Friday, April 03, 2015

வித்தார கள்ளி டி எம் பார்க்கப்போனாளாம்.கட்டைல போறவனுங்க.......

1  +2 சயின்ஸ் டீச்சர் என் பேஸ்புக் பார்த்துட்டு போன் பண்ணி ஏண்டா நீ இன்னும் திருந்தவே இல்லையா?ன்னு கேட்டுட்டாங்க.ஷேம்.ஷேம் பப்பி ஷேமாப்போச்சு



============



2 கன்னிப்பொண்ணுங்களுக்கு  வாழ்த்து  சொல்லும்போது கூட “ என்னை  மாதிரியே நல்ல  மாப்ளை  உனக்குக்கிடைக்கனும்”னு  பிட்டை  ஓட்டிடுவான் நெட் தமிழன்




===================




3  வலது  கையால   காத்தில்  ஒரு வட்டம்  போட்டுட்டே  இடது கையால ஒரு  சதுரம்  போடு.உன்  டேலண்ட்  ஊருக்கு  தெரியும்.-ட்விட்டரில் நான் கற்றது




======================





4  சன்யாசம்  போறேன், சன்யாசம்  போறேன்  -னு  சொல்லிட்டே  லேடீஸ் ஹாஸ்டலை 3  முறை  சுத்தி  வந்தாராம்  சன்னியாசி!இது  எப்டி இருக்கு நீ யோசி!




===============




5   வித்தார கள்ளி டி எம்  பார்க்கப்போனாளாம்.கட்டைல போறவனுங்க கொத்துகொத்தா  காலை வணக்கம்  வெச்சானுங்களாம் # நவீன  சொலவடை




===================



6  நேத்து  நான் போட்டிருந்த டிரஸ்சே  சரி இல்லை

இன்னைக்கு மனசே  சரி இல்லை
நாளை  என்  மனசு  என் வசம்  இல்லை # பிரபல  fb அப்டேட்டுகள்


==================

7  நைட் பூரா ஃபேஸ்புக்கில் குடி இருந்ததால் கண்ணெல்லாம் எரிகிறதா?நந்தியாவட்டைப்பூவைகண்ணில் வைத்திருந்தால் குளிர்ச்சி


===================

8 கோடைக்கு மோர் சாப்பிட்டா நல்லதுன்னா தமிழன் பீர் சாப்பிடறான்.இளநீர் குடிச்சா குளிர்ச்சின்னா கள்ளு/சாராயம் குடிக்கறான்


=============


9 ட்விட்டர்ல /FB ல பாலோயர்ஸ் வர்றாங்க்ளோ இல்லையோ சம்சாரம் டெய்லி நம்மளை பாலோ பண்ணிக்கிட்டே இருக்கு.யார் கூட என்ன பேசறான்?னு கண்காணிக்குது


-----------------------



10 ஷீபா ,ஜெபா,சுபா,ரூபானு ஏகப்பட்ட பேர் இருக்காங்க.டிஎம் அனுப்பும்போது ஒரு தபாக்கு 2,தபா பார்த்து அனுப்பனும் போல.




=================




11 செவ்வாய் தோஷம் உள்ள பெண்களுக்கு அரிய வாய்ப்பு.எனக்கு செவ்வாய் நாலில் இருப்பதால் செவ் தோஷம் உள்ள பொண்ணுங்களோட மட்டும்தான் கடலை போடனுமாம்



=================




12 நான் சின்னப்பைய்னா இருக்கும்போது மொட்டை மாடி வந்தா காத்து வாங்கிட்டு.வேடிக்கை பார்ப்பேன்்.இப்பவெல்லாம் டிவியே கதினு கிடக்குது ஊருசனம்




================



13 ஏழைங்க ,அன்றாடங்காய்ச்சிகள் எல்லாம் அரக்க பரக்க வரிசைல நின்னு கரண்ட் பில் கட்டிடறாங்க.ஊரான் ஊட்டுக்காசை அடிச்சு உலைல போட்டவங்க பம்மறாங்க




==================




14 வாழ வந்தான் வீட்டுக்கு மருமகளா வரும் பெண்ணை வாழ வந்தான் வீட்டுக்கு வாழ வந்தவர்னு வாழ்த்தனுமோ?




================



15 நயன் தாரா வும் ரோஹித் தும் 1

எதிர்ல யார் இருக்காங்கனு பார்த்துட்டு பர்பார்ம் பன்றதில்லை.சிக்சர் தான்


============


16 கவர்மெண்ட் வேலை கிடைத்தவன் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன்
சாத்தானால் சபிக்கப்பட்டவன்


===============


17 அன்பே நிஷி! செடியை நடு! என கட்டளை வாக்கியமாகச்சொன்னாலும் அது நடு”நிசி”க்கீச்சு ஆகிவிடுமோ?

==================


18 அன்பே அஞ்சனா! உங்கப்பா பத்திரிக்கை வைக்க வந்தாரு.நாலணா வெச்சாரு.அட்லீஸ்ட் எட்டணா வெச்சிருந்தா ஹால்ஸ் மிட்டாயாவது வாங்கி இருப்பேன்


=================


19 இன்று அகில உலக சிட்டுக்குருவி தினமாம்.எனவே செல் ரிங்க்டோனாக சிட்டுக்குருவி தொட்டுத்தழுவி பாட்டை வைக்கவும் ( மார்ச் 20)


====================

20 என் ஆளுக்கு 10 வது எக்சாம் நடப்பதால் இடைக்கால நிவாரணமா நான் என் ஆள் திரும்ப வர வரைக்கும்
யாரையாவது லவ் பன்னலாம்னு இருக்கேன் னு ஒரு FB sms


=================

Thursday, April 02, 2015

சகாப்தம் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )

விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் சகாப்தம்.
தமிழ் சினிமாவில் இன்னொரு வாரிசு நடிகர் உருவாகி இருக்கிறார். படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் அலையடித்தன. சகாப்தம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?
கிராமத்தில் இருக்கும் சண்முக பாண்டியன் தன்னைப் போலவே வேலை வெட்டி இல்லாத நண்டு ஜெகனுடன் சுற்றித் திரிகிறார். பவர் ஸ்டாரை நம்பி வேலை தேடி மலேசியா செல்கிறார்கள். அங்கு வேலைக்கு வந்து அடிமையாக அவதிப்படும் தமிழர்களைக் காப்பாற்றத் துடிக்கிறார் சண்முக பாண்டியன். இறுதியில் பகை முடித்தாரா? பழி தீர்த்தாரா? தமிழர்கள் என்ன ஆனார்கள்? என்பது க்ளைமாக்ஸ்.


கோயிலில் காணாமல் போன முருகன் சிலையைக் கண்டுபிடித்து தரும் அறிமுகக் காட்சியிலேயே சண்முக பாண்டியனுக்கு விசில் பறக்கிறது.
ஊருக்குப் பெருமை உன்னாலே உற்சாகம் மலரும் தன்னாலே என்று ஊரே கொண்டாட அசத்தலான பாட்டுக்கு கொஞ்சம் முன்னே பின்னே டான்ஸ் ஆடி டயர்ட் ஆக்கி டரியல் பண்ணுகிறார் சண்முக பாண்டியன். ஆனாலும், சண்முக பாண்டியன் என்ட்ரிக்கு கிளாப்ஸ் காதைக் கிழித்தது.
அத்தைப் பெண் நேகா ஹிங் பிறந்தநாள் அன்று காதல் கண்களோடு பார்க்காமல் வெறுமனே அட்டென்ஷனில் நின்று கொண்டு அவர் கொடுத்த ஸ்வீட்டை அவருக்கே ஊட்டிவிட்டு தேமே என்று நிற்கிறார் ஹீரோ.
பவர் ஸ்டாருடன் அடிக்கும் ரகளை, டீக்கடை காமெடி கலாட்டா என்ற பெயரில் செய்யும் மரணக் கடி, நண்டு ஜெகன் காமெடி என்ற பெயரில் பெண்களை கேவலமாகப் பேசுவது என முகம் சுளிக்கும் காட்சிகளே அதிகம்.





மன்னிப்பு என் பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தை என்று பெட்ரோல் பங்க் சண்டைக் காட்சியில் பேசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட அவரது ஆட்களை வெளுத்து வாங்கும் சண்முக பாண்டியனுக்கு அடித்த விசில் சத்தம் காதை ஜிவ்விடவைத்தது.
எதற்காக சண்டை போட்டோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் சொல்லாமல் மவுனம் காக்கும்போது, தேவயானி உண்மை சொல்லும் இடத்தில் 'நீ உன் அப்பா மாதிரி' என உதவி செய்யும் குணத்தைப் பாராட்டும்போது ரசிகர்கள் வலிக்க வலிக்க கை தட்டுகிறார்கள்.
ஆனால், அதே போலீஸ் ஸ்டேஷனில் தான் சண்முக பாண்டியன் அப்பா இருக்கிறார். ரெண்டடி தள்ளி உங்க பையன் உங்களை மாதிரின்னு தேவயானி டயலாக் பேசி இருக்கலாம். இதுல கூட குறியீடு வெச்சிருக்காங்க பாஸ் என முன் சீட்டில் அமர்ந்திருந்தவர் முணுமுணுத்தார்.
மலேசியாவில் வேலை செய்யப் போகிறோம் என்கிற கெத்தொடு பவர் ஸ்டாரிடம் வாங்கிய கைலியைக் கட்டிக்கொண்டு சண்முக பாண்டியனும், நண்டு ஜெகனும் அலப்பறை என்கிற பெயரில் அநியாயம் செய்கிறார்கள். வெற்றிக் கொடி கட்டு வடிவேலு பாணியில் காமெடி பண்ண டிரை பண்ணியிருக்கீங்க சாரே. இதை கேப்டன் எப்படி கவனிக்காம விட்டார்?
சண்முக பாண்டியனும், நண்டு ஜெகனும் ஒரு வழியாக மலேசியா புறப்படுகிறார்கள். மலேசியாவில் காலடி எடுத்துவைக்கும்போது விமான நிலையத்திலேயே போலீஸ் கைது செய்கிறது. இடைவேளை.
இடைவேளையில் ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டிருந்தவர்களிடம் காதைக் கொடுத்தோம். படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட், கேரக்டர் ஆர்டிஸ்ட் என்று எல்லாருமே அவசர கதியில் நடித்திருக்கிறார்கள். சண்முக பாண்டியன் தலை வகிடு கலையாமல் அவ்வளவு கவனமாக நடித்திருக்கிறார். போஸ் வெங்கட்டும், தேவயானியும் சீரியலை மிஞ்சிய ஓவர் ஆக்டிங்கில் பின்னிப் பெடல் எடுக்கிறார்கள். தலைவாசல் விஜய் மட்டும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கிறார் என்கிற பேச்சுகள் காதில் விழுந்தன.
இரண்டாவது பாதி எப்படி இருக்குமோ என்ற திகிலுடன் உட்கார்ந்தோம். பக்கத்து இருக்கையில் படம் பார்த்தவர் தூங்கியேவிட்டார்.
இன்னொருவர் ஒலிச்சித்திரம் மட்டும் கேட்கிறேன் என்று கண்களை மூடிக்கொண்டார்.
சிங்கம் புலி கூட வேண்டா வெறுப்பில் நடித்திருப்பார் போல. படம் முழுக்க காமெடி என்று கடுப்பைக் கிளப்புகிறார்கள் மை டியர் ஆடியன்ஸ். தாங்க முடியவில்லை. வாய்விட்டு கதறும் அளவுக்கா கலங்கடிப்பது? நீங்களே சொல்லுங்கள்.
அதுவும் மலேசியாவில் நடக்கும் சண்டைக் காட்சியில் குதிப்பதும், தாவுவதுமாக சின்ன குட்டிக்கரணம் கூட அடிக்கிறார் நம்ம ஜூனியர் கேப்டன். ஆனால், ரசிக்கதான் முடியவில்லை. நாமெல்லாம் பாவம்தானே.
நடை, உடை, பாவனை என எதிலும் தன்னைப் பொருத்திக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறார் சண்முக பாண்டியன். சஜஷன் ஷாட்டில் கூட அவர் பார்வை வேறு எங்கோ உள்ளது.
நேகா பேசுவதற்கும், டப்பிங்கும் ஒத்துப்போகவே இல்லை.
நேகா ஹிங்கும், சுப்ரா ஐயப்பாவும்போனில் பேசிக்கொண்டதும் ஒரு குத்துப்பாட்டுக்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகவே இருக்கிறது. அந்த அடியே ரதியே குத்துப்பாடலை சிம்பு பாடி இருக்கிறார். சிம்புவின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்? நீங்களே யோசிச்சுப் பாருங்க.
டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலைக்கு சேருவதும், உடனுக்குடன் பல சாகசங்கள் செய்து போலீஸ் நண்பனாக சண்முக பாண்டியன் மாறுவதும் பக்கா டிராமா.
வில்லனிடம் சண்முக பாண்டியன் சிக்கிய நிலையில், கேப்டன் தரிசனம் தருகிறார். அவர் பங்குக்கு கொஞ்சம் அட்வைஸ் செய்து மகனுடன் கைகோர்த்து எதிரிகளைப் பந்தாடுகிறார்.
வில்லன்களிடம் இருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறார் சண்முக பாண்டியன்.
இதுக்கு மேல முடியல... மன்னிச்சுக்குங்க ஃப்ரெண்ட்ஸ்...



தியேட்டரில் ஒரு குரூப் ஆரம்பத்துல இருந்தே காதைப் பிளக்குற மாதிரி விசில் அடிச்சது. கைதட்டி ஆரவராம் செய்தாங்களே. படம் முடிஞ்சதும் ஏன்? என்னாச்சுன்னு ஒருவரிடம் கேட்டேன்.
படம் சூப்பர் என்றார். நிஜமாவா? என கேட்டதும், 'படம் ஹிட்' என்று சொல்லிவிட்டு சரசரவென கடந்துபோய்விட்டார் ஒருவர்.
வீடியோ பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். என்ன சொல்கிறார்கள் என்று உற்றுக் கவனித்தோம்.
சண்முக பாண்டியன் சூப்பர். கேப்டனைப் பார்த்ததே போதும் என்று சிரித்த முகத்தோடு சொல்லிக் கடக்கிறார்கள்.
நமக்குதான் பிரச்சினையோ என்று வாய்விட்டே கேட்டுவிட்டேன். அமைதியா இருங்க பாஸ். எல்லாம் கும்பலா வந்திருக்காங்க. படம் நல்லாயில்லைன்னு சொன்னா அவ்ளோதான் என்றார் இன்னொருவர்.
இவங்கள்லாம் குரூப்பா அலையுறாங்களாமாம்.
மக்களே உஷார்!


நன்றி  - த  இந்து  


 மா தோ  ம  =  மாற்றான்  தோட்டத்து  மல்லிகை








நண்பேன்டா - சினிமா விமர்சனம்

ஹீரோ  வழக்கம்  போல்  ஹீரோயினை  எதேச்சையாப்பார்த்து  பார்த்ததும்  லவ்வறாரு. ஃபிரண்டோட ரூம்ல  தங்கறாரு. எதிர்  வீட்ல தான்  ஹிரோயின். 


ஹீரோயின்  ஒரு  பேங்க்ல ஒர்க்  பண்ணுது.ஹீரோ  பல  ரூட்  விட்டு பிராக்கெட்  போடறாரு.அதுக்கு  ஹீரோயின்   டிமிக்கி  கொடுத்துட்டே  இருக்கு . இடைவேளை  ட்விஸ்ட்டா   என்னைப்பத்தி  பயங்கரமான  ஒரு  ஃபிளாஸ்பேக் இருக்குனு பில்டப்  தருது . என்னைப்பத்தின  பழைய  விஷயங்களைத்தெரிஞ்சுக்கிட்ட  பின்  லவ்  பண்ணுனு  சொல்லுது. எங்கே  சிம்பு  பிரபுதேவா  ஆர்யா  மேட்டரெல்லாம்  வெளில  வந்துடுமோன்னு  தமிழன்  பதர்றான்.



அப்போதான்  ஹீரோயின்  சொல்லுது . நான்  ஒரு  கொலை  செஞ்சு  ஜெயில்  தண்டனை  பெற்ற  குற்றவாளிங்குது

 இந்த  பயங்கரமான   ட்விஸ்ட்டோட  இடைவேளை, இதுக்குப்பின்  என்ன  ஆகுது  ?  என்பதே  மிச்ச  மீதிக்கதை


ஹீரோவா  தமிழ்  நாட்டின்  மக்கா    நாள்  முதல்வர்  உதயநிதி  ஸ்டாலின் . ஆள்  நல்லா  தேறிட்டார் .  டயலாக்  டெலிவரி   , டான்ஸ்  மூவ்மெண்ட்  எல்லாம்  ஓக்கே  . வசனத்தில்  சிம்புக்கு  மறைமுகமா  கவுண்ட்ட்ர்  கொடுக்கறார்


ஹீரோயினா நயன்  தாரா..டிரஸ்சிங்  சென்ஸ் ராணி. , தென்னகத்தின்  மான்செஸ்டர்  கோவை  மாதிரி  மான்  செஸ்ட் டர்  இந்தப்பாவை . ஹை ஹீல்ஸ்  போட்டு  இவர்  நடக்கும்போது போதை  த:ளும்புது.  பாடல்  காட்சிகளில்  ஆடை  அலங்காரம்  அசத்தல் , பல  காட்சிகளீல்  குஷ்பூக்கே  டஃப்  ஃபைட்  தர்றார் , நடிப்பில்  இல்லை  பேக் யூ  லோஓஓஓஒ  நெக்  ஜாக்கெட் டிசைனில். ஒரு  மெடிக்கல்  மிராக்கிள்  ட்விட்டர்ல  நயன்  ஃபோட்டோ  போட்ட  லேடி  ட்வீட்டர்  இன்னைக்கு  போட்ட நெயில்  பாலீஸ்  கலர் ல நயனும் வருது, வாட் எ  கோ  இன்சிடெண்ட்?


 காமெடியனா  நிஜமான  ஹீரோவா சந்தானம்  முன்  பாதியில்  ஹீரோவுக்கு  நிகரான  காட்சிகள்  பின் பாதியில்  ஹீரோவை  விட  அதிக  காட்சிகள் . பெரிய  அளவில்  கவுண்ட்ட்டர்  குடுக்கலை  இருந்தாலும்  மக்கள்  ரசிக்கறாங்க  


 மனோபாலா  காமெடி  லைட்டா  பண்றாரு

  வில்லனா  வரும்  நான் கடவுள்  மொட்டை  வரும்போதெல்லாம்  தியேட்டர்  ஆரவாரம்





மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  காலைல சூப்பர் பிகரை பாத்தேண்டா
எவனாவது சுமாரான பிகரைப்பார்த்தேன்னு சொல்றீங்ளா? #,ந


2 ஸ்ரீ தேவியை சின்ன வயசில் பாத்தா எப்டி இருக்கும்?
கை விரல் சூப்பிக்கிட்டே இருக்கும் # ந


3 யார்ரா இவன் ?அவசரத்தில் செஞ்ச அண்டா மாதிரி ? # ந


4 பொண்ணுங்களுக்கு பின்னாலயே பாலோ பன்ற பையனை விட முன்னால டேரா வர்ற பையனைத்தான் பிடிக்கும் #,ந


5 இந்த சாங் போட்டதும் ஆடுன பொண்ணை அயிட்டம்னு எப்டி கண்டுபிடிச்சே?


சந் = ஏன்னா இது ஐட்டம் சாங் #,ந


6 உனக்கும்  லவ்  ஃபெய்லியரா?


ஏன்? எந்திரன்  சிட்டிக்கே   லவ்  இருக்கும்போது  எனக்கு  இருக்கக்கூடாதா>? # ந



7  பீடிக்கட்டு  மாதிரி  இருக்கான்  ? , இவன்  தான்  பி டி  மாஸ்டரா? 

அய்யோ  , அப்பா.

இவன்  தான் உங்கப்பனா?  # ந



8 சந் =  என்னடா?  பாய்  விட்டுக்கல்யாணத்துல  சாம்பார்  சாதம்  போட்ட மாதிரி  பார்க்கறே? @ ந


9என்னடி ?மான்  தயிர்  சாதம்  சாப்பிட்ட மாதிரி  ஒரு  சத்தம்?


ஃபோன்ல  உங்களுக்கு  கிஸ்  கொடுத்தேன் # ந


10  க்ளீன்  சேவ்  செஞ்ச  கிங்க்காங் மாதிரி இருப்பீங்களே  , இப்படி  முகமூடி  போட்ட  மூஞ்சூறு  மாதிரி  ஆகிட்டீங்களே? ,சந்தானம்  டூ  மொட்டை 






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்




1கை தட்ட கூச்சல் போட 80,பேர் அடியாள்கள் கூட்டிட்டு.வந்திருக்காக.கும்தலக்கடி கும்மாவா?கழகம்னா சும்மாவா?# ந


2 காக்கி சட்டை ஓப்பனிங் சீன் சிங்கம் உல்டா ரீமிக்ஸ்.#,ந



3 டேய் ஜோக் சொன்னபின் கை தட்டுங்கடா.250 ரூபா வாங்கிட்டு.2000,ரூபாக்கு கை தட்டாதீங்கடா #,ந


4 காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி ,கெட்டப் சூப்பர்.ஹீரோவே இவர் தான்


5 2 லவ்வர் லாலி பாப் 2 கோடி நாயகி நயன் என்ட்ரி.ஹைஹீல்ஸ் போட்ட ஹைலிட்டா போல்டா கிளாமர் காட்டும் போர்ன்விட்டா


6 ஹீரோயின் பேரு "ரம்"யா.ஏதோ குறியீடு


7

நயன் டிசர்ட் ல LOVE PINK னு வசனம்
பிங்க்கி பிங்கி பாங்கி

8 அவள் என்னைப்பார்த்த் பாடலில் நயனின் சின்ட்ரெல்லா கவுன் கலக்கல்.ஆடை வடிவமைப்பாளர் ராக்கிங்


9 உலகப்புகழ் பெற்ற பெறப்போகும் நயன் டாஸ்மாக் ல.சரக்கு வாங்கும் சீன்



10 உதயநிதி டூ நயன்.= நான் லவ் டார்ச்சர் பண்ற.ஆளில்லை #,சூசகமா சிம்புவை தாக்கறாரா ?


11 லெமனா தேகத்தில் தகதகக்கும் தமனா என்ட்ரி



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1   எம்  ராஜேஷ் சிஷ்யர்  என்னும்  லேபிள்   நல்ல   வியாபாரம்  ஆக  உதவி

2  சந்தானம்  ஹீரோ  என  உதயநிதியிடம்  சொல்லாமல்  சமாளிச்சது . அவர் தான்  ஹீரோ  என  நம்ப வெச்சது


3  நயன்  தாராக்கு ஆடை  அலங்காரம்  அசத்தல்


4    ஃபாரீன்  லொக்கேஷனில்  ஆடும்  டூயட்  சீன் இந்தியன்  அக்கடான்னு  நாங்க  பாட்டு டான்சை  நினைவுபடுத்தினாலும் அருமை  ,க்ரூப் டான்சர்ஸ்  கலக்கல்  ஃபிகர்ஸ் ,அதுவும்  ஃபாரீன்  ஃபிகர்ஸ்




இயக்குநரிடம்  சில கேள்விகள் 


1   டாட்டா  பிர்லா  பட  ஆர் பார்த்திபன்  கவுண்டமணி  காம்போ  காட்சிகள்  பல இடங்களில்  உல்டா



2  பேங்க்  ல  ஒர்க்  பண்ணும்  ஹீரோயினுக்கு  ஏன்  லேடீஸ்  ஹாஸ்டல்? அபார்மெண்ட் அலாட்    இருக்காதா? 


3  ஹீரோவின்  நண்பரின்  வீட்டு  எதிரே  தனி  வீடு  போல்  சில  காட்சிகள்   ,  லேடீஸ்  ஹாஸ்டல் போல்  சில  காட்சிகள்  . எடிட்டிங்  ஃபால்ட்டா?


4   திருடியா க  வரும்  அந்த  வில்லி  கேரக்டர்   போர்சன்  தேவையே  இல்லாதது


5   எம் ராஜேஷ்  ஃபார்முலாவை  அச்சு அசல்  பிசகாமல்  அப்டியே  டிட்டோ  உல்டா  அடிக்கனுமா/?




சி  பி  கமெண்ட்  =நண்பேன்டா- சந்தானம்  காமெடி , நயன் தாராவின்  கிளாமர் காப்பாத்திடும் -   விகடன் மார்க்  - 41,ரேட்டிங் = 2.75 / 5,  ஏ, பி யில் 15 நாள் ஓடும்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  =  ஓக்கே



 ரேட்டிங்  =  2.75 / 5





டிஸ்கி - கொம்பன் - சினிமா  விமர்சனம்





a







a






a






a







a





a






Puthukkottai rkp
 Embedded image permalinka







Future cm film .house full
 Embedded image permalink

கொம்பன் - சினிமா விமர்சனம்



ஹீரோ  கிட்டத்தட்ட  ஒரு சண்டியர்  மாதிரி. கிராமத்திலேயே  பெரிய  ரவுடி .கோபம்  அவருக்கு  மூக்குக்கு  மேல  வரும்.நல்ல  வேளை  நாக்குக்கு  மேல வர்லை . கெட்ட  வார்த்தையா  பேசி  இருப்பாரு.  

இந்த  ரவுடி  எதேச்சையா   ஜிகிடியைப்பார்க்கறாரு. அதாங்க நம்ம  ஹீரோயின் . .உடனே   பெண்  கேட்டு  கல்யாணமும்  பண்ணிக்கறாரு.ஹீரோயின்   மேரேஜ்க்கு  ஒரு  கண்டிஷன்  போடுது  (  பொதுவாவே  பொண்ணுங்க  ஏதாவது  கண்டிஷன்  போட்டுக்கிட்டுதான்  இருப்பாங்க . வெய்யில் காலம்னா  ஏர்கண்டிஷன்  வேணும்பாங்க )


அதாவது  பாபபாவோட  அப்பா   வீட்டோட  மாமனாரா  இருப்பாரு.  அப்டியே  இருக்காரு.  ஒரு டைம்  புருசன் பொண்டாட்டியை  அடிக்கப்போக  அப்பா  குறுக்கால  புகுந்து  தடுக்க   அடி  மாமனாருக்கு விழுது. பிரிவு . இடைவேளை .


பொண்டாட்டியைப்பிரிஞ்சு  இருக்க  முடியாத   ஹீரோ  மாமனாரை  மதிச்சு  நடக்காரு .   வில்லன்க  கூட்டம்   மாமனாரைப்போட   அலையும்போது  மாப்ளை  எப்டி  மாமனார்  மெச்சிய  மருமகன்  ஆனார்  என்பதே  கதை


  ஹீரோவா  கார்த்தி  .  பருத்தி  வீரன்  கெட்டப்பை  நினைவு படுத்தும்  தெனாவெட்டான  தோற்றம் . அசால்ட்டா நடிச்சிருக்காரு.ஆக்‌ஷன்  காட்சிகளில்  புகுந்து  விளையாடி  இருக்காரு . காதல்  காட்சிகளில்  கேட்கவே  வேண்டாம் . பொதுவாவே  ஹீரோக்கள்  நடிப்பு  வர்லைன்னாக்கூட  ஹீரோயின்  கூட  கெமிஸ்ட்ரி  மட்டும்  ஒர்க்  அவுட்  ஆகிடற  மாதிரி  பார்த்துக்குவாங்க  . இதிலும்   டிட்டோ 



 ஹீரோயினா   கும்கி  இடை  அழகி மாசற்ற  தழும்பழகி ,மாநிலம்  போற்றும்  மாநிற  அழகி  லட்சுமிமேனன்’ இவர்  ஹீரோ  கூட  நெருக்கமா  டூயட்  சீன்ல  நடிக்கறதைப்பார்த்தா   அதிர்ச்சியா  இருக்கு .ஆரம்பத்துல  பானுமதி , ரேவதி , சுஹாசினி  மாதிரி  இருந்தவர்  நய ன்  தாரா  ரெஞ்சுக்கு  இறங்கி  லோ  ஹிப்பில்  கலக்கறார்


மாமனாரா  ராஜ்கிரண்.  நல்ல  குணச்சித்திர  நடிப்பு . பெண்களைக்கவரும்  வகையில்  வசனம்  நடிப்பு  எல்லாம்  கன  கச்சிதம்  , மஞ்சப்பைக்குப்பின்  இவருக்கு  ஒரு  நல்ல   படம்  (  நமக்கல்ல)


 தம்பி  ராமையா  வழக்கம்  போல்  மொக்கை  . கருணாஸ்  ஆங்காங்கே  



 வில்லனா  வருபவர்  ( ஸ்டண்ட்  மாஸ்டர்  சூப்பர்  சுப்பராயன்) சாண்டோ  சின்னப்ப  தேவர்  போல்  தோற்றம் ., மிரட்டலான  நடிப்பு .பின்னிட்டார்


 இசை    ஜி வி  பிரகாஷ்  குமார் .  அங்கங்கே  உல்டா  இருந்தாலும்  ஓக்கே  ரகம்  





மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  நீங்க பதுங்கி அடிச்சா அவன் பாய்ஞ்சு அடிப்பான்.பாய்ஞ்சு அடிச்சா பயங்கரமா அடிப்பான் #,கொ பஞ்ச்

2 தன்மானம் பார்க்கறவனுக்கு வருமானம் இருக்காது # கொ


3 கோயிலுக்கு சனம் மட்டும் வந்தா தேவல.ஜாதியும் இல்ல சேர்ந்து வருது #,கொ


4 கோவக்காரன்னு சொல்லறீங்ளே.பேசிட்டு இருக்கும்போதே அடிப்பானோ?

அடிச்ட்டுதான் பேசுவான் #,கொ


5 பொண்ணுங்களுக்கு அப்பா நெத்தி போல்.புருசம் நெத்தில இருக்கும் குங்குமம் போல் #,கொ


6 அப்பா முகத்தில் விழிப்பதை விட புருசன் முகத்தில் விழிச்சா பொண்ணோட.அப்பாக்கு நல்லது #,கொ


7 ஆளுக்கு ஆள் அடிக்கறதாலதான் இதுக்கு ஆல்ஹஹால்னு பேரு #,கொ


8 மருமகன் வீட்ல மாமனார் பல நாள் தங்கி இருக்கலாம்.ஆனா மாமனார் வீட்ல ஒரு நாள் கூட மாப்ளை தங்கக்கூடாது.மரியாதை இருக்காது# கொ


9 ஜெயிச்சவனை விட தோத்தவனுக்குத்தான் வெறியும் வேகமும் அதிகம்.அவன் கிட்டே தான் ஜாக்கிரதையா இருக்கனும் # கொ

10 ஒரு மனுசன் எதை வேணா.விட்டுக்கொடுப்பான்.ஆனா தான் செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு மன்னிப்பு மட்டும் கேட்கவே மாட்்டான் # கொ




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  டைரக்டர் ஓப்பனிங் சீன்ல ஒரு ஆம்ப்ள குளிக்கறதைக்காட்றார்.விளங்கிடும்.#,கொ



2 கிராமத்து யதார்த்தம் எனும் போர்வையில் கட்டற்ற வன்முறை #,கொ


3 100,விஜய் 50 விஷால் =,1 கார்த்தி #,கொ



4 ஓப்பனிங் சீன் ல லட்சு ராஜ்கிரண்க்கு சரக்கு ஊத்தித்தருது.விஷால் கோவிச்சுக்கமாட்டாரா?



5 ஜி வி பி மச்சக்காரன் ஓப்பனிங் சாங்கை உல்டா அடிச்ட்டார் .சபாஷ்


6 10,நிமிசத்துக்கு ஒரு பைட்.ஆனா ஆக்சன் காட்சிகள் அதகளம் #,ஸ்டன்ட் மாஸ்டர் ராக்கிங் @ கொம்பன்

7 வீட்டோட மாப்ளையா இருக்கறவனைத்தான் கட்டுவேன்னு லட்சு சொல்லுது.சூசகமா யார்க்கோ #,கொ


8 அடி கறுப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி பாட்டில் அரங்கம் அதிரும் கை தட்டல் #,ஜிவிபி ராக்ஸ் @,கொ


9 கார்த்தி -ல்ட்சு நெருக்கமான காட்சி பார்த்தா எனக்கே மனசு கஷ்டமா இருக்கு.புரட்சித்தளபதி பாத்த்தா ;,,,

10 ஆரஞ்சுக்கலர் ஜாக்கெட் போட்டுட்டு பச்சைக்கலர்ல பொட்டு வெச்சிருக்கு லட்சு.மிஸ்மேட்ச்.யாரும்மா மேக்கப்விமன்.?


11 இப்பத்தான் கண்டுபிடிச்சேன்.ஹீரோ படம் பூரா பச்சைக்கலர் அன்டர்டிராயர் போட்டிருக்காரு.ஹீரோயின் அதுக்கு மேட்சா பச்சைப்பொட்டு.அய்யோ ஊர்மிளா!


12 FOUR PLUS FOUR னு (1989) மலையாளப்படத்துல கோவை சரளாவை கில்மாவாப்பாத்த கண்ணால ஹீரோக்கு அம்மாவா.


13 முன் பாதி 6 பைட் சீன் 3 பாட்டு சீன்.வன்முறை.தேறுவது கஷ்டம் @,கொம்பன் இடைவேளை


14 கிருஷ்ண்சாமி நெத்தில நாமம்.ஜாதி ரீதியான காட்சியோ வசனமோ கொம்பன் படத்தில் 1,சீன் கூட இல்லை





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   பருத்திவீரன்  பாகம்  2  என்பது  போல்  பில்டப்  கொடுத்த்து 


2  கிருஷ்ணசாமி  மாதிரி  ஒரு  அல்லக்கை  தானாக  வந்து  மாட்டி  படத்துக்கு  விளம்பரம்  தந்தது  


 3  போஸ்டர்  டிசைன் 


4   வசனங்கள்  பெண்களைக்கவரும்  வகையில் எழுதப்பட்டது
  


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  பெண்களைக்கவரும்  வகையில்  செண்ட்டிமெண்ட்  படத்தில்  எதுக்கு  இத்தனை  வன்முறை  >/?


2 ஹீரோயினோட  அப்பா  அவர்  கூட  தங்குவதாத்தான்  ஆரம்பத்தில்  பேச்சு . ஆனா  அவர்  அப்பப்போ  வந்துட்டு தான்  போறார். அவருக்கு  ஏது  வீடு  ?எங்கே  தங்கறார்?

 3  பின் பாதியில்  திடீர்  என  ஹீரோ  மாமனாருக்கு  மரியாதை  தருவது  எப்படி?  அதுக்கு  அழுத்தமான  காரணம் இருக்க  வேணாமா? 


4  வீடு தேடி  வந்த  மாப்ளையை  மாமா  வாங்க  என  ஒரு  வார்த்தை  கூட  கேட்க மாட்டாரா? 


5  க்ளைமாக்ஸ்  மரண சொதப்பல் .  ராஜ்கிரண்  சாமியாட்ட  நடிப்பு   
படு செயற்கை





சி  பி  கமெண்ட்   = கொம்பன் = மாமனார் மாப்ளை பாசக்கதை.முன் பாதி சண்டை பின் பாதி சென்ட்டிமென்ட்ஸ்.மொக்கைப்படம்.விகடன் =40.ரேட்டிங்= 2.5 / 5 , பி சி செண்ட்டர்களில் சுமாரா ஓடிடும் . போட்ட காசை எடுத்துடுவாங்க



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  =  சுமார்



 ரேட்டிங் = 2.5 / 5


டிஸ்கி - நண்பேண்டா -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2015/04/blog-post_2.html


Puthukkottai vest theatre
 Embedded image permalink