Showing posts with label RDX ; ராபர்ட் டோனி சேவியர் -(2023) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label RDX ; ராபர்ட் டோனி சேவியர் -(2023) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, September 28, 2023

RDX ; ராபர்ட் டோனி சேவியர் -(2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


  மோகன்  லால்  நடித்த  புலி  முருகன்  படம்  தான்  மலையாளப்படங்களில்  100  கோடி  வசூலைத்தொட்ட  முதல்  படம். இப்போது  வந்திருக்கும்  ஆர்டிஎக்ஸ்  மலையாளப்படங்களில்  வசூலில்  5 வது  இடத்தைப்பெற்ற  படம் . உலகம்  முழுவதும்  இது  80  கோடி  வசூல்  செய்து  சாதனை செய்த  படம் . ஆனால்  இதன்  பட்ஜெட்  வெறும்  8  கோடிதான். 10  மடங்கு  லாபம் , ஆர் டி எக்ஸ்  என்றால்  வெடிமருந்தும்  இல்லை , பைக்  பிராண்ட்  நேமும்  இல்லை . மூன்று  பேரின்  முதல்  எழுத்துக்கள்  தான்  அது 


     ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  கராத்தே  மாஸ்டர் . தற்காப்புக்கலைக்கான  பயிற்சிக்கூடம் நடத்தி  வருகிறார். நாயகி  அவரது  பயிற்சிக்கூடத்துக்கு  எதிரே  நடனப்பள்ளியில்  நடனம்  கற்க  வருகிறார். நாயகியின்  தோழியை  அடிக்கடி  தொந்தரவு  செய்யும்  ஆசாமி  பற்றி  நாயகனிடம்  புகார்  கொடுக்கிறார். உங்க  ஃபிரண்டே  டீல்  பண்ணட்டும், அவன்  முகம்  எதிரேயே  எனக்கு  இதெல்லாம்  பிடிக்காதுனு  சொல்லச்சொல்லுங்க பிரச்சனை  ஓவர்  என்கிறார். அதே போல்  தோழி சொல்ல பிரச்சனை  ஓவர்


 நாயகிக்கு  ஒரு  பிரச்சனை . பாடம்  சொல்லித்தரும்  ஆசிரியர்  அத்து  மீறுகிறார். புகார்  கொடுத்த  நாயகியிடம்  எதுவும்  பேசாமல்  நாயகன்  அந்த  ஆளை  அடித்து  துவம்சம்  செய்கிறார். நாயகிக்குப்புரிந்து  விட்டது  தோழிக்கு  ஒரு  பிரச்சனை  எனில்  ஆலோசனை  சொன்னவர் தனக்கு   ஒரு  பிரச்சனை  என்றதும்  தானே  களம் இறங்கி  விட்டதன்  காரணம்  தன்  மேல்  காதல்  இருக்கிறது  என்பதால்  தான் 


ஆனால்  மெயின்  கதை  இதுவல்ல . நாயகனுக்கு  ஒரு  அண்ணன்  உண்டு. அண்ணன், தம்பி  இருவருக்கும்  பொதுவான  ஒரு  நண்பன்  உண்டு . இந்த  மூவரும்  சேர்ந்தால்  அடிதடி   பஞ்சாயத்துதான் .  கொச்சினில்  நடக்கும்  கார்னிவல்  ஒன்றில்  ஒரு  குழுவுடன்  இவர்கள்  மூவரும்  தகறாரு  செய்கிறார்கள் . அவர்கள்  இவர்களைக்குறி  வைத்து  வீடு  தேடி  வந்து  நாயகன்  குடும்பத்தையே  அடித்து  நொறுக்குகிறார்கள் 


 குடும்பத்தினர்  அனைவரும்  ஹாஸ்பிடலில்.  இப்போது நாயகன்  அவர்களைத்தேடிப்போய்  அடிக்க  அவர்கள்  மீண்டும்  இவர்களை  ஹாஸ்பிடல்  தேடி  வந்து  அடிக்க ... ஒரே  ஆக்சன்  அதகளம்  தான் /. படிப்பதற்கு  போர்  அடிக்கும்  ஒன்  லைன்  ஆக  இருந்தாலும்  பார்ப்பதற்கு  சுவராஸ்யமாக  திரைக்கதையையும், ஆக்சன்  சீக்வன்சையும்  வடிவமைத்து  இருக்கிறார்கள் 


ஷான்  நிகாம்  தான்  நாயகன் . சித்தார்த்  முகச்சாயலில்  இருக்கிறார். காதல்  காட்சிகளில்  குறும்பு  கொப்புளிக்கிறது , ஆக்சன்  காட்சிகளில்  தூள்  பரத்துகிறது , ஆண்ட்டனி  வர்கீஸ்  இவரது  சகோதரர்  ஆக  வருகிறார்.அப்பா  முன்  தன்னை  மாட்டி  விட்டதும்  இவர்  செய்யும்  காமெடிகள்  கலகல . இவர்கள்  இருவ்ருக்கும்  பொதுவான  நண்பராக  நீரஜ்  மாதவ். புரூஸ்லீ  போல  ஃபைட்  போட  முயன்றிருக்கிறார்.


நாயகனின்  அப்பாவாக  லால்  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  உள்ளார் பாபு  ஆண்ட்டனி  கராத்தே ட்ரெய்னர்  ஆக  வருகிறார். க்ளைமாக்சில்  இவருக்கு  ஒரு  அதகள  ஃபைட்டும்  உண்டு 


மஹிமா  நம்பியார்  தான்  நாயகி . ஆனால்  காட்சிகள்  குறைவே நாயகனின்  காதலி , வில்லனின்  மனைவி   என  மாறுபட்ட  இரு  நிலைகள் 


படத்தின்  முக்கிய  நாயகனே  ஆக்சன்  சீக்வன்சை  வடிவமைத்தவர்  தான் .  ரன், உதயம் ,சத்யா  போன்ற  படங்களுக்கு  இணையாக  ஃபைட்  சீன்கள் கை  தட்டல் பெறும்  அளவு  ஆக்ரோசமாக  உத்வேகமாக  வடிவமைக்கப்பட்டிருக்கிறது 

சாம்  சி எஸ்  சின்  பிஜிஎம்  தெறிக்க  விட்டிருக்கிறது . சீட்  எட்ஜ்  த்ரில்லர்  ஆக  நம்மை  உட்கார  வைப்பதே  பிஜிஎம்  தான் 


கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்   நஹாஸ்  ஹிதயத். அரதப்பழசான  கதை  தான், ஆனால்  திரைக்கதை  அருமை . காட்சிகள்  எல்லாம்  பர  பர  என  விறுவிறுப்பாக  நக்ர்கிறது 


சபாஷ்  டைரக்டர் ( நஹாஸ்  ஹிதயத்)

1 தன்  ரூட்  க்ளியர்  ஆக  வேண்டும்  என்பதற்காக  தன்  அண்னனின்  காதலியை   தன்  அப்பா  முன்  நிற்க  வைத்து  மாட்டி  விடும் காட்சி, பின்  தன்  அண்ணனையும்  நாயகன்  அப்பாவிடம்  மாட்டி  விடும்  காட்சி  காமெடி  கலகலப்பு 


2   நாயகன்  நாயகி  சந்திப்பு ,  டூயட்  எல்லாம்  வழக்கமான  சினிமா  தான்  என்ராலும்  ரசிக்க  வைக்கும்  காட்சி  அமைப்புகள் 


3  கமல்  நடித்த  விக்ரம்  பட  முதல்  பாகம்  போல  பில்டிங்கில்  ஏறுவது  , ஓடுவது , குதிப்பது  என  ஆக்சன்  காட்சிகளில்  டூப்  போடாத  ஒரிஜினாலிட்டி




செம  ஹிட்  சாங்க்ஸ்

1    நீல  நிலவே  நிலவின்  அழகே


  ரசித்த  வசனங்கள் 


1  அங்க்கிள்  , நான்  உங்க  பையனை  காதலிக்க்றேன்


 ஓஹோ, இது  எத்தனை  நாட்களா  நடக்குது


 அப்பா,  அனேகமா  அவங்க  ரெண்டு  பேரும்  பத்தாங்கிளாஸ்  படிக்கறப்ப  இருந்தே  நடக்குதுனு  நினைக்கறேன்


 இல்லை , அஞ்சாங்கிளாஸ் ல  யே  ஆரம்பிச்சாச்சு


2 சார், நான்  என்ன  செஞ்சேன்னு  என்னை  அரெஸ்ட்  பண்ணிக்கூட்டிட்டுப்போறிங்க?


 அதை  டீட்டெய்லா  எழுதி ஒரு  நாவலா  உனக்குத்தர்ற்றேன், படிச்சுத்தெரிஞ்சுக்கோ

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனின்  ஆட்கள்    மாங்கா  மடையர்களா  இருக்காங்க . ஒரு  வயசு  பாப்பாவின்  கழுத்தில்  இருக்கும்  2  பவுன்  தங்க  சங்கிலியைப்பறிப்பவர்கள்  பாட்டியின்  கழுத்தில் இருக்கும்  5  பவுன்  செயினையோ , இளம்பெண்ணின்  கழுத்தில்  இருக்கும் 6  பவுன்  செயினையோ  களவாடவில்லை . இத்தனைக்கும்  பெண்  மயக்கமாகத்தான்  இருக்கிறார் 

2   நாயகனும், சகோதரனும்  நைட்  பெட்ரூமில்  தூங்கும்போது  ஜீன்ஸ்  பேண்ட்  , சர்ட்  டக்  இன்  பண்ணி  படுத்துத்தூங்கறாங்க/ கனவில்  இண்ட்டர்வியூவுக்குப்போறாங்க்ளா? 


3  படம்  பூரா  யாராவது  டொரீனோ , பெப்சி  , கொக்கோ  கோலா  குடிச்சுட்டே  இருக்காங்க. அது  பூச்சிக்கொல்லி  மருந்து . கெடுதல்  இளநீர் , மோர்   குடிப்பது  போல்  காட்டினால்  ரசிகர்கள்  அதை  ஃபாலோ  பண்ணுவாங்க  தானே?


4  பிற்ந்த  குழந்தையின்  கழுத்தில்  இருந்து  செயினைப்பறிக்கும்  வில்லன்  அதை  தன்  கழுத்தில்  போட்டுக்கொள்கிரான். அட்டுக்குழந்தையின்  கழுத்து    சுற்றளவு  என்ன?  மலை  மாடு  மாதிரி  இருக்கும் வில்லனின்  கழுத்து  சுற்றளவு   என்ன?  எப்படி  செயின்  அவருக்கு  செட்  ஆகும் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  இல்லை, ஆனால்  சண்டைக்காட்சிகளில்  வன்முறை  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெண்களுக்கு  படம்  பிடிப்பது  சிரமம், ஆண்கள்  நிச்சயம்  ரசிப்பார்கள் . ஆனால்  கேரளாவில்  லேடீஸ்  ஆடியன்ஸ்  கூட்டம்  அள்ளியது .  ரேட்டிங்  2. 5 / 5 


RDX: Robert Dony Xavier
Theatrical release poster
Directed byNahas Hidayath
Screenplay byAdarsh Sukumaran
Shabas Rasheed (dialogues)
Story byNahas Hidayath
Produced bySophia Paul
StarringShane Nigam
Antony Varghese
Neeraj Madhav
CinematographyAlex J. Pulickal
Edited byChaman Chakko
Music bySam C. S.
Production
company
Release date
  • 25 August 2023[1]
Running time
146 minutes[2]
CountryIndia
LanguageMalayalam
Budgetcrore (US$1.0 million)[3][4]
Box office₹84 crore (US$11 million)[5]