Tuesday, July 19, 2022

உல்லாசப்பறவைகள் 1980 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டபுள் ட்யூட்டி )


1  ஜெர்மனியின்  செந்தேன்  மலரே    தமிழ் மகனின்  பொன்னே  சிலையே

2  தெய்வீக  ராகம்  தெவிட்டாத  பாடல்

3  அழகு  ஆயிரம் உலகம்  முழுவதும்


 மாதிரி  சூப்ப்ர்  ஹிட்  பாட்டு  2 அழகிய  ஹீரோயின்  இளையரஜா  இசை  ஃபாரீன்  லொக்கேஷன் ல  ஷூட்டிங்  இப்டிச்சொன்னா  எந்த  ஹீரோவவது  கால்ஷீட்  கொடுக்க  தயங்குவாரா?  ஹீரோ யாரு? நம்ம  ஆளு  கமல் . கதையே  கேட்காம  ஓக்கே  சொன்ன  படமாம்.  மேலே  சொன்னது  போக  இன்னும்  3  பாடல்கள்  இருக்கு. அதுவும்  ஓக்கே  ரகம்  தான் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  கோடீஸ்வரனோட  ஒரே  பிள்ளை. சமீப  காலமா  அவர்  நடவடிக்கைகளில்  ஏதோ  மாற்றம்  இருக்கு .  திடீர்  திடீர்னு  கோவிச்சுக்கறார். குறிப்பா  நெருப்பு  தீ  அப்டினு  சொன்னா  எரிஞ்சு  விழறார். மனோரீதியா  ஏதோ ஒரு  சம்பவத்தால  பாதிக்கப்பட்டு  இருக்கார். ஓப்பனா  சொல்லனும்ன்னா  லூஸ்  ஆகிட்டார். 


 ஆனா  ,மன  நல  மருத்துவமனைக்கு  கூட்டிட்டுப்போலாம்னா   வர  மாட்டார்/. அதனால  ஹீரோவோட  அப்பா  ஒரு  ஐடியா  பண்றாரு. ஹீரோவோட  ஃபிரண்டுக்கு  பைத்தியம்  அதை  குணமாக்க  ஃபாரீன்  கூட்டிட்டுப்போகனும்னு  பொய்  சொல்லி  2  பேரையும்  அனுப்பறார்


ஏன்? இந்தியாவிலேயே  ட்ரீட்மெண்ட்  எடுக்கலாமே?னு  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  குறுக்குக்கேள்விகள்  கேட்கப்படாது.  ஓ சில  புரொட்யூசர்  செலவுல  எல்லாரும்  ஃபாரீன்  டூர்  போக  பிளான்  தான்  வேற  என்ன? 


ஃபாரீன்ல  ட்ரீட்மெண்ட்  தர்ற  லேடி  டாக்டர்  ஹீரோவோட  முன்னாள்  க்ளாஸ்மேட்.கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆக  இதை  விட  என்ன  காரணம்  வேணும் ? 


லேடி  டாக்டர்  ஹீரோ  கிட்டே  பேச்சுக்கொடுத்து  ஃபிளாஸ்பேக்கை  ஓப்பன்  பண்ண  வைக்கிறார்\

\

 ஹீரோ  ஒரு  கிராமத்துக்குப்போனப்ப  அங்கே ஹீரோயினைப்பார்த்து  லவ்  பண்ணி  இருக்காரு. அதுவும் தான்  ஹிரோயினுக்கு  ஒரு  முறை  மாமன் . அவனுக்கு  இவங்க  லவ்  பிடிக்கலை.  புத்திசாலியான  வில்லன்னா  ஹீரோயினை  கடத்திட்டுப்போய்  கண்  காணாத  இடத்துக்கு   போய்  இருப்பான், இவன்  தத்தி  வில்லன்  ஹீரோயினை  குடிசையோட    வெச்சுக்கொளுத்திடறான். அந்த  நெருப்பைப்பார்த்ததாலதான்  ஹீரோவுக்கு  அலர்ஜி 


 இப்போ  இவங்க  2  பேரும்  லவ்வ  ஆர்கம்பிச்ட்டாங்க. 14  ரீல்  படத்துல  8  ரீல் தான் முடிஞ்சிருக்கு இதுக்கு  மேல  இழுக்கனுமே? அதனால ஹீரோவோட சொந்தக்காரன்  புது  வில்லன்  ஆகி  சொத்துக்கு ஆசைப்பட்டு  ஹீரோவைக்காலி  பண்ணத்துடிக்க  ஹீரோ  அதை  எப்படி  ஜெயிச்சார்  என்பதே  கதை 


ஹீரோவா  கமல் .  ரொம்ப  உற்சாகமா  நடிச்சிருக்கார்.  உற்சாகத்துக்கு  ரெண்டு  காரணம்   ஹீரோவான  அவரே  வில்லன்    ரோலையும்  ப்ளே  பண்ணி  2  ஹீரோயினையும்  ரேப்  பண்ண  ட்ரை  பண்ற  மாதிரி  2  சீன்  இருக்கு  வழக்கம்  போல  டான்ஸ்  கிஸ்  சீன்  இதெல்லாம்  இருக்கு  , கமல்  படம்னா  கிஸ்  சீன்  இருக்குனு  தனியா  சொல்வது  வார்த்தை  விரயம் 


ஹீரோயினா  டாக்டரா  ஹீரோவோட  முன்னாள்  க்ளாஸ்மேட்டா  ரதி அக்னிஹோத்ரி   அழகான  முகம் இளமையான  தேகம்  தாராள  மனசு  இதுக்கும்மேல  தமிழ்  சினிமா  ஹீரோயினுக்கு  என்ன  வேணும் ? 


இன்னொரு  ஹீரோயினா  மலையாள  நடிகை  உன்னி  மேரி .  நேரடியா  சொன்னா  தீபா . இவருக்கு  கிராமத்துக்கதாபாத்திரம்  என்றாலும் கமல்  ரசிகர்கள்  எதிர்பார்க்கும்  காட்சிகள்  உண்டு 


ஹீரோவோட  ஃபிரண்டா  சுருளி  ராஜன்  பெரிய  காமெடி  இல்லை  ஆனா  பைத்தியமா  ஆக்ட்  குடுக்கும்  ஆக்டிங்  அருமை 


  மேஜர்  சுந்தர்  ராஜன்   வெண்ணிற  அடை  மூர்த்தி  வந்தவரை  சிறப்பு 


 இசை  இளைய ராஜா . பிரமாதமான  பாடல்கள்  அற்புதமான  இசை  பின்னணி  இசை 


ஃபாரின்  லொக்கேஷன்  ஒளிப்பதிவு  அனைத்தும்  அருமை 


 ஒரு  ஜாலி  எண்ட்டர்டெய்ன்மெண்ட்  மூவி  சபாஷ்  டைரக்டர்  ( சி வி  ராஜேந்திரன் )


1    ஒரு  பொழுது  போக்கு  அம்சம்  உள்ள  படத்தில்  எதெது  என்னஎன்ன  ரேஷியோல  இருக்கனுமோ  அதது  அந்தந்த  ரேஷியோவில்  இருக்கு 


2  இது  ஹிட்  ஆனதால்  தெலுங்கில் பிரேம  பிச்சி   எனவும்  ஹிந்தில   தூ  தில்  தீவானே  எனவும்  டப்பிங்ல  ரிலீஸ்  ஆச்சு  நல்ல  கலெக்சன் லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  காமெடிகள் 


1   வில்லன்  ஹீரோ  குடிக்க்ற  பால்ல  எதையோ  கலந்து  கொடுக்க  வேலைக்காரனுக்கு  ஒரு  லட்சம்  ரூபா  லஞ்சம்  கொடுக்கறான் ., இன்றைய  மதிப்பில்  10  கொடி  அதை  அவனே  நேரடியா  செஞ்சிருக்கலாம். பணமாவது  மிச்சம்  ஆகி  இருக்கும்


2  பொதுவா  ஸ்லோ  பாய்சன்  கொடுத்தா  மூளை  மழுங்க  ஆரம்பிக்கும்  ஆனா  ஹீரோ  கமல்  ஆச்சே?  அது  வயாக்ரா  மாதிரி  வேலை  செஞ்சு  ஹீரோயினை  ரேப்  பண்ணப்போறாரு 


3  ஹீரோயின்  டிரஸ்  மாத்தறப்ப  வாசக்கதவை  பெப்பரப்பேனு  திறந்து   வெச்சுக்கிட்டேதான்    மாத்துது


4   கிராமத்து   ஹீரோயினை  வீட்டோட  எரிக்கும்  வில்லன்  கொஞ்சமாவது  மூளை  இருந்தா  ஹீரோவை  கொன்னுட்டு  மாமன்  மகளை கல்யாணம்  பண்ணி  இருப்பான்  அல்லது  மாமன்  மகளை  கடத்திட்டாவது  போய்  இருப்பான் 


5   ஹோட்டலி ல்  பக்கத்து  பக்கத்து  ரூம்ல  ஹீரோவும்  ஹீரோயினும்  தங்கி இருக்காங்க,  நடு  ராத்திரில  ஹீரோக்கு  தண்ணி  தவிக்குது ஆனா  ஜக்குல  தண்ணி  இல்லை  இப்போ  அவருக்கு  2  ஆப்சன் இருக்கு  1  இண்டர்காம்ல  ரூம்  சர்வீஸ்க்கு  ஃபோன்  பண்ணி  தண்ணி  கேட்கலாம்  அல்லது  காரிடாரில்  நடந்து  வந்து  தண்ணி  குடிக்கலாம், ஆனா  நம்மாளு  ஹீரோயின்  ரூமுக்குள்ளே  போறாரு 


6  ஹீரோயின்  புத்திசாலியான  மாடர்ன்  கேர்ள்  அதனால  நடு  ராத்திரில  ரூம்  கதவை  தாழ்  போடாம  மிடி  போட்டுக்கிட்டு  புக்  படிச்ட்டு  இருக்கு  நம்மாளு  வந்து   தண்ணி  கேட்டதும்  குடுத்துட்டு  அவரை  அனுப்பிச்சுட்டு  மறுபடியும்  கதவை  தாழ்  போடாம  வந்து  மல்லாக்க  ப்டுக்கறாரு . நம்மாளு  மறுபடியும் எண்ட்ரி  ஆகி  இந்த  ஹீரோயினையும்  ரேப்  பண்ண  ட்ரை  பண்றாரு

 (  ஏன்னா  நாளைக்கு  விமர்சகர்கள்  நாக்கு  மேல  பல்லைப்போட்டு  கேள்வி  கேட்டுடக்கூடாதே? ஏன் அந்த  ஹீரோயினை  மட்டும்  அட்டெம்ப்ட்  ரேப்  ப்ண்ணீங்க> இது  என்ன  தக்காளி  தொக்கா?  அப்டின்ட்டா? (

7  முதல்  காதலி  செத்துப்போய்  ஒரு  மாசம்  கூட  ஆகலை  அதுக்குள்ளே    சோகம்  எல்லாம்  போய்  அடுத்த  லவ்  எப்டி  ஸ்டார்ட்  ஆச்சு ? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தீபா , ரதி  ரசிகர்கள்  கமல்  இளையராஜா  ரசிகர்கள்  பார்க்கலாம்.  அது  போக  ரஜினி  ரசிகர்கள் கமலை  கலாய்க்கனும்னா  பார்க்கலாம்  ரேட்டிங்   2.5 / 5 

0 comments: