Monday, July 11, 2022

THAR 2022 ( HINDI ) - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 ஸ்பாய்லர் அலெர்ட்


 சம்பவம் 1  - ராஜஸ்தான்  பாலைவனத்துல  ஒரு  கிராமம் . அங்கே  இன்ஸ்பெக்டரா  இருக்கும்  ஹீரோ  அவருக்கு  நினைவு  தெரிஞ்ச  நாள்ல  இருந்தே  இன்ஸ்பெக்டரா  தான்  இருக்கார் . பிரமோஷன்  அப்டினா  கிலோ  என்ன  விலையா  இருக்கும்?னு  கூகுள்ல  சர்ச்  பண்ற நிலைமை . எப்படியாவது  ஒரு  நல்ல  கேஸ்  சிக்கி  அதை  க்ளியர்  பண்ணினா  நாம  மேலே  மேலே  போய்டலாம்னு  நினைக்கறார். இவருக்கு  ஒரே  ஒரு  சம்சாரம் ( ஒரு  ரகசியமான  உண்மையை  சொல்லிடறேன். இவருதான்  ஹீரோ  தயாரிப்பாளர்  எல்லாம்  ஆனா  படத்துல   இவருக்கும்  கதைக்கும்  சம்பந்தமே  இல்லை  ., இவர்  கேரக்டரே  இல்லைன்னாலும்  படம்  நகரும் ) 


  சம்பவம் 2  - அடுத்த  வாரம்  இந்தப்பொண்ணுக்கு  மேரேஜ்  நடக்கப்போகுது  இந்தப்பொண்ணுக்கு  வயசு  சுமாரா  21  இருக்கும். அந்தப்பொண்ணு  கூட  காட்டுக்கு  உள்பக்கமா  போய்க்கிட்டு  இருக்கானே  அந்தப்பையனுக்கு  சுமாரா  16  வயசு இருக்கும். அக்காவும்  தம்பியும்  எதுக்கு  இப்படி  ஆளரவமே  இல்லாத  காட்டுக்குப்போறாங்கனு  பார்த்தா  அய்யோ ராமா  அது  ஏதோ  கள்ளக்காதல்  மேட்டர்  போல .. இன்னொரு  ரகசியமும்  சொல்லிடறேன் . இந்த  2  கேரக்டர்களுக்கும்  படத்துக்கும்  சம்பந்தமே  இல்லை . நெட்  ஃபிளி8க்ஸ்னா  கதைக்கு  சம்பந்தம்  இருக்கோ  இல்லையோ  ஒரு  அடல்ட்  கண்ட்டெண்ட்  வைக்கனும்னு  கம்பெனி  ரூல்சாம் 


  சம்பவம் 3 .   தினக்கூலி  வேலை  செய்யும் 4  பேரு .  வில்லன்  வந்து  அவங்களை  ஒரு  ஏரியாவுக்குக்கூட்டிட்டுப்போறான்.  அவங்களை  தனி  தனி  ரூம்ல  அடைச்சு  வெச்சு  சித்ரவதை  பண்றான்  எதுக்கு?னு  தெரியல  ஏன்னா  இது  சஸ்பென்ஸ்  திரைகக்தை  இல்லையா  ஓப்பனிங்க்லயே  காரணத்தை  சொல்லிட்டா   இண்ட்ரஸ்ட்  இருக்காது  பாருங்க 


  சம்பவம் 4 -  வில்லன்  ஒரு  கிராமத்துக்கு  வந்து   ஒரு  வீட்ல  தனிமைல  இருக்கற  பெண்  கிட்டே  உங்க  வீட்ல  தங்கிக்கலாமா?னு  கேட்கறான். நம்ம  ஊர்ல  எல்லாம்  வீட்ல  ஆம்பளைங்க  இல்லாத  வீட்ல  அந்நியர்  புகல்  என்ன  நீதி?னு  கோபமா  துரத்தி  விட்டுடுவோம், ஆனாந்த  அந்த பேக்கு   பிளம்  கேக்கு  அவனை  தங்க  வெச்சு  சோறாக்கி  பரிமாறி  டீ  எல்லாம்  வெச்சு  தருது  . எந்த  ஹவுஸ்  ஓனர்  இப்படி  எடுபுடி  வேலை  எல்லாம்  செய்றாங்கனு  தெரிஞ்சா  நாமும்  ட்ரை  பண்ணலாம் 


சம்பவம் 5  -வேலை  வெட்டி  இல்லாத  ஒரு  க்ரூப்  ஆள்  இல்லாத  வீட்ல  புகுந்து  கைக்கு  சிக்குனதை  சுருட்டிட்டு  கிளம்புது  டக்னு  அப்போ  ஹீரோயின்  எதிர்ல  வர்றாப்டி  புத்திசாலியான  பொண்ணா  இருந்தா  நாம  தனி  ஆள்  நமக்கு  எதிரே    ஒரு  கூட்டமே  இருக்கு  நாம எஸ்  ஆகிடலாம்  அல்லது  ஓடிப்போய்  கூச்சல்  போட்டு  ஆட்களை  அழைச்ட்டு  வருவோம்னு  போய்  இருக்கும். ஆனா  பொண்ணுங்க  புத்திசாலியா  இருப்பது அபூர்வம்  என்பதால்  அந்த  கேனம் அந்த  திருடங்களை  மிரட்டுது . நான்  யார்  தெரியுமா?னு  பஞ்ச்  டயலாக்  எல்லாம்  பேசுது .அந்த  திருடனுங்க  பாட்டுக்கு  திருடிட்டு  கிளம்பி  இருப்பானுங்க . தீபாவளி  போனஸ்  மாதிரி  இந்த  பொண்ணு  மாட்டிக்குச்சு 


  மேலே  சொன்ன  5  சம்பவங்களில்  சம்பவம்  1ல்  வரும்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  தான்  ஹீரோ  என்பதால்  சம்பவம்  5  ல்  வரும்  ஹீரோயின்  தான்  அவர்  சம்சாரம்  அல்லது  ஜோடினு  நினைக்க  வேண்டாம்  அவங்க  2  பேரும்  பார்த்துக்கிட்டதே  இல்லை  .  இதுக்கு  மேல  நான்  எதுவும்  சஸ்பென்சை  உடைக்க  விரும்பலை ( இதுக்கு  மேல  உடைக்க  எதுவுமே  இல்லை  ஆல்ரெடி  எல்லா  ஃபர்னிச்சரையும்  உடைச்சாச்சு )


ஹீரோவா  போலீஸ்  ஆஃபிசரா  அனீல் கபூர் . மணிரத்னம்  எடுத்த பல்லவி  அனுபல்லவி   கன்னடப் படத்துல  இவரை  ஹீரோவாப்பார்த்தப்ப  நவரச நாயகன்  கார்த்திக்கைப்பார்ப்பது  போல  இருந்தது  . ஆனா  இதில்  அய்யோ  பாவமா  இருக்கு . வய்சானாலும்  சிங்கம்  சிங்கம்தான்ல  அப்டினு  பஞ்ச்  டயலாக்கா  பேச  படத்துல  இவருக்கு  ஒரு  நல்ல  சீன்  கூட  இல்லை . ஒரு  சீன்ல  நான்  இன்ஸ்பெக்டராவே  கடைசி  வரை  காலம்  தள்ளிட்டதுல  உனக்கு  ஏதும்  வருத்தம்  இல்லையே?  என  கண்ணீருடன்  கேட்கிறார். பயங்கர  செண்ட்டிமெண்ட்  சீன்  ஏதோ  நடக்கப்போகுதுன்னு  பார்த்தா  ஒண்ணும்  நடக்கலை 


வில்லனா  படத்தோட  மெயின்  ரோல்ல  ஹர்சவர்தன்  கபூர்   பண்ணி  இருக்கார் ஓப்பனிங்  சீன்ல  இருந்தே  இவரு  மார்க்கமா  தான்  இருக்கார் . ஆனா  போலீஸ்  அவரை  விசாரிக்கு து  பின்  விட்டுடுது   எதுக்குனு  தெரியல 


ஃபாத்திமா , முக்தி  மோகன் , மந்தனா  அப்டினு  3  லேடிஸ்  கேரக்டர்ஸ்  படத்துல  வர்றாங்க   மெழுகு  பொம்மை  மாதிரி  இருக்காங்க .  கிராமத்தில்  கதை  நடக்குது  3  பேரும்  பியூட்டி  பார்லர்ல  ஓவர்  டைம்  மேக்கப்  போட்ட  க்யூன்ஸ்  மாதிரி  இருக்காங்க 


ஒளிப்பதிவு  லொகேஷன்ஸ்    எல்லாம்  தரம்   பின்னணி  இசை  ஓக்கே  ரகம் 


 சபாஷ்  டைரக்டர் 


1  த்ரில்லர்  படங்களில்  மிக  கம்மியான  டைம்   ட்யூரேஷன்ல  எடுத்திருக்காங்களேனு  வியந்து  போய்  தான்  படம்  பார்த்தேன். மொத்தமா  ஒண்னே  முக்கால்  மணி  நேரம்  தான் . படம்  முழுசாப்பார்த்த  பின்  தான்  இது  20  நிமிட  குறும்படமா  எடுத்திருக்க  வேண்டிய  படம்னு   புரிஞ்சுது..


2 கிராமத்துல்  ராஜ்ஸ்தான்  குழந்தைகளை  க்ளோசப்ல  காட்டும்  காட்சி  செமயா  இருக்கு  குழந்தைகள்  அவ்ளோ  அழகு 


3  லாங்க்  ஷாட்;ல  ஏரியல்  வ்யூல  ஜீப்  பாலைவனத்தில்  போகும்  காட்சி  செமயா  இருக்கு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  ஊருக்கு  புதுசா  ஒருத்தன்  வந்தா  போலீஸ்  இப்படித்தான்  மேம்போக்கா  விசாரிக்குமா? இத்தனைக்கு ம்  அது  ஒரு  கிராமம் . இப்டி  புது ஆளை   அசால்ட்டா  விடுவாங்களா? 


2   கூட்டுக்களவானிக  4  பேருல  ஒரு  ஆள்  கொடூரமான  முறைல  கொலை  செய்யப்படும்போது  மீதி  ஆட்கள்  உஷார்  ஆக  மாட்டாங்களா? 


3  கோடிக்கணக்கான  மதிப்புள்ள  போதைப்பொருளை  அபகரிக்கும்  கும்பல்  கொலை  செய்வதைப்பார்த்த    பெண்ணை  சாட்சியா  உயிரோட   விட்டுட்டுப்போவாங்களா? 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்தப்படத்தைப்பொருத்தவரை  இதெல்லாம்  பார்க்கத்தேவை  இல்லை  என்ற  எச்சரிக்கைப்பதிவாதான்  இதைப்பதிவு  பண்றேன். மீறிப்பார்த்தா  கம்பெனி  பொறுப்பல்ல   ரேட்டிங்  1.5 / 5  

0 comments: