Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, November 17, 2012

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததா ஐ நா?

ஈழத் தமிழர்கள் கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.?

கேள்வி எழுப்பும் உள் பரிசீலனைக் குழு!
'இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறி விட்டது. மிக அபாயகரமான போர் சூழலில் வெகுதிறமையான முடிவை எடுத்திருக்க வேண்டும். மக்களைக் காப் பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் போனது இந்த அமைப்பின் செயல்பாடு மற்றும் அணுகுமுறைக்கான மிகப்பெரும் தோல்வி’ - ஐ.நா. மீது இப்படி பகீர் குற்றச் சாட்டை வைத்துள்ளது, அந்த அமைப்​பின் உள்பரிசீலனைக் குழு.




ஈழப்போர் சமயத்தில் ஐ.நா. எடுத்த நிலைப்பாடுகள் குறித்து ஐ.நா. அமைப்பின் உள்பரிசீலனைக் குழு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அந்தக் குழு தயாரித்த முக்கிய அறிக்கையின் (இறுதி வடிவத்துக்கு முந்தைய நிலை அறிக்கை) நகல் ஒன்று பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு லீக் ஆனது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மீண்டும் இலங்கைப் புயல் வீசுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் பி.பி.சி-யின் செய்தி​யாளர் ஒருவர், ''26 ஆண்டுகள் நடத்தப்பட்ட போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.



 இறுதிக் கட்டப் போரின் கடைசி நான்கைந்து மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா-வின் முந்தைய அறிக்கை சொன்னது. ஐ.நா-வின் உறுப்பினர்கள் யுத்தக்களத்தில் தொடர்ந்து இருந்திருந்தால், இலங்கை அரசின் வீரியம் குறைந்து இருக்கும் என்பதே இப்போது வெளியாகி இருக்கும் அறிக்கையின் அடிப்படை சாராம்சம். ஐ.நா-வின் யுத்தக்கால செயல்பாடுகள் குறித்து அந்தக்குழு கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.



 குறிப்பாக, 2008 செப்டம்பரில் ஐ.நா. தனது ஊழியர்களை யுத்தக்களத்தில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்ட முடிவு குறித்து அழுத்தமாக கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். 'உங்களுடைய பாதுகாப்பை இனிமேலும் நாங்கள் உறுதிப்படுத்த முடியாது’ என்று, இலங்கை அரசு எச்சரித்ததும், இந்த திரும்பப்பெறுதல் நடந்ததை கேள்வியாக்கி இருக்கிறார்கள்.



இப்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்து இருக்கும் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை, 'ஐ.நா. குழுவினர் யுத்தக் களத்தைவிட்டு கிளம்பியபோது, போக வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் அழுதும் கெஞ்சியும் பார்த்தோம். ஆனால், அவர்கள் எங்களது கோரிக்கைகளுக்கு காதுகொடுக்கவே இல்லை. அவர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந் திருந்தால், இன்றைக்கு அப்பாவித் தமிழர்கள் பலரும் உயிரோடு இருந்திருப்பார்கள்’ என்று எங்கள் செய்தி​யாளரிடம் குமுறினார்.



'இலங்கை அரசு தொடர்ந்து பிரஷர் கொடுத்ததன் விளைவாக, மிகஅதிகமான மக்கள் ஷெல் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தை ஐ.நா. அழுத்தமாக எழுப்பவில்லையோ...’ என்ற விமர்சனத்தையும் அந்தக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது. அமைதிக் காப்பாளர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந்திருக்க வேண்டும், அங்கே என்னென்ன நடக்கிறது என்பதையும் உலகுக்கு உடனுக்குடன் உணர்த்தி இருக்க வேண்டும் என்பதையும் அறிக்கை அழுத்திச் சொல்கிறது.


தமிழர்களுக்கு எதிரான யுத்தக் காலத்தின் இறுதி மாதங்களில், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஒன்றுகூட நடத்தப்படவில்லை. ஐ.நா-வின் உயர்மட்டக் குழுவும் ஃபார்மாலிட்டி ஆலோசனை கூட செய்யவில்லை என்கிறார்கள். எங்களுடைய முன்னாள் ஸ்ரீலங்கா செய்தியாளர் ஒருவர், 'மிகக் குரூரமாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தது’ என்று கடுமையாகக் குறிப்பிட்டதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டி இருக்கிறது.



அதேநேரம், இலங்கை அரசின் ராணுவம், பயங்கரவாதிகள் கூட்டம் போன்று மக்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்பட்டதைச் சுட்டிக்காட்டி, உலகப் போர்நடைமுறை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அந்த நேரத்தில் முயற்சி மேற்கொண்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால், அந்த முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லை'' என்கிறார் அவர்.



ஐ.நா-வின் முன்னாள் உயர் அதிகாரியும் அறிக்கை அளித்திருக்கும் ஆய்வுக்குழுவின் தலைவருமான சார்லஸ் பெட்ரே, 'குழு கண்டறிந்த விஷயங்களை இந்த அறிக்கை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது’ என்று அதிர்ச்சிகளுக்கு வலுசேர்த்து இருக்கிறார். அறிக்கையின் உள்ளடக்கங்கள் வெளியான பிறகு பல தளங்களில் இருந்தும் விமர்சனங்களும் கண்டனங்​களும் கருத்துகளும் குவிந்த வண்ணம் இருக்​கின்றன. 'பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து ஐ.நா. தவறி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.



ஐ.நா-வின் கரங்கள் கட்டப்பட்டு இருப்பது புலன் ஆகிறது. சென்சிட்டிவான சமயங்களில் ஐ.நா. அமைப்புக்கு அரசியல் மற்றும் அதிகார ரீதியில் ஆலோசனைகளையும் அறிவுரை களையும் வழங்குவதற்கு ஆட்களே இல்லை’ என்று உலக நாடுகள் பலவற்றில் இருந் தும் கண்டன விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.



இந்த விவகாரத்தில் ஐ.நா-வின் பதில் என்ன? ''அறிக்கை நகல் வெளியானது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இறுதி அறிக்கை பொதுச்செயலாளரின் கரங்களுக்கு வந்து, அவர் அதை வாசித்த பிறகு வெளியிடப்படும்'' என்கிறார் ஐ.நா-வின் செய்தித்தொடர்பாளர் மார்டின் நெசிர்கி.



இறுதி அறிக்கை வெளியாகும்போது, ஐ.நா-வின் இந்த பலவீனப் பக்கங்கள் எடிட் செய்யப்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ஆபத்தில் அலறும் மக்களைக் காப்பாற்ற முடியாத ஓர் அமைப்பு இருந்து என்னதான் பயன்?



- எஸ்.ஷக்தி



இலங்கைக்கு எதிராக 93 நாடுகள்!

நம்பிக்கை தரும் உலகத் தமிழர் மாநாடு
லங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கட்டுப்பாடுகளையும் சதிகளையும் மீறி, ஈழ விடுதலைப் போராட்​டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.


ஈழ விவகாரத்தில் எதிரும் புதிருமாக இருக்​கும் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, லண்டனில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் முக்கிய சில தீர்மானங்களை நிறை​வேற்றி இருக்கிறது, பிரித்தானிய தமிழர் பேரவை. இங்கிலாந்து பாராளு​மன்றக் கட்டட‌த்தில் நிகழ்ந்த‌ இந்த மாநாட்டில், இங்கிலாந்தின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதும், உலகெங்கும் வாழும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதும் சிறப்பு அம்சம். காலங்காலமாக ஈழத்துக்காகக் குரல் கொடுத்துவரும் வைகோவும், பழ.நெடுமாறனும் இந்த மாநாட்டை புறக்கணித்திருக்கும் நிலையில், தி.மு.க-வின் சார்பாக‌ ஸ்டாலின் முக்கியப் பங்கெடுத்து உள்ளார்.



மாநாட்டை நடத்திய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம்.


''2009-ம் ஆண்டு ஈழப் போரில் வகைதொகை இல்லாமல் கொடூரமாக‌க் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களை நினைத்துத் தினம் தினம் அழுகிறோம். நாம் தனித்தனியாகப் போராடி களைத்து விட்டோம். சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு நமது குரல் கேட்கவே இல்லை. அதனால்தான் ஒற்றுமையாக, ஒரே குரலில் 30 லட்சம் தமிழர்களின் பிரச்னையை இங்கிலாந்தின் 78 பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்தோம்.


கட்சிக் கருத்தியல் பாகுபாடுகளை மறந்து உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் அனைத்துப் பிரதிநிதிகளையும் மேடை ஏற்றினோம். இதுவரை தமிழகத்திலும் தாயகத்திலும் அரங்கேறாத அதிசயம் லண்டனில் நடந்திருக்கிறது. கட்சிப் பாகுபாடு​களைக் களைந்து ஒரே குரலாக ஒலித்தால் மட்டுமே நம்முடைய சோகம், சர்வதேச சமூகத்தின் காது​களுக்குப் போய்ச் சேரும் என்பதை உணர்த்தவே இந்த மாநாடு.''


''உச்சக்கட்ட போரைக் கண்டுகொள்ளாத கட்சிகளையும், தீவிர ஆதரவுக் கட்சிகளையும் ஒரே மேடையில் நிற்க வைத்திருக்கிறீர்கள். ஏடா​கூடம் ஆகவில்லையா?''



''தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் மாநாட்டுக்கு அழைக்க வேண்டும் என முடிவெடுத்தபோதே, எங்களுக்குள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துக்​கள் வெளிப்பட்டன. ஆனால் தமிழர்களின் குரல் சர்வதேச அளவுக்குக் கேட்க வேண்டும் என்றால், முதலில் நமக்குள் ஒற்றுமை வேண்டும். அதற்காகத்தான் கட்சி பேதங்களைக் கடந்து அனைவரையும் அழைத்தோம்.


ஆனால், எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அனைவரும் தார்மீகப் பொறுப்புடனும், மிகுந்த அக்கறையுடனும் நடந்து கொண்டனர். தமிழக எல்லைகளைக் கடந்து இந்தியா முழுக்க ஈழப் பிரச்னையைக் கொண்டு போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்போது எங்களுக்குப் புதிய நம்பிக்கை பூத்திருக்கிறது.


அன்று ஈழப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாதவர்கள், இன்று எங்களுடன் நின்று எம்மக்களுக்காவும் மண்ணுக்காகவும் ஆதரவு தருகிறார்கள் என்றால் நல்ல மனமாற்றம்தானே... யாரையும் உதாசீனப்​படுத்தவோ, வெறுக்கவோ செய்யாமல் அனைவரையும் அரவணைத்துப் போகவே விரும்புகிறோம்!''




''மு.க.ஸ்டாலினை, ஈழ மக்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பியதாகச் சொல்​கிறார்களே?''



'’நாங்கள் அறிந்தவரை அப்படி எதுவும் நடக்க​வில்லை. மாநாட்டுக்கு வந்திருந்த நிறைய ஜனங்களும், அமைப்புகளும் அவர்களோடு பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்!''



''வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் உங்களுடைய மாநாட்டை புறக்கணித்து இருக்​கிறார்களே?''


''வைகோ அண்ணாவையும், நெடுமாறன் அய்யாவையும் வரவழைக்க பல்வேறு வடிவங்களில் நாங்கள் தொடர்புகொண்டோம். வைகோவுக்கு டெல்லியில் முக்கிய வழக்குகள் இருந்தமையாலும், நெடுமாறன் சார்பாக வர இருந்தவருக்கு கடைசி நேரத்தில் கடவுச் சீட்டில் சிக்கல் இருந்தமையால் வர இயலவில்லை என்று அறிகிறோம்.!''



''உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''


''2012 மார்ச் மாதம் ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த‌ தீர்மானம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தானாக அமைத்துக்கொண்ட 'எல்.எல்.ஆர்.சி’ அமைப்பு இதுவரை எவ்வித ஆக்கப்​பூர்வமான செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 2008 உச்சக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறலைத் தடுப்பதிலும் கண்காணிப்பதிலும் ஐ.நா. மன்றமே தோற்றுப்போய் இருப்பதாக, அதன் உள்அறிக்கை கசிந்திருக்கிறது.



இலங்கையில் மனித உரிமை மீறல், வெள்ளை வேன் கடத்தல் போன்ற பிரச்னைகளைச் சேகரித்து, 2013 மார்ச் மாதம் ஐ.நா. மன்றத்தில் மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இன்னும் அழுத்தம் கொடுப்போம். இந்த முறையும் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள் என்றே நம்புகிறோம்.


 கடந்த முறை 24 நாடுகள் மட்டுமே மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையைக் கேள்வி கேட்டன. இப்போது 93 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இருக்கின்றன. இது இலங்கைக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு, 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று இங்கிலாந்து சொல்வதற்குக் காரணம் எங்கள் லாபிதான். 30 லட்சம் தமிழர்களின் போராட்டத்தை சிதைத்தது போன்று 10 கோடி தமிழர்களின் போராட்டத்தை அழிக்க முடியாது. எங்களது புதிய, வித்தியாசமான போராட்ட முறைகளால் இலங்கை தோற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை!''
நம்பிக்கை ஜெயிக்கட்டும்!


- இரா.வினோத் 


சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா?

கேள்வி எழுப்பும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
ந்தியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை​யுடன் நெருக்கமான உறவைப் பேணி ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டு வரும் நிலையில் ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறோம் நாம். அவர்களது சீனப் பாசத் துக்கு அடிப்படைக் காரணம், இந்தியாவின் மீதான வெறுப்புத்தான்!



இதுவரை இந்தியாவில் இருந்து சென்ற முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சிங்கள வெறியர்​கள் தாக்கி இருக்கிறார்கள் என்பதே வரலாறு. இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பண்டித ஜவஹர்லால் நேரு, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், ராஜீவ் காந்தி. ஆனால், நமக்கு ராஜீவ் தாக்கப்பட்டது மட்டும்தான் தெரியும்!


1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு இலங்கைக்குச் சென்றார் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரைத் தனது கடற்படை வீரன் விஜேமுனி விஜித ரோகன டி சில்வா  மூலமாக கொலை செய்ய முயற்சித்த இலங்கை அரசின் செயல், இங்குள்ள அதிகார வர்க்கத்தினருக்கு மறந்து​ போயிருக்கலாம். இலங்கை நீதிமன்றம் அந்தக் கொலைக்காரனுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், 1990-ல் அந்தக் கயவனுக்கு மன்னிப்பு அளித்து 'பெருந்தன்மையுடன்’ நடந்து கொண்டது இலங்கை அரசு.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, ஆட்சி​யில் இருந்த சிங்களத் தலைவர்கள் அனைவருமே இந்தியாவின் மீது மரியாதை செலுத்துவதைப் போல பாசாங்கு செய்தபடி, இந்தியாவுக்கு விரோதமான அத்தனை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்கூட, கொழும்பு நகர மையப்பகுதியில் காலே சாலையில் இந்தியத் தூதரக அலுவலகத்துக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை சீன விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு விற்பனை செய்து, ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது இலங்கை.



இலங்கையின் தென்கோடியில் உள்ள கெம்பன் தோட்டா துறைமுகத்தை 7,500 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கி உள்ளது. இதனால், வரும் காலத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவம் குறைந்து போகும். அது மட்டுமல்லாமல் சிறிய கப்பல்கள் மட் டுமே தூத்துக்குடி, சென்னைக்கு வரக்கூடிய சூழலை இலங்கை உருவாக்கி விட்டது.



இந்தியா மீது நல்ல எண்ணம் இல்லாத மியான்மர், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள்தான் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நாடுகளுடன் எல்லாம் அதீத நட்பு பாராட்டுகிறது இலங்கை. இப்போது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பிரம்மபுத்ரா நீரோட்டத்தைத் தன்வசம் திருப்ப முயன்று வருகிறது சீனா. அப்படிப்பட்ட சீனாவுடன் இலங்கை 14 புதிய ஒப்பந்தங்களுக்குக் கையெழுத்துப் போட்டுள்ளது.





 அதன்படி 4,180 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா மேற்கொள்ள இருக்கிறது. மேலும், தொழில்நுட்ப ஒத்து ழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவி போன்றவற்றையும் இலங்கைக்கு சீனா அளிக்க இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரான வு பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளார்.



 அதைத்தொடர்ந்து, இலங்கை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சீன வங்கிகள் கடன் வழங்க இருக்கின்றன. அருணா​சலப் பிரதேசத்தை உரிமை கொண்​டாடுவது, எல்லையில் விமானத் தளங்களை அமைப்பது என்று இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகளைக் கொடுக்கும் சீனாவுக்கு, இலங்கை நெருங்கிய நட்பு நாடாக மாறுவது ஆபத்தானது. அதனால், எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் சேர்ந்து இந்தி​யாவுக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.



இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்​காமல் தொடர்ந்து தாக்கி வருகிற இலங்கை, அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்​களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்குப் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன மீனவர்கள் சுதந்திரமாக அந்தக் கடலில் மீன் பிடிக்கிறார்கள். நமது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்​படவும், கைதியாகப் பிடிக்கப்​பட்ட நேரத்திலும் சீன நாட்டினரையும் இலங்கைக் கடற்படையினரோடு பார்த்ததாகச் சொல்லி இருக் கிறார்கள்.



தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இலங்கை, பாகிஸ்தான், அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்து மகா சமுத்திரம், தன் ஆளுகைக்கு உட்பட வேண்டுமென்று தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது சீனா. இந்தியாவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சீனா பயன்படுத்தி வருகிறது. அதற்குக் கடல் ஆதிக்கமும் தேவைப்படுகிறது.



பங்களாதேஷில் சிட்டகாங், பாகிஸ்தானில் கோத்தார் ஆகிய துறைமுகங்கள் சீனாவின் பிடியில் வந்து விட்டன. தைவானை தன் வசமாக்கிக்கொண்ட பிறகு, ஆசிய கண்டத்தையே தன் ஆளுமைக்குக் கொண்டுவர சீனா திட்டமிட்டு உள்ளது. இதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவுகிறது. இந்தச்சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அபாயம் தரும் நிலை ஏற்பட்டு இருப்பதற்கு ஒட்டுமொத்தக் காரணம் இலங்கை சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்ஷேவும்தான்.



இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராகச் செயல்​பட்ட பசீது வாலி முகம்மதுவின் உதவியோடு பாகிஸ்தான், இரண்டு கப்பல் நிறைய ஆயுதங்களை வழங்கியது. இந்தியாவுக்குள் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் தலைவராகச் செயல்​பட்டவர் பசீது வாலி முகம்மது. மேலும், இவர் கோவை குண்டு வெடிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 இந்தி​யாவின் தலைப் பகுதியான காஷ்மீரில் கண்மூடித்தனமான தீவிரவாதத்தை முன்னெடுக்கும் பாகிஸ்தான், சிங்கள இலங்கை வழியாக தென்னிந்தியப் பகுதிகளிலும் மத வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் இறை யாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயலுக்கும் சிங்கள அரசு துணை போகக்கூடும். ஈழத்தின் சம்பூர் மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கிவிட்டு, இலங்கை அரசு அதை நிறைவேற்றவிடாமல் மழுப்பி பாகிஸ்தானுக்குக் கொடுக்கத் திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.



பலாலி விமான நிலையத்தை இந்தியா சீர் அமைத்துக் கட்டித்தர சம்மதித்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டார் ராஜபக்ஷே. சமீபத்​தில் வர்த்தக ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்த இலங்கைக்குச் சென்ற இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மாவுக்குத் தெளிவான பதிலை இலங்கை அரசு கூறவில்லை.



போர் முடிந்த பின்னரும் சிங்கள அரசு சீனா, பாகிஸ்​தான் ஆயுதங்களோடு ராணுவத்தினரைக் குவித்து, தமிழர்களை அச்சப்படுத்துகிறது.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சிங்கள ராணு​வம் அதன் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்து இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் மூன்று பிரிவுகளும், கிளி நொச்சியில் மூன்று பிரிவுகளும், முல்லைத் தீவில் மூன்று பிரிவுகளும் வவுனியாவில் ஐந்து பிரிவுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியில் மூன்று பிரிவுகளும் வைக்கப்பட்டு உள்ளன.



இதுகுறித்து, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கர்னல் ஆர்.அரிகரன், 'இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் பரவலாக நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, போருக்குத் தயார் நிலையில் இருப்பதுபோன்று காட்சி அளிக்கிறது’ என்று அச்சம் தெரிவித்துள்ளார். அண்மையில் அதிபர் ராஜபக்ஷே, 'தமிழ்ப் புலி களுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் சீனாவும் உதவியதற்காக நன்றி’ என்று பட்டவர்த்தனமாக அறிவித்து இருக்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகம் முழுவதும் தனது வணிகத்தை பெருக்க சீனா திட்டமிட்டு உள்ளது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளோடு உறவுகொள்ளத் துடிக்கிறது.


சீனா வுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய் வருவதற்கு பர்மா வழியாக பைப் லைன் போட்டு அந்தமான், இலங்கை வழியாக ஊடுருவும் திட்டங்கள் உள்ளன. வங்கக் கடலோரத்தில் இருக்கிற கொக்கோ தீவுகள், பர்மாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து ஆஸ்திரேலியா உரிமை கொண்டாடியது. இப்போது அந்த இரண்டு தீவுகளையும் சீனா பர்மாவிடம் குத்தகை எடுத்துக்கொண்டு, அங்கே கப்பல் படைத் தளத்தை நிறுவ உள்ளது.  மேலும், எலக்ட்ரானிக் பொருட்களையும், துணிகள், பீங்கான் பாத்திரங்கள், பிளாஸ்க் போன்ற சீனப் பொருட்களை உலகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று பேராசைப்படுகிறது சீனா. இதன் மூலம் இந்தியாவின் ஆளுமையை தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் ஒழிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறது.


இப்படிப்பட்ட சீனாவுடன் நட்பு பாராட்டுகின்ற சிங்கள அரசை, நம்பக் கூடாது என்பதை இந்தியா எப்போது புரிந்துகொள்ளுமோ?


நன்றி - ஜூ வி

Monday, September 10, 2012

ஜெவை ஆபாசமாக சித்தரித்த சிங்களப்பத்திரிக்கை கார்ட்டூன்

https://athikalai.files.wordpress.com/2012/03/eelam-mathi-cartoon-1.jpg?w=1000ஒரு பெண் முதல்வரை வகை தொகை இல்லாமல் ஆபாசமாக சித்தரித்த கார்ட்டூனிஸ்ட்க்கு என் வன்மையான கண்டனங்கள். கார்ட்டூன் என்பது பார்த்து ரசித்து மனம் விட்டு சிரிக்க வைக்க.இப்படி வக்ரத்தை வெளிப்படுத்த அல்ல.சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து ஜெ அவதூறு வழக்கு,கடும் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து மன்னிப்பு கேட்க வைக்கனும்் 

சில நாட்களுக்கு முன் தமிழகத்திற்கு வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை ஜெயலலிதா திருப்பி அனுப்பினார்.அதற்க்குப்பழி வாங்கும் விதமாக இலங்கையில் இருந்து வெளி வரும் ஒரு சிங்களப்பத்திரிக்கை மிக ஆபாசமாக தமிழ் நாட்டின் சி எம் ஜெவை ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. ஹசந்தா விஜெநாயகே என்பவர் தான் அதை வரைந்தவர். 



பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல் அமைச்சரையே ஒருவரால் இப்படி சித்தரிக்க முடிகிறது என்றால் இவர்கள் கையில் அப்பாவித்தமிழ்ப்பெண்கள் சிக்கி இருந்த போது என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.. 


நேற்று வெளியான இந்த கார்டூனை இலங்கையில் பல இடங்களில் கட் அவுட்டாக பேனராக  வைத்திருக்கிரார்களாம். 24 மணி நேரம் ஆகியும் இது குறித்து பிரதமர் அலுவலகம் ஏதுவும் வாயைத்திறக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கு.. மவுனகுரு இதுக்காகவாவது வாயைத்திறக்க வேண்டும்.. 


இலங்கை அரசுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க வேண்டும். மன்னிப்பு
 கேட்க வைக்க வேண்டும்.. 


எதிர்க்கட்சிகளும் தங்கள் பகையை மறந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும்..  ஏன்னா எலக்‌ஷன் வர்றப்போ பல பிரிவா பிரிஞ்சு சண்டை போட்டுக்கிட்டாலும் ஒரு  அந்நிய தேசம் நம்ம மாநில சி எம்மை அவமானப்படுத்தியது நம்ம இனத்தை அவமானப்படுத்தியதற்குச்சமம்..

கொடுங்கோலன் ராஜபக்சேவைக்கூட  யாரும் இவ்வளவு மோசமாக சித்தரிக்கவில்லை. அவர்கள் அதிக பட்ச கோபம் அவரை  எமனாக மட்டுமே சித்தரித்தது. ரத்தக்காட்டேரி போல் சில படங்கள் அவ்வளவுதாம்ன்,


 அவரை பர்சனல் லைஃப் பற்றிய தகவல்களோ , விமர்சனமோ, அவர் குடும்பத்தைப்பற்றி எந்த வித மோசமான வர்ணனைகளோ வரவில்லை. ஆனால்  பெண் என்றும் பாராமல் மாநில முதல்வரை இப்படி அவமானப்படுத்தியது அவர்கள் தரத்தையும், அசட்டுத்துணிச்சலையும், மன வக்ரத்தையுமே  வெளிப்படுத்துகிறது.

 
 
Vol. 06. No. 13 Sunday 09 September 2012
 
 
 
 
   

News Menu

Archive Articles

Politics



8-1     

Thursday, May 03, 2012

காந்தியடிகள் ஒரு கையெழுத்துப்போடவே எங்கப்பா கிட்டே காசு கேட்டவர் - பழ நெடுமாறன் பேட்டி @விகடன்

1.' 'நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போதேனும் உணர்ந்து இருக்கிறீர்களா?'' 
''நிறைய முறை உணர்ந்திருக்கிறேன்! எங்கள் முதல் சந்திப்பே உங்களுக்கு ஆச்சர்யமூட்டும். 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை, பாண்டி பஜாரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதையட்டி விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காக சிறைக்குச் சென்றிருந்தேன்.


அந்த நால்வரில் பிரபாகரனும் அடக்கம். அப்போது வரை நான் பிரபாகரனை நேரில் சந்தித்தது இல்லை என்பதால், மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். நான்குஇளைஞர் கள் வந்தனர். இராகவன், உமா மகேஷ்வரன், ஜோதீஸ்வரன் என ஒவ்வொருவரும்தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். நான்காவ தாக நின்ற இளைஞர், 'அண்ணா,மன்னித்துக் கொள்ளுங்கள்...


 நான்தான் பிரபாகரன்’ என்று சொன்னபோது, திகைத்துப்போனேன். ஏனெனில், அவர் எனக்குப் புதியவர் அல்ல. என் வீட்டில் அவரும் வேறு சில இளைஞர்களும் அதற்கு முன் பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது எம்.எல்.ஏ-வாகஇருந்த நான் பெரும்பாலும் வெளியூர்களில்தான் இருப்பேன். சென்னை வீட்டில் இந்த       இளைஞர்கள்தான் தங்கியிருப்பார்கள்.அவர்களில் ஒருவராக பிரபாகரன் இருந்திருக்கிறார் என்பதும் அதை வெளிப்படுத்தாமலேயே அத்தனை நாட்கள் என்னிடம் பழகிவந்திருக்கிறார் என்பதும் பெரும் ஆச்சர்யம் அளித்தது.


அப்போது எல்லாம் நான் பிரபாகரனிடமே பல முறை, 'உங்கள் தலைவர் பிரபாகரனை அழைத்து வாருங்கள், சந்திக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறேன். 'சரி, சரி’ என்று அவரும் பணிவாகத் தலையாட்டியிருக்கிறார். அவரும் அவருடைய தோழர்களும் ரகசியம் காத்த தன்மை என்னை மிகவும் ஈர்த்தது. இந்தக் கட்டுக்கோப்புதான் விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய பலம்.''  



2.''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று எங்கோ படித்திருக்கிறேன். இந்தச் செய்தி உண்மையா?'' 


''உண்மைதான்.1938-ம் ஆண்டு காந்தி ராமேஸ்வரத்துக்கு வந்தார். அப்போது மதுரையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வீடு, எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. என் அப்பா பழனியப்பனார் அப்போது இளைஞர். ஜார்ஜ் ஜோசப்பின் மனைவி, மதுரை ரயில் நிலையத்தில் காந்தியைப் பார்ப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார். என் அப்பா காந்தியின் மீது பெரும்பற்று கொண்டவர் என்பதால், 'நீயும் வா’ என அவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். 


ரயில் வந்ததும், காந்தியைப் பார்த்து உண வைக் கொடுத்திருக்கிறார் அந்த அம்மை யார். காந்தியைப் பார்த்த பரவசத்தில் அப்பா அவரிடம் கையெழுத்து பெற முயற்சித்து இருக்கிறார். 


அதற்கு காந்தி அவர்கள் சிரித்துக் கொண்டே, 'ஒரு கையெழுத்துக்கு 5 ரூபாய் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார். அவசர மாகக் கிளம்பிச் சென்றதால், அப்போது அப்பாவிடம் காசு இல்லை. உடனே, தன்னு டைய கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து 'இதை வைத்துக்கொண்டு கையெழுத்துப் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.


 அதைப் பார்த்து திருமதி ஜோசப், 'இது இவருடைய திருமண மோதிரம்’ என்று காந்தியிடம் சொல்ல... உடனேகாந்தி, தன் டைரியில் ஒரு பேப்பரைக் கிழித்து 'காந்தி’ எனத் தமிழிலேயே கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார். இப்போதும் அந்தக் கையெழுத்து பத்திரமாக என்னிடம் இருக்கிறது!''




3. ''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற் றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார் களா?'' 


 ''ஒற்றுமை நிறைந்த இனமாக, தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடும் இனமாக தமிழினம் வடிவெடுக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறை என்ன? மதவெறி, சாதிவெறி போல தமிழர்கள் கட்சி வெறியால் பிளவு பட்டு உள்ளனர். அரசியல் கட்சிகளே மதங் களாக மாறிவிட்ட நிலையில், மக்களைப் பக்தர்களாக்கிக் குளிர்காய்கின்றனர்.


 இது மிகவும் ஆபத்தான போக்கு. ஏற்கெனவே சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் தமிழ கத்தை வஞ்சிக்கின்றன. மத்திய அரசுதமிழ் நாட்டை மதிப்பதே இல்லை. இந்த நிலையில் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளின் போக்கும் இதே சுயநலத்துடன் நீடித்தால், இந்தியாவில் எல்லா வகையிலும் தமிழகம் பின்தங்கிய மாநிலமாக மாறிவிடும்!''



4.''தமிழீழம் பற்றி ஆதியோடு அந்தமாகத் தெரிந்துகொள்ள நான் என்ன புத்தகம் படிக்க வேண்டும்?''


''வரலாற்று அறிஞர் முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கைத் தமிழர் வரலாறு’ என்ற நூல் படித்தால், முழுமையான வரலாறு அறிந்துகொள்ளலாம்!''


5.''கவிஞர் கண்ணதாசனுடன் நெருங் கிப் பழகியவர் நீங்கள். அவருடனான நினைவுகளில் மறக்க முடியாததைக் குறிப்பிடுங்களேன்?'' 


''ஒன்றல்ல... இரண்டல்ல... பல சம்பவங்கள் உண்டு. ஒருமுறை குடும்பக் கட்டுப்பாடு விழாவுக்கு கவிஞரை அழைத்து இருந்தார்கள். 14 குழந்தைகளுக்குத் தகப்பனான அவர் அந்த விழாவில் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தில் நானும் சென்று இருந்தேன். பேச்சைத் தொடங்கும்போதே, 'எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமானவன் நான் என்பதால், என்னைப் பேச அழைத்திருக்கிறார்கள்’ என்று அவர் சொன்னபோது, அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது


.
இன்னொரு சந்தர்ப்பத்தில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஹார்மோனியத்தில் மெட்டை இசைத்துக்காட்ட, பாடல் எழுதுவதற்காக எதிரே அமர்ந்திருந்தார் கவிஞர். அவர் மெட்டை இசைத்தார். கேட்டதும், கண்களை மூடி, 'மறுபடியும் வாசிச்சுக்காட்டு’ என்று  எம்.எஸ்.வி-யிடம் சொன்னார் கவிஞர். 


அவர் மறுபடி வாசித்தார். அதைக் கேட்டதும், 'போ... போ... இந்த மெட்டுக்கு எல்லாம் பாடல் எழுத முடியாது’ என்று சொல்லி விட்டார். உடனே எம்.எஸ்.வி. எழுந்து சற்று தள்ளிப்போய் நின்றுகொண்டு, 'இந்த மெட்டுக்குப் பாட்டு எழுதலேன்னா, அப்புறம் என்ன நீங்க கவிஞர்?’ என்று கேட்டுவிட்டு வாசலுக்கு வெளியே ஓடிப்போய்விட்டார். 'பிடி, பிடிய்யா அவனை’ எனக் கவிஞர் சற்று கோபத்துடன் சத்தமிட... எம்.எஸ்.வி. பயத்துடன் வெளியிலேயே நின்றுகொண்டுஇருந்தார். 


பிறகு கோபம் தணிந்ததும், 'உள்ளே... வா’ என்று அழைத்து... அதே மெட்டுக்கு மறுபடியும் பாடல் எழுதிக் கொடுத்தார். வெளியானதும் பெரிய அளவில் பிரபலமான அந்தப் பாடல்.... 'யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கடா போங்க...’  


காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, இந்திரா காங்கிரஸில் இணைந்தார் கண்ணதாசன். நான் காமராஜர் காங்கிரஸிலேயே தொடர்ந்தேன். இருந்தாலும், நான் காமராஜரின் பிறந்த நாளை தேசியத் திருவிழாவாக மதுரையில் நடத்தியபோது கவிஞரைஅழைத் தேன். எந்த மறுப்பும் சொல்லாமல் முந்தைய நாளே வந்திருந்து விழா குறித்து மதுரையின் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். அத்தகைய அரசியல் நாகரிகம் மிகுந்தவர் கவியரசர்!''



6.''ராஜீவ் காந்தியின் மரணச் செய்தியை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?'' 


''கோவை ரயில் நிலையத்தில் இறங்கிய ஓர் அதிகாலைப் பொழுதில் ராஜீவ் கொலை செய்தியைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னை இந்திராவின் குடும் பத்தோடு நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், என்னை ராஜீவின் மரணம் கூடு தலாகப் பாதித்தது. ஆனால், இதைப் பற்றி பிரபாகரனுடன் பேசும் சந்தர்ப்பம் பிறகு வரவில்லை. காரணம், அதன் பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை!''  



''7. விலைவாசி உயர்வு, லஞ்சம், தமிழ்நாட்டு சாதிப் பிரச்னைகள்பற்றி எல்லாம் பேசாமல் எப்போதும் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பது ஏன்?'' 


 ''யார் சொன்னது? நாங்கள் அனைத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசியும் எழுதியும் போராடியும்வருகிறோம். காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதி நீர்ப் பிரச்னைகளுக்கு முதன்முதலாகக் குரல் கொடுத்தது எங்கள் தமிழர் தேசிய இயக்கம்தான். 


ஆனால், இலங்கைப் பிரச்னைபற்றி நான் சொல்வது மட்டுமே ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுகிறது. எங்களு டைய மற்ற போராட்டங்கள் புறக்கணிக்கப் படுகின்றன. இதனால் உங்களுக்கு அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அது தவறு. ஈழத் தமிழர்களின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்குத் தமிழ்நாட்டு தமிழர் நலனும் முக்கியமே.''



8. ''இலங்கைப் போரை இந்தியா ஆதரித்ததற்கு 'சீனாவின் ஆதிக்கம்அங்கே வந்துவிடும்’ என்பது மட்டும்தான் காரணமா?''   


''இது ஒரு திசை திருப்பும் பேச்சு. ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில், இலங் கையில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தைக் கொண்டுவருவதற்கான ரகசிய முயற்சி நடந்தது. உடனே இந்திராகாந்தி நாடாளு மன்றத்தில், 'இந்தியப் பெருங்கடல் எல்லை யில் எந்த நாட்டு ராணுவத்தளம் அமைக்கப் பட்டாலும், இந்தியா அதைத் தனக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதும்’ என எச்சரித்தார். உடனே, ஜெயவர்த்தனா அடங்கிப்போனார். 



அதைப் போல, 'சீனாவிடம் உதவி பெற்றால், அதை நாங்கள் எங்களுக்கு எதிரானதாகக் கருதுவோம்’ என்று ராஜபக் ஷேவை நோக்கி இந்தியா எச்சரித்திருந் தாலே இலங்கை அடங்கிப்போயிருக்கும். ஆகவே, சீனாவைக் காட்டி இந்தப் பிரச்னை யைத் திசை திருப்புவது சரியானது அல்ல. உண்மையான காரணம் என்ன? இந்தியா வில் காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், மிசோரம் எனப் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தின் சரிபாதி அங்குதான் நிற்கிறது.


 ஒருவேளை இலங்கை யில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால்,இந்தியா வில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்ட மிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார் கள்!''



9.''உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் அடைய விரும்பிய லட்சியத்தை இன்று வந்து சேர்ந்துவிட்டீர்களா?'' 


''மாணவர் பருவத்தில் அண்ணன் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்து என் அரசியல் வாழ்வைத் துவங்கினேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தபோது, ஒர் தமிழன் பெரும் பதவியில் இருக்கும்போது அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தன் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார் சம்பத்.


பெருந்தலைவரின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி சீரழிய ஆரம்பித்துவிட்டது. என்றைக்கு இந்திய ராணுவம் ஈழத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதோ, அன்றைக்கே நாங்கள் காங்கிரஸ் கட்சியை மறந்துவிட் டோம். தமிழர் தேசிய இயக்கத்தைத் தொடங்கினோம். எங்கள் லட்சியம், தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தச் செய்வதுதான். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றுகொண்டு இருக் கிறோம்!''

முற்றும் 

நன்றி - விகடன் 


டிஸ்கி 1 -

வீரப்பன் விவகாரத்தில் நடந்தது என்ன? பழ நெடுமாறன் பேட்டி http://www.adrasaka.com/2012/04/blog-post_8963.html

டிஸ்கி 2 -

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ நெடுமாறன் பேட்டி வீடியோ   http://www.adrasaka.com/2012/04/blog-post_19.html

டிஸ்கி 3 -

பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ராஜீவ் காந்தி - பழ நெடுமாறன் வெளியிடும் உண்மைகள் http://www.adrasaka.com/2012/04/blog-post_12.html



 டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Thursday, April 26, 2012

வீரப்பன் விவகாரத்தில் நடந்தது என்ன? பழ நெடுமாறன் பேட்டி

1. வீரப்பனை நேரில் சந்தித்தவர், அவர் மிகவும் நம்பியவர்களுள் நீங்களும் ஒருவர் என்ற முறையில் அவரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உண்மையாக, நேர்மையாகச் சொல்லுங்கள்?'' 
''வீரப்பன் படிப்பறிவற்ற காட்டுவாசிதான். ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சத்தியமும் இருந்தது. வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்தி வைத்திருந்தபோது, அவரை மீட்பதற்காக நான் உள்ளிட்ட குழுவினர் காட்டுக்குள் சென்றோம். 

அப்போது எங்களையும் வீரப்பன் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தால், யாராலும் எதுவும் செய்துஇருக்க முடியாது. எங்களை அனுப்பிவைத்த அரசாங்கமும் கண்டுகொள்ளாமல்தான் விட்டிருக்கும். நாங்கள் அரசை நம்பி அல்ல... வீரப்பன் என்ற தனி மனிதனின் நேர்மையை நம்பித்தான் காட்டுக்குள் சென்றோம். வீரப்பனும் கடைசி வரையில் அந்த நேர்மை யைக் காப்பாற்றினார்.


வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப் படையினர் சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் மக்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தன மான தாக்குதல்களை நாம் அறிவோம். ராஜ்குமார் கடத்தல் சமயத்தில் 'பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு தர வேண்டும்’ என்பது வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. அதற்காக அவர் ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் ஊர் வாரியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பெயர்கள் குறிக் கப்பட்டு இருந்தன.


 அந்தப் பட்டியலில் வீரப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கூட இல்லை. ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அதிரடிப் படை கொன்றிருந்தது. நான் இதைப் பற்றி வீரப்பனிடம் கேட்டபோது, 'என் குடும்பம் அழிந்தது... அழிந்ததுதான். நான் இழப்பீடு வாங்கி என்ன செய்யப்போறேன்? என் பெயரைச் சொல்லி அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதும்’ என்று சொல்லி அதில் உறுதியாகவும் இருந்தார். வீரப்பனிடம் இருந்த இந்தப் பெருந்தன்மை அவரை வேட்டையாடிய அதிகாரிகளுக்கு இல்லை.



அந்தச் சமயத்தில் நான் மொத்தம் ஐந்து நாட்கள் காட்டுக்குள் இருந்தேன். அந்த ஐந்து நாட்களும் எனக்காக எல்லோரும் சைவ சாப்பாடுதான் சாப்பிட்டனர். எந்த வசதியும் இல்லாத காட்டுக்குள் வீரப்பன் செய்த உணவு உபசரிப்பை என்னால் எப்போதும் மறக்க முடியாது!''



2. ''ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களைவைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்களே?'' 


''அது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு. ஈழத் தமிழர்களை ஆதரிப்பதால், நாங்கள் எவ்வளவோ சொந்த இழப்புகளுக்கு ஆளாகிஇருக்கிறோம். காவல் துறையின் நெருக்கடி, பொய் வழக்குகள், உளவுத் துறையின் கண்காணிப்பு எனப் பல வகைகளிலும் எங்கள் அரசியல் வாழ்க்கையும் சொந்த வாழ்க்கை யும் சிக்கலில்தான் தள்ளப்பட்டு இருக்கிறது.


ஈழத் தமிழர்களைக் கொண்டு நாங்கள் ஆதாயம் அடைந்தோம் என்பது அபாண்டத்திலும் அபாண்டமான குற்றச்சாட்டு. அப்படி ஏதாவது ஆதாயம் அடைந்திருந்தால், எங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துவரும் மத்திய, மாநில அரசுகள் இத்தனை காலம் சும்மா விட்டுவைத்திருக்குமா? வழக்குப்போட்டு உள்ளே தள்ள எவ்வளவு நேரம் ஆகும்?''

3. ''ராஜபக்ஷேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?'' 


''நிச்சயமாக!


இரண்டாம் உலகப் போரில் 50 லட்சத்துக் கும் அதிகமான யூத மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தது ஹிட்லர் கும்பல். போரின் முடிவில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதும், மற்ற குற்றவாளிகளுக் குச் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததும் வரலாறு.


செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006-ம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நான்கு ஆண்டு காலமாகவிசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறை யிலேயே உயிர் துறந்தார்.


அண்மையில் சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது  சர்வ தேச நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.


ஒரு நாட்டின் அதிபராக இருப்பது, மக்களைக் கொல்வதற்கான உரிமம் அல்ல. அப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும்போது, நாகரிகச் சமுதாயம் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் தண்டிக்கும். ஆகவே, சர்வதேச சமூகம் ராஜபக்ஷேவையும் போர்க் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கும் காலம் நிச்சயம் வரும். அதற்கு ரொம்பக் காலமும் ஆகாது!''


4. ''இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?'' 


''நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. முகாம்களில் இருந்து வெளியேறிப் போகச்சொல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், வெளியில் சென்று அந்த மக்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில், அவர்களின் நிலங்களில் எல்லாம் சிங்களர்கள் குடியேறிவிட்டார்கள். முகாம்களிலும் இருக்க முடியவில்லை. குழந்தைகள், வயதான பெரியவர்கள் எல்லோரும் நல்ல உணவோ, தங்கும் இடமோ கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கின் றனர். இப்படித் தமிழர்கள் பட்டினியாலும் நிர்க்கதியாலும் சாக வேண்டும் என்றுதான் ராஜபக்ஷே அரசு எதிர்பார்க்கிறது!''




5. ''வாடகைக்கு வீடு கிடைப்பதில் உங்களுக்குச் சிக்கல் என்று கேள்விப் பட்டேன். அது உண்மையா?'' 


''எங்கள் கட்சி அலுவலகத்துக்கு ஒரு வாடகைக் கட்டடத்தைப் பிடித்து முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் எல்லாம் போட்ட பின்னர், கட்டட உரிமையாளர் 'தர முடியாது’ எனப் பின்வாங்கிவிட்டார். காரணம், உளவுத் துறை அவரை மிரட்டி இருக்கிறது. இப்படி எத்தனையோ சம்பவங்கள். சென்னை நகர எல்லையைக் கடந்து பல்லாவரத்தில் எங்கள் அலுவலகம் இருப்பதற்கு இந்த வீட்டுப் பிரச்னையும் ஒரு காரணம்.

 இவற்றையும் தாண்டி எங்களுக்கு வீடு தருபவர்களும் அலுவலகத்துக்கு இடம் தருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த எல்லோருமே இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறோம். மறைமுகமாகவும் சமயங்களில் நேரடியாகவும் மிரட்டப்படுகிறோம். எங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அரசியல் வாழ்வின் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப் பழகிக்கொண்டுவிட்டேன்!''



6. '' 'ஈழத் தமிழர்கள்’ என ஏன் பிரித்துச் சொல்ல வேண்டும்? தமிழர்கள் என்று சொன்னால் போதாதா?'' 


''அப்படிப் பொதுவாகச் சொல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தபோதிலும், ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் ஆஸ்திரேலியர்கள், கனடாவில் வாழ்ந்தால் கனேடியர்கள், அமெரிக்காவில் வாழ்ந்தால் அமெரிக்கர்கள். அந்த நாட்டுப்பற்றை விட்டுக்கொடுக்க முடியாது. மலேசியா வில் வாழ்பவர்கள் மலேசியத் தமிழர்கள், இந்தியாவில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர்கள், ஈழத்திலே வாழ்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான்.

 தேச எல்லைகளைக் கடந்து நம்மை மொழி ஒன்றிணைக்கிறது என்பதுதான் இதில் முக்கியம். இந்த வித்தியாசங்களை ஏற்றுக்கொண்டுதான் நாம் ஒன்று சேர முடியுமே தவிர, அதை அழித்துவிட்டு முடியாது. ஆகவே, 'எல்லோரும் தமிழர்கள்’ எனப் பொதுவாக வரையறுப்பது பொறுத்தமற்றது!''


7. '' 'ஏன்தான் இந்த அரசியலுக்கு வந்தோமோ?’ என்று நொந்துகொண்ட தருணங்கள் உண்டா?'' 


''அரசியலில் சலிப்புக்கு ஒருபோதும் இடம் இல்லை. மக்களுக்குத் தொண்டு புரியத்தான் வந்திருக்கிறோம். அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவது இல்லை. என் அரசியல் வாழ்க்கையில் எத்த னையோ பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். தடாவில் சில நாட்கள், பொடாவில் 18 மாதங்கள் என ஐம்பதுக்கும் அதிகமான முறை என்னை இந்த அரசுகள் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கின்றன. ஒருமுறைகூட அதற்காக வருந்தியதோ, சோர்வு அடைந்ததோ இல்லை.

 மாறாக, மேலும் உற்சாகத்துடன் மக்கள் பணிபுரியும் உந்துதலே ஏற்படும். பதவிக்காகவும்  பணத்துக்காகவும் அரசியலுக்கு வருபவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய சலிப்புகள் ஏற்படலாம். மக்கள் நலனை மனதில்கொண்டு அரசிய லுக்கு வருபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உற்சாக தினம்தான்!''


8.  ''ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு எதை, யாரைக் காரணம் என்பீர்கள்?''   


''பின்னடைவுக்கு முக்கியமான முதல் காரணம், சர்வதேசச் சூழல்தான். அமெரிக் காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட 9/11 சம்பவத்துக்குப் பிறகு, உலக நாடு களின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையே வேறுபாடு காணப் பல நாடுகள் விரும்பவில்லை. 


எல்லா நாடுகளும் மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதன் ஓர் அங்கமாகத்தான் விடுதலைப் புலிகளும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இப்படி ஒன்றுசேர்ந்த நாடுகளின் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை எடுத்துக்கொண்டால், காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், நாகாலாந்து போன்ற பல இடங்களில் தேசிய இனப் போராட்டங்கள் நடக்கின்றன.

 சீனாவில் திபெத் மக்கள் நீண்டகாலமாக தனிநாடு கேட்டுப் போராடி வருகின்றனர். பாகிஸ்தானில் சிந்து மாநில மக்களும், எல்லைப்புறத்தைச் சேர்ந்தவர்களும் விடுதலைக்காகப் போராடுகின்றனர். இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்ட இந்த நாடுகள் முயற்சி செய்கின்றன. அதனால்தான், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதத்தின் பெயரால் கொச்சைப்படுத்தி சிங்கள அரசுக்குத் துணை நிற்கின்றன. உலக அளவிலான ஆளும் வர்க்கங்கள் தமக்குள் அமைத்துக்கொண்ட கள்ளக்கூட்டும் சூழ்ச்சியான நடவடிக்கைகளும்தான் ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம்!''  


-அடுத்த வாரம்... 


 '' 'நம்மைவிட பிரபாகரனுக்கு 'அலர்ட்னஸ் - உஷார்தன்மை’ அதிகம்!’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போ தேனும் உணர்ந்திருக்கிறீர்களா?'' 




 ''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று படித்த ஞாபகம். அது உண்மையா?'' 


 ''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற்றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார்களா?'' 


- இன்னும் பேசலாம்...

thanx - vikatan 


Thursday, April 19, 2012

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ நெடுமாறன் பேட்டி வீடியோ



 1. ''கர்மவீரர் காமராஜருடனான உங்கள் நெருக்கத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்...''


''வேலையைச் சரியாகச் செய்தால் தட்டிக்கொடுக்கும் அதேசமயம், யாராவது தவறு செய்துவிட்டால், மிகக் கடுமை யாகக் கண்டிக்கவும் செய்வார் காமராஜர். நான் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாநிலப் பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளையும் வகித்த காலத்தில் ஒரு முறைகூட அவரது கோபத்துக்கு ஆளாகியது இல்லை. என் மீது அவருக்குத் தனி பாசம் இருந்தது.
மதுரையில் 72-ம் ஆண்டு தி.மு.. மாநாடு நடைபெற்றது. அதற்காக உள்ளூர் வியாபாரிகளிடம் தி.மு.-வினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்போது மதுரைக்கு வந்த ஆளுநர் கே.கே.ஷாவிடம் நான் புகார் மனு அளித்தேன். தி.மு.. ஆட்சிக்கு எதிரான முதல் புகார் மனு அதுதான். பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாநாட்டில் பேசிய முரசொலி மாறன், 'யார் அந்த நெடுமாறன்? அட்ரஸ்கூட இல்லாதவர்கள் கவர்னரிடம் புகார் கொடுக்கிறார்கள்என்று கடுமையாக என்னைத் தாக்கிப் பேசினார். இதுவும் பத்திரிகைகளில் வெளியானது.

இதற்கு அடுத்த சில நாட்களில், மேலூரில் ஒரு கட்சிக் கூட்டத்தில் காமராஜர் கலந்துகொண்டார். 'நெடுமாறனின் அட்ரஸை சிலர் கேட்கிறார்கள். சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள். பழ.நெடுமாறன், எம்.. பட்டதாரி. குறிஞ்சி பத்திரிகை ஆசிரியர். மதுரையில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர், நாளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அதில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர்என்று காமராஜர் சொன்னபோது, மேடையில் இருந்த நான் உள்ளிட்ட அத்தனை பேரும் அதிர்ந்துவிட்டோம்


 ஏனெனில், காமராஜர் யாரிடமும், 'நீதான் அமைச்சர்என்று எதுவும் சொல்ல மாட்டார். அவரே அப்படிச் சொல்லும் அளவுக்கு என் அரசியல் வாழ்க்கை இருந்தது குறித்து இப்போதும் எனக்குப் பெருமிதம் உண்டு. காமராஜர் மரணத்தின்போது அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டு இருந்தது. அந்த ஆறடி உடல் அருகே, நாள் முழுவதும் நான் அமர்ந்திருந்தேன். அவரைப் போன்ற தலைவரை அரசியலில் பார்ப்பது அரிதிலும் அரிது!''  


