmaUQsuvP3dv6x7J3_dXh0Sn7qP9b0OIZ5QueU7ci7M-v-9xtEHiM_N5aUUuR5WNh_LViXjgemKMZN78LEJ4hpDmTg7daGlION4DO9zXqjJDUqyqLiTm_-nR7BLY/s1600/0.jpg


6. கலகம் – கழகம் என்ன வித்தியாசம் சார் ?


கழகத்துக்குள் கலகம் நடந்தால் இன்னொரு கழகம் பிறக்கும் என்பது வரலாறு.
கழகம் மக்களுக்கு எதிராகக் கலகம் செய்தால் ஆட்சியை இழக்கும் என்பதும்
வரலாறு.



7. மத்தியில் கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று
கருணாநிதி கூறியிருக்கிறாரே?


அவர் சொல்வது முழுக்க முழுக்க சரிதான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது?
இந்தக் கூட்டணிகள் எல்லாம் என்ன கொள்கைக் கூட்டணிகளா, இல்லையே? சந்தர்ப்ப
சூழ்நிலைக்கேற்ப அவரவர் சுயநலம் சார்ந்து அணி மாறுவதுதானே வழக்கம் ?
இதற்கெல்லாம் கோபப்படலாம், வருத்தப்படலாம். ஆச்சரியப்படமுடியாது.



8. குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஓராண்டில் தமது வீட்டில் 171
சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி இருக்கிறாராமே?


பொதுவாக நம் நாட்டு அரசியல் நிர்வாக முறையில் எம்.எல்.ஏ தொடங்கி
ஜனாதிபதி வரை எல்லா பதவிகளிலும் இருப்பவர்கள் வீட்டில் அவர்கள் குடும்பம்
மட்டுமே இருப்பதில்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு பெரும்படையே
அங்கே பொதுச் செலவில் வாழ்க்கை நடத்துகிறது. சென்னையில் எம்.எல்.ஏ
ஹாஸ்டலுக்குப் போய் பாருங்கள்.

எம்.எல்.ஏவை சந்திக்கமுடியாதே தவிர, அவர்
ஊரிலிருந்து வந்து தங்கியிருக்கும் சுற்றம் நட்பு எல்லாரையும்
சந்தித்துவிடலாம். இதற்கு மற்றபடி நேர்மையான அறிஞரான அன்சாரியும் விதிவிலக்கல்ல என்று
தெரிகிறது. அப்துல் கலாம் போல திருமணமே ஆகாதவர்கள் மட்டும்தான் எந்தப்
பதவியிலும் இருக்கலாம் என்று விதி போட முடியாது. அப்படிப் போட்டால் கூட,
அவரைக் கவனித்துக் கொள்கிறேன் என்று ஒரு கூட்டம் வந்து சேரும்.



9. குடியரசு தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதி ஆகி விட்ட நிலையில்
சங்மா போட்டியிடுவது அவசியமா ?


போட்டியின்றி பிரணாப் ஜெயிக்கக்கூடாது என்று அரசியல்ரீதியாக எதிர் அணி
நினைக்கும்போது அது சரிதான். ஜனநாயகத்தில் போட்டி இருந்தால் அது ஒன்றும்
தவறல்ல.


10. சங்மா போட்டியிடுவதால், பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாயப்பு நன்றாக
உள்ளது என்கிறாரே கருணாநிதி?



யார் போட்டியிட்டாலும் பிரணாபின் வாய்ப்பு மாறாது. கலாமே நின்றிருந்தால்
கூட பிரணாபுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.


http://www.vikatan.com/news/images/muthu_toon(2).jpg


11. தமிழகத்தில் தற்கொலைகள் அதிகம் என வந்துள்ள செய்தி குறித்து ?


டாஸ்மாக்கில் தினம் குடித்து ஸ்லோவாக தற்கொலை செய்வோரின் என்ணிக்கையையும்
சேர்த்தா, சேர்க்காமலா?



12. மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் திடீர் தீவிபத்து
ஏற்பட்டது சதி செயல் என கூறப் படுவது குறித்து?


இந்தியாவில் அரசு அலுவலகங்களிலும் தனியார் கம்பெனிகளின் ஆலைகளிலும்
தீவிபத்து நடந்தால் அது விபத்து என்று நம்புவதற்கான வாய்ப்பு பொதுவாகக்
குறைவுதான். சென்னையில் மூர்மார்க்கெட் எரிந்ததே, அந்த இடம்/நிலம்
ரயில்வேக்கு தேவைப்பட்டது என்பதாலும், அதை தர மார்க்கெட் வியாபாரிகள்
மறுத்துவந்ததினாலும்தான் என்று அப்போதே பேசப்பட்டது.



13. தேசத்திற்காக விளையாட வேண்டிய பயஸ் – பூபதி தனி நபர் வெறுப்பை காட்டுவது
முறைதானா சார்?


டென்னிஸ் தனி நபர் விளையாட்டு. ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் பிறகு தேசம்,
மாநிலம் என்பதற்கெல்லாம் அர்த்தம் கிடையாது.



14. தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிப் பொருளாளர்
மு.க.ஸ்டாலின் தனது தந்தையைப் போலவே கருப்புக் கண்ணாடியுடன் வந்தது
அனைவரையும் சற்றே சிந்திக்க வைத்து யோசிக்க வைத்ததாமே?


ஸ்டாலின் அவர் அப்பா போல தோற்றம் காட்டினால் பிரச்சினை இல்லை. அவரைப்
போலவே அரசியல் செய்யாமல் இருந்தால் போதும்.



15. ஜனாதிபதி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கும் என்று விஜயகாந்த்
கூறியிருப்பதன் உள் அர்த்தம் என்ன?


2014ல் எந்த அணியுடன் போவது என்று இன்னும் முடிவு செய்யமுடியாமல்
இருப்பதால் இருவரையும் விரோதிக்க விரும்பாமல் இருக்கலாம்.


http://www.vikatan.com/av/2012/07/ndqyqy/images/p7b.jpg


16. தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தை அழகிரி புறக்கணித்துவிட்டாரே?

செயற்குழுவில் என்ன நடந்தால் என்ன? கடைசியில் தனக்கு சாதகமாக முடிவுகளை மாற்றவும் வளைக்கவும் வேறு அழுத்தங்கள் தரமுடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாமே.



17. அடிக்கடி நீங்கள் ஸ்டாலினை புகழ்கிறீர்கள்.. ஸ்டாலினை பிடித்த அளவிற்கு
உங்களுக்கு அழகிரியை பிடிக்காமல் போனது ஏன்?


ஸ்டாலினை நான் புகழ்வதில்லை. அழகிரியுடன் ஒப்பிடும்போது, அவர்
படிப்படியாக அரசியலில் வேலை செய்து மேலே வந்தவர் என்பதை நான் அவருக்கு
சாதகமன அம்சமாகப் பார்க்கிறேன் அவ்வளவுதான்.



18. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கை ரத்து செய்வதாக பிரணாப் உறுதியளித்த
பிறகு ஆதரியுங்களேன் என தி.மு.க.வுக்கு சீமான் அட்வைஸ் செய்திருக்கிறாரே?


நல்ல அட்வைஸ்தான். பிரணாப் ஆதரவு கேட்டு வந்து சந்திக்கும்போது இதை
கலைஞர் கருணாநிதி வலியுறுத்தலாம். பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக இந்த
உத்தரவைப் போட்டால், தமிழக மக்களுக்கு பிரனாப் மீது பெரு மதிப்பு
ஏற்படும்.


நன்றி - சூரிய கதிர் 1.7.2012


நன்றி - ஞானி இணைய தளம்


http://www.vikatan.com/news/images/p8(3).jpg

Tuesday, April 24, 2012

இம்சை அரசன் 23 ம் புலிகேசி பாகம் 2 - வடிவேல் பேட்டி - கெடாவெட்டு

http://www.gingly.com/grpimg/201006211823vadivelu-attitude.jpg 

ரெடி... டேக்... ஆக்ஷன்!’ சொல்கிறார் அந்த 75 வயது லேடி டைரக்டர்.


 ''எட்டு மாதம் சுமந்து என்னை ஈன்றெடுத்த தாயே'' - புலிகேசி வசனத்தைப் பேசிப் புல்லரிக்கவைக்கிறார் வடிவேலு. சுற்றி வேடிக்கை பார்க்கும் உறவுகள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.


''ஏய் வடிவேலு... சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எட்டு மாசத்துலயே பொறந்த புள்ளதான். புலிகேசி டைரக்டரு அவரா இந்த வசனத்த எழுதினாரா... இல்ல நீயா எடுத்து வுட்டியா?'' - அந்த 75 வயது டைரக்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அவர் வடிவேலுவின் தாய் சரோஜினி.


சி.பி - அவசரத்துல பொறந்த பய புள்ளையா? அதான் இப்படி அவதிப்படுது அய்யோ பாவம்..

''ஆத்தா... எந்தெய்வமே... ஒம் மொகத்துல இப்பத்தானே சிரிப்பைப் பாக்குறேன். ஊரு ஒலகத்தையே சிரிக்கவெச்ச நானு, ஓடுற ஓட்டத்துல ஒங்கள எல்லாம் மறந்துட்டேன் அம்மா. ஒன்னைய ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டுப் போனப்பதான் 'பெத்தெடுத்த இந்த ஆத்தாவை விட்டுட்டா காலுல றெக்கையக் கட்டிக்கிட்டுப் பறந்தோம்’னு மனசு குறுகுறுத்துச்சு.


 'எங்களோட வைத்தியம் முடிஞ்சிடுச்சு. இனிமே உங்க வைத்தியந் தான் வடிவேலு, அம்மாவுக்கு முக்கியம்’னு மதுரை அப்போலோ ஆசுபத்திரி டாக்ட ருங்க சொன்னப்பதான் எம் மனசு குளிர்ந் துச்சு. எந்தாயக் காப்பாத்துற பாக்கியம் எனக்கு அமையணும்கிறதுக்காகவே இறைவன் இப்படியரு இடை வெளியை உண்டாக்கி இருக்கான்.


 வழக்கம்போலவே பரபரப்பா சுத்திக் கிட்டு இருந்திருந்தா இன்னிக்கு ஒம் பக்கத்துல உக்காந்து சிரிக்கவெக்கிற பாக்கியம் அத்துப்போயிருக்கும் என்னை யப் பெத்த அம்மா!''


வடிவேலு கண் கலங்க, ஆறுதலாக அவரை மார்போடு அணைத்துக்கொள்கிறார் 

சரோஜினியம்மா.


கடந்த இரு வாரங்களாக அம்மா முன்னால் தன் காமெடிக் காட்சிகளை நடித்துக்காட்டி, அவருக்குச் சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டு இருக்கிறார் வடிவேலு.


''என்ன கையப் புடிச்சு இழுத்தியா..?''


''இதெல்லாம் நரம்பு இல்ல தாயி... நீங்க போட்ட நூடுல்ஸு...''


''சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு...''


பலவித பாப்புலர் பஞ்ச்சுகளையும் வடிவேலு அள்ளிவிட... வயிறு வெடிக்கிறது சுற்றி அமர்ந்திருப்பவர்களுக்கு.


http://flashnewstoday.com/wp-content/uploads/2010/03/Vadivelu-.jpg




1. ''பரபரப்பா நடிச்சுக்கிட்டு இருந்த வடிவேலு இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்கிறதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?'' 



சி.பி - நல்ல வேளை வீட்டுக்குள்ளேயே இருக்காரு.. வெளீல வந்தா கைமா தான்.. ஒரு பக்கம் கேப்டன் ஆட்கள், இன்னொரு பக்கம் அம்மா ஆட்கள்..

- சரோஜினி அம்மாவிடம் கேட்டேன்.

''அவன் நடிச்சு ஓய்ஞ்சிட்டதா நீங்க நெனைக்கிறீங்களா... அடப்போங்கப்பா. அவன் சம்பாதிக்க வேண்டிய புகழும் பணமும் இனிமேதான் இருக்கு. இதுவரைக்கும் அவன் நடிச்சதெல்லாம் பத்து சதவீதந்தான்.


சி.பி - அண்ணன் இதுவரைக்கும் வாங்குன அடி எல்லாம் சாதா, இனிமே  வாங்கப்போறதுதான் ஸ்பெஷல் சாதா. ஹி ஹி 

 இனிதான் இருக்கு பாக்கி தொண்ணூறும்! எம் புள்ள திரையில நடிச்சதை நான் பாத்திருக்கேன். ஆனா, நேர்ல அவன் பண்ற கூத்தும் கும்மாளமும் கொஞ்சமா, நஞ்சமா? எங்க வீட்டுக்காரரு இறந்தப்ப புள்ளைங்க எல்லாரும் வருத்தப்பட்டாக. அப்போ நான் வடிவேலுகிட்ட சொன்னேன், 'அப்பா செத்துட்டார்னு அழாதப்பா... நம்மளோட கஷ்டத்தை எல்லாம் அவரு அங்கே கொண்டுக்கிட்டு போயிட்டாருனு நெனச்சு நிம்மதியா இரு’னு. 


இப்பவும், 'இந்த ஓய்வு நல்லதுக்குத் தான்பா... உனக்குக் கெடுதல் பண்றவங்கள நம்ம குலசாமி அய்யனார் பாத்துப்பார்’னு எம் புள்ளைக்குத் தைரியம் சொல்றேன். எம் புள்ள மார்க்கெட்டு போயி வீட்ல கெடக்கல தம்பி. அது இப்போ கோடம் பாக்கத்துக்கு லீவு விட்டிருக்கு... அம்புட்டுத் தேன்!'' - வாய்கொள்ளாத பூரிப்பில் சிரிக் கிறார் சரோஜினி.


''ஒம் பேட்டி போதும்மா... இனி நான் பேசிக்கிறேன்''- வான்ட்டடாக வருகிறார் வடிவேலு.


2. ''எப்போதான் ரீ - என்ட்ரி கொடுக்கப்போறீங்க?''


சி.பி - அதுதான் கோடம்பாக்கத்துல  நோ எண்ட்ரி கொடுத்துட்டாங்களே.. எப்படி ரீ எண்ட்ரி வர..?

''கொடுப்போம்ணே... ஏன் அவசரப்படணும்? இப்பவும் நிறையப் பேர் கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்காங்க. 


சி.பி - என்னை ஏவி எம் ல கூப்பிட்டாங்க. கோச்சடையான் டீம் கூப்பீட்டாக. ஆனா நான் ரொம்ப பிஸி.. ஹிஹி

ஆனா, இப்போதைக்கு காமெடி ரோல் பண்ண எனக்கு விருப்பம் இல்லண்ணே. இத்தன நாள் இடைவெளிக்கு அப்புறம் வாரப்ப... நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? அதுக்காகத்தான் ஹீரோ ரோல் பேசிக்கிட்டு இருக்கேன். புலிகேசி பார்ட் டூ ஒருபக்கம்... தெனாலிராமன்கிற கதை ஒரு பக்கம்னு டிஸ்கஷன் ஓடிக்கிட்டு இருக்கு. சம்மர் முடியட்டும்ணே... மக்களுக்கு பம்பர் பரிசு கொடுத்திருவோம்!''


சி.பி - சம்மர் முடிஞ்சா ராகு காலம் ஸ்டார்டிங்க்கா? இம்சை அரசன் ஓடுச்சு ஓக்கே.. இந்திர லோகத்தில்  நா அழகப்பன் ஓடலை, ஏன்? ஏதோ டிஃப்ரண்ட்டா இருந்தால் முத படம் ஓடிடும், அதே மாதிரி 2 வது படமும் எடுத்தா ஓடுமா?

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/02/senthil-son-marriage.jpg


3. ''பெத்த அம்மாவைத் தாங்குதாங்குனு தாங்குறீங்க... ஆனா, முதல்வர் அம்மாவைப் பத்தி எதுவுமே சொல்றது இல்லையே... அவங்க ஆட்சி எப்படி இருக்கு?''


சி.பி - ம்க்கும், கேள்வி கேட்டு அவரை வம்புல சிக்க வைக்கப்பார்க்கறீங்க.. அம்மாவுக்கு ஆதரவா பேசுனா அழகிரி அண்ணன் கோபப்படுவார், எதிரா பேசுனா ஓ பி எஸ் கோபப்படுவார்.. 


''ஆட்சியைப் பத்தியெல்லாம் பேசுற நிலையில நான் இல்லண்ணே..



சி.பி - ஹா ஹா ஹா அடி பலமோ.?

 ஆனா, அவங்களைப் பத்தி நச்சுனு நாலே வார்த் தையில நான் சொல்ல நினைக்கிறது இது தான். காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறியுறதுல அவங்க கரெக்டான முதலமைச்சர்.''



சி.பி - அண்ணே, செருப்புன்னு நீங்க சொல்றது நெருப்புண்ணே.. கருப்பு நெருப்பு.. வீட்டுக்கு வெளீல போறப்ப செருப்பு இல்லாம போக முடியாது. கேவலமா பேசாதீங்க. 

4. ''தேர்தல் வெற்றிக்குக் கூட்டணிதான் முக்கியம்கிற இந்தக் காலகட்டத்துல ஒருத்தங்க வேண்டாம்னா, அடுத்தவங்க சேர்த்துக்கப்போறாங்க. அப்படி ஒண்ணு நடந்தா?''



''அது காலுக்கும் கேடு... அதை மாட்டிக்கிடற ஆளுக்கும் கேடு!''




5. ''நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, 'என்னை அடக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்’னு சொல்றாரே விஜயகாந்த்?''


''ஏங்காதுல அப்புடி ஏதும் விழலையேண்ணே... ஏங்காதுல கேட்குற குரல் என்ன தெரியுமாண்ணே... 'நா அடங்கிப் பல மாசமாச்சு... தேவையில்லாம ஏன் என்னையவே சீண்டுறீங்க. இது நல்லது இல்ல... யாருக்கு, எனக்கு!’ அப்புடின்னுதான் யாரோ புலம்புற மாதிரி இருக்கு. 


எம் படத்துல பாக்குற அத்தனை கேரக்டர்களையும் ஒருசேரப் பாக்குற மாதிரி இருக்குண்ணே... ஸ்நேக் பாபு, நாய் சேகர், கைப்புள்ளனு சிரிப்பா பார்த்த கேரக்டர் எல்லாம் ஒண்ணுசேர்ந்து சீரியஸா பேசுற மாதிரிதானே இருக்கு? சினிமாங்கிறது நிழல். நிஜ வாழ்க்கை வேறண்ணே... 


 நகைச்சுவை, இசை, ஃபைட்னு மொத்த ரத்தமும் உடலோடும் உயிரோடும் கலந்து கட்டி மெனக்கெட்டுச் செய்யிற வித்தைண்ணே சினிமா. ஒரு மாஸ்டரும் ஏராளமான ஃபைட்டர்ஸும் சேர்ந்து ரத்தம் சிந்தி நம்மள தைரியசாலியாக் காட்டுற வித்தியாசமான உலகம்ணே... அங்க நாக்கைத் துருத்தி சேட்டையக் காட்டலாம்ணே. 


 ஆனா, மக்கள் பிரதிநிதிகளும் முதல்வரும் அமர்ந்திருக்கிற ஒரு சபையில நாக்கைத் துருத்துறது நாகரிமாக படலையேண்ணே... நான் அன்னைக்குச் சொன்னது எல்லாம் இன்னைக்கு நடக்குறது நல்லாப் பார்த்தா தெரியும்ணே!''


http://photos.geni.com/p12/dd/04/9e/86/534448388ca1da76/dsc00341_medium.jpg


6. ''இத்தகைய விமர்சனங்களை எல்லாம் சட்டையே செய்யாமல், 'நிச்சயம் ஆட்சி யைப் பிடிப்போம்!’னு விஜயகாந்த் நம்பிக்கையோடு சொல்றாரே?''



''என்னது ஆட்சியையா... இம்புட்டுக்காணு பூச்சியைக்கூட அவரால பிடிக்க முடியாது!''


சி.பி - இப்படியே வெறும் வாய்லயே வெத்தலை போடுங்க.. வெயிட் அண்ட் ஸி.. கேப்டன் இன்னும் 10 வருஷங்கள்ல ஆட்சியை பிடிப்பது உறுதி.. 


http://vijaynet.files.wordpress.com/2006/10/pulikesi17.jpg

7. ''இன்றைய அரசியல் நிலவரங்களை எப்படிப் பாக்குறீங்க?''


''இன்னும் நாள் இருக்குண்ணே... ஏன் இம்பூட்டு அவசரப்படுறீங்க? இவ்வளவு அவசரம் உமக்கு ஆகாதையா. நான் ரொம்பப் பொறுமையா இருக்கேன். அதனாலதான், என் வூட்டுக்குப் பக்கத்துல எழுதிக்கிடக்குற கறுப்பு காமராஜரையும் கறுப்பு அண்ணாவையும் இன்னும் பல பல கறுப்புத் தலைவர்களையும் இந்தக் கறுப்பு பொறுமையோட பார்த்துக்கிட்டு இருக்கேன்!''


சி.பி .  விட்டா கருப்பு காமராஜும் நானே, அழகிய அண்ணாவும் நானே அப்டினு பாட்டுப்பாடி ஓட்டு  கேப்பீங்க போல.. 

 THANX - VIKATAN


Saturday, February 11, 2012

வீறு கொண்ட விஜய்காந்த்தின் சிவப்பு மல்லி பேட்டி - காமெடி கும்மி

http://moonramkonam.com/wp-content/uploads/2012/02/Vijayakanth-jayalalitha-jokes.jpgசென்னை: மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார்.

 சி.பி - வழக்கமா கோபப்படும் நீங்க வெட்கப்படறதைப்பார்த்து நான் துக்கப்படறேன், துயரப்படறேன்.. படறேன்.. றேன்.. 

சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும், அமைதியாகவும், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நீண்ட நேரம் அவர் பேசினார்.

சி.பி - வசனம் எழுதிக்கொடுத்தது லியாகத் அலிகானா?

விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்...

நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம்.இவர்கள்தான் வந்தார்கள், இவர்கள்தான் கூப்பிட்டார்கள். நாங்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் இவர்கள் ஜெயித்தார்கள். நாங்கள் மட்டுமில்லை, மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தார்கள்.


சி.பி - அண்ணே ஒரு டவுட்.. கூட்டணி உடன்பாடு நடந்தப்ப உங்க வீட்டுக்கு அம்மா வந்தாங்களா? இல்லையே? நீங்க தானே பம்மிக்கிட்டே போயஸ் போனீங்க? 

எங்களைப் பார்த்து திராணி இருந்தால் என்று கேட்கிறார்.இவர் கடந்த ஆட்சியின்போது 13 இடைத்தேர்தலில் ஜெயித்தாரா. 5 தொகுதிகளில் நடந்த தேர்தலில் போட்டியிடப் பயந்து ஓடியவர் இவர்.



சி.பி - அண்ணண் பயமே இல்லாதவர், பாருங்க வெள்ளை சட்டை போட்டிருக்கார், வெள்ளை சட்டை போட்டவர் பயப்பட மாட்டார்.. அண்ணே கேப்டன் அண்ணே  அவ்ளவ் தில் உள்ள ஆள் எதுக்கு கூட்டணி வைச்சீங்க? வழக்கம் போல தண்ணியா நின்னு சாரி தனியா நின்னு டெபாசிட்டை இழந்திருக்கலாமெ?



மதுரைக்கே மல்லிகைப் பூவா என்பார்கள், திருநெல்வேலிக்கே அல்வாவா என்பார்கள். அதுபோல தேமுதிகவுக்கே சவாலா. எங்களைப் பார்த்து சவால் விடாதீர்கள். அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.

சி.பி - ஆமா, கேப்டன் சம்சாரத்தை தவிர யாருக்கும் பயப்படமாட்டார்.. யார் கிட்டே?

தனியாக போட்டியிட தயார். நாளைக்கே நாங்க ராஜினாமா செய்கிறோம், நீங்களும் வாங்க, கவர்னர் ஆட்சியில் தேர்தலை சந்திப்போம். ரெடியா. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும்.

சி.பி - ஹா ஹா இது எப்படி இருக்குன்னா 2 லட்சம் கைல வெச்சிருக்கறவன் 10 கோடி வெச்சிருக்கரவனை பார்த்து நான் என் சொத்தெல்லாம் தானம் பண்றேன், நீ அதே போல் பண்ண தயாரா? என கேட்பது மாதிரி



சட்டசபையில் சபாநாயகர் சொன்னதும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆனால் எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததால்தான் நான் எழுந்து நின்றேன். நான் எழுந்து நின்றதை மட்டும் காட்டினார்களே, எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததை ஏன் காட்டவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டுமல்லவா, அதுதானே நியாயம்.

சி.பி - அண்ணே, அவங்க எல்லாம் ஆளுங்கட்சி, எப்படி காட்டுவாங்க, அதுவும் இல்லாம நீங்க தான் செமயா காட்டு காட்டுன்னு காட்டிட்டீங்களே,,,

நியாயத்தைப் பத்தி இவங்க பேசக் கூடாது. 13 நாளில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தியவர் இவர். இவர் நியாயம் பத்திப் பேசலாமா.

 சி.பி - ஆஹா, மாநில அரசியல்ல இருந்து மத்திய அரசியலுக்கு அய்யா குறி வைக்கறாரு.. 

http://www.vikatan.com/news/images/Building.jpg

தேமுதிக சரியில்லை என்று இப்போது சொல்கிறாரே, அதை ஏன் கூட்டணி முடிவானபோது சொல்லவில்லை, தேமுதிக தொகுதிகளை அறிவித்தபோது ஏன் செய்யவில்லை.

சி.பி - ஏன்னா டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கு.. மப்பு இல்லை ஹி ஹி 

நாங்கள் இல்லாவிட்டால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். கூட்டணி இல்லாமல் ஒருபோதாவது அதிமுக போட்டியிட்டுள்ளதா. எம்.ஜிஆர். இருந்தபோதும் கூட கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்டதில்லை.


சி.பி - அண்ணே, இதெல்லாம் ரொம்ப ஓவர்,.. அவங்க சர்வீஸ் என்ன? உங்க சர்வீஸ் என்ன?என்னதான் மப்புல உளறுனாலும் பார்த்து அளவா உளறனும்

ஊர் கூடித்தானே தேர் இழுத்தோம். எல்லாக் கூட்டணியும் கூடித்தானே வெற்றி பெற வைத்தோம். சட்டசபையில் நாங்கள் மக்கள் பிரச்சினைகளைத்தானே பேசப் போனோம். கூட்டணி குறித்து பேசப் போகவில்லை.

சி.பி - மக்களுக்கு நீங்க 2 பேரும் தான் பெரிய பிரச்சனை.. 

என்னைப் பார்த்தால் அறுவறுப்பாக உள்ளது என்கிறார். இவரைப் பார்த்தால் கூடத்தான் அறுவறுப்பாக உள்ளது, அசிங்கமாக இருக்கிறது. நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா. அமைதியாக இருக்கவில்லையா.

சி.பி - ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ சகிப்புத்தன்மை ஜாஸ்தி இருக்கு போல 2 பேருக்கும்

பேசுவதை சர்வாதிகாரமாக தடுக்கிறார்கள். பேச வாய்ப்புக் கொடுத்தால்தானே தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தானே புயல் நிலவரம் பற்றிப் பேச விடவில்லை, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேச விடவில்லை.

இன்றைய நிலவரம் என்று போர்டு போடுவார்களே அது போல இன்றைய மந்திரிகள் என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது.


சி.பி - மந்திரிங்க ஏதாவது தப்பு பண்ணா அவங்க பதவியை பறிப்பதில் என்ன தப்பு?



தூர்தர்ஷன் ஒரு சார்பாகவே நடக்கிறது. ஜெயா டிவியில் எடிட் செய்து தருவதை போடாதே, எல்லாவற்றையும் போடு.

நீங்க மட்டும்தான் மக்கள் பத்திப் பேசுவீங்களா, மத்தக் கட்சிக்காரன் பேச மாட்டானா. ஆணவத்தில் இருக்கிறார் ஜெயலலிதா, மமதையில் இருக்கிறார்.


சி.பி - மமதையில் ஜெ, போதையில் கேப்டன் எப்படி டைட்டில்? ஹி ஹி 

எங்களுக்கு இறங்குமுகம் என்று நீங்கள் சொல்லக் கூடாது. மக்கள் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மட்டும்தான் தொடர்ந்து ஆட்சி புரிந்தவர். நீங்களும், மத்தக் கட்சியும் மாறி மாறித்தான் ஆள முடிந்தது. இப்போதுதானே விஜயகாந்த் வந்துள்ளான், பொறுத்திருந்து பாருங்கள் என்னை.


