Saturday, July 02, 2022

Rocketry: The Nambi Effect ( 2022 ) -சினிமா விமர்சனம் ( பயோகிராஃபி மெலோ டிராமா)

 


விசாரணை, ஜெய்  பீம்  மாதிரி  படங்களில்  ஒரு  சாமான்யனுக்கு  அல்லது  அடித்தட்டு  மக்களுக்கு  போலீஸால்  என்னென்ன  கஷ்டம்  எப்படி  எல்லாம்  வரும்னு  பார்த்த  நமக்கு பெரிய  அதிர்ச்சி . ஏழைன்னா  இவங்களுக்கு  கிள்ளுக்கீரை பணக்காரன்  மேல  கை  வைப்பாங்களா?னு  படம்  பார்த்து  திட்டிட்டு   இருந்தோம், ஆனா  உலக  அளவில்  ராக்கெட்  சயின்சில்  இந்தியாவை  தலை  நிமிரச்செய்த  ஒரு  விஞ்ஞானிக்கே  அந்த  கதி  நேர்ந்தது  என்பதை  அறியும்  போது  விக்ரம்ல  கமல்  சொன்னா  மாதிரி  நம்ம  வாழ்க்கைல  என்ன  நடந்தாலும்  ஆகட்டும்  பார்த்துக்கலாம்  அப்டிங்கற  தன்னம்பிக்கையைக்கொடுக்குது  இந்தப்படம்.  வெகுஜன  மக்களைக்கவரும்  கமர்ஷியல்  அயிட்டங்கள்  மற்றும்  டூயட் , காமெடி  டிராக், ஃபைட்  ஏதும்  இல்லாததால்  பி  சி  செண்ட்டர்  ஆடியன்சைக்கவர்வது  சிரமம்,  பால்கனி  ஆடியன்சுக்காக  ஒரு  கிளாசிக்  படம்   


ஹீரோ நம்பி  ஒரு  ராக்கெட் ச்யின்ஸ்  படிச்சவர் . சாலிட்  ராக்கெட்  விட்டுட்டு  இருந்த  இந்தியாவை  லிக்விட்  ராக்கெட்  விட  வைக்க  சிந்தித்தவர் . அது  பற்றி  படிக்க  அறிந்து  கொள்ள  அவர்  ஃபிரான்ஸ்  போறார்  அங்கே  அவர்  மேற்கொண்ட  முயற்சிகள்  முதல்  பாதி  ரொம்பவே  ஸ்லோவா  திரைக்கதை  அமைக்கப்பட்டிருக்கு , போதாததுக்கு  ராக்கெட்  பற்றிய  டெக்னிக்கல்  விஷயங்கள்  பல  இடங்களீல்  விலாவாரியா  சொல்லப்பட்டிருக்கு


பின்  பாதில பாகிஸ்தான்  நாட்டுக்கு  இந்திய  நாட்டு  ராக்கெட்  ரகசியங்களை  வித்துட்டார்  என  தேசதுரோக  வழக்கு  போடப்பட்டு  போலீசால்  சிபிஐ யால்  எவ்ளோ  கஷ்டங்கள்  அனுபவிச்சார்?  பிறகு  நீதித்துறையுடன்  போராடி  எப்படி  ஜெயித்தார்  என்பது  சுவராஸ்யமாவே  சொல்லப்ட்டிருக்கு 


 ஹீரோவா  மாதவன் .  நீண்ட  இடைவெளிக்குப்பின்  அலைபாயுதே  சாக்லெட்  பாய் கெட்டப்பில்  கொஞ்ச  நேரம்  வருவது  மகிழ்ச்சி . பிறகு  யார்  யார்  கூடவோ என்னென்வோ  பேசிட்டு  இருக்கார்.இடைவேளைக்குப்பின்  அசத்தலான  நடிப்பு  அவருடையது .


ஹீரோயினா  சிம்ரன். ஒரே  ஒரு  காட்சி  இதுவரை  தமிழ்  சினிமாவே  பார்த்திராத  ஒரு சிச்சுவேஷன். மாறுபட்ட  நடிப்பை  வழங்கி  இருக்கார் 


இவங்க 2 பேரு  ஜெகன்  தவிர  பெரிதாக  தெரிந்த  முகங்கள்  யாரும்  இல்லை  ஆனாலும்  அக்தையோடு  நம்மால்  ஒன்ற  முடிகிறது 


சூர்யா  ஒரு  கேமியோ  ரோல்  பண்ணி  இருக்கார்  அன்பே  சிவம்  படத்துல  கமலுக்கு  இணையான  நடிப்பை  வழங்கிய  மாதவனையே  ஒரு  சீனில்  ஓவர்  டேக்  செய்கிறார்.  அருமையான  நடிப்பு 


ஒளிப்பதிவு  பிரமாதம்  ஃபாரீன்  லொக்கேஷன்  என்பதால்  ஒரு கிராண்ட்  லுக்  கொடுக்குது  , இசை  குட் 


சபாஷ்  டைரக்டர் (  மாதவன்)


1   தனது  முதல்  படத்துலயே  ஒரு  ரிஸ்க்கான  கதையைக்கையில்  எடுத்து  திரைக்கதை  வசனம்  எழுதி  பல  விருதுகளைக்குவிக்கப்போகும் இவருக்கு  பாராட்டுக்கள் 


2   சிபிஐ  ஆஃபீசர்  மாதவனுக்கு  டீ/காஃபி   கொடுத்து  அதை  அவர்  குடிக்க்போகும்  தருணத்தில்  காலால்  எட்டி  உதைக்க  அதுவரை  ஒரு  ஆஃபீசருக்குண்டான  மரியாதை  பெற்று  வந்த  சயிண்ட்டிஸ்ட்  ஒரு  தர்ட்  டிகிரி  ட்ரீட்மெண்ட்  கைதி  போல  உணரும்  தருணம்  கிளாசிக்கல்  ட்ரீட்மெண்ட்


3  கல்யாண  வீட்டில்  யாரும்  இவர்களை  மதிக்காதது  ஆட்டோ  டிரைவரால்  அவமானப்படுவது , அக்கம்  பக்கம்  வீடுகள்  பொதுமக்கள்  இவர்களை  கல்லால்  அடிப்பது  எல்லாம்  உருக்கம் 


4   நம்பியாக  மாதவன்  பேட்டி  ஓடிக்கொண்டிருக்க  ஜூம்  அவுட்  ஜூம்  இன்ல  நிஜ  நம்பி சாரை   காட்டுவது  கூஸ்பம்ப் மொமெண்ட். அந்த  சீனில்  சூர்யாவின்  ஆக்டிங்  அடிபொலி


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  நெருடல்கள் 


1  ஹீரோவை  தேசதுரோகம்  வழக்கில்  சிக்க  வைத்தது  யார்? அவங்க  நோக்கம்  என்ன? அவங்களூக்கு  ஏதாவது  தண்டனை  கிடைச்சுதா? இதுக்கெல்லாம்  படத்தில்  விடையே  இல்லை , இது  பெரிய  பின்னடைவு  படம்  பார்த்த  திருப்தி  வரனும்னா  அது  நிச்சயம்  வேணும்


2  ஒரு  மிக  முக்கியமான  வழக்கு  தீர்ப்பு  வருது  அந்த  தீர்ப்பு  வரும்போது  அப்போ  ஹீரோ  கோர்ட்ல  இருந்தாதானே  சீன்  சூப்பரா  அமையும் ? ஆனா  யாரோ ஃபோன்ல  தகவல்  சொல்றாங்க  சப்னு  ஆகிப்போச்சு 


3    கல்யாண  விருந்தில்  ஹீரோ  ஹீரோயின்  பந்தில  உக்காந்திருக்காங்க  அப்போ  ஃபோன்ல  நியூஸ்  வருது  டக்னு  ஹீரோ  எந்திரிக்கிறார். லாங்க்  ஷாட்ல  அந்த  லைன்ல  அதுவரை  அமர்ந்திருந்த  யாரையும்  காணோம்,  இலை  சாப்பாடு  அப்படியே  இருக்கு . அவங்க  எதுக்கு  சாப்பிடமா  எந்திரிச்சுப்போய்ட்டாங்க ?


4  தீர்ப்பு  வந்தது  ஹீரோவுக்கே  அப்போதான்  தெரியும்.  ஆனா  அதுவரை  அவங்களை  மதிக்காம    பார்த்துட்டு  இருந்தவங்க  சின்னக்கவுண்டர்  , எஜமான  பட  ஹீரோக்களை  மக்கள்  கும்பிடற  மாதிரி  திடீர்  மரியாதை  தருவது  வணக்கம்  வைப்பது  சரியா  ஒட்டலை 


  ர்சித்த வசனங்கள் 


ஒரு நாயைக்கொல்லனும்னு"முடிவு பண்ணிட்டா அதுக்கு வெறிநாய்னு பேரு வெச்சா போதும்,ஒரு"மனுசனை முடிச்சுக்கட்ட முடிவு"பண்ணுனா"அவனுக்கு தேசதுரோகி பட்டம்"தந்தா போதும்

2  இந்த  நாட்டுல  தேச  பக்தர்கள்  எல்லாம்  தேசதுரோகிகளாக தவறாகப்புரிந்துகொள்லப்படுகிறார்கள்  , ஒரு  தேசத்தில்  தேச பக்தர்கள்  அவமானப்படும் போக்கு  இருக்கும்  வரை  அந்த  நாடு உருப்படாது 


3 டெக்னாலஜில  எவளோ  முன்னேற்றம்  அடைஞ்சிருக்கோம், ஆனா  ஸ்பேர்  பார்ட்ஸ்க்கு  மற்ற  நாடுகளிடம்  பிச்சை  எடுக்கறோம் 


4  ஒரு  ராக்கெட்  எப்போ  எப்படி  ரீ ஆக்ட்  பண்ணும்னு  தெரிஞ்சுக்கிட்ட  எனக்கு  ஒரு  மனுசன்  எப்படி  ரி ஆக்ட்  பண்ணுவான்னு  தெரியல 

5   நான்  உங்களை  ஃபாலோ  பண்றேனா? நீங்க  என்னை  ஃபாலோ  பண்றீங்களா?  தெரில  ஆனா  நாம  ரெண்டு  பேரும்  அடிக்கடி  மீட்  பண்றோம் 


6   மொழி  தெரியாத  தேசத்தில்  வாயை  மூடிக்கிட்டு  கண்ணையும்  காதையும்  மட்டும்  திறந்து  வெச்சுட்டு  இருப்பது  உத்தமம்


7  பாத்திரத்துல  இருக்கறதைத்தான்  பந்தில  பரிமாற  முடியும் , பட்ஜெட்க்கு  தகுந்த  மாதிரிதான்   செய்ய  முடியும் 


8   என்ன  சொல்றீங்க? அவங்க  5வருச  சம்பளம்  உங்களுக்கு  ஒரு  வருசத்துல  கிடைக்கப்போகுதா? 


ம்ஹூம் ஒரு  மாசத்துல  கிடைக்கப்போகுது 


9  இந்தியர்கள்  எப்போதும்  அவங்க  மனைவியை  சந்தோஷப்படுத்துறதுல  குறியா  இருப்பாங்க  அதனால்தான்  இந்தியாவில்  மக்கள்  தொகை  அதிக,ம்  


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     எந்த  சாதனையு,ம்  செய்ய  வேண்டாம் சாமான்யனா  சாதா  வாழ்க்கை  நமக்குப்போதும்  எனும்  எண்ணம்  வர  நம்  வாழ்க்கை  மீது  ஒரு  பிடிப்பு  வர  இந்தப்படத்தை  தாராளமாப்பார்க்கலாம். இந்தப்படம் தமிழ்ப்படம்  மாதிரி  தெரில  ஹிந்தில  எடுத்து  டப்  பண்ணி  இருக்காங்க  போல கேட்டா  மல்ட்டி  லேங்க்வேஜ்னு  அடிச்சு  விடுவாங்க  லிப்  சிங்க்  செட்  ஆகல . ஒரு  வேளை  இது  நேரடி  தமிழ்ப்படம்னா  விகட்ன்  மார்க்  50   ரேட்டிங்  3 / 5 

0 comments: