Tuesday, November 15, 2022

Nenu Meeku Baaga Kavalsinavaadini(2022)( தெலுங்கு) ( என்னை மாதிரி ஒருத்தன்தான் உனக்குத்தேவை) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


நாயகன்  ஒரு  வாடகை  டாக்சி  டிரைவர். ஒரு  நாள்  இரவு  ஒரு  சவாரி  கிடைக்குது . நாயகி நல்லா  சரக்கடிச்சுட்டு  போதைல  இருக்கு, அவளுக்கு  ஒரு  செக்யூரிட்டி.  டாக்சி ல  போகும்போது  நாயகன் சில  ரவுடிகளிடம்  இருந்து  காப்பாற்றுகிறான். அந்த  பழக்கத்துல  நாயகி  கிட்டே  நீங்க  ஏன்  இப்படிக்குடிச்சுட்டு  இருக்கீங்க ? உங்க  பிரச்சனை  என்ன?  உங்க  ஃபிளாஸ்பேக்  கதையை  சொல்லுங்கனு  கேட்கிறான்

நாயகி  அவ  கதையைச்சொல்ல  ஆரம்பிக்கிறா. நாயகிக்கு  ஒரு  அக்கா  இருக்காங்க . அக்காவுக்கு  ஒரு  காதலன். இருவரும்  கல்யாணம்  பண்ணிக்கலாம்னு  முடிவு  எடுக்கும்போது  அப்பா  நாயகிக்கு  மேரேஜ்  ஏற்பாடு  பண்ணிடறாரு. அக்காவுக்கு  அப்பாவிடம்  தன்  காதலை  சொல்ல  தைரியம்  இல்லை. இதனால  பாதிக்கப்பட்ட  அக்காவின்  காதலன்  பழி  வாங்க  முடிவு  எடுக்கிறான், தன்   காதலியின்  தங்கையை  அதாவது  நாயகியைக்காதலிப்பது  போல  நடிக்கிறான், இவன்  அக்காவின்  முன்னாள்  காதலன்  என்பது  தெரியாம  நாயகி  காதல் வலையில்  விழுந்திடறா


இப்போ  நாயகிக்கு  திருமண  ஏற்பாடுகள்  நடக்குது . விடிந்தால்  திருமணம். நாயகி  வீட்டை  விட்டு  ஓடி  வந்துடறா. காதலன்  உன்னை  மேரேஜ்  பண்ணிக்க  லவ்  பண்ணலை , உங்க  அக்கா , அப்பாவை  பழி  வாங்கத்தான்  இப்படிப்பண்ணுனேன்னு  சொல்லிட்டு  கிளம்பிடறான்


 இனிமே  வீட்டுக்குப்போனா  அம்மா, அப்பா  மதிக்க  மாட்டாங்க , ஊர்  தப்பாப்பேசும்னு  நாயகி  சொந்த  ஊருக்குப்போகாம சிட்டில  வேலை  தேடிக்கிட்டு  தனியா  இருக்கா. காதல்  தோல்வியைத்தாங்க  முடியாம  குடிப்பழக்கத்துக்கு  அடிமை  ஆகிறாள் 


இதுதான்  நாயகியின்  ஃபிளாஸ்  பேக்.  இப்போ  நாயகி  நாயகனிடம்  உன்  கதையைப்பற்றி  சொல்லு  என்று  கேட்கிறாள்.  நாயகனும்  அவனது  ஃபிளாஸ்பேக்  காதல்  கதையை  சொல்றான், அது  கிட்டத்தட்ட  அபூர்வ  சகோதரர்கள்  குள்ள  அப்பு  காதல்  கதை  போல  இருக்கு 


 இருவருக்கும்  ஒரு  அண்டர்ஸ்டேண்டிங்  வருது நாயகி  நாயகனிடம்  தன்  காதலை  வெளிப்படுத்தலாம்னு  நினைக்கும்போது  ஒரு  திருப்பம். நாயகி  காதலனுடன்  ஓடிப்போனாள்  இல்லையா? அப்போ அவளுக்கு  ஒரு திருமண  ஏற்பாடு  அப்பா  மூலம்  நடந்ததே4  அந்தக்கல்யாண  மாப்பிள்ளை  தான்  நாயக்ன் .  அவனது  ஃபிளாஸ்பேக்  என  ஒரு  காதல்  தோல்விக்கதையை  எடுத்ஹு  விட்டானே  அது  கற்பனை கதை 


 இந்த  விஷயம்  தெரிந்த பின் நாயகி  என்ன  முடிவு  எடுத்தா ?  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகனா   கிரண் (  வின்னர்ல  நடிச்ச  நடிகை  கிரண்  வேற  இவர்  வேற ) . இவர்தான்  கதை  எழுதி  இருக்கிறார். இயல்பான  நடிப்பு .  சண்டைக்காட்சிகளில் .  கலாய்ப்புக்காட்சிகளில்  சராசரி  தெலுங்கு  ஹீரோ  போல  முத்திரை  பதிக்கிறார் .


நாயகியாக ச்ஞ்சனா  ஆனந்த். குடிபோதையில்  இருக்கும்போது  ஒரு  விதமான  நடிப்பு , ஃபிளாஸ்பேக்  காட்சியில்  குடும்பப்பாங்கான  நடிப்பு , க்ளைமாக்ஸ்  காட்சியில்  உணர்ச்சி  பொங்க  நடிப்பு  என   குருவி  தலையில்  பனங்காய்  வைத்திருக்கிறார்    டைரக்டர்  , சமாளிக்கிறார் 


 நாயகனின்  கற்பனை  ஃபிளாஸ்பேக்கில்  லாயர்  துர்காவாக  வரும்  சோனு  தாக்கூர்  கொஞ்ச  நேரமே  வந்தாலும்  போட்டுத்தாக்குகிறார்.  துறுதுறு  சுறு சுறு  நடிப்பு 


நாயகியின்  அக்காவாக  வரும்  நவீனா  ரெட்டி  நாயகியை  விட  அழகாக  இருக்கிறார் நாயகியின்  அக்காவின்  காதலராக  பிறகு  நாயகியைக்காதலித்து  ஏமாற்றும்  காதலராக  சித்தார்த் மேனன்  கச்சிதமான  வில்லன்  நடிப்பு. ஆனா  திரைக்கதையில்  நம்பகத்தன்மை  இல்லாததால்  இவரது  கேரக்டர்  டிசைன்  ஒட்டவில்லை 


இசை  மணி  சர்மா . அழகன்  புகழ்  மரகத  மணி  தெலுங்குப்பட  உலகில்  மணி சர்மா  என்பது  உலகம்  அறிந்த  உண்மை .  சுண்ணாம்பு  சேர்க்காத  கள்ளு  என்னைக்கண்டாலே துள்ளுமடா  என்ற  ஓப்பனிங்  குத்தாட்டப்பாடலும்  சரி  க்ளைமாக்ஸில்  படம்  முடிந்த  பின்  வரும்  கொண்டாட்டப்பாட்டும்  சரி  செம  ஹிட்  அடிக்கும் 

ரவி  கே  நள்ளியின்  ஒளிப்பதிவு  கண்களுக்கு  இதம் பிரவின்  புடியின்  எடிட்டிங்  அளந்து வைத்தது  போல்  இருக்கிறது. ரெண்டே  கால்  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  முதல்  30  நிமிடங்கள்  நாயகன் நாயகி  அறிமுகப்படலம் , அடுத்த  30  நிமிடங்கள்  நாயகியின்  ஃபிளாஸ்பேக்  . இப்போ  இடை  வேளை . பிறகு  நாயக்னின்  கற்பனை  ஃபிளாஸ்பேக்  கதை  35  நிமிடங்கள் . கடைசி  45  நிமிடங்கள்  நாயகன் - நாயகி  காதல்  காட்சிகள்   என  கனக்ச்சிதமாக  பிரித்து  வைத்திருக்கிறார்கள் 


திரைக்கதையில்  நம்பகத்தன்மை  இல்லாததால்  ஒரு  நல்ல  காதல்  கதையாக  வந்திருக்க  வேண்டிய  படம்  மிஸ்  ஆகி  விட்ட்து  என்றுதான்  சொல்ல  வேண்டும் 


ரசித்த  வசனங்கள் 


1  பொண்ணுங்க  தானா  முன்  வந்து  கை  கொடுத்தா  ஓக்கே ? நாம  அவங்களுக்கு  கை கொடுக்கக்கூடாது ?


2  பொண்ணுங்க  பிரேக்கப்க்கு  முன்னே  கிஸ்  அல்லது  ஹக்  இப்படி  ஏதாவது  நினைவுச்சின்னமா   தர்றது  இப்பொ  ட்ரெண்ட் 


3 ஆம்பளைக்கு  குடிக்க    பெருசா  காரணம்  எதுவும்  தேவை  இல்லை , ஆனா  ஒரு  பொண்ணு  இந்த  அளவுக்குக்குடிக்கறா  எனில்  ஏதாவது  முக்கியமான  காரணம்  இருக்கனும்


4   காதல்னா  என்ன?னு    எனக்குப்புரிவதற்கு  முன்பே  உன்  மேல  காதலில்  விழுந்துட்டேன் 


5 நம்மை  விட  இவன் நம்ம  பொண்ணை  நல்லாப்பார்த்துக்குவான்கற  நம்பிக்கை  வரும்போதுதான்  பெண்ணின்  பெற்றோர்  மகிழ்ச்சி  அடைகின்றனர் 


6 வீட்ல  கல்யாணப்பேச்சை  எடுக்கும்போதுதான்  ஒவ்வொரு  பெண்ணுக்கும்  நாம  ஒரு  லவ்வுல  இருக்கோமல்ல?  என்பது ஞாபகம்  வரும் 


7  எத்த்னையோ  முறை  சாக  முயற்சி  பண்ணியும்  என்னால சாக முடியலைன்னா  ஏதோ  ஒரு  வேலை  நான்  செய்ய  மிச்சம்  இருக்குனு  அர்த்தம் 


8   இலை  உதிருதேனு  மரம்  கவலைப்பட்டா  அதனால  புது இலைகளை  உருவாக்க  முடியாது 


9  ஏய்  மிஸ்டர் , கண்  தெரியாதா? உனக்கு ?


 ,மிஸ்!  நீங்க  அந்தப்பக்கமா   திரும்பி  நின்னுக்கிட்டா  உங்க  கண்  எனக்கு  எப்படி  தெரியும் ?  திரும்பி  நில்லுங்க 


10   டேய். அவளைப்பார்த்தா  ஆவரேஜ்  பொண்ணுமாதிரிதான்  இருக்கா 

  என்னை  மாதிரி  காஞ்சு போனவனுக்கு   சராசரிப்பொண்ணே  சரித்திர  அழகாத்தான்  தெரியும்


11   உங்க  கைல  என்ன?


 விஷம் , உங்க  கைல ?


இதுவும்  விஷம்  தான் , சியர்ஸ்


12  ஒரு  பெண்ணை  கரெக்ட்  பண்ணனும்னா  ஒரு    சோகமான  ஃப்ளாஸ்பேக்  லவ்  ஸ்டோரியை  ரெடி  பண்ணிக்கனும் 



  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஒரு  பெண்ணைக்காதலித்தவன்  காதல்  கை  கூடலைன்னா  அவளைபழி  வாங்க  அவ  தங்கையைக்காதலிப்பது  போல்  நடிப்பது, பின்  கை  விடுவது  ஓக்கே , ஆனா அவளை  தொடாம  அனுப்புவது  நல்லவனுக்குத்தான்  சாத்தியம் , இவன்  நல்லவனா  இருந்தா  பழி  வாங்கத்தயரா  இருக்க  மாட்டான்,  பழி  வாங்க  முடிவெடுத்தவன்  அரைகுறையா  கிளம்ப  மாட்டான்.  தங்கையை  கர்ப்பம்  ஆக்கி   வாழா  வெட்டியாய்  ஆக்கி  இருப்பான்,   இரண்டும்  கெட்டான்  கேரக்டரா  இருக்கே? 


2  நாயகியின்  அக்கா  லவ்  ப்ண்ணும்போது  காதலனுடன்  ஊரெல்லாம்  சுத்த்றா , ஆனா   தங்கைக்கு  காதலன்  யார்னே  தெரியாதா? அக்கா  தன்  தஙகையிடம்  இதுதான்  என்  காதலன்னு  ஃபோட்டோ  கூட  காட்டி  இருக்க  மாட்டாரா? 


3   விடிஞ்சா  மேரேஜ் . நாயகிக்கு  மேரேஜ்ல  இஷ்டம் இல்லை ஓக்கே  ஆனா  மாப்ளை  யார்னு  கூட  தெரியாதா?  பெண்  பார்க்க  வந்திருப்பார் , பத்திரிக்கை  தர  வந்திருப்பார்  ,அட்லீஸ்ட்  ஃபோட்டோ  கூடவா  வீட்ல  காட்டி  இருக்க  மாட்டாங்க . க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் வேணும்கறதுக்காக  இப்படி  ஆடியன்ஸ்  காதுல  10  முழ்ம்  பூ  சுத்துனா  எப்படி ? 


4   ஓப்பனிங்  சீன்ல  நாயகியின்  செக்யூரிட்டி  வாங்க  மேடம்  போங்க  மேடம்னு  மரியாதையா  பேசறான், திடீர்னு  நீ , வா ,  போ  அப்டினு  பேசறான். எப்படி ? 



சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  நம்பகத்தன்மையே  இல்லாத  லவ்  ஸ்டோரி , பொழுது  போகலைன்னா  இடை  வேளை  வரை  பார்க்கலாம்  ரேட்டிங் 2 / 5 

Nenu Meeku Baaga Kavalsinavaadini
Nenu Meeku Baaga Kavalsinavaadini.jpeg
Theatrical release poster
Directed bySridhar Gade
Written byKiran Abbavaram
Produced byKodi Divya Deepthi
StarringKiran Abbavaram
Sanjana Anand
Sonu Thakur
CinematographyRaj K. Nalli
Edited byPrawin Pudi
Music byMani Sharma
Production
company
Kodi Divyaa Entertainments
Release date
  • 16 September 2022
Running time
130 minutes[1]
CountryIndia
LanguageTelugu

Monday, November 14, 2022

சர்பத் ( 2021) – சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ நெட்ஃபிளிக்ஸ்


தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகாமல்  நேரடியாக   கலர்ஸ்  டி வி யில்  வெளியான  படம்  இது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்

 

சம்பவம் 1 – நாயகனின்  அண்ணன்  ஆஃபிஸ்ல  ஒர்க் பண்ற  சக  ஸ்டாஃபை  லவ்  பண்றார், ப்ரப்போஸ்  பண்றப்ப  என்  வீட்ல  வந்து  பேசுங்கனு  சொல்லிடுது. வீட்டுக்குப்போனா  அப்பா  வழக்கம்  போல  ஜாதி  பேதம்  காட்டி  அனுப்பிடறார். அந்தப்பொண்ணுக்கு  வேற  பக்கம்  மேரேஜ்  ஆகி  பின்  விதவை    ஆகிடுது. இன்னும்  இவரு  லவ்  மோடுல  தான் இருக்காரு , வீட்ல  பிர்ஷர்  தாங்காம  மேரேஜ்க்கு  ஓக்கே  சொன்னதால  ஒரு  பெண்ணைப்போய் பார்க்கறாரு, இரு  வீட்டு  தரப்பிலும்  சம்மத்ம்  என்ற  நிலையில்  நாயகனின்  அண்ணனுக்கு  ஒரு  ஃபோன்  கால்  வருது. நீங்க  பெண்  பார்த்தீங்களே  அந்தபொண்ணும் நானும்  லவ்வர்ஸ், வழி  விடுங்க  வழி  விடுங்கனு  சொல்றாப்டி. என்ன? ஏது?னு  பெண்  தரப்பில்  விசாரிக்கமல்  மேரேஜை  நிறுத்திடறாங்க



சம்பவம்  2 - திரும்ணத்தை  நிறுத்தினதா;ல  பெண்ணோட  அண்ணன்  நாயகனின்  அண்ணனை  அடிச்சுடறான், உடனே  நாயகன்  பெண்ணோட  அண்ணனை  அடி  வெளுத்துடறார். அவன்   பழி  வாங்க  கங்கணம்  கட்டிக்கிட்டு  இருக்கான்

 

 சம்பவம் 3   நாயகன்  பஸ்  ஸ்டாப் ல  அவரு  பாட்டுக்கு  நின்னுட்டு  இருக்காரு , நாயகி  வந்து  பளார்னு  கன்னத்துல  ஒண்ணு  வைக்குது. இவரு  ஷாக்  ஆகிடறார், நாயகியின்  தோழி  குறுக்கிட்டு  நான்  சொன்ன  பார்ட்டி இவன்  இல்லை  வேறனு  சொல்லி  கூட்டிட்டுப்போய்டறா. ஏதோ  ஆள்  மாறாட்டம், ஆனா தன்னை  பளார்னு  நாலு  பேர்  முன்னால  அடிச்ச  நாயகி  மேல  கோபம்  வர்ல  காதல்  வருது . நாயகி  பின்னாலயே  சுத்தறாரு, நாயகிக்கும்  இஷ்டம்தான், ஆனா  வெளிக்காட்டிக்கலை. இப்படியே  போய்க்கிட்டு  இருக்கும்போது  நாயகி  கிட்டே  நாயகன்  ப்ரப்போஸ்  பண்றார்,  அண்ணனைப்பாருங்கனு  சொல்றா. அண்ணனை  மீட்  ப்ண்ணறப்ப  ஒரு  திருப்பம், இது  அண்ணனுக்குப்பார்த்து  கேன்சல்  ஆன  பொண்ணு .  ஆல்ரெடி  பஞ்சாயத்து  இருக்கு .  


சம்பவம் 4   நாயகியின்  அண்ணன்  வேற  ஒரு  பெண்ணை  லவ்  பண்றாரு. அதுக்கு  நாயக்ன  உதவுனா  தன்  தங்கையை  கட்டி  வைக்க  சம்மதம்க்றாரு.  வடிவேலு  காமெடி  ல   பேக்கரி  உனக்கு , உன்  அக்கா  எனக்கு  அப்டினு  சொன்னான், ஆனா  அந்த  டீலிங்  எனக்கு  பிடிச்சிருந்ததுனு  சொல்வாரே  அது  தான்  நினைவு  வருது 


மேலே  சொன்ன  4  சம்பவங்களையும்  ஒரே  நேர்  கோட்டுக்கதையா  சொல்லாம  நான்  லீனியர்  கட்ல சொல்லி  இருப்பதால்

 இதைப்படிப்பதை  விட  பார்ப்பதற்கு  படம்  சுவராஸ்யமாகவே  இருக்கு 


  நாயகனாக  கதிர் . அடக்கமான  தோற்றம், அப்பப்ப  கோபப்ப்டும் கேரக்டர். அண்ணன்  மேல் பாசம் உண்டு  ஆனா  வெளிக்காட்டிக்கிட்டதில்லை 

நயகனின் அண்ணனாக  விவேக்  பிரசன்னா  கனகச்சிதமான  நடிப்பு, ஆரம்பத்தில்  முசுடு  புடிச்ச  கேரக்டர்  போல்  காட்டும்போது  எரிச்சல்  அடைய  வைக்கிறார். போகப்போக  கேரக்டர்  டிசைன்  பிடிபட்டதும்  ரசிக்க  வைக்கிறார்


 நாயகனின்  நண்பனாக   புரோட்டா  சூரி. படம்  முழுக்க  நாயகனுடன்  வரும்  வாய்ப்பு , ஆங்காங்கே  கவுண்ட்டர்  காமெடியில்   ஜொலிக்கிறார்


நாயகியாக  ரகசியா  கோரக். பேரும்  வாயில்  நுழைய  சிரமப்படுது  , இவர்  முகமும்  மனதில்  தங்க  டைம் எடுக்குது . புன்னகைக்கும்  காட்சியில்  அழகாக  இருக்கிறார்


நாயகனின்  தந்தையாக  வரும்  ஜி  மாரிமுத்து  கவனிக்க  வைக்கும்  நடிப்பு . குணச்சித்திர  நடிப்புக்கு  அப்பா  ரோலுக்கு  பொருத்தமான  இன்னொரு  நடிகர் 


சபாஷ்  டைரக்டர்


1  திண்டுக்கல்லில்  சின்னாளப்பட்டி  என்ற  கிராமத்தில்  பெரும்பானமையான  காட்சிகளை  படமாக்கி  லோ  பட்ஜெட்டில்  படத்தை  முடித்த  விதம் குட் 


2  விசு  படம்  வி  சேகர்  படம்  பார்பப்து  போல  குடும்பப்பாங்கான  கதையில்  காதல்  கதைகள்  மூன்றை  புகுத்தி  இருப்பது  சாமார்த்தியம் 


3  ஜி கே  பிரசன்னா  வின்  எடிட்டிங்  நான்  லீனியர்  கட்டில்  சுவராஸ்யம்  சேர்க்கிறது பிரபாகரனின்  ஒளிப்பதிவு  கண்களை  உறுத்தாமல்  கிராமத்து  அழகை  பதிவு.  செய்திருக்கிறது   அஜிஸ்-ன்  இசை  பின்னணி  இசை  சராசரி  தரத்துக்கும்  மேலேயே  இருக்கிறது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லோ  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படம்.  யதார்த்தமான  காதல்  கதைகள்  , பார்க்கலாம்  ரேட்டிங்  2.5 / 5 



சர்பத்
வகைநகைச்சுவை நாடகம்
இயக்கம்பிரபாகரன்
நடிப்புகதிர்
சூரி
ரகசியா கோரக்
அஸ்வத்
இசைஅஜீஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்இலலித் குமார்
ஒளிப்பதிவுபிரபாகரன்
தொகுப்புபிரசன்னா ஜி. கே.
தயாரிப்பு நிறுவனங்கள்7 ஸ்கிரீன் ஸ்டுடியோ
Viacom18
விநியோகம்நெற்ஃபிளிக்சு
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்

Sunday, November 13, 2022

குலேபகாவலி (1955) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)


  ஸ்பாய்லர்  அலெர்ட்


பூரொப்பு  எனும்  நாட்டின்  மன்னனுக்கும், மனைவிக்கும்  திருமணம்  ஆகி  பல  வருடங்கள்  ஆகியும்  குழ்ந்தை  இல்லை . மழலை  செல்வத்துக்காக  முதல்  மனைவியே   மன்னருக்கு ஒரு  பெண்ணைப்பார்த்து  கல்யாணம்  கட்டி  வைக்கிறாள். இப்போ  மகாராணி ,  சின்ன  ராணி  இருவருமே  கர்ப்பம்  ஆகிறார்கள் . ஒண்ட  வந்த  பிடாரி  ஊர்ப்பிடாரியை  விரட்ற  மாதிரி  இளைய  மனைவி  மூத்த  மனைவியை  கட்டம்  கட்ட  திட்டம்  போடறா. அரண்மனை  ஜோதிடர்  துணை  கொண்டு  சதி  செய்கிறாள். அதன்படி முதல்  தாரத்துக்குப்பிறக்கப்போகும்  குழந்தையால்  மன்னருக்கு  ஆபத்து  இருக்கிறது, குழந்தையின்  முகத்தில்  மன்னர்  விழித்தால் அவர்  கண் பார்வை  போய்  விடும்  என  அள்ளி  விடறாங்க .


 மன்னர்  அதை  நம்பி  மகாராணியை  ஒரு  குறிப்பிட்ட  எல்லைக்கு  அப்பால்  விட்டு வந்து  அரண்மனைக்கு  வர  தடை  போட்டு  விடுகிறார்.  20  வருடங்கள்  ஓடுது 


 இளைய  ராணிக்கு  இரண்டு  மகன்கள் .,  முதல்  ராணிக்கு  ஒரு  மகன் . அவன்  தான்  நாயகன் 


நாயகனுக்கு  இப்போதான்  தன்  ஃபிளாஸ்பேக்  கதை  சொல்லப்படுது . இப்போதே  மன்னரைப்போய்  சந்தித்து  நியாயம்  கேட்கிறேன்  என  கிள்மபும்போது  அம்மா  தடுத்து  விடுகிறாள்


  சில  நாட்கள்  கழித்து  மன்னர்  வேட்டையாட  அந்த  ஏரியாவுக்கு  வர்றார், ஒரு  ஆபத்தில்  மாட்டிக்கொள்கிறார். அவரை  நாயகன்  காப்பாற்றுகிறான்

அப்போது  ஒரு  விஷ  செடியின்  சாறு  பட்டு  மன்னரின்  கண்கள்  பார்வை  இழக்கின்றன. காக்கை  உட்கார  பனம்பழம்  விழுந்த  கதைதான் .

நாயகன்  கைது  செய்யப்படுகிறான். மன்னரின்  கண்  பார்வை  பறி  போனதுக்கு  காரணமாக  ஆனதுக்கு  தண்டனை  விதிக்கப்படுகிறது / அப்போது  அரண்மனை  வைத்தியர்  இதற்கு  ஒரு  பரிகாரம்  இருக்கிறது . நாகாவலி  எனும்  நாட்டில்  உள்ள  குலேப்  எனும்  மலரைகொண்டு  வந்தால்  அந்தச்சாறை  கண்களில்  விட்டு  பார்வை  பெறலாம்  என்கிறார்


  பொய்யான  ஜோதிடத்தைப்பொய்ப்பிப்பதற்காக  நாயகன்  அந்த  மலரைக்கொண்டு  வரக்கிளம்புகிறான்


நாயகன்  ஒரு  பாதையில்  போக    இரண்டாவது  ராணியின் மகன்கள்  இருவரும்  இதே  நோக்கோடு  பயணிக்கின்றனர் 


போகும்  வழியில்  லக்பேஷ்வா  எனும்  அழகி  நடத்தும்  சூதாட்ட  விடுதியில்   அடிமைகளாக  மாட்டிகொள்கின்றனர்  இளைய தாரத்து  மகன்கள் .  பகடை  விளையாட்டு  நடைபெறும் .  அதில்  டெபாசிட்  தொகையாக  10,000  பொன்கள்  வசூலிக்கப்படும் . கேட்ட  எண்கள்  சரியாகபோட்டு  விட்டால்  அழகி  ஜெயித்தவர்  ஆவார்.  போட்டி  இட்டவர்  அடிமை  ஆவார் .  பல  நாட்களாக  இந்த  விடுதியில்  அந்த  அழகி  தான்  வெற்றி  பெறுகிறார்


 இதில்  ஏதோ  சூது  இருக்கிறது  என  நாயகன்  அந்த  விடுதியில்   ஒளிந்திருந்து  வேவு  பார்த்து  ரகசியத்தை  க்ண்டு  பிடித்து  ஆட்டத்தில்  வெற்றி  பெறுகிறார். 


அந்த  அழகிக்கு  இரு  சகோத்ரிகள் , இருவரும்  வெவ்வேறு  தேசத்தின்  ராணிகள் . அவர்களையும்  ஜெயித்து  நாயகன்  எப்படி  மலரை  பெற்று  அப்பாவைக்காப்பாற்றுகிறான்  என்பதே  கதை 


மொத்த  படமான  ரெண்டே  முக்கால்  மணி  நேரத்தில் பகடை  சூதாட்டக்காட்சிகள்  மட்டும்  ஒரு  மணி  நேரம்  இழுத்து  விடுகிறது. சக்கரவர்த்தித்திருமகள்  படத்துல்  பாடல்  வரி  வடிவில்  கேள்விகள் , இதில்  நேரடியான  கேள்விகள் 



  நாயகனாக  எம் ஜி ஆர். வழக்கமான  எம்  ஜி  ஆர்  பட  டெம்ப்ளேட்  சீன்கள் குறைந்து வாண்டு  மாமா  எழுதும்  வீர  பிரதாபன்  கதை  ஃபார்முலாவில்  திரைக்கதை  பயணிக்கிறது


டி ஆர் ராஜகுமாரி , ராஜ  சுலோசனா , ஜி  வரலட்சுமி  மூவரும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் .


 சந்திரபாபு , கே ஏ  தங்கவேலு , , ஏ  கருணாநிதி காமெடிக்கு 


விஸ்வநாதன்  ராம  மூர்த்தி  இசையில்   12  பாடல்கள் , அதுல  சொக்கா  போட்ட  நவவாபு  செல்லாது  உன்  ஜவாபு  செம  ஹிட் 

சபாஷ்  டைரக்டர் ( டி ஆர்  ராமண்ணா)


1  திரைக்கதையில்  மசாலா  அய்ட்டங்கள்  கச்சிதமாக  சேர்த்து  போர்  அடிக்காமல்  சம்பவங்களை  கோர்த்து  சொன்னது 


2  பகடை  விளையாட்டு  ஒரு  டம்மி  சீன்  என்றாலும்  அதற்கான  பில்டப்  செம 


3  மூன்றாவது  ராணியின் கேள்விகளுக்கு  நாயகன்  அனாயசமாய்  பதில்  சொல்லும்  காட்சிகளில்  வசனகர்த்தா  உள்ளேன்  அய்யா  சொல்கிறார் 


  ரசித்த  வசனங்கள் ( அறிவுப்போட்டி  கேள்வி  பதிலகள் ) 


1 கடலின்  அலைகளை  எண்ண  முடியுமா?

 முடியும், பெண்களின்  மனதை  அளக்க  முடிந்தால் 


2  வெற்றிக்காக  போடப்படும்  பூ மாலை  அறிவுக்கா? அந்தஸ்துக்கா?

  சிங்காசனம்  மக்களுக்காகவா? மகாராணிக்காகவா?


2  நஞ்சினும்  கொடியது  எது?

 நயவஞ்சகம்  படைத்த  வஞ்சியர்  உள்ளம்


3  வாளை  விடக்கூரியது  எது ?


 மங்கையரின்  விழி அம்பு 


4  கவலைக்கு  மருந்து  எது ?


மது  மயக்கம்  கொண்டவனுக்கு  மது , மங்கையர்  பித்து  பிடித்தவனுக்கு  பெண் ,  வாரிசு  அற்றவனுக்கு  ம்ழலையின்  சிரிப்பு 


5  பெண்களூக்கு  எதிரி  ஆண்கள் தானே?


 இல்லை  அவர்க்ள்  இளமையும், அழகும்


6  கன்னிப்பெண்ணின்  சத்ரு ?


 நெருங்கி  வரும் கல்யாண  நாள் 


7  பெண்ணுக்கு  இன்பமும்  துன்பமும்  எப்போது  ஏற்படுகிறது ?


காதலிக்கும்போது 


8  பெண்களை  கோவைபப்ழம் , பூங்கொடி  என்  பலவிதமாக  வர்ணிக்கிறார்களே, ஆண்களை  ஏன்  வர்ணிப்பதில்லை ?

அழகுப்புகழ்ச்சியைக்கேட்டு ஆண்கள்  பூங்கொடி  போல  துவண்டு  விடுவதும்  இல்லை , கோவைப்பழம்  போல்  கண்ணிப்போவதும்  இல்லை 


9  கற்பு  என்பது  என்ன?


கற்பு  என்பது  ஒரு  விசித்திரமான  நெருப்பு  கணவர்  ஏற்றினால்  அது  தீபம், மற்றவர்  ஏற்றினால்  அது  தீ


10  ஒரு  பெண்ணை  ஆண்  எதற்கு  கல்யாணம்  செய்து  கொள்கிறான்?


ஊர்  விஷயங்களையும், உலக  விஷயங்களையும்  தெரிந்து  கொள்ள  ( ஊர்  வம்பை  ஓசில  தெரிஞ்சுக்க )


11  ஆட்சி   பீடத்துக்கு  ஏற்றவர்க்ள்  யார்? ஆண்களா? பெண்களா?


மக்கள்  ஆதரவு   எனும்  நூல்  மூலம்  விடப்படும்  பட்டம்  அது , யார்  வேண்டுமானாலும்  பறக்க  விடலாம்


12  அவனின்றி  ஒரு  அணுவும்  அசையாது  என்பது   வேதம் , விளக்கம் ?


 அனுபவம்  முந்தியது  , வேதம்  பிந்தியது 


?


ஆன்றோர்களின்  முது மொழியைக்கேட்டு  அவர்கள்  ஆசியைப்பெற்றவர்களுக்கு  அவன்  ஆண்டவன் , சிந்தித்துப்பார்த்து  தன்னை  சீர்  திருத்திக்கொள்ளும்  நாத்திகருக்கு   அவன்  அறிவாளி


 உலகத்தை  வெறூத்த  ஞானிகள்  சொல்வது  பொய்யா?


 உலகத்தை  வெறுப்பவன்  ஞானி  அல்ல   உலகத்தை  உணர்ந்தவன்தான்  ஞானி  


13  தாய்க்குப்பின்  தாரம்  என்பது  உண்மையா? எப்படி ?


  தாய்க்குப்பின்  ஆண்களைக்கண்டிப்பது  மனைவிதானே?


14 அரசன்  முதல் ஆண்டி  வரை  எல்லோராலும்  வெல்ல  முடிவது  எது? முடியாதது  எது ?


  விதியை  வெல்ல  முடியும்  மதியை  வெல்ல  முடியாது



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   குழந்தையால்  தானே  ஆபத்து ? மன்னர்  எதற்காக  ராணியை  நாடு  கடத்தனும் ? குழந்தையை  கவனிக்க  ஒரு  தாதியை  ரெடி  பண்ணி  ராணியை  அந்தப்புரத்துலயே  தங்க  வெச்சிருக்கலாமே? 


2 பகடை  சூதாட்டத்தில்  ஒரு  அழகி  எல்லாரையும்  ஜெயிக்கிறாள்.  தோற்றவர்களுக்கு  அந்த  ரகசியம்  தெரியும்,தாங்கள்  எப்படி  ஏமாற்றப்பட்டோம்  என்பதை  ஊர்  பூரா  பரப்பி  விட  மாட்டார்களா?  உலை  வாயை  மூடுனாலும்  ஊர்  வாயை  மூட  முடியாதே?


3  ஒவ்வொரு  நாட்டின்  இளவரசனும் பகடை  சூதாட்டத்தில்   தோற்கும்போது  அடிமை  ஆக  வேண்ட்ய  சூழல் . அப்போது  அந்த  சூதில்  நிகழந்த  தில்லுமுல்லுவை  சொல்லி  எதிர்க்க  மாட்டார்களா?


4  போட்டிகளில்  முதல்  கட்டமா  வீரப்போட்டினு  ஒரு  ஆள்  கூட  வாட்போர்  புரிவது  ஓக்கே , அறிவுப்போட்டி  என  சில  கேள்விகளுக்கு  பதில்  சொல்வது  கூட  ஓக்கே , கடைசி  போட்டியாக  புலியுடன்  மோதனும்னு  சொல்வது மடத்தனமா  இருக்கு . இதெல்லாம்  நடைமுறைல  சாத்தியமா? நல்ல  வேளை  சிறுத்தையை  விட  வேகமா  ஓட்டப்பந்தயத்துல  ஜெயிக்கனும்னு  போட்டி  வைக்கலை 


5   போட்டிகளில்  வென்றதால் நாயகனுக்கு  நல்ல  வரவேற்பு  மரியாதை . அங்கேயே  இரவு  தங்கிட்டு  காலைல  போலாமே?  நாயகன்  எதற்காக  லாட்ஜ்ல  தங்கறார்? ( அப்போதானே  எதிரிகள்  அந்த  மலரை    அபகரிக்க  முடியும்னா? ) 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  சூப்பர்  டூப்ப்ர்  ஹிட்  படம்.  குழந்தைகள்  பார்க்க  வேண்டிய  படம் ,  லயன் காமிக்ஸ் , முத்து  காமிக்ஸ்  படிக்கும்  சிறுவர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங்  2/75 / 5  






குலபகாவலி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
சந்திரபாபு
ஏ. கருணாநிதி
கே. ஏ. தங்கவேலு
டி. ஆர். ராஜகுமாரி
ராஜசுலோச்சனா
ஜி. வரலட்சுமி
ஈ. வி. சரோஜா
வெளியீடுசூலை 291955[1]
நீளம்14998 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
a

இசை[தொகு]

படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்தனர். பாடல் வரிகளை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.[3][4]

#பாடல்பாடகர்கள்நீளம்
1."மயக்கும் மாலை"  ஜிக்கிஏ. எம். ராஜா4:27
2."ஞாபகமே நபி"  எஸ். சி. கிருஷ்ணன், நாகூர் அனிபா2:51
3."அச்சு நிமிர்ந்த வண்டி"  ஜே. பி. சந்திரபாபுஏ. ஜி. ரத்னமாலா3:12
4."வில்லேந்தும் வீரரேல்லாம்"  திருச்சி லோகநாதன்பி. லீலாஜி. கே. வெங்கடேசு6:33
5."மாய வலையில்"  டி. எம். சௌந்தரராஜன்1:13
6."வித்தார கள்ளியெல்லாம்"  டி. எம். சௌந்தரராஜன்1:29
7."கையை தொட்டதும்"  டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா2:37
8."நா சொக்கா போட்ட நவாபு"  ஜிக்கி3:36
9."ஆசையும் நேசமும்"  கே. ஜமுனா ராணி3:37
10."பகாவலி நாட்டிலே"  டி. எம். சௌந்தரராஜன்3:47
11."கண்ணாலே பேசும்"  ஜிக்கி3:54
12."அறிவுப் போட்டி" (வசனங்கள்)ம. கோ. இராமச்சந்திரன்3:26


Saturday, November 12, 2022

அரச கட்டளை (1967) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)


ஜெயலலிதாவுக்கு  இந்தப்படத்துக்குப்பின்  தான்  கவர்ச்சிக்கன்னி  என்ற  பட்டப்பெயர்  கிடைத்தது என  விக்கி பீடியா  சொல்லுது . அப்படி  ஒரு  பட்டம்  அவருக்கு  இருக்குன்னே  எனக்கு  இப்போதான்  தெரியும்  இந்தப்படத்துக்கு  முதலில்  வைக்கப்பட்ட  டைட்டில்  பவானி .  பிறகுதான்  டைட்டிலை  மாற்றினார்கள். இந்தப்படம்  70  நாட்கள்  தான்  ஓடியதாம். கமர்ஷியலாக  இது பெரிய  வெற்றிப்பட,ம்  இல்லை  என்றாலும்  எம்  ஜி ஆர்  ரசிகர்களைத்திருப்திப்படுத்தியதாம்

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாட்டின்  மன்னனுக்கு  நாட்டில்  என்ன  நடக்கின்றது  என்பதே  சரியாகத்தெரியவில்லை ,  அமைச்சர்கள் , தளபதி  எல்லோரும் சேர்ந்து  மன்னரின்  கண்களுக்கு  கடிவாளம்  இட்டு  விடுகின்றனர் .  தொட்டதுக்கெல்லாம்  வரி , தொடாமல்  இருந்தாலும்  வரி  என  தாளிப்பதால்  மக்கள்  கொந்தளித்துப்போய்  இருக்கின்றனர் . அப்படி கொந்தளித்த  ஒரு  போராட்டக்குழுவின்  தலைவன்  மன்னரைக்கொன்று  விட்டால்  ஆட்சி  அகலும்  என  கொலை  முயற்சியில்  ஈடுபடுகின்றான். கைது  செய்யப்பட்டு  மன்னர்  முன்  நிறுத்தப்படுகிறான்.


 அப்போது  புரட்சி  இளைஞன்  நாட்டின்  நிலைமையை  மன்னனுக்கு  எடுத்துக்கூற  மன்னன் மனம்  மாறி மக்களின்  நாடித்துடிப்பை  உணர்ந்த  நீயே  இனி  தலைவன் மன்னன்.  இது  அரச  கட்டளை , நான்  நாடாளத்தகுதி  இல்லாதவன், எனக்கான  த்ண்டனையை  நானே  கொடுத்துக்கொள்கிறேன்  என  தற்கொலை  செய்து  கொள்கிறான். சாகும் முன்  தன்  ஒரே மகளை  இனி இவள்  உனக்கு  தங்கை  என  கூறி  இறந்து  விடுகிறார்


  கடும்  எதிர்ப்புகளுக்கு  இடையே  புரட்சி  இளைஞன்  ஆட்சிப்பொறுப்புக்கு  வருகிறான். பக்கத்து நாட்டில் இந்நாட்டு  இளவரசியின்  முறை  மாமன்  இருக்கிறான். அவன்  ஓலை  அனுப்புகிறான். எனக்குத்தான்  இளவரசியும் நாடும்  சொந்தம், சம்பந்தம்  பேச  வரலாமா? என்பதுதான்  ஓலையில்  எழுதப்பட்ட  சாராம்சம்


 ஆனால்    அமைச்சர்  சதியால்  அந்த   ஓலை  திருத்தி  எழுதப்படுகிறது. இளவரசியை  சிறைப்பிடிக்க  போர். படைகளுடன் வருகிறேன்  என  அவன்  எழுதியதாகபொய்யாக  ஓலை  ரெடி  பண்றாங்க 


  நாயகன்  அதாவது  புரட்சி  இளைஞன்  இளவரசியின்  விருப்பத்தைக்கேட்க  முறைமாமனைக்கட்டிக்க  சம்மதம்  என்கிறாள், அப்போ நானே  தனியாளாய்  அங்கே  போய்  எதிர்கொள்கிறேன்,  சுமூகமாகப்பேசுகிறேன்  என  கிளம்புகிறான்


மன்னனான  நாயகன் அந்த  நாட்டுக்கு  போய்  சம்பந்தம்  பேசி  வந்தால் நம்  பாடு  திண்டாட்டம்  ஆகி  விடும்  என சதிகாரரான  அமைச்சர் படைகளை  அனுப்பி  முறைமாமனை  சிறைப்பிடிக்கின்றனர் 


 குழபத்தை  ஏற்படுத்தி  தான்  மன்னன்  ஆக  வேண்டும்  என்பதே  அமைச்சரின்  விருப்பம்,  ஆனால்  மக்களாட்சியை  அமைக்க  வேண்டும்  என்பதே  மன்னனான  நாயகனின்  விருப்பம்,  அவரது  நோக்கத்தை  தோற்கடிக்க  சதித்திட்டம்  தீட்டப்படுகிறது 


இந்த  சதித்திட்டத்தை   நாயகன்  எப்படி  முறியடிக்கிறார்  என்பதே  திரைக்கதை 

நாயகனாக  எம் ஜி ஆர். கதை  ஆரம்பித்த  முதல்  10  நிமிடத்துலயே  சாதா  பொது  ஜனமா  இருந்தவர்  நாட்டின்  மன்னன்  ஆகும்  காட்சி  நம்ப  முடியல .  ஆனா  முதல்வன்  படத்தின்  கரு  இதுல  இருந்து  கூட  எடுக்கப்பட்டிருக்கலாம்.  மற்றபடி  எம் ஜி ஆர்  நடிப்பு , சுறு சுறுப்பு  பற்றி  சொல்லவே  வேண்டியதில்லை . அசால்ட்டா  பண்ணி  இருக்கார் \\\


இவருக்கு  ஜோடியாக   ஜெ.  பேருக்குத்தான்  ஜோடி , ஆனா  ஹீரோ  கூட  அதிக  காம்போ  காட்சிகள்  இல்லை . கதைக்கு  சம்பந்தமே  இல்லாம நாகேஷ்  காமெடி  டிராக்கில்  இவரும்  ஜாயின்  பண்ணிக்கிறார். அது  ஒரு   அரை மணி  நேரம்  ஓடுது /. மெயின்  கதைக்கும்  காமெடி  டிராக்குக்கும்  சம்பந்தம்  இல்லை . நாயகன்  ஒரு  பக்கம்  இருக்கிறார் , நாயகி  பாட்டுக்கு  வேற  ஒரு  பக்கம்  சுத்திட்டு  இருக்கார் 


ஆர்  எஸ்  ,  மனோகர்  தான்  அமைச்சர்  கம்  வில்லன் . கச்சிதமான  நடிப்பு .  எம் என்  நம்பியார்  இன்னொரு  வில்லன் .   இவரும்  கலக்கி  இருக்கிறார்


இளவரசியாக  சரோஜாதேவி .  வில்லவனாக  அசோகன் . அசோகனை  இதுல  நல்லவனா  பார்க்க  முடியுது 


பி எஸ்  வீரப்பா  கெஸ்ட்  அப்பியரன்ஸ் 


கே  வி  மகாதேவன்  இசைல  ஏழு  பாட்டுக்கள் 


1  எத்தனை  காலம் கனவுகள்  கண்டேன், காண்பதற்கு உன்னை  காண்பதற்கு 

2  வேட்டையாடு  விளையாடு  விருப்பம்  போல  உறவாடு 

3  புத்தம்  புதிய  புத்தகமே  உன்னைப்புரட்டிப்பார்க்கும்  புலவன்  நான் 

4  என்னைப்பாட  வைத்தவன்  ஒருவன்

5  ஆடி  வா  ஆடி  வா  ஆடப்பிறந்தவளே  ஆடி  வா 

6  முகத்தைப்பார்த்ததில்லை  , அன்பு  மொழியைக்கேட்டதில்லை 

7  பண்  பாடும் பறவையே  என்ன  தூக்கம் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    முறைப்பெண்னை  பெண்  கேட்டு  வர  எதுக்கு  ஓலை  அனுப்பனும்?  சொந்தம்  தானே?  முறைப்படி  சொந்தக்காரங்களோட  வர  வேண்டியதுதானே?   அறிமுகம்  இல்லாத  தேசத்து  இளவரசர்  எனில்   ஓலை  அனுப்பி  தகவல்  தரலாம்


2   நாயகன்  மன்னன்  ஆகி  ஒரு  மாசமோ  கொஞ்ச  நாட்களோ  ஆகி  இருந்தால்  எல்லாம்  அரண்மனையில் செட்  ஆகி  அவர்  கட்டுப்பாட்டில்  எல்லாம்  வரும்  அதற்குப்பின்  வெளில  போவது  ஓக்கே , மன்னன்  ஆன  அடுத்த  நாளே  அவர்  தனியாகக்கிளம்புவது  எந்த  நம்பிக்கையின்  அடிப்படையில் ? 


3  மன்னர்  நாயகனை  மன்னராக  நியமிப்பது  ஓக்கே  அவரின்  தற்கொலை  ஓவர்  டிராமாவா  தோணுது .  கல்யாண  வயதில்  மகள்  இருக்கும்போது  ஒரு  மன்னனாகிய  தந்தை  குற்ற  உணர்ச்சியில்  தற்கொலை  செய்வது  எல்லாம்  வாய்ப்பே  இல்லை . இப்படி  பொறுப்பே  இல்லாம  தற்கொலை  பண்ணிக்கிட்டமேனு  அவரோட  ஆவிதான்   இன்னொரு  வாட்டி  குற்ற  உணர்ச்சியில்  தற்கொலை  பண்ணிக்கனும் 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - படம்  லைட்டா  போர்  அடிச்சாலும்   பாடல்கள்  எம்  ஜி ஆர்  நடிப்பு  காப்பாத்துது. நாகேஷ்  காமெடி  டிராக்  எடுபடலை ,  ஜெ  வின்  கிளாமர்  காட்சிகள்  இதில் தூக்கல்  ரேட்டிங்  2. 25 /. 5

Arasa Kattalai
Arasa Kattalai poster.jpg
Theatrical release poster
Directed byM. G. Chakrapani
Screenplay byR. M. Veerappan
Ve. Lakshmanan
S. K. T. Samy
Produced byM. C. Ramamoorthy
StarringM. G. Ramachandran
B. Saroja Devi
CinematographyA. Shanmugam
Edited byK. Narayanan
Music byK. V. Mahadevan
Production
company
Sathyaraja Pictures
Release date
  • 19 May 1967
Running time
132 minutes
CountryIndia
LanguageTamil

APPAN-அப்பன்(2022)( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்) @ சோனி லைவ்


இருக்கும் வரை உன்னால்  முடிந்த  அளவு  யாருக்காவது  உதவி  செய்து  கொண்டு  இரு  என்பதுதான்  பெரியோர்களின்  உபதேசம்.  என்  அப்பா  அடிக்கடி  என்னிடம்  சொல்வது  நீ  யாருக்காவது  உதவி  செய்யாவிடினும்  ஒருவருக்குக்கூட  உபத்திரவமாக  இருந்து  விடாதே  என்பதுதான். ஆனால்  ஊரில்  உள்ள  அனைவருக்கும்  , தன்  குடும்பத்தினருக்கும்  உபத்திரவமாக  இருந்த  ஒரு  ஆளின்  இறுத்க்கால   சம்பவங்கள்  தான்  இந்தப்படத்தின்  கதை 

  

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  திமிர்  பிடித்த  ஆள்/  சக  உயிர்களை  நேசிக்காவிட்டாலும்  பரவாயில்லை  தன்  குடும்பத்து  ஆட்களிடம்  கூட  பாசமே  இல்லாத  ஆள் .  சின்ன  வயசில் அதாவது  மைனரா  இருந்த  காலத்தில்  இவரது  சேட்டைகள்   எண்ணிலடங்கா. 

ஊரில்  உள்ள  பல  பெண்களின்  வாழ்க்கையில்  விளையாடிய  பெண்  பித்தன். அப்படிப்பட்ட  ஆள் தனது  மகன் , மகள்  அனைவருக்கும்  திருமணம்  செய்து  வைத்த  பின்  வயோதிக  நிலையில்  படுத்த  ப்டுக்கை  ஆகிறான். இடுப்புக்குக்கீழே  எந்த  உறுப்புகளும்  செயல்படவில்லை . பக்கவாதம்  போல  ஆகி  விடுகிறது . இந்த  நிலையிலும்  குடும்பத்தினரை  அவன்  டார்ச்ச்ர்  செய்வது  குறையவே  இல்லை 


அவன் இறந்தது  போல  கனவு  கண்ட  அவன் மனைவி  அதை  நினைத்து  ச்ந்தோஷப்படுகிறாள் .அப்பா  இப்போ  இறப்பாரா? நாளை  இறப்பாரா? என  எதிரபார்த்துக்காத்திருக்கும்  மகன் . சொத்து  கிடைச்சா  போதும்  சீக்கிரம்  போய்ச்சேரட்டும்  என  நினைக்கும்  மகள் . 