சி.பி - ஆமா, அண்ணன் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி புரியப்போறார், ஏலேய் சம்முவப்பாண்டி, அப்பாவை எழுப்பி விடு

2005ல் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து தனியாகத்தானே தேர்தலை சந்தித்தேன். நான் தலை குணிந்தாலும் உங்களைத் தலை குனிய வைக்க மாட்டேன் என்று சேலத்தில் சொல்ல விட்டுத்தான், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பத்தானே கூட்டு சேர்ந்தேன்.

இவங்களை பாராட்டிக்கிட்டே இருக்கனும், இதுக்குப் பெயரா ஆட்சி. பாராட்ட மட்டும் டைம் தர்றீங்கள்ள, விமர்சனம் செய்யவும் டைம் தாங்க. புள்ளி விவரம் இருந்தா பேசுங்க என்கிறார்கள். ஊரைக் கொள்ளையடிச்சதுக்கு உங்க கிட்ட புள்ளி விவரம் இருக்கா.

யார் மந்திரி, யார் ஐஏஎஸ், யார் ஐபிஎஸ் என்று இவர்களுக்கேத் தெரியாது. இவங்கதான் தகுதி இல்லாதவர்.

நான் யாருக்கும் பயப்படவில்லை. மக்கள் மனது வைத்தால்தான் யாராக இருந்தாலும். நான்தான் புலி என்றால், ஆட்சிக்கு நாளை நான் வந்தாலும் இப்படிப் பேச முடியும். அப்ப என்ன சொல்வீங்க.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkham2GAdl3N4R6oiRfFzlv-mLNwBaDNr4LgOUfmosyvItKUsjqEP4m-OUXUooTktRinl9p1oEU4pb1EjQK1VUWQWC3QBJUCsZOPC9Od3dEVVRcTaKCa8cdP9Cj6v7jfWk2tmvNw9rGKk/s400/6.jpg

ஜெயலலிதா திருந்தி விட்டார் என நினைத்தேன், இல்லை, பழைய குருடி கதவைத் திருடி கதைதான். ஜெயலலிதா திருந்தவில்லை, ஆணவத்துடன் இருக்கிறார். போன 5 வருடமாக எங்கே போனீர்கள். தேர்தலை சந்திக்கக் கூட திராணி இல்லையே உங்களுக்கு. நான் பயப்படாமல்தான் சந்தித்தேன்.

ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது இவரை 1 மணி நேரம் பேச விட்டார்கள். இவர் பேசலாம், நாங்க பேசக் கூடாதா.

எனக்குப் பயமெல்லாம் கிடையாது. மரியாதைக்கு மரியாதை, அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். மிரட்டிப் பணிய வைக்க வைத்தால் அது முடியாது.

தகுதி இல்லை என்கிறார்கள். உங்களுக்குத்தான் தகுதி இல்லை. தகுதியில்லாத உங்களுடன் கூட்டணி வைத்ததை நினைத்து நான்தான் வெட்கப்படுகிறேன்.

நன்றி கெட்டவங்க, எப்படிக் கெஞ்சுனாங்க என்று எனக்குத் தான் தெரியும். பேச நினைத்தால் நான் நிறையப் பேசுவேன். பேசக் கூடாதென்று அமைதியாக இருக்கிறேன்.

கேவலப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் மக்களை உட்கார வைத்து விட்டார்கள். அந்தமக்களை தூக்கி நிறுத்தத்தான் நான் இனிமேல் போராடப் போகிறேன்.

இப்போது சொல்கிறேன், என்ன திமிராக சொல்கிறான் என்று தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த முறை தேமுதிகதான் ஆட்சியைப் பிடிக்கும். பிடிக்கப் போவதைப் பாருங்கள்.

சி.பி - 2012ல உலகம் அழியும்னு சொன்னாங்க, அப்போ நம்பலை, இப்போ நம்பறேன் 

நாளை முதல் எனது கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குப் போவார்கள். நான் மக்கள் மன்றத்திற்குப் போகப் போகிறேன் என்றார் விஜயகாந்த்.

சி.பி - அப்போ டாஸ்மாக், எலைட் பார் போக மாட்டீங்களா? 

Thursday, February 02, 2012

கேப்டன் ஆவேச பேச்சு யூடியூப் வீடியோ.,சன் நியூஸ் பேட்டி -. காமெடி கலாட்டா



1. அசந்து போகுமளவு அறிவிப்புகள் வெளியிடுவேன் - ஜெ # அசந்தா அடிக்கறது உங்க பாலிசி, அசராம (சரக்கு) அடிக்கறது எங்க பாலிஸி - கேப்டன்


-------------------------------------

2. மேடம்,எதுக்காக எங்க கேப்டனை வெளீல அனுபுனீங்க?

சட்டசபைல மப்புல எங்க கட்சி ஆளுங்களை ”ஓட்டிட்டு” இருந்தார், டிரங்க்கன் டிரைவிங்க்னு ரிஜக்டட்

-------------------------------------

3. சட்ட சபைல கை நீட்டி பேசுனது தப்பு இல்லையா?

கேப்டன் - கை நீட்டி லஞ்சம் வாங்கறதுதான் தப்பு

-------------------------------------

4. உங்களுடன் கூட்டணி வைத்தற்காக நான் வெட்கப்படுகிறேன் -ஜெ # ஓக்கே மேடம், அதை ஏன் இவ்ளவ் கோபமா சொல்றீங்க? சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க- கேப்டன்

---------------------------------

5. ஜெ - என்னை எதிர்க்க திராணி இருக்கா?

கேப்டன் - லூசாம்மா நீங்க? அது இருந்தா தனியா நின்னிருக்க மாட்டேனா?

----------------------------------

6. டியர்,உன்னுடன் காதல் கூட்டணி வெச்சதுக்காக நான் வெட்கப்படறேன்...

ஏன்? ம்க்கும், ஒரு கிஸ் கூட தர்லை.. வேஸ்ட்

--------------------------------

7. காதலி - உங்க கிட்டே திராணி இருக்கா?

காதலன் - இல்ல, வாரா வாரம் வாங்கற ராணி தான் இருக்கு

-------------------------------

8. ஜெ-எனக்கு முன்னால இது வரை கை நீட்டி யாரும் பேசுனதே இல்ல. 

கேப்டன் -அதுக்கு பதிலாத்தான் நாக்கை  மடக்கி உள்ளே வெச்சுக்கிட்டேனே மேடம்?

-------------------------------------

9.ஜெ- கேப்டன் கிட்டே வேற ஏதாவது கல்யாண மண்டபம் இருக்கா? இடிக்கனும்.. 

ஓ பி எஸ் - பிரேமலதா தான் இருக்காங்க, நைஸா இடிச்சுட்டு வரவா?

----------------------------

10. ஜெ-என் கட்சிக்காரங்களை திருப்திப்படுத்தத்தான் நான் உங்களோட கூட்டணி வெச்சேன்  

கேப்டன் - கலைஞரை கடுப்பேத்தனும்கறதுக்காகத்தான் நான் அப்டி. கூட்டணி வெச்சேன்

--------------------------------

http://moonramkonam.com/wp-content/uploads/2011/12/vijaykanth-manmohansingh-mullaiperiyar-dam.jpg

11. ஒரு CM முன்னால நாக்கை கடிச்சுக்கிட்டே பேசுனது முறையா?

கேப்டன் -வழக்கமா நான் ஊறுகாய்  கடிச்சுக்கிட்டுதான் பேசுவேன், ஆனா சட்டசபை என்பதால்.

----------------------------------

12. நிருபர் -சட்டசபைல கலக்கிட்டீங்க..

கேப்டன் - ச்சே, ச்சே வீட்லயே கலக்கி அடிச்சுட்டுதான் சட்டசபை போனேன்

---------------------------------

13. ஜெ- கேப்டன் பேசுன அருவெறுப்பான பேச்சுக்களை நான் பார்த்துட்டு தான் இருந்தேன் 

கேப்டன் - தீயனவற்றை பாராதே,கேளாதேன்னு பெரியவங்க சொன்னாங்களே?

----------------------------------

14. ஜெ- இனி கேப்டனுக்கு இறங்கு முகம் தான்


கேப்டன் - நல்ல வேளை குரங்கு முகம்னு சொல்லலை ஹி ஹி

----------------------------------

15. ஜெ- சங்கரன் கோயில்ல தனியா நிக்கறேன், உங்களால முடியுமா? 

கேப்டன் - அதெப்பிடி? நானும்வந்து அங்கே நின்னா ஜோடி ஆகிடுவோமே?தனியா நிக்கறது எப்டி?

----------------------------

http://3konam.files.wordpress.com/2011/03/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands1.jpg?w=683&h=504

16. கேப்டன், எதுக்காக தல அஜித்தை பார்க்க வந்திருக்கீங்க?

நான் நடந்து கொண்ட விதம் சரி இல்லைன்னு ஜெ சொன்னாங்க , தல கிட்டே டிரெயினிங்க் எடுக்க

------------------------------

17. ஜெ -புள்ளி விவரம் சரியாய் தெரிஞ்சிட்டு தான் பேசணும்.

கேப்டன்: தமிழ் நாட்டில் மொத்தம் 2 கரும்புள்ளிகள் 1. கலைஞர் 2 ஜெ

---------------------------

18.ஜெ - கேப்டனைக்கூட மறுக்கா கவனிச்சுக்கலாம், என்னை சர்வாதிகாரின்னு சொன்ன ஸ்டாலினை முதல்ல உள்ளே தள்ளனும்

கமிஷனர் - மிட் நைட் 12 மணி OK?

---------------------------------