Tuesday, October 17, 2023

மார்க் ஆண்ட்டனி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சய்ன்ஸ் ஃபிக்சன் ஆக்சன் காமெடி கேங்க்ஸ்ட்டர் டிராமா) @ அமேசான் பிரைம்


சயின்ஸ் ஃபிக்சன் + டைம்  டிராவல்  கான்செப்டில் 2015ல்  ஆர்  ரவிக்குமார்  இயக்கத்தில்  வெளியான  இன்று நெற்று நாளை , வெங்கட்  பிரபு  இயக்கத்தில்  2021 ல் வெளியான   மாநாடு  படத்தில்  வரும்  டைம் லூப்  கான்செப்ட்  இரண்டையும்  மிக்சியில்  போட்டு  அரைத்தால்  இக்கதைக்களம்  ரெடி . சாதாரணமான  கேங்க்ஸ்ட்ர்  ரிவஞ்ச்  த்ரில்லரை  இப்படத்தை வேற  லெவலுக்கு  எடுத்துச்சென்ற  அம்சம்  எனில்  அது  ”நியூ”  ஆக்டர்  எஸ்  ஜே  சூர்யா  தான்


ஓவர்  ஆக்டிங்கை  தமிழக  மக்கள்  எப்போதெல்லாம் ரசித்திருக்கிறார்கள் ?  சிவாஜி கணேசனின்  பல  படங்கள் , எம்  ஆர்  ராதாவின்  வில்லத்தனம்  மிக்க  கதாப்பாத்திரங்கள் , கேப்டன்  பிரபாகரன்  மன்சூர்  அலிகான் , புரியாத  புதிர்  ரகுவரன் , கல்கி  பிரகாஷ்  ராஜ் இப்படி  அடுக்கிக்கொண்டே  போகலாம், ஆனால்  காட்சிக்கு  காட்சி  ரசிகர்களின்  கை  தட்டலில்  அரங்கை  அதிர  வைக்கும் எஸ்  ஜே  சூர்யாவுக்கு  டைட்டில்  கார்டில்  நடிப்பு  அரக்கன்  என  மகுடம்  சூட்டியதில்  மிகை  இல்லை 


விஷால்  நடிப்பில்  வெளியான  படங்களில்  100  கோடி  ரூபாய்  வசூலைத்தொட்ட  முதல்  படம்  இது . திரையில்  நாயகன்  டம்மியாகத்தோன்ற  வில்லன்  கைதட்டல்களை  அள்ளிக்கொண்ட  முதல்  படம்  இது 


இயக்குநர்    ஆதிக்  ரவிசந்திரனின்  முதல்  படம்  சி செண்ட்டர்  ரசிகர்களின்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்ற   த்ரிஷா  இல்லைன்னா  நயன்தாரா(2015)  . இரண்டாவது  படம்  சிம்பு  வின்  அன்பானவன் , அசராதவன், அடங்காதவன்  என்ற  டப்பாபடம், 2023 ல்  பிரபுதேவாவின்  நடிப்பில்  உருவான  அட்டர்  ஃபிளாப்  படம்  ஆன  பஹீரா. தொடர்ந்து  இரு  தோல்விப்படங்கள்  கொடுத்தாலும்  மூன்றாவது  பட்த்தில்  முத்தான  முத்திரையைப்பதித்து  ரசிகர்களின்  கவனம்  ஈர்த்திருக்கும்  அவருக்கு  நல்ல  எதிர்காலம்  இருக்கிறது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


1975ல்  கதை  நடக்கிறது 


சம்பவம் 1 -   விஞ்ஞானி  ஒருவர்  கால அலை  ஃபேசியைக்கண்டுபிடிக்கிறார். அதன்படி  அந்த  அலைபேசி  மூலம்  கடந்த  காலத்தில்  இருப்பவர்களுடன்  பேச  முடியும். சில  மரணங்களை  , துக்க  சம்பவங்களை  தடுக்க  முடியும்


சம்பவம் 2 


நாயகன்  ஆண்ட்டனி யும்  வில்லன்  ஜாக்கி  பாண்டியனும்  நண்பர்கள் , மற்றும்  கேங்க்ஸ்டர்கள் . இருவருக்கும்  பொது  எதிரி  இருக்கிறான், பெயர்  ஏகாம்பரம். ஏகாம்பரத்தின்  தம்பியை  நாயகன்  போட்டுத்தள்ளியதால்  அவன்  ஸ்கெட்ச்  போட்டு  நாயகனை  கொலை  செய்து  விடுகிறான். நாயகனின்  மகனை  வில்லன்  எடுத்து  வளர்க்கிறான்


 சம்பவம் 3  =  கதை 1995க்கு  வருகிற்து   நாயகன்  மார்க்  ஒரு  மெக்கானிக். தன்  அப்பாவின்  மேல் அவருக்கு  வெறுப்பு , காரணம்  தன்  அம்மாவைக்கொன்றது  தன்  அப்பாதான்  என  நம்புகிறார்.  வில்லன்   ஜாக்கி  பாண்டியனின்  மகனான  மதன்  உடன்  நாயகனுக்கு  நட்பு  இருக்கிறது 


சம்பவம் 4  -  அந்த  அலைபேசி  மூலம்  நாயகனுக்கு  கடந்த  காலத்தில்  சிலருடன்  பேசியதில்  தன்  அப்பா  நல்லவர்  என்ற  உண்மை  தெரிய  வருகிறது . தன்  அம்மா, அப்பா  இருவரையும்  கொன்றவர்  வில்லனான ஜாக்கி  பாண்டிய்ன்  என்ற  உண்மை  உணர்ந்து  கடந்த  காலத்தில்  நிகழ்ந்த   சம்பவமான  அப்பாவின்  இறப்பை மாற்ற  நினைக்கிறார்.  வில்லன்கள்  ஆன  ஜாக்கி  பாண்டியன் , மதன்  இருவரும்  அதை  எப்படி  எதிர்  கொண்டார்கள்  என்பது  மீதிக்கதை 


  படிப்பதற்கு  கொஞ்சம்  தலை  சுற்ற  வைக்கும்  ஒன்  லைன்  ஆக  இருந்தாலும்  திரையில்  மிகத்தெளிவாக  சாமான்யனுக்கும்  புரியும்  வகையில்  காட்சிகளை  அமைத்த  இயக்குநருக்கு  ஒரு  சபாஷ் 


வில்லன்  ஆக  அப்பா , மகன்  என  இரு  வேடங்களில்  நடித்த  எஸ்  ஜே  சூர்யா  தான்  மேன்  ஆஃப்  த  மேட்ச் . கேப்டன்  ஆஃப்  த  ஷிப்  எல்லாமே . கலக்கி  விட்டார்  நடிப்பில்  அவரது  உடல்  மொழி  அபாரம். நாயகன்  உடன்  டான்ஸ்  ஆடும்  காட்சியில்  மட்டும்  தடுமாறுகிறார். மற்ற  அனைத்துக்காட்சிகளிலும்  நாயகனை அசால்ட்  ஆக  ஓவர்  டேக்  செய்திருக்கிறார்


நாயகன்  ஆக  விஷால்  அப்பா , மகன்  என  இரு  வேடங்களில்  நடித்திருக்கிறார். அப்பா  கேங்க்ஸ்ட்ர  ரோலில்  கட்டைக்குரலிலும், மகன்  மெக்கானிக்  ரோலில்  பயந்த  சுபாவம்  உள்ள  சாமான்யன்  ஆகவும் கச்சிதமாக  நடித்திருக்கிறார். ஆனால்  எஸ்  ஜே  சூர்யாவுடனான  காம்பினேஷன்  ஷாட்களில்  எல்லாம்  அவர்  நடிப்பு  எடுபடவில்லை 


கலைஞர்  மேடையில்  பேசிக்கொண்டு  இருந்தபோது  லேட்டாக  மீட்டிங்க்கு  எம் ஜிஆர்  வந்தபோது  ரசிகர்கள் , தொண்டர்கள்  கூட்டம்  ஆர்ப்பரிக்க  தன் பேச்சு  எடுபடாதது  கண்டு  மனம்  வெதும்பி  கலைஞர்   மேடையில்  போய்  அமர்ந்து  விட்டாராம், அந்த சம்பவம்  தான்  நினைவு  வருகிறது 


