Showing posts with label கேப்டன். Show all posts
Showing posts with label கேப்டன். Show all posts

Thursday, February 02, 2012

வெட்கப்பட்ட ஜெ, கோபப்பட்ட கேப்டன், பாவப்பட்ட மக்கள் - காமெடி கும்மி



 கேப்டன் மேல் ரொம்ப நாளாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒரு எதிர்க்கட்சி போல் அவர் நடக்கவில்லை, பம்முகிறார் என்பதே.. 6 மாசம் போகட்டும், அதுவரை பொறுமை என சால்ஜாப் சொல்லி வந்தார்.. நேற்றோடு அந்த விரதம் முடிந்தது போல..


சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இடையே, நேற்று அனல் பறக்கும் வாக்குவாதம் நடந்தது. அ.தி.மு.க., உறுப்பினரை, கையை நீட்டி ஆவேசமாக விஜயகாந்த் பேசிய விதத்தை கண்டதும், ""எதிர்க்கட்சித் தலைவர், அருவருக்கத்தக்க வகையில், கீழ்த்தரமாக நடந்து கொண்டார். இவர்களுடன் சேர்ந்து, தேர்தலை சந்தித்ததற்காக வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது,'' என, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.


சி.பி - 80 வயசான கவர்னரையே தப்பா பேசுனவர்தானே இவரு.. இவ்ளவ் ரோஷம் இருக்கறவரு ஏன் கூட்டணி வைக்கனும்? தில் இருந்தா சட்டசபையை கலைச்சிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு அப்புறமா வீராப்பு பேச வேண்டியதுதானே?


சட்டசபையில் நடந்த விவாதம்:

சந்திரகுமார் - தே.மு.தி.க: மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போல் தெரிகிறது. மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயருக்குத் தான் கருத்து கேட்பு கூட்டம் நடப்பதாகவும் வெளியில் பேசிக் கொள்கின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், மின் கட்டணத்தை நீங்கள் உயர்த்தப் போவதாக தகவல்கள் வருகின்றன.


சி.பி - பஸ் கட்டண உயர்வு வந்தப்பவே  மின் கட்டண உயர்வும் முடிவாகிடுச்சே..

முதல்வர் ஜெயலலிதா: அடிப்படை விவரம் இல்லாமல் உறுப்பினர் பேசுகிறார். மின் கட்டணத்தை நிர்ணயிப்பது அரசு கிடையாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான், மின் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதனடிப்படையில் புதிய மின் கட்டணத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயிக்கும். ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தான், எல்லாமே நடக்கின்றன. தான் தோன்றித்தனமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கவில்லை. இதையெல்லாம் தெரியாமல் பேசுவது, உறுப்பினரின் அறியாமையைத் தான் காட்டுகிறது.

சி.பி  - அதானே,  தான் தோன்றித்தனமாக நாட்ல ஒருத்தர் மட்டும் தான் பேசனும், எல்லாரும் பேச ஆரம்பிச்சா அம்மாவுக்கு கோபம் வராதா?

பதில் சவால்: பால் விலை உயர்வு மற்றும் பஸ் கட்டணம் உயர்வு குறித்து, ஏற்கனவே பலமுறை விளக்கி விட்டோம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக உயர்த்த வேண்டியது தானே என்று சவால் விடும் வகையில் உறுப்பினர் பேசுகிறார். வேறு வழியில்லாமல் தான், இந்த கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று வருத்தப்பட்டு, நானே மக்களிடம் "டிவி' மூலமாக விளக்கினேன்.


சி.பி -ஏன்   வேற வழி இல்லை? பெரிய பெரிய தொழில் அதிபர்ங்க கிட்டே வரி போடலாம்.. சினிமா, சிகரெட், டாஸ்மாக் சரக்கு டபுள் மடங்கு ஏத்தலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு நடுத்தர மக்கள்ட்ட பிச்சை எடுக்கறீங்களே, வெட்கமா இல்ல?

திராணியிருக்கிறதா? இருப்பினும், உறுப்பினர் சவால் விட்டு பேசுகிறார். அவருக்கு, நான் பதில் சவால் விடுக்கிறேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு திராணியிருந்தால், தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்திய பின் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் முடியுமா என்பதை யோசித்துவிட்டுப் பேசுங்கள்.

சி.பி - சட்ட சபைல போய் மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி ஏதாவது செய்வாங்க, பேசுவாங்கனு பார்த்தா இவங்க எல்லாம் அஞ்சாங்கிளாஸ் பசங்க மாதிரி  அடிச்சுக்கறாங்களே? 

விஜயகாந்த்: 2006ல் இருந்து, 2011 வரை பல இடைத்தேர்தல்கள் வந்தன. அந்த இடைத்தேர்தல்களில், ஒரு தேர்தலில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. இன்றைக்கு வந்து, நான் சங்கரன்கோவிலில் ஜெயிப்பேன், ஜெயிப்பேன் என்று சவால் விடுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் அவர்கள் (தி.மு.க.,) எப்படி ஜெயித்தனர் என்பது, அவர்களுக்குத் தெரியும். இப்போது, நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்பதும் தெரியும். (இவ்வாறு விஜயகாந்த் பேசியதும், அமைச்சர்கள், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சல் போட்டனர். பதிலுக்கு, தே.மு.தி.க., உறுப்பினர்களும் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதனால், சபை ஒரே அமளியாக காணப்பட்டது. தே.மு.தி.க., உறுப்பினர்கள், சபையின் முன்பகுதிக்கு வந்து, அ.தி.மு.க., உறுப்பினர்களை பார்த்து ஆவேசத்துடன் பேசினர்.)


சி.பி - இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்பது வரலாறு கண்ட உண்மை.. இதை எல்லாம் ஒரு மேட்டரா ஜெ சொல்லக்கூடாது.. 





முதல்வர்: தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவர், தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்.

சி.பி - ஜெயிக்கப்போறது நீங்களா? அவரா? என்பது தெரில, ஆனா தோக்கப்போறது அப்பாவி ஜனங்க தான்.. நீங்க ஏதாவது நல்லது பண்ணுவீங்கங்கற நம்பிக்கைல  அவங்க பாவம் வரிசைல நின்னு ஓட்டு போடறாங்க..

விஜயகாந்த்: நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கேட்டதற்கு மட்டும் தான் பதில். சங்கரன்கோவிலை பற்றி பேசும் நீங்கள், பென்னாகரத்தில் ஏன் தோற்றீர்கள்; அதில், நாங்கள் தான் இரண்டாவது இடம். பென்னாகரத்தில் டெபாசிட் காலியானது ஏன்? மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது ஏற்கனவே குறை கூறிய நீங்கள், இப்போது அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

சி.பி - சும்மாவே கேப்டன் ஆடுவாரு, இன்னைக்கு சரக்கு வேற அடிச்சுட்டு போய்ட்டார் போல.. அவ்வ்வ் 

சபையில் கொந்தளிப்பு: விஜயகாந்த்தின், இந்த தொடர் கேள்விகளால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும், மாறி, மாறி ஆவேசமாக பேச, சபை ஒரே கூச்சல், குழப்பமாக காணப்பட்டது. அப்போது, அ.தி. மு.க., உறுப்பினர் ஒருவர், விஜயகாந்த்தை பார்த்து சைகை செய்து ஏதோ பேச, விஜயகாந்த் கடும் ஆவேசத்துடன், பதிலுக்கு கையை நீட்டி கடுமையாக பேச, சபையில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது.

சி.பி - கேப்டன் பிரபாகரன் படத்துல கோர்ட் சீன் தான் ஞாபகம் வருது.. நேத்து ஹாட் டாபிக் கேப்டன் தான், சமூக வலை தளங்களான ட்விட்டர்ல, ஃபேஸ் புக்ல கேப்டன் திடீர் ஹீரோ ஆகிட்டாரு.. 

கூண்டோடு வெளியேற்றம்: இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும், சபையில் இருந்து வெளியேற்ற, சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே, சபைக் காவலர்கள் நுழைந்து, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினர். வெளியேறும் போது, தே.மு. தி.க., உறுப்பினர்கள், ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் போட்டபடி சென்றனர். அதன்பின், அமைச்சர் விஸ்வநாதன் கூறும்போது, ""சட்டசபை மரபுக்கு மாறாக, சினிமா பாணியில் எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்டார். தரக்குறைவான முறையில், அவரது செயல்கள் இருந்தன. அவர் மீது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


சி.பி - என்னய்யா பேச்சு இது.. தமிழ் நாட்டின் சி எம் ஒரு சினிமா நடிகை ( முன்னாள்) எதிர்க்கட்சித்தலைவர் ஒரு சினிமா ஹீரோ.. பின்னே எந்த மாதிரி சபை நடவடிக்கைகள் இருக்கும்? சுதந்திரப்போராட்ட தியாகிகளா சட்ட சபைல இருக்காங்க?  