  நீங்க  கண்டுக்காம  இருங்க, காரியத்தைக்கச்சிதமா  நாங்க  முடிச்சிடறோம்  என  கொலை  செய்ய  சதித்திட்டம்  தீட்டும்   கிராமத்து  மக்கள் 


 இப்படி  பலரும்  நாயகனின்  இறப்புக்கு  காத்திருக்க  ஒரு  திடிர்  திருப்பம் .  இடுப்புக்குக்கீழே  செயல்படாமல்  இருந்த  அவனது  உடல்  பாகங்கள்    மெல்ல  செயல்படத்தொடங்குகிறது 


நாயகனின்  வீட்டுக்குப்ப்க்கத்தில்தான்  நாயகனின்  சின்ன  வீடு  இருக்கிறது . தன்  ஆசை  நாயகியை  என்  அறைக்கு  அழைத்து  வந்தால்  தான்  என்  சொத்துக்கள்  உங்களுக்கு  என  கண்டிசன்  போடுகிறான்  நாயகன் 

இதற்குப்பின்  இந்தக்க்தையில்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  திரைக்கதை 

நாயகனாக., கொடுமைக்கார  அப்பாவாக அலன்சியர்  லே  ;லாப்ஸ்  அந்த  கதாபாத்திரமாகவே  வாழ்ந்த்ருக்கிறார் , பிரமாதமான  நடிப்பு .  பாசமுள்ள  அப்பாவாக  சிவாஜி ,  ராஜ்கிரண் , ரகுவரன் ,என  பல  நடிகர்களின்  நடிப்பை  வியந்த  நமக்கு  இந்த  கொடுமைக்கார  அப்பா  கேரக்டர்  புதுசு . அதனால்  மனதில்  சுலபமாகத்தங்கி  விடுகிறது  இந்த  கேரக்டர். ஆனால்  அதை  கச்சிதமாக  செய்து  முடிப்பது  அத்தனை  சுலப்மானதல்ல . 


அவரது  மனைவியாக  வரும்  பாலி  வல்சன் மனோரமா, சுஜாதா , சரண்யா  பொன்வண்ணன்   போல  அற்புதமான  நடிகை . கலக்கலாக  நடித்திருக்கிறார் 


மகனாக  சன்னி  வைன், தானே  அப்பாவைக்கொல்ல  துணியும்போதும்  சரி  , கிராமத்தார்  கொலை  செய்ய  வரும்போது  தடுக்கும்போதும்  சரி  கச்சிதமாக  நடித்திருக்கிறார்


மருமகளாக  வரும்  நாடோடிக்ள்  புகழ்  அனன்யா   கவனிக்க  வைக்கும்  நடிப்பு 

  சீரியசாகப்போகும் கதையில்  இன்னொரு  மகளாக  வரும்  கிரேஸ்  ஆண்ட்டனி  கலகலப்பாக  கொண்டு  போக  உதவுகிறார்


  சொத்து  நம்ம  கைக்கு  கிடைக்கனுமே  என  அவர்  ராத்திரியோட  ராத்திரியா  தன்  கணவனுக்கு  ஃபோன்  போட்டு  வர  வைப்பது  கலக்கல்  காமெடி 


நாயகனின் ஆசை  நாயகியாக   ஷீலாவாக   ராதிகா  ராதாகிருஷ்ணன்  ( சித்தி ராதிகா அல்ல)  மாறுபட்ட  நடிப்பு, க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  அவருக்குப்பெரும்  பங்கு உண்டு 


ஒரு  காலத்தில்  தமிழக  அர்சியலில்  படுத்துக்கொண்டே  ஜெயித்தவர்  என்ற  பெருமையை   எம் ஜி யார்  பெற்றார். அதுபோல  பட்ம்  முழுக்க  படுத்துக்கொண்டே  இயங்காமல்  கிடக்கும்  நாயகன்  சிறந்த  திரைக்கதை  மற்றும்  அனைவரின்  அம்சமான  நடிப்பின்  மூலம்   ஜெயித்திருக்கிறார்கள் 


பப்புவின்  ஒளிப்பதிவு   கனகச்சிதம் ,கிரன் தாஸ்   எடிட்டிங்  பக்காவாக  ரெண்டு  மணி  நேர  படமாக  தந்திருக்கிறார், டான்  வின்செண்ட்டில்  இசை  படத்துக்கு  கூடுதல்  பலம்   ஆர்  ஜெயக்குமாருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கும்   இயக்குநர்  மஜூ  வுக்கு  இது  முதல்  ப்டமாம்  நம்ப  முடிவில்லை. மாறுபட்ட்  ஒரு   ஃபேமிலி  மெலோ  டிராமா 

சபாஷ்  டைரக்டர்


1    கதைக்கள்ம்  இந்திய  மொழ்ப்படங்களுக்கே  ரொம்பப்புதுசு. ஒரு  கொடூரமான  அப்பா  கேரக்டரை  மையப்படுத்தி  இதுவரை  எந்தக்கதையும்  வந்ததில்லை 


2  நாயகனைக்கொலை  செய்யப்போவது  யார்  என்பதை  கடைசி  வரை  யூகிக்க  முடியவில்லை . நல்லதொரு  திருப்பம் 


  ரசித்த  வசனங்கள் 


1  மலையில்  வசிப்பவர்களுக்கு  ஆயுள்  அதிகம்


2    சொத்து  ஒரு  மனுசனை  எப்படி  எல்லாம்  அலைய  வைக்குது ?


3  ஊர்ல  யாரெல்லாம்  என்  பசங்கனு  எனக்கே  சரியாத்தெரியல  , அவ்ளோ  குறும்பு   ப்ண்ணி  இருக்கேன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  உடல்  நிலை  சரி  இல்லாத  ஒரு  வயோதிகரைக்கொலை  செயவது  மிக  சுலபம் .  ஆனா  மாந்தரீகம் , மந்திரவாதி  என  அலைவது  காமெடி. நல்லா  ஆரோக்யமா  இருக்கறவங்களைக்கொலை  பண்ணத்தான்  பில்லி  சூனியம்  வைப்பாங்க 


2   மனைவி  , மகன் ,  சின்ன  வீடு  , மக்ள்  என  அனைவரும்  பாசம்  காட்டினாலும்  வயோதிகத்தில்  முடியாமல்  இருக்கும்  ஒரு  ஆள்  இவ்ளோ  திமிர்  செய்ய  முடியுமா? மனோ ரீதியாக  ஒரு  பயம்  வந்துடாது ? அவர்  எப்படி  தெனாவெட்டாக  இருக்கிறார்? பொத்வா  வயோதிகம்  வந்துட்டாலே   ஒரு  மரண பயம்  வருமே? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  கமர்ஷியல்  அயிட்டங்கள்  இல்லாத  மாறுபட்ட  கதைக்கள்ம்  கொண்ட  படம், அனைவருக்கும்  பிடிக்காது , உலகப்படங்கள் , மலையாளப்படங்கள்  பார்த்துப்பழக்க்ம்  உள்ளவர்கள்  மட்டும்  பார்க்கலாம்,  அடல்ட்  கண்டெண்ட்  எதுவும் இல்லை , ஆனா   வசனங்கள்  சில   கொடூரமா  இருக்கும், ஃபே,ம்லியோட  பார்ப்பதைத்தவிர்க்கவும்   ரேட்டிங்  2.75 / 5 


Appan
Appan.jpeg
Official Film Poster
Directed byMaju
Written byMaju
R Jayakumar
Produced byJosekutty Madathil
Ranjith Manambarakkat
StarringSunny Wayne
Ananya
Alencier Ley Lopez
Grace Antony
Pauly Valsan
CinematographyPappu
Edited byKiran Das
Music byDawn Vincent
Production
company
Tiny Hands Productions
Distributed bySonyLIV
Release date
28 October 2022
Running time
129 minutes
CountryIndia
LanguageMalayalam