Wednesday, July 20, 2022

பூ விலங்கு 1984 - சினிமா விமர்சனம் ( கிராமியக்காதல் )


 பட்டி  தொட்டி  எல்லாம்  பிரபலம்  ஆன  பாடல்  

1 ஆத்தாடி  பாவாடை  காத்தாட , காத்தாடி  போல்  நெஞ்சு  கூத்தாட  மனம் குதித்தோட  குளிக்குது  ரோஜா  நாத்து  தண்ணி  கொஞ்சம்  ஊத்து  ஊத்து 


2  கண்ணில்  ஏதோ  மின்னல்  அடிச்சிடுச்சு காமன்  வீட்டு  ஜன்னல்  திற்ந்திடுச்சு


3   லவ்  மீ  ல்வ்  மி லவ் மி  உன்  மம்மி  எனக்கு  மாமி 


4  போட்டேனே  பூவிலங்கு 


இயக்குநர்  அமீர்ஜான்  இயக்கிய  வெற்றிப்படம். நாயகன் ல  நிலா  அது  வானத்து மேலே  பாட்டுக்கு  குத்தாட்டம்  ஆடிய  குயிலி  நடித்த  முதல்  படம்  நாயகியா  அறிமுகம்  ஆன  புதுமுகம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஹீரோ  ஒரு  எம்  எல்  ஏ வோட  மகன். அந்த  தெனாவெட்டுல  காலேஜ்ல  இவர்  பண்ற  அலம்பல்கள்  ஜாஸ்தி .ஹீரோயின்  காலேஜ்லயே  ஃபர்ஸ்ட்  மார்க்  வாங்கற  பொண்ணு . பொதுவா  சினிமாக்காதலில்  மட்டும்  மோதலில்  தானே  ஆரம்பிக்கும் ?  ஹீரோவை  ஹீரோயின்  திட்டிடறார்  அதுக்குப்பழி  வாங்க  ஹீரோ ஹீரோயின்  காபி  அடிச்சதா  ட்ராமா  போட்டு  மாட்ட  வைக்கிறார்


  காபி  அடிச்சதுக்காக  இந்தியாவிலேயே  முதல்  முறையா  ஹீரோயினை  காலேஜை  விட்டு  டிஸ்மிஸ்  பண்ணிடறார்  பிரின்சிபால்.ஹீரோவோட  வில்லத்தனம்  தெரிஞ்ச  ஒரு  லேடி  லெக்சரர்  ஹீரோ வோட அப்பா  கிட்டே  போய்  நியாயம்  கேட்கறார்.  ஒரு  கேடியோட  டாடி  கேடி  டாடி  தானே? அவர்  அந்தப்பெண்ணை  மானபங்கப்படுத்தி  இந்த  விஷயத்தையும்  பத்திரிக்கைல  சொல்லுனு  அனுப்பி  வைக்கிறார்


 இந்த  சம்பவம்  நடந்ததும் அந்த  லேடி  லெக்சரர்  தற்கொலை  பண்ணிக்கறார். ஹீரோயினும்  தற்கொலை  பண்ணிக்கப்போகும்போது  ஹீரோ  காப்பாத்திடறார். அந்த  லேடி  லெக்சரரும் இன்னொரு  ஹீரோயினா  இருந்தா  அவரையும்  காப்பாத்தி இருப்பார் 


 ஹீரோ  இப்போ  அப்பா  கிட்டே  கோவிச்ட்டு  வீட்டை  விட்டு  வெளீல  போய்  மூட்டை  தூக்கி  சம்பாதிக்கறார். மூட்டை  தூக்கற  ஹீரோ  நம்மைக்கல்யாண,ம்  பண்ணிக்கிட்டா  டெய்லி  உப்பு  மூட்டை  தூக்குவார்னு  கனவு மயக்கத்துல  ஹீரோயினும்  லவ்  பண்றார் ..


 ஹீரோயினுக்கு  அம்மா  இல்லை  அப்பாவோட  ரெண்டாவது  சம்சாரம்  அது  ஒரு  சமாச்சாரம்  அதுக்கு  ஒரு  தம்பி  முறை  மாமன்  அவன்  தான்  ஹீரோயினுக்கு  வில்லன் ஹீரோவோட  அப்பா  ஹீரோவுக்கு  வில்லன் 

 இந்த  2  வில்லன்களையும்  மீறி  காதலர்கள் ஒன்று  சேர்ந்தாங்களா ? இல்லையா?  என்பதுதான்  கதை 


ஹீரோவா  புரட்சி  நாயகன்  முரளி.  கோபம்  வரும்  காட்சில  முகத்தில்  கண்கள்  டக்னு  சிவப்பாகறது  தமிழ்  சினிமா  நடிகர்களில்  இருவருக்கு  கண்  வந்த  கலை  1  கேப்டன்  விஜய்காந்த்  2  முரளி  . நல்லா  பண்ணி  இருக்கார் 


ஹீரோயினா  புதுமுகம்  குயிலி . இவரது  கிளாமரை  நம்பிதான்  மொத்தப்படமுமே!  ஆனா  இளையராஜா  க்கு  மட்டும்  இந்த  விஷயம்  தெரியாது  தெர்ஞ்சா  இசை  அமைக்க  மாட்டாரே?குயிலி முகத்தில்  உண்ர்ச்சியைக்காட்டியதை  விட  கிளாமர்  காட்டியதுதான்  அதிகம் . சி  செண்ட்டர்  ரசிகர்கள்  எல்லாம்  விசில்  அடிச்சு  ரசிச்ச  படம்  ஏ  செண்டர்  ரசிகர்கள்  கமுக்கமா  ரசிச்சாங்க 


  ஹீரோவோட  அப்பாவா  செந்தாமரை     அந்தக்காலத்தில்  இவரது  வில்லத்தனம்  செம  ஃபேமஸ்  , முறுக்கிய  மீசை  நக்கல்  பேச்சு   ஃபேமஸ் 


ஹீரோயின்  சித்தியா  ஒய்  விஜயா   என்  வாய்ல  நல்லா  வந்துடும்  இந்த  டயலாக்  மட்டும்  23  தடவை  படம்  முழுக்க  யாராவது  சொல்லிட்டே  இருப்பாங்க ., அதுல  பாதி  வில்லி  ஒய்  விஜயா  சொல்வார் 


இசை  இளையராஜா  கலக்கி  இருப்பார்

. சபாஷ்  டைரக்டர்( அமீர்ஜான்) 


1   இளையராஜா  கிட்டே  குயிலி  சீக்ரெட்ஸ்  ஓப்பன்  பண்ணாம  4  ஹிட்  சாங்க்ஸ்  வாங்கியது  (  ஹீரோ  வேல்யூ  இல்லாத  படம்னா  அவருக்கு  குஷி  நாமதான்  ஹீரோனு  பிரமாதமா  ட்யூன்  போட்டுடுவார் ) 


2  புதுமுகம்  குயிலிக்கு இந்தப்பட்த்துல  சம்பளமே  இல்லை  ஆனா  ஒரு   பாட்டுல அவரை  எந்த  அளவுக்கு  கிளாமரா  யூஸ்  பண்ண  முடியுமோ  ந்த  அளவு  யூஸ்  ப்ண்ணி  புரொடியூச்ருக்கு  மிச்சம்  பண்ணி  தந்தது


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   காலேஜ்ல  ஒரு  பொண்ணு  காப்பி  அடிச்சா   டிஸ்மிஸ்  எல்லாம்  பண்ண  மாட்டாங்க . சும்மா  வார்னிங்  குடுப்பாங்க  அவ்ளோ  தான் 


2   ஒரு  எம் எல்  ஏ  வீட்டுக்கு  அவர்  மகனைப்பத்தியே  புகார்  பண்ண  எந்த  தைரியத்துல  அந்த  லேடி  போகுது ?


3  காலேஜ்  லெக்சரர்  மானபங்கப்படுத்தப்பட்டது  அவர்  தற்கொலை  இந்த  சம்பவங்கள்  எல்லாம்  முடிஞ்சு  மூணு  நாட்கள்  கழிச்சு  ஒரு  நைட்  டைம்ல  திடீர்னு  ஹீரோயின்  கிணத்துல  குதிக்குது  இது  ஒரு  தவறு அதே  நாயகி  ஒரு  பாட்டு  சீன்ல  ஆத்துல  குளிக்குது  நீச்சல்  அடிக்குது   இ து  அடுத்த  தவறு 


4  ஒய்  விஜயா  குயிலியை  வீட்ல  வெச்சு  பூட்டிட்டு  வாசல்  கதவைப்பூட்டிட்டு  வெளில  போகுது   அடுத்த  ஷாட்டே  ஹீரோ  மெயின்  கேட்டை  திறந்துட்டு  உள்ளே வர்றார்  பூட்டு  இல்லை  . அடுத்த  ஷாட்ல  குயிலி  எங்கெயோ ஒரு  ஃபாரஸ்ட்ல   டூயட்  பாடறார்  ரிட்டர்ன்  வந்த  வில்லி  ஹிரோயின்  கிட்டே  எதுவுமே  கேட்கலை   பூட்டு  எப்படி  உடைஞ்சுது  எக்ஸ்ட்ரா  எல்லாம்  கண்டுக்கவே  இல்ல

5  ஹீரோ  எம் எல் ஏ  மகன்  என்பதை  வெளீல  சொல்லிக்கலை  போலீஸ்  ஸ்டேஷன்ல  யாருக்குமே  அவர்  எம் எல் ஏ  மகன்  என்பது  எப்படி  தெரியாம  போச்சு ?


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்ஸ்  -  இளையராஜா  ரசிகர்கள்  குயிலி  ரசிகர்கள்   காலை 11  ,மணிக்காட்சி  ர்சிகர்கள்  பார்க்கலாம்  ரேட்டிங்  2.25 / 5   


0 comments: