இந்த வாரம் 4 படங்கள்
ஒரு பிரம்மாண்டமான தமிழ்ப்படம்,ஒரு லோ பட்ஜெட் தமிழ்ப்படம்,ஒரு தெலுங்கு டப்பிங்க் தமிழ்ப்படம்,ஒரு ஹாலிவுட் டப்பிங்க் தமிழ்ப்படம் என 4 வித்தியாசமான படங்கள் வருகின்றன.
1 மிஸ்டர் எக்ஸ். (தமிழ்). ஸ்பை ஆக்சன் திரில்லர்.
ஆர்யா ,கவுதம் கார்த்திக் ,சரத்குமார் ,மஞ்சு வாரியர்,அதுல்யா ரவி,அனகா,ரைசா வில்சன்,ஜெயப்பிரகாஷ்,காளிவெங் கட் ஆகியோர் முக்கியப்பாத்திரங்களில் நடிக்க வெளி வர இருக்கும் ஸ்பை ஆக்சன் திரில்லர் இது .
FIR (2022) என்ற படத்தை இயக்கி 24 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளி வரும் அடுத்த படம் இது.போன வருடமே இதன் டீசர். வெளி வந்து விட்டது.
துரந்தர் என்ற ஹிந்திப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் அதே டைப் ஸ்பை ஆக்சன் கதையை இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்டால் நல்லது என்று நினைத்திருப்பார்கள் போல.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் 3 நாட்களுக்கு முன் வெளியானது.அதைப்பார்த்த போது யூகிக்கும் கதை இது தான்.
மஞ்சு வாரியர் இந்திய உளவுத்துறையில் ஒரு உயர் அதிகாரி.அவர் ஒரு மீட்டிங்கில் ஒரு திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்துகிறார். நியூக்ளியர் வெப்பன் ஒன்று கடத்தப்பட்டு விட்டது.அதை மீட்கா விடில் இந்தியாவுக்குப்பெரிய ஆபத்து.
ஆர்யா ,கவுதம் கார்த்திக் உட்பட சிலர் பங்கு பெறும் ஒரு டீம் ரெடி ஆகி றது.அவர்கள் இறங்கி அடிக்கும் ஆக்சன் அதகளம் தான் படம்
ஹாலிவுட் படத்துக்கு இணையான படப்பிடிப்பு கண்களைக்கவர்கிறது.ஆர்யா சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் ஜம்மென்று இருக்கிறார்.கவுதம் கார்த்திக் கூட மெச்சூர்டான தோற்றத்தில் அழகாக இருக்கிறார்.சரத் குமார் ஓல்டு கெட்டப்பில் வருகிறார்.
எல்லோரையும் விட மஞ்சு வாரியார் தான் டாப் கம்பீரம்.
ரசித்த வசனங்கள்
1. நாட்டைப்பாதுகாப்பது நம் வேலை இல்லை ,அது நம் கடமை
2 நாட்டைக்காக்க நாட்டுக்கே தெரியாம போராடுபவர்கள் தான் இந்த எக்ஸ் போர்ஸ் வீரர்கள்
3 சீக்ரெட் ஏஜெண்ட்ஸ் விசுவாசமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன கேரண்டி ?
4 இந்த நியூக்ளியர் வெப்பனைக்கண்டு பிடிக்க முடியாம போனா நாம் உலகப்போரை சந்திக்க வேண்டி இருக்கும்.
ரன்னிங் டைம் 153 நிமிடங்கள்
இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2024ல் முடிந்து விட்டது.2023 ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய படம் ஒரு ஆண்டில் ஷூட்டிங் முடிந்தாலும் துரந்தர் ஹிட் ஆனதால் சரியான நேரம் என இப்போது ரிலீஸ் ஆகிறது
2. ஆதாரம். தமிழ் க்ரைம் மிஸ்ட்ரி திரில்லர்
ராதாரவி ,ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் முக்கியப்பாத்திரங்களில் நடிக்க ஒரு லோ பட்ஜெட் மிஸ்ட்ரி க்ரைம் திரில்லர் படமாக வந்துள்ளது.
3. விருஷகர்மா. தெலுங்கு/தமிழ் மிஸ்ட்ரி ஹாரர் திரில்லர்
நாக சைதன்யா,ஜெயராம் ,மீனாக்சி சவுத்ரி. ஆகியோர் நடிக்க பிரம்மாணடமாகத்தயார் ஆகி இருக்கும் படம் இது.கார்த்திக் வர்மா டாண்டு இயக்கி இருக்கும் படம் இது.
இதன் ட்ரெய்லர் கட்டைப்பார்த்தபோது ஹாலிவுட் படத்துக்கு இணையான ஒரு பிரம்மாண்டத்தைக்காண முடிகிறது.
99 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த வ்ருபக்சா (2023) படத்தின் இயக்குநரின் அடுத்த படம் இது என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
நாடோடி மன்னன் படத்தில் சந்திரபாபு வாயில் இருந்து கோழிக்குஞ்சு வெளி வரும் காமெடி சீன் பெரிதும் பேசப்பட்டது போல வில்லனின் வாயில் இருந்து வவ்வால் உயிருடன் வரும் சீன் செம திகிலாக இருந்தது.
தீய சக்தி ஒன்று உருவாகும்போது அதை அழிக்க விருஷகர்மா வை ஆண்டவன் அனுப்பி வைப்பான் என்ற முன்னுரையுடன் ட்ரெய்லர் தொடங்கி அசத்தலான ,மிரட்டலான காட்சிகளுடன் முடிகிறது.
4 லீ கிரானின்ஸ் த மம்மி. ஆங்கிலம் /தமிழ். சூப்பர் நேச்சுரல் ஹாரர் பிலிம்
த மம்மி என்ற பிரம்மாண்டமான ஹிட் கொடுத்த வார்னர் பிரதர்ஸ் அதில் இதுவரை 4 பாகங்கள் எடுத்துள்ளது.
ஒரு பத்திரிக்கையாளரின் மகள் பாலைவனத்தில் காணாமல் போகிறாள்.எந்தத்தடயமும் கிடைக்கவில்லை.அவளைக்கண்டு பிடிக்கவும் முடியவில்லை. எட்டு வருடங்களுக்குப்பின் அவள் திரும்பி வருகிறாள்.
இனி குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும் என்று பார்த்தால் அதிர்ச்சி தான் கிடைக்கிறது.என்ன நடந்தது ?என்பது தான் மீதிக்கதை.
ரன்னிங் டைம் 133 நிமிடங்கள்

.jpg)
.jpg)