Saturday, September 25, 2010

என்னாது இது,சின்னப்பிள்ளத்தனமா..?

பசங்க படத்துக்கு விருது கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.இந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி ஞாபகம் வருகிறது.சின்னக்குழந்தைகளின் சந்தோஷங்களை துல்லியமாக பதிவு செய்த வகையில் பிரமாதமான படைப்பு அது.க்ளைமாக்சில் ஏந்திரி அஞ்சலி ஏந்திரி என்ற வசனம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பெறத்துடிப்பதும்,கோயில் கோயிலாக அலைவதும் நடக்கும் அதே நேரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்கள் மழலை இன்பத்தை பெறுகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

லைப்ரரியில் நான் படித்த சில மேட்டர்களை உங்களுடன் பகிர்கிறேன்.



1.குழந்தையின் சிரிப்பில் பூலோகம் அழகு பெறுகிறது.

2.குழந்தைகள் இல்லையென்றால், உலகம் துன்பம் நிறைந்ததாகும்.
 வயோதிகர்கள் இல்லையென்றால், உலகம் மனித இயல்பற்றதாகும்.

3.குழந்தைகளைத் திருத்த நல்ல வழி - அவர்களைப் பாராட்டுவதுதான்.

4.குழந்தையைக் கொஞ்சும்போது தெய்வத்திடம் பேசுவதுபோல இருக்கிறது.

5.குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள கை நோகிறது.
 அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது.

6.இயற்கை அளிக்கும் எல்லாவற்றிலும் குழந்தையைப் பார்க்கிலும் சிறந்த இன்பம் வேறில்லை.

7.குழந்தைகளை ஆர்வமுடன் அணையுங்கள்; இதய நோய் குறையும்.

8.குழந்தையைக் கொஞ்ச நேரமின்றிச் சம்பாதிப்பவன் இறைவனின் அருகில் போக முடியாது.

9.நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளைவிட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத்தான் உங்களுடைய குழந்தைகள் விரும்புகின்றன.

10.பல குழந்தைகள் பல கவலைகள். ஒரு குழந்தையும் இல்லாவிட்டால் ஒரு இன்பமும் இல்லை

Friday, September 24, 2010

எந்திரன் - காமெடி ,ஜோக்ஸ்,கும்மி

1.எதுக்காக எந்திரன் பட ரிலீஸை அக்டோபர் -1 ல வெச்சிருக்காங்க?

சம்பள நாள் அன்னைக்கு ரிலீஸ் பண்ணுனாத்தானே ரசிகர்கள் பாக்கெட்டை காலி பண்ண முடியும்?


2.லயன்ஸ் கிளப் மீட்டிங்க்ல என்ன பிரச்சனை?

அதை அரிமா சங்கம்னு பெயர் மாத்தனுமாம்.(அரிமா அரிமா பாட்டு ஹிட் ஆகிடுச்சே)

3.ஷங்கர் ஏன் மூடு அவுட்டா இருக்காரு?

எந்திரன் படத்தோட கதை என்னவா இருக்கும்னு இணைய தளங்கள்ல வெளியாகற யூகக்கதைகள் நிஜக்கதையை விட சூப்பரா இருக்காம்.  

4. டிக்கெட் கவுண்ட்டர்ல வேலை செய்யறவங்களுக்கு தியேட்டர் நிர்வாகம் ஒரு மாசம் லீவ் குடுத்துடுச்சாமே,ஏன்?

எந்திரன் படம் ரிலீஸ் ஆனதும் ஒரு மாசம் பிளாக்லதான் விக்கப்போறாங்க,எதுக்கு வீணா சம்பளம்?

5.சன் டிவியை விட கேப்டன் டி வி தான் டேலண்ட்னு எப்படி சொல்றே?

எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழா,இசை வெளியீட்டு விழா அப்படினுதானே புரோக்ராம் போட்டாங்க சன் டிவில?கேப்டன் டி வி ல எந்திரன் படம் ரிலீஸ்க்கு முன்னமே படத்தோட ஒரிஜினல் டிவிடியே வெளியிடப்போவுதாம்.

 6.திருப்பதி தேவஸ்தானம் மாதிரி இந்தத்தியேட்டர்ல 7 பெரிய ஹால் கட்டி வெச்சிருக்காங்களே,எதுக்கு?


எந்திரன் படம் ரிலீஸ் ஆகுதே,டிக்கெட் எடுக்க க்யூல நிக்கற ரசிகர்களோட தள்ளுமுள்ளுவை குறைக்கத்தான்.


7.எந்திரன் படக்கதையை ரொம்ப ரகசியமா வெச்சிருக்காங்களாம்.


இருக்கட்டும்,அதுக்காக படம் ரிலீஸ் ஆகி 100 நாட்கள் ஆகற வரை படத்தோட விமர்சனத்தை யாரும் எழுதக்கூடாதுனு ஸ்டே ஆர்டர் வாங்கறதா?


8.ஹீரோவுக்கு வயசு 64,ஹீரோயினுக்கு வயசு 37,கதைப்படி......


சார்,ஒரு நிமிஷம்,இது எந்திரன் படக்கதை மாதிரி இருக்கே,நாம வேற டிரை பண்ணலாமே?


9.எந்திரன்ல ரோபோ,சயிண்ட்டிஸ்ட் இந்த 2 கேரக்டர் போக 3வதா ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர்(சந்திரமுகி வேட்டையன் மாதிரி) ஷங்கர் சொல்றாரே?


ம்க்கும்,ரஜினிக்கே இது சர்ப்பரைஸாம்.


10.எந்திரன் படத்துக்கு முதல் ஷோ டிக்கட் ரிசர்வ் பண்ணனும்,அதுக்கு உங்க பேங்க்ல லோன் வேணும்.


ஸாரி,அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாது,அவ்வளவு பெரிய தொகையை லோனா வாங்குனா எப்படி உங்களால் திருப்பிக்கட்ட முடியும்?


11.பட இடைவேளை டைம்ல கூட உள்ளே டிக்கெட் தர்றாங்களே?


படத்தோட ஸ்டில்ஸை வேடிக்கை பார்க்கக்கூட தனி டிக்கெட்டாம்.


12.ஈரோட்ல மொத்தமே 16 தியேட்டர்ஸ்தான் இருக்கு.


அதுக்கென்ன இப்போ?


எந்திரன் ஈரோட்ல மட்டும் 25 தியேட்டர்ல ரிலீஸ் ஆகப்போவுதுனு சன் டிவில சொன்னாங்களே?

காமசூத்ரா காண்டம் விளம்பரத்தின் அத்துமீறலும்,பொங்கி எழுந்த மாதர்சங்கங்களும்

பெண்களைப்போகப்பொருளாக பயன்படுத்துவதும்,நினைப்பதும் இந்த சமூகத்தின் மாற்ற முடியாத சாபக்கேடு.ஆண்கள் உபயோகப்படுத்தும் பொருள்களைக்கூட மார்ர்க்கெட்டிங்க் டெக்னிக் என்ற பெயரில் பெண்களின் படங்களை கிளாமராகப்போட்டுத்தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்’போகட்டும் அதையாவது நாகரீகத்தின் எல்லையோடு நிறுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

சமீபத்தில் வந்த ஷேவிங்க் பிளேடு விளம்பரம் நீட்டா ஷேவ் பண்ணிட்டுப்போனா பெண்கள் எல்லாம் உங்க பின்னாடியே வருவாங்க என்றது.ஒரு பர்ஃபியூம் விளம்பரம் அவர்கள் தயாரிப்பை உபயோகித்தால் புதிதாக மணமான பெண் கூட கணவனை விட்டு விட்டு  உங்கள் பின்னால் வந்து விடுவாள் என்றது.

பட்டியல் போட்டால் பக்கங்கள் பத்தாது.23.9.2010 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் காமசூத்ரா காண்டம் விளம்பரம் ஒன்று வந்தது,பெண்களை மிகக்கேவலமாக சித்தரித்த விளம்பரங்களில் அதற்கு முதலிடம் கொடுக்கலாம்.


ஒரு பெண் கோன் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போலும் (மிகக்குறைந்த மேலாடை)
அதில் ஐஸ்க்ரீம் வழிந்தோடுவது போலும்  அது அந்தப்பெண்னின் கைகளில் ஊர்ந்து செல்வது போலும் இருக்கிறது.

முதல் பாய்ண்ட்,இவ்வளவு அநாகரீகமாக எந்தப்பெண்ணும் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.2வது பாய்ண்ட் அந்த விளம்பரத்தின் கீழ் உள்ள வாசகம்.
சாக்லேட்,வெண்ணிலா,ஸ்ட்ராபெர்ரி போன்ற பலவித டேஸ்ட்களில் கிடைக்கும் என்ற வாசகம் மற்றும் எழுத சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்.

ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இப்படி கேவலமான விளம்பரத்தை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.சிறுவர்கள்,டீன் ஏஜ் மாணவிகள் கண்ணில் அந்த விளம்பரம் பட்டால் என்ன செய்வது?படத்துக்கு ஏ சான்றிதழ் அளிப்பது மாதிரி விளம்பரங்களுக்கும் சென்சார் வேண்டும்.

முதலில் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு வந்தது மும்பையில்.கடும் கிளர்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.நேற்று  இரவு சென்னையிலிருந்து ஒரு பத்திரிக்கை துணை ஆசிரியர் ஃபோன் போட்டு விபரம் சொன்னார்.

Thursday, September 23, 2010

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமைதனை......

1. தான் அழகுக்காக விலை போகிறோம் என்பதை அறியாதவரை பெண் சுதந்திரம் என்பது எட்டாக்கனிதான். - இங்க்ஸ்

2.விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவில்லை,மாடல்கள் என்ற பெயரில் விலை போகிறார்கள்.இது ஒரு நவநாகரீக அநாகரீகமே . - அருந்ததிராய்

3.பெண்ணை பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள்,பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.- ஆஸ்திரேலியப்பழமொழி

4.ஒரு பெண்ணுக்கு எல்லாவிதமான நற்குணங்களையும் எதிர்பார்க்கும் சமூகம் ஆணிடம் மட்டும் எவ்வித நற்குணங்களையும் எதிர்பார்க்காதது எவ்விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. - நா.பார்த்தசாரதி

5.பெண்கள் தேவதைகள்தான்,ஆனால் திருமணம் அவர்களை குட்டிச்சாத்தானாய் ஆக்கி விடுகிறது.- லார்டு பைரன்

6.உலகத்தில் பெரிய பூ எது? பெண்.உலகத்தில் மிக மிருதுவான விஷயம் எது? பெண்.கடவுள் படைப்பில் மிக அற்புதம் எது? பெண். கடவுள் எது? பெண்.- பாலகுமாரன்

7.கற்புள்ள ஒரு பெண்ணைப்பற்றி மோசமாகப்பேசுவதை விட ஒரு கோயிலை இடிப்பது பெரிய பாவம். - ரஷ்யப்பழமொழி
(நம்மாளுங்க ஒரு பெண்ணுக்கு ட்ரை பண்ணி கிடைக்கலைன்னா உடனே அந்தப்பொண்ணோட கேரக்டர் சரி இல்லைனு சொல்லிடுவாங்க.இவங்களுக்கு படிஞ்சுட்டா நல்ல கேரக்டராம்.என்ன கொடுமை சரவணன் இது?)

8.தன் மனதை வெளிப்படுத்த ஆண்கள் கையாளும் முறைகளைக்காட்டிலும் பெண்கள் கையாளும் முறைகள் மிக மிக நுட்பமானவை.மலரின் மணத்தை விட மென்மையானவை. - ஜான் எஃப் கென்னடி

9.பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்ற உறுதி பெண்களிடம் இருந்தால் எந்த ஆணும் நெருங்கவே முடியாது என்பதை உணர வேண்டும் பெண். - எழுத்தாளர் லட்சுமி

10.பெண்களின் கண்ணீர் உலகிலேயே ஆற்றல் மிக்க நீர்வீழ்ச்சி.- மில்னர்

காந்தி தேசமே.........!?


 காந்தி பிறந்த மண் இது.தேனாறும்,பாலாறும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை,மக்கள் பட்டினி இல்லாமல் இருந்தாலே போதும் எனும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் நம் அரசியல்வாதிகள் அவர்கள் சுயநலத்தைத்தான் பார்க்கிறார்களே தவிர மக்கள் நலத்தை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.பத்திரிக்கைகளில் அவர்களது கூற்றும்,அடிக்கும் கூத்தும்,




காங்கிரஸ் எம்.எல்.ஏ., விடியல் சேகர்: திருப்பூர் சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு ஒதுக்கிய 200 கோடி ரூபாயை பயன்படுத்த, மாநில அரசு திட்டம் வகுக்கவில்லை. மத்திய அரசு ஆய்வு செய்ய ஒதுக்கிய ஐந்து கோடி ரூபாயை பயன்படுத்தி, திட்ட விளக்க அறிக்கை தயாரிக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு பங்குத் தொகையையும் ஒதுக்கவில்லை.


நக்கலிஸ்ட் நாரதர் - அந்தத்திட்டத்துக்கு ஒதுக்கலைன்னா என்ன,அவங்க பர்சனலா ஒரு தொகை ஒதுக்கி இருக்க மாட்டாங்க?


முதல்வர் கருணாநிதி: ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகைகளை படிப்பதற்கே கை நடுங்குகிறது. செய்தியைப் படிக்கிறபோது, இத்தனை பேர் இறந்தனர், இத்தனை பேர் கொல்லப்பட்டனர், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற செய்திகள் இந்தியாவின் ஒரு பகுதி என்று சொல்லப்படுகிற, காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது.


நக்கலிஸ்ட் நாரதர் - அப்போ இலங்கை காஷ்மீரை விட தூரம்னு சொல்றீங்களா?சொந்தப்பொண்டாட்டிக்கு சீக்காம்,பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி உடம்பு தேக்காம்



தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: ஒரு துறைக்கு அமைச்சராக இருப்பவர், அந்த துறை சம்பந்தப்பட்ட தொழிலில் இருக்கக் கூடாது என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறதா என்பது தெரியவில்லை.

 நக்கலிஸ்ட் நாரதர் - நம்ம அரசியல்வாதிகள் எதை ஃபாலோ பண்றாங்களோ இல்லையோ முறைகேடு எப்படி பண்ணலாம்கறதை கரெக்ட்டா ஃபாலோ பண்ணுவாங்க.



அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு: தமிழக அரசியலில் கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும். முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து பேச வேண்டும்.

நக்கலிஸ்ட் நாரதர் -அது எப்படி முடியும்?அவரு கொட நாடே கதினு இருக்கார்,இவர் தமிழ்நாடே நம்ம குடும்பத்துக்குனு கனவு காண்கறார்.

வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு, "தமாஷ்' பேச்சு: கருணாநிதியும், ஜெயலலிதாவும் வன்னியர்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. இந்த சமூகம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்றால் அன்புமணி முதல்வராக வேண்டும்.

நக்கலிஸ்ட் நாரதர் - இந்த சமூகம்னு நீங்க சொல்றது டாக்டர் ராம்தாஸ் குடும்பம்தானே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: மற்ற கட்சிகளில் தேர்தலின் போது மட்டுமே இளைஞர்களை எப்படி பயன்படுத்த முடியும் என்று யோசிக்கின்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அந்த இளைஞர்களை வேலை வாய்ப்பு, கல்வி மட்டுமின்றி, நாட்டு மக்களின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உந்து சக்தியாக பார்க்கிறது.

நக்கலிஸ்ட் நாரதர் - உங்களுக்கு அரசியல் பரீட்சைல பாஸ்மார்க் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் பேட்டி: தி.மு.க., அரசின் செயல்களை கம்யூனிஸ்டுகள் விமர்சித்தால், முதல்வருக்கு கோபம் வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை. தமிழகத்தில் மக்கள் மன நிம்மதியுடன் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

நக்கலிஸ்ட் நாரதர் - மக்கள் மாற்றத்தை விரும்பறாங்க,ஓகே,எந்த மாற்றம் வந்தாலும் அது பொது ஜனத்துக்கு ஏமாற்றமா போயிடுதே?

பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: பா.ஜ., சொந்த பலத்தில் உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பும் அளவு சக்தி படைத்துள்ளது. கூட்டணி குறித்து தி.மு.க., பேச வந்தாலும், பா.ஜ., தயாரில்லை.

நக்கலிஸ்ட் நாரதர் - பந்திலயே உக்காரவேணாம்னு சொல்றாங்களாம்,இலை ஓட்டைனு சொன்னானாம்

மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேட்டி: மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 10 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மின்சாரம், தற்போது, 13 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நக்கலிஸ்ட் நாரதர் - அண்ணே ,ஆப்பிரிக்காவைத்தான் இருண்ட கண்டம்னு சொல்வாங்க,உங்களை தொடர்ந்து மின் வாரியத்துல விட்டு வெச்சா தமிழகத்துக்கு அந்தப்பேரை வாங்கிக்குடுத்துடுவீங்க போலிருக்கே? 

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை, வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி செய்ய வேண்டும். சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடு தான்.

நக்கலிஸ்ட் நாரதர் - டாக்டர் அய்யா,2011 ல உங்க கட்சிக்கு எந்தக்கூட்டணிலயும் இட ஒதுக்கீடு கிடைக்கறமாதிரி தெரியலையே,என்ன் பண்ணப்போறீங்க?