Thursday, April 28, 2022

காத்துவாக்குல ரெண்டு காதல் (2022) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி )


 கண்ணா ரெண்டு  லட்டு  தின்ன ஆசையா? இதுதான்  கதையின்  மையக்கரு.பொதுவா  ஒரு  ஹீரோ  கிட்டே  போய்  கதை  சொல்லும்போது  ரெண்டு  ஹீரோயின்  சப்ஜெக்ட்னா  உடனே  ஓகே  சொல்லிடுவாங்க , ஏன்னா காரணம்  உங்களுக்கே  தெரியும். ஆல்ரெடி  ரஜினி  வீரா  வில் , கமல்  காதல்  பரிசு வில் மோகன்  ரெட்டை  வால்  குருவி யில் சைன்  பண்ணிய  கதை தான்


ஹீரோவுக்கு  டூயல் சிம்மோ டபுள் டெக்கர் ராம்போ  அப்டினு  ஒரு  கில்மா  வியாதி  இருக்கு . அதன்  படி   பகல்ல ரெமோ வாகவும்  நைட்  ரெமோ  2 பாய்ண்ட்  ஓ  வாகவும்  மாறிடுவார்


அதிர்ஷ்டமே  இல்லாதவர்னு  நம்பப்பட்ட  ஹீரோ  வாழ்க்கைல திடீர்னு  அதானி யோட  ஷேர்கள்  எல்லாம்  ஓவர்   நைட்ல குப்னு  ஏறுன  மாதிரி  ஒரு  லக்கி  சான்ஸ்  கிடைக்குது,பகல்ல  ஒரு  பொண்ணு  கூட  நைட்ல  இன்னொரு  பொண்ணு  கூட  பழக்கம்  ஆகுது . அது  காதல்ல  முடியுது 


ரெண்டு பேரையும்  ஒரே  டைம்ல  லவ்   பண்றார். ரெண்டு  பேருமே  அவருக்கு  வேணும், ஆனா  அவங்க  ஒத்துக்கனுமே? யாரோ  ஒருவர்  கூட  மட்டும்தான்னு  கண்டிசன்  போடறாங்க . யார்  விட்டுக்கொடுத்தாங்க ? என்பதுதான்  திரைக்கதை  ட்விஸ்ட் 


 ஹீரோவா விஜய்  சேதுபதி . டெய்லர்  மேடு  கேரக்டர், இது  அவருக்கு  கனகச்சிதமாகப்பொருந்துது.கம்ல் , மோகன்  மாதிரி  ரொமாண்டிக்  லுக்  இல்லை , ரஜினி  மாதிரி  காமெடி  களை  இல்லை , ஆனாலும்  அவர்  செய்வதை  எல்லாம்  ரசிக்க  முடிகிறது .நியாயம்  இல்லாத  செயல்களை  அவர்  செய்யும்போது  கூட  நம்மால்  அவரை  ஏற்றுக்கொள்ள  முடியுது . ஆடியன்சான  நம்மாலயே  அதை  ஏத்துக்க  முடியுதுன்னா  அவரோட  காதலிகளால  ஏத்துக்க  முடியாதா? 


ஹீரோயினாக லேடி  சூப்பர்  ஸ்டார்  2  கோடி  லேடி நயன்  தாரா . ஐயா  படத்துல  கொழுக்  மொழுக்னு புசு புசு  கன்ன  அழகியை  ரசிச்சவங்க  கொஞ்சம்  மனசை   திடம்  ஆக்கிக்குங்க . பேலியோ  டயட்ல மெலிந்த கோழியோ  என  பரிதாபப்படும்  தோற்றத்தில்  வருகிறார், ஓப்பனிங்  சீன்  ல விசில்  அடிக்க  முயன்ற  ரசிகர்கள்  கூட  ஜெர்க்  ஆகி  அப்படியே  நிற்கறாங்க , ஆனாலும்  நடிப்பில்  குறை  வைக்க  வில்லை . நானும்  ரவுடிதான்  அளவுக்கு  இல்லைன்னாலும்  இந்தக்கதைக்குத்தேவையான  கச்சிதமான  நடிப்பு 


இரண்டாவது  ஹீரோயினா  புஷ்பா  புகழ்  சமந்தா. இவர்  வரும்  ஓப்பனிங்  சீனில்  நயனுக்கு  இணையான  கை  தட்டல்  கிடைத்தது  ஓ  சொல்றியா  ,மாமா  பாட்டு  மகிமையால்  தானோ ?  சமந்தாவின்  அதிக  பட்ச  அழகு  நீதானே  என்  பொன்  வசந்தம்ல  வெளிப்பட்டது.அந்த  அளவு  இல்லைன்னாலும்    ஓக்கே  ரகம்  தான் , கிளாமராக  டிரஸ்  பண்ணி  இருந்தாலும்  அவர்  முகத்தில்  உள்ள  குழந்தைத்தனம்  அவரைக்காப்பாற்றுகிறது ,  ஸ்ரீதேவி  கூட  இதே  பாணியில்   முன்னேறியவரே


லொள்ளு சபா  மாறன், கிங்க்ஸ்லீ  இருவரும்  நகைச்சுவை  ல  ஸ்கோர்  பண்றாங்க . இவங்களுக்கு  இன்னும்  அதிக  காட்சிகள்  வைத்திருக்கலாம்.


ஒரு  எச்சரிக்கை . டான்ஸ்  மாஸ்டர்  கலா  மாஸ்டர்  மானாட மயிலாட  படத்தில்  பயமுறுத்தியது  மாதிரியே  18  வயது  பருவ  மங்கையாக க்ளோசப்பில்  பயமுறுத்துவார். இதய  பலகீனம்  உள்ளவர்கள்  தக்க  துணையுடன்  வரவும் 


அனிரூத்  தான் மெயின்  இதுல  இசை  கலக்கல்  ரகம்  பிஜிஎம்மும்  பக்கா . ஒளிப்பதிவும்  அழகு 


சபாஷ்  டைரக்டர் 


1  இயக்குநர்  விக்னேஷ்  டிவனின்  பிளஸ்  என்னான்னா  சீரியசான  காட்சியின்  ஃபினிசிங்கில்  ஒரு  காமெடி  டச்  வைப்பார்    அது  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகும் . இதிலும்  ஆகி  இருக்கு 


2   இரு  நாயகிகளுக்குமான  தனித்தனி  ஃபிளாஸ்பேக்  கதைகள்  , நாயகனின்  ஃபிளாஸ்பேக்  என  செண்ட்டிமெண்ட்  போர்சன்களை  கச்சிதமாக  எடுத்தது 


3 ஒரு  சராசரி  ரொமாண்டிக் சப்ஜெக்ட்  படத்துகான  ட்ரெய்லர்  கட்டில்  அவன்  என்னை  கல்யாணம்  பண்ணிட்டான்...  மாதிரி  வசனத்தை  வைத்து  ஒரு  பரபரப்பைக்கிளப்பியது  (  ரசிகர்கள்  எதிர்பார்த்த  அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  படத்தில்  இல்லை ) 


4  அட்டக்காப்பி  அட்லி  பாணியில் பல  படங்களின்  புகழ்  பெற்ற  காட்சிகளை  சாமார்த்தியமாக இதில்  இணைத்தது


5   சமந்தா  அடிக்கடி  சொல்லும்  மே பி  டயலாக்கை  வெச்சு  பேபி  மே பி  வார்த்தை  விளையாட்டு வசன  சொல்லாடல்கள்  அமைத்தது . அதே  போல  நயன்  எல்லா  மாப்ளைகளுக்கும்  க்டைசியில்  நன்றி  வணக்கம்  சொல்வது 


திரைக்கதையில்  சில  நெருடல்கள் , லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  என்னதான்  உதயநிதி  படமா  இருக்கட்டும்  ஹீரோ  என்ன  கலைஞரா? ஸ்டாலினா? 24  மணி  நேரமும்  ஓய்வில்லாத  சூரியன்  போல  உழைச்சுக்கிட்டே  இருக்க?  பகல்ல ஓலா  டாக்சி  ஓட்றார். இரவில் கிளப்பில்  பவுன்சரா  வேலை  செய்யறார். எப்போ  தூங்குவார்?


2  மாப்பிள்ளை  பார்க்கும்  படலம்  பூரா  நயன் தாரா  ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட் போட்டுட்டேதான்  எல்லார்  வீட்டுக்கும்போறாரு. மாப்ளை  வீட்டில்  தெறிச்சு  ஓடிட  மாட்டாங்க ?அதுவும்  அவர்  போட்டிருக்கும்  பேக்  லோ நெக்  ஜாக்கெட்  கேப்பில்  ஒரு  20  வரிக்கவிதையே  எழுதலாம்  போல 


3 வீட்டில்  ஃபிக்ஸ்  பண்ணிய  மாப்ளை  மணப்பெண்ணைக்கூட்டிட்டு  கிளப், பார்ட்டினு  சுத்திட்டு  இருக்கார். ஒரு  ;  பார்க்  பீச்  கோயில்  கிடையாது 


4  நீயா? நானா  ?கோபினாத்  மீது  இயக்குநருக்கு  என்ன  கோபமோ  தெரியவில்லை அவரைப்பிடிச்சு  வாரு  வாருனு  வாரி  இருக்கார் அந்தக்கேரக்டரில்  வரும்  பிரபு  கனகச்சிதம்  என்றாலும்  ஓவர்  செட்டப்  என  தோணுது 


5  திரைக்கதையில்  திருப்பங்கள் , விறு விறுப்பு  கிடையாது , ஜவ்வு  இழுப்பு . தன்  காதலருக்கு  இன்னொரு  காதலி  இருக்கார்  என்ற  அதிர்ச்சியான  விஷயத்தை  இரு  நாயகிகளுமே  ஜஸ்ட்  லைக்  தட்  கடந்து  செல்வது  எப்படி ? 


  மனதில்  நின்ற  வசனங்கள்


1 மிகப்பெரிய  அதிர்ஷ்டம்   வரும்  முன்  சின்னச்சின்ன  தடங்கல்கள்  வரத்தான்  செய்யும் 


2   திண்டுக்கல்  ஐ  லியோனியும்  ,  சன்னி லியோனும்  அண்ணன்  தங்கச்சினு  சொன்னாலே  அவன்  நம்பிடுவான்  அவ்ளோ அப்பாவி 


3    சில  விஷயங்கள்  நல்லதா  நினைச்சு  ஆரம்பிப்போம், அது  கெட்டதா  முடிஞ்சிடும், கெட்டதா  நினைக்கற  சில  விஷயங்கள்  நல்லதா  அமைஞ்சிடும்


4 இதுக்கும்  மேல  கேட்க  ஒரு  முட்டாளாலதான்  முடியும், அதனால தான்  இவரை  செலக்ட்  பண்ணேன்


5  உங்க  பாய் ஃபிரண்ட்  உங்க  கூட  இருக்கறப்ப  என்னை  ஏன்  பார்த்தீங்க ?


 என்  பாய் ஃபிரண்ட்  என்   கூட  இருக்கறப்ப  என்னை  ஏன்  பார்த்தீங்க ?அதனாலதான்.


6  ஹலோ  பாஸ்.  உங்க  பாஸ்  என்னை  அடிக்க  என்னையே  ரெடி  பண்றாரு 


7  ஐ  லவ்  யூ  சொல்றது  பெருசில்ல  ஐ  லவ்  யூ சொல்ல  வைப்பதுதான்  சவாலான  விஷயம் 


8  ஐ  லவ்  யூ 


  ஐ  லவ்  யூ   டூ


யூ  மீன்  ஐ  லவ்  யூ TOO?


   NO  I LOVE YOU  TWO


9    என்னால  மறக்கவே  முடியாத  ரெண்டு  பேரை  நான்  மறந்த  மாதிரி  நடிச்சாகனும் , ரொம்ப  கஷ்டமான  விஷயம்  தான் 


10   நடந்ததை  எல்லாம்  கெட்ட  கனவா  நினைச்சு  நீங்க  ரெண்டு  பேரும்  அதை  மறந்துடுங்க , நல்ல  கனவா  நினைச்சு  நான்  அதை  ஞாபகம்  வெச்சுக்கறேன் 


11   ஆறிப்போன  இட்லிக்கு  எதுக்கு  ஹாட்  பேக்?


 ஆறிப்போனாலும்  இட்லி  இட்லி  தானே? 


12  அடப்பாவி  நாளை  சர்ச்ல  ஃபாதர்  ஆக  வேண்டிய  ஆள்  இப்படிப்பண்ணலாமா?


 இவ்ளைக்கல்யாணம்  பண்ணிக்கிட்டா  ஆட்டோமெட்டிக்கா  ஃபாதர்  ஆகிட  மாட்டேனா? 


  சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - காத்துவாக்குல ரெண்டு காதல் − திரைக்கதை இன்னும் க்ரிப்பாக"இருந்திருந்தால் செம ஹிட் ஆகி இருக்கும் ,வி.சே ,ந.தாரா,=தா .மூவரின் நடிப்பும் கனகச்சிதம்.காமெடி ஆங்காங்கே ஒர்க்அவுட்"ஆகி"இருக்கு.அனிரூத்"இசை பக்கா.டைம் பாஸ் ஜாலி மூவி.விகடன் எதிர்பார்ப்பு மார்க்"41 ,ரேட்டிங் 2.75 / 5

0 comments: