Tuesday, June 08, 2021

நடு இரவில் 1970 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 spoiler  alert


ஹீரோ ஒரு  கோடீஸ்வரர், இவர்  இளைஞரா  இருந்தப்போ  ஒரு  பிற்படுத்தப்பட்ட  பெண்ணை  காதல்  திருமணம்  செஞ்சதால  அவரோட  அண்ணன்,  தம்பி  உட்பட  பல  சொந்தக்காரங்களால்  கரிச்சுக்கொட்டப்பட்டு  விலக்கி  வைக்கப்படுகிறார் .பிறகு  தன்  சொந்த திறமையாலும்  ,  உழைப்பாலும்  முன்னேறி  பணக்காரர்  ஆகிடறார்.


இப்போ    வெளி  உலகோடு  தொடர்பே  இல்லாத  கைலாசா  மாதிரி  ஒரு  தீவில்  தங்கி  இருக்கார். அங்கே  போலீஸோ தகவல்  தொடர்பு  சாதனங்களோ  எதுவுமே  இல்லை .இவருக்கு  ஒரு  ஃபிரண்ட்  , இவர் ஒரு  டாக்டர் 


  இப்போ  மேலே  சொன்னவை  எல்லாம்  ஃபிளாஸ்பேக்  சீன்களாக  இல்லாமல்  வசனம்  மூலமே  புரிய  வைக்கப்படுது


  படத்தோட  ஓப்பனிங்  சீன்லயெ  கதைக்கு  நேரடியா  வந்துடறாங்க 


 இப்போ  டாக்டர்  ஹீரோவிடம்  ஒரு  உண்மையை  சொல்றார். அதாவது  ஹீரோவுக்கு  பிளட்  கேன்சர் .  அவரது  நாட்கள்  எண்ணப்படுகின்றன. அதனால  உன் சொந்தம் பந்தங்களை  எல்லாம்  வர  வெச்சு  கடைசி  காலத்தை  அவங்களோட  செலவளிங்க்றார்


 ஆனா  ஹீரோவுக்கு  அதில்  உடன்பாடு  இல்லை  அவருக்கு  இன்னும்  அவங்க  மேல  உள்ள  கோபம்  தீரலை.  எப்படியோ  ஒரு  வழியா  ஹீரோவை  சம்மதிக்க  வைக்கறார்இப்போ  சொந்தக்காரங்களுக்கு  எல்லாம்  லெட்டர்  போகுது . இந்த  மாதிரி  ஹீரோ  மரணத்தின்  விளிம்பில்  இருக்கார். நீங்க  வந்து  இங்கே தங்கி  இருந்தா  உங்களுக்கு  சொத்து  கிடைக்கும்


உடனே  எல்லாரும்  சிட்டு  மாதிரி பறந்து  வந்துடறாங்க . 


 ஹீரோ ,  மனைவி , நண்பர் ,  வேலைக்காரங்க , தோட்டக்காரங்க ,  சொந்தக்காரங்க  ஆக  மொத்தம் 24  பேர்  இப்போ  இந்த  பங்களாவில்  இருக்காங்க 


இந்த  பங்களாவில்  ஒரு  கொலை  நடக்குது.  இது  ஒரு  தொடர் கதைனு  வரிசையா  கொலைகள்  நடக்குது


இப்போ   நமக்கும்,  சொந்தக்காரங்களுக்கும்  எழும்  சந்தேகங்கள்  என்னன்னா


1   இந்த  சொந்தக்காரங்களைப்பழி  வாங்கத்தான்  ஹீரோ  பிளான்  பண்ணி  எல்லாரையும்,  வர  வெச்சு  போட்டுத்தள்ளறார்


2  ஹீரோ  இறந்துட்டா  சொத்தெல்லாம்  டாக்டருக்கே  சேரும். அப்போ  சொந்தக்காரங்க  வாரிசுரிமை  நடத்த  வந்துடக்கூடாதுனு  அவர்தான்  பிளான்  பண்ணி  வர  வெச்சு  கொலை  பண்றார்


3    வந்த  சொந்தக்காரங்கள்ள   யாரோ  ஒருத்தர்தான்  பங்கு  போட  ஆட்கள்  இருக்கக்கூடாதுனு   போட்டுத்தள்ளிட்டு  இருக்கான்

  மேலே  சொன்ன  3  பேர்களில்  யார்  கொலையாளி  என்பதுதான்  படத்தின்  க்ளைமாக்ஸ் இதுல  ஹீரோவா  மேஜர்  சுந்தர்ராஜன். இவரோட  ஃபேவரைட்  டயலாக்  ஆன  இங்க்லீஷ்ல  ஒருக்கா  தமிழ்ல  ஒருக்கா  வசனம்  பேசும்  பாணி  இதில்  இல்லாதது  ஏமாற்றமே


டாக்டராக  படத்தின்  இயக்குநரான  வீணை  எஸ்  பாலச்சந்தர் .  சிகரெட்  பிடித்துக்கொண்டே  இவர்  வசனம்  பேசும்  ஸ்டைல்  எல்லாம்  ஓக்கே 


துக்ளக்  சோ  வேலைக்காரராக  ஒரு  டம்மி  ரோல்


  ராகவன்  முக்கியமான  ரோல்,  விழி  ஒளி  இழந்த  மாற்றுத்திறனாளியா  வர்றார்


 எல்லாரும்  நல்லா  பண்ணி  இருக்காங்க 


அந்தக்காலத்தில்  எல்லாம்    ஒரு  ரீலுக்கு ஒரு  பாட்டு  ஃபார்முலாவில்  சினிமா   இருந்தது.  அப்பவே  மிக  தைரியமாக  பாட்டே  இல்லாமல்  எடுத்திருக்காங்கபண்டாரி  பாய்  , சவுகார்  ஜானகி  போன்ற   அந்தக்கால  கலைஞர்கள்  நடிச்சிருக்காங்க   148  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  இந்தக்கால  ரசிகர்களும்  ரசிக்கும்  வகையில்  எடுக்கப்பட்டிருக்கும்   யூ  ட்யூப்  ல  கிடைக்குது


 அகதா  கிறிஸ்டி  எழுதிய  And Then There Were None  என்ற  நாவலை  தழுவி  எடுகப்பட்ட  படம்


சி  பி  ஃபைனல்  கமெண்ட்  -  தமிழ்  சினிமாவின்  முக்கியமான  க்ரைம்  த்ரில்லர்கள்  லிஸ்ட்  எடுத்தால்  அதில்  வீணை  எஸ்  பாலச்சந்தர்  எடுத்த  படங்கள்  அனைத்தும்  இடம்  பெறும்.,  இந்தப்படம்  அவர்  இயக்கிய  கடைசி  படமாம் .  செம  படம்  மிஸ்  பண்ணிடாதீங்க 

Nadu Iravil.jpg
Poster
Directed byS. Balachander
Produced byS. Balachander
Based onAnd Then There Were None
by Agatha Christie
StarringS. Balachander
Major Sundarrajan
Pandari Bai
Sowcar Janaki
Music bySundaram Balachandar
CinematographyK. V. S. Reddy
Edited byK. Govindasamy
Production
company
S. B. Creations
Distributed byS. B. Creations
Release date
1970
Running time
148 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: