Monday, July 11, 2022

அந்த ஒரு நிமிடம் -1985 - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் த்ரில்லர் )


இந்தப்படத்தை  இப்போப்பார்க்க  2  காரணங்கள்   இருக்கு . பயில்வான் ரங்கநாதன்  ஒரு  பேட்டில  கமல்  கூட  ஏற்பட்ட  விரோதம்  காரணமா  ஒரு  ஃபைட்  சீன்  இருக்க  வேண்டிய  இடத்துல  அதை  கட்  பண்ணிட்டு  என்னை  டம்மி பண்ணினார்  என்ற  குற்றச்சாட்டு . இன்னொண்ணு  கமல்  “கண்டேன்  சீதையை” அப்டிங்கற  படம்  பூஜை  போட்டு  பின்  பேக்  அடிச்ட்டாரு  அந்தப்படத்தோட  கதை  ஆண்  வேடத்தில்  ஹீரோ  உடன்  தங்கும்  ஹீரோயின்  என்பதுதான்  கதைக்கரு . அந்தக்கரு  இந்தப்படத்துல  வர்ற  ஒரு  சீன்ல  உதயமானதுதான்  என்பதால்

ஹீரோயினோட   தாத்தா  வில்லன்  கிட்டே  வேலை பார்க்கிறவர்  வில்லனோட  பார்ட்னர்  தன் பார்ட்னர்ஷிப்பை  முறிச்சுக்கறது  விஷய,மா  வில்லன்  கிட்டே வாக்குவாதம்  செய்யறப்ப  வில்லன்  பார்ட்னரை  போட்டுத்தள்ளிட்டு  அந்தக்கொலைப்பழியை  ஹீரோயின்  தாத்தா  மேல  போட்டுடறான். கோர்ட்ல அந்த  தாத்தா  உன்னை  கொலை  பண்ணியே  தீருவேன்னு  சவால்  விடறார்

  ஹீரோ  ஒரு  வக்கீல் / ஹீரோயினோட  தாத்தா  சார்பா  அந்த  கேஸ்ல வாதிடறார, ஆனா  கேஸ்  தோக்குது   தாத்தாவுக்கு  தண்டனை  கிடைக்குது  அப்போவே  கோர்ட்ல  இருந்து  தப்பிச்ச  தாத்தா   வில்லனை  ஷூட்  பண்ண  வில்லன்  வீட்டுக்கே  வர்றார்  அங்கே  நடக்கும் தள்ளு  முள்ளுல  வில்லன்  தாத்தாவை  போட்டுத்தள்ளிடறான் 

 ஹீரோ  வில்லன்  கிட்டே  சவால்  விடறார்  சட்டத்தின்  பிடியில்  உன்னை  3  மாசத்துக்குள்ளே  மாட்ட  வைப்பேன் (  ஏன்னா அந்தப்படத்துக்கு  ஹீரோ  கால்ஷீட்  3  மாசம்தான் )   அந்த  சவால்ல  ஹீரோ  எப்படி  ஜெயிக்கிறார்  என்பதே  மிச்ச  மீதிக்கதை 

 ஹீரோவா  கமல்  இவர்  ஹீரோயின் கூட  அறிமுகமாகும்  முதல்  சீனே  செம  காமெடி  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  முன்னே  பின்னே  பாத்துக்கிட்டதே  இல்லை  ஹீரோயினைப்பார்த்ததும்  ஹீரோ  அப்டியே  பாய்ஞ்சு  கட்டிப்பிடிச்சு  நீ யார்மா?  எங்கே  இருந்து  வர்றே?னு  கேட்கறார், ஏம்ப்பா  இபடித்தான்  அறிமுகம்  இல்லாத  பெண்  கிட்டே  நடந்துக்குவாங்களா? லாடம்  கட்டிட  மாட்டாங்க ? 

ஹீரோயினா  ஊர்வசி பட படனு  பொரியற  மாதிரி   வசனம்  பேசுவது  அப்போ  கை  கூடி  வர்ல  போல இளமை  ததும்பும்  முகம், அதிக  வாய்ப்பில்லை முதல்  பாதில தான்  வேலை 

  வில்லனாக  மேஜர்  சுந்தர்ராஜன் கமல் படங்களில்  நாசர்  தவிர  வேறு  யாருக்கும்  முக்கியத்துவம்  இருக்காதே  இவர்  எப்படி  படம்  பூரா வர்றார்னு  யோசிச்சேன். இவர்  தான்  தயாரிப்பாளராம்

ஒய்  ஜி  மகேந்திரன்  போடற  மொக்கைக்காமெடிகள்  எல்லாம்  புரோட்டா  சூரி  காமெடியை  விட மகா  கொடூரம்   அவரே    ஜோக்  சொல்லி  அவரே  சிரிச்சுக்கறார்  நமக்கு  நாமே  திட்டம்  போல 

  தேங்காய்  சீனிவாசன்  கெஸ்ட்  ரோலில்  வர்றார்

இசை  இளையராஜா  6  பாட்டு  அதில்  3  பாட்டு  ஹிட்டு  2 பாட்டு  அனுராதாவுக்கு 

சிறிய  பறவை  சிறகை  விரித்துப்பறக்கிறதே
தேவை  இந்தப்பாவை 
காத்திருப்பது  பார்த்திருப்பது 

இந்த  மூணும்  ஹிட்

  க்ளைமாக்சில்  வில்லனை  எதிர்த்துப்பாடும்  பச்சோந்தியே  கேளடா  பாட்டை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  விஜயகாந்தின்  கூலிக்காரன்  படத்துல  அதே  மாதிரி  சவால்  பாட்டு  போட்டிருக்காங்க  போல 


 வ்ழக்கமா  கமல்  படத்தில்  டாப்லெஸ் ஆக  அவர்  எக்சசைஸ்  செய்யும்  காட்சிகள்   ஹீரோயின்  கூட  நெருக்கமா  இருக்கும்  காட்சிகள்  உண்டு .  வழக்கமா  கதாநாயகி  கூட  அப்படி  இருப்பவர்  இதுல  கவர்ச்சி  நடிகை  அனுராதாவையும்  விட்டு  வைக்கலை 

  லாஜிக்   மிஸ்டேக்ஸ்

 1  எந்த  ஜேம்ஸ்  பாண்ட்  படத்துல  இருந்து  உருவுனாங்களோ  தெரில வில்லன்  தன்  விரல்ல  இருக்கும்  மோதிரத்துல  நீட்டிட்டு  இருக்கும்  ஊசியை  கை  குலுக்குவது  போல்  எதிராளியை  கை  குடுத்து  விஷத்தை  இறக்கி  கொல்றான், ஆனா  ஊசில  சிரிஞ்ச்  இல்லை  எப்படி  விஷம்  பாஸ்  ஆகும்?  இவர்  கை  விரல்ல  தவறுதலா  ஊசி  பட்டாலே  இவரே  போய்டுவாரே? 


2   ஓப்பனிங்  சீன்ல  விஷ  ஊசி  போட்டு  பார்ட்னரை  கொலை  பண்ணும்  வில்லன்  தாத்தாவைக்கொலை  வழக்கில்  மாட்டி  வைக்க  துப்பாக்கியால்  சுட்டு  கைரேகை  தாத்தாவுது  படற  மாதிரி  செட்  பண்றது  ஓக்கே  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்ல  விஷம்  தான்  ,மரணத்துக்குக்காரணம்  என்பது  தெரிய  வராதா?   கோர்ட்  எப்படி  தாத்தா  மேல  தப்புனு  தண்டனை  தருது ?

3   ஒரு  டைம்  அனுராதா  கமல்  கிட்டே   என்னை  வில்லன்  ஆண்  வாசனையெ  படாத  இந்த  பங்களாவில்  அடைச்சு  வெச்சிருக்கான்னு  அளந்து  விடுது, ஆனா  அதே  அனுராதா  ஓப்பனிங்ல   ஒரு  கிளப்  டான்ஸ்  பாட்டுக்கு  6  பேருடன்  டான்ஸ்  ஆடி    ஹீரோ  வில்லன்  கூட  ஆடிப்பாடுது

4  கேரளாவில்    யாருக்குமே  தெரியாம  அனுராதாவை  மறைச்சு  வெச்சிருக்கும்  வில்லன்  எதுக்காக  சென்னைக்கு  அவரை  வரவெச்சு  ஆட  வைக்கிறார் ? அதுக்கு  ப்ருத்தி  மூட்டை  குடோன்லயே  இருந்திருக்கலாமே>

5    அனுராதா   2 ப்ர்லாங்  தூரத்தில்;  கமல்  எக்சசைஸ்  பண்ணுவதை  வேடிக்கை  பார்க்கிறார்  . பின்  ஊர்வசியை  அழைத்து  அந்தாளை  வரச்சொல்லு  என்கிறார்  வேலை  போட்டுக்குடுக்கறார்  இன்னொரு  சீன்ல  நான்  டம்மி  எல்லாமே  வில்லன்  தான்  அவர்தான்  யாரையும்  நியமிப்பார்  என்கிறார் 
6    கள்ள  நோட்டு  பிஸ்னெஸ்   வெடிமருந்து  தயாரிப்பு  உட்பட  வில்லனின்  3  சட்ட விரோத  நடவடிக்கைகளை  ஆதாரப்பூர்வமா  ஹீரோவால்  நிரூபிக்க  முடியல  க்ளைமாக்ஸ்  ல  வில்லனை  கன்  பாய்ண்ட்ல  மிரட்டி  மரியாதையா  நீ  செஞ்ச  தப்புக்களை  ஒத்துக்க  அப்டிங்கறார்  அந்த  வெங்காயத்தை  முதல்லியே  பண்ணி  இருக்கலாமே? 

7  ஊர்வசி  ஆண்  வேசம்  போட்டுக்கிட்டு  கமல் கிட்டே  டிராமா  போடறார்  ஒரு  தாடி  இல்லை  மாறுவேசம்  இல்லை  குரலும்  பெண்  குரல்    மாங்கா  மடையனுக்குக்கூட  அது  பெண்  தான்  அப்டினு  தெரியுது . இந்த  லட்சணத்துல  சட்டை  போட்டுக்கிட்டே  கமல்  கூட  குளிக்கிற  சீன்  வேற  இருக்கு 

8    வில்லன்  ஒரு  கேனக்கிறுக்கனா  இருக்கான்  ஹீரோவோட  அம்மாவைக்கொலை  பண்ண  பல்புல  வெடி  செட்  பண்ணி  அதை  ஃபோன்  பண்ணி  ஹீரோக்கே இன்ஃபர்மேசன்  குடுக்கறான்  ஹீரோ  காப்பாத்திடறாரு. கமுக்கமா  இருந்தா  ஹீரோவுக்கு  விஷயமே  தெரிஞ்சிருக்காது 

9  அனுராதா  கிட்டே  இருந்து  உண்மையை  வெளிக்கொணர்வதற்காக  அனுராதாவை  மேரேஜ்  பண்ணிக்கறதா  பொய்  வாக்குறுதி  கொடுப்பது  செமக்காமெடி  என்றால்    அவர்  கூட  சல்லாபம்  செய்வதெல்லாம்  ஓவரோ  ஓவர் 

10    நான்  போற  பக்கம்  எல்லாம்  மாறுவேஷத்துல  நீயும்  உன்  நண்பனும்  வர்றீங்க  என  வில்லன்  சொல்றான்  அதான்  தெரியுதில்ல, அப்பவே  போட்டுத்தள்ளாம  ஏன்  வேடிக்கை  பார்த்துட்டு   இருக்கார் ? 

  சி  பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -   அனுராதா  ரசிகர்கள்  மட்டும் தான்  பார்க்கலாம்,  கமல்  ரசிகர்கள்  இளையராஜா  ரசிகர்கள்  ஆடியோவில்  பாட்டு  மட்டும்  கேட்கவும், ரிலீஸ்  டைமில்  இது  ஒரு  வாரம்  கூட  ஓடலை     ரேட்டிங்  2 / 5 . சொல்ல  ,மறந்துட்டேன் பதிவுன்  முதல்  பத்தில  சொன்ன  பயில்வான்  ரங்கநாதன்  மேட்டர் . படத்துல  ஒரு  சீன்ல  சம்பந்தமே  இல்லாம  அவரை  மர்ம  ஸ்தானத்தில்   ஹீரோ ஒரு  உதை  விட  அவர்  சுருண்டு  படுத்துக்கொள்வது  போல  இருக்கு . இந்த  சீன்  தான்  ஃபைட்டுக்கு  பதிலா  வைக்கப்பட்ட  சீனாம் . இப்போ  பயில்வான்  ரங்கநாதன்  பேட்டிகள்  எல்லாம்  பார்த்தால்  நிஜமாகவே  அப்படி  அடி  வாங்க  வாய்ப்புகள்  இருக்கு  , 

0 comments: