Wednesday, April 01, 2020

சரக்கு சங்கரலிங்கங்கள் கவனத்துக்கு

ஆல்கஹால் வித்டியாரல் 

(Alcohol withdrawal)
இந்த ஊரடங்கு முன்னிட்டு ஊரில் உள்ள எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் போது, டாஸ்மாக் கடைகளும் சேர்த்து அடைக்கப்பட்டு விட்டது

இதனால் தினமும் மது குடித்து அடிமையாக இருந்த மக்களுக்கு திடீரென நிப்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் ஆல்கஹால் வித்டிராவல் சிண்ட்ரோம் எனப்படும். 

யாரெல்லாம் அதிக அளவில் குடிக்கிறார்களோ அவர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் வரை வாய்ப்பு உள்ளது.

 அதிக அளவு என்பது 
ஆண்களுக்கு ஒரு வாரத்திற்கு 15 ட்ரிங்க்ஸ் எனவும் 
பெண்களுக்கு ஒரு வாரத்தில் எட்டு ட்ரிங்க்ஸ் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது

ஒரு டிரிங்க் (one drink) என்பது 
பீர் - 285 ml
வோட்கா - 100 ml
விஸ்கி /பிராந்தி - 30 ml

நீங்கள் குடிப்பது எத்தனை டிரிங்க்ஸ் ஒரு வாரத்திற்கு வரும் என்பதை கணக்கீடு செய்து கொள்ளுங்கள். 

நீங்கள் மதுவிற்கு அடிமையா இல்லையா என்பதை கீழ்காணும் அட்டவணை விளக்குகிறது 
CAGE questions 
1)நீங்க எப்பவாவது, நாம் அதிகமாக குடிக்கிறோம், குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது உண்டா 
(cut down - yes - 1 no - 0)

2)உங்கள் அருகில் அல்லது வீட்டில் இருக்கும் யாராவது நீங்கள் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சத்தம் போட்டது உண்டா? 
(Annoying - yes-1 No-0)

3)நீங்கள் அதிகமாக குடிப்பது பற்றி என்றைக்காவது குற்ற உணர்வு கொண்டது உண்டா? 
(guilty - yes - 1 No-0)

4) என்றைக்காவது ஒருநாள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குடித்தது உண்டா? 

(Eye opener yes-1 No-0)

இதில் ஸ்கோர் 4 என்று சொல்லுகிறவர்கள் கண்டிப்பாக மதுவிற்கு அடிமையாக இருப்பவர்கள். - High risk
2-3 intermediate risk
0-1 low risk 

இந்த மாதிரி High risk ஆட்கள் மது நிறுத்திய உடன் 
ஆல்கஹால் வித்டிராவல் சிண்ட்ரோம் வர வாய்ப்பு அதிகம். நிறுத்திய ஆறு மணி நேரத்தில் இருந்து சில நாட்களுக்கு வரை இந்த பிரச்சினை நீடிக்கும். 
1)கைகால் நடுக்கம் 
2) வாந்தி வரும் உணர்வு 
3)பதட்டம் 
4)தலைவலி 
5)படபடப்பு 
6)வியர்த்துக் கொட்டுதல் 
7)குழப்பமான மனநிலை 
8)தூக்கமின்மை 
9)அதிக இரத்த அழுத்தம் 
10)துர் கனவுகள் 

சில சமயங்களில் 
காய்ச்சல் 
வலிப்பு 
நினைவுக் கோளாறு 
உடம்பில் எறும்பு ஊர்வது மாதிரி, பின் குத்துவது மாதிரியான உணர்வுகள் ஏற்படுதல் 
காதில் யாரோ பேசிக் கொண்டு இருப்பது மாதிரியான உணர்வு 
கண்களுக்கு முன் வித விதமான உருவங்கள் நெளியும் மாதிரி உணர்வு 

இந்த ஆல்கஹால் வித்டிராவல் சிண்ட்ரோம்,  Clinical institute of withdrawal assessment for Alcohol - CIWA-Ar  என்ற அளவுகோலின் படி மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது 

1)Mild- ஸ்கோர் <10 div="">
2)Moderate ஸ்கோர் <15 div="">
3)severe  ஸ்கோர் >15

மேற்கண்ட அறிகுறிகளின் தீவிரங்கள் பொறுத்து இவை வகைப்படுத்தப்படும் அவற்றிற்கு மருந்துகள் அளிக்கப்படும். 

நிறைய நோயாளிகள் இந்த மாதிரி பிரச்சனைகளுடன் மருத்துவ மனையில் உள் நோயாளிகள் ஆக அனுமதிக்கப்படுவதை தொடர்ந்து, 
மாவட்ட மன நோய் பிரிவு ஒவ்வொரு அரசாங்க மருத்துவமனைக்கும் இப்படி mild, moderate, severe என்று வகைப் படுத்த வேண்டும் எனவும் அதன் பிறகு அவர்கள் எந்த அளவிற்கு மாத்திரைகள் எத்தனை நாளைக்கு சாப்பிட வேண்டும் என்று ஒரு guidelines வெளியிட்டு உள்ளது 

இந்த மாதிரி வித்டிராவல் அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களது அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் தொடர்பு கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒன்று இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து விடலாம். 

இல்லையெனில் இந்த மாதிரி பிரச்சனைகள் வாரக் கணக்கில் நீடிக்கும் அபாயம் உள்ளது. இது தன்னுடைய வழக்கமான பழக்கம் வழக்கங்களில் மாறுதல் ஏற்படுத்த வல்லது. இந்த மாற்றங்கள் மனத்தின் சம நிலையைப் பாதித்து நாளடைவில் severe depression ஆக்கி தற்கொலை செய்யும் எண்ணங்களை உருவாக்கும் வலிமை உடையது.

சீக்கிரம் வைத்தியம் செய்வது இதில் இருந்து எளிதாக மீண்டு வர இயலும். கேரளாவில் இந்த மாதிரி தற்கொலைகள் அதிகரித்த பின்னரே கேரள அரசாங்கம் திரும்ப கடைகளை திறக்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்து உள்ளது என்று தோன்றுகிறது. 

கீழ்க்கண்ட இணைப்பில் உங்களது ஸ்கோர் என்ன என்பதை நீங்களே கண்டு கொள்ள முடியும். ஸ்கோர் அதிகமாக வரும் பட்சத்தில் நீங்களே அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நன்றி -*டாக்டர். சில்வியா பிளாத் - 

0 comments: