Monday, November 13, 2023

KING OF KOTHA ( 2023) -மலையாளம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( கேங்க்ஸ்டர்ஆக்சன் த்ரில்லர்) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்

     


   கேரளாவைப்பார்த்து தமிழக  சினிமா  திருந்துனா  தேவலை  என  திரைக்கதை  ஆர்வலர்கள்  வேண்டி விரும்பிகேட்டுக்கொள்ளும்  சமயத்தில்  தமிழகத்தைப்பார்த்துக்  கெட்டுப்போக  முடிவெடுத்து  எடுத்த  மாமூல்  மசாலா  கேங்க்ஸ்டர்  ஃபிலிம்  தான் இது. கமர்ஷியலாக  இது  போகவில்லை  என்பது  ஒரு  ஆறுதல் 50  கோடி  பட்ஜெட்டில்   உருவான  இப்படம்  38  கோடி  மட்டுமே  வசூலித்து  12  கோடி  நட்டத்தை  ஏற்படுத்தியது . இந்த  மாதிரி  மசாலாக்குப்பைகள்  தொடர்ந்து  தோல்வி  அடைந்தால்தான்  நல்ல  திரைக்கதைகள்  உருவாகும்


டைட்டிலைப்பார்த்ததும்  இது  என்ன  கெட்ட  வார்த்தை  மாதிரி  இருக்கு , சென்சார்ல  எப்படி  விட்டாங்க  என  விசாரித்தபோதுதான்  அது  ஒரு  ஊரின் பெயர்  எனத்தெரிய  வந்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , வில்லன்  இருவரும் பால்ய  சினேகிதர்கள் . இருவருமே  உருப்படாதவர்கள்  தான்.   வில்லன் காதலித்து  மணந்த  பெண்  ஏற்கனவே  திருமணம்  ஆகி  கணவனை  இழந்தவள் . அவளுக்கு  ஒரு  தம்பி . அவனும்  ஒரு  கஞ்சா  கேஸ்


அவன்  பொறுக்கி  என்பது  தெரியாமல்  ஆரம்பத்தில்  அவனைக்காதலிக்கும்  நாயகனின்  தங்கை   பின்  உண்மை  அறிந்து  விலகுகிறாள் . இதனால்  கடுப்பான  அந்த  பொறுக்கி  நாயகனின்  தங்கையைக்கொலை  செய்ய  முயற்சிக்கும்போது  நாயகன்  அந்தப்பொறுக்கியை  கொலை  செய்து  விடுகிறான்


இப்போது  வில்லனுக்கும், நாயகனுக்கும்  மோதல்  வருகிறது . நாயகன்  ஊரை  விட்டே  போக  முடிவெடுக்கிறான்


 வில்லன்  தான்  இப்போது  சோலோ  ரவுடி. எல்லா  அக்கிரமங்களையும்  செய்கிறான். அந்த  ஊருக்குப்புதிதாக  வரும்  போலீஸ்  ஆஃபீசர்  வில்லனின் கொட்டத்தை  அடக்க  நாயகன்  மீண்டும்  இந்த  ஊருக்கு  வர  வேண்டும்  என  நினைத்து  அதற்கான  ஏற்பாடுகளை  செய்கிறார்


 நாயகன்  திரும்ப  வந்ததும்  நாயகன் - வில்லன்  மோதல்  நடக்கிறது . மொத்தமாக  765  கொலைகள்  செய்து  விட்டு  நாயகன்  அமைதிப்பூங்காவான  காஷ்மீரில்  குடியேறுகிறன் , சுபம் 


நாயகன்  ஆக  துல்கர்  சல்மான் , படம்  முழுக்க  தம்  அடிச்சுக்கிட்டே  இருக்கார் ,  அது  போக  சரக்கும்  அடிக்கிறார். இளைய  தலைமுறைக்கு  நல்ல  ஒரு  முன்னுதாரணம் . அனால்    கேரளாவில்  இவருக்கு  ரசிகைகள்  அதிகம் . இவர்  தம்  அடிக்கும்போதெல்லாம்  கை  தட்றாங்க 


நாயகி  ஆக  ஐஸ்வர்யா  லட்சுமி  பாந்தமான  நடிப்பு . படத்தில்  அமைதியான  ஒரே  கேரக்டர்  இவர்தான் 


வில்லன்  ஆக  ஷபீர்  கலக்கி  இருக்கிறார். த  டெய்லர்  என்ற  ஃபிரெஞ்ச்  வெப்சீரிஸ்  வில்லன்  முக  சாயலில்  இருக்கிறார்

வில்லனின்  மனைவியாக  நைலா  உஷா  ஆஜானுபாவகமான  தோற்றம், வில்லித்தன  நடிப்பு. இவரது  கேரக்டர்  டிசைனில்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கிறது 


ரித்திகா  சிங்  கெஸ்ட்  ரோலில்  ஒரு  டான்ஸ்க்கு  வருகிறார். போலீஸ்  ஆஃபீசர் ஆக  பிரசன்னா  வந்தவரை  ஓக்கே  ரகம்


படத்தின்  நீளம்  மிக  அதிகம்  174 நிமிடங்கள் , ஷ்யாம்  சசிதரன்  இன்னுமே  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


நிமிஷ்  ரவியின்  ஒளிப்பதிவில்  3  பெண்  கேரக்டர்களை  நல்ல  லைட்டிங்கில்  அழகாகக்காட்டி  இருக்கிறார்.


 இசை , பின்னணி  இசை  இரண்டும்  வேறு வேறு  நபர்கள் , சுமார்  ரகம்  தான் 


அபிலாஷ்  சந்திரன்  திரைக்கதை எzழுத  அபிலாஷ் ஜோஷி  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்  (அபிலாஷ் ஜோஷி ) 


1  நாயகன் - நாயகி  இருவருக்கும்  இடையே  ஆன  அந்த  கெமிஸ்ட்ரி 

2  நாயகி , வில்லனின்  இணை , நாயகனின்  தங்கை மூவருக்குமான  தனித்தனி  ரொமாண்டிக்  டிராக்ஸ், அவர்களது   உடல்  மொழி , ஆடை  வடிவமைப்பு , நடிப்பு  அனைத்தும்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1   பனிஷ்மெண்ட்   ட்ரான்ஸ்ஃபரா? சார்

 ஆமா,  சில  பேரை  பனிஷ்  பண்ண  வேண்டி  இருக்கு 


2 விளைவுகளை  சந்தீப்பே , ஏன்னா  நான்  ஒரு  கவர்மெண்ட்  ஸ்டாஃப்


 நான் தான் இங்கே கவர்மெண்ட் டே


3  அவனை  சீண்டிப்பார்க்காம  இருப்பதுதான் உயிர்  வாழத்தகுதியான  விஷயம் 


4 ரத்தத்தில்  ஊறுன  கத்தியைப்பன்னீரில்  கழுவி  எடுத்தா  மின்னுமே  அது   மாதிரி    உன்னைப்பார்க்கும்போதெல்லாம்  துடிக்குது  என்  மன்சு 


 இந்த  மாதிரி  பேச  எங்கே  இருந்து  கத்துக்கிட்டே?


5  என்னடா  ஆடறீங்க? ரெண்டு  டீமும்  ஆளுக்கு  3  கோல்  போட்டிருக்கீங்க?


பெனாயில்  டீ  போட  வேண்டி  இருக்குமோ?


 டேய்  , அது பெனால்டி 


6  நீங்க  சொன்னபடி  அவன்  கீழே  குனிஞ்சு  அந்த  புக்கை  எடுக்கலைன்னா  என்ன  பண்ணி இருப்பீங்க ?