உரிமை மீறல் குழுவுக்கு...: அதன்பின், சபாநாயகர் கூறும்போது, ""எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சி உறுப்பினர்களும், சபைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், பிற வகைகளிலும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். எனவே, சபை விதி 226ன் கீழ், இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன்'' என்றார். மார்க்சிஸ்ட் சட்டசபை தலைவர் சவுந்தர்ராஜன் பேசும் போது, ""சபையில் இதுபோன்ற விவாதம் பல முறை நடந்திருக்கிறது. ஒவ்வொன்றையும், உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவது சரியாக இருக்காது'' என்றார். அதற்கு, ""அவர்கள் (தே.மு. தி.க.,) நடந்து கொண்ட விதத்தை அனுமதிக்க முடியாது. தெருச்சண்டை போல் சண்டை போட்டனர்'' என, சபாநாயகர் கூறினார்.

சி.பி - சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்ட்டி சாரி  ஆண்டி கதையா அவங்க பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாங்க.. தூண்டி விட்டது ஜெ தான்..

இதன்பின் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இன்று, எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான பேச்சுக்கள் இவற்றையெல்லாம், இங்கேயே அமர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்; அனைவரும் பார்த்தனர். தே.மு.தி.க.,வினருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றால், அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், அதைத் தவிர்த்து, குறைந்தபட்ச நடவடிக்கையாக, இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக, சபாநாயகர் கூறியிருக்கிறார். சபாநாயகர் தன் முடிவை அறிவித்தபின், வேறு எந்த உறுப்பினரும், அதைப்பற்றி கேள்வி கேட்க விதிகளில் இடம் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. 


சி.பி - எம் ஜி ஆர் கூட இதே மாதிரி சொன்னார்..  ”தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர்?”னு, அதை ஜெ கொஞ்சம் நினைச்சுப்பார்க்கனும்?

இந்த நேரத்தில், ஒன்றை சொல்கிறேன். கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளின் காரணமாக, நிர்வாக சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக, மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினர். அ.தி.மு.க.,விற்கு, கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதே முடிவைத் தான் நாங்கள் பெற்றிருப்போம்.


சி.பி - அவ்வளவு நம்பிக்கை இருக்கா? உங்க கணக்கு தப்பு.. சோவின் ஆலோசனையின் பேரில் வேற வழி இல்லாம தான் நீங்க கூட்டணிக்கு ஒத்துக்கிட்டீங்க..  காரியம் ஆகற வரை காலை பிடி, காரியம் ஆன பிறகு கழுத்தைப்பிடிங்கற கதையா நீங்க இப்போ அவங்களை உதாசீனப்படுத்தறீங்க.. 


அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துவது என, மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதன்படி தான், கடந்த தேர்தலில் முடிவுகள் அமைந்தன. தே.மு.தி.க.,வின் அதிஷ்டம், எங்களுடன் கூட்டணி சேர்ந்தனர். அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனால் தான், இத்தனை உறுப்பினர்கள், அக்கட்சிக்கு கிடைத்திருக்கின்றனர். இந்த கூட்டணியில், எனக்கு சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். 


சி.பி - அவ்வளவு நல்லவரா இருந்தா இதே ஸ்டேட்மெண்ட்டை தேர்தல் பிரச்சாரத்தின்போதே சொல்லி இருக்கலாமே?  இது ஒரு விருப்பம் இல்லாத கூட்டணீன்னு?

என் கட்சியினரை திருப்தி செய்வதற்குத் தான், இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன். இந்தக் கூட்டணி அமையாவிட்டாலும், அ.தி.மு.க.,விற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. தே.மு. தி.க.,விற்கு கொடுத்த இடங்களிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும். நிதர்சனமான இந்த உண்மையை, இந்நேரத்தில் அவர்களுக்கும் புரிய வைக்கிறேன்; அனைவருக்கும் புரிய வைக்கிறேன். அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., சேர்ந்ததால் தான், அவர்களுக்கு அதிகமான உறுப்பினர்கள் கிடைத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தும், தகுதியும் கிடைத்தது. அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேராவிட்டால், கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட, தே.மு.தி.க.,விற்கு கிடைத்திருக்காது என்பது தான் உண்மை. தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட புரியாமல், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அ.தி. மு.க., தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும் போது நான் வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். எதிர்க்கட்சித் தலைவரும், அவருடைய கட்சி உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது, ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு வர வேண்டிய ஏற்றம்; வரக்கூடிய ஏற்றம் எங்களால் அவர்களுக்கு வந்து முடிந்து விட்டது. இனிமேல், அவர்களுக்கு இறங்கு முகம் தான். அதை சரித்திரம் சொல்லும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


சி.பி - சரித்திரம் சொல்லுதோ இல்லையோ உங்களூக்கு இனி தரித்திரம்தான்

"அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்,'' என, விஜயகாந்த் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.


சி.பி - ஆஹா , கேப்டன் தத்துவமா பொழிய ஆரம்பிச்சுட்டாரெ? 


சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் காரசாரமான விவாதத்திற்கு பின் வெளியேற்றப்பட்ட எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி: ஊர்கூடி தேர் இழுத்தது போல் நாங்கள் ஒன்று சேர்ந்ததால்தான் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது என, எங்கள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் சட்டசபையில் தெரிவித்தபோது, "எங்களால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள்' என, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் தெரிவித்தனர். "சங்கரன் கோவில் தொகுதியில் தனித்து போட்டியிடுவீர்களா?' என்று முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார். இதற்கு நான் பதிலளிக்க முயன்றபோது, எதிர்கட்சித் தலைவரான என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் விரல் நீட்டி மிரட்டுகிறார். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? 


 சி.பி - அவங்க விரல் நீட்டி மிரட்னாங்கன்னா நீங்களூம் அப்படி செஞ்சா அவங்களுக்கும், உங்களூக்கும் என்ன வித்தியாசம்? நல்ல தலைவர் என்பவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், தன் தொண்டர்களை மட்டுப்படுத்தவும் தெரிஞ்சிருக்கனும்..

அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை கொண்டுவந்த பிறகு, சங்கரன் கோவில் தேர்தலை நடத்திக் காட்டட்டும். அப்ப சவாலை சந்திப்போம். யாருக்கு திராணி இருக்குன்னு அன்னைக்கு பார்ப்போம்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேடு செய்ய முடியும். அதன் மூலம்தான் தி.மு.க., ஜெயித்தது என முன்பு சொன்னார்கள். இப்போது அதே இயந்திரத்தைத்தான் இவர்களும் பயன்படுத்துகின்றனர். அப்போது தவறு செய்திருந்தால், இப்போது செய்ய முடியாதா? கடந்த ஐந்து வருடத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., ஜெயித்திருக்கிறதா? பென்னாகரத்தில் டெபாசிட் பறிபோனது. பர்கூரில் தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் தானே முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.

சி.பி - அவரும் தோற்றவர்தான்.. நீங்களும் தோற்றவர் தான்.. இனிமே ஜெயிக்கப்போறது யார்?னு காலம் தான் தீர்மானிக்கும்.. 

 மக்கள் கருத்து 

1. வசந்தி - ராஜன் மக்களின் எண்ணங்களை அருமையாக பிரதிபலித்துள்ளார். ஆளும் வர்க்கம் இது போன்று இணைய தளங்களை பார்த்து அவ்வப்போது மக்களின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, விஜய காந்தின் முகபாவனைகளை சரியில்லை. இருந்தாலும், ஆளுங்கட்சி விலை வாசி பற்றி பேசும்போது ஏன் மிரட்டி அதை பேச விடாமல் தடுக்க வேண்டும்?

தகுதி பற்றி பேசும் அம்மா எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவரை நிதி அமைச்சர் ஆக்கி உள்ளாரே, அது சரியா? ஜெய்லலிதா திருந்தவில்லை என்றால் கோர்ட் திருந்த வைக்கும் (சமச்சீர் கல்வி, சாலைப்பணியாளர் வேலை, தலைமைச்செயலக கட்டிடம்...), இல்லை மக்கள் 2014 ல் திருந்த வைப்பார்கள். கடவுள் அதற்கு முன் பெங்களூர் கோர்ட் வழியாக திருந்த வைக்கலாம்

2.  மகிழ்நன் -தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

விஜயகாந்தை குறித்து...ஜெயா...மம்மி..

சரிங்க மம்மி,,,

நீங்க என்ன தகுதியில பதவிக்கு வந்தீங்க...மக்களுக்கு தொண்டு செய்தா? மத்தவங்களை பேசும்போது கவனமா பேசுங்க...சுயவிளக்கம் கொடுப்பது போலவே இருக்கு

3. யுவா - ரெண்டு பேரும் எப்படின்னு அவங்கவங்களுக்கு தெரியும். மக்களுக்கும் நல்லாவே தெரியும். எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்த நிலையில் இவங்களை ஜெயிக்க வைத்ததன் பலன் தான் இது. ஆமாம்பா, ஒரு ச.ம.உ. நாட்டுநடப்பு பத்திக் கேள்வி கேட்டால் என்ன எகத்தாளமா பதில் சொல்றது? கேட்ட கேள்விக்குச் சரியான பதில் மட்டும் அளித்துவிட்டு விட வேண்டியது தானே? அப்புறம் என்ன அப்பென்டிக்ஸ் மாதிரி தகுதி பத்தி கருத்து? என்னவோ இவுகளுக்கு ரொம்பத் தகுதி இருக்கிற மாதிரி. நீங்க எப்படி அரசியலரங்கில் நுழைந்தீர்கள் என்று நல்லாவே தெரியும்.


3 முறை முதல்வர் ஆனதும் எந்தத் தகுதியின் அடிப்படை? முதல்ல உங்க கட்சி ச.ம.உ. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது என்ன தகுதி பார்க்கறீங்க? கேட்டா சசி மேல பழியைப் போட்டுட்டு உத்தமி வேஷம் கட்டுவீங்க? அப்படி சசி தான் எல்லாத்துக்கும் காரணம்னா, முந்தா நாள் தான் தெரிஞ்சதா? உங்க நாடகம் எல்லாம் நல்லாவே நடத்துங்க. முடிவு நெருங்குகிறது. ஆக மொத்தம் மக்கள் நாசமாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடாவது (மாநில (அ) மக்கள் வளர்ச்சிக்கு) கொண்டு வந்திருக்கிறீர்களா இந்த 9 மாத காலத்தில்? கேட்டா கடந்த ஆட்சியின் ஊழலால் அரசு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறதுன்னு சத்தாய்ப்பீங்க? எப்படி ஒரு 5 வருஷம் ஆகுமா அதைச் சரிப்படுத்த? இதுல இந்த சசி, "கரன்"களின் பிரச்சினை வேறு. அதைச் சீர்படுத்துவதுதானே இப்போது தலையாய கடமை உங்களுக்கு? 96-ஆம் வருஷம் நீங்க போட்ட ரூட்ல தானே இப்போ "கரன்"களும் கன்டெய்னரில் பணத்தையும், பத்திரங்களையும் ஏற்றி அனுப்பிக்கிட்டு இருக்காங்க?


4. சந்த்ரு -விஜயகாந்தை விட மோசமாக பேசியுள்ளர் ஜெயா. அடுத்தவரை மதிக்கும் பண்பு இவரிடம் எப்போதும் இருந்ததில்லை.


5. அகிலன் -"தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம்," என்று விஜயகாந்தை ஆவேசமாக சாடினார். இதையெல்லம் சொல்ல்வதர்கு தகுதி உள்ளத என யோசித்து பேசியிருக்கலாமே எதிர் கட்சி என்றாலெதி கேள்வி கேட்கதான செய்வாங்க அது எதிர் கட்சி வரிசையில் உக்காந்திருந்தாதானே தெரியும் கொட நாட்டில போய் கொட்டிகிட்டா எப்டிப்ப தெரியும் மக்களே இவர்களை சட்ட பேரவயில் சட்டம் பேசத்தானே அனுப்பினோம்
சண்ட போடவா அனுப்பினோம் யார் வந்தாலும் இதை மட்டும்தான் உருப்படியா செய்றாங்க சட்ட மன்ற உறுப்பினர்களே நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்களின் வெற்றிக்கு காரணம் நீங்கள் இருவருமே அல்லடா ஆளுங்கட்சி காரர்களே நான்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வெற்றிக்கும் காரணம் தி மு க தானே தவிர உங்களின் மகதன சேவையை கண்டு யாரும் வாகாளிக்க வில்லை தி மு க வின் மேல் உள்ள வெறுப்பால் மற்று கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றே உங்களுக்கு வாக்களித்தார்கள் தயவு செய்து நீங்கள் மார்தட்டி கொள்ளாதீர்கள் மக்கள் உங்களை முட்டாள்கள் என்று நினைத்துவிடுவார்கள் தோழர் சந்திர மோகனுக்கு ஏன் நன்றி அவர் சரியாக தானே கேட்டிருக்கிறார் எப்பா மாமன்ற உறுப்பினர்களே கேள்ளவி கேட்ட பதில் சொல்ல கத்துகிட்டு சட்டபேரவைக்கு வாங்க தோழர்களே நீங்க வெட்க படாதீங்க உங்களுக்கேள்ளலாம் வாக்களித்தொமே என்று நாங்கள் வெட்க படுகிறோம்

Saturday, September 10, 2011

விஜய்காந்த் கட்சி எனக்கு பாடம் நடத்த தேவை இல்லை- ஜெ ஆவேசம் @ சட்டசபை இன் ஜூ வி கட்டுரை - காமெடி கும்மி

மிஸ்டர் கழுகு: பஞ்சர் ஆகிறதா ஸ்பெக்ட்ரம்?


''இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்... உறவும் வரும் பிரிவும்
வாழ்க்கை ஒன்றுதான்...'' - ஹம்மிங்கோடு வந்தார் கழுகார். அ.தி.மு.க. - தே.மு.தி.க. உரசல் பற்றிய செய்திகளோடு வருகிறார் என்பது நமக்குப் புரிந்துவிட்டது.  


சி.பி - அவங்க உரசிக்கறாங்களோ இல்லையோ பிரஸ்காரங்க அப்டி ஆக்கி விட்டுடுவாங்க போல... ,



''கடந்த இதழுக்கு, 'கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்... விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?’ என்ற தலைப்பில் நான் கொடுத்த கவர் ஸ்டோரி, கிட்டத்தட்ட நடக்கத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் கொதிநிலை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது.

சி.பி - பாலிடிக்ஸ் தெர்மா மீட்டர் வெச்சு பார்த்தீங்களா?

'தே.மு.தி.க. எங்களுக்கு அரசியல் பாலபாடம் நடத்த வேண்டாம்’ என்று சட்டசபையில் ஜெயலலிதா சீறியது... அந்தக் கட்சியின் மீதான கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறது!'' என்ற கழுகாரிடம்,



சி.பி -புரட்சித்தலைவர் சொல்லியே கேட்காதவர் புரட்சிக்கலைஞர் சொல்லி கேப்பாரா? யார் கிட்டே? ராஸ்கல்ஸ்.. அம்மாவா? கொக்கா?மத்தவங்க எல்லாம் மக்கா?


''அவையில் என்னதான் நடந்தது?'' என்றோம்.


''தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம், புதன்கிழமை அன்று பேசினார். 'சிறையில் அடைக்கப்​பட்டு இருக்கும் தி.மு.க-வினர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சுகவாசம் அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது. சிறைவாசம் சுகவாசமாக மாறிவிடக்கூடாது’ என்று ஆட்சியாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

சி.பி - வனவாசம் அனுபவிக்கும் தி முக சிறைவாசம் அனுபவிப்பதில் தப்பில்லை,சுகவாசமாக இருக்க அவர்கள் சகவாசம் ஒரு காரணம், பல பெரிய அதிகாரிங்களை கைக்குள்ள போட்டிருக்காங்க போல.. 


அதாவது, கைதாகிறவர்களைக் கறாராக நீங்கள் கவனிக்கவில்லை என்பதுதான் அதனுடைய உட்பொருள்.


 சி.பி - நிருபர் மேஜர் சுந்தர்ராஜன் தம்பி போல, தமிழ் டூ தமிழ் ட்ரான்ஸ்லேட்டிங்க்.

உடனே ஜெயலலிதா, 'எந்தக் கைதிக்கு அப்படி வசதி செய்து தரப்பட்டது என்று சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். பொத்தாம்பொதுவாகச் சொல்லக்கூடாது’ என்றார்.

 சி.பி - அம்மாவை யாருன்னு நினைச்சீங்க? ஃபிங்கர் டிப்ஸ் ஃபிலோமினா!! தெரியுமில்ல? ஆதாரத்தை காட்டு.அப்புறம் பாரு

அதற்கு விளக்கம் தராத தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.


சி.பி - ஹலோ மிஸ்டர் சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்!! ஜெவை அசரடிக்கனும்னா கைல சரியான ஆதாரம் வேணும்,இல்லைன்னா பப்பு வேகாதுடி.


'திருத்தணி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு...’ என்று சொல்லி அந்த இடத்தில் இருக்கும் பிரச்னையை அவர் சொல்லத் தொடங்க, உடனே ஜெயலலிதா எழுந்துவிட்டார். 'முதன்முறையாக இப்போதுதான் தே.மு.தி.க. அவைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் எங்களுக்குப் பாலபாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதேபோலதான் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. பேசும்போது, மேட்டூரில்தான் மேட்டூர் அணை இருக்கிறது என்றார். அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடு திருத்தணி கோயில் என்பதெல்லாம் நீங்கள் சொல்லாவிட்டால் எங்களுக்குத் தெரியாதா?’ என்று கோபத்தைக் காட்டினார். இப்படியரு ரியாக்ஷன் வரும் என்று தே.மு.தி.க. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!'' 

சி.பி - அம்மாக்கு வணக்கம்னு பேச வாயை திறந்தாலே பிடிக்காது, சைகைல பம்பிட்டே கும்பிடு போடனும், யார் கிட்டே? ஹே ஹே ஹேய்



''கோபத்துக்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு பிரச்னைதானே?''


சி.பி - அரசியல்ல இருக்கற எல்லா நாய்ங்களையும் இந்த சீட் பிரச்சனை எப்படி எல்லாம் ஆட்டுவிக்குது? கூட்டணி, கொள்கை ஒரு வெங்காயமும் எவனுக்கும் கிடையாது, பச்சோந்திப்பரதேசிப்பசங்க..



''10 மாநகராட்சிகளில் நான்கு மேயர்களைக் குறிவைத்துக் கோரிக்கை வைத்திருப்பதை, கடந்த இதழிலேயே உம்மிடம் சொல்லியிருக்கிறேன். நகராட்சித் தலைவர் பதவிகளில் 40-க்கும் மேற்பட்ட பதவிகளையும் அதோடு மொத்த இடங்களில் 30 சதவிகிதத்துக்கு அதிகமான இடங்களையும் தே.மு.தி.க. கேட்கிறதாம்.



சி.பி - பொதுத்தேர்தல்ல 13% இடம்தானே வாங்கினீங்க?அதுக்குள்ள எதுக்கு பேராசை?

'சட்டசபைத் தேர்தலிலேயே குறைந்த இடங்களைத்தான் நாம் வாங்கி இருக்கிறோம். எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வாங்கிவிட வேண்டும்’ என்று தே.மு.தி.க. முன்னணியினரே சொல்லி வருகிறார்கள். ஆனால், அந்த அளவுக்குக் கொடுக்க முடியாது என்பதில் அ.தி.மு.க. விடாப்பிடியாக இருக்கிறது.

 சி.பி - விடாக்கண்டன், கொடாக்கண்டன்

எப்படியாவது தொகுதிப் பங்கீட்டை சீக்கிரமே முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுவை முதன் முதலில் கேட்டது அ.தி.மு.க.! அதோடு கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் அடங்கிய தொகுதிப் பங்கீட்டுக் குழுவையும் அமைத்துவிட்டார் ஜெயலலிதா. அ.தி.மு.க. ஒதுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு தே.மு.தி.க. போட்டியிடுமா என்பது சந்தேகமே. சட்டசபைத் தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிக¬ளை எல்லாம் அழைத்துத் தனது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதையும் அதன்பிறகு விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்தித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது இதுவரை சஸ்பென்ஸ்தான்!''


சி.பி - கேப்டன் ஆட்சியை விமர்சனம் பண்ணாம இருக்கறதுக்குக்காரணமே உள்ளாட்சித்தேர்தல்தான், அதனால குட்டையைக்குழப்பாம  பம்மிக்கிட்டே கிடைச்ச சீட்டை வாங்கிக்குவாரு பாருங்க. 


''ஓகோ!''

''கேப்டன் கோபத்தைக் காட்டினாலும் பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க-வோடு ஆதரவாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறார். 'பாலபாடம் நடத்த வேண்டாம்’ என்று ஜெயலலிதா அவையில் சொன்னதற்கு இரண்டு நாட்கள் முன்பு விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கென பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அவையில் அறிவித்தார். அதற்காக நன்றி தெரிவித்துப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'அரசியலில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது’ என்று அப்போது சொன்னதற்கு அர்த்தம் உண்டு என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மானிய கோரிக்கை மீது விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் முதலில் எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்கள்தான் பேசுகிறார்கள். அவர்கள் பேசும்போது, ஜெயலலிதா அவையில் இருப்பதில்லை. பணிகள் காரணமாகத்தான் அவர் வெளியே செல்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தே.மு.தி.க. இதனை ரசிக்கவில்லை. மொத்தத்தில், உரசல் நாளுக்குநாள் அதிகமாகிறது!'' என்ற கழுகார் அடுத்த சமாசாரத்தை அவிழ்த்தார்...


சி.பி - உள்ளாட்சித்தேர்தல் மட்டும் முடியட்டும். கேப்டன் சரக்கோட சட்டசபை வந்து கலக்கப்போறாரு.. செம காமெடி சீன்ஸ் அரங்கேறும் , வெயிட் & ஸீ..


''தி.மு.க-வின் முப்பெரும் விழா வழக்கமாக செப்டம்பர் 15-ம் தேதிதான் நடக்கும். இம்முறை செப்டம்பர் 18-ம் தேதி வேலூரில் நடக்கும் என்று அறிவித்து இருந்தார்கள். திடீரென தேதியும் இடமும் மாறி இருக்கிறது.  30-ம் தேதி சென்னையில் முப்பெரும் விழா நடக்கும் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிதான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகிறது. அந்த சமயத்தில் முப்பெரும் விழா நடத்துவதை தி.மு.க. விரும்பவில்லை. அன்றைய தினம் சி.பி.ஐ. ஏதாவது சொல்லிவிடக் கூடாது என்ற பயம் இருக்கிறது.

மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பது எளிது என்று சில மூத்த வழக்கறிஞர்கள் கருணாநிதிக்குச் சொல்லி இருக்கிறார்கள். மகளும் இருந்தால் நல்லதுதானே என்றும் கருணாநிதி நினைக்கிறார். 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகிவிட்டால், 30-ம் தேதிக்குள் கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி அழைத்து வந்துவிடலாம் என்று துடிக்கிறாராம் கருணாநிதி. அதற்காகத்தான் இந்த தள்ளி வைப்புகள்!''


''ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளதே?''

சி.பி - ஆஹா என்ன பொருத்தம் , நமக்குள் இந்தப்பொருத்தம்? ஊழல் எனும் மாளிகையில் லஞ்ச லாவண்யங்கள் சுகமே!!!!!!!!! ( இது ஃபோட்டோ கமெண்ட் அல்ல! ஹி ஹி )

''ஸ்பெக்ட்ரம் வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சர் ஆகி வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. டெல்லி வட்டாரத்தில் பலமாகப் பேசப்படும் விஷயங்களை நான் உமக்குச் சொல்கிறேன். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் 'டிராய்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைதான் இந்த சந்தேகங்களுக்கு அடிப்படைக் காரணம். '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது அந்த அறிக்கை.

 சி.பி - மக்களுக்குத்தானே இழப்பு? மத்திய அரசுக்கு எப்டி இழப்பு? அவங்களும் பங்கு வாங்கி இருப்பாங்க!!


ஏலத்தில் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்று கொடுத்ததால் அரசுக்கு 1.75 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை சொன்ன பிறகுதான் நாட்டில் இந்த விஷயம் தீயாய் கிளம்பியது. சி.பி.ஐ. இந்த விஷயத்தைக் கையில் எடுத்து விசாரித்தது. இதில் முகாந்திரம் இருப்பதாக நம்பிய பிரதமர், அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார்.

 சி.பி - ஒரு ஸ்மால் கரெக்‌ஷன் சொல்லலை, கெஞ்சுனாரு..அய்யா ராசா தயவு செஞ்சு ராஜினாமா பண்ணிடுங்கன்னு ஹிந்தில கெஞ்சிங்க். 



இதில் கலைஞர் டி.வி. சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சொல்லி, கனிமொழியும் கைதானார். தயாநிதி மாறன் மீது புகார் கிளம்பியது. அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர். 14 பேர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். நீதிபதி சைனி, குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் காரியத்தில் மும்முரமாகி உள்ளார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் டிராய், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது. ஆ.ராசா ஆதரவு வட்டாரத்தின் முகத்தில் இப்போதுதான் கொஞ்சம் சிரிப்பு மலர ஆரம்பித்துள்ளது!''


சி.பி - இந்தியாவுல எந்த வழக்காவது இதுவரை முறையா  நடந்து பெரிய அரசியல் தலைவர் மாட்டி இருக்காரா? என்னமோ நடந்துடுது திரை மறைவுல


''டிராய்... தடுமாறுவது ஏன்?''

சி.பி - அதான் ராசா கோர்ட்ல பிரைம் மினிஸ்டர், ப. சிதம்பரம் டிராயரை கழட்டிட்டாரே? அதான் டிராய் பம்புது...


''எல்லாம் ப்ளாக் மெயில் பாலிடிக்ஸ்தான் என்று சொல்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் ஆ.ராசாவும் கனிமொழியும் சிறப்பு நீதிமன்றத்தில் வைத்த நேரடியான தாக்குதல்தான் டிராயின் இந்த வழுக்கலுக்குக் காரணமாம். 'அவர்கள் இருவருக்கும் தெரியாமல் நான் எதையும் செய்யவில்லை’ என்று ராசா சொன்னார். அதையே கனிமொழியும் சொன்னார்.


சி.பி - நல்லவேளை அவங்களுக்கு பங்கு கொடுக்காமல் எந்த ஊழலும் பண்ணலைன்னு உண்மையை உடைக்கலை.. 

மன்​மோகன், சிதம்பரம் இப்போதைய தொலைத் தொடர்​புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரையும் சாட்சிகளாகச் சேர்க்க வேண்டும் என்று இவர்களது தரப்பு வழக்கறிஞர் சுஷில்குமார் சொல்லி மேலும் டென்ஷனை அதிகப்படுத்தினார். இதைத் தொடர்ந்துதான் காங்கிரஸ் மேலிடம் தனது சுருதியை மெள்ளக் குறைக்க ஆரம்பித்துள்ளதாம்...''

சி.பி - ஆல்ரெடி காங்கிரஸ்க்கு எல்லா மாநிலங்கள்லயும் சுதி இறங்கித்தான் இருக்கு. 


''ஆனால் சி.பி.ஐ.?''


''அரசாங்கம் தகவல்களை முறையாகக் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பும் தந்தால்தானே வழக்கை முறையாக நடத்த முடியும்? என்னதான் நேர்மையான அதிகாரிகள், வளைந்து கொடுக்காத அதிகாரிகள் இருந்தாலும் பெரிய இடத்துப் பொல்லாப்பை எவ்வளவு காலம்தான் சமாளிக்க முடியும்? இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம், லேசாக கலர் மங்க ஆரம்பித்து இருப்பதாகவே சொல்கிறார்கள்.


இந்த நேரத்தில்தான் பிரசாந்த் பூஷண் மனுவும் தாக்கல் ஆகி உள்ளது. 'தயாநிதி மாறனின் பங்குகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை சி.பி.ஐ. கண்டு கொள்ளவில்லை. எனவே அவரிடம் முறையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும்’ என்று சொல்கிறது பிரசாந்த் பூஷணின் மனு. டிராய் கொடுத்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 6-ம் தேதி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது உள் குழப்பம் ஆரம்பம் ஆகிவிட்டது. இது இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கான முஸ்தீபுகளாகத்தான் தெரிகிறது''


''உச்ச நீதிமன்றம் சும்மா இருக்காதே?''


''அவர்களது மேற்பார்வையில்தான் வழக்கே நடக்கிறது. எனவே அவர்களும் இதை உன்னிப்பாகத்தான் கவனிக்கிறார்கள். டிராய் அறிக்கை வெளியானதற்கு மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்வான் இயக்குநர் வினோத் மற்றும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் சிங்வீ, டாட்டூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் இதை விசாரித்தது. வினோத், சஞ்சய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டிராய் சொல்லி இருக்கிறது’ என்பதை ஜாமீன் வழங்குவதற்கான ஆதாரமாகக் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீலும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரீன் ரவால், 'டிராய் அறிக்கை, மத்திய அரசுத் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம்தான். அது ரகசியமானது’ என்றார். 'பத்திரிகையில் வெளியான பிறகு என்ன ரகசியம்? இந்த அறிக்கை பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்’ என்றார்கள் நீதிபதிகள். எனவே உச்ச நீதிமன்றம் சும்மா விடாது என்றே தெரிகிறது. ரகசியமான அறிக்கையை பத்திரிகைக்கு யார் லீக் பண்ணியிருக்க முடியும்.. என்பதும் தெரியாத ரகசியம் அல்ல!'' என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!



ரேஸில் முந்தும் ஜூனியர்


காலியாக இருக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவி வளம் கொழிக்கும் அட்சயப் பாத்திரம் என்பதால், கடும் ரேஸ் நடக்கிறது.  கடந்த தி.மு.க. ஆட்சியில் சீனியர்களை நியமிக்கும் சம்பிரதாயம் காற்றில் விடப்பட்டது. இப்போதும் ஏழாவது இடத்தில் உள்ள ஜூனியர் ஒருவர் ரேஸில் முந்திவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சகாயம் முன் ஆஜராவாரா அழகிரி?

திருமங்கலம், சிவரக்கோட்டையில் அழகிரிக்குச் சொந்தமான தயா இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.  இந்தக் கல்லூரி அந்தப்பகுதியின் நீராதாரமான கரிசல்குளம் கண்மாயையும், கமண்டல நதியையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாக விவசாயி ராமலிங்கம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக, கடந்த மாதம் 19-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தார்கள்.  ஆனாலும், 22-ந்தேதி கலெக்டர் சகாயம், மாவட்ட வருவாய் அதிகாரியோடு திடீரென மறுஆய்வு நடத்தியவர், கண்மாயின் 4-வது மடை இடித்து அடைக்கப்பட்டிருப்பதையும், நீராதாரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்தார்.


இதைத் தொடர்ந்து 8-ந்தேதி, அழகிரிக்கும், காந்தி அழகிரிக்கும்  நோட்டீஸ் அனுப்பினார். 'நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடுப்புச் சட்ட’த்தின் கீழ் அனுப்பப்பட்ட  நோட்டீஸில், வருகிற 16-ம் தேதி  காலை அழகிரியும், காந்தி அழகிரியும் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கலெக்டர் சகாயம் முன்னிலையில் அவர்கள் ஆஜராவார்களா?

 சி.பி - முதல்ல அழகிரியோட சம்சாரம் பேரை  மாத்தனும், காந்தியாம் காந்தி.

THANX - JU VI

Thursday, April 07, 2011

கேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜீரோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8b2VJCrdTlj6Ch-kjjAFn8KcWaEfX3-kE7cuE5MYispYxoisWTXfaX4PMalPqPNLUvBSbisuDZO8E5uosWydjdmJb6ty78GzAPi9pd51pFYRJ7D9WiFFmcCv83Uxq6-PrU8YhxU2n9-3z/s320/vijayakanth_god.jpg 

1. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: புதுக்கோட்டை மாவட்ட மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இருந்தும் இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை, ஐந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயிகளின் விளைநிலங்களை பாழாக்கி வரும் எரிசாராய தொழிற்சாலை மூடப்படும்.

என்னங்க இது? ஓப்பனிங்கலயே சொதப்பறீங்க?வந்ததுமே மூடு விழாவா?ஏதாவது பாஸிட்டிவ்வா சொல்லுங்க... நாங்க ஆட்சிக்கு வந்தா தீய சக்தி கருணாநிதியை உள்ளே உட்கார வைப்போம்னு.. அதானே உங்க வழக்கமான ஸ்டைலு..?


-----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்களில், 2,000 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓஹோ.. ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தான் அப்படின்னு சூசகமா சொல்றீங்களா?அதெல்லாம் முடியாது.. விலைவாசி எல்லாம் ஏறிக்கிடக்கு.. அட்லீஸ்ட் ரூ 10,000 ஆவது வேணும்..,அதனால 10000 சுவரொட்டிகள் ஒட்ட சொல்லுங்க.. 


-------------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/anjali.jpg
3. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: இன்றைய சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதிய நீதிக்கட்சி இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த கட்சி அறிவிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஏ சி சண்முகமா? ஓ சி சண்முகமா?ஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..?ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1rqaJe6TSlJdhg-Mma3-BEiU_Xa3zky8wgwz-wgg3vCilePeHrCs8T5AxA4z_ns9Ax0QUmCU31mJTgmFjq1npme0Aemf2oJmBr1PwLCCa16h_dSSeE_7AezX1qtclHWRTIJifoxxRk0/s400/DN_13-11-08_E1_01-04%2520CNI.jpg
4. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
என் நண்பர் விஜயகாந்த், போயஸ் கார்டனுக்கு செல்லும் போது, கேப்டனாக இருந்தார். வெளியே வரும் போது, சிப்பாயாக வந்தார். தேர்தல் முடிவுக்கு பின், சிப்பந்தியாக மாறி விடுவார். இந்த தேர்தலில், வைகோ நல்ல முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த முடிவு தான் விஜயகாந்துக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்கும்.


ஏய்யா என்ன ஒரு ஏத்தம்.. வை கோ எடுத்தது நல்ல முடிவா? அவருக்கு வேற வழி இல்லை.. அதனால அப்படி விட்டேத்தியா பதில் சொன்னாரு.. நீங்க வேணா பாருங்க.. கேப்டன் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கும் காலம் வரும்..அதே போல் கேப்டன் சி எம் ஆகாம விட மாட்டார்.. ஏன்னா தமிழனோட தலை எழுத்தே சினிமாக்காரங்க பின்னால போய் வலியனா மகுடத்தை எடுத்து தர்றதுதான்....

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வாக்காளர்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு, விற்பனைக்கு அல்ல. தமிழகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது தி.மு.க., அரசு. இந்த அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது

 ஏய்யா.. என்ன அநியாயம்..? இந்த அரசியல்வாதிகள் மட்டும் மனசாட்சியை
அடகு வைப்பாங்களாம்.. ஊழல் பண்ணுவாங்களாம்.. நாங்க மட்டும் பணம் வாங்காம ஓட்டு போடனுமாம்.. எங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சீங்களா?

--------------------------------

6. பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: காங்கிரசின் ஊழல் ஆட்சியால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஊழலில் காங்கிரஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

ஓஹோ .. இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ? பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா? ஊழல் பண்ண..?

--------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdUih_nGQbVWx8Bt1gB26l5rZfztIcHM34JWesn2mNRR87xtEr52zw6TGxMpy9TOpYY6FU-I9F4DzocjcDU6DBsby-UoPh8rtBB7x20yhuFx-TCPGkEaNt6JDO7B0s95vEGPY-d3t5TrY/s1600/thuglak_cartoon1.jpg
7. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு:தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தான்.

பொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..

-----------------------------------------------
  http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/Tamil-Actress-Anjali-Stills.jpg
8. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: பா.ம.க., ராமதாஸ் ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு, "ஜீரோ' மார்க் போட்டார். இப்போது, அக்கட்சி தான், "ஹீரோ' என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு என்ன செய்வர்?

நீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையா?நீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க?

----------------------------------
9. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பேட்டி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கடந்த 25ம் தேதி வரை, 45 ஆயிரத்து 984 புகார்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல் கமிஷன், 49 ஆயிரம் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களை மட்டுமல்லாமல், தேர்தல் கமிஷனே முன் வந்து பல புகார்களை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


வந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.?பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....

Wednesday, April 06, 2011

ஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூறு வழக்கு வருமா? அதிமுக பர பரப்பு...

டந்த சனிக்கிழமை சென்னையில் மையம்கொண்டது ஸ்டாலின் புயல்!
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/a-fathima-300x225.jpg
தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், பெருங்குடி, ஒக்கியம், துரைப்​பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், காட்டாங்கொளத்தூர், தாம்பரம், பல்லாவரம் என்று புற நகர்ப் பகுதிகளில் புகுந்து புறப்பட்டார்! 

ஏன்? நகரப்பக்கங்கள் எல்லாம் நரகம் பக்கம் என்பதாலா?
ஐ.டி. பார்க் நிறைந்த ராஜீவ் காந்தி சாலையில் இரண்டு கிலோ மீட்​டருக்கு ஒரு ஷாமியானா பந்தல் போட்டு,  ஸ்டாலினின் வருகையை எதிர்​பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர் உடன்பிறப்புகள். நேரம் ஆக ஆக... மகளிர் சுய உதவிக் குழுவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரு புறமும் நெட்டிக்கொண்டு திரள... கடும் டிராஃபிக் ஜாம்!

ஏன்.. குஷ்பூ வர்றாங்கன்னு நினைச்சுட்டாங்களா?

இதனால் பெருங்குடியை நோக்கி வந்த ஸ்டாலினின் காரும் அதில் சிக்கிக்கொள்ள... ''தளபதி கார் டிராஃபிக்ல மாட்டிக்கிச்சு. ரோட்டுல போற வண்டிகளுக்கு வழிவிட்டு நில்லுங்க. நமக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்!'' என்று ஓர் உடன்பிறப்பு மைக்கில் கெஞ்ச... அதை ஏற்றுக்கொண்டு ஒருவாறாகக் கூட்டம் கட்டுக்குள் வந்தது.

மடமை, வன்னியம், சில்லறைத்தட்டுப்பாடு..... 

இதற்கிடையே, எம்.ஜி.ஆர். வேஷம் போட்ட ஒருவர், பிரசார வாகனத்தில் கம்பீரமாக எழுந்து நின்றபடி மெயின் ரோட்டுக்குள் நுழைந்துவிட்டார். வேறு எங்கோ பிரசாரம் போகக் கிளம்பிய அவர், இங்கே ஸ்டாலின் வருவது தெரியாமல் வந்து மாட்ட... அவரது வாகனம் திரும்பிய இடம் எல்லாம் தி.மு.க தொண்டர்கள் மொய்க்க... ஒரு கணம் ஆடிப்போனவர், உடனே தலைக்கு மேல் கைகளைக் கூப்பியபடி, கூட்டத்தின் இரு புறமும் பார்த்துக் கும்பிடு போட... வழிவிட்டனர் உடன்பிறப்புகள். ரத்தத்தின் ரத்தம் எஸ்கேப் ஆனது!



அடுத்த சில நிமிடங்களில் ஸ்டாலின் வந்து சேர, தாரை தப்பட்டைகள்... இடைவிடாத வாண வேடிக்கைகள்... என ஏரியா அமளிதுமளி ஆனது. வரவேற்பைப் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், தனது பேச்சை ஆரம்பித்தார். அதிகம் வறுபட்டது, விஜயகாந்த். அதன் பிறகுதான் ஜெயலலிதாவுக்குக் கச்சேரி.

அது ஏன்னா ஒரு முறை வெச்சுக்கறாங்க. கலைஞர் அம்மாவை எதிர்ப்பார்.. ஸ்டாலின் கேப்டனை எதிர்ப்பார்.. 

.
''கேப்டன்னு சொல்லிக்கிட்டு வில்லன் ஒருத்தர் வாக்குக் கேட்டு வருவார். அவரை நம்பாதீங்க. சினிமாவுலகூட வில்லன் என்பவர், அடிக்கிற மாதிரி சும்மாதான் ஆக்ஷன் பண்ணுவார். ஆனா இந்த வில்லன், தன் கூட இருக்குற ஆளுங்களை உண்மையாவே அடிக்கிறார். இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா? இனிமே அந்த வில்லன்கூட போற வேட்பாளர்கள் எல்லாரும் மறக்காம ஹெல்மெட் மாட்டிக்கிட்டுப் போங்க. அப்பத்தான் தலையில அடிபடாமத் தப்பிக்க முடியும்!'' என்று ஸ்டாலின் பேச... கூட்டத்தில் விசில் பட்டையைக் கிளப்பியது.

ஆமா கவசம் இல்லாட்டி திவசம் தான்/.... 


தொடர்ந்து, தி.மு.க-வின் சாதனை​களைப் பட்டியலிட்ட ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் முழுமையாகப் பேசினார். ''தலைவர் கலைஞர் 58 வயதைக் கடந்த முதியவர் களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாகக் கூறியுள்ளார். இனி முதியவர்கள் ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்குத் தங்கள் பேரன் - பேத்திகளையோ, கட்டிக்கொடுத்த மகளையோ பார்க்கப் போக வேண்டும் என்றால், பணம் செலவழிக்காமல் இலவசமாகவே போகலாம். நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் கஷ்டம் எங்களுக்குத் தெரியும்!'' என்று ஃபேமிலி டச் கொடுத்து அப்ளாஸ் அள்ளினார்!


நான் உங்கள் வீட்டுப்பிள்ளை.. இது நாடறிந்த உண்மை.. நான் செல்லுகின்ற பாதை.. ஆ ராசா காட்டும் பாதை... 

அடுத்து சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே பேச்சு...  ஜெயலலிதாவை வெளுத்து வாங்கினார் ஸ்டாலின்.

''இந்த இடத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த திரளான பெண்கள் கூடி இருக்கிறீர்கள். 1989-ல் தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது கொண்டுவந்த அருமையான திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம். 

இந்த எலக்‌ஷன்ல மகளிர் சுய உதவிக்குழு மூலமாத்தான் பணம் பாஸ் ஆகுதாமே..?


அப்போது திருமணமாகும் பெண்களுக்கு 5,000 வழங்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்திருக்க வேண்டும்? 10,000 கொடுத்திருக்க வேண்டாமா?

 அதெப்பிடிங்க முடியும்? உங்களை விட ரெண்டு மடங்கு ஊழல் பண்ணனுமே அதுக்கு..? ஆனா உங்க அளவு அம்மாவால ஊழல் பண்ண முடியலையாம்..


ஆனால், அந்த புண்ணியவதி ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா? 'எனக்கே கல்யாணம் ஆகலை. இதுல உங்களுக்குக் கல்யாணம் ஆனா எனக்கென்ன, ஆகலைன்னா எனக்கென்ன?’ என்று நினைத்து அந்த திட்டத்தையே நிறுத்திவிட்டார். இதுதான் அவரது ஆட்சியின் லட்சணம்'' என்று வெளுத்துக் கட்டினார்!

 ஆஹா.. நாகரீகமாகப்பேச வேண்டும்னு அப்பா சொன்னார்.. மகன் அதை நிறைவேற்றினார்.. நல்ல குடும்பம்.. 

Tuesday, April 05, 2011

ஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - காமெடி கும்மி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும், காங்கிரஸ் கட்சியின் சிவராஜும்
http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg
மோதும் ரிஷிவந்தியம் தொகுதியில் கிராமங்கள் அதிகம். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் அப்பா இந்தத் தொகுதியில் உள்ள மூங்கில்துரைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலையில்  முன்பு பணிபுரிந்தவர். அந்தக் காலகட்டத்தில்தான், விஜயகாந்த் - பிரேமலதா திருமணம் நடந்தது. அதனால், 'எங்க ஊர் மாப்பிள்ளை விஜய​காந்த்' என்கிறார்கள் தொகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க-வினர்.  
 
மாப்பிள்ளையா? ”மப்”பிள்ளையா? 
 
 
கடந்த எம்.பி. தேர்தலில், விஜயகாந்த்தின் மைத்துனரும் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான சுதீஷ் இந்தப் பகுதியில்தான் நின்றார். ரிஷிவந்தியத்தில் 24 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார். கடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் விஜயகாந்த் இந்தத் தொகுதியை அ.தி.மு.க. கூட்டணியில் கேட்டு வாங்கினார்.

கேட்டு வாங்கினாரா? கெஞ்சி வாங்கினாரா?


''காங்கிரஸ் கட்சியின் சிவராஜ், நாலு தடவை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தும், பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. எந்தத் தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. அரசுக் கல்லூரியோ, தனியார் கல்லூரியோ குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.


அப்படி இருந்தும் 4 தடவை அந்தாளை எம் எல் ஏ ஆக்கி இருக்காங்கன்னா அந்த தொகுதி மக்களோட அறியாமையை என்ன சொல்றது?

30 வருடங்களாக இந்தப் பகுதியில் சிவராஜின் குடும்ப ஆதிக்கம்தான் நடக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் கேப்டன் இங்கே நேரடியாகக் களத்தில் இறங்கி இருக்கிறார்...'' என்றார், தே.மு.தி.க. தலை​வரான விஜயகாந்த்தின் சகலையும் பிரபல தொழிலதிபருமான ராமச்சந்திரன். 

ஓஹோ.. இனி கேப்டனோட குடும்ப ஆதிக்கம் தான் இருக்கனுமா?

இவர்​தான் இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்.
விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் செய்த நலத் திட்டங்களைப் பட்டியல் இட்ட இவர், ''அடிக்கடி விருத்தாசலம் தொகுதிக்கு விசிட் சென்றுள்ளார் கேப்டன். 

ஆனால், ஆளும் கட்சி எந்த நலத் திட்டங்களையும் செய்து கொடுக்கவில்லை. கேப்டன் சொன்ன மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய முயன்ற இரண்டு கலெக்டர்​களையும் உடனே மாற்றிவிட்டனர். அடுத்து வந்த கலெக்டர், எதையுமே செய்யவில்லை.

இவை அனைத்தும் விருத்தாசலம் வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க-தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும். அவர்களுடன் கூட்டணியில் இருப்பதால், இந்தத் தொகுதியில் 30 வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளை எல்லாம் கேப்டன் தீர்த்துவைப்பார்!'' என்றார் நம்பிக்கையாக.

எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது.. 


பதிலுக்கு சிவராஜ் தரப்பிலோ, ''கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை எல்.எல்.ஏ. ஆக்கிய விருத்தாசலம் தொகுதிப் பக்கமே அவர் எட்டிப்பார்க்கவில்லை. சட்டசபையிலும் தொகுதிக்காகக் குரல் கொடுக்கவில்லை. அங்கு மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான், இங்கே ஓடி வந்து இருக்கிறார்.

அய்யய்யோ.. அவர் நடந்தாலே மூச்சிரைக்கும்.. இந்த லட்சணத்துல ஓடி வந்தாரா?

விஜயகாந்த் பற்றி விருத்தாசலம் மக்களிடம் பேசி எடுக்கப்பட்ட வீடியோ - ஆடியோ சி.டி-களை க்ளைமாக்ஸ் நேரங்களில் கிராமம்தோறும் போட்டுக் காட்டுவோம். சிவராஜ்... இந்த மண்ணின் மைந்தர். விஜயகாந்த், சென்னைக்குப் போய்விடுவார். அவரை நம்பி ஓட்டு போட மாட்டார்கள் மக்கள்!'' என்றனர் தெம்பாக.

இதுக்கு பேசாம நீங்க எங்கள் ஆசான், நரசிம்மா,விருதகிரி மாதிரி டப்பா படங்களை போட்டு காட்டுங்க.. வேலை சுலபத்துல முடியும்.. 


காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் தி.மு.க. எம்.பி-யான ஆதிசங்கருக்கும் ஏழாம்பொருத்தம். வேட்பாளராக சிவராஜை அறிவித்துப் பல நாட்கள் ஆகியும், ஆதிசங்கர் ஒதுங்கியே இருந்தார். தி.மு.க. மேலிடப் பிரமுகர்கள் பேசிய பிறகுதான் சில நாட்களாக சிவராஜுடன் கைகோத்து, பிரசாரத்தில் இணைந்து உள்ளார்.

இது எல்லா தொகுதிலயும் நடக்கறதுதானே.. காங்கிரஸ் போட்டி இடும் 63 தொகுதிகள்லயும் தி மு க ஆளுங்க பெரிசா வேலை செய்ய வேண்டாம்னு கலைஞர் வாய் மொழி உத்தரவு போட்டிருக்காரே.. 


சிவராஜிடம் பேசியபோது, ''எனக்குத்தான் வெற்றி​வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தொகுதி மக்களுக்கு அறிமுகமான பாரம்பரியக் குடும்பத்துக்காரன். சோனியாவின் தலைமை, ராகுலின் எதிர்கால அரசியல் கனவு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆலோசனை, தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லும்போது, மக்கள் வரவேற்பு மிகுதியாக உள்ளது. வெற்றி உறுதி!'' என்றார்.

சீமான் இருப்பதை மறந்துட்டீங்க... காங்கிரஸ் கட்சியை கருவறுக்க பலர் கருவிட்டு இருக்காங்க... எதுக்கும் கம்மியாவே செலவு பண்ணிக்குங்க.. விழலுக்கு இறைத்த நீராய் ஆகிடக்கூடாதே.. ?


கடைசிக் கட்டமாக, இரண்டு நாட்கள் ரிஷிவந்தியத்திலேயே தங்கிப் பிரசாரம் செய்வாராம் விஜயகாந்த். இப்போதைக்கு கடுமையான போட்டி இருந்தாலும், விஜயகாந்த்தின் பிரசாரத்தை வைத்துத்தான் வாக்கு யாருக்கு என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்!

அய்யய்யோ... அங்கே யாரை அடிப்பாரு? வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ? #டவுட்டு



சிவராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிவராஜ் மீது குபீர் குற்றச்சாட்டு கிளப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண். ''சில வருடங்கள் முன்பு எங்கள் சொத்துப் பிரச்னை தொடர்பாக எம்.எல்.ஏ. சிவராஜை சந்தித்தேன். அதைத் தீர்க்காமல், என்னைக் கடத்திச் சென்று, பலாத்காரப்படுத்திவிட்டார்.

ஓஹோ.. அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியா?என்ன பேச்சு இது ? ராஸ்கல்.. 

நானும் எனது கணவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. பணம் கேட்டு மிரட்டுவதாக, என் மீதே பொய்ப் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளினார்.

போலீஸ் ஸ்டேஷன்லயா புகார் குடுத்தீங்க.. நல்ல வேளை... அவங்க எதுவும் பண்ணாம விட்டதே அதிசயம் தான்


கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வைத்து சிவராஜும், ஆதிசங்கர் எம்.பி-யும் எங்களை அழைத்து, சமாதானம் பேசினார்கள். ஆனால், சொன்னபடி எதுவும் செய்யவில்லை.

ஓஹோ.. என்ன சொன்னாரு? ரூ 2 கோடி செட்டில்மெண்ட் பேசி தராம விட்டுட்டரா?

இப்படிப்பட்ட மோசமானவரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் கடந்த 26-ம் தேதி சுயேச்சையாக ரிஷிவந்தியத்தில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றேன். ஆனால், சிவராஜின் அடியாட்கள் சிலர், என்னைக் கத்தியால் குத்த வந்தார்கள். தடுத்த என் கணவருக்கு வயிற்றில் காயம். இதையும் மீறி மனுவைத் தாக்கல் செய்தும், அது தள்ளுபடியான மர்மம் புரியவில்லை!'' என்றார் கண்ணீர் மல்க.

இதுல என்ன மர்மம் வேண்டி கிடக்கு?ஆளுங்கட்சியை எதிர்த்தா இந்த கதிதான்.. நீங்க சினிமாப்படம் எதுவும் பார்ப்பது இல்லையா?


இது குறித்து சிவராஜிடம் கேட்டபோது, ''அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நடக்காத ஒன்றைச் சொல்லி, தேர்தல் நேரத்தில் எனக்கு எதிராகக் கிளம்பியுள்ளார். 

 நடக்கலைன்னு அண்ணன் ரொம்ப வருத்தப்படறார் போல.. 


இந்தப் பொய்ப் புகாரை தொகுதிவாசிகள் நம்ப மாட்டார்கள். அவர் கணவரை ஆள்வைத்துக் குத்தியதாகச் சொல்வதும் சுத்தப் பொய். தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்னையைக் கிளப்பிப் பணம் பிடுங்க நினைக்கிறார்கள்!'' என்று குமுறுகிறார்!


தொகுதிவாசிகள் எதையும் நம்ப மாட்டாங்க.. யார் அதிகம் பணம் தர்றாங்களோ  அவங்களுக்கே வாக்கு .. வாழ்க பணநாயகம்.. அடச்சே.. ஜன நாயகம்,, 


Friday, March 11, 2011

ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம்.. ஒரு தரம்.....

http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg 
1. பா.ம.க., தலைவர் மணி: காங்கிரசுக்காக, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒன்று இரண்டை குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற பேச்சே எழவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 31 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்.

அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...

----------------------------------------------
2. தமிழக முதல்வர் கருணாநிதி: காங்கிரஸ், 60 இடங்கள் போதாதென்று, 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

போங்க தலைவரே... உடனே ராஜினாமா பண்ணி கொள்கை வீரர்கள்னு புரூஃப் பண்ணாம இப்படி பெரியம்மா கால்ல விழுந்ததுக்கு போயஸ் அம்மா கிட்டே தோத்தே இருக்கலாம்.

-----------------------------------------------

3. பத்திரிகைச் செய்தி: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியின் வீட்டில், அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் மும்பையிலுள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு ஹசன் அலியை அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

இப்படியே விசாரனை பண்ணீட்டே இருங்க.. ஆனா தண்டனை மட்டும் குடுத்துடாதீங்க... எனக்கென்னவோ பேரம் தான் நடக்குதுன்னு நினைக்கறேன்.

---------------------------------------------
 http://deco-00.slide.com/r/1/3/dl/pKkYxdFD4z81a9OrA6EbCElNZXftEwuJ/watermark
4. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி:இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் உட்காரப் போவதில்லை; அதனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆசை தி.மு.க.,விற்குத்தான் உள்ளது. கூட்டணிக்கு காங்கிரஸ் நிபந்தனை விதித்து மிரட்டல் விடுத்தது என சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..

------------------------------------------



5. பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என, ஆறு மாதங்களுக்கு முன்பே வலியுறுத்தினேன். தற்போது, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என, பல கட்சியினரும் நினைக்கின்றனர். இது சரியல்ல; நாட்டு நலனுக்கும் நல்லது அல்ல.

நாட்டு நலனுக்கு நல்லதில்லைன்னு பார்த்தா திராவிடக்கட்சிகள் தலை முழுகப்படனும், கவர்னர் ஆட்சி வரனும்.. அதெல்லாம் முடியுமா? நடக்கறதை பேசுங்க..

------------------------------------


6. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபட்டு பெண்கள் சொந்த காலில் நின்றால், சமுதாயத்தை பிடித்துள்ள வரதட்சணை நோய், பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளில் இருந்து மகளிருக்கு விடிவு பிறக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு கட்டாய கல்வியும், கட்டாய வேலை வாய்ப்பும் கிடைக்க அனைவரும் சபதம் ஏற்று செயல்பட வேண்டும்.

இது மகளிர் தின அறிக்கை மாதிரி தெரியலயே.. அய்யா கூட இருந்துக்கிட்டே அம்மா கூட கூட்டணி போட அச்சாரம் மாதிரி தெரியுது..?

------------------------------------------------------
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
7.அ.தி.மு.க., மகளிரணி செயலர் கோகுல இந்திரா பேச்சு: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்க வருவர். அப்போது அவர்களிடம், "இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரும். அதனால், 99 ஆயிரம் ரூபாய் எங்கள் பணம்; அதை கொடுக்க வேண்டும்' என, கேட்க வேண்டும். வரும் தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும்.

அம்மா வந்ததும்  அதை அபேஸ் பண்ணி கொட நாட்ல புதைச்சு வெச்சுக்குவார்...நாங்க வேடிக்கை பார்க்கனும்..?

------------------------------------------------

8. பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் பேட்டி: பல முனை மாற்று வரியில் இருந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படாது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, 100 டாலருக்கு மேல் இருந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பெட்ரோலிய பொருட்களின்விலை உயர்வு தவிர்க்க முடியாதது. உணவுப் பொருட்களின் விலை இம்மாதத்தில் குறையும்.

எங்களுக்குக்கூட காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவது கவலை அளிப்பதாகத்தான் உள்ளது..
---------------------------------------------------------

9. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருவரும் நண்பர்கள் போல் இருக்க வேண்டும். ஆண் - பெண் உறவு, நட்பின் அடிப்படையில் அமையும் போது, வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். அரசியலிலும், பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமூக ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும்.

எப்படியோ  அம்மாவுக்கு அடிமை ஆகீட்டீங்க..25 சீட் தக்கி முக்கி ஜெயிச்சுட்டா அம்மா மதிப்பாங்க.. இல்லைன்னா போட்டு மிதிப்பாங்க...

--------------------------------------

டிஸ்கி -1 : நடிகை ஃபோட்டோ இல்லாததால் எங்கே சி பி திருந்தீட்டானோ என யாரும் அதிர்ச்சி அடைய வேணாம்.கோதுமை அல்வாவை டெயிலி சாப்பிட்டுட்டே இருந்தா திகட்டும்.. நாம என்ன பண்ணுவோம்.. கொஞ்சம் காரக்கடலை சாப்பிட்டு நாக்குக்கு காரத்தன்மை கொடுத்து அப்புறம் மறு படி ஸ்வீட் சாப்பிடுவோம்.. அது மாதிரி தான்..

டிஸ்கி 2  - சி பி நடிகைகளை கோதுமை அல்வா என கூறிவிட்டான் என போராட்டம் நடத்த நினைப்பவர்களுக்கு,  ... எதுக்கு சிரமப்படறீங்க..இனிமே நான் ஏதாவது தப்பு பண்ணுனா அப்பவே மன்னிப்பு கேட்டுடறதா முடிவு பண்ணிட்டேன்.. யாருக்கும் சிரமம் வைக்ககூடாது.. சோ எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. ஹி ஹி(  நாகேஷ் என்னை மன்னிச்சிடுங்க ஹி ஹி )