Friday, July 16, 2010

விருந்தாளி- சினிமா விமர்சனம்


களவாணி மாதிரி லோ பட்ஜெட் படங்கள் ஹிட் ஆகும்போது நமக்கு நம்பிக்கை பிறக்கும்.ஸ்டார் வேல்யூ ,பேனர் வேல்யூ இல்லாத படங்களை ஊக்குவிக்கலாம் என நம்பிக்கை பிறக்கும்.துளிர்விடும் நம்பிக்கையை சுழற்றி அடிக்க வந்திருக்கும் படம்.

புதுமுக ஹீரோ ஈஸ்வர்,லோக்கல் ஃபைனான்ஸியர்,புதுமுக ஹீரோயின் (அவள் பெயர் தமிழரசி 2ம் ஹீரோயின்) போஸ்ட்மாஸ்டர் பொண்ணு,வில்லன் லோக்கல் போலீஸ்ஸ்டேஷன் எஸ்,ஐ.இவர்களை சுற்றி நடக்கும் கதை.

விருமாண்டி மாதிரி மீசை ,கர்லாக்கட்டை மாதிரி எக்ஸஸைஸ் பாடி வைத்துக்கொண்டு வரும் புதுமுகம் ஈஸ்வர் நெளிவதும்,குழைவதும் எடுபடவில்லை.முரட்டு மாமா,வில்லன் கேரக்டருக்கு பொருத்தமான முகம்.அதுவும் ஒட்டு மீசை என்பதால் அந்தக்குறை தனித்து தெரிகிறது.புதுமுகம் .கேரளத்துக்கப்பக்கிழங்கு.இவர் முகச்சாயலில் அறுவடைநாள் பல்லவி மாதிரியும்,மேனி மினுமினுப்பில் தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீ போலவும் வலம் வருகிறார்.வெட்கப்படும் காட்சிகள்,காதலால் சிணுங்கும் காட்சிகள் கொள்ளை அழகு.ஆனால் படம் முழுக்க அவர் வரும் 86 சீன்களிலும்
  முதலிரவுக்குபோகிற முத்தாம்மா மாதிரி மல்லிகைப்பூவை 10 முழம் வைத்துக்கொண்டே வர வேணுமா?பாடல் காட்சிகளில் கெட்டப் மாற்றுகிறேன் பேர்வழி என்று அவர் ஹேர்ஸ்டைலை குதறி விட்டார்கள்.பல காட்சிகளில் ஃபேஸ் எக்ஸ்பிர
ஸன்ஸ் அவருக்கு வரவே இல்லை,கிராமத்தில் இருக்கும் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு இப்படியா ஆடம்பரமாக கால் கிலோ பவுடர்,அரை கிலோ ஃபேர் அண்ட் லவ்லியுடன் அலைவார்கள்?

 
வில்லனாக வரும் இன்ஸ்பெக்டர் இதுவரை நடித்த படங்கள் 18.அனைத்திலும் இன்ஸ்பெக்டர் ரோலே.வாழ்க கோடம்பாக்கம்.குறை சொல்ல முடியாத நடிப்பு,படத்தின் ஒரே ஆறுதல் காமெடி கவுண்டமணி ஜெராக்ஸ் சிங்கம் புலி.படத்தின் வசனகர்த்தாவும் அவரே.அவர் வரும் காட்சிகளில் மட்டும் வசனம் தூள்.காதல் கதைகளில் நம் மனம் லயிக்க இருவருக்கும் இடையே ஆன காதல் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும்,பாடிகெமிஸ்ட்ரி ஒத்துப்போக வேண்டும்,காதல் எதனால்,எப்போ வந்தது என்பதை சுவராஸ்யமாக சொல்லப்படவேண்டும்.மேற்கூறிய எதையும் டைரக்டர் வாட்டர்மேன் கவலைப்படவே இல்லை. 
பாடல்கள் பத்திரிக்கையாளர் முருகன் மந்திரம்.ஹீரோயினின் அறிமுகப்பாடலில் நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கை எப்படி உயர்ந்தது என கவிதையாய் சொல்கிறார்.டைட்டிலில் வரும் கடிதமே கடிதமே அச்சு அசல் இளையராஜாதான் பாடி இருக்கிறாரோ என எண்ணும் வண்ணம் பிரமாதப்படுத்தி இருக்கிறார் S.sகுமரன்.பூ படத்தில் சூசூமாரி என பட்டி தொட்டி எல்லாம் கலக்கியவர்,களவாணியில் பிண்ணனி இசையில் கவனிக்கப்பட்டவர் 3வது படம் சற்று ஏமாற்றமே.பட


த்தில் யாராவது முக்கியமான வசனம் பேசும்போது பின்னணி இசை வந்து குறுக்கிட்டு புரிய விடாமல் செய்கிறது,தேவையான இடத்தில் மட்டும் பின்னணி இசை இருந்தால் போதாதா?அமைதியும் ஒரு இசைதானே.


 
வில்லியாக வருபவர் சதா தம் அடித்துக்கொண்டே வருவது ஓவர்,கிளைக்கதையாக வரும் லவ் ஜோடியின் காதல் படத்துடன் ஒட்டவில்லை.கிளைமாக்ஸ் தெளீவாக சொல்லப்படவில்லை.
 
திடீர் என ஹீரோயின் தூக்கில் தொங்குகிறார்.அவர் மிரட்டப்பட்டாரா,வில்லன் கொலை செய்தானா,ஹீரோ வில்லனை பழி வாங்கினானா எதுவும் தெரியவில்லை.எடிட்டிங் ஃபால்ட்டோ? 
படத்தின் பிளஸ் 1.ஹீரோயின் 2 பாடல்கள் 3சிங்கம்புலி காமெடி
படத்தின் மைனஸ் திரைக்கதை,பின்னணி இசை, தெளீவில்லாத க்ளைமாக்ஸ். 
தியேட்டருக்கு யாராவது தப்பித்தவறி வந்தால் அவர்தான் புரொடியூஸருக்கு விருந்தா
ளி


9 comments:

http://rkguru.blogspot.com/ said...

good.......

Anonymous said...

விரைவில் சிங்கம் புலி நெம்பர் ஒன் கமெடியன் ஆகிவிடுவார் என நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஆமா சதிஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vada pochchaaa

சி.பி.செந்தில்குமார் said...

வடயும் போச்சு,டீயும் வர்லை,தூக்கம்தான் வந்துது

சி.பி.செந்தில்குமார் said...

குரு சார் நன்றி

மன்னைசெந்தில் said...

இது..வேண்டா விருந்தாளி..ன்னு சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said...

s senthil.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சினிமா விமர்சனம் சூப்பரா எழுதறிங்க, சார்! இன்னொரு மதனோ?!