 அவனை  ஆம்பளைனு  சொல்லி  இருப்பேன், ஆனா  பாவம்  அதைக்கேட்க  அவன்  உயிரோட  இருந்திருக்க  மாட்டான் 


7  முரட்டு  சிங்கம்  முசக்குட்டி  ஆன  மாதிரி  உன்னைப்பார்த்ததும்  நான்  சாஃப்ட்  ஆகிடறேன் 


8  நாளை  பற்றி   யோசிக்கும் எல்லா  மனுசங்களோட நிம்மதியையும்  கெடுத்து  வெச்சிடுது  இந்த  நாளை 


9  டேய் , நீ  செமயா  இங்க்லீஷ்  பேசறே ,  என்னால்  உன்  அளவுக்குப்பேச  முடியலை   அதனால்  டேய்  அவனை  வெட்டி  கடல்ல  போட்டுடுங்க 


10  பெண்  மனசை  மட்டும்  யாராலும்  ஜெயிக்க  முடியாது , உடம்பை  வேணா  ஜெயிக்கலாம் 


11    ஹலோ.. டேய் , அவனை  முடிச்சுட்டியா?


 அதுக்கு  ஆட்டம்  பாம்  தான்  வேணும், முதல்ல  நீங்க  தப்பிச்சு ஓடிடுங்க 


12  ஒரு  உண்மையான  மனுசன்  தன்  சமாதி  வரை  தன்  காதலை  சுமந்து  செல்வான் 



13   நான்  குடிக்கற  பிராண்டை  எல்லாம்  நீ  பார்த்திருக்கவே  மாட்டே 


14  பல  வருசங்களுக்குப்பிறகு  பார்க்கப்போகும்  நாய்  மாதிரி  தான்  இந்த  ஊர்  எனக்கு . முதல்ல  குரைக்கும், அப்றம்  வாலை  ஆட்டிட்டு  பின்னாடியே  வரும் 


15  இங்கே  கூரை  ஏறி  கோழி பிடிச்சிட்டு  இருந்தவன்  அந்த  ஏரியா  போய்  வானம்  ஏறி  வைகுண்டம்  போய்ட்டு  வ்ந்திருக்கான் 

16 பாசம்  காட்ட  நாயும், பூனையும்  இருக்கறதாலதான்  பல  வயசானவங்க  இன்னும்  உயிரோட  இருக்காங்க 


17  ராஜூவைக்கொல்ல உங்களால    முடியும்னு எனக்குத்தெரியும், ஆனா  உங்களில்  ஒரு  ஆளைக்கொன்னுட்டுதான்  அவன் சாவான் , அந்தக்கஷ்டத்தை  என்னால  தாங்க  முடியாது 



18  காதலிக்கும்  பொண்ணோட  முன்  வரலாறை  தெரிஞ்சுக்க  நினைக்கறது  ஆம்பளைக்கு  அழகு  இல்லை 


19  கடந்த  காலத்தில்  நாம  செஞ்ச  பாவங்கள்  எதிர்  காலத்தில்  நம்மைத்தூங்க  விடாது 


20  யாருமே  கூட  இருக்காத  போதே  துணையாக  இருந்தவண்டா  நீ , நண்பன்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கேங்க்ஸ்டர் இருக்கும்  ஊருக்கு  ட்ரான்ஸ்ஃபர்  ஆகும்  இன்ஸ்பெக்டர்  30  அடியாட்களிருக்கும்  இடத்துக்கு  2  போலீசை  மட்டும்  கூட்டிட்டுப்போய்  மாட்டுவது  ஏன் ? 

2  வெளில்  பயங்கர  மழை , நனைஞ்சுட்டே  வரும்  ஹீரோ  வீட்டுக்குள்  வந்ததும்  சட்டை  அப்பவே  காய்ஞ்சிடுது . எடிட்டிங்  மிஸ்டேக்

3  ஹீரோவோட  காதலியின்  அப்பாவைக்கொலை  செஞ்சவன்  மகளை  ஏன்  உயிருடன்  விடுகிறான் ? 


4  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  பிரசன்னா  ஒரு  ரவுடி  பரிசாகக்கொடுத்த  ரேபான்  கூலிங்க்  கிளாசை  தனிமையில்  இருக்கும்போது  உடைக்கிறார். அவருக்குப்பிடிக்கலைன்னா  ஏழைக்கு  தானம்  பண்ணி  இருக்கலாமே? ஏன்  5000  ரூபாய்  காசை  வேஸ்ட்  பண்ணனும் ? 


5  வில்லனின்  அடியாட்கள்  50  பேர்  கைகளில்  வெடிகுண்டு  வெச்சிருக்காங்க . அதுல  ஒண்ணு  வெடிச்சாலே  நாயகன் க்ளோஸ், ஆனா  50  வெடியையும்  தீபாவளி  வெங்காய  வெடி , கல்  வெடி  மாதிரி  வெடிக்க  வெச்சும்  நாயகனுக்கு  ஒண்ணுமே  ஆகலை 

6  நாயகி  பல  மாதங்களாக  தனியாதான்  வீட்டில்  இருக்கிறாள் , வில்லன்  நினைச்சிருந்தா  எப்போ  வேணா  அவளைப்போட்டுத்தள்ளி  இருக்கலாம், ஆனா  நாயகன்  கண்  முன்   கத்தியால்  குத்தி  மாட்டிக்கனும்னு  வேண்டுதல்  போல 

7 வில்லன்  நாயகனை  தலை  அடித்து  மயக்கம்  ஆக்கினதும்  அப்பவே  கொன்னிருக்கலாம், அவன் என்னடான்னா  கிறுக்கன்  மாதிரி  நாயகனை  கட்டிப்போட்டு  அவன்  நினைவு  வரட்டும்னு  வெயிட்  பண்ணிட்டு இருக்கான் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- படம்  முழுக்க  வன்முறை  வெட்டு  குத்து  ரத்தம்  தான் . நல்ல  வேளை  ரேப்   மட்டும் இல்லை . இயக்குநர்  சபரிமலை  ஐயப்ப  பக்தர்  போல 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல் போகும்  மாமூல்  மசாலா  குப்பை  தான்  , வன்முறை  விரும்பிகள்  பார்க்கலாம், ரேட்டிங் 2.25 / 5 



King of Kotha
Theatrical release poster
Directed byAbhilash Joshiy
Written byAbhilash N. Chandran
Produced by
Starring
Narrated byMohanlal
CinematographyNimish Ravi
Edited byShyam Sasidharan
Music by
Production
companies
Release date
  • 24 August 2023
Running time
174 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget50 crore[2]
Box officeest. ₹38.30 crore[3]

Sunday, November 12, 2023

JAWAN (2023) - ஹிந்தி / தமிழ் - சினிமா விமர்சனம் ( அட்லீ காக்டெய்ல் உல்டா யுனிவர்சிட்டி ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


தமிழ்  சினிமா  டைரக்டர்  ஒருவர்  மும்பை  போய்  1000  கோடி  ரூபாய்  வசூலிக்கும்  படம்  தந்திருக்கிறார்  என்பது  ஒரு  பெருமை  தான், என்னதான்  ஒரிஜினல்  சரக்கு  இல்லை , எல்லாம்  பட்டி  டிங்கரிங்  ஒர்க்  ஆஃப்  ஓல்டு  மூவிஸ்  என்றாலும்   நீ  வெற்றி  பெற்றவனா? என்பதைத்தான்  உலகம்  பார்க்கும், சொந்த  சரக்கா? திருட்டு  சரக்கா? என்பது  இங்கே  இப்போது  முக்கியம்  இல்லை. அந்த  வகையில் மாஸ்  மசாலா  கமர்ஷியல்  ஆக்சன்  ஃபிலிம்  எடுத்த  பட்டி டிங்கரிங்    மன்னன்     , காக்டெய்ல்  கண்ணன் இயக்குநர்  அட்லியை  வாழ்த்தி  விமர்சனத்துக்குள்ளே  போகிறேன்     

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   ஒரு  மிலிட்ரி  மேன். ஆரம்பம்  படத்துல  வர்ற  மாதிரி  ஒரு  ஊழல்  நடக்குது . ஆயுதங்களை சப்ளை  செய்யும்  டீலர்  ஆன  வில்லன்  டுபாக்கூர்  துப்பாக்கிகளை  சப்ளை  பண்றான். ராணுவ  வீரர்கள்  ஒரு  ஆபரேஷன் ; அட்டாக் ல  ஈடுபடும்போது  துப்பாக்கி  செயல்படாம  30 பேர்  இறக்கிறார்கள் , இந்த  உண்மையை  நாயகன்  உலகத்துக்கு  வெளிச்சத்துக்கு  கொண்டு  வருகிறான். கோர்ட்டில்  கேஸ்  நடக்கிற்து . வில்லன்  ஆன  அந்த  ஆயுத  சப்ளை  டீலருக்கு  தடை  விதிக்கப்படுகிறது. அவன்  கடுப்பாகி   நாயகனைப்பழி வாங்க  பொய்யான  குற்றச்சாட்டில்  நாயகனை  படு  காயபப்டுத்தி  அவன்  மனைவியை  ஜெயிலுக்கு  அனுப்பி  விடுகிறான்


 20  வருடங்கள்  கழித்து  நாயகனின்  மகன்   ஓப்பனிங்  சீன்லயே  ஒரு  ரயிலைக்கடத்தி  பிணையக்கைதிகளாக  350  பேரைப்பிடித்து  வைத்துக்கொண்டு  40,000  கோடி  ரூபாய்  பணம்  கேட்கிறான்.  அந்த  ரயிலில்  மாட்டியது வில்லனின்  மகளும்  ஒருவர். வில்லன்  மகளுக்காக  ஒரே  ட்ரான்ஸ்செக்சனில்  அந்தப்பணத்தை  நாயகன் -ன்  மகன்  அக்கவுண்ட்டுக்கு  மாற்ற  நாயகனின்  மகன்  கத்தி  படத்தில்  வருவது  போல  விவசாயிகள்  கடனை  ஒரே  டைமில்  அடைக்கிறான்


 ஒரு  பிரபலமான  அரசியல்வாதியை  பொதுமேடைல  அவர்  பேசிட்டு இருக்கும்போதே  ஷூட்  பண்ணி  காயப்படுத்தி  ஒரு  ஜி ஹெச்ல  அட்மிட் பண்ணி  அங்கே  இருக்கும் வசதிக்குறைவை  சுட்டிக்காட்டி  அந்த  மினிஸ்டரைக்காப்பாத்தனும்னா  இந்தியாவில்  இருக்கும்  அனைத்து  ஜிஹெச்லயும்  அனைத்து  வசதிகளும்  செய்யப்பட  வேண்டும்னு  நிபந்தனை  விதிக்கிறான்  நாயகனின்  மகன்


இந்த   சாத்தியமே  இல்லாத  காரியங்களுக்கு  பேச்சு  வார்த்தை  நடத்த  போலீஸ்  ஆஃபீசர் ஆன  நாயகி  வருகிறார். நாயகனின்  மகனுக்கும், நாயகிக்கும்  திருமணம்  நடக்கிறது 


 இறுதியில்  வில்லன்  ஆன  ஆயுத  டீலர்  , நாயகனின்  மகனால் , நாயகனால்  எப்படி  வீழ்த்தப்படுகிறான்  என்பதே  மீதிக்கதை 


 நாயகன்  ஆக  ஷாரூக்கான்  அசத்தி  இருக்கிறார். இன்னமும்  இளமை  மாறாம  துறுதுறுப்புடன்   ஆக்சன் , டூயட்  என  கலக்கி  இருக்கிறார்


நாயகி  ஆக  2  கோடி  லேடி  நயன்  தாரா . கச்சிதம். பில்லா  படத்துக்குப்பின்  இவரை மாடர்ன்  டிரசில்  ரசிக்க  முடிகிறது 


 வில்லன்  ஆக  விஜய்  சேதுபதி  ஓக்கே  ரகம்  தான் . பிரமாதம்  என்று  சொல்லும்  அளவுக்கு  இல்லை 

பிரியாமணி , சான்யா  மல்ஹோத்ரா  போன்றவர்களும்  தலை  காட்டுகிறார்கள் 


170  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . இன்னமும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்..

அனிரூத்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பிஜிஎம்  நல்லாருக்கு .

ஜிகே  விஷ்ணு  வின்  ஒளிப்பதிவில்  பிரம்மாண்டமான  காட்சிகள்  கண்  முன்  விரிகின்றன 

சபாஷ்  டைரக்டர் (அட்லீ) 


1    ஷங்கர்  படங்கள், விஜய்  படங்கள்  என  கலந்து  கட்டி  காட்சிகளை  சுட்டாலும்  பாலிவுட்  ரசிகர்களுக்கு  பிடிக்கும் விதத்தில் பிரம்மாண்டமான  ஆக்சன்  மசாலாப்படத்தை  தந்த  விதம்  அருமை 


2   நாயகன் - நாயகி  இருவரையும்  பயன்படுத்திய  விதம்  அருமை  ஹீரோ  ஓப்பனிங்  சீன் , டபுள்  ரோல் , இண்டர்வெல்  பிளாக்  எல்லாமே  கனகச்சிதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  விவசாயிங்க  வாங்கும்  டிராக்டர்  லோனுக்கு  வட்டி  விகிதம் 13% , ஆனா  பணக்காரங்க  வாங்கும்  பென்ஸ்  காருக்கு  வட்டி  விகிதம் 6 % 


2  ஒரு  பிஸ்னெஸ்மேன் க்கு  பிரச்சனைன்னா  அரசியல்வாதிங்க  அவனுக்கு  பணம்  தர  தயாரா  இருக்கறப்ப   அரசியல்வாதிகளுக்கு   ஒரு  பிரச்சனைன்னா  அந்த பிஸ்னெஸ்மேன்  பணம்  தர  மாட்டானா? 


3   என்னை  யாராவது  கோபப்படுத்துனா  டாக்டர்  என்னை  ஒரு  மாத்திரை  சாப்பிடச்சொல்லி  இருக்கார். அந்த  கறுப்பு  மாத்திரையைக்கொடு.  அதே  என்னைக்கோபப்படுத்துனவங்களுக்கு  சிவப்பு  மாத்திரை  கொடுக்க  சொல்லி  இருக்காரு ., அஞ்சு  நிமிசத்துல  வேலை  முடிஞ்சிடும் 


4  ஜெயில்  என்பது  செஞ்ச  தப்புக்கு  தண்டனை  கொடுக்கும்  இடம்  அல்ல, இனி  தப்பே  செய்யாம  வாழ  வழி  சொல்லித்தரும்  இடம்


5  மற்ற  துறைகளில் தப்பு  நடந்தா  அது  ஊழல் , மருத்துவத்துறைல  தப்பு  பண்ணினா  அது  கொலை 


6 இவ்ளோ  பெரிய  ஹைஜாக்  பண்ணிட்டு   ஊபர் ல  போனா  பிடிச்சிட  மாட்டிங்க? அதனால  ஜாபர் ( ஹெலிகாப்டர்)  வேணும்


7 இந்த  ஜெயிலைச்சுத்தி  என்  ஆளுங்க  இருக்காங்க 


 தம்பி , இந்த  ஜெயிலுகுள்ளே  என்  ஆளுங்க  தான்  ஆள்றாங்க 

8  நான்  தானே  உன்னை  சுட்டேன்?


 ஆமா , ஆனா  அப்போ  அவரு  சாகற  மூட்ல  இல்லை 


டேய் , நீ  மூடு 


9  ஒண்ணு , ரெண்டுன்னா  பரவால்லை , அஞ்சு  தடவை சுட்டேனெடா?  ( நீங்களே  உங்களை  கலாய்ச்சுக்கிட்டா  அப்றம்  நாங்க  என்ன  செய்ய ?) 


10   அவங்க  கேட்கற  முறை  தப்பா  இருக்கலாம், ஆனா  கேட்கும்  விஷயம்  நியாயமானது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஓப்பனிங்  சீன்ல   ஹீரோ  உடம்பெல்லாம்  பத்துப்போட்டு   டேமேஜ்  ஆன  பாடியோட  கிடைல  படுத்துக்கிடக்காரு. 100  பேருக்கும்  மேற்பட்ட  ஒரு  க்ரூப்  கைல  மிஷின்  கன் , வாள் , வேல்  உடன்  வர்றாங்க . எல்லாரையும்  தனி  ஆளா  இவரு  வீழ்த்தறாரு . ரேஷன் கடைல  வரிசைல  நின்னு  அரிசி  வாங்கற  மாதிரி  அந்த  அடியாளுங்க  ஒவ்வொருத்தனாதான்  வந்து  அடி  வாங்குவானுங்களா? 10  பேரு  10  பேரு  கொண்ட  க்ரூப்பா  வர  மாட்டானுங்களா? 


2     எங்கேயோ  சுரங்கப்பாதைல  ரயில்  நிக்குது . ஒரே  இருட்டா  இருக்கு . பேக்கு  ஹீரோ   கூலிங்  கிளாஸ்  போட்டுட்டு  ரயிலுக்குள்ளே  சுத்திட்டு  இருக்காரு . பகல்லியே  பசுமாடு  தெரியதாம் , ராத்திரில  கூலிங்  கிளாஸ்  போட்ட  கண்ணுக்கு  எருமை  மாடு  எப்படித்தெரியும்  மொமெண்ட் ?


3     ரூ 40,000  கோடி  ரூபாய்  பணயப்பணம்  தரும்  அளவுக்கு  வசதியாக  இருக்கும்  மல்ட்டி  மில்லியன்ர்  பொண்ணு  ஏன்  சாதா  ரயிலில்  பிரயாணம்  செய்யுது ? 


4  லோன்  ட்யூ  கட்டலைன்னா  மூன்று  முறை  எச்சரிக்கை  செய்வாங்க . அடுத்து  செவன்  டேஸ்  நோட்டீஸ்  அனுப்புவாங்க . அதுக்குப்பின்  தான்  வாகனம்  சீஸ்  செய்யப்படும். இதை  எல்லாம்  ஃபாலோ  பண்ண  மாதிரி  தெரியல


5  டிராக்டரை  சீஸ்  செய்த  அதிகாரி  மீண்டும்  வந்து  அது  அசலுக்கே  சரியாப்போச்சு , வட்டிக்கு  என்ன  செய்ய?னு    கேட்கறாரு /. அப்டி  எல்லாம்  ரூல்சே  இல்லை . சீஸ்  செய்ததுடன்    அந்த  வ்ண்டி  என்ன  விலைக்குப்போகுதோ  அதை  ஏலத்தில்  விட்டுட்டு  மீதி  தொகையை  நட்டக்கணக்கில்  தான்  எழுதனும் 

6   எம் ஜி ஆர் , நம்பியார்   காலத்துல  ஒரு  மருவை  வெச்சு  அடையாளம்  தெரியாம  தவிக்கற  மாதிரி  காட்சி  வைச்சாங்க . நாயகி  தன்  வருங்காலக்கணவன்  தான்  ஹைஜாக்  பார்ட்டி  என்பது  தெரியாமல்  ஃபைட்  போடறார். காரணம்  அவரு  மாஸ்க்  போட்டிருக்காராம். கண்கள்  , உதடுகள்  பார்த்தா  தெரியாதா? 


7  நாயகன்  ஜெயிலர்  ஆவது  ஓக்கே , ஆனால்  அம்மா  இருந்த  /இறந்த  அதே  ஜெயிலுக்கு  ஜெயிலர்  ஆக  வந்தது  எப்படி ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   போர்  அடிக்காத  பொழுதுபோக்கு  அம்சங்கள்  நிறைந்த  வ்ழக்கம்  போல  நமக்குப்பார்த்துபழக்கபட்ட  டெம்ப்ளேட்  ஃபார்முலா  மாஸ்  மசாலா  ஆக்சன்  மூவி . பார்க்கலாம். ரேட்டிங் 2.5 / 5 



Jawan
Theatrical release poster
Directed byAtlee
Screenplay byAtlee
S. Ramanagirivasan
Dialogues bySumit Arora
Story byAtlee
Produced byGauri Khan
Gaurav Verma
StarringShah Rukh Khan
Nayanthara
Vijay Sethupathi
CinematographyG. K. Vishnu
Edited byRuben
Music byAnirudh Ravichander
Production
company
Distributed bysee below
Release date
  • 7 September 2023
Running time
169 minutes (Theatrical release)[1]
170 minutes (Extended version)[2]
CountryIndia
LanguageHindi
Budget₹300 crore (US$38 million)[3]
Box officeest. ₹1,147.96 crore (US$140 million)[4]

Saturday, November 11, 2023

TATSAMA TATBHAVA (2023) - ( THE CONFESSION) கன்னடம் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் ) @ அமேசான் ப்ரைம்

   


   இது  மாறுபட்ட  ஒரு  த்ரில்லர்  மூவி . நடிகை  மேக்னா  ராஜ்க்கு  கம்பேக்  மூவியாக  அமைந்தது. பிரியாமணி  நடித்த  சாரு லதா , வாட்  ஹேப்பண்ட்  டூ  மண்டே , ஆர்  பார்த்திபன்  நடித்த  குடைக்குள்  மழை  ஆகிய  படங்களின்  ரெஃப்ரன்ஸ்  இதில்  உண்டு . மிகக்குறைந்த  பட்ஜெட்டில்  ஆறு  கேரக்டர்களை  மட்டுமே  வைத்து  எழுதப்பட்ட  நல்ல  திரைக்கதை 


   ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஓப்பனிங்  ஷாட்ல  யே  போலீஸ்  ஸ்டேஷன்  போய்  ஒரு  புகார் பதிவு  செய்கிறார். அவரோட  கணவரைக்காணவில்லை . ஆஃபீஸ்  கொலீக்ஸ் ,  சொந்தக்காரங்க , நண்பர்கள்  அனைவருக்கும்  ஃபோன்  செய்து  பார்த்தாகி  விட்டது, நோ  யூஸ் 


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . இவர்  புகார்  கொடுக்க  வரும்  நபர்களின்  உடல் மொழி , கண்  அசைவுகளை  வைத்தே   பல  விஷயங்களை  அப்சர்வ்  பண்ணும்  ஆற்றல்  கொண்டவர் 


இந்த  மிஸ்சிங்  கேஸ்  விசாரணை  நடந்து  கொண்டிருக்கும்போதே  இன்னொரு  புகார்  ஸ்டேஷனுக்கு  வருகிறது . ஒரு  ஆள்  வந்து  நாயகியின்  ட்வின் சிஸ்டரின்  லவ்வர்  நான். என்  ஆளைக்காணவில்லை ., அனேகமா  நாயகி  தான்  கொலை செய்திருக்க  வேண்டும்  என்கிறான்


 இப்போ  நம்  கண்  முன்  இருக்கும்  சாத்தியக்கூறுகள்   1   நாயகியின்  கணவன்  நாயகியின்  ட்வின்  சிஸ்டருடன்  கள்ளத்தொடர்பில்  இருந்ததை  நேரில்  பார்த்த  நாயகி  இருவரையும்  போட்டுத்தள்ளி விட்டாள்  

2 நாயகியின் ட்வின்  சிஸ்டர்  நாயகியையும் , அவள்  கணவனையும்  போட்டுத்தள்ளி  விட்டு  உருவ  ஒற்றுமையைப்பயன்படுத்தி  நாயகி  மாதிரி  நடித்துக்கொண்டிருக்கிறார்


 என்ன  நடந்தது ?  என்பதை  நாயகன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  கண்டு  பிடிப்பதுதான்  மீதி திரைக்கதை 

 நாயகி  ஆக  பிரமாதமான  கேரக்டர்  டிசைன்  செய்யப்பட்ட  பாத்திரத்தில்  மேக்னா ராஜ். கொஞ்சம்  பூசினாற்போல  உடல்  வாகு  இருந்தாலும்  அந்த  கேரக்டருக்கு  அருமையாக  செட்  ஆகிறார். நெகடிவ்  ஷேடு  உள்ள  லேடி  ஹீரோயின்  படங்கள்  பெரும்பாலும்  வெற்றி  தான் . உதா - சந்திரமுகி , பச்சைக்கிளி  முத்துச்சரம் , படையப்பா , மன்னன் 

நாயகன்  ஆக  போலீஸ்  ஆஃபீசர்  ரோலில்  பிரஜ்வால்  தேவராஜ்  மைன்யூட்  ஆக  நோட்  பண்ணும் புத்திசாலி  கேரக்டர். கச்சிதமாக  செய்திருக்கிறார்

வாசுகி  வைபவ்  இசையில்  இரு  பாடல்கள்  ஓக்கே  ரகம், பிஜிஎம்  நல்ல  விறுவிறுப்பு

ரவியின்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  ஓடுமாறு  ட்ரிம்  செய்யப்பட்டிருப்பது  சிறப்பு ஸ்ரீனிவாஸ்  ராமய்யா  வின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  லாங்க்  ஷாட்டிலும்  சரி  க்ளோசப்  ஷாட்களிலும்  சரி  தனி  முத்திரையைப்பதிக்கிறது 

விஷால்  ஆத்ரேயா  என்னும்  புதுமுக  இயக்குநர்  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார். 


சபாஷ்  டைரக்டர் (விஷால்  ஆத்ரேயா ) 


1  வைதேகி  காத்திருந்தாள்  படத்தில்  ரேவதியின்  கணவர்  முகத்தைகக்டைசி  வரை  காட்டாமலேயே  ஆர்  சுந்தர்  ராஜன்  படத்தை  முடித்திருப்பார். அதே  டெக்னிக்கை  இதிலும்  ஃபாலோ  பண்ணி  கொலையான  நாயகியின்  கணவன்  முகத்தைக்கடைசி  வரை  காட்டாமலேயே  படம்  முடிவது  நல்ல  டெக்னிக் 


2   நாம்  யூகித்த  இரு  கோணங்களை  விட்டி  விலகி  வித்தியாசமான  கோணத்தில்  ட்விஸ்ட்டை  முடித்த  விதம்  அருமை 


3   கொலை  செய்த  நபருக்கு  தண்டனை  கிடையாது  என்பதை  உணர்த்தும்  விதமும்  அருமை 


4  நாயகியின்  பெயர்  ஆரிகா , ட்வின் சிஸ்டரின்  பெயர்  அகிரா ( ARIKA - AKIRA) இந்தப்பெயர்களை  ஆங்கிலத்தில்  எழுதிப்பார்த்து  நாயகன்  கண்டு  பிடிக்கும்  ஒரு  ட்விஸ்ட்  அட்டகாசம் 


5 கொலை  செய்யப்பட்ட  நபரின்  கையில்  இருக்கும்  வாட்ச்  குறிப்பிட்ட  டைமில் ஸ்டன்  ஆகி  நிற்பதை  வைத்து  கொலையான  நேரம்  உத்தேசமாக  இதுவாகத்தான்  இருக்கும்  என  கணிப்பதும்   அது  கொலையாளியின்  ட்ரிக்  ட்ராமா  என்பதை  நாயக்ன்  கண்டுபிடிப்பதும்  த்ரிஷய்ம்  டெக்னிக்கை  நினைவுபடுத்தினாலும்  குட்  எக்ஸ்க்யூசன்


6பொதுவாக  ஒரு  நபர்  தன்  துணையைக்கொலை  செய்ய  1  கள்ளக்காதல்  2  வரதட்சணைக்கொடுமை  3   டொமெண்ச்டிக்  வயலன்ஸ்  4  சொத்து  மோசடி  இந்தக்காரண்ங்களாகத்தான் இருக்கும், அவற்றை  விட்டு  விலகி  புதுசாக  ஒரு  ரீசனைக்கண்டுபிடித்த  விதம்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1  குழந்தைகள்  கண்ணாடி  மாதிரி , ஜாக்கிரதையாத்தான்  அவங்களை  கையாளனும்


2  டைரி  எழுதும்  பழக்கம்  அவருக்கு  இல்லை . நல்ல  விஷயங்கள் எப்படியும்  நினைவில்  இருக்கும், கெட்ட  விஷயங்கள் நினைவில்  வைத்திருக்கத்தேவை  இல்லை , அப்றம் எதுக்கு டைரி?


3 சஞ்சய்  என்  மேல  கேஸ்  கொடுத்திருக்கானா? என்  லாயரைக்கூப்பிடனுமா?

 இல்லை .,  அவர்  கேஸ்  ஏதும்  கொடுக்கலை ., அவர்  தான்  கேசே.!  அவர்  கொலை  செய்யப்பட்டிருக்கார் 


4  எந்த  க்ரைம்  எங்கே  எப்போ  நடந்தாலும்  ரெண்டு  விஷயம்  அங்கே  இருக்கும்  1  ஸ்ட்ராங்  மைண்ட்  2  வீக்  மைண்ட்


5 இண்ட்டெலிஜெண்ட்  என்பது  ஃபைட்  பண்றதுல  இல்லை , உண்மையை  ஒத்துக்கொள்வதில்  இருக்கிறது 


6    ஜெய்க்கிறது மட்டும் புத்திசாலித்தனம் இல்லை, எப்போ தோல்விய ஒப்புக்கிட்டு , விட்டு கொடுக்கிறோமோ  அதுவும்  இன்டெலிஜென்ஸ் தான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  மிகப்பெரிய  கம்பெனி  ஓனர்  கள்ளக்காதல்  பார்ட்டியிடம்  உல்லாசமாக  இருக்க  நினைத்தால்   ஹோட்டல் , லாட்ஜ்  போகலாம், அல்லது  தன்  கம்பெனியிலேயே  எல்லோரும்  போன  பின்  அரங்கேற்றலாம் , எல்லா  ஆப்சன்சையும்  விட்டுட்டு  பேக்கு  மாதிரி  காருக்குள்ளே   பப்ளிக்   நோட்  பண்ணும்  இடத்தில்  பெப்பெரப்பேனு  தப்பு  பண்ணி  மாட்டுவாங்களா? 


2   காதலன்  ஸ்டேட்மெண்ட்படி  கிடார்  நன்றாக  வாசித்தால்  அது   காதலி  அகிரா. வாசிக்கத்தெரியவில்லை  எனில்  அது ஆரிகா. உடனே  நாயகியிடம் கிடாரைக்கொடுத்து  வாசிங்க  என  நாயகன்  சொல்வது  அபத்தம் . நாயகி  நினைத்தால்  கிடார்  வாசிக்கத்தெரிந்திருந்தாலும்  தெரியாதவராகக்காட்டலாமே?  அது  எப்படி  ஒர்க்  அவுட்  ஆகும் ?  


3   நாயகி  தான்  தான்  ஆரிகா  என்பதை  நிரூபிக்க  கிடாரை  வாசிக்கத்தெரியாதவர்  மாதிரி  காட்டி  இருந்தாலே  போதுமே? அவர்  ஏன்  வாய்ப்பைப்பயன்படுத்தாமல்  சொதப்புகிறார் ? 


4 கொலை  நடந்த  இடம்  வீட்டின்  பேஸ்மெண்ட் . அந்த  இடத்திற்கு  இருவரும்  ஏன்  போனார்க்ள்?  அது  அதிகம்  புழங்காத  இடம்.  இதற்கு  திரைக்கதையில்  பதில்  இல்லை 

5  அகிராவின்  காதலன்  தன்  காதலியின்  வீடு  எங்கே  இருக்கிறது  என்பதைக்கேட்கவில்லை  ஓக்கே  ஆனால்  ஃபோன்  நெம்பர்  கூடவா  ஷேர்  பண்ணலை ? 


6   நாயகி  ஆகிரா  ஒரு  விபத்தில்  காயம்  ஆன  பின்  இனி  கர்ப்பம்  ஆக  வாய்ப்பில்லை  என  டாக்டர்கள்  கூறி  விட்டனர் . ஆனால்  கர்ப்பம்  ஆகிறார். எப்படி  எனக்கேட்டால்  அது  தெய்வாதீனம்  என்கிறார். கர்ப்பத்துக்குக்காரணம்  ஆகிராவின்  கணவனா? அரிகா வின்  காதலனா? என்பதை  தெளிவாக  சொல்லவில்லை 


7  அரிகாவுக்கும்  , அரிகா  வின்  காதலனுக்கும்  உடல்  ரீதியான  உறவு  நிகழ்ந்ததா? என்பதிலும்  தெளிவான  பதில்  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  த்ரில்லர்  ரசிககர்கள்  அவசியம்  காண  வேண்டிய  படம் . ரேட்டிங்  3 / 5 


Tatsama Tadbhava
Directed byVishal Atreya
Screenplay byVishal Atreya
Story byVishal Atreya
Produced byPannaga Bharana
Spurthi Anil
Chethan Nanjundaiah
StarringPrajwal Devaraj
Meghana Raj
Aravind Iyer
Balaji Manohar
CinematographySrinivas Ramaiah
Edited byRavi Aradhya
Music byVasuki Vaibhav
Production
companies
PB Studios
Anvit Cinemas
Distributed byKRG Studios
Release date
  • 15 September 2023
CountryIndia
LanguageKannada

Friday, November 10, 2023

ரோஜாப்பூ , ஆவாரம்பூ , நெருஞ்சி முள் கசாயம் சர்க்கரை நோயை துரத்துமா?

 ஆவாரை  விளையும்  இடத்தில்  சாவாரைக்கண்டதுண்டா? என  ஒரு  பாடல்  இருக்கிறது . இதன்  மூலம்  ஆவாரம்பூவின்  மகத்துவத்தை  அறியலாம். சர்க்கரை  நோயை  ஓட  ஓட  விரட்டும்  கசாயம்  தயாரிப்பது  எப்படி  என்பதை  இப்போது  பார்ப்போம் 


ரோஜாப்பூ  இதழ்களை பிய்த்து  சேமித்துக்கொள்ள  வேண்டும். ஒரு  கைப்பிடி  அளவு  ஆவாரம்பூ  எடுத்துகொள்ள  வேண்டும், கொஞ்சம்  நெருஞ்சி  முள்ளை  பொடியாக்கி  எடுத்துக்கொள்ளவேண்டும் , இவை  அனைத்தும்  சித்த  வைத்தியக்கடைகளில்  கிடைக்கும்


 ஒரு   பாத்திரத்தில்  தண்ணீரை  ஊற்றி  கொதிக்க  வைக்க  வேண்டும் , அதில்  இந்த  மூன்று  கலவைகளையும்  இட்டு  காய்ச்ச  வேண்டும் ., 10  நிமிடம்  கொதி  வந்த  பின்  அடுப்பை  அணைத்து  ஆற  வைக்க  வேண்டும்  , குடிக்கும்  பதத்துக்கு  வந்ததும்   அந்த  நீரை  வடிகட்டிக்குடிக்கலாம் . காய்ச்சிய  பின்  ரோஜா, ஆவாரம்பூ , நெருஞ்சி  முள்  இந்த  மூன்றின்  சாறும்  தண்ணீரில்  இறங்கி  இருக்கும்


 இதை  காலை  வெறும்  வயிற்றில்  கசாயம்  ஆக , டீ  ஆக  நினைத்துக்குடிக்கலாம் . இதன்  பயன்கள்  எக்கச்சக்கம்

இறுகப்பற்று (2023) தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

      திருமணம் ஆகிப்பிரிந்து  வாழ்பவர்கள் , அல்லது  காதலித்து  பின்  பிரேக்கப்  செய்தவர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  ஒரு  , மெலோ  டிராமா  இது . டீன்  ஏஜ்காரர்களுக்கு  இது  பிடிக்காது . 30+  வயது  ஆனவர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  படம் 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட் . திருமண  ஆலோசகர். மனோவியல்  நிபுணர். திரும்ணம்  ஆகி  பின்  பிரிந்து   வாழும்  தம்பதிகளுக்கு  கவுன்சிலிங்க்  கொடுப்பவர்


இவரைத்தேடி  பலதரப்பட்ட  ஆட்களும்  வந்து  ஆலோசனைகள்   கேட்கும்போது , அவர்களுக்கு  ஐடியா  சொல்லும்போது  இவர்  தன் பர்சனல்  வாழ்க்கையில்  இது  போல் பிரச்சனை  வந்து  விடக்கூடாது  என்று  முன்  ஜாக்கிரதையாக  இருக்கிறார்.  தன்  ரெகுலர்  கஸ்டமர்கள் (!)  செய்த  தப்பை தான்  செய்து  விடக்கூடாது  என   முன்  ஏற்பாடாக  இருக்கிறார். இதனால்  இவர்  வாழ்வில்  சண்டை  சச்சரவு  எதுவும்  இல்லை


 ஆனால்  இவரது  கணவருக்கு  இந்த  ஓவர் புத்திசாலித்தனம் , டிஃபன்ஸ் தனம்  பிடிக்கவில்லை . புருசன்  பொண்டாட்டின்னா  அப்பப்ப  சண்டை  போடனும். சமாதானம்  ஆகனும்.. ஊடல்  பின்  கூடல்  இதில்  தானே  சுவராஸ்யம்?என  எண்ணுபவர் . தன்  மனைவி  எதுக்குமே  ரீ  ஆக்சன்  காட்டாமல்  இருப்பது  பிடிக்கவில்லை  இவருக்கு 


இந்தக்கதையில்  மெயினாக  மொத்தம்  மூன்று  ஜோடிகளின்  பிரச்சனை

ஆராயப்டுகிறது. முதல்  ஜோடி  மேலே  சொன்னது


 அடுத்த  ஜோடி  யில்  நாயகன்  ஒரு  ஐ டி  ஊழியர்.  அவர்  மனைவி  திருமணத்துக்குப்பின்  குண்டாகி  விட்டார்  என  அவருக்கு  வருத்தம். அடிக்கடி  சண்டை  போடுகிறார். ஒரு  நாள்  டைவர்ஸ்  கேட்கிறார்.அவர்  மனைவி  ஜிம்  எல்லாம்  போய்  எடைக்குறைப்புக்கு  முயற்சி  செய்கிறார், ஆனால்  பலன்  இல்லை 


 இன்னொரு  ஜோடி  கணவன்  சொல்வதை  மனைவி  காதில்  போட்டுக்கொள்வதே  இல்லை . இருவரும்  வேலைக்குப்போகிறவர்கள் . கணவனை  விட  மனைவி  புத்திசாலி . ஸ்மார்ட் . அதை  கணவனால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை . அடிக்கடி  மனைவ்யை  நீ  ஒரு  தத்தி  என  திட்டிக்கொண்டே  இருக்கிரார்.  இது  நமக்கு  சரிப்பட்டு  வராது  என  அவர்  டைவர்ஸ்  கேட்கிறார் 


 இந்த  மூன்று  ஜோடிகளும்  எப்படி  கடைசியில்  ஒன்று  சேர்கிறார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 


மெயின்  கதையின்  நாயகன் - நாயகி  ஆக  விக்ரம் பிரபு - ஸ்ரத்தா  நடித்திருக்கிறார்கள் . எல்லாவற்றுக்கும்  ஸ்மைலிங்  ஃபேஸ்  காட்டும்  ஸ்ரத்தா  நன்கு  மனதில்  பதிகிறார். நேர்கொண்ட  பார்வை  யில்  சிடுமுகமாக , சீரியஸ்  ரோல்  செய்தவரை  சிரித்த  முகமாகக்காட்டியதில்  இயக்குநருக்கு  வெற்றி. விக்ரம்  பிரபுவுக்கு  இந்த  ரோல்  புதுசு  . நல்லா  பண்ணி  இருக்கார்


 அடுத்த  ஜோடி  விதார்த் - அபர்ணதி  இருவரும்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்கள் , குறிப்பாக  அபர்ணதி  அசத்தி  இருக்கிறார். அய்யோ  பாவம்ப்பா  என  பரிதாபத்தை  எற்பட்டுத்தும்  கதா  பாத்திரம்,  பாத்திரத்தின்  தன்மை  உணர்ந்து  பிரமாதப்படுத்தி  இருக்கிறார்


 மூன்றாவது  ஜோடி   ஸ்ரீ - சானியா  அய்யப்பன்  இந்த  ஜோடியில்  ஸ்ரீ  முன்னிலையில்  இருக்கிறார் . நல்ல  நடிப்பு  சானியா  கொஞ்சம்  பின்  தங்கினாலும்  சமாளித்து  இருக்கிறார் 


மறைந்த  இயக்குநர்  மனோபாலா  ஒரு  கெஸ்ட்  ரோலில்  வருகிறார். பாந்தமான  நடிப்பு 


இரண்டரை மணி  நேரம்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்  மணிகண்ட  பாலாஜி , இன்னும்  ட்ரிம்   பண்ணி  இருக்கலாம், கோகுல்  பெனாய் ஒளிப்பதிவு  அருமை  ஜஸ்டின்  பிரபாகரன்  இசையில்  நான்கு  பாடல்களுமே  மெலோடி .  ஓக்கே  ரகம், பிஜிஎம்  பக்கா 


மகாராஜ்  தயாளன்  திரைக்கதை  எழுத  யுவராஜ்  தயாளன்  இயக்கி  இருக்கிறார். அண்ணன்  தம்பி  கூட்டணி  போல 



சபாஷ்  டைரக்டர் (யுவராஜ்  தயாளன்) 


1 திருமண  முறிவுக்கு  பெரும்பாலும்  காரணங்களாக  இருப்பது   கள்ளக்காதல், வரதட்சணைக்கொடுமை , , டொமெஸ்டிக்  வயலன்ஸ்  இந்த  மூன்றையும்  காட்டாமல்  மிக  சாதாரண  பிரச்சனைகளைக்கையில்  எடுத்து  தீர்வு  சொன்ன  விதம்


2   அட்வைஸ்  அம்புஜம்  டைரி  படிப்பது  போல  படம்  முழுக்க  ஏகப்பட்ட  வாழ்க்கைத்தத்துவங்க:ள் , அறிவுரைகள் 


3   அபர்ணதியின்  பிரமாதமான  நடிப்பு 


4 வாய்ப்பிருந்தும்  திரைகக்தையில்  கிளாமர்  புகுத்தாமல்  கண்ணியமாகக்காட்சிகளைப்படம்  ஆக்கிய  விதம்


  ரசித்த  வசனங்கள் 


1  கணவன் , மனைவி  இருவரும்  சண்டை  போட  தனியா  காரணம்  எதுவும்  தேவை  இல்லை , கணவன் - மனைவியா  இருப்பதே போதும்.சண்டை  வந்துடும்


2  ஒவ்வொருவரும்  அவங்க  துணையின்  கண்ணைப்பார்த்துப்பேசும்  டைம்  ஒரு  நாளுக்கு  ஜஸ்ட்  அஞ்சு  நிமிசம்  தான். ஆனா  மொபைல்  பார்ப்பது  மூன்றரை  மணி  நேரம் 


3  எப்போக்கோபம்  வந்தாலும்  கண்ணாடி  முன்  நின்னு  பேசு , அப்றம்  என் கிட்டே  வந்து  பேசு 


4  இந்த  சேலை  எனக்கு  எப்படி  இருக்கு ?


 இந்த  சேலைல  எப்பவுமே  நீ அழகாத்தான்  இருப்பே


 இந்த  சேலையை  இப்போதான்  முத  டைமா  கட்றேன் , நீங்க  வாங்கிக்கொடுத்ததுதான் , அது  கூட  நினைவில்லையா?


 ஒரு  ஆளுக்கு  வாங்கிக்கொடுத்தா  நினைவிருக்கும்


 ஓ , அப்படி  எல்லாம்  ஆசை  இருக்கா? 


5  ஒண்ணா  வாழ்ந்தா  சந்தோஷமா  இருக்கனும், டெய்லி  சண்டை  போட்டுக்கிட்டே  இருக்க  ஏன் ஒண்ணா  வாழனும் ? 


6  சாப்ட்டாச்சா?னு  சம்சாரம்  கேட்டா  சமையல்  எப்படி  இருந்துச்சினு அர்த்தம் ? 


7  இந்த  ஆம்பளைங்க  வீட்ல  சாப்பாடு  வேண்டாம்  வெளில  சாப்ட்டுக்கறேன்னா  என்ன  அர்த்தம்  தெரியுமா? வெளீல  ஒரு  கனெக்சன்  வெச்சுக்கப்போறானுகனு  அர்த்தம்


8 நம்ம  வீட்டில்  இருக்கும்  துடைப்பம்  எப்பவும்  அழுக்காதான் இருக்கும், ஆனா  அதுதான்  வீட்டை  சுத்தம்  பண்ணுது  அதே  போல்  நாம  பர்சனல்  லைஃப் ல  எப்படி  இருந்தாலும்  நம்மால  நாலு  பேருக்கு  உதவியா  இருந்தாலே  போதும் 


9  பொறுத்துப்போதல்  அதாவது  அட்ஜஸ்பண்ணி  வாழ்வது  தான்  பெண்கள்  செய்யும்  பெரிய  தவறு 


10  நான்  ஒருவேளை  குண்டாகிட்டா  நீ  என்னை  விட்டுப்போயிடுவியா?


 ஏண்டி , நீ  இப்பவே  குண்டாதானே  இருக்கே?


11  நீ  ஒரு  தத்தி -னு  என்  ஒத்துக்க  மாட்டேங்கறே  தெரியுமா? நீ  தத்தி என்பதையே  உன்னால  உணர  முடியாத  தத்தியா  இருக்கறதாலதான் 


12  பொதுவா  ஆண்களுக்கு  தன்னோட  இணை  தன்னை  விட  ஸ்மார்ட்டா  இருந்தா  பிடிக்காது . அவங்க  மனசுல  தத்தினு  ஃபிக்ஸ்  பண்ண  ட்ரை  பண்ணுவாங்க 


13  இந்தக்குரங்கு  இருக்கே  அதனோட  உடம்புல  ஏதாவது  காயம்  ஆனா  அதை ஆற  விடாது , சும்மா  நோண்டிக்கிட்டே  இருக்கும்


14  கோபம்  நாலு நாளில் போயிடும், ஆனா  வெறுப்பு  வந்தா  வாழ்நாள்  பூரா இருக்கும்


15  இந்த  உலகத்துல  பொண்டாட்டியை  அறிவு கெட்ட  முண்டமேனு  திட்டாத  ஆளே  இல்லை 


16 பேப்பர்ல  ப்ராஃபிட்  காட்றது  ஈசி , அதுக்கு  நிறைய  உழைக்கனும்


17  உறவு  என்பது  கண்ணாடி  மாதிரி  உடைஞ்சா  ஒட்ட வைக்க  முடியாதுனு சொல்வாங்க , ஆனா  உறவு  ரப்பர்பேண்ட்  மாதிரி , ஆளுக்கு  ஒரு  பக்கம்  இழுத்தா அறுந்துடும்


18  சண்டை  வந்தா  அதை சரி  பண்ணி சந்தோசமா  வாழ  ட்ரை  பண்ணனும்


19  ஒருத்தங்களை  விட்டு  விலக  1000  காரணங்கள்  இருக்கலாம், ஆனா  சேர்ந்து  வாழ  ஒரே  ஒரு  காரணம்  போதும், அவங்களைக்கை விட்டுடாதீங்க , இறுகப்பற்றிக்குங்க 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணிப்பெண்  தன்  ஓனரம்மாவிடம்   புருசன்  வீட்டுக்கு  வரும்போது  தலை  நிறைய  மல்லிகைப்பூ  வெச்சு ஒரு  கிக்கா  வரவேற்கனும்னு  சொன்னதும்  அன்னைக்கு  நைட்  அந்த  லேடி  லிப்ஸ்டிக்  போட்டுட்டு  வ்ர்றாங்க . ஆனா  தலைல பூ  இல்லை .  எந்தப்புருசன்  தன்  சொந்த  சம்சாரம்  லிப்ஸ்டிக்  போட்டு  இருப்பதை  விரும்பறான் ? 


2  மனைவி குண்டா  இருப்பதால்  டைவர்ஸ்  வேணும் என  கேட்பதெல்லாம்  கே  பாக்யராஜின்  சின்ன  வீடு  படத்திலெயே  வந்தாச்சு ,புதுசா  யோசிச்சிருக்கலாம் 


3    படத்தில்  3  செட்  ஜோடிக்கும்  ஏதோ  ஒரு பிரச்சனை  என்றதும்  பார்க்க  அலுப்பா  இருக்கு , ஏதோ  ஒரு  ஜோடி  சந்தோசமா  இருக்கற  மாதிரி  காட்டினா  ஆடியன்ஸ்  மனசுல  நாமதான்  சந்தோஷமா  இல்லை , நாம  பார்க்கும்  ப்டத்துலயாவது  ஒரு  ஜோடி  சந்தோஷ்மா  இருக்கேனு  நினைப்பாங்க 


4  விதார்த் - அபர்ணதி  ஜோடி  சேர்ந்தாகனும்  என  ஆடியன்ஸ்  மனதில்  எண்ணம்  ஏற்படுவது  போல  மற்ற  இரண்டு    ஜோடிகள்  மீது  ஏற்படவில்லை  அவங்க   சேர்ந்தா  என்ன? பிரிந்தா  என்ன? என  நினைக்க  வைக்கிறது 

5  க்ளைமாக்சில்  அப்ரணதி  ஜிம்  பொட்டிகளில்  ஜெயிக்கும்போது  விதார்த்  அவரை  ஊக்குவிப்பதாக  காட்டி  இருப்பது  செயற்கை . அது  வரை  மனைவியைக்கரித்துக்கொட்டியவர்  க்ளைமாக்சில்  ஓவர்  ஆக்டிங்  காட்டி  சொதப்பி  விட்டார்


4  என்  கிட்டே  75 பவுன்  நகை  இருக்கு , அதை  வித்தோ  அடமானம்  வைத்தோ  சொந்த  பிஸ்னெஸ்  பண்ணுங்க  என  ஒரு  காட்சியில்  மனைவி  சொல்ல  அடுத்த  காட்சியில்  அந்தக்கணவன்   பேங்க்  மேனேஜரிடம்    ஒரு  லட்ச  ரூபாய்  லோனுக்கு  கெஞ்சிக்கொண்டு  இருக்கிறார்/ 75  பவுன்  நகை  77  லட்ச  ரூபாய்  மதிப்பு  இருக்குமே?  ஏன்  ஒரு  லட்சம்  ரூபாய்க்கு  கெஞ்சனும் ? ஏதோ  எடிட்டிங்  மிஸ்டேக்  போல 


5 பிறந்த  வீட்டு  சீதனமாக  75  பவுன்  நகை  போடப்பட்ட பெண்  மனைவி  ஆக  வந்த  பின்  கணவன்  காலில்  விழுந்து  அழுவது , ரொம்பப்பம்முவது  நம்ப  முடியல .  எகனாமிக்கலி ஸ்ட்ராங்காக  இருக்கும்  வசதியான  பெண்  அப்படி  பம்ம  மாட்டார் . கேரக்டர்  டிசைனில்  சறுக்கல் 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும், பொறுமைசாலி  ஆண்கள்  யாராவது  இருந்தால்  அவர்களுக்கும்  பிடிக்கும் .. ரேட்டிங் 3 /. 5 


Irugapatru
Theatrical release poster
Directed byYuvaraj Dhayalan
Written byMaharaj Dayalan
Produced by
  • S. R. Prakash Babu
  • S. R. Prabhu
  • P. Gopinath
  • Thanga Prabaharan R
Starring
CinematographyGokul Benoy
Edited byJ. V. Manikanda Balaji
Music byJustin Prabhakaran
Production
company
Potential Studios
Release date
  • 6 October 2023
CountryIndia
LanguageTamil