Friday, February 27, 2026

தாய் கிழவி (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா)

 


தாய் கிழவி (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா)


கடந்த 10 நாட்களாகவே இந்தப்படத்தின் பிரமோஷன்கள் சோசியல் மீடியா வில் அளவுக்கு அதிகமாகவே கொடுக்கப்பட்டு வருவதால் இது மாதிரி  ஓவர் ஹைப் கொடுத்த படங்கள் எல்லாம் அதீத எதிர்பார்ப்பை ஈடு கட்டமுடியாமல் தோல்வியைத்தழுவி இருக்கிறதே ?என்ற கவலையுடன் தான் படம் பார்த்தேன்.நல்ல வேளை,இயக்குநர் ஏமாற்றவில்லை.


ஒரு பாரதிராஜாவோ,பருத்தி வீரன் அமீரோ,வாழை மாரி செல்வராஜோ காட்டுகின்ற அச்சு அசல் கிராமியக்கதையை பிரமாதமான திரைக்கதை மூலம் தந்து படத்தில் நடித்த அனைத்துக்கேரக்டர்களுக்கும் சம அளவில் வாய்ப்புத்தந்து ஒரு மறக்க முடியாத படத்தைத்தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன்.இவர் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆகப்பணியாற்றியவர்


கதை சாதாரண பீர்பால் டைப் நீதிக்கதை தான்.ஆனால் அதை சொன்ன விதத்தில் கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்த விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குநர்


மதுரை -உசிலம்பட்டி அருகே காடுபட்டி என்று  ஒரு கிராமம்.அதில் 75 வயதான பாட்டி நாயகி பவுனுத்தாயி  வாழ்ந்து வருகிறார்.வைதேகி காத்திருந்தாள் படத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமி ஆக வரும் ராதா ரவி தெருவில் இறஙகினாலே ஊர் மக்கள் பயப்படுவது மாதிரி நாயகி பவுனுத்தாயி வட்டி வசூல் பண்ணக்கிளம்பினாலே ஊரில் ஆளாளுக்கு நடுங்க ஆரம்பித்து விடுவார்கள்.ஏன் எனில் பவுனுத்தாயி ஒரு பெண் என்றாலும் 10 ஆண்களுக்கு சமம்.அடாவடியாக நடந்து கொள்வாள்.


நாயகிக்கு 3 மகன்கள்,ஒரு மகள்.ஒரு மகனுக்கு 35 வயது கடந்தும் முதிர்கண்ணனாகவே சுற்றி வருகிறார் (முதிர் கன்னிக்கு ஆண்பால் முதிர் கண்ணன் தானே?) மற்ற இரு மகன்களுக்கும் திருமணம் ஆகி தனியே இருக்கின்றனர்.மகளுக்குத்திருமணம் ஆனாலும் வரதட்சணையில் பாக்கி இருப்பதால் நாயகி உடனேயே தனியே இருக்கிறாள்.

நாயகி பவுனுத்தாயியை யாருக்கும் பிடிக்காது.ஊர் மக்களுக்கும் சரி,குடும்ப உறவுகளுக்கும் சரி  உறவினர்களுக்கும் சரி சுத்தமாக இவரைப்பிடிக்காது.இவர் சீக்கிரம் போய்ச்சேர மாட்டாரா?என்று ஏங்குபவர்கள் தான் அதிகம்.

இப்படி இருக்கும் தருணத்தில்  நாயகி பவுனுத்தாயி திடீர் என படுத்த படுக்கை ஆகிறாள்.கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்.ஆனால் ஒரு கை மட்டும் அசைகிறது.ஏதோ சொல்ல வருகிறது.ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார்?என்பது யாருக்கும் புரியவில்லை.

உறவினர்கள் பலரும் நாயகியைப்பார்த்து விட்டுப்போக வந்த வண்ணம் இருக்கிறார்கள்.வாரிசுகள் நினைப்போ நாயகி இறந்து விட்டால் அவரது நகைகளைப்பங்கு போட்டுக்கொள்ளலாம் என்றே இருக்கிறது. அவரின் சாவுக்காகக்காத்திருக்கிறார்கள்.

இப்போது தான் கதையில் ஒரு ட்விஸ்ட்.நாயகியைப்பார்க்க வந்த ஒரு நபர் பவுனுத்தாயி நல்லா இருக்கனும்.நான் ஒரு பொற்கொல்லன்.என்னிடம் தான் 190 பவுன் நகை ஆர்டர் செய்து வாங்கிப்போனார் எனக்கொளுத்திப்போடுகிறார்.

ஒரு பவுன் சுமாராக ஒண்ணே கால் லட்சம்.அப்போ மொத்த மதிப்பு  கிட்டத்தட்ட இரண்டே கால் கோடி ரூபாய்.

அவ்வளவு தான்,வாரிசுகளுக்குப்பொறுக்கவில்லை.மொத்த நகைகள் ஒரு புதையல் போல.எங்கே வைத்திருப்பார்?எனத்தேட ஆரம்பிக்கின்றனர்.

இதற்குப்பின் என்ன நிகழ்ந்தது?நாயகி உயிர் பிழைத்தாரா?நகைகளின் கதி என்ன?யாருக்குக்கிடைத்தது?இவை எல்லாம் மீதித்திரைக்கதையின் சுவராஸ்யமான அம்சங்கள்.


நாயகி பவுனுத்தாயி ஆக ராதிகா பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஒவ்வொரு முறை ஒப்பனை இடும்போது 4 மணி நேரம் ஆனதாம்.தேசிய விருது கிடைக்க வாழ்த்துகள்.


அவ்வை சண்முகி,இந்தியன் ஆகிய படஙகளில் கமலுக்குப்போட்ட மேக்கப் மாதிரி தான்,ஆனால் ஒரு குறை.இந்தியன் படத்தில் சுகன் யாவுக்கான மேக்கப் சரி இருக்காது.துருத்திக்கொண்டு இருக்கும்.அது போல் க்ளோசப் காட்சிகளில்  ஒப்பனை எடுபடவில்லை.முகத்துக்கு மட்டும் மேக்கப் போட்டு விட்டு கை,கால்களை விட்டு விட்டார்கள்.


ஆனால் ராதிகாவின் நடிப்பில் குறை எதுவும் இல்லை.பசும்பொன்,கிழக்குச்சீமையிலே படங்களில் நடித்தது போல் இது  அவருக்கு ஒரு வாழ்நாள் சாதனைப்படம்.

நாயகியின் மகன்களாக  சிங்கம்புலி,அருள் தாஸ்,பால சரவணன் மூவரும் செய்யும் அலப்பறைகள் அருமை.

கமல் ரசிகராக சிங்கம் புலி செய்யும் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.ஆட்டோ டிரைவர் ஆக வரும்  அருள் தாஸ் அந்த கேரக்டருடன் ஒன்றி நடித்திருக்கிறார்.பால சரவணனின் காமெடி ஒன் லைனர்கள் சரவெடி.

நாயகியின் மகளாக வரும் ரேச்சல் ரெபாக்கா வசனமே அதிகம் பேசாமல் ஒரு பார்வை ,ஒரு அசைவு ,உடல் மொழி மூலமாகவே கவனம் ஈர்க்கிறார்.

நாயகியின் மருமகனாக வரும் முத்துக்குமார்  வந்த சீனில் இருந்து கடைசி சீன் வரை முத்திரை பதிக்கிறார்.


நாயகி வரும் காட்சிகள் என்று பார்த்தால் முதல் 15 நிமிடஙகள் ,கடைசி 20 நிமிடஙகள் மட்டும் தான்.மொத்தப்படத்தையும் தோளில் தாங்கி நிற்பது படததின் அனைத்துக்கேரக்டர்களும் தான்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓக்கே ரகம் ஆக இருக்கின்றன.சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

நாயகிக்குப்போட்ட மேக்கப் பிராஸ்தடிக் மேக்கப் என சொல்லப்படுகிறது. ஆலங்குடி செல்லத்துரை தான் ஒப்பனையாளர்.

ஒளிப்பதிவு விவேக் விஜயகுமார்.கிராமிய அழகைக்கண் முன் நிறுத்துகிறார்.

சான் லோகேசின் எடிட்டிஙகில் படம் முதல் பாதி சுமாராகவும்,பின் பாதி பிரமாதமாகவும் ரசிக்க வைக்கிறது

சபாஷ் டைரக்டர்


1 மதுரை ஏரியாவில் தட்டுவாணி என்ற வசைச்சொல் உண்டு.அதைப்படத்தில் பயன்படுத்திய விதம்.இது தமிழ் சொல்லே இல்லை,அடஙகாத குதிரை என்பதைக்குறிக்கும் மராட்டிய சொல்.இது மாதிரி வழக்குத்தமிழ் சொல்லாடல்களை பயன் படுத்திய விதம் அருமை

2  கமல் ரசிகராக வரும் ஒரு கேரக்டர் தன் கையில் பச்சை குத்தி இருக்கும் கமல் உருவத்தைப்பார்த்து இவரும் ஆண்டவர் தான்,பட்டையை இவருக்கும் போட்ருவோம் என திருநீறு பூசுவது செம

3 இயக்குநர் ஒரு கமல் ரசிகர் என்பதால் படம் முழுக்க கமல் ரெப்ரன்ஸ் ,,கமல் பாடல்கள் என தியேட்டரில் ஆரவாரம்.இது லப்பர் பந்து படத்தில் கேப்டன் விஜய்காந்த்  படப்பாடல்களைப்பயன்படுத்தியது போல

,4 இத்தனை வருடங்களாக நான் சேர்த்து வைத்த பாண்டித்யம் இது தான் என நாயகி வாரிசுகளுக்கு உணர்த்தும் காட்சி அருமை.

5  நகைச்சுவை ,செண்ட்டிமெண்ட் எமோஷனல் சீன்ஸ் என்று கலந்து கட்டி காட்சிகளைக்கோர்த்த விதம்

6 ஒரே ஒரு சீனில் வந்தாலும் இளவரசு செய்யும் அலப்பறை 

7 கடைசி 20 நிமிடங்களில் வரும் செண்ட்டிமெண்ட் சீன்ஸ், பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்னும் கருத்து சொல்லப்பட்ட விதம்

8 ஒரு திருமணத்தை நான் எப்படிப்பார்க்கிறேன் என்று முனீஷ் காந்த் உருக்கமாகப்பேசும் சீக்வன்ஸ் டச்சிஙக்.

,9 விஸ்வரூபம் டைட்டில் பிஜி எம் மைப்பயன்படுத்திய விதம் ,இடம் அருமை

10 கங்காரு அடிகள் கேரக்டரில் வரும் குடிகார சாமியார் செய்யும் அலப்பறை யில் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.

11 ஜார்ஜ் மரியன் கேரக்டர் சிறியதாக இருந்தாலும் பயன் படுத்திய விதம் பிரமாதம்..

12 பல்லாஙகுழி மேட்டர் ஸ்மார்ட் ஆன ஐடியா

13  ரஜினி படம் பாட்டுப்போடு என சொன்னபோது தேடிக்கொண்டிருப்பவரும் டேய்,தலைவர் 170 படம் நடிச்சிருக்கார்.அப்பாஸ் படத்தைத்தேடற மாதிரி தேடிட்டு இருக்கே? என்று கவுண்ட்டர் கொடுக்கும் சீனில் தியேட்டர் வெடித்துச்சிரித்தது.



ரசித்த வசனங்கள்

1 நம் எதிரே இருப்பவருக்குப்புரியாத மொழியில் பேசுவதால் என்ன பெருமை?

2 பொழுது மட்டுமல்ல,பொண்ணும் போனாத்திரும்பி வராது

3 மனுசன் சந்தோஷமா வாழப்பணம்  தேவையா?என்பது தெரியல.ஆனா மரியாதையா வாழப்பணம் தேவை

4 பணம் எல்லாம் வேணாம் ,காசு தேவை இல்லை என்று ஒருவன் சொன்னால் அவன் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்தவன் ஆக இருப்பான்.

5 தைரியத்துக்கும் ,வீரத்துக்கும் ஆண் கடவுள் தான் என்றாலும் கல்விக்கடவுள்,செல்வத்துக்கான கடவுள் பெண் கடவுள்கள் தானே?

6 எந்தப்பெத்தவங்களுமே காசில்லை என்பதற்காக  தான் பெத்த குழந்தைகளைக்கொல்வதில்லை.




லாஜிக் மிஸ்டேக்ஸ்,திரைக்கதையில் சில நெருடல்கள்


1 படத்தின் டைட்டில் ஆக  நாயகியின் பெயர் ஆன பவுனுத்தாயி என்பதையே வைத்திருக்கலாம்.பெண்மைக்குப்பெருமை சேர்ப்பதாக இருந்திருக்கும்.சிவகார்த்திகேயன் படத்தில் ஹிட் ஆன பாடல் வரி என்பதால்  தாய்க்கிழவி என்று வைத்தது என்னமோ மாதிரி இருக்கு.(அதிலும் ஒரு பிழை.செண்ட்டிமெண்ட் கருதி தாய் கிழவி.க் கட்)

2 சின்னக்கவுண்டர் படத்தில் நாயகனின் கேரக்டர் டிசைனை விளக்க ஓப்பனிஙகில் ஒரே ஒரு சீன் வைத்திருப்பார்கள்.கெத்தான சீன் அது.ஓப்பனிஙக் சாங்கில் நாயகி கேரக்டர் டிசைனை விளக்க ஏகப்பட்ட காட்சிகளை வைத்து மொத்தமாக ஒரு பாட்டிலேயே முடித்து விட்டார்கள்.அதனால் அந்தக்கேரக்டரின் சுவராஸ்யம் குறைவு.( மைக்கேல் மதன காமராஜன் படத்தில் டைட்டில் சாங்க் ஆன கதை கேளு பாடலில் மொத்தக்கதையும் சொன்ன மாதிரி)

3  குஷி ரெப்ரன்ஸ் காமெடி எடுபடவில்லை.

4 பின் பாதியில் வரும் பி ஜி எம் காந்தாரா பி ஜி எம் மை நினைவு படுத்துகிறது

5 நாயகி ராதிகாவின் கேரக்டர் ஸ்கெட்ச் புதிதாக இருந்தாலும் சில சீன்களில் அவரது நடிப்பு ஜீன்ஸ் படத்தில் வரும் ராதிகாவின் சுந்தராம்பாள் கேரக்டரை நினைவுபடுத்துகிறது.

6 சீக்கிரமாப்போய் சேரு சீயானுக்குத்துணையா என்ற பாடல் வரும்போது படத்தில் வரும் கேரக்டர்கள் போலவே ஆடியன்சுக்கும் ராதிகா செத்தால் என்ன?பிழைத்தால் என்ன?என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால் ஒரு எமோஷனல் கனெக்ட் இல்லை.

அடல்ட் கண்டெண்ட் வார்னிங் - 13+ குடும்பத்துடன்  பார்க்கலாம் (கிராமீய வசவுச்சொற்கள் சில வரும்)


பைனல் கமெண்ட்..அருமையான கிராமத்துக்கதை.முதல் பாதி சுமார் ரகம்,பின் பாதி சுவராஸ்யம்.பெண்களுக்கான படம்.கமர்சியல் ,காமெடி,செண்டிமெண்ட்ஸ் என கலந்து கட்டி அடித்த படம்.ரேட்டிங்க் 3.5 /5. ஏ செண்ட்டர்களில் சுமாராகவும் ,பி & சி செண்ட்டர்களில் பிரமாதமாகவும் ஓடும்


Thursday, February 19, 2026

ஒளிமயமான எதிர் காலம் இருக்கும் டாப் 13 வங்கிப்பங்குகள்

 வங்கிப்பங்குகள்  என்று  பேச்சு  எடுத்தாலே  ஹெச் டிஎட்சி , ஐசிஐசிஐ, எஸ்பிஐ ,  இந்த  மூன்று  பங்குகளைத்தான்  பலரும்  சொல்கிறார்கள் . ஆனால் என்  கணிப்பில்  மிக  வேகமாக  வளர  இருக்கும்  டாப்  13  வங்கிபங்குகள்  பட்டியல்  இதோ 


1   J & K  BANK - 112

2  KOTAK -176

3 KARURVUYSYA -135

4 UJJIVANSFB-57

5 TMB -578

6 CUB -137

7 RBL -245 

8  SOUTHBANK -26

9EQUITAS BANK - 97

10 CSB - 359

11  DCB - 122

12 UTKARSHBANK-57

13  SURYODAY BANK -163

இந்தப்பங்குகளின்  விலை  மேலே  குறிப்பிடப்பட்டிருப்பது கட்டுரை  எழுதிய  நாள் ஆன 16/10/23  அன்று  இருந்த  விலை   இந்தப்பங்குகளை  வாங்குவது  அவரவர்  விருப்பம். நான்  செபி  ரெஜிஸ்டர்டு பர்சன்  கிடையாது . இது  ஒரு  எஜூக்கேசன்  பர்ப்பஸ்க்காக  எழுதப்பட்டது  மட்டுமே. ஷேர்  மார்க்கெட்டில்  முதலீடு  செய்வது  ரிஸ்க்  ஆனது 

Wednesday, February 18, 2026

SORE: A WIFE FROM THE FUTURE (2025)-இந்தோனேசியன் மூவி- சினிமா விமர்சனம் (சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டைம் லூப் ட்ராமா)@யூ ட்யூப்

              




      திரைப்பட விழாக்களில் திரை இடப்பட்டு 13 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டு 9 விருதுகளை வென்ற படம்.சிறந்த படம்,சிறந்த நடிகர்,சிறந்த  நடிகை,சிறந்த எடிட்டிங்க் ,சிறந்த திரைக்கதை,சிறந்த இயக்கம்,   சிறந்த பிஜி எம் உட்பட 9 விருதுகளை வென்றது.ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்ட படம்


10/7/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது 25/1/2026 முதல்   யு ட்யூப்பில் காணக்கிடைக்கிறது


2017ம் ஆண்டு இதே டைட்டிலில் வெப் சீரிஸ். ஆக முதலில் வந்தது.அதை இயக்கிய அதே இயக்குநர் தான் அதே டைட்டிலில் படமாக எடுத்திருக்கிறார்    .ஆனால் வெப் சீரிசில் நாயகி வேறு,படத்தில் வேறு ஒரு நாயகி.  


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு புகைப்படக்கலைஞன்.தான் எடுத்த படங்களில் இருந்து சிறந்ததைத்தேர்ந்தெடுத்து ஒரு ஆல்பம் போல் வெளியிட்டு  கண்காட்சி நடத்தத்திட்டம் இடுகிறான்.


நாயகனுக்கு ஒரு காதலி உண்டு.செல்வச்சீமாட்டி.அவளது அப்பா அவள் பெயரில் ஒரு ஹோட்டல் ஆரம்பித்துக்கொடுக்க இருப்பதாகவும் நாயகன் விரும்பினால் அந்த ஹோட்டலில் வந்து இருக்கலாம் எனவும் தெரிவிக்கிறாள்.ஆனால் நாயகனுக்கு இது பிடிக்கவில்லை.


நாயகனின் அம்மா இறந்து விட்டதால் நாயகனின் அப்பா திடீர் என வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து கொள்கிறார்.இது நாயகனுக்குப்பிடிக்கவில்லை.அப்பாவை விட்டு விலகியே இருக்கிறான்.

ஒரு நாள்  நாயகன் தன் வீட்டின் படுக்கை அறையில் காலையில் கண் விழிக்கும்போது தன் அருகே ஒரு பெண் அமர்ந்திருப்பதைப்பார்த்துத்திடுக்கிடுகிறான்.அவளை முன் பின் இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை.


யார் நீ என்று அவளிடம் கேட்கும்போது நான் தான் உன் மனைவி ,பெயர் சோரே.எதிர் காலத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்கிறாள்.

நாயகனுக்குப்புரியவில்லை.தன் நெருங்கிய நண்பனுக்கு போன் பண்ணி நீ யாரையாவது அனுப்பினாயா?இதெல்லாம் என்ன விளையாட்டு ?என்கிறான்.ஆனால் நண்பன் மறுக்கிறான்.

பிறகு அந்தப்பெண்ணிடம் நீ தான் என் வருஙகால மனைவி என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க அவளும் நாயகனைப்பற்றிய அனைத்து விபரங்களையும் சொல்கிறாள்.

அங்க அடையாளங்கள் போதாது என நாயகன் வீட்டில் பீரோவில் வைத்திருக்கும் போட்டோக்களின் விபரஙகளையும் துல்லியமாகக்கூறுகிறாள்.நாயகன் குடும்பத்தில் இருக்கும் அனைவர் பெயரையும் சொல்கிறாள்.


இப்போது நாயகனுக்குக்கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.சரி,எதற்காக வந்திருக்கிறாய்? எனக்கேட்க உன் வாழ்க்கையில் உன்னை முன்னேற்ற வந்திருக்கிறேன் எனக்கூறுகிறாள்.


நாயகனுக்கு தம் அடிக்கும் பழக்கமும் தண்ணி அடிக்கும் பழக்கமும் உண்டு.அதை விடச்செய்கிறாள்.உடல் பயிற்சி செய்யும் பழக்கமே இல்லை.தினமும் ஜாகிங் போக வைக்கிறாள்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் நாயகி நாயகனிடம் நீ இன்னமும் எட்டு வருடங்களில் இறந்து விடுவாய்..என்ற ரகசியத்தை சொல்கிறாள்.இதை சொன்னதும் படைப்பு விதியை மீறியதால் நாயகி இறக்கிறாள்


மேலே இதுவரை நான் சொன்னது படத்தின் முதல் 25 நிமிடக்கதை தான்.


இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை

நாயகி ஆக ,வருங்கால மனைவி ஆக ஷீலா தாரா ஐசா பிரமாதமாக நடித்திருக்கிறார்.நாயகனை விட அதிகக்காட்சிகளில் வருகிறார்.ஒரே ஒரு புன்னகை மூலம் எல்லாப்பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் லாவகம் அருமை.இவரது சிகை அலஙகாரம் நம்ம ஊர் அம்பிகா போல் இருக்கிறது.


டைம் லூப்பில் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு முறை கலங்கும்போதும் உருக வைக்கும் நடிப்பு.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உன் மனைவி  என்று சொல்லும் இடங்கள் கவி நயம் மிக்கவை.


நாயகன் ஆக டையான் வீக்கோ நடித்திருக்கிறார்.இவர் முதலில் மாடலிஙக் துறையில் இருந்தவர்.நம்ம ஊர் ஜெமினிகணேசன் போல் தோற்றம்.அப்பாவின் மீது ஏன் வெறுப்பு என்பதை விளக்கும் காட்சியில் நடிப்பு சிறப்பு.

நாயகனின் காதலியாக கெஸ்ட் ரோலில் இரண்டே காட்சிகளில் வருகிறார்  லாரா.

நாயகனின் அப்பா,நண்பர் என படத்தில் வரும் மற்ற அனைத்து சின்ன சின்னக்கேரக்டர்களும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவு டிமாஸ் பாகுஸ் ட்ரையட்மா.நாயகன் போட்டோகிராபர் என்பதால் ஒளிப்பதிவில் பல பிரேம்களை உலகத்தரத்தில் படம் பிடித்து இருக்கிறார்.


இசை ஓபல் ஒபாஜா சேத்தியவான்.பின்னணி இசையில் மென்மை ,மேன்மை காட்டி இருக்கிறார்.

ஹேண்ட் ரா வின் எடிட்டிங்கில் படம்  119 நிமிடங்கள் ஓடுகிறது

கதை,திரைக்கதை,இயக்கம் யாண்டி லாரன்ஸ்.


சபாஷ்  டைரக்டர்

1 தமிழில் வந்த மாநாடு படம் போல டைம் லூப் கதை என்பதால்  சில காட்சிகள் திரும்பத்திரும்ப வந்தாலும் ஒரு முறை கூட போர் அடிக்கவில்லை.

2  எதிர் காலத்தில் இருக்கும் நாயகி விடும் கண்ணீர் நாயகன்  வைத்திருக்கும் பெயிண்ட்டிங் மீது படுவதைப்பார்த்து மழைத்துளி ஆக இருக்கும் என நாயகன் நினைக்கும் சீன்

3.  நாயகன் நாயகியை முத்தமிட வரும்போது அதெல்லாம் திருமணத்துக்குப்பின் தான் என தமிழ்க்கலாச்சாரத்தை  இந்தோனேசியன் மூவியில் புகுத்திய விதம்

4 நாயகி படம் முழுக்க அணிந்து வரும் ஆடை வடிவமைப்பு மிக சிறப்பு.கண்ணியம்

5 ஒவ்வொரு முறை டைம் லூப்பில் மாட்டி நாயகி ஒரே இடத்துக்குத்திரும்பத்திரும்ப வரும்போது நாயகனுக்கு அது பற்றி எதுவும் தெரியாதது ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொன்ன விதம்

6 ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப்பின்னாலும்  ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நிரூபிக்கும் விதமாக நாயகி தனக்காக எதுவும் வேண்டாமல் நாயகனுக்காகவே வாழ்வது

7 மொழி புரியாமல் ,வசனம் புரியாமல் பார்ப்பவர்களுக்குக்கூட கதை புரியும் வண்ணம் காட்சிகளிலேயே கதை சொன்ன ஆளுமை

டல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-13+ க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாநாடு மாதிரி டைம் லூப் படங்கள் பிடிக்கும் என்போர் ,ரொமாண்டிக் மெலோ ட்ராமாவை ரசிப்பவர்கள் அவசியம் காண வேண்டிய படம்.ரேட்டிங்க் 3.5 /5



Sore: A Wife from the Future
Theatrical release poster
Directed byYandy Laurens
Written byYandy Laurens
Based onSore: Istri dari Masa Depan
by Yandy Laurens
Produced bySuryana Paramita
Starring
CinematographyDimas Bagus Triatma
Edited byHendra Adhi Susanto
Music byOfel Obaja Setiawan
Production
companies
  • Cerita Films
  • Slingshot Pictures
  • Imajinari Productions
  • Miles Films
  • Studio Artemis
  • Jagartha
  • Trinity Entertainment
  • Dwidaya Amadeo Gemintang
Release date
  • 10 July 2025 (Indonesia)
Running time
119 minutes
CountryIndonesia
Languages
  • Indonesian
  • Croatian
  • English


Tuesday, February 17, 2026

யோகிடா (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் திரில்லர் )

               

             ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன்  முன்னாள் ரவுடி , இந்நாள் தொழில் அதிபர் . வில்லனின் அண்ணன்  ஆளும் கட்சி   அமைச்சர்   என்பதால் , அரசியல்  பலம் , அதிகார   பலம்  இவற்றால்  எல்லோரையும் விலைக்கு  வாங்கி விடுபவன் .போதைப்பொருள்  கடத்தல்  தொழில்  உட்பட  பல வில்லத்தனங்களை செய்து வருகிறான் 


 நாயகி  ஒரு நேர்மையான  போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . துணிச்சல் ஆகவும் ,கண்டிப்புடனும்  லஞ்சம்  வாங்காத  அதிகாரி ஆக இருப்பதால் நாயகி அடிக்கடி பணி  இட  மாற்றம்   செய்யப்படுகிறார் . இப்போது  சென்னையில்  வியாசர்பாடி  ஏரியாவில்  பணி  புரிகிறார் 


போலீஸ்  கமிஷனர்  ஒரு பெண்   தான் , ஆனால் அவர் வில்லனின்  கையாள்  ஆக   இருப்பதால்  நாயகிக்கு அடிக்கடி  இலாகா ரீதியான   குடைச்சலைதருகிறார் 

ஒரு போலியான  விபத்தை செட்   செய்து   வில்லன் நாயகியை  காயப்படுத்துகிறான் . ஹாஸ்ப்பிடலில்  சிகிச்சை பெற்று  சில மாதங்கள் கழித்து  வெளியே   வரும்  நாயகி  வில்லனின்  போதைப்பொருளை கைப்பற்றுகிறாள் . கோடிக்கணக்கான  மதிப்புள்ள சரக்கு பறி போனதால் ஆத்திரம்  அடைந்த  வில்லன்   தன்  அண்ணன்   ஆகிய   அமைச்சர்  உதவியுடன்   நாயகியை  மயக்கப்படுத்தி  பாலியல்  வன் கொடுமை  செய்து விடுகிறார்கள்  இருவரும்.


 நாயகி  வில்லனை  கோர்ட்டில்  சந்திக்கிறாள்  . இதற்குப்பின்   நிகழும்  சம்பவங்கள்   தான் மீதித் திரைக்கதை 


 நாயகி ஆக சாய்  தன்ஷிகா கம்பீரமாக  நடித்திருக்கிறார் . ஆக்சன்  காட்சிகளில்  பொறி பறக்கிறது . டூப்  போடாமல்  பல சண்டைக்காட் சிகளில்  துணிச்சல் ஆக நடித்த அவருக்கு ஒரு சபாஷ் 


வில்லன் ஆக  கபீர்  துகான்  ஆஜானுபாகவமான தோற்றம் .அடிக்கடி  நாயகியுடன் மோதும் சீன்கள்  பரபரப்பு . அமைச்சர் ஆக சாயாஜி  ஷிண்டே  சிரித்த படி  வில்லத்தனம்   செய்கிறார் . இவருக்கு  மெயின் வில்லன் போல்  அதிக வாய்ப்பு இல்லை 

இயக்குனர்  அமரர்  மனோபாலா  போலீஸ்   கான்ஸ்டபிள் ஆக  வருகிறார் . மற்ற   அனைவரும்  அவரவருக்குத்தந்த  வேடத்தை சரியாக செய்து  இருக்கிறார்கள் 


எஸ் கே  பூபதியின்  ஒளிப்பதிவு  சிறப்பு , தீபக் தேவின்   இசையில்  பாடல்கள்  சுமார் ரகம் தான் , பின்னணி இசையும்  சராசரி தரம் தான் . கணேஷ் குமாரின்  சண்டைக்காட் சி வடிவமைப்பு அருமை . ஜி சசிகுமாரின்   எடிட்டிங்கில்  படம்  2 மணி  நேரம்  ஓடுகிறது . கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  கவுதம் கிருஷ்ணா 



சபாஷ்  டைரக்டர்


1  வைஜெயந்தி ஐ பி எஸ்  மாதிரி  ஒரு படம்  கொடுக்க வேண்டும் என்ற    இயக்குனரின்  முயற்சி  இருக்கிறது . விஜயசாந்தி  மாதிரி ஆக  வேண்டும் என்ற  சாய் தன்ஷிகாவின் உழைப்பு இருக்கிறது . ஆனால்  திரைக்கதை   கை  கொடுக்கவில்லை 


2  தேசியக்கொடி பெருமை பற்றிப்பேசும்  நாயகி  எங்கெல்லாம் , என்ன  காரணங்களுக்காக   எல்லாம்   தேசியக்கொடி  அரைக்கம்பத்த்தில்  பறக்கவிடப்படும் ?  என்ற  விபரங்களைப்பட்டியல் இடும் சீன அமர்க்களம்  


3  விஷால்  கூட  வியக்கும் வண்ணம்  ஆக்சன் ஸீக்வன்ஸ்  சாய் தன்ஷிகா சாகசம் 

4  நாயகிக்கு  ஒரு ஜோடி , டூயட்   என்று  கதையில்   திசை மாறாமல்   பயணித்தது  



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கெட்ட   பய  சார்   இந்தக்காளி   என்ற   ரஜினியின்   புகழ்  பெற்ற  பஞ்ச் டயலாக்கை  உல்டா  பண்ணி   உபயோகித்தது  


2 போலீஸ்  இன்ஸ்பெக்ட்டரை  பாலியல்   வன் கொடுமை  செய்யும்   வில்லன்   அவருக்கே  போன்  செய்து  வாக்குமூலம்  கொடுத்து   மாட்டுகிறார் .நாயகி  அதை செல் போனில்  ரெக்கார்டு செய்து சாட்சி ஆக உபயோகிப்பார்  என்பதை யூகிக்க முடியாதா?


3  வில்லனிடம்  சவால்  விடும்போது  நாயகி   தம் அடிப்பது ,அந்த  கேரக்ட்டருக்கே பின்னடைவே


4 திரைக்கதை , சம்பவங்களில்  புதுமை இல்லை . ஆல்ரெடி பல  படங்களில்  பார்த்தவை தான் 


5  கோர்ட்டில்  நாயகி டெ லிபோன்  உரையாடலை  ஒப்படைக்கும்போது  ஒரு காப்பி  எடுத்து   வைத்துக்கொள்ள மாட்டாரா? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சலித்துப்போன , புளித்ததுப்போன  போலீஸ்  வில்லன்  மோதல்  கதை . சாய்  தன்ஷிகா  நடிப்புக்காக  பார்க்கலாம் . ரேட்டிங்க்  2 / 5

Monday, February 16, 2026

MANA SHANKARA VARA PRASAD GARU (2026)-மன சங்கர வர பிரசாத் காரு - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம்

                     

        200 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  உருவான இந்தப்படம்  12/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி  முதல் 32 நாட்களில்  300 கோடி  வசூலித்து  மெகா  ஹிட் ஆகி  இருக்கிறது . ஆக்சன் மசாலா  ஹீரோ ஆன சிரஞ்ஜீவி  தம்பிக்கு எந்த ஊரு  டைப் ரஜினி போல , வின்னர்   வடிவேலு  போல  காமெடி  கலந்து  வித்தியாசமான  ஆக்சன்  மூவியைக்கொடுத்திருக்கிறார் . 11/2/2026  முதல்  ஜீ 5 ஓடிடி  யில்  தமிழ்  டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது 


அணில் ரவிப்புடி  ,விஜய்  நடிப்பில்  ஹெச்  வினோத் இயக்கத்தில்  உருவான  ஜன நாயகன்  படத்தின் ஒரிஜினல்  வெர்சன் ஆன பகவான் கேசரி படத்தின் இயக்குனர் இவர் தான் .சங்கராந்திக்கு  வஸ்துண்ணம்  என்ற மெகா ஹிட்  படத்தை 2024ல் இயக்கியவரும்  இவர் தான் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  மத்திய  அரசுப்பணி யில்  நேஷனல்  செக்யூரிட்டி  டிபார்ட்மெண்ட்டில் ஹையர் ஆபீசர் ஆக இருக்கிறார் . நாயகி  இந்தியாவில்  இருக்கின்ற  மாபெரும்  தொழில் அதிபர்களில்   ஒருவரின் மகள் . நாயகிக்கு  திருமணம் . மேடையில்  நாயகிக்கு  மாப்பிள்ளையைப்பிடிக்கவில்லை என அறிவித்து திருமணத்தை நிறுத்துகிறார் . தன்னை மதிக்காத , பெண்ணை மதிக்காத ஆள்  கூட  எப்படிக்குடும்பம் நடத்துவேன்? என்கிறார் .. நாயகன்   நாயகியின் துணிச்சலைப்பாராட்டுகிறார் . இதுதான்  நாயகன் - நாயகி  இருவருக்கும் முதல் அறிமுகம் 


அடுத்து   கேரளாவில்  இன்னொரு  திருமண  விழாவில்  நாயகியை நாயகன் சந்திக்கிறார் . இப்போது  நாயகியின் தோழி தான் மணப்பெண் .இது போல  வெவ்வேறு  விழாக்களில்  சந்தித்த  இருவரும்  பரிச்சயம் ஆகிறார்கள் .

 திடீர்   என ஒரு  விழாவில் நாயகி நாயகனிடம் நாம்  இருவரும்  திருமணம் செய்து  கொண்டால் என்ன?  எனக்  கேட் க நாயகனும் சரி சொல்கிறார் . இருவருக்கும்   திருமணம்  நடக்கிறது . ஆனால்   நாயகியின் அப்பாவுக்கு இந்தத்திருமணத்தில்   இஷ்டம் இல்லை . இருந்தாலும்  செல்ல மகளுக்காக அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை .


தம்பதிக்கு  ஒரு மகன் , ஒரு மகள்   என இரு வாரிசுகள்  பிறக்கின்றன 


 ஆரம்பத்தில்  நாயகன்  கம்பெனியில் எம் டி மாதிரி  இருக்கிறான். பின் மாமனாரின் சதியால்  வீட்டு வேலைகளைப்பார்த்துக்கொள்கிறான் . கம்ப்பெனியை நாயகி பார்த்த்துக்கொள்கிறார்  . கம்ப்பெனி  வேலை  விஷயமாக  நாயகி அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது


 சில சதி  வேலைகள்  செய்து  மாமனார்  நாயகன் - நாயகி  இருவரையும்  பிரித்து விடுகிறார் . டைவர்ஸும் ஆகி விடுகிறது 


இதுவரை  மேலே   சொன்னவை படத்தின்  முதல்  15 நிமிடக்கதை . நாயகன்  எப்படி தனது  குழந்தைகளை , மனைவியை  தன வசப்படுததுகிறான் ? என்பதுதான்  காமெடிக்கலக்களான  மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக சிரஞ்சீவி  ஜெயிலர்  ரஜினி கெட்டப்பில்    கண்ணாடி , தாடி , மீசை உடன் வருகிறார் . ஓவர் பில்டப் தரும்  ஹீரோ  இன்ட் ரோ  ஆக்சன்  மசாலா  டெம்ப்ளேட்டில்  இருந்து  இறங்கி  வந்து  சிக்ஸர்   அடிக்கிறார் .  வின்னர்  வடிவேலு  மாதிரி  தன்னை தாழ்த்திக்கொண்டு  காமெடி  பண்ணும்  காட்சிகள்  அனைத்தும்  அருமை ,சிரஞ்சீவி  ரசிகர்களுக்கும்   இது   புதுசு 


 நாயகி ஆக  நயன் தாரா . ஆளுமையான  கதாப் பாத்திரம் . மன்னன்  விஜய சாந்தி   மாதிரி  மிடுக்குடன்  வருகிறார் .ஓப்பனிங்  சீன்களில்  நாயகன் அவரைப்பார்த்து   சூப்பர்  என அபிநயம செய்யும்போது  இவர்  காட்டும்  பாவனைகள் அழகு 


நாயகியின்   அப்பாவாக  சச்சின்  கேடெக்கர்  வருகிறார் . அவரது   வில்லத்தனமான  நடிப்பு அருமை . நய வஞ்சகச்சிரிப்பு  கமலின்  சத்யா  பட வில்லன்  கிட்டியை நினைவுபடுத்த்துகிறது 


நாயகனின்  செக்யூரிட்டி  டீமில்  வரும் ஒரு பெண்ணாக கேத்ரீன்  தெரேசா  வருகிறார் . அதிக  வாய்ப்பில்லை ., வந்தவரை ஓகே ரகம் 


வெங்கடேஷ்  கெஸ்ட்  ரோலில்   வருகிறார் 

 படத்தில்  நடித்த மற்ற  அனைவருமே  அவரவர்  பாத்திரத்தைத்திறம்பட  ஏற்று  நடித்திருக்கிறார்கள் 

பீம்ஸ்  செசிரெலியோ  இசையில் பாடல்கள்  ஆல்ரெடி  ஹிட் . பின்னணி இசையும்  நன்று . ஹீரோ  பில்டப் சீன்களில் பி ஜி எம் தெறிக்கிறது 


சமீர்  ரெட்டியின்  ஒளிப்பதிவில்  காட் சிகள்  அனைத்த்தும் பிரம்மாண்டம் . அதே போல் பாடல்  காட் சிகளும்  கலர்புல் கலக்கல் . தம்மி ராஜூவின்  எடிட்டிங்கில்  படம் 165  நிமிடங்கள்  ஓடுகின்றது . ஒரு சீன்  கூட போர் அடிக்காமல்  கலகலப்பான திரைக்கதை 

அமைத்து   இயக்கி  இருப்பவர்  அணில் ரவிப்புடி 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகன் , நாயகி  இருவருக்குமான  சந்திப்புக்காட் சிகள்  ,  காதல் மலரும் சீன்கள் காமெடி  கம் யதார்த்தம் 


2 நாயகன் திருமணத்துக்குப்பின்  நாயகிக்கு  வீட்டு வேலைக்காரனாக  மாறும் சீன்கள்  கலாட் டா  ரகங்கள் 


3 நாயகன்  தனக்குக்கீழ்  பணியாற்றும்  ஜூனியர்களிடம்  பந்தா  பண்ணி  பின் மொக்கை வாங்கும் இடங்கள் எல்லாமே  கலகலப்பானவை , அந்த சீன்களில் நாயகனின் உடல் மொழி அருமை 


4 நாயகன்  பி டி மாஸ்டர் ஆக  தனது வாரிசுகள் படிக்கும் பள்ளியில்  நுழைவது , அவர்கள் மனம் கவர மடத்தனமாக ஏதாவது செய்து  பல்பு வாங்குவது   அருமை 


5 தன்னை  மட்டம்  தட்டும் மாமனாரிடம்  நாயகன்  செக்யூரிட் டி  ஆபீசர் ஆக  சில டாஸ்க் எல்லாம் கொடுத்து அவரை ட்ரொல்  செய்வது  அருமை 


6  நாயகி  இரண்டாவது  கல்யாணத்துக்குத்தயார் ஆவது , புது  மாப்பிள்ளையை  நாயகன் எதிர் கொள்வது எல்லாமே  திரைக்கதைக்கு சுவாரசியம் 

7  ஓடி பி   என்றால்  ஒன டைம்  பளார்  என விளக்கம்  கொடுக்கும்   இரு  காட் சிகளும்   அருமை



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லன்  வலிமையானவர் என்பதைக்காட்டிட  எஸ் பி யை  அவரது ஆபீஸிலேயே  கொலை செய்வது எல்லாம் உருட்டோ  உருட்டு  ரகம் 

2  வில்லன்   நாயகியைக்கொலை   செய்ய   எளிமையான பலவழிகள் இருந்தும்  பாதுகாப்பான  பில் டிங்கில் இருக்கும்போது முயற்சிப்பது மடத்தனம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16 +



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விசுவாசம்  கதைதான் என்றாலும்   திரைக்கதையில்  ரசிக்கத்தக்க  காமெடிகள்  சேர்த்து இருப்பதால்  பார்க்கலாம் . ரேட்டிங்க்  3/5 


Mana Shankara Vara Prasad Garu
Theatrical release poster
Directed byAnil Ravipudi
Written byAnil Ravipudi
Produced by
Starring
CinematographySameer Reddy
Edited byTammiraju
Music byBheems Ceciroleo
Production
companies
  • Shine Screens
  • Gold Box Entertainments
Release date
  • 12 January 2026
Running time
165 minutes
CountryIndia
LanguageTelugu
Budget₹200 crore[1]
Box office₹297.25 crore[2]

Sunday, February 15, 2026

உருட்டு உலகநாதனின் டைரியிலிருந்து

1. கருவாடு மாதிரி இருக்கற உனக்கு கயாடு லோஹர் கேட்குதா? னு நீங்கள் கிண்டல் பண்ணினாலும் பரவாயில்லை ,நடந்த சம்பவத்தை சொல்லிடறேன்.ஒரு சினிமா விழாவில் அவங்களை நேரில் பார்த்தப்போ "உங்க பேரில் தா லோஹேர் (Low hair) ஆனா நிஜத்தில் உங்க கூந்தலில் ஹை ஹேர் ,டார்க் ஹேர் (high hair,dark hair) அதனால ஷாம்பு விளம்பரத்தில் நடிக்க நீங்க தான் பெஸ்ட் சாய்ஸ் என சொன்னேன்.அதைக்கேட்டு அவங்க என் அருமை,பெருமை தெரிஞ்ச நீங்க தான் லைப் பார்ட்னரா வர பெஸ்ட் சாய்ஸ் அப்டீன்னாங்க.ஆனா நான் சாரி சொல்லிட்டேன். ருக்மினி க்கு ஆல்ரெடி வாக்கு குடுத்திருக்கேனே?
2. பேச்சு வாக்கில் நீங்க கேட்டிருப்பீங்க.தலைகீழா நின்னு நீ தண்ணி குடிச்சாலும் அது நடக்காதுன்னு.அப்போ தான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சு .யோகா கிளாஸ்ல ஸ்டூடண்ட்ஸ் கிட்டே சிரசாசனம் செய்து கொண்டே தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்கனும்.புரை ஏறக்கூடாது.இது தான் கண்டிஷன்.எங்க யோகா டீச்சரால் கூட முடியலை.சிரசாசனம் செய்யும்போது தலை கீழே இருக்கும்,கால் மேலே இருக்கும்.நான் கடவுள் படத்துல ஆர்யா இண்ட் ரோ சீன் சிரசாசனம் தான்.
அப்போ யோகா டீச்சர் கேட்டாங்க.உன்னால முடியுமா?ந்னாங்க.இதெல்லாம் ஜூஜூபி மேட்டர் என சொல்லி ஓடும் ஆற்றில் சிரசாசனம் செய்து கொண்டே ஒரு லிட்டர் தண்ணீரே குடிச்சுக்காட்டினேன்
3. அடிக்கடி சினிமா பார்க்கறதால எங்க ஊர்ல ஒரு விழாவில் போட்டி வெச்சாங்க.ஒரே நாளில் 4 படங்கள் பார்த்து விமர்சனம் எழுதனும்னாங்க.இது ஜூஜூபி மேட்டரு.2010 லயே பண்ணிட்டேன்.ஒரே டைம் ல 4 திரை வரிசையாக்கட்டி 4 வெவ்வேற புது ரிலீஸ் படம் திரை இடுங்க.இரண்டு மணி நேரத்தில் 4 படங்களையும் பார்த்து அடுத்த அரை மணி நேரத்தில் 4 பட விமர்சனங்களையும் ரசித்த வசனங்கள் உட்பட போஸ்ட் போடறேன்னு சவால் விட்டு அதிலும் ஜெயித்தேன்


=====================================

1 காதல் என்பது தேமுதிக மாதிரி.அவ்வளவு சீக்கிரம் நமக்கு முடிவு தெரியாது.குழப்பிக்கிட்டே இருக்கும்
2 காதல் என்பது பக்கோடா மாதிரி,பல் இருக்கறவன்,பர்ஸ்ல பணம் இருக்கறவன் யார் வேணா சாப்பிடலாம்
3 காதல் என்பது சீமான் மாதிரி ,கதை அளந்துக்கிட்டே இருக்கும்,நம்ம கிட்டே இருக்கற பணத்தை எல்லாம் திரள் நிதி வசூலிப்பது போல ஆட்டையைப்போட்டிடும்
4. காதல் என்பது அஸ்கா சர்க்கரை மாதிரி ,உடல் நலனுக்குக்கெடுதல்னு தெரிஞ்சாலும் நம்மால அதைத்தவிர்க்க முடியாது
5. காதல் என்பது வாக்கிங்க் போற மாதிரி. பாடி மெட்டபாலிசம் மேம்பட நடைப்பயிற்சி மேற்கொண்டாலும் ஊரு சனம் உனக்கு சுகர் இருக்குதா?என சந்தேகமாக்கேட்கும்
6 காதல் என்பது சினிமா தியேட்டர் மாதிரி.தினசரி ,4 காட்சிகள் பார்த்தாலும் ஒரே படத்தைத்தான் நீ ஆயுள் முழுக்க திருப்பித்திருப்பிப்பார்க்கனும்
7 காதல் என்பது காங்கிரஸ் கூட்டணி மாதிரி. வாக்கு வங்கியே இல்லைன்னாலும் 40 தொகுதிகள் வேணும்னு மனசாட்சி இல்லாமல் கேட்பது போல நம்மால முடியாததை எல்லாம் நட்ட ஈடாக்கேட்கும்
8. காதல் என்பது சுடுகாடு மாதிரி,யாருக்குமே அங்கே போகப்பிடிக்கலைன்னாலும் எல்லாரும் ஒரு நாள் அந்த இடத்தை அடைந்தே தீர்வாங்க
,9 காதல் என்பது நயன் தாரா மாதிரி .வாழ்க்கையில் எந்நாளும் நமக்கு அது பயன் தாரா
10. காதல் என்பது மசால் வடை மாதிரி,சாப்பிடாம சும்மா பார்த்துட்டே இருந்தா கெட்டுப்போயிடும்.

Saturday, February 14, 2026

KIDNAPPED:ELEZABETH SMART( 2026)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம் (க்ரைம் டிராமா டாக்குமெண்ட் ரி)@நெட் பிளிக்ஸ்,

           

            இது உண்மையில் அமெரிக்காவில் நடந்த சம்பவம்.2002ம் ஆண்டு 14 வயது சிறுமி அமெரிக்காவில்  கடத்தப்படுகிறாள்.200 நாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்படுகிறாள்.உயிருடன் அவளை மீட்ட போலீஸ் கொடுக்கும் ஷாக்கிங் ரிப்போர்ட்டும் ,அந்த சிறுமியின் தன்னிலை விளக்கமும் தான் படத்தின் ஹை லைட்.இது குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த படம்.       


21/1/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி யில் ரிலீஸ் ஆன இந்தப்படம் தமிழ் டப்பிங் கில் இல்லை.


ஸ்பாய்லர்  அலெர்ட்


5/6/2002  அன்று அமெரிக்காவில் உட்டாஹ் மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில். அம்மா,அப்பா,தங்கை உடன் வசிக்கும் 14 வயது எலிசெபத் ஸ்மார்ட் என்னும் சிறுமி  கத்தி முனையில் கடத்தப்படுகிறாள்.


அப்போது 9 வயது தங்கை உடன் இருந்திருக்கிறாள்.கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய மர்மமனிதன் எலிசெபத் தை மட்டும் கடத்திச்சென்று விட்டான்.

போலீசில் புகார் அளிக்கப்படுகிறது.போலீஸ் மொத்தக்குடும்பத்தையும் விசாரிக்கிறது.குடும்பத்தை சேர்ந்த அல்லது குடும்பத்துக்கு அறிமுகம் ஆன நபர் தான் அவளைக்கடத்தி இருக்க வேண்டும் என போலீஸ் நினைக்கிறது.


காரணம்  கடத்தல் நடந்தபோது மர்ம மனிதனைப்பார்த்த ஒரே சாட்சி ஆன எலிசெபத்தின் தங்கை அளித்த வாக்குமூலத்தின்படி அந்த மர்மனிதனின் குரல் ஏற்கனவே பரிச்சயப்பட்ட குரல் ஆகவும் ,மென்மையான குரல் ஆகவும் இருந்ததாகச்சொன்னதுதான்.


போலீஸ் கடும் விசாரணையில் அவர்கள் வீட்டில் முன்பு கார்பெண்டர் ஆஜப்பணி புரிந்த ஆள் கைது செய்யப்படுகிறான்.விசாரணையில் அவன் தனக்கு எதுவும் தெரியாது என சொல்லி விடுகிறான்.கடத்தப்பட்ட எலிசபத்தின் தங்கை அந்த கார்ப்பெண்டரைப்பார்த்து  இவன் அல்ல என்று கூறி விடுகிறாள்.


ஆனால் போலீஸ் நம்பவில்லை.சிறுமி என்பதாலும் ,தூக்கக்கலக்கத்தில் இருந்ததாலும் அவள் குழம்பி இருக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர்.

ஆனால் போலீஸ் விசாரணையில் இருந்த அவன் நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே இறந்து விடுகிறான்.

எலிசபத் கடத்தப்பட்டு 180 நாட்களுக்குப்பின் ஒரு டிடெக்ட்டிவ் சந்தேகத்துக்கு இடமான நிலையில் மூவரை சந்திக்கிறார்.அவர்களில் ஒரு ஆண் ,மற்ற இருவரும் பெண்கள்.பெண்கள் இருவரும் பர்தா அணிந்து முகத்தை மறைத்து இருக்கிறார்கள்.

ஒரு பெண் 30 வயது மதிக்கத்தக்கவராகவும்,இன்னொருத்தி சிறுமி ஆகவும் இருப்பதால் முகத்திரையை அகற்றி முகம் காட்ட சொல்கிறார்.

ஆனால் அந்தப்பெண் மறுக்கிறார்.எங்கள் மத வழக்கப்படி  திருமணம் செய்யப்போகும் மணமகன்,அம்மா,அப்பா மூவர் மட்டுமே அந்தப்பெண்ணின் முகத்தைப்பார்க்க முடியும் என்று சமாளித்து விடுகிறார்.


ஆனால் அந்த சிறுமிதான் கடத்தப்பட்ட எலிசபெத்.20 நாட்களுக்க்ய்ப்பின் அதாவது எலிசபத் கடத்தப்பட்டு 200 நாட்களுக்குப்பின் போலீஸ் அவளைக்கண்டு பிடித்து விடுகிறது.


மீண்டு வந்த அவள் மீடியாவுக்குக்கொடுக்கும் பேட்டி தான் மீதிப்படம்

இதில் நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை.சம்பந்தப்பட்டவர்கள் தான் இருக்கிறார்கள்.


வழக்கில் சில சுவராஸ்யத்தகவல்கள்

1 எட்டு வருடங்கள் இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது.2010 ம் ஆண்டு தீர்ப்பு வந்தது

2 சிறுமியைக்கடத்திய நபருக்கு ஜாமீனில் ,பரோலில் வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

3 குற்றவாளிக்கு உதவி புரிந்த அவனது மனைவிக்கு 15 வருட சிறை தண்டனை  விதிக்கப்பட்டது.2018 ல் ரிலீஸ் ஆகி விட்டார்

4 கோர்ட்டில்  கேஸ் நடந்தபோது குத்றவாகி மன நிலை சரியில்லாதவன் போல் நடித்தான்.இதே போல் எட்டு சிறுமிகளை கடத்தி மணம் முடிக்க வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை.நேரடியாக ஆண்டவன் தான் என்னை செய்ய வைத்தார் என்றெல்லாம் வாதாடினான்.ஆனால் ஜட்ஜ் அவனை நம்பவில்லை

5 பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் தைரியமாக மீடியாவில் பேட்டி கொடுத்தார்.சராசரிப்பெண் போல் இனி வாழ விரும்புவதாக சொன்னது  ஹை லைட்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பரபரப்பு ,விறுவிறுப்பு பொன்ற கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் எதுவும் கிடையாது.டாக்குமெண்ட் ரி பார்த்து பழக்கமானவர்கள் மட்டும் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5 /5

Friday, February 13, 2026

NARI NARI NADUMA MURARI (2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி டிராமா)@அமேசான் பிரைம்

     


                        

14/1/2026 முதல் திரை அரஙகுகளில் வெளியாகி ரூ21 கோடி ரூபாய் வசூலைக்குவித்த இந்த லோ பட்ஜெட் படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் தமிழ் டப்பிங் உடன் காணக்கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த கண்ணியமான காமெடிப்படம் இது.


நாரி நாரி நடுமா முராரி என்ற டைட்டிலுக்கு 

கிருஷ்ணர் பெண்களுக்கு நடுவில் தான் இருக்கிறார்  எனப்பொருள் (இரு பெண்களுக்கு இடையே அல்லல் படும் நாயகனின் கதை)

ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகியின் அப்பா பிரபல வக்கீல்.அவருக்கு வரும் பெரும்பாலான கேஸ்கள் டைவர்ஸ் கேஸ்கள் தான்.குறிப்பாக லவ் மேரேஜ் ஆன ஜோடிகளின் டைவர்ஸ் கேஸ். பிரிவுக்குக்காரணமாக காதல் செய்தது தான் என அவர்கள் சொல்ல காதல் மீதும் ,காதல் கல்யாணத்தின் மீதும் நம்பிக்கை அற்றவராக நாயகியின் அப்பா திகழ்கிறார்.


நாயகனின் அப்பா மகனுக்குத்திருமணம் செய்ய வேண்டிய சமயத்தில் 25 வயதுப்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து ஊரார் கேலி செய்யும் அளவுக்கு காமெடிப்பீஸ் ஆனவர்.


நாயகி,நாயகன் இருவரும் காதலிக்கிறார்கள்.நாயகியின் அப்பா ஆரம்பத்தில் சம்மதிக்கா விட்டாலும் மகளின் பிடிவாதத்தால் சம்மதிக்கிறார்.ஆனால் ஒரு கண்டிஷன் போடுகிறார்.


திருமண மண்டபத்தில் உற்றார் ,உறவினர் கூடி செய்யும் திருமணம் ஆக இருக்கக்கூடாது.ரெஜிஸ்டர் ஆபீசில் தான் திருமணம் என்கிறார்.வேறு வழி இல்லாமல் அதற்கு நாயகன் சம்மதிக்க இப்போது ஒரு புது சிக்கல் வருகிறது.


நாயகன் ஏற்கனவே ஒரு பெண்ணைக்காதலித்துத்திருமணம் செய்தவன்.பிரேக்கப் ஆகி விட்டது.இது நாயகிக்குத்தெரியாது.


நாயகன்,நாயகி இருவரும் பணி புரியும் கம்பெனியில் எம் டி ஆக இருப்பவர் தான் நாயகனின் முன்னாள் காதலி.

இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.


எங்கேயும் எப்போதும் (2011) மெகா ஹிட் படத்தின் நாயகன் சர்வானந்த்தான் இந்தப்படத்தின் நாயகன்.அந்தப்படத்தில் சீரியஸ் ஆக வந்தவரை 15 வருடங்கள் கழித்து காமெடி கலந்த நாயகனாகப்பார்க்க  ஆச்சரியமாக இருக்கிறது.சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


நாயகி ஆக சாக்‌ஷி வைத்யா இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் கண்ணியம் கலையாத ஆடை வடிவமைப்புகள் அருமை.


நாயகனின் முதல் காதலி தியா ஆக சம்யுக்தா திறம்பட நடித்திருக்கிறார்.படத்தின் பின் பாதியில் இவரது குணச்சித்திர நடிப்பு கன கச்சிதம்


நாயகனின் அப்பாவாக நரேஷ் நடித்திருக்கிறார்.ஊரெல்லாம் கேவலமாகப்பேச அவர் டேக் இட் ஈசி பாலிசி ஆக உலா வருவது வெடிச்சிரிப்பு.

ரெஜிஸ்டர் ஆபீசில் பணி புரிபவர் ஆக காமெடி நடிகர் சுனில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு அவர் எழுப்பும் கேள்விகள் சிரிப்பு அலையை உருவாக்குகின்றன.

நாயகியின்  அப்பாவாக சம்பத் ராஜ் கனகச்சிதம்.வழக்கமாக கேங்க்ஸ்டர் ரோலிலேயே பார்த்த இவரை காமெடிப்படத்தில் அப்பா ரோலில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது.

நாயகன் சார்பாக வாதாடும் வக்கீல் ரோலில் வெண்ணிலா கிஷோர்  செய்யும் காமெடிகள் கதையோடு ஒன்றி வருகின்றன.

ஆட்டோ டிரைவராக வரும் சத்யா வும் ஓப்பனிங சீனிலும் ,க்ளைமாக்ஸ் சீனிலும்

சிரிக்க வைக்கிறார்.


விஷால் சந்திரசேகரின் இசையில் நான்கு பாடல்கள்.அவற்றில் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.பின்னணி இசையும் கச்சிதம்.

ஞானசேகர் +யுவராஜ் இருவரும் இணை ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.இரு நாயகிகள்,நாயகன் என அனைவரையும் அழகாகக்காட்டி இருக்கிறார்.

நக்கா வெங்கட் சாமியின் எடிட்டிஙகில் படம் 143 நிமிடஙகள் ஓடுகிறது.

பானு போக வரபு,நந்து சவுரிகனா ஆகிய இருவருடன் இணைந்து கதை ,திரைக்கதை எழுதிய  ராம் அப்பாராஜூ தனியாக படத்தை இயக்கி இருக்கிறார்.

 

சபாஷ்  டைரக்டர்

1 ரஜினி நடித்த வீரா, பாலுமகேந்திராவின் ரெட்டை வால் குருவி படங்களை ப்போல முழுக்க முழுக்க காமெடி தெறிக்கும் திரைக்கதை

2 கிரேசி மோகன்  பாணி வார்த்தை ஜால வசனங்கள் நகைச்சுவை  இழையோட முக்கியக்காரணம்

3 நாயகனும்,அப்பாவும் டாட்டு போடும் செண்ட்டரில் ஒரே டைமில் வெவ்வேறு காரணத்துக்காக வந்து மாட்டிக்கொள்ளும் சீன்

4 முதல் காதலியின் பெயரைப்பச்சை குத்திக்கொண்ட காதலன் அதை அழிக்க முயற்சி செய்து முடியாமல் நாயகியிடம் மாட்டாமல் இருக்க செய்யும் ஐடியா அபாரம்

5 நாயகன் டைவர்ஸ் கேஸ் பற்றி நாயகிக்குத்தெரிய வரும் போது அப்பாவின் டைவர்ஸ் என சமாளிக்க அதனால் அப்பா-சித்தி உறவில் பங்கம் வர ஏற்படும் ரகளையான காமெடி

6 டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் நடக்கும்போது  உண்டாகும் கோர்ட் ரூம் காமெடி டிராக்

7 முதல் காதலியுடனான பிரேக்கப்க்கு நியாயமான காரணத்தை க்ளைமாக்சில் உணர்த்திய விதம்

8 இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரு காட்சி கூட போர் அடிக்காமல் கலகலப்பாகப்படத்தை நகர்த்திய சாமார்த்தியம்


  ரசித்த  வசனங்கள் 

1 நாம ஒருத்தரை விரும்பினால் அவஙக குறையோடு சேர்த்து விரும்பனும்

2 பொய்யோடு எந்த உறவையும் ஆரம்பிக்கக்கூடாது.

3 காதல்னா சண்டை போடனும்,பிரியனும்,மீண்டும் சேரனும்,ஆனா அதே பழைய காரணத்துக்காக சண்டை போடக்கூடாது.

4 தப்பு அவனோடது இல்லைன்னாலும்  தப்பை ஒத்துக்கறது அவனோட இயல்பு.

5 உனக்குத்தேவையானதைக்கொடுக்கக்கடவுள் கொஞ்சம் டைம் எடுத்துக்குவார்.அப்போதான் உனக்கு அதன் மதிப்புத்தெரியும்


6 என்னது?லவ் லெட்டரோட ஜெராக்ஸ் காபியை அவளுக்குத்தர்றியா?அவ Feel பண்ண மாட்டாளா?


அவ Feel ஆகட்டும்னுதானே லவ் லெட்டரே தர்றேன்?

7  குரு வுக்கும் ,குரு நானக் பிறந்த நாளுக்கும் என்னடா சம்பந்தம்?

8 உன்னைத்தவிர யார் நலனையும் நினைத்துப்பார்க்காத ஈகோயிஸ்ட் நீ

9 எல்லாமே கிராண்டா இருக்கனும்னு என் கிராண்ட் பாதர் அடிக்கடி சொல்வார்

10  அத்தை,சாப்பிட்டுட்டுப்போங்க


நீயே எனக்குத்தாய் மாமன் மாதிரி இருக்கே! நீ எனக்கு மாப்பிள்ளையா?நான் உனக்கு அத்தையா?காலக்கொடுமை

11  சுமாரா இருக்கறவங்க தான் நடிகர் நடிகை டி பி வைப்பாங்க.

உனக்கு எப்படித்தெரியும்?

நானே ரன்வீர் கபூர் டி பி தானே வெச்சிருக்கேன்?


12 பிட் காயின் பத்தித்தெரியுமா?

எனக்குத்தெரிஞ்சதெல்லாம் பிட்டுப்படம் தான்

13 ஸ்டூடண்ட்னா எக்சாம் பேப்பர்ல எழுதறதை  விட பாத் ரூம் சுவரில் தான் அதிகம் கிறுக்குவாங்க

14 உங்க கல்யாணத்தை வீட்டில் பெரியவஙக எல்லாரும் ஒத்துக்கிட்டாஙகளா?


எங்க வீட்டில் நான் தான் இருக்கறதுலயே பெரியவன்

15 பயணம் எல்லாம் சிறப்பா இருந்ததா?

4 கிமீ தூரம் தானே?இதெல்லாம் ஒரு பயணமா?


16. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்குங்க


45 வயசு ஆகிடுச்சு.மறுபடி ஒரு தடவை மெச்சூர் ஆகனுமா?


17.  லவ் பண்ண டிப் ஸ் குடுங்க

டிப் குடுக்க நான் என்ன டிப்பு சுல்தானா?

18 மாப்பிள்ளை,பொண்ணுக்கு அருந்ததி நட்சத்திரம் காட்டுங்க

எனக்கே தெரியலையே?


இதே தெரியலை.பொண்ணுக்கு வேற எதைக்காட்டப்போறீங்க?

19 ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளேண்ட் பண்ண வேண்டிய வயசுல ஹார்ட் ட்ரான்ஸ்பர் பண்ணி லவ் ?

20  என் பேரு லவ் குசா.லவ்வுக்காக எவ்ளோ தூரம் வேணாப்போவேன்


வேணாம்,ஆட்டோவை நிறுத்துங்க.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. பல மாதங்களாக க்காதலிக்கும் நாயகிக்கு நாயகன் நெஞ்சில் முன்னாள் காதலி பெயரைப்பச்சை குத்தி இருக்கும் விஷயம் தெரியாமல் இருப்பது  எப்படி?

2 நாயகனுக்கு முதல் திருமணம் நடந்த அதே ரிஜிஸ்ட்டர் ஆபீசில் இரண்டாவது திருமணம் என்பது தெரிந்ததும் நாயகன் வேறு ஆபீசில் வைத்துக்கொள்ளலாம் என சமாளிக்காமல் தானாக வலியப்போய் மாட்டுவது நம்ப முடியவில்லை

3  அறுபது வயதாகும் நாயகனின் அப்பாவை காதல் திருமணம் செய்ய 25 வயதுப்பெண் பெற்றோரை மீறி மணக்க எதனால் சம்மதித்தார் என்பது  விளக்கமாக சொல்லவில்லை.

4 க்ளைமாக்ஸ் பர பரப்புக்காக நாயகி நடத்தும் நாடகமும்,ரெஜிஸ்ட்டர் ஆபீஸ் வரை வந்து விட்டு திடீர் என நாயகன் நல்லவன் வேசம் போட்டு திருமணத்தை நிறுத்துவதும் நம்ப முடியாத காட்சி



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ.குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இரண்டரை மணி நேரம் கலகலப்பான ,ஜாலியான ரொமாண்டிக் காமெடி டிராமா பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5


Nari Nari Naduma Murari
Theatrical release poster
Directed byRam Abbaraju
Screenplay by
  • Bhanu Bogavarapu
  • Nandu Savirigana
  • Ram Abbaraju
Story by
  • Bhanu Bogavarapu
  • Nandu Savirigana
Produced by
Starring
Cinematography
Edited byNakka Venkat Swamy
Music byVishal Chandrashekhar
Production
companies
  • AK Entertainments
  • Adventures International Pvt Ltd
Release date
  • 14 January 2026
Running time
145 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box officeest. ₹21 crore[2]