Wednesday, September 15, 2010

கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?


பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு அடைந்ததைப்பார்த்து ஆளாளுக்கு இப்போது காமெடி ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே.உள்ளத்தை அள்ளித்தா,ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்,தெனாலி,பஞ்ச
தந்திரம்,வசூல்ராஜா எம் பி பி எஸ்,தமிழ்படம்,இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்று பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
மினிமம் கேரண்டி காமெடி ஸ்கிரிப்ட்டுக்கு எப்போதும் உண்டு.ஆனால் நம்ம டைரக்டர்கள் இன்னும் மதுரை,வன்முறை,காதல் என்றே சுற்றி சுற்றி வருகிறார்கள்.

கவுண்டமணிக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுதிய வீரப்பன் (பி எஸ் வீரப்பா அல்ல) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.அதற்குப்பிறகு வாலி படம் மூலம் விவேக் காமெடி ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தார்.வடிவேலு சிங்கமுத்து உட்பட சிலரை பணியில் அமர்த்தி கலக்கினார்.(இப்போ 2 பேருக்கும் லடாய்).

காமெடி ஸ்கிரிப்ட் எழுதுவதில் இப்போது ஒரு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் முன்னணி ஜோக் எழுத்தாளர்கள் 10 பேர்களை ஒருவர் கூட உபயோகப்படுத்துவதில்லை.அவர்களைப்பற்றியஒரு அறிமுகம்.

டாப் 10 ஜோக் ரைட்டர்ஸ்

1. தஞ்சை தாமு. -தமிழ்ப்பத்திரிக்கை உலகிலேயே வார்த்தை ஜாலம் எனும் மாய சக்தியால் மிகச்சிறந்த ஜோக்குகளை எழுதி முன்னணியில் இருப்பவர்.தஞ்சாவூர்க்காரர்,பி எஸ் என் எல் இல் பணி புரிபவர்.வயது 47.கவிஅரங்கம்,நகைச்சுவை மன்றப்பேச்சு என வாரா வாரம் சனி ஞாயிறுகளை காமெடிக்காக ஒதுக்குபவர்.கலைஞர் டி வி யில் எல்லாமே சிரிப்புதான் ஸ்டேண்ட் அப் காமெடியில் 12 எப்பிசோடு கலக்கியவர்.இவர் ஒரு கவிஞரும் கூட.தா.முகமது இக்பால் என்பது சொந்தப்பெயர்.விகடன் அட்டைப்படங்களில்  ஜோக்கால் அலங்கரித்தவர்.இவரது செல் எண்
9443508846

2.வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி
தாமுவின் வாரிசு என இவரை சொல்லலாம்.3 வருடங்களில் இவரது வளர்ச்சி பிரம்மாண்டமானது.விகடன்,குங்குமம் இதழ்களில் இவரது ஜோக் வராத வாரமே இருக்காது.சொல் விளையாட்டு,வார்த்தை ஜாலம்,நையாண்டி என கலந்துகட்டி அடிப்பவர்.வயது 36,காலைக்கதிர் வாரக்கதிர் இதழில் 53 அட்டைப்படக்கவிதைகள் எழுதி சாதனை படைத்தவர்.ஒரு ஜோக் எழுத்தாளர் கவிதையிலும் கலக்க முடியும் என முதன்முதலாக நிரூபித்தவர்.இவரது செல் எண் 9245148312

3. வி சாரதிடேச்சு,திருவல்லிக்கேணி,சென்னை

ஜோக் எழுத்தாளர்களில் எல்லோருக்கும் சீனியர்.ஆனந்த விகடனில் 1992,1994,1998 ஆகிய வருடங்களில் ஒவ்வொரு வாரமும் 14 ஜோக்ஸ் ( 2 முழுப்பக்கங்கள்)வெளிவந்தது இவருக்கு மட்டும்தான்.இவர் எழுதாத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். துறைமுகத்தில் அக்கவுண்ட் செக்‌ஷனில் பணிபுரிகிறார்.வயது 58.செல் எண் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.கொஞ்சம் ரிசர்வ் டைப்.

4.கரடிகுளம் ஜெயாபாரதிப்பிரியா 

இவர் தமிழ்ப்பத்திரிக்கை உலகில் 9800 ஜோக்ஸ் பிரசுரம் கண்டு எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்திலும்,தர வரிசையில் 4ஆம் இடத்திலும் உள்ள்ளார்.இவர் இப்போது எழுதுவது இல்லை.இவரைப்பற்றிய தகவல்களும் சரியாகக்கிடைக்கவில்லை.

5.அம்பை தேவா,தூத்துக்குடி

விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர்.(ராவணன் படத்தில் உசுரே போகுது பாட்டு வருமே).இவர் சீனியர்.எல்லோருக்கும்.1972 இல் இருந்து எழுதுகிறார்.இவரது ஜோக்குகள் நறுக் சுருக் என 3 வரிகளில் முடிந்து விடும்.நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர்.இவர் கட்டுரை,ஜோக்ஸ் வராத பத்திரிக்கைகளே இல்லை எனலாம்.துறைமுகத்தில் க்ளர்க் பணி.வயது 55.இவரது செல் எண் 9842343232.



இந்தக்கட்டுரை இடப்பற்றாக்குறையின் காரணமாக தொடரும் போட்டு இப்போதைக்கு முடிக்கிறேன்.புது இயக்குநர்கள் காமெடி ஸ்கிரிப்ட் எழுத இவர்களை பயன்படுத்திக்கொண்டால் அது ஒரு புதிய ரத்தத்தை நகைச்சுவைக்குப்பாய்ச்சியதாக இருக்கும் என நகைச்சுவை எழுத்தாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் ஜோக் ரைட்டர்ஸ் இப்போது 200 பேர்கள் இருக்கிறார்கள்.அவர்களது திறமை ஒரே வட்டத்துக்குள் சுருங்கி விடக்கூடாது.வாய்ப்புக்கிடைத்தால் அவர்கள் கலக்குவார்கள் என்பது நிச்சயம்.


26 comments:

karthikkumar said...

INNAIKUM NANTHAN FIRST

karthikkumar said...

great job senthil sir... idhu avargalukana magudam.. good info.....

மதுரை சரவணன் said...

காமடி ட்ராக் எழுதுவதற்கு ஆள்கள் இருந்தாலும் வாய்ப்பு கொடுப்பதில்லை. இவ்வேலையில் இவர்கள் அறிமுகம் அருமை. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

karthik,thanks for coming.ரெகுலரா முத வடை வாங்கும் நபர்களுக்கு ஒரு டி வி டி பரிசா தரலாம்னு இருக்கேன்.என்னிடம் 820 டி வி டி இருக்கு.எல்லாம் ஆங்கிலப்படம்.உங்களுக்குப்பிடித்த,பார்க்காத பட டைட்டிலை கூறவும்,முகவரியை என் மெயில் ஐ டிக்கு அனுப்பவும்

சி.பி.செந்தில்குமார் said...

மதுரை சரவணன் said...

காமடி ட்ராக் எழுதுவதற்கு ஆள்கள் இருந்தாலும் வாய்ப்பு கொடுப்பதில்லை. இவ்வேலையில் இவர்கள் அறிமுகம் அருமை. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

நன்றி தோழா.மதுரை சரவணன்,ஃபாஸ்ட் கம்மிங்

settaikkaran said...

நாம போயி ஒரு கலக்கு கலக்குவோமா? :-)

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,பஸ் டிக்கட் போட்டு கூட்டிட்டு போனா நானும் வர்றேன்

புரட்சித்தலைவன் said...

ஆனந்த விகடன்,குமுதம், புதிய பார்வை,பாக்யா, ஹெர்குலஸ் மற்றும் இன்ன பிற பெயர் தெரியாத பத்திரிக்கைகளில் ஜோக்ஸ்,கவிதை எழுதி இருக்கும் அண்ணன் சி.பி.செந்தில்குமார் அவர்களையும் பயன்படுத்தி கொள்ள தமிழ் பட டேரக்டர்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.

MSK / Saravana said...

நல்ல பதிவு. இவர்களை பயன்படுத்தி முழுநீள நகைச்சுவை படங்கள் வந்தால் நானும் மகிழ்வேன்.. :)

Chitra said...

திரைக்கு பின்னால் உள்ளவர்களை அடையாளம் காட்டுவது பாராட்டுக்குரியது! தொடருங்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

ஆனந்த விகடன்,குமுதம், புதிய பார்வை,பாக்யா, ஹெர்குலஸ் மற்றும் இன்ன பிற பெயர் தெரியாத பத்திரிக்கைகளில் ஜோக்ஸ்,கவிதை எழுதி இருக்கும் அண்ணன் சி.பி.செந்தில்குமார் அவர்களையும் பயன்படுத்தி கொள்ள தமிழ் பட டேரக்டர்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.
புரட்சித்தலைவா,நான் உங்களுக்கு அண்ணனா? இது ஓவரா இல்ல?

பரிந்துரைக்கும்,கருத்துரைக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Saravana Kumar MSK said...

நல்ல பதிவு. இவர்களை பயன்படுத்தி முழுநீள நகைச்சுவை படங்கள் வந்தால் நானும் மகிழ்வேன்.. :)
நன்றி சரவணன்,உங்கள் ஆதரவுக்கு.
365 கடல் கடிதங்கள் பாக்க ரெடியா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Chitra said...

திரைக்கு பின்னால் உள்ளவர்களை அடையாளம் காட்டுவது பாராட்டுக்குரியது! தொடருங்கள்!

நன்றி சித்ரா

Anonymous said...

ஆனந்த விகடன்,குமுதம், புதிய பார்வை,பாக்யா, ஹெர்குலஸ் மற்றும் இன்ன பிற பெயர் தெரியாத பத்திரிக்கைகளில் ஜோக்ஸ்,கவிதை எழுதி இருக்கும் அண்ணன் சி.பி.செந்தில்குமார் அவர்களையும் பயன்படுத்தி கொள்ள தமிழ் பட டேரக்டர்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.//
வழிமொழிகிறேன்...சிபி தகுதியுள்ள மனிதர்தான்.பல வாய்ப்புகள் வந்தும் சரியான லின்க் இல்லாமல் சினிமா வாய்ப்புகளை தவற விட்டவர் சிபி.சிபி நிறைய ஸ்கிரிப்டுகள் எனக்கு தெரிந்து வைத்திருக்கிறார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களுக்கும் சீக்கிரம் சான்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர் said...

நன்று .

நீங்களும் கலக்கலாமே ? என்ன நான் சொல்றது ?

சி.பி.செந்தில்குமார் said...

sathish,thamks for your support

சி.பி.செந்தில்குமார் said...

ramesh,thanks for your congrats

சி.பி.செந்தில்குமார் said...

mr yurgan thanks

Mohan said...

தமிழ்ப் பத்திரிக்கைகளில் 'ஜோக்ஸ்' எழுதுபவர்கள் பற்றிய நல்ல அறிமுகம். இவர்களில் ஒருவர் தமிழ் சினிமாவில் 'க்ளிக்' ஆனால் கூட போதும். அப்புறம் பாருங்களில் ஜோக்ஸ் எழுதுபவர்களுக்கு ஏற்படப்போகும் டிமாண்ட்டை. அதில் நீங்களும் ஒருவராக இருக்க வாழ்த்துகள்!

சி.பி.செந்தில்குமார் said...

THANX MOKAN

அமைதி அப்பா said...

சார், நான் கொஞ்சம் லேட்.
நல்ல பதிவு. நானும் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்களை குறிப்பிடாமல் எழுதிவுள்ளீர்கள்,
தன்னடக்கம்தானே?

எனது மகன் 'அமைதி விரும்பி' உங்கள் விமர்சனங்களை வெகுவாக ரசித்துப் படித்து வருகிறார்('ன்' வேண்டாமே என்று விட்டுவிட்டேன்!) அவருக்கு நேரமில்லாததால் பின்னூட்டம் இடவில்லை. இதை அவர் சார்பாக நான் எழுதுகிறேன்.

உங்களுடைய சினிமா விமர்சனம் நன்றாக உள்ளது. சினிமாப் பற்றிய உங்களது பார்வை சிறப்பாக உள்ளதால், நீங்கள் தமிழ்ச் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவீர்கள் என்றே நாங்கள் நினைக்கிறோம்.
வாழ்த்துக்கள்.

நன்றி.
அமைதி & அமைதி அப்பா

சி.பி.செந்தில்குமார் said...

பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.எனது தந்தை இறந்துவிட்டார்,உங்களை என் தந்தையாக மதிக்கிறேன்.மிக்க நன்றி

அ.சந்தர் சிங். said...

உங்களுக்கு இருக்கும்,திறமைக்கும்,நகைச்சுவை உணர்வுக்கும் ஏன் நீங்களே முயற்சிக்க கூடாது?

Unknown said...

நல்லதொரு முயற்சி! பாராட்டுகள்!

goma said...

நானும் 40 ஆண்டுகளாக ,பல பத்திரிகையில் ஜோக்கிட்டு வருகிறேன்...நான் யாரென்று யாருக்குத் தெரியும் ...ஏதோ இந்த பிளாக் புண்ணியத்தில் கோமா என்று அறியப்பட்டிருக்கிறேன்.