சி.பி - காமராஜர் ஆட்சி அமைப்போம்னு வெட்கமில்லாமல் கூறும் ஆட்களிடம் காமராஜர் எளீமை வாழ்வு பற்றி ஏதும் தெரியுமா? என கேட்டால் பேந்த பேந்த விழிப்பார்.. 

 http://photos.merinews.com/upload/imageGallery/bigImage/1242711948171-prabhakaran%20family%20photos.jpg
prabakaran son and daughter

2. ''இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்?''  


''1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள ராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்பம் உறங்காமல் தவித்துக்கிடந்தது. அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார்.சிறுமியான என் மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு, 'மாமாதான் வந்தி ருக்கிறேன். மாமாவின் ஆவி அல்லஎன்றார். எல்லோரும் துயரம் மறந்து சிரித்தோம்.

1989 ஜூலை 24-ம் தேதி 'தி இந்துநாளேட்டில், 'விடுதலைப் புலிகள் அமைப்பின் அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனின் உடல் வவுனியாவில் இருந்து வடகிழக்கே அனந்த பெரியகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு நாட்களாக பிரபாகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்என்று செய்தி வெளியானது. அது பொய் என்பதைக் காலம் வெகு விரைவிலேயே உணர்த்தியது.
2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது அதில் சிக்கி பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விலை உயர்ந்த சவப்பெட்டி தயாராக இருப்பதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இருந்து 10 நாட்கள் கழித்து நார்வே நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலாளரைப் புன்னகை மாறாமல் சந்தித் தார் தம்பி.
2007-ம் ஆண்டு சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டது. அது பொய் என்பது பின்னர் உலகுக்குத் தெரியவந்தது. அவை எல்லாம் போலத்தான் இப்போதும். 2009 மே மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். ஓர் உடலையும் காட்டினார்கள்.


 ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்த வர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின் றனர். ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசு கிறேன். எனது சொந்த விருப்பத்தில்இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்!''


சி.பி - நம்பிக்கைதான் வாழ்க்கை.. உயிருடன் இருக்கிறார்  என்றே நம்புவோம்

http://www.merinews.com/upload/imageGallery/bigImage/1242711801786-prabhakaran%20family%20photos.jpg
3. ''தமிழக அரசியல்வாதிகளில் அதிகபட்ச நேர்மையாளராக நீங்கள் கருதுவது யார் யாரை?''


''ஒரே ஒருவர்தான். அவர்... தோழர் நல்லகண்ணு அவர்கள்!''


சி.பி - நேர்மை, எளிமை, பொது வழ்வில் தூய்மை மூன்றுக்கும் இலக்கணம் ஆனவர்

4. ''கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகான தமிழக அரசியல் எப்படி இருக் கும்?''


''காங்கிரஸ் ஆட்சி, அண்ணா ஆட்சி வரை தமிழக அரசியலில் கண்ணியம் இருந்தது. அண்ணா மறைவுக்குப் பின்னர், தி.மு.-வுக்கு கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு நிலைமை படிப்படியாக மாறி, எம்.ஜி.ஆர். வருகைக்குப் பிறகு அது முற்றிலுமாக மாறி விட்டது. இரு தலைவர்களுக்கு இடையே யான தனிப்பட்ட வெறுப்பினால் அரசியல் நாகரிகமும் கண்ணியமும் பறக்கவிடப்பட்டது. அது இன்றளவும் தி.முக - .தி.மு.. சண்டையாகத் தொடர்கிறது.  
காங்கிரஸ் ஆட்சியில் மொழிவாரி மாநிலப் பிரிவினை நடந்தபோது, ஆந்திரர்கள் சென்னை நகரத்தையும் கேட்டார்கள். முதல்வராக இருந்த ராஜாஜி, 'சென்னை தமிழர்களுக்கேஎன விட்டுக்கொடுக்க மறுத்தார். அவரைக் காலம் எல்லாம் எதிர்த்த பெரியார், அண்ணா, ஜீவானந்தம், .பொ.சி. போன்றவர்கள் ராஜாஜியை ஆதரித்தனர். தமிழர் நலன் என்ற அடிப்படையில், அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேர்ந்தனர். ஆனால், இப்போதைய நிலைமை என்ன?

தி.மு.-வும் .தி.மு.-வும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில்கூட எதிரெதிர் நிலை களை எடுக்கின்றன. தனிப்பட்ட பகையை அரசியலாக மாற்றும் இந்தத் தலைவர்கள் அரசியல் அரங்கில் இல்லாமல்போனால், ஓரளவுக்கு நிலைமை சீராகும்!''


சி.பி - கலைஞருக்குப்பிறகு அழகிரி ஸ்டாலின் வாரிசு சண்டை வந்து ஸ்டாலின் கை ஓங்கும்,, அழகிரி வி என் ஜானகி போல் காணாமல் போவார்.. ஜெவுக்குப்பின் சசிகலா குடும்பம் ஆக்ரமிக்கும், ஆனால் எதிர்காலம் இருக்காது,,

http://www.asiantribune.com/files/images/prabaharan%20wedding_1.img_assist_custom.jpg

5. ''இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா?''


''அது எங்கள் கொள்கை அல்ல. இப்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மாநில அரசு கள் கேவலம், நகராட்சிகளுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன. நிதி வசதியும் கிடையாது; அதிகாரமும் கிடையாது. மாநில அரசுகளை, மத்திய அரசு ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையை மாற்றி, பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா ஓர் உண்மையான கூட்டாட்சி நாடாக மாற வேண்டும்


 அதற்கு முதலில் இப்போது இருக்கும் இந்த அரசியல் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். வெளியுறவு, ராணுவம், ரூபாய் அச்சடித்தல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் வசம்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாநில சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களாக மாற வேண்டும்

 மாநிலங்கள் அளிக்கும் பங்குத் தொகையில்தான் மத்திய அரசு நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசு போடும் பிச்சைக் காசில் மாநில அரசு இயங்கக் கூடாது. இதுவே எங்கள் கொள்கை. மற்றபடி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, தனி நாடாக்க வேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல!''

http://3.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SgL_qiaEHsI/AAAAAAAAd48/5iArC6mgucM/s400/LTTE+Leader+Velupillai+Prabhakaran+Photos.jpg

6. ''உலகம் முழுவதும் இன்று தமிழன் விரவிக்கிடக்கிறான். தமிழனின் ஆகப் பெரிய பலம் என்று எதைச் சொல்வீர் கள்?''


''உலகம் எங்கும் தமிழர்கள் விரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல இன்னோர் உண்மையும் இருக் கிறது. தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இந்த நிலையை மாற்ற உலகத் தமிழர்களுக்கு இடையேயான ஒற்றுமைதான் இன்றைய அவசரத் தேவை


 அந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்தும் சக்தி தமிழுக்கு மட்டுமே உண்டு. ஓர் இனம் எப்போது தன் மொழியை இழக்கிறதோ, அப்போதே பண் பாட்டை இழக்கிறது; கலாசாரத்தை இழக் கிறது; வாழ்க்கை முறையை இழக்கிறது; எதிர்காலத்தை இழக்கிறது. நமக்கு தமிழ் தான் பலம். அந்த மொழி உணர்வைஇழந்து விடாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் நாம் அனைவருமே முயற்சிக்க வேண்டும்!''
http://dbsjeyaraj.com/filmalaya/VP1987.jpg

அடுத்த வாரம்....

''ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களே...''
''ராஜபக்ஷேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?''
''இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?''


தொடரும் - நன்றி விகடன்