நாயகி  ஆக  ரிது  வர்மா  அதிக  வேலை  இல்லை  என்றாலும்   வந்த  வரை  ஓக்கே  ரகம் 


ஏகாமப்ரம்  ஆக  சுனில்  நடிப்பு  கச்சிதம் . விஞ்ஞானி  ஆக  இயக்குநர்  செல்வராகவன்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார் 


சில்க்  ஆக  விஷ்ணு பிரியா  காந்தி  ஒரு  காட்சியில்  வந்தாலும்  ரசிகர்கள்  அப்ளாஸ்  அள்ளுகிறார். வக்கீல்  ஆக  நிழல்கள்  ரவி , காமெடிக்கு  கிங்க்ஸ்லீ  வருகிறார்


151  நிமிடங்கள்    படம்  ஓடும்படி  ட்ரிம்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்  விஜய்  வேலுக்குட்டி . சவாலான  வேலை 


ஜி வி  பி  யின்  இசையில்  பழைய  ஹிட்  பாடல்களை  ரீ  மிக்ஸ்  செய்த  விதம்  அருமை  ., பிஜிஎம்  மில்  தெறிக்கிறது 


அபிநந்தன்  ராமானுஜம்  ஒளிப்பதிவில்  கவனிக்க  வைக்கிறார்/  ஆர்ட்  டைரக்சன்  கச்சிதம் 


சபாஷ்  டைரக்டர்  (ஆதிக்  ரவிசந்திரனின்)


1  நீங்க  இவ்ளோ  பேசறீங்க , ஆனா  உங்க  ஃபிரண்ட்  எதுவுமெ  பேசாம  இருக்காரெ?  என  சில்க்  கேட்க அவன்  பெண்களை  மதிப்பவன்  என  விஷால்  சொல்ல  எஸ்  ஜே  சூர்யா  கற்பனையில்   அடியே  மனம்  நில்லுன்னா  நிக்காதடி  பாட்டுக்கு  ஆடும்  காட்சி  அடிபொலியான  கூஸ்பம்ப்  காட்சி 


2  சில்க்  ஸ்மிதாவை  ரீ  க்ரியேட்  பண்ணி  அதே  முகச்சாயலில்  இருப்பவரை  நடிக்க  வைத்தது , அந்த  சீன்  ப்ளேஸ்  செய்யப்பட்ட  இடம்  அருமை


  ரசித்த  வசனங்கள் 


1   நீ  என்  ஆளை  லவ்  பண்றேன்னு  முதல்லியே  தெரிஞ்சிருந்தா  கிஸ்  பண்ணி  இருக்க  மாட்டேன் ...


 என்னடா.. முதல்லியே  தெரிஞ்சிருந்தா  ...தெரிஞ்சிருந்தா  

... நு  சொல்லிச்சொல்லி  இப்படி  தெறிக்க  விட்டிருக்கே? 


2  அமராவதி  பட  ஹீரோ  பேரு  என்ன?


ம் ம்  அஜித்  குமார் 

 இப்போ  நீ  யோசிச்சு  யோசிச்சு  சொல்ற  பேரை  நாளை  உலகம்  யோசிக்காம  சொல்லப்போகுது 


3  அண்ணே, நம்மைப்போட்டுத்தள்ள 40  பேர்  துப்பாக்கியோட  வந்திருக்காங்க 


 நம்மகிட்டே எத்தனை  பேருடா  இருக்காங்க ?


 ரெண்டு வெள்ளைக்கரிங்களும் நாலு  கிட்டார்  பாக்சும் 


4 உயிரோட  இருக்கனும்னு  ஆசைப்படறவன்  என்னை   நேரில்  வந்து  பார்க்க  மாட்டான், ஏன்னா  என்னை  நேரில்  பார்த்தா  அவன்  உயிரோடயே  இருக்க  மாட்டான் 


5  அவன்  ஒளிவிளக்குன்னா  நான்  பச்சை  விளக்கு 

அவன்  தெய்வத்தாய்னா  நான்  தெய்வ  மகன் 

அவன் தனிப்பிறவின்னா  நான்  தெய்வப்பிறவி 

அவன்  அரச கட்டளைன்னா  நான்  ஆண்டவன்  கட்டளை


6  நான்  தான்  உன்  அன்பே  ஆருயிரே. என்  கண்ணுக்குக்கீழே  நீ  எப்பவும்  பார்த்ததில்லை 


நான்  என்னைக்கு   உன்  கண்ணைப்பார்த்தேன் ? எத்தனை  தடவை  உன்  இடுப்பைப்பார்த்து  குஷி  ஆகி  இருக்கேன் ? 

7   எல்லாரும்  பொணத்துக்கு  முன்னாடி  தான்  ஆடுவாங்க, ஆனா  ஆண்ட்டனி  ஒருத்தன்  முன்னால  ஆடறான்னா  அந்த ஒருத்தன்    பொணம்  ஆகப்போறான்னு  அர்த்தம் 


8  நான்  உங்க  விசுவாசி, என்னைக்கொல்லாதீங்க 


 என் ப்ல்லாவே  இருந்தாலும்  அது  சொத்தையா  இருந்தா  பிடுங்கி  தானே  ஆகனும் ?


9 எதுக்காக  அவனைக்கொன்னே?


 லேடீஸ்  மேட்டர் 


 என்னது  லேடீஸ்  மேட்டரா?  கேங்க்ஸ்டர்னா  ஒரு  டிசிப்ளீன்  வேணும், எத்தனை  லேடீஸ்  எனக்கு  பிரப்போஸ்  பண்ணி  இருப்பாங்க 


10  அவனுக்கு  என்னடா  தெரியும் சில்க்கோட  அருமை , ? சான்சை  விட்டுடாதடா  எருமை 


11  நான்  விழவும்  மாட்டேன் , விடவும் மாட்டேன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  விபத்தில்  காலை  இழந்த  மனைவியின்  காலை  சரி  செய்ய  கடந்த  காலத்துக்குப்போய் தன்னிடமே  பேசி  சரி  செய்து  விபத்து நடக்காமல்  தடுக்கும்  செல்வராகவன்  தனக்கு  நேர்ந்த  விபத்தை  அதே  ஐடியா  படி  தடுக்க  முடியாதது  ஏன்? யார்  பேசறது  என  கேட்கும்போது  பேர்  சொல்லாமல்  உன்னோட  ஃபியூச்சர்  தான்னு  சொல்லி  இருக்கலாமே? சயிண்ட்டிஸ்ட்க்குப்புரியாதா? 


2  தன்  அப்பாவைப்பற்றி  தகவல்   சேகரிக்க  பல  குறளீ  வித்தைகள்  எல்லாம்  செய்யும்  நாயகன்  தன்  அம்மாவுக்கு  ஃபோன்  செய்து  அப்பாவைப்பற்றிகேட்டிருந்தால்  அவரே  விளக்கமாக  எல்லாம்  சொல்லி  இருப்பாரே? 


3  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  வக்கீலுக்கு  ஃபோன்  பண்ணி  அவர்  உயிரைக்காப்பாற்றும்  நாயகன்  கடந்த  கால  அம்மாவுக்கு  ஃபோன்  பண்ணி  அவர்  உயிரை  ஏன்  காப்பாற்றவில்லை ? 


4    வில்லன்  ஆன எஸ்  ஜே  சூர்யா  நாயகன்  ஆன  விஷாலை  தன்னுடன் ஒப்பீடு  செய்யும்போது  தன்னை  சிவாஜி  ஆகவும் , நாயகனை  எம் ஜி ஆர்  ஆகவும்  உருவகப்படுத்தி  சினிமா  டைட்டில்களால்  எம் ஜி ஆர்   VS   சிவாஜி  என  காட்டுகிறார். அதன்படி  வில்லன்  நடிப்பு  சிவாஜி  போல்  ஓவர் ஆக்டிங்க்  டைப்பில்  வில்லன்  கேரக்டர்  டிசைனை  வடிவமைத்த  இயக்குநர்   அதே  போல் நாயகனை  எம் ஜி ஆர்  போல்  இமிடேட்  செய்ய  வைத்திருக்க  வேண்டாமா? 


5  டபுள்  டெக்கர்  பஸ்சில்  நாயகனும், வில்லனும்  பயணிக்கும்போது  துரத்தும்  3  ஜீப்  நிறைய  ஆட்கள்  லூஸ்கள்  மாதிரி  சிரமப்ப்ட்டு  பஸ் சை  துரத்திட்டு  இருக்கும்  நேரம் பஸ்  டிரைவரை  அட்டாக்  பண்ணி  இருக்கலாமே? பஸ்  ஒரு  இடத்தில்  நிற்கும், பெட்ரோல்  செலவு  இரு  தரப்புக்கும்  மிச்சம்  ஆகும் 


6  ஒய் ஜி  மகேந்திரனின்  கேரக்டர்  டிசைன் , பெண்  தன்மை  நளினத்துடன்  அவரது  உடல்  மொழி  இதெல்லாம்  சகிக்க வில்லை , கேவலமான  கற்பனை . இதை  எல்லாம்  யார்  ரசிக்கிறார்கள் ?? 


7  அப்பா  எஸ் ஜே  சூர்யா  சிவாஜி  பட  டைட்டிலாக  சொன்னவர்  ஒரு  கட்டத்தில்  நினைத்ததை  முடிப்பவன்  என  எம் ஜி ஆர்  டைட்டிலை  யூஸ்  பண்ணுவது  எதற்கு ? அதே  அர்த்தம்  வரும்படி   சிவாஜி  நெகட்டிவ்  ரோலில் நடித்த  அந்த  நாள்  அலல்து  சிவந்த  மண்   டைட்டிலை  யூஸ்  செய்திருக்கலாமே? 


8 சிவாஜி  படத்தில்  மொட்டை  பாஸ்  ஆக  ரஜினி  வரும்போது  தியேட்டரில்  விசில்  பறக்கும், ஆனால்  இதில்  நாயகன்  விஷால்  க்ளைமாக்சில்  மொட்டை  கெட்டப்பில்  வரும்போது  ரசிகர்களுக்கு  உற்சாகமாகவே  இல்லை . வில்லன்  எஸ்  ஜே  சூர்யா  தான்   ஜெயிக்க  வேண்டும்  என  எண்ணுகிறார்கள் ., இது  எஸ்  ஜே  சூர்யாவின்  நடிப்புக்குக்கிடைத்த  வெற்றி  என்றாலும்  திரைக்கதை  அமைப்புக்குக்கிடைத்த  தோல்வியே 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தியேட்ட்ரில்  ரசிகர்களுடன்  அமர்ந்து  பார்க்க வேண்டிய  படம், டோண்ட்  மிஸ்  இட்  , ரேட்டிங்  3 /. 5 


Mark Antony
Theatrical release poster
Directed byAdhik Ravichandran
Written byAdhik Ravichandran
S. J. Arjun
R. Savari Muthu
Produced byS. Vinod Kumar
StarringVishal
S. J. Suryah
Narrated byKarthi
CinematographyAbinandhan Ramanujam
Edited byVijay Velukutty
Music byG. V. Prakash Kumar
Production
company
Mini Studio
Distributed byAyngaran International
Release date
  • 15 September 2023
Running time
151 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box officeest.100 crore (US$13 million)[2]

Monday, October 16, 2023

KASARGOLD (2023) - மலையாளம் , காசர்கோல்டு - தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் த்ரில்லர்) @ நெட்ஃபிளிக்ஸ்


 படவெட்டு , காப்பா  போன்ற  அதிரடிப்படங்களை  எடுத்த  தயாரிப்பாளரின்  மூன்றாவது  படம்  இது . இயக்குநர் மிருதுள் நாயர் + அசீஃப் அலி  காம்போவில்   பி  டெக் (2018)  படத்துக்குப்பின்  வரும்  இரண்டாம்  படம்  இது . தள்ளுமாலா  படத்தின்  பாதிப்பில்  படம்  முழுக்க  சேசிங்  ஆக்சன்  சீக்வன்ஸ்  நிரம்பிய  இப்படம்  2023  செப்டம்பர் 15ல்  தியேட்டர்க்ளில் ரிலீஸ்  ஆகி  இப்போது  அக்டோபர் 13  முதல்  ஓ டி டி  நெட்ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  ஃபாரீனில் இருந்து  இந்தியா  வரும்போது  ஒரு  கடத்தல்  கும்பல்  அவரிடம்  ஒரு  பேக்கைக்கொடுத்து  இந்தியாவில்  குறிப்பிட்ட  ஆளிடம்  இதை  சேர்க்க  வேண்டும்  என வேண்டுகோள்  விடுத்ததை  அடுத்து  அவர்  இந்தியா  வந்ததும் அந்த   கும்பலில்  ஒரு  ஆள்  டபுள்  கிராஸ் பண்ணி  பேக்கை  அபேஸ்  பண்ண  இப்போது  நாயகனின்  அப்பா  அந்த  80  லட்ச  ரூபாய்க்கு  பதில்  சொல்ல  வேண்டியவர்  ஆகிறார். இதனால்  மனம்  வெறூத்த  அவர்  தற்கொலை  செய்து  கொள்கிறார்


அந்த  கடத்தல்  கும்பலில்  இருக்கும்  ஒரு  ஆள்  நாயகன்  மீது  பரிதாபபட்டு  அவனை  நண்பன்  ஆக்கிக்கொண்டு  தன்  திட்டத்தைக்கூறுகின்றான், அதன்படி  அதே  கும்பல்  கடத்தும்  இன்னொரு  சரக்கை  நாடகம்  போட்டு  நாம்  அபேஸ்  செய்து  விடலாம்  என்கிறான். அதன்படி   விமான  நிலையத்தில் இருந்து  கடத்திய  சரக்கை  நாயகனின்  நண்பன்  தன்  காதலியுடன்  காரில்  வர   அப்போது  நாயகன்  அந்த  கார்  மீது  மோதி  இருவருக்கும்  ஃபைட்  நடப்பது  போல்  செட்ட்ப  டிராமா  போட்டு  சரக்கைக் கைமாற்றி  எஸ்  ஆகின்றனர் 


சரக்கைப்பறி  கொடுத்த  அரசியல்வாதி வில்லனான  போலீஸ்  ஆஃபீசர்  உதவியுடன்  அந்த  சரக்கைக்கைப்பற்ற முயற்சிக்கின்றனர் .இதற்குப்பின்  நடக்கும்  அதிரடி  ஆக்சன்கள் தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக சன்னி வெய்ன்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வ்ழங்கி  உள்ளார் .  எங்கே  எப்போது  ஒரு  சின்னக்குழந்தையைக்கண்டாலும்  உடனே  தன்  குழந்தை  நினைவு  வ்ந்து   ஃபோன்  போட்டுப்பேசுவது  உருக்கம், அப்பாவின்  அநியாய  மரணத்துக்குக்கலங்குவது , நண்பனுடன்  அடிக்கடி  வாக்குவாதம்  செய்வ்து   என  கச்சிதமாக  நடித்துள்ளார் 


 இன்னொரு  நாயகன்  ஆக  ஆசிஃப்  அலி  ஸ்டைலிஷான  நடிப்பை  வழங்கி  உள்ளார் . அதிரடி  ஆக்சன்  காட்சிகளில்  துடிப்பான  நடிப்பை  கொடுத்துள்ளார் 


வில்லன்  ஆக  வினாயக்  கொடூரமான  நடிப்பை வழங்கி  உள்ளார், அவர்து  தெனாவெட்டான  உடல்மொழி  அருமை


அரசியல்வாதியாக  சித்திக்  அலட்டல்  இல்லாத  நடிப்பு 

இரு  நாயகர்களுக்கும்  ஜோடியாக ஸ்ரீரஞ்சனி  நாயர் , மாளவிகா  ஸ்ரீநாத்  இருவரும்  நடித்துள்ளனர் , ரேஸ்  குதிரை  மாதிரி  இருவருமே  அசாத்தியமான  உயரம் 


137  நிமிடங்கள்  படம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் மனோஜ்  கன்னோத் . விஷ்ணு  விஜய்நிரஞ்ச்  சுரேஷ்  இருவரும்  இசை . பாடல்  ஓக்கே , பிஜிஎம்   ப்ரபரப்பான  காட்சிகளில்  இன்னும்  வேகம்  தேவை 


ஜெபின்  ஜேக்கப்  ஒளிப்பதிவில்  லாங்க்  ஷாட் , ஏரியல்  ஷாட் , ஆக்சன்  சீக்வன்ஸ்  அனைத்தையும்  திறம்பட  படம்  படித்திருக்கிறார். 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மிருதுள் நாயர் . விறுவிறுப்பான  கதையை பர்  பரப்பான திரைக்கதையால்  காட்சிகளை  வெகு  வேகமாக  நகர்த்திச்செல்கிறார்


சபாஷ்  டைரக்டர் (மிருதுள் நாயர் ) 


1   ஓப்பனிங்  ஷாட்டில்  வரும்  கார்  ஆக்சிடெண்ட்  சீன்  டிராமா  தான்  செட்டப்  தான்  என்பதை  ஓப்பன்  செய்யும்  விதம்  செம  ட்விஸ்ட் 


2   நாயகர்கள்  இருவருக்குமான  நட்பு  , அந்த  பாண்டிங்  உருவான  விதம்  குறித்த  ஃபிளாஸ்பேக்  காட்சி 


3  நாயகர்கள்  இருவருக்குமான  ஃபேமிலி செண்ட்டிமெண்ட்  காட்சிகள் 


  ரசித்த  வசனங்கள் 


1  நம்ம  தொகுதிக்கு  ஒரு  பெண் எம் எல் ஏ  வந்தா  அது  நமக்குப்பெருமை  தானே?


 அப்போ  ஆம்பளை  வந்தா  பெருமைஇல்லையா?  


2  மாணவர்கள்  நல்ல  பிள்ளைகளா  இருந்தா  பெற்றோர்  சாகும்  வரை  ச்ந்தோஷமா  இருப்பாங்க 


3  என்  பேரைக்கேட்டா  ஒரு  நாய்  கூட  குலைக்காது 


 இங்கே  நரி தான்  பிரச்சனை 


புலி  கூட  ஒண்ணும்  புடுங்க  முடியாது 


4  ரெண்டரைக்கோடி  தங்கம்  போனதைப்பற்றிக்கவலை இல்லை , அது  ஒரு பெரிய  மேட்டரும்  இல்லை , ஆனா  கூட  இருக்கும்  அடியாளுங்க  எல்லாருக்கும்  இதே  ஐடியா  தோணுச்சுன்னா  நாம  தொழில்  பண்ண  முடியாது 


5   எந்த  செட்  ஃபிரண்ட்ஸ்  கேங்கை  எடுத்தாலும்  ரெண்டு  பக்கமும்  கிண்டல்  பண்ற  ஒருத்தன்  நிச்சயமா  இருப்பான்


6 தங்கத்தோட  ஒளி  இருக்கே? அந்தக்கலர்ல  தான்  பொண்ணுங்க  விழுந்துடறாங்க 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பொதுவாக  கிரிமினல்கள்  யூஸ்டு  சிம்  கார்டை  டிஸ்போஸ்  செய்யும்போது  எரேஸ்  பண்ணி  அதாவது  நசுக்கி , அழித்து  பின்  தான்  தூக்கி  எறிவார்கள் 

2  தங்கக்கட்த்தல்காரர்களை  தேடும்  போலீஸ்  சாலையில்  போலிஸ்  யூனிஃபார்மில்   பைக்கில் வரும் இருவரிடம்  ஐ டி  கார்டு  கேட்கவே  இல்லையே? யூனிஃபார்மை பார்த்தா  நம்பிடறதா? 

3  ஆக்சன்  மசாலா  படங்களில்  கேர்க்டர்கள்  தம்  அடிப்பது , தண்ணி  அடிப்பது , மிக்சிங்  பண்ணுவது  இதை  எல்லாம்  கட்  பண்ணாலே  அரை  மணி  நேரம்  டைம்  மிச்சம்  ஆகும்  போல .

4 தங்க  கடத்தல்  காரனின்  ஃபோட்டோ  கிடைத்ததும்   போலீஸ் ஆஃபீசர்    வினாயக்  அந்த  ஃபோட்டோவை  வாட்சப்  மூலம்  செக் போஸ்ட்  ஆஃபீசர்சுக்கு  அனுப்பி  இருக்கலாமே? எதுக்கு லூஸ்  மாதிரி  காரில்  செக் போஸ்ட்  டைரக்டா  போய்  இவன் தான்  அந்த  கடத்தல்காரன், கிடைச்சானா?னு  கேட்டுட்டு  இருக்கார் ? 

5  கடத்தல்  காரனை  ஃபாலோ  பண்ணி  வந்த  ஆட்கள்  லாட்ஜூக்குள்  போவதற்கு  முன்  அந்த  பைக்கை  பஞ்சர்  பண்ணி விட்டுப்போய்  இருந்தால்  தப்பிச்சிருக்க  மாட்டானே? அந்த  ஐடியா  கூடவா  தெரியாது ? 

6  கடத்தல்  காரன்  ஒரு  பிஸ்கெட்டை  மட்டும்  விற்று  விட்டு  தன்  இருப்பிடம்  திரும்பும்போது  யாராவது  ஃபாலோ  பண்றாங்களா?னு  செக்  பண்ண  மாட்டானா? டைரக்டா  லாட்ஜூக்கு  யாராவது  வருவாங்களா? 

7 கடத்தல்  காரனின்  காதலி  வீட்டுக்கு  வரும்  அடியாட்கள்  அவளை  மிரட்டுகிறார்கள் . அவள்  அவங்க  வீட்டு  நாயை  அவிழ்த்து  விடுகிறாள் , அந்த  நாயைக்கண்டதும்  இந்த  நாய்கள்  எல்லாம்  தெறிச்சு ஓடறானுங்க . இதுக்கெல்லாம் பிரிப்பேராக  வர  மாட்டானுங்களா?   


8  க்ளைமாக்ஸ்  ஃபைட்டில்  நாயகன்  ரெண்டு  பேரை  கோடாலியால்  வெட்டிக்கொன்ற  பின்  ஒரு  புது ஆள்  டேய்  வாடா  என  ஆக்ரோஷமாக  அழைக்கிறான். நாயகன்  அதே  கோடாலியால்  அவனைப்போட்டுத்தள்ளாம  அந்தக்கோடாலியை தூக்கி  வீசிட்டு  அவன்  கூட  ஃபைட்  பண்ணிட்டு  இருக்காப்டி. 

9  க்ளைமாக்சில்  நாயகர்கள்  இருவரும்  அஞ்சு பேர்  கூட  அதகள  ஃபைட்  எல்லாம் போட்டு  அஞ்சு  கொலை செஞ்சு ஆறடி  ஆழ  குழி  தோண்டி  அந்த  டெட்  பாடிகளைப்புதைக்கும்  வரை  அக்கம், பக்கம்  இருப்பவர்கள்  யாரும்  கண்டுக்கவே இல்லை 

10  வில்லன்  ஆன  வினாயக் நாயகர்கள்  இருவரையும்  துப்பாக்கி  முனையில்  மிரட்டி  விட்டுநான்   நினைச்சா  உங்களைப்போட்டுத்தள்ளலாம், ஆனா  சின்னப்பசங்களா  இருக்கீங்க , பொழைச்சுப்போங்க  என  உயிர்ப்பிச்சை  கொடுப்பது  எதற்கு? க்ளைமாக்ஸ்ல  இன்னொரு  ஃபைட்  சீக்வன்ஸ்  வைக்கவா? 

11  க்ளைமாக்ஸில்  நாயகர்கள்  இருவரும்  நிராயுதபாணிகளாக  நிற்க  எதிரே  வில்லன்  வினாயக்  கையில்  துப்பாக்கி. அவர்  ஒரு  நாயகனை  மூன்று  தடவை  சுட்டு  விட்டு  அடுத்த  நாயகனுக்குக்குறிபார்க்கும்போது  அவன் வில்லன்  மேல் பாய்கிறான்/ இருவருக்கும்  தலா  ஒரு  குண்டு  என  மாறி  மாறி  சுட்டிருந்தால்  எளிதில்  வீழ்த்தி  இருக்கலாமே? 


12  சஸ்பென்சனில்  இருக்கும்  போலீஸ்  ஆஃபீசர்  வினாயக்கின்  ஆர்டர்களை  அஃபிஷியலாக  மற்ற  போலீஸ்காரர்கள்  ஃபாலோ  செய்வது  எப்படி ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ/ஏ . காட்சிகளில்  18+ இல்லை , வன்முறை , வெட்டு , குத்து  உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன் , சேசிங்  பிரியர்கள்  தாராளமாகப்பார்க்கலாம். விறுவிறுப்பான  த்ரில்லர்  படம் , ரேட்டிங் 3 . 5 


Kasargold
Theatrical release poster
Directed byMridul Nair
Written by
  • Mridul Nair
  • Sajimon Prabhakar
Produced by
  • Vikram Mehra
  • Siddharth Anand Kumar
  • Suraj Kumar
  • Rinny Divakar
Starring
CinematographyJebin Jacob
Edited byManoj Kannoth
Music byScore:
Vishnu Vijay
Production
companies
Release date
  • 15 September 2023[1]
Running time
137 minutes[2]
CountryIndia
LanguageMalayalam
Box officeest. 2.10 crore[3]

Saturday, October 14, 2023

DD RETURNS (2023)- தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி ஹாரர் ) @ஜீ 5

   


    கவுண்டமணி , வடிவேலு , சந்தானம்  மூவருக்கும்  ஒரு  ஒற்றுமை  உண்டு. மூவருமே  புகழின்  உச்சத்தில்  ஒரு  நாள்  ஷூட்டிங்க்கு  10 லட்சம்  ரூபாய்  சம்பளம்  வாங்கியவர்கள் . நாயகன்  ஆன பின் பெரிய அளவில்  மார்க்கெட்  இல்லை . சந்தானம்  நடித்த  படங்களிலேயே  அதிக  வசூல்  தில்லுக்கு துட்டு  தான். அந்த  வரிசையில்  இந்தப்படம் 43  கோடி  ரூபாய்  வசூல்  செய்து  சாதனை  செய்துள்ளது . திரைக்கதை  தான்  பிளஸ்.


    ஸ்பாய்லர்  அலெர்ட்


இடைவேளைக்கு  முன்  இடைவேளைக்குப்பின்  என  இரு  பிரிவாக  திரைக்கதையைப்பிரிக்கலாம்


ஒரு  பங்களா. அதில் கணவன், மனைவி , மகள் , பாட்டி  என  வசிக்கிறார்கள் . அவர்கள் கேம்  ஷோ  மாதிரி  ஒன்றை  நடத்துகிறார்கள் . எண்ட்ரன்ஸ்  ஃபீஸ்  ஆக  எவ்வளவு  கட்டுகிறார்களோ  அதைப்போல்  இரு  மடங்கு  பரிசு  என  அறிவிக்கிறார்கள் . மக்கள்  இதை  நம்பிப்போய்  உயிர்  இழந்தது தான்  மிச்சம்., யாரும்  ஜெயிக்கவில்லை . இதனால்  மக்கள்  கொதித்து  அந்த  பங்களாவை  தீ  வைத்துக்கொளுத்தி  விடுகிறார்கள் . அனைவரும்  இறந்து  விடுகிறார்கள் . பேய்  ஆக  மாறிய  பின்  ஜென்மக்கூறு  செருப்பில்  அடித்தாலும்  போகாது  என்பது  போல  அதே  கேம்  ஷோ  நடத்துகிறார்கள். அந்த  கேம்  ஷோ  வில்  நாயகன்  அண்ட்  வில்லன்  டீம்  எப்படி  மாட்டி  தப்பிக்கிறார்கள்  என்பதே  மீதிதிரைக்கதை 


இந்த  கேம்  ஷோ  தான்  திரைக்கதையின்  மெயின்  என்றாலும்  கிளைக்கதையாய்  முதல்  பாதியில்  வரும்  கதை   மெயின்  கதையை  விட  நல்ல  காமெடி 


நாயகன்  ஆக  சந்தானம். அவர்  ஏன்  முகத்தை  எப்போதும்  விரைப்பாக வைத்துக்கொள்கிறார்  என்று  தெரியவில்லை ., அவரது  பிளஸ்  பாயிண்ட்டே  யதார்த்த,மான  முகமும்  டயலாக்  டெலிவரியும், கவுண்ட்டர்  கொடுக்கும் பாங்கும்  தான். நாயகன்  ஆசையில்  அவற்றை  எல்லாம்  இழந்து  விட்டாரா? குறைத்துக்கொண்டாரா?  தெரியவில்லை 


லொள்ளு சபா  மாறன் , கிங்க்ஸ்லீ , முனீஸ்காந்த் ,  பழைய  ஜோக்  தங்கதுரை , மொட்டை  ராஜேந்திரன்  என  ஒரு  காமெடியன்ஸ்  பட்டாளமே  படத்தில்  உண்டு , அனைவருமே   சிறப்பாக  நடித்திருக்கிறார்கள் . எல்லோருக்கும்  ஸ்க்ரீன்  ஸ்பேஸ்  கொடுத்து  கச்சிதமாக   பயன்படுத்தி  இருக்கிறார்கள் 


125  நிமிடங்கள் படம்  ஓடும்படி  க்ரிஸ்ப்  ஆக  கட்  செய்திருக்கிறார்  எடிட்டர்.  எங்குமே  போர்  அடிக்கவில்லை 


தீபக்குமார்  ஒளிப்பதிவு  சிறப்பு , பின்னணி  இசை  கச்சிதம் . திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் எஸ் பிரேம்  ஆனந்த் 


சபாஷ்  டைரக்டர்  (எஸ் பிரேம்  ஆனந்த் ) 


1 எல்லாகேரக்டர்களையும்  அறிமுகப்படுத்தும்  முதல்  பாதி  செம  ஸ்பீடு  காமெடி  கலாட்டா


2   ஆளாளுக்கு  கவுண்ட்டர்  கொடுப்பது  படத்தின்  பெரிய  பிளஸ் . எல்லாமே  கச்சிதமாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


3  குழந்தைகளைக்கவரும்  வண்ணம்  கேம்  ஷோ 


  ரசித்த  வசனங்கள் 


1  மனிதர்களோட  பலவீனமே  பேராசைதான் , அதை  வெச்சுத்தான்  பலரும்  இங்கே  வாழ்ந்துட்டு  இருக்காங்க


2   நாம  என்ன  கல்யாணத்துக்கா  போறோம்? ஓலா  டாக்சி  புக்  பண்ணி  இருக்கீங்க ? பண்றது  கடத்தல் ? ஒரு  காரை  ஆட்டையைப்போட்டுட்டு  வாங்கடா 


3  பொண்ணு  கல்யாண  டிரஸ்லயே  நல்லால, இந்தப்பொண்ணு  நார்மல் டிரஸ்லயே  நல்லாருக்கு , பேசாம இந்தப்பொண்ணைக்கல்யாணம்  பண்ணிக்கவா? 


4   முதலாளி , வேலை  செஞ்சவங்க  காசு  கேட்கறாங்க 


 நீங்க  கூடத்தான்  வேலை  செஞ்சீங்க, காசு  கொடுத்தேனா?


 ஒண்ணாந்தேதி  பிறந்தா  காசு கொடுக்கறதா  சொன்னீங்களே?


 நீ  அஞ்சாம்  தேதி தான்  பிறந்தவனாமே?


5  சாவுங்கறது  மூச்சு  நின்னு  போறது  மட்டுமில்ல , பிடிக்காத  வாழ்க்கையை  வாழ்வதும்தான் 


6   மொத்த  பாண்டிச்சேரியும்  அவன்  கைக்குள்ளே


 ஏன்? பாண்டிச்சேரி  மேப்பை மடிச்சு  கைல  வெச்சிருக்கானா? 


7  இந்த  காலிப்பெட்டியைத்திருட மணி  ஹெய்ஸ்ட்  மாதிரி  மாஸ்க்வேற 


8 இது யார்  காசுன்னு  தெரியலையே?


 யார் காசா  இருந்தா  என்ன? குபேரனே  நமக்கு  கூகுள்  பே  பண்ணி இருக்காப்ல 


9  எங்கே  போகனும்?


 கொஞ்ச  தூரம்  போனதும்  ஆல மரம்   வரும், அதுல  லெஃப்ட்  எடுக்கனும்

 லெஃப்ட்  தானே?


 ரைட்டு 


 டேய். இப்போதானே  லெஃப்ட்னு  சொன்னே 


 ஹைய்யோ , லெஃப்ட்னு  ரைட்டா  சொன்னேனு  சொன்னேன்


10  இவளைத்தூக்கினா  அவன்  கிடைப்பான்னு  சொன்னே, இப்போ  இவ்ளையே  தூக்கிட்டாங்களே?


 அதனால  என்ன? அதான்  இவன்  இருக்கானே? இவனைத்தூக்கினா  அவ  கிடைப்பா , அவளைத்தூக்கினா  அவன்  கிடைப்பான் 


11  நான்  பார்க்கறதுக்குத்தான்  பனி , தொட்டா  சனி .. சாரிபா  டைமிங்  தெரியாம  ரைமிங்  பேசிட்டேன் 


12   சாதாரணமா  ஒரு  குழந்தை கிட்டே  இருந்து  பொம்மையைப்பிடுங்கினாலே  அது  கத்து,ம், இது  பேய்க்குழந்தை வேற , பேய்  மாதிரி  கத்துமே? 


13  உனக்கு  அதை  ரிப்பேர் பண்ணத்தெரியுமா?


 ஒரு  அஞ்சு  நிமிசம்  டைம்  கொடுப்பா 


 எதுக்கு ? தெரியாதுனு  சொல்றதுக்கா? அதை  இப்பவே  சொன்னா  என்ன? 


14  காண்டா மிருகம்  கருப்பா  ஒரு  குட்டி  போட்ட  மாதிரி  ஒருத்தன்  வந்திருக்கான்  பாரு 


15   வீடு  என்ன  கரி  பிடிச்ச  கடாய்  மாதிரி  இருக்கு ?


  நாம  என்ன  குடித்தனமா  நடத்தப்போறோம்?


16  கரி பிடிச்ச வீட்ல  வெறி  பிடிச்ச  பேயாலதான்  நமக்கு  சாவு 


17   யோவ் , இவளை  நீ  குத்தக்கூடாது , இவளைக்குத்தும்போது  ஒருவன்  தடுக்க  வருவான், அவனைத்தான்  நீ  குத்தனும் 


18 இந்த  கர்ச்சீஃபால  அவ  கையைக்கட்டு 

 கையைகட்டுனா  கால்  ஃப்ரீயா  இருக்குமே? ஓடிட  மாட்டா?


 அப்போ  காலைக்கட்டு 


 காலைக்கட்டுனா  கை ஃபிரீயா  இருக்குமே? அவுத்துட மாட்டா? 


19   ஒரு பெண்ணுக்காக  நாம  ரெண்டு  பேரும்  அடிச்சுக்கிட்டு  சாக  வேண்டாம், பேசாம  நீ  செத்துடு 


20   யார்  இந்த  ஆஃபாயில்  ஆயா? அய்யோ பேயா? வுடு  ஜூட்

21  பத்துக்கு  பத்து  இடத்துல  பத்து  தடவை  சுத்த  வெச்சுட்டியேடா  பஞ்ச்  தர்மலிங்கம்

22  நான்  கொரானாவை  விட கொடூரமானவன் 

 பின்னாடி ஒமைக்ரான்  இருக்கறது  தெரியாம  பஞ்ச்  பேசிட்டு  இருக்கான்  பஞ்சு மிட்டாய்  தலையன் 


23  இங்கே  ஃபிரெஞ்ச்ல  என்ன  எழுதி  இருக்கு  தெர்யுமா? 

தமிழ்ல  எழுதுனாலே  எனக்கு  படிக்கத்தெரியாது 


24  பேய்  வீடு பிக்  பாஸ்  வீடு  ஆகிடுச்சு 

25   காசு  வ்ந்ததும்  ஃபிரண்ட்சை கழட்டி  விடக்கூடாது , அவங்களை  ஆட்டோ  வெச்சு  அனுப்பச்சொல்றியே? வேண்டாம், நடந்தே  போய்டுவானுங்க 


26  இந்த  பணப்பையை  நீ  எடுத்துக்க்,  தங்கக்காசு  மூட்டையை  நீ  எடுத்துக்க , எடுத்து  காரில்  வெச்சுட்டு  கிளம்பிடுங்க 


27  நீ  மட்டும்  இந்த  உதவியைச்செய்யலைன்னா  இரண்டாம்  பாகத்துல  வந்து  உன்னைப்பழி  வாங்குவேன் 

 இதுவே  மூன்றாம்  பாகம்  தான் , பேரை  மாத்தி  எடுத்து  வெச்சிருக்கோம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


காமெடிப்படத்தில்  லாஜிக் பார்க்கக்கூடாது , பார்க்கனும்னு  நினைச்சா  காமெடி  படங்களையே  பார்க்கக்கூடாது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அனைத்துத்தரப்பினரையும்  கவரும்  படம் . ஜாலியாக  சிரிக்கலாம், ரசிக்கலாம். ரேட்டிங் 3 / 5 


DD Returns
Theatrical release poster
Directed byS.Prem Anand
Written byS.Prem Anand
Produced byC. Ramesh Kumar
StarringSanthanam
Surbhi
CinematographyDipak Kumar Padhy
Edited byN. B. Srikanth
Music byOfRo
Production
company
RK Entertainment
Release date
  • 28 July 2023
Running time
125 minutes
CountryIndia
LanguageTamil
Box officeest. ₹41.28 crore

Friday, October 13, 2023

SAPTA SAAGARDAACHE ELLO- SIDE A (2023)-கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ அமேசான் பிரைம்


 ஏழு கடல்களுக்கு   அப்பால்  யாரோ  என்பது  தான்  பட  டைட்டிலுக்கான  அர்த்தம் 10  கோடி பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  26  கோடி  வசூலித்த  படம், ஒரு  ஃபீல் குட் மூவி. கமல் நடித்த மகாநதி  படம் தான்  தமிழ்  சினிமாவில்  அதிக   ஜெயில் காட்சிகள்  கொண்ட  படம், அதை  ஓவர்  டேக்  செய்யு  அளவுக்கு பெரும்பான்மையான  காட்சிகள்  சிறையில்  தான்  படம்  ஆக்கப்பட்டு  உள்ளது. படத்தின்  பெரிய  பிளஸ்  பாயிண் ட்  நாயகி  ருக்மணி யின்  கண்கள் 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  பாடகி. விரைவில்  சினிமாவில்  பிரபல  பாடகி  ஆகவேண்டும்  என் லட்சியமும்  அதற்கான  முனைப்பும், உழைப்பும்  கொண்டவர் . நாயகன்  மிடில்  கிளாஸ். இருவரும்  ஆழமாக  காதலிக்கின்றனர். கட்ற்கரை  ஓரம்  ஒரு  சொந்த  வீடு  வாங்க  வேண்டும்  என்பது  நாயகியின்  லட்சியம் . திருமணத்துக்குப்பின்  இருவரும்  சேர்ந்து  வாழ  ஒரு  நல்ல  வீடு  வேண்டும்  என  தேடிக்கொண்டிருக்கிறார்கள்


அப்போது  நாயகனுக்கு  குறுக்கு  வழியில்  பணம்  சம்பாதிக்க  வாய்ப்பு  கிடைக்கிறது. ஒரு  செல்வந்தனின் மகன்  வேகமாக  கார்  ஓட்டி  ஒரு  விபத்தை  ஏற்படுத்தி  விடுகிறான். காரில்  மோதி ஒரு  ஆள் அவுட் ., இப்போது  கார்  டிரைவராக  ஒரு  ஆள்  செட்டப்  செய்து  ஜெயிலுக்கு  அனுப்ப  செல்வந்தன்  தீர்மானிக்கிறான், அதற்கு  நாயகன்  உடன்படுகிறான். 35  லட்சம்  ரூபாய்  பேசப்பட்டு  ரூ 3  லட்சம்  அட்வான்ஸ்  கொடுக்கபடுகிறது 


 இந்த  விஷயம்  எதுவும்  நாயகிக்குத்தெரியாது . தெரிய  வந்ததும்  மனம்  உடைகிறாள். கேஸ்  நடக்கிறது . இன்னமும்  ஜாமீன்  கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட  சூழலி  அந்த  செல்வந்தன்  மாரடைப்பில்    மரணிக்கிறான். இதனால்  நாயகனுக்கு  பேசபட்ட  பணம்  செட்டில்மெண்ட்  ஆவதில்  சிக்கல் .  கேசிலும்  சிக்கல் . 10  வருட  தண்டனை  கிடைக்கிறது 


இதற்குப்பின்  நாயகன்  நாயகி  இணைந்தார்களா? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ரக்‌ஷி  ஷெட்டி  இவர்  தான்  தயாரிப்பாளரும்  கூட . தாடி  வைத்த  முகமாய்  சோகமான  நடிப்பு. அனைவரது  இரக்கத்தையும்  சம்பாதிக்கிறார்


 நாயகி  ஆக  ருக்மணி வசந்த், கண்கள்  மூலமாகவே  மொத்தக்கவிதைகளையும் இறக்கி  வைக்கிறார். மிக  எளிமையான அழகான  ஒப்பனை  இல்லாத  ஒப்பனை  தேவைப்படாத  இயற்கை அ ழகு  முகம், பிரமாதமான  நடிப்பு, அடிக்கடி  காதலனை  இடியட்  என  திட்டும்  அழகு  செம 


142  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் . சரண்  ராஜ்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பிஜிஎம்  பக்கா . அத்வைதா  குருமூர்த்தியின்  ஒளிப்பதிவில்  நாயகிக்கான  க்ளோசப்  ஷாட்களில்  ,முத்திரை  பதிக்கிறது 


 ஹேமந்த்  எம்  ராவ்  தான்  இயக்குநர். இரண்டு  பாகங்களாக  படம்  வெளி  வரும்  என  தீர்மானித்த  விதம்  துணிச்சலின்  அடையாளம் 

சபாஷ்  டைரக்டர்


1  ஜெயிலுக்குப்போனவன்  இனி  10  வருசம்  கழிச்சு  வரும்  வரை  உன்  வாழ்க்கை ?  அவனை  மற  என  அம்மா  சொல்லும்போது  நாயகி  அப்பா  இறந்ததும்  ஏன்  நீ  இன்னொரு  கல்யாணம்  பண்ணிக்காம  அப்பா  நினைவாகவே  இருந்தே? என  மடக்குவது  குட்  ஒன் 


2  ஜெயில்  காட்சிகள், தத்ரூபமான  வில்லன்  நடிப்பு 


3 செல்வந்தன்  இறந்ததும்  எதிர்பாரத  திருப்பம்  நிகழ்வது 


4  ஜெயிலில்  ஒரு  கைதி  என்  மனைவி  என்னைப்பார்க்க  வரும்போது  விசிட்டிங்  டைம்  முடிந்தபின்  போய்  விடுவாள், ஆனால்  உன்  காதலி  உன்னைப்பிரிய  மனம்  இல்லாமல்  திரும்பித்திரும்பிப்பார்த்தபடி  செல்வாள்  என  நாயகனிடம்  சொல்வது 


  ரசித்த  வசனங்கள் 


1  டியர் ,உன்னை  காரில்  வீட்ல  டிராப்  செஞ்சதுக்கு  நீ  டாக்ஸ்  கட்டனும்

 வாட்?

 ஸ்பெஷல் டாக்ஸ்

 ஓ, கிஸ்சா?


2  நான் பெங்களூர்  வர  மாட்டேன், அங்கே  கடல்  இல்லையே?

  வலம்புரி  சங்கு  காதுல  வெச்சுக்கேட்டா  கடல்  அலை  சத்தம்  கேட்கும், அது  மாதிரி  உன்  நினைவுகளில்  கடல்  அலைகள்  கலந்திருக்கு 

3  மக்கள்  வாழ்நாள்  பூரா  உழைக்கறாங்க , ஆனா  ஒரு  பிட்  நிலம்  கூட  வாங்கறதில்லை


4  ஜெயில்ல  இருப்பது  பெரிய  தண்டனை  இல்லை, குற்ற  உணர்வுடன்  வெளில  சுத்திட்டு  இருந்தாதான்  அது  தண்டனை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  செய்யாத  விபத்தை  செய்ததாக  பழி  ஏற்றுக்கொள்ள 35  லட்ச  ரூபாய்  பேரம்  பேசி  டீல்  ஓக்கே  ஆன  பின்  ரூ 3  லட்சம்  மட்டும்  அட்வான்ஸ்  தரும்  ஓனரிடம்  நாயகன்  மீதி  பணத்துக்கு  போஸ்ட்  டேட்டட்  செக்  தந்து  விடுங்கள்  என  ஏன்  சொல்லவில்லை ?


2  ஓனர்  ஹார்ட்  அட்டாக்கில்  இறந்ததும்  நாயகனின்  மனைவி  ஓனரின்  மனைவி, மகனை  சந்தித்து  இப்போது  செட்டில்மெண்ட்  செய்யவில்லை  எனில்  கோர்ட்டில்  நடந்த  உண்மைகளை  சொல்லி  மாட்டி  விடுவோம்  என  ஏன்  மிரட்டவில்லை ? 


3 நாயகி  ஓனரின்  பி ஏ  வை  சந்திக்கிறார், ஓக்கே,  ஓனரின்  மனைவி , மகனை  ஏன் சந்திக்கவில்லை ? 


4  கேஸ்  இன்னும்  முடியவில்லை , தீர்ப்பு  வரவில்லை . பின்  என்ன  தைரியத்தில்  ஓனரின்  மனைவி , மகன், பி  ஏ  மூவரும்  நாயகனை நட்டாற்றில்  விட  துணிகின்றனர். திடீர்  என  நாயகன்  தன்னிலை  விளக்கம்  அளித்தால்  மாட்டிக்கொள்வோம் என்ற  பயம் இருக்காதா? 


5  நாயகன்  தான்  கார்  ஓட்டினார்  என்பதற்கு  சாட்சி  இல்லை . அந்த  காருக்கும் நாயகனுக்கும்  தொடர்பு  இல்லை . நாயகன்  அந்த  செல்வந்தனிடம்  டிரைவராகப்பணி  ஆற்றவில்லை . இந்த  மூன்று  பாயிண்ட்ஸ்  போதுமே  தீர்ப்பு  நாயகனுக்கு  சாதகமாக  வர, ஆனால்....... 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மகாநதி , குணா  மாதிரி  மெலோ  டிராமா  பார்த்து  ரசித்தவர்களுக்குப்படம்  பிடிக்கும் .    ரேட்டிங் 3 / 5 


Sapta Saagaradaache Ello – Side A
Theatrical release poster
Directed byHemanth M. Rao
Written byGundu Shetty
Hemanth M. Rao
Produced byRakshit Shetty
StarringRakshit Shetty
Rukmini Vasanth
CinematographyAdvaitha Gurumurthy
Edited bySunil S. Bharadwaj
Hemanth M. Rao
Music byCharan Raj
Production
company
Distributed byKVN Productions
Release date
1 September 2023
Running time
142 minutes
CountryIndia
LanguageKannada
Budget10 cr[1]
Box office25.5 cr[2]

Thursday, October 12, 2023

PERFECT ADDICTION (2023 ) -ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( லவ் ஆக்சன் டிராமா) @ அமேசான் பிரைம்

 


          ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு  சண்டைப்பயிற்சியாளர். முறைப்படி  பாக்சிங் , கராத்தே  சண்டை  நடக்குமே? அது  போல  இல்லாமல்  சட்டத்துக்கு  புறம்பாக  அண்டர்கிரவுண்டில்  நிகழும்  சண்டைக்கான  பயிற்சியாளர்.அவளுக்கு  ஒரு  தங்கை  உண்டு . தங்கையை  காலேஜில்  படிக்க  வைக்கிறாள் 


 நாயகி  பல பேரை  சண்டைப்பயிற்சியில் பெரிய  ஆள்  ஆக்கி இருந்தாலும்  ஒருவனை  மட்டும்தான்  பெஸ்ட்  என  நினைக்கிறாள் . அவனை ஒரு  கட்டத்தில்  காதலிக்க  ஆரம்பிக்கிறாள் 


நல்லா  , சுமூகமாகப்போய்க்கொண்டிருக்கும் இவர்கள்  வாழ்வில்  ஒரு  திருப்பம், ஒரு  நாள்  நாயகி  தன்  தங்கையை  தன்  காதலனுடன்  நெருக்கமாக  இருப்பதைப்பார்த்து  மனம் உடைகிறாள் 


 வீட்டை  விட்டு  வெளியேறுகிறாள் /. அப்போதையை  நிலைமையில்  அவளது காதலன் தான்  நெ 1 . அவனை  வீழ்த்த  வேறு  ஒரு ஆளை  ரெடி  பண்ண  வேண்டும்  என  நினைக்கிறாள் 


 அதே  போல்  ஒருவனைத்தேடிப்பிடித்து  பயிற்சி  அளிக்கிறாள் . இருவ்ருக்கும்  நெருக்கம்  உருவாகிறது. இருவரும்  திருமணம்  செய்து  கொள்ளும்  நிலையில்  முன்னாள்  காதலன் இந்நாள்  காதலனை  அடித்து  விடுகிறான், இந்நாள்  காதலனுக்கும் இடுப்பில்  எலும்பு  ஃபிராக்சர்.  அடுத்த  நாள்  ஃபைட் இருக்கிறது 


 க்ளைமாக்ஸ்  ஃபைட்டில்  முன்னாள் , இந்நாள்  காதலன்கள்  மோதிக்கொள்கிறார்கள், யார்  ஜெயித்தார்கள்  என்பதே  க்ளைமாக்ஸ்   


நாயகி  ஆக  ஷெஃபானி  ஸ்டேண்டிட்ஸ்  அருமையாக  நடித்திருக்கிறார். இந்திய  அழகி  போலவே  முக  வெட்டு . ஒரு  ஃபைட்டருக்கு  உண்டான ஜிம்னாஸ்டிக்  பாடி.  ஆண்களை  ட்ரெய்னிங்  பண்ணும்  பெண்  ரோலில்  அசாத்தியமாக  நடித்திருக்கிறார்


நாயகியின் தங்கைக்கும்,  முன்னாள்  காதலனுக்கும்  அதிக  வேலை  இல்லை . இந்நாள்  காதலனுக்குத்தான்  அதிக  காட்சிகள் 

 ஆக்சன்  சீக்வன்ஸ்  நன்றாக  இருந்தாலும்  இன்னும்  பெட்டர்  ஆக  பண்ணி  இருக்கலாம்  என  தோன்றுகிறது 


107  நிமிடங்கள்  ஒடும்படி  ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 

ஒளிப்பதிவு  , பிஜிஎம்  பக்கா 


சபாஷ்  டைரக்டர்


1   ரிவஞ்ச்  டிராமாவான  இக்கதையை  ரொமாண்டிக்  போர்சனுக்கு  அதிக  முக்கியத்துவம்  கொடுத்து  எடுத்தது 


2  நாயகியின்  நடிப்பு , அவரது  ஆக்சன்  சீக்வன்ஸ் 


  ரசித்த  வசனங்கள் 


1  நெருப்பைப்பார்த்து  பயந்தா  நாம்  அடுப்படில  வேலை  செய்ய  முடியாது 


2  கோபம்  என்பது  நாம்  விஷத்தைக்குடிச்சுட்டு  இன்னொருத்தங்க  சாகனும்னு  நினைக்கற   மாதிரி . உன்னோட  பெஸ்ட்டைத்தான்  உன்  கோபம்  தடுக்கும் 


3  நம்ம  சுய  சந்தோஷத்தோட  நம்ம  பிஸ்னெசை கலக்கவே  கூடாது 


4  ஒருத்தரை  பிடிச்சுப்போறதுக்கும், அவங்க  மனசை  மாத்தி  யூஸ் பண்றதுக்கும்  நிறைய  வித்தியாசம்  இருக்கு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   நாயகி  நாயகனுக்கு  ஃபோன்  பண்ணி  இப்போ  பர்ச்சேஸ்  பண்ணிட்டு  இருக்கேன், முடிச்ட்டு  இப்போ  வந்துடறேன்னு  சொல்றா. ஆனா  அவ  வீட்டுக்கு  வரும்போது  நாயகன்  நாயகியின்  சகோதரியுடன்  நெருக்கமா  இருக்கிறான், கதவைக்கூட   லாக் பண்ணலை அவன்  என்ன  மாங்கா  மடையனா? 

2   நாயகி  மனம்  வெறுத்து  வேற  பக்கம்  வீடு  தேடும்போது  ஒரு  வீட்டில்  இன்னொரு  ஆண்  தங்கி  இருக்க  அவனோட  வீட்டை  ஷேர்  பண்ணிக்க  முடிவு  பண்றா. ஆனா  அந்த  ஆள்  மறுக்கிறான். உலகத்தில்  எந்த  ஆணாவது தன்  ரூம்  மேட்  ஆக  ஒரு  இளம்பெண்  வருவதை  வேண்டாம்  என்பார்களா?


3  நாயகி  ஒரு  ஃபைட்  ட்ரெய்னர். காதலனுடன் , தங்கையுடன்  கோபித்துக்கொண்டு  வீட்டை  விட்டு  வெளியேறும்போது  கைல  காசே  இல்லை . என்பதை  நம்ப  முடியவில்லை . பேங்க் பேலன்ஸ்  என்னாச்சு ? 


4  நாயகி  தன்  புதுக்காதலன்  கையில்  ஒரு  பெண்ணின்  படம்  பச்சை  குத்தி  இருப்பதைப்பார்த்து  அவள்  யார்? எனக்கேட்கிறாள். அவன்  சொல்லவில்லை ., க்ளைமாக்ஸில்  அவள்  அவனின்  அம்மா    என  சஸ்பென்சைஓப்பன்பண்றான். ஏன்? அதை  முதல்லியே  சொன்னா  என்ன? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சின்னப்படம்  என்பது  ஒரு  பிளஸ் , நாயகியின்  அழகுக்காக  ஆண்கள்  மட்டுமே  பார்க்கலாம்  , ரேட்டிங் 2.25 / 5 


Perfect Addiction
Titre originalPerfect Addiction
RéalisationCastille Landon
ScénarioStephanie Sanditz
Acteurs principaux

Ross Butler
Matthew Noszka
Kiana Madeira
Manu Bennett

Sociétés de productionConstantin Film
JB Pictures
Arbor Films
Wattpad
Pays de productionDrapeau des États-Unis États-Unis
Genredrame sportif
Durée107 minutes
Sortie2023