Sunday, August 13, 2023

மான்ஸ்டர் (2019) - தமிழ் -சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


  எஸ் ஜே  சூர்யா  இயக்கிய  படங்கள்  என்றாலும்  சரி , நடித்த  படங்கள்  என்றாலும்  சரி , அது    அல்லது  யூ /  படமாகத்தான்  இருக்கும், முழுக்க  முழுக்க  யூ  படமாக  வந்த  முதல்  எஸ்  ஜே  சூர்யா  படம்  இது . நெல்சன்  வெங்கடேசன்  இதுவரை  மூன்று  பட்ங்களை  இயக்கி  இருக்கிறார். ஒரு  நாள்  கூத்து (2016) , மான்ஸ்டர் (2019) ,  ஃபர்ஹானா (2023)  மூன்று  படங்களுமே  மீடியாக்களின்  வரவேற்பையும் , மக்களின்  வரவேற்பையும்  பெற்றவை 

 

   ஸ்பாய்லர்  அலெர்ட்

 

சம்பவம் 1  - வில்லன்  ஒரு  கள்ளக்கடத்தல்  காரன்வைரங்களை  கடத்தி   பிரெட்(ரஸ்க்) டில்  மறைத்து  வைத்துக்கொண்டிருக்கும்போது  வீட்டுக்கு  போலீஸ்  வந்து  விடுகிறது . உடனே  வைரங்கள்  உள்ள  பிரெட்  பாக்கெட்டை  வீட்டில்  ஒரு  இடத்தில்  ம்றைத்து  வைத்து  விட்டு  ஜெயிலுக்குப்போய்  விடுகிறான்

 

 சம்பவம்  2 - நாயகனுக்கு  சொந்த  வீடு  இல்லை ., பி  ஆஃபீசில்  வேலை  செய்கிறார், இன்னும்  திருமணம்  ஆகவில்லை , பெண்  கிடைக்கவில்லை. வரும்  வரன்கள்  எல்லாம்  மாப்பிள்ளைக்கு  சொந்த  வீடு  இல்லையா? என  கேட்கிறார்கள் . இதனால்  நாயகன்  ஒரு  சொந்த  வீடு  வாங்குகிறான்

 

சம்பவம்  3 - நாயகன்  வாங்கிய  வீட்டில்  ஒரு  எலி  வந்து  அவனை  பாடாய்  படுத்துகிறது . வீட்டில்  உள்ள  பொருட்களை  எல்லாம்  நாசம்  செய்து  விடுகிறது . நாயகிக்கு  பரிசாக  வாங்கிய  அஞ்சு  லட்ச  ரூபாய்  மதிப்புள்ள  சோபாவையும்  கபளீகரம்  செய்து  விடுகிறது. நாயகன்  பேசிக்கலி  வள்ளலார்  பக்தன். அதனால்  எலியைக்கொல்லாமல்  வீட்டை  விட்டு  துரத்த  முடிவு  செய்கிறான்

 

 சம்பவம்  4  -  வீட்டை  விட்டு  ஜெயிலுக்குப்போன  வில்லன்  ரிலீஸ்  ஆகி  வரும்போது  தான்  குடி  இருந்த  வீடு  விற்கப்பட்டது  என்பதை  அறிகிறான். மறைத்து  வைத்த  வைரங்களை  வீட்டில்  புகுந்து  கண்டு பிடித்து  விடுகிறான், ஆனால்  ஒரே  ஒரு  வைரம்  மட்டும்  மிஸ்சிங், அதன்  மதிப்பு  ரூ  30  லட்சம் . வைரம்  இருந்த  பிரட்டை எலி  சாப்பிட்டிருக்கும்  என்பதால்  எலியைக்கொன்றூ  வைரத்தை  அடைய  நினைக்கிறான்

 

 இதற்குப்பின்  என்ன  நிகழ்ந்தது  என்பது  தான்  மீதி  திரைக்கதை 

 

தமிழ்  சினிமாவுக்கு  இது  போன்ற  எலி  கான்செப்ட்  புதுசு. அதை  கமர்ஷியலாகவும் , சின்னக்குழந்தைகளு ம்  ரசிக்கும்படியும்  சொன்ன  விதத்தில்  இயக்குநர்  ஜெயிக்கிறார்

 

 நாயகன்  ஆக  எஸ்  ஜே  சூர்யா . நாயகியுடனான  ரொமான்ஸ்  காட்சிகளிலு ம்  சரி ,எலியைப்பிடிக்க  முயலும்போதும்  சரி  மாறுபட்ட  பரிமாணங்களில்  நடிப்பை  வெளிப்படுத்துகிறார். அவர்  டபுள்  மீனிங்  வசனம்  பேசாமல்  நடித்த  முதல்  படம் என்ற  சாதனையையும்  நிகழ்த்தி  விட்டார் 

 

 நாயகி  ஆக  கண்ணிய  மயில்  ப்ரியா  பவானி  சங்கர்கிளாமராக   வந்து  போகும்  நடிகைகள்  பலர்  உண்டு , ஆனால்  உடம்பு  பூரா  கவர்  பண்ணி  தன்  உடல் அழகை  மறைத்து  முக  அழகை  மட்டும்  வெளிப்படுத்தும்  மிகச்சில  நடிகைகளில்  இவரும்  ஒருவர் . இவரது  சிரிப்பே  மனதை  வ்சீகரிக்கும்  விதத்தில்  உள்ளது 

 

 காமெடிக்கு  கருணாகரன்இயல்பான  நடிப்பு   

 

ஜஸ்டின்  பிரபாகரன்  இசையில்  ஐந்து  பாடல்கள் , அதில்  ஒரு  மெலோடி  சாங்க்  சூப்பர்  ஹிட் ,பிஜிஎம்  கச்சிதம்  கோகுல்  பெனோய்  ஒளிப்பதிவில்  எலியின்  பார்வையில் , மனிதர்களின்  பார்வையில்  என  இரு  வேறு  கோணங்களில்  கலர்  காட்டி  இருக்கிறார்  வி ஜே  சாபு , ஜோசஃப்  எடிட்டிங்கில்  இரண்டே  கால்  மணி  நேரம்   ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 

 

சபாஷ்  டைரக்டர் ( நெல்சன்  வெங்கடேசன்)

 1ஒரு  சாதாரண  எலிக்கான  இண்ட்ரோவைக்கூட  பேய்ப்பட  ரேஞ்சுக்கு  20  நிமிடங்கள்  பில்டப்  கொடுத்து  காட்டிய வித்ம்

 

நாயகி  நாயகனை  செக்  செய்ய தன்  தோழியுடன்  முதன்  முதலாக  நாயகனை  மீட்  பண்ண  வரும்போது  இவ  தான்  மேகலா  என  குழப்பும்  காட்சியும் அதைத்தொடர்ந்து  நடக்கும்  காமெடியும் 

 

நாயகிக்குப்பிடிக்கும்  என  நாயகன்  சோபா  வாங்க  கடைக்குப்போவதும்  எவ்ளோ  செலவானாலும்  பரவாயில்லை , 50,000  ரூபா  ஆனாலும்  பரவாயில்லை , சோபா  வாங்கறோம்  என  கடைக்குள்  போனதும்  அஞ்சு  லட்சம்  ரூபா  ரேட்  சொல்வதும்  அதைத்தொடர்ந்து  நடக்கும் காமெடி  களேபரங்களும்

 

 

 

 

செம  ஹிட்  சாங்க்ஸ்

 

1  தீராக்காதல்

தபக்குனு  தாவித்தானே 

அந்தி  மாலை  நேரம் ஆற்றங்கரை ஓரம்  நிலா  வந்ததே

 

  ரசித்த  வசனங்கள் 

 

நம்மை  எல்லாம்  பார்த்தா  எவன்  வீடு  தரப்போறான் ? சொந்த  வீட்டைப்பார்த்தாலாவது  தருவான் 

2   வீட்டை  சுத்திப்பார்க்கலாம், ஊரை  சுத்திப்பார்க்கலாம், வீடு  வீடா  சுத்திப்பார்த்துட்டு  இருக்கியே?

பிடிக்கும் , பிடிக்காதுனு  சொல்ற  ஆள்  நான்  இல்லைங்க, எது  கிடைக்குதோ  அது  பிடிக்கும்

சந்தோஷத்துல  இந்த  சுத்து  சுத்தறான், இதுதான்  வீட்டை  சுத்திப்பார்க்கறதோ

வாடிய  பயிரைக்கண்டபோதெல்லாம்  வாடினேன்னு  வள்ளலார்  சொன்னாரு, இப்படி  பூஜை , புனஸ்காரம்னு  நெல்லை  தீயில்  போடச்சொல்றீங்களே?

6 மயிலாப்பூர்  பி  ஆஃபீஸ், நீங்க  அங்கேயே  வேலை  பார்க்கறிங்க?

அது  ஒண்ணும்  அவ்ளோ  கேவலமான  வேலை  இல்லீங்களே?

 நீங்க  ரொம்ப  அழகா  இருக்கீங்க  மிஸ்

 என்னால  அப்படி  உங்களை  சொல்ல  முடியலையே?

 என்னங்க , இப்படி டமால்னு  தூக்கிப்போட்டு  மிதிச்சுட்டீங்க ?

இப்டி  இருட்டுல  இருந்தா  எப்படி  முகம்  பார்க்கறது ?

 

வீட்ல எலித்தொல்லை  தாங்காம  இப்படி மொட்டை  மாடில  வந்து  படுத்திருக்கேன்

  என்னைக்காவது  உங்க  தொந்தரவு  தாங்காம  எலி  மொட்டை  மாடில  போய்  படுத்திருக்கா

9  , டாக்டர் , தம்மாந்தூண்டு  எலிக்கு  அவ்ளோ  பவரா

தம்மாந்தூண்டு  எலியா? நாலே  வாரத்துல  குட்டி  போடும்

 

10  நிச்சயதார்த்தத்தை  அடுத்த  வாரம்  வெச்சுக்கலாமா?னு  பொண்ணு  வீட்ல  கேட்கறாங்க என்ன  சொல்றது ?

 

--------

 

 என்னடா  பேச்சையே  காணோம் ?

 நம்ம வாழ்க்கைலயும்  நல்லது  எல்லாம்  நடக்குதுனு  தெரியும்போது  பெச்சே  வர்லை

11   எந்த  உயிரையும் கொல்லாம  இந்த  உலகத்துல  ஒருத்தனால  வாழவே  முடியாது , மாட்டைக்கொல்லக்கூடாதுனு  சொல்லிட்டு  மனுசனைக்கொல்லும்  உலகம்  இது 

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1        எலியைப்பிடிக்க  நாயகன்  படாத  பாடுபடுகிறார். எலிப்பொறி ஒர்க்  அவுட்  ஆகவில்லை, அடுத்த  ஸ்டெப்பாக  கம்  பேடு  வைக்கலாமே? பசையில்  ஒட்டிக்கொள்ளுமே? அதை  ஏன்  ட்ரை  பண்ணவே  இல்லை

2          நாயகன்  இ பி  ஆஃபீசில்  கிளர்க்  ஆக  ஒர்க்  பண்றார், ஆனால்  நாயகி  நாயகன்  சந்திப்புக்கு  வழி  செய்யும்  வகையில்  நாயை  பணி புரியும்  இடத்தில்  கரண்ட்  பிராப்ளம்  என  இபி ஆஃபீசுக்கு  ஃபோன்  வந்ததும்  நாயகனை  அங்கே  அனுப்புகிறார்களே? எந்த   ஊரில்  இபி ஆஃபீசில்  பணி  புரியும்  கிளர்க்   கரண்ட்  கனெக்சனுக்காக ஸ்பாட்  விசிட்  அடிக்கிறார்?


3  வீட்ல எலித்தொல்லை  தாங்காம  இப்படி மொட்டை  மாடில  வந்து  படுத்திருக்கேன்  என  நாயகியிடம்  ஒரு  முறை  சொல்லும்  நாயகன்  பூனை  செத்துகிடக்கும்  நிலையில்  நாற்றத்தைத்தாங்க  முடியாமல்  கர்ச்சீப்பை  முகத்தில் கட்டி  சிரமப்பட்டு  ஏன்  பெட்ரூமில்  தூங்க  வேண்டும் ? ஏன்  மொட்டை  மாடிக்கு  அன்று  போல்  போகக்கூடாது ?

 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ

 

 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் குழந்தைகள் , சிறுவர்கள்  ரசித்துப்பார்ப்பார்கள். படம்  கொஞ்சம்  ஸ்லோ  என்பதால்  பெரியவர்கள்  பொறுமை  இருந்தால்  பார்க்கலாம்  , ரேட்டிங்  3 / 5

 

Monster
Directed byNelson Venkatesan
Written byNelson Venkatesan
Sankar Dass
Produced byS. R. Prakashbabu
S. R. Prabhu
Gopinath
Thanga Prabaharan
StarringS. J. Suryah
Priya Bhavani Shankar
Karunakaran
CinematographyGokul Benoy
Edited byV. J. Sabu Joseph
Music byJustin Prabhakaran
Production
company
Potential Studios
Release date
  • 17 May 2019
Running time
141 minutes
CountryIndia
LanguageTamil

Saturday, August 12, 2023

மெய் (2019) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


டிவிஎஸ்  சுந்தரம்  மோட்டார் கம்பெனியின்  வாரிசு  ஒருவரை  நாயகன்  ஆக்கி  அவர்களே  ஒரு  படம்  தயாரித்து  இருக்கிறார்கள் . ஆல்ரெடி  இதே  பேட்டர்னில்  பல  மெடிக்கல்  க்ரைம்  த்ரில்லர்கள்  வந்திருந்தாலும்  ஒரு  சராசரி  த்ரில்லராகவே  இது  இருக்கிறது . அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


      ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்கள் இர்ண்டு  பேர். இருவரும்   தனியார்  ஹாஸ்பிடல்  டாக்டர்கள் .  இலவச  மருத்துவ  முகாம்  நடத்தி  பேஷண்ட்ஸ்  பற்றிய  டேட்டா  பேஸ்  கலெக்ட்  பண்ணி  வைத்துகொள்கிறார்கள் .  பெரிய  பெரிய  பணக்காரர்களுக்கு  முக்கியமான  உறுப்பு  தேவைப்படும்போது  அது  ஹார்ட்டோ , கிட்னியோ   என்னமோ  பொட்டிக்கடைல   கடலை  மிட்டாய்  வாங்குவது  போல  அவர்களுக்கு  மேட்ச்  ஆகும் உடல்  உறுப்பை   ஆபரேசன்  மூலம்  பொருத்தி  விடுகிறார்கள் 


 ஏழைகளிடம்  கம்மி  ரேட்டுக்கு  கிட்னி  தானம்  பெற்று  அதிக  லாபத்துக்கு  பணக்காரர்களுக்கு  விற்று  விடுகிறார்கள் . அப்படிப்பட்ட  ஏழைகள்  கிடைக்காதபோது  குறிப்பிட்ட  ஆட்களைக்கடத்தி  அவர்களைப்போட்டுத்தள்ளிவிட்டு  தேவையான  உறுப்பை  எடுத்துக்கொள்கிறார்கள் 


 அதே மெடிக்கல்  லைனில்  இருக்கும்  நாயகி , நாயகன்  இருவரும்  அந்த  குற்றத்தை  எப்படி  மீடியாக்களுக்கு  வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்கள்  என்பதுதான்  திரைக்கதை 


 நாயகன்  ஆக  நிக்கி  சுந்தரம் , ஆள்  ரகுவரன் , சத்யராஜ் போல  ஹைட்டாக  இருக்கிறார்  என்பதுதான்  ஒரே  பிளஸ். நடிப்பு , முக  பாவனை , உடல்  மொழி  எதுவும்  வரவில்லை 


நாயகி  ஆக  ஐஸ்வர்யா  ராஜேஷ். பொருத்தமான  பாத்திரம்  , கச்சிதமான  நடிப்பு .  சார்லி  ஒரு  கேரக்டர்  ரோலில்  வருகிறார். கிஷோர்  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  வருகிறார். இவர்கள்  மட்டுமே  தெரிந்த  முகங்கள் 


112  நிமிடங்கள்  மட்டுமே  டைம்  ட்யூரேஷன்  வரும்படி  ஷார்ட்  அண்ட்  ஷார்ப்  ஆக எடிட்டிங்க்  செய்து  இருக்கிறார்கள் . பிருத்வி  குமாரின்  இசையில்  பாடல்  சுமார்  ரகம்  அனில்  ஜான்சன்  பிஜிஎம்  சராசரி  தரம் , வி என்  மோகன்  ஒளிப்பதிவு  கச்சிதம்

செந்தா  முருகெஷன்  கதைக்கு  எஸ்  ஏ  பாஸ்கரன்  திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்  (எஸ்  ஏ  பாஸ்கரன்)

 1  நாயகனுக்கு  நடிப்பு  வரவில்லை , ஆனால்  அவர் தான்  தயாரிப்பாளர்  என்றதும்  சாமார்த்தியமாக  அவருக்கு  அதிகம்  க்ளோசப்  ஷாட்  வைக்காமல்  சமாளித்தது 

2   காமெடி  டிராக்கில்  பழைய  ஜோக்  தங்கதுரை  அண்ட்  கோவைக்களம்  இறக்கி  லைட்டா  கலகலப்பு  ஊட்டியது 


3  க்ரைம்  த்ரில்லர்  கதையில்  காதல் , டூயட் , மொக்கைக்காமெடி  என  அதிகம்  இழுக்காமல்  நேரடியாகக்கதைக்குள்  போனது 


  ரசித்த  வசனங்கள் 


1  கரண்ட்  கம்பத்துல  பெருச்சாளி  ஏறுகிற  மாதிரி  இருக்கு, அவங்க  ரெண்டு  பேரையும்  பார்க்கும்போது 

2  காசு  வந்தா  காக்கா  கூட  கலர்  ஆகிடும்

3  அவனை  உக்காரச்சொன்னோமே? ஆனா  அவன்  உட்காரவே  இல்லடா


 அவன்  உக்காந்துதான்  இருக்கான், ஆனா  ஆள்  செம  ஹைட். அதான்  அப்படி  நமக்குத்தெரியுது


4  அவரைப்பார்த்தா  மூர் மார்க்கெட்ல  வாங்குன  காக்காக்குஞ்சு  மாதிரி  இருக்காரு , உன்னைப்பார்த்தா  அமெரிக்கால  பிறந்த  சத்யராஜ்  மாதிரி  இருக்கே? அவரு  உனக்கு  மாமாவா? நம்ப  முடியலையே?

5   கவர்மெண்ட்  ஹாஸ்பிடலில்  என்னதான்  நல்லா  ட்ரீட்மெண்ட்  குடுத்தாலும்  நம்ம  ஆளுங்க   பிரைவேட்  மல்ட்டி  ஸ்பெஷாலிட்டி  ஹாஸ்பிடலைத்தான்  நம்புவாங்க  


6  என்ன  , இவன்  செல்  ஃபோன்  டவர்  மாதிரி  இவ்ளோ  ஹைட்டா  இருக்கான்?


7  இப்போ  கிடைக்கற  மருந்தெல்லாம்  நோயோட  முடிவா  இருக்கறதில்லை , இன்னொரு  புது  நோயோட  தொடக்கமா  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  போலீஸ்  ஸ்டெஷனில்  புகார்  பற்றிய  விபர்ம்  விசாரிக்க  வ்ரும்போது  அங்கே  இருக்கும்  வால்  க்ளாக்கில்   மதியம் 12   என  காட்டுகிறது. 2  நிமிசம்  தான்  பேசுகிறார். கிளம்பும்போது  லாங்க்  ஷாட்டில்  3  மணி  காட்டுகிறது 

2  வில்லனான  டாக்டர்  நாயகனை  பின்னந்தலையில்  அடித்து  அவர்  மயக்கம்  ஆனதும்  ஆளை  விட்டு  புதைக்க  சொல்கிறார். இவர்  டாக்டர்  தானே? தூக்க  மருந்தோ, மயக்க  மருந்தோ  ஊசி  மூலம்  செலுத்தி  விட்டு  சேஃப்டியாக  அனுப்பி  இருக்கலாமே? 

3  டியூட்டில  இருக்கும்  போலீஸ்  டிபார்ட்ம்ண்ட்  ரிவால்வர்  மூலம்  நாயகனை  சுடுகிறார். இது  அன் அஃபிஷியல் கேஸ். டிபார்ட்மெண்ட்க்கு  என்ன  கணக்கு  சொல்வர்? 

4  பொட்டாசியம்  குளோரைடு  என்ற  மருந்தை  டைரக்டாக  ஊசி  மூலம் செலுத்தக்கூடாது   என்ற  கருத்தை  அடிக்கடி  ரிப்பீட்டாக  சொல்கிறார்களே? ஏன் ? 

5 நாயகன்  டாக்டர், ஃபாரீன்  ரிட்டர்ன். போலீஸ்  அவரைத்தேடுகிறது . படித்த  நபரான அவருக்கு  செல் ஃபோன்   டவர்  லொக்கேஷன்  வைத்து  ஆளை  ட்ரேஸ்  பண்ணிடுவாங்கனு  தெரியாதா? 

6  ஓடிக்கொண்டிருக்கும்  ஆட்டோ  எனில்  ஓக்கே, ஆனால்  நின்று  கொண்டிருக்கும்  ஆட்டோவில் அடியாள்  அந்தப்பெண்ணுக்கு  மயக்க  மருந்து  ஸ்ப்ரே  அடிக்கும்போது  அவள்  தடுக்க  முயற்சி  பண்ணிட்டு  இருக்கா. இறங்கி  ஓட  வேண்டியதுதானே?  அல்லது  அந்த  சீனை  ஓடும்  ஆட்டோவாக  மாற்றி  எடுத்திருக்கலாம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   டி வி  ல  போட்டா  பார்க்கலாம்  என்ற  அளவில்  தான்  இருக்கிறது . ரேட்டிங் 2.25 / 5 


Mei
Theatrical release poster
Directed bySA Baskaran
Screenplay bySA Baskaran
Story bySentha Murugesan
StarringNicky Sundaram
Aishwarya Rajesh
CinematographyVN Mohan
Music byPrithvi Kumar
Anil Johnson (BGM)
Production
company
Sundaram Productions
Release date
  • 23 August 2019
Running time
112 minutes
CountryIndia
LanguageTamil

Friday, August 11, 2023

ANNI MANCHI SAKUNAMULE (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


எல்லாரும்  நல்லவங்கதான்  என்பதுதான்  பட  டைட்டிலின்  அர்த்தம். இப்படம்  பெரும்பாலான  பகுதிகள்  குன்னூரில்  படமானது . கொஞ்சம்  போல  ஃபாரீன்  லொக்கேஷன்  உண்டு 2023  மே  18 அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  ஹிட்  ஆன  இப்படம்  அமேசான்  பிரைம் ல்  ஜூன்17 முதல்  காணக்கிடைக்கிறது

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  குழந்தையாகப்பிறக்கும்போது  ஒரே  நாளில்  பிறந்தவர்கள் . ஒரே  ஹாஸ்பிடலில்  டெலிவரி  நடக்கும்போது  தவறுதலாக  குழந்தைமாறி  விடுகிறது . அதாவது  நாயகன் நாயகியின்   பெற்றோருக்கும் , நாயகி  நாயகனின் பெற்றோருக்கும்  மாறி  கொடுக்கப்படுகிறார்கள் . இந்தக்குழப்பம்  க்ளைமாக்சில் தான்  தெரிய  வருகிறது  அனைவருக்கும் 


இரு  குடும்பமும் ஒரே  ஒரு  கேஸ்  விஷயத்தில்  காலம்  காலமாக  கோர்ட்  படியேறிக்கொண்டிருக்கிறார்கள் . காஃபி  எஸ்டேட்  பிரச்சனை  அது இந்தப்பிரச்சனை  ஒரு  பக்கம்  போய்க்கொண்டு  இருக்கிறது 


 நாயகி ரொம்ப  சிக்கனம்  ஆனவர் . திட்டமிட்டு  வாழ்க்கையை  நடத்துபவர் நாயகன் அதற்கு  நேர்  மாறானவர் , சித்தன் போக்கு  சிவன்போக்கு  என  வாழ்க்கை நடத்துபவ்ர் , சீரியஸ்னெஸ் இல்லை , அதனால்  எப்போதும்  பெற்றோரிடம்  திட்டு  வாங்குபவர் 


  ஸ்கூல்  லைஃபில்  நாயகன்  , நாயகி  இருவரும்  ஒன்றாகப்படித்தவர்கள் . அப்போதே  நாயகன்  தன்  காதலை  வெளிப்படுத்த  நினைத்துக்கடிதம்  எல்லாம்  எழுதினார் , ஆனால்  வெளிப்படுத்த வில்லை . அதனால்  நாயகிக்கு  விஷயம்  தெரியாது 


 இப்போது  வேறு  ஒரு  நபர்  நாயகியை  திருமணம்  செய்ய  பிரப்போஸ்  செய்கிறார். நாயகி  அதற்கு  ஒத்துக்கொள்கிறார். திருமண  ஏற்பாடுகள்  நடக்கிறது . அப்போது  எதேச்சையாக  நாயகனின்  காதல்  விஷயம்  நாயகிக்கு  தெரிய  வருகிறது . அதற்குப்பின்  அவர்  எடுக்கும்  முடிவு  தான்  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  சந்தோஷ்  ஷோபன்  தன்  பொறுப்புணர்ந்து  பொறுப்பில்லாதவர்  போல  நடித்திருக்கிறார். டூயட்  ஷாங்கில்  நன்றாக  ஆடுகிறார்


நாயகி  ஆக மாளவிகா  நாயர் , முதல்  பாதியில்  துடிப்பான  பெண்னாகவும்  , பின்  பாதியில்  காதலை  உணர்ந்த  பெண்னாகவும்  மாறுபட்ட  நடிப்பு .  மாறுபட்ட  இரு  ஹேர்  ஸ்டைலில்  பின்  பாதி  தோற்றம்  குடும்பப்பாங்கு . 


நாயகனின்  அம்மாவாக  நம்ம  ஊர்  கவுதமி . அவரை  ஏன்  செவித்திறன்  அற்றவராக  கேரக்டர்  டிசைன்  செய்தார்கள்  என  தெரியவில்லை , திரைக்கதையில்  அதற்கான  தேவையும்  இல்லை 


 இது  ஒரு  குடும்பப்படம்  என  நிரூபிக்க  திரையில்  எப்போதும்  50  பேர்  இருந்து  கொண்டே  இருக்கிறார்கள் , மிக்கி ஜெ  மேய்ர்  இசையில்  ஆறு  பாடல்கள்  கேட்கும்படி  இருக்கின்றன , இஜிஎம்  இன்னும்  இளமைத்துள்ளலோடு  இருந்திருக்கலாம் 


ஃபாரீன்  லொக்கேஷன் , குன்னூர்  அழகு  ஆகியவற்றை  கேமரா  உள் வாங்கி  இருக்கிறது  ஜுனைது  சித்திக்  எடிட்டிங்கில்  இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 



சபாஷ்  டைரக்டர் ( பி வி நந்தினி  ரெட்டி ) 


1 வெற்றிக்ரமான  காஃபிக்கொட்டை  ஃபார்முலாவுக்கு  புகழ்  பெற்ற  இரு  வேறு  காஃபி  கம்பெனிகளின்  கொட்டைகளை  50:50என   கலப்பது  அட்லீ ஃபார்,முலா  என்றாலும்  அதை  ரசிக்கும்விதத்தில்  காட்சிப்படுத்தியது 


2  நாயகன் - நாயகி  ஒரே விமானத்தில்  சென்றாலும்  , ஒன்றாக  இருந்தாலும்  காதல்  காட்சிகள்  வைக்காமல்  தொழில்  நிமித்தம்  பேசுவது 


3 நாயகி  நாயகனுன்  முன்னாள்  காதலை  உணரும்  தருணம் 



ரசித்த  வசனங்கள் ( லட்சுமி  பூபாலா) 


1  அணிலைப்பார்த்து  ஓணான் சூடு  போட்ட  கதை  மாதிரி 


2  பழைய  சோறு  சாப்பிடறவன் தான்  பழைய  ப்ஞ்சாங்கம்  எல்லாம்  பார்ப்பான் 


3  யாருக்காவது  உபயோகமா  இருந்தாதான்  அது  பணம், இல்லைன்னா  வெறும்  பேப்பர் தான் 


4  பெஸ்ட்  ஃபிர்ண்ட்ஸ்  ரொம்ப  நாள்  பேசிக்காம  இருக்க  மாட்டாங்க 


5  லைஃப்ல  எல்லாமே  கொஞ்ச  நேரம்தான் , ருசி , கஷ்டம், நஷ்டம், சந்தோஷம்., எல்லாமே,. அனுபவிச்சுடனும் 


6  என்னை  மாதிரி  வயசான  ஆட்கள்  உங்க  கூட  இருந்தா  உங்களுக்கு  பாரமா  இருக்கும், அதுவே  தூரமா  இருந்தா   ந்ல்லாருக்கும்

7  உங்க  வீட்ல  தண்ணீர்  குடிச்சா  அது  இளநீர்  மாதிரி  இருக்கு 


 ஹ;லோ  அது  நிஜமாவே  இளநீர்தான்


8 அனுபவம்,அறிவு  ரெண்டுமே  இப்போ  ஒருசேர  யார்  கிட்டே  இருக்கு ?


9 எல்லாரும்  ஒரே  மாதிரி  இருந்தா  ஒரே  மாதிரி  யோசிச்சா  வித்தியாசமா  ஏதும்  செய்ய முடியாது


10  அவன்  எனக்கு  செட்  ஆக  மாட்டான், ஸ்டாக்மார்க்கெட்  மாதிரி  அவன்  லைஃப்ல  ஏகப்பட்ட  அப் அண்ட்  டவுன்ஸ்


 அஸ்  எ  டாக்டரா  நான்  வேற  மாதிரி  நினைக்கறேன். ஈசிஜி ல  அப் அண்ட்  டவுன்  இருந்தாதான் நார்மல்


11  அவளை  உனக்குப்பிடிக்குமா?


 சொல்ல  முடியாத  அளவுக்குப்பிடிக்கும், ஆனா  அவ  கிட்டே  சொல்ல  முடியாது , சொல்லவும்  கூடாது 


12   நம்ம  தேவைக்கு  மேலே  பணம்  இருந்தா  அது  வெறும்  பேப்பர்தான்

 பேப்பரை  பண்டல்  கட்டிப்போடறது கூட  பணத்துக்காகத்தான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 இனிமே  எங்க  வீட்டுக்கு  வரும்போது  இப்டி  கிளாமரா  டிராயர்  எல்லாம்  போட்டுட்டு  வராதே  என  நாயகியிடம்  நாயகனின்  அப்பா  சொல்கிறார். சரி  என்ற  நாயகி  படம்  பூரா  அதே  டிரசில்தான்  வருகிறார்


2  சமையல்  இன்சார்ஜ்  இடம்  ஏற்ப்ட்ட  பிரச்சனை  காரணமாக  கவுதமி  வீட்டார் திருமணத்துக்கான  2000  பேருக்கான  விருந்து  சமையலை  வீட்டாரே  சமைப்பதாக  சொல்வது  நம்பும்படி  இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மோட்டிவேஷனல்  டிராமா ., ஃபேமிலி  டிராமா , ரொமாண்டிக்  மெலோ  டிராமா  இந்த  மூன்று  கேட்டகிரியிலும்  இப்படம்  அடங்கும்  என்பதால்  பார்க்கலாம் , ரேட்டிங் 2. 5 / 5 

Anni Manchi Sakunamule
concept poster
Directed byB. V. Nandini Reddy
Screenplay bySheik Dawood G.
Dialogues by
  • Lakshmi Bhupala
Produced byPriyanka Dutt
StarringSantosh Sobhan
Malvika Nair
CinematographySunny Kurapati
Richard Prasad
Edited byJunaid Siddiqui
Music byMickey J. Meyer
Production
companies
Swapna Cinema
Mitra Vinda Movies
Release date
18 May 2023
Running time
154 minutes
CountryIndia
LanguageTelugu

Thursday, August 10, 2023

கன்னித்தீவு ( 1981) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ யூ ட்யூப்

தினத்தந்தி  தொடங்கிய  நாள்  முதல்  இன்று வரை  படக்கதையாக  வெளிவந்து  கொண்டிருக்கும்  கன்னித்தீவு ( சிந்துபாத்-லைலா)  கதைக்கும்  இந்தப்படத்துக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  ஒரு  சயிண்ட்டிஸ்ட். நாயகன்  சின்னப்பையனா  இருக்கும்போதே  குடும்பத்தைப்பிரிந்து  ஒரு  சமூக  விரோத  கும்பலிடம்  வேலைக்குப்போய் விட்டார்.அவர்  ஆராய்ச்சி  செய்து  மனிதன்  மாயமாக  மறைவது  எப்படி  என  கண்டறியும்  பிராஜக்ட்டில்  தீவிரமாக  இருக்கிறார். பல  வருடங்களுக்கு  முன்  பிரிந்து  சென்ற  அப்பாவைத்தேடி  நாயகன்  கன்னித்தீவுக்கு  செல்ல  முயல்கிறான், ஆனால்  அங்கே  போக  படகோட்டிகள்  யாரும்  தயாராக  இல்லை . அந்தத்தீவுக்குச்சென்றவர்கள்  உயிரோடு  திரும்ப  மாட்டார்கள்  என்ற  பயம்தான்  காரணம்


காமெடியனின்  தங்கை  சின்ன  வயதில்  காணாமல்  போய்  விட்டாள் . அவள்  முதுகில்  ஒரு  மச்சம்  இருக்கும், அவளைத்தேடி  காமெடியன்  நாயகனுடன்  சேர்ந்து  கன்னித்தீவுக்குக்கிளம்புகிறான்


 நாயகி  ஒரு  பத்திரிக்கை  ரிப்போர்ட்டர்.  சூடான  செய்தி  சேகரிக்க  நாயகனுடன்  இவரும்  கன்னித்தீவு  கிளம்புகிறார்

மூவரும்  கன்னித்தீவுக்குப்போய்  பின்  உயிருடன்  மீண்டார்களா?அவரவர்  இலட்சியத்தை  அடைந்தார்களா? என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ஜெய்  சங்கர் , வழக்கமாக  சிஐடி  சஙகர்  கேரக்டரில்  வருபவர்  இதில்  பல்லாண்டு  வாழ்க  எம் ஜி ஆர்  மாதிரி  நடிக்க  முயன்றிருக்கிறார். தனி  ரு  மனிதனாக  தீவில்  உள்ள  அப்பாவி  மக்கள்  அனைவருக்கும்  அட்வைஸ்  செய்வது  எல்லாம்  இவருக்கு  செட்  ஆகவில்லை 


 நாயகி  ஆக  ஆச்சரிய  அறிமுகமாய்  ராதிகா. ஸ்லிம்  பியூட்டி  ஆக  மாடர்ன்  டிரசில்  வியக்க  வைக்கிறார்


இன்னொரு  நாயகி  ஆக  கன்னித்தீவின்  ராணி  ஆக  நாயகன்  மீது  ஒரு தலைக்காதல்  கொள்ளும் பெண்ணாக  சீமா. உதட்டழகி . கவர்ச்சி  நடிப்பு 


காமெடியன்  ஆக  வெண்ணிற  ஆடை  மூர்த்தி , அவரது  வழக்கமான  டபுள்  மீனிங்  வசனங்கள்  இல்லாதது  ஆறுதல் 


நாயகனின்  அப்பாவாக  சயிண்ட்டிஸ்ட்  ஆக  சுதர்சன். அந்தக்கால  வில்லன். ஆள்  செம  ஹைட் 


மெயின்  வில்லன்  கேரக்டர்  டிசைன்  மாங்காய்  மடையன்  மாதிரி  வடிவமைக்கப்ப்ட்டிருப்பது  ஏனோ?  வில்லன்  ரோல்  ஸ்ட்ராங்க்  ஆக  இருந்தால்தான்  நாயகன்  அவனை  ஜெயிக்கும்போது  விசில்  பறக்கும் ? 


இளையராஜாவின்  இசையில் நான்கு  பாடல்கள் , சராசரி  தான், ஒன்று  கூட  சூப்பர்  ஹிட்  இல்லை . 111  நிமிடங்கள்  டைம்  ட்யூரேஷன்  பார்க்கும்போது  புரொடியூசருக்கு  நாமம்  என்பதை  குறிப்பால்  உணர்த்துகிறது 


டி ஆர்  ராமண்ணாதான்  இயக்கம், அவரது  நெடுங்கால  அசிஸ்டெண்ட்  ஆன  கனகசண்முகம்தான்  திரைக்கதை  . இவர்  அம்மன்  கோவில்  கிழக்காலே  படத்தில்  விஜய்காந்த்துக்கு  அப்பாவாக  நடித்தவர் 



சபாஷ்  டைரக்டர் ( டி ஆர்  ராமண்ணா)


1  ஒவ்வொரு  ஃபிரேமிலும்  ராதிகா, சீமா  என  யாராவது  குளித்துக்கொண்டே  இருக்கிறார்கள் 


2 கானக  ராணி   ஜைஜாண்டிக்கான  சிஐடி  ஆஃபீசரை  லவ்  பண்ணாமல்  ஆல்ரெடி  லவ்வர்  இருக்கும்  நாயகனை  லவ்  பண்ணுவது  போல  மனசாட்சியே  இல்லாமல்  திரைக்கதை  எழுதி  இருந்தாலும் ரசிக்கும்படி  இருக்கிறது 


3  பத்து  வயது  சிறுவர்கள்  ரசிக்கும்  விதத்தில்  மாயாஜால  மந்திரக்காட்சிகள்  அபத்தமாய்  படமாக்கிய  விதம் 


  சாங்க்ஸ்


1 ஏய் , ஒண்ணா ? ரெண்டா?

2  இது  ஒரு  புது  வித 

3 கந்தனே  கண்டேனே  காதில் 

4  பொன்னான  நேரம்  ராஜா 


  ரசித்த  வசனங்கள் 


1  பேரு தான்  கன்னித்தீவு , ஒரு  கன்னியைக்கூடக்காணோம்


2   இது  ஆண்  எலும்புக்கூடா?  பெண்  எலும்புக்கூடா?


கண் கூடா  எதுவும்  தெரியலயே? 


3  ராணி  , மன்னிச்சுக்குங்க , திடீர்னு  தூக்கத்துல  உங்க  கை  பட்டதும்  எதிரினு  நினைச்சு  உங்க  மேல  பாய்ச்ஞ்சுட்டேன்


 அதுக்காக  இப்படியா  போட்டு  உருட்றது , பொம்பள  கைக்குக்கூடவா  வித்தியாசம்  தெரியாது ?


4   ராணி, இந்தத்தீவில் இருந்து  தப்பிக்க  எங்களுக்கு  உதவி  செய்ததுக்கு  நன்றி


 நன்றியை  கொஞ்சம்  தள்ளி  நின்னு  சொன்னா  ஆகாதா? இவ்ளோ  நெருக்கத்தில்  தான்  சொல்லனுமா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகன்  அப்பாவைப்பிரிந்து  20  வருடங்கள்  கழித்துத்தேடுவது  ஏன்? அது  வரை  என்ன  செய்தார்? காமெடியன்  தங்கையைப்பிரிந்து  18  வருடங்கள்  கழித்து  திடீர்  என  தேடுவது  ஏன் ?


2  படிப்பறிவே இல்லாத  மக்களை  நாயகன்  அறிவுரை  சொல்லி  திருத்தப்பார்ப்பது  எல்லாம்  ஓவர் . வில்லன்கள்  கூட்டத்தில்  தனி  ஆளாக  சமாளிப்பதும்  காதில்  பூ 


3  மாயமாய்  மறையும்  வித்தை  என்பது  நல்ல  கான்செப்ட் , அதை  வைத்து  சுவராஸ்யமாய்  திரைக்கதை  எழுதாமல்  வீணடித்து  விட்டார்கள் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - நாயகிகக்ள்  குளியல்  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டைட்டிலும்  , கதைச்சுருக்கமும்  நன்றாக  இருந்ததால்  பார்த்தேன் , டப்பாப்படம் .  கமர்ஷியலாகவும்  ஓடவில்லை , விமர்சன  ரீதியாகவும்  பாராட்டுப்பெறவில்லை . ரேட்டிங்  2 / 5 


Kanni Theevu
Title card
Directed byT. R. Ramanna
Screenplay byKanagashunmugam
StarringJaishankar
Raadhika
CinematographyJ. G. Vijayam Jyothi
Edited byV. Rajagopal
Music byIlaiyaraaja
Production
company
Sri Ayvar Arts Films
Release date
  • 10 April 1981
Running time
111 minutes
CountryIndia
LanguageTamil