Friday, November 11, 2022

MAJA MA(2022) = மஜா மா ( ஹிந்தி ) - சினிமா விமர்சனம் ( சோஷியல் டிராமா) @ அமேசான் பிரைம்


1988 ல் ரிலீஸ்  ஆன  தேசாப்  ஹிந்திப்படத்தில் இடம் பெற்ற ஏக்  தோ  தீன்  சார்  பாஞ்ச்  ச்சே  சாத்  ஆட்  நவ்  தஸ்  க்யாரஹ்  பாரஹ்  தேரஹ்    பாடல்  அதிரி  புதிரி  ஹிட்  ஆனது  .   மாதுரி  தீக்சித்தை  அப்போது  ரசித்தது. நீண்ட  இடைவெளிக்குப்பின்  மாறுபட்ட  சவாலான  ரோலில்  கலக்கி  இருக்கார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  இந்தியர், ஆனா  பணி  புரிவது  யு எஸ்  ல  அங்கே  நாயகியை  சந்திக்கிறார். என் ஆர்  ஐ  ஆக    வாழும்  அவரது  குடும்பத்தினர்  இந்திய  பாரம்பர்யம் மிக்கவர்கள் . கலாச்சாரம், ஆச்சாரம்  எல்லாம்  பார்ப்பவர்கள் . நிஜமாவே  தங்கள்  ,ம்களைக்காதலிக்கிறானா? அல்லது  சொத்துக்கு  ஆசைப்பட்டு  காதலிப்பது  போல்  நடிக்கிறானா?  என  சந்தேகம்,  உண்மை  கண்டறியும்  லை  டிடெக்டர்  மெஷின்  மூலம்  செக்  பண்ணி  நாயகன்  உண்மையான  காதல்  கொண்டவன்  மேலும்  அவன்  ஒரு  வெர்ஜின்  என்பதை  உறுதி  செய்து  திருமணத்துக்கு  சம்மதம்  தெர்விக்கின்றனர் 


நாயகனின்  குடும்பத்தைப்பற்றி  அறிந்து  கொள்ள  இந்தியா  விசிட்  அடிக்கறாங்க  நாயகியின்  பெற்றோர் 


  நாயகனின்  அம்மா  ஒரு  பிரமாதமான  டான்சர் . ஹவுஸ்  ஒயிஃப் .நாயகனுக்கு  ஒரு  தங்கை. அவர்  டாக்டர்  ஷாலினி  போல  செக்சாலஜி  படிச்ச  நபர் . லெஸ்பியன்  ஹோமோ போன்ற  நிலைகளில் ஆதரவு  தர  வேண்டும், அவர்கள்  விருப்பபப்டி  அவர்கள்  வாழ  இந்த  சமூகம்  வழி  விட  வேண்டும்  என்ற  எண்ணம்  கொண்டவர் . அதற்காக  அவ்வப்போது  போராட்டமும்  செய்பவர் 


 அம்மா , மகள்   இருவருக்குமான  வாக்குவாதத்தில் அம்மா  மகளின்  போராட்டம்ம் கொள்கைகளை  ஆட்சேபித்து  கருத்து  சொல்லும்போது  மகள்  “ அம்மா, நான்  லெஸ்பியனாக  இருந்தால்  என்னை  ஏற்றுக்கொள்ள  மாட்டிர்களா? என  கேட்க  ஒரு  கோபத்தில்  அம்மா  “ நான்  அப்படி  இருந்தால்  என்னை  அம்மாவாக  ஏற்றுக்கொள்வாயா? என  கேட்டு  விடுகிறார்


 இந்த  அந்த  ஏரியாவில்  இருக்கும்  சிறுமி  ஹோம்  மேடு  வீடியோவாக  விளையாட்டாக  எடுத்து  விடுகிறது 


  ஃபாரீனிலிருந்து  இந்தியா  வந்த  நாயகியின்  பெற்றோர்  நாயகன்  வீட்டில்  விருந்து  சாப்பிட்டு  அங்கே  நடக்கும்  க்ஜலை  நிகழ்ச்சிகளைக்கண்டு  மகிழ்கிறார்கள் 


 அப்போது  யாரும்  எதிர்பாராத  திருப்பமாக  அம்மா  மகள்  பேசிய  கான்வோ  உள்ள  வீடியோ  க்ளிப்  அங்கே  திரையில்  ஒலிபரபாகிறது. நாயகியின்  பெற்றோருக்கு  அதிர்ச்சி 


 இந்த  மாதிரி  குடும்பம்  நமக்கு  ஒத்து  வராது  என  தயங்குகின்றனர் . அவர்களை  நாயகி  சமாதானப்படுத்துகிறார்.  பின்  அவர்கள்  இறங்கி  வந்து   நாயகனின்  அம்மா  உண்மை  கண்டறியும்  சோதனையில்  கலந்து  கொண்டு  தான்  லெஸ்பியன்  இல்லை  என  நிரூபித்தால்  தான்  திருமணம்  என  கண்டிஷன்  போடுகின்றனர் 


இதற்கு  நாயகனின்  அம்மா  சம்மதித்தாரா? அதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  என்ன? க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என்ன  ? என்பதை  திரையில்  காண்க 


ரித்விக்  பவுமிக்  நாயகனாக  அசால்ட்டாக   நடித்திருக்கிறார். காதலியிடம்   பழகும்போது  சின்சியரான  காதலானக , மாமனார்  மாமியாரிடம்  கச்சிதமான  மாப்பிள்ளையாக  நடந்து  கொள்ளும்  இவர்  தங்கையிடம்  சண்டை போடுவது  அம்மாவிடம்  அடங்கி  நடப்பது  அப்பாவிடம்  ஃபிரண்ட்லியாக  பேசுவது  என  பல பரிமாணங்களில்  நல்ல  நடிப்பை  வெளிப்படுத்துகிறார்


 பர்க்கா  சிங்க்  தான்  நாயகி . கச்சிதமான  நடிப்பு  காதலன்  பெற்றோர்  இருவருக்கும்  இடையே  இருதலைக்கொள்ளி  எறு,ம்பாய்  தவிக்கும்போதும் , இருவரையும்  பேலன்ஸ்  பண்ணும்போதும்  வாவ்  சொல்ல  வைக்கிறார் 


நாயகனின்  அம்மாவாக  மாதுரு  தீக்சித் .  மொத்தப்படத்தையும்  இவரது  நடிப்புதான்  தாங்கிப்பிடிக்கிறது, அருமையான  ரோல் . மகளிடம்  குற்ற  உணர்ச்சியுடன்  பேசுவது , கணவனிடம்  அன்பாக  நடந்து  கொண்டாலும்  உங்கள்  மேல்  எனக்கு  காதல்  இல்லை  என்பது  காஞ்சனா  எனும்  தோழியிடம்  அவர்  வைத்திருக்கும்  சஸ்பென்ஸ்  ரிலேசன்ஷிப்பை  க்ளைமாக்ஸில்  வெளி[ப்படுத்துவது  என   பல  காட்சிகளில்  அப்ளாஸ்  அள்ளறார் 


நாயகனின்  அப்பாவாக கஜராஜ்ராவ்  நல்ல  குணச்சித்திர  நடிப்பு .  மனைவியுடனான  உரையாடலில்   கண்ணியம்  காட்டும்போதும் , மெடிக்கல் ஷாப்பில்  காயகல்ப  மருந்து  கேட்கத்தயங்கும்போது  காமெடியான  உடல்  மொழியை  வெளிப்படுத்தும்போதும்  அட  போட  வைக்கிறார்


நாயகனின்  தங்கையாக    சிருஷ்டி  துணிச்சலான  கதாபாத்திரம். இதை  ஏற்று  நடிக்க  ஒரு  கட்ஸ்  வேண்டும்.  புர்ட்சிகரமான  வசனங்கள் , ஆத்மார்த்தமான  நடிப்பு  இவருடையது 


மாதுரி  தீக்சித்தின்  தோழியாக  வரும்  காஞ்சனாவாக   சைமன்  சிங்  நடிப்பில்  முத்திரை  பதிக்கிரார்.   ரோப்  காரில்  பயணிக்கும்போது  நாயகியின்  அம்மாவுடனான  உரையாடலில்  அவரை  மடக்கும்  விதம்  பிரமாத்ம், அடுத்து  என்ன  நடக்குமோ? என்ற  பதை பதைப்பை  ஏற்படுத்தும்  காட்சி  அது 


அதே  போல  க்ளைமாக்சில்  வரும்  உண்மை  கண்டறியும்  சோதனைக்காட்சி  பரப்ரப்பாக  ப்டம் ஆக்கப்பட்டுள்ளது .  படம்  முழுக்க  நாயகனின்  அம்மாவை  சந்தேகப்பட்டு  கேள்வி  கேட்கும் நாயகியின்  அம்மா  க்ளைமாக்ஸில்    தன்  கணவனை  கேள்வி  கேட்பது  பொங்குவது  எல்லாம்  எதிர்பாராத  திருப்பம் 


ஒளிப்பதிவு  , இசை  , பாடல்கள்  அனைத்தும்  கச்சிதம்


 கத்தி  முனையில்  செரு[ப்பு  இல்லாமல்  நடப்பது  போன்ற   ஆபத்தான  வித்தியாசமான  கதைக்கரு . அதை  துளி  கூட  ஆபாசம்  இல்லாமல்  திரைக்கதை  எழுதி  இயக்கிய  இயக்குநர்   சுமித்  பதேஜாவுக்கு  ஒரு  பூங்கொத்து . 


திரைக்கதையில்  வரும் பல  சம்பவங்கள்   பத்து  சிறுகதைகள்  படித்த  அனுபவம்  தருகிறது . 

சபாஷ்  டைரக்டர்


1  மாதுரி  தீக்சித்தும்  காஞ்சனாவும்  உரையாடும்  காட்சிகளை  நான்  லினியர்  கட்டில்  சொன்ன  விதம், கடைசி  வரை  அவர்களுக்கு இடையே  ஆன  நட்பு  எம்மாதிரியானது  என்பதில்  சஸ்பென்ஸ்  மெயிண்ட்டெயின்  பண்ணிய  விதம் 


2   நாயகனின்  குடும்பம், நாயகியின்  குடும்பம்  உட்பட  படத்தில்  வரும்  அனைத்து  கேரக்டர்க்ளும்  டிசைன்  பண்னப்பட்ட  விதம், அனைவரின்  நடிப்பு  எல்லாமே  பிரமாதம் 


3  மெடிக்கல்  ஷாப்  காயகல்ப  காமெடி  காட்சி  அவ்ளோ  இயல்பு.  மிக  நாசூக்கான  காட்சி  அமைப்பு


4   ரோப்  காரில்  பயணிக்கும்போது  மாதுரி  , காஞ்சனா , சம்பந்திய,ம்மா  மூவருக்குமான  உரையாடலில் பொறி  பறக்கிறது . சபாஷ்  டயலாக்  ரைட்டர் 


5    உண்மை  கண்டறியும்  சோதனையில்    வெற்றி  பெற்ற  பின்  நடக்கும்  மாதுரி - காஞ்சனா  டான்ஸ்  கலக்கல்  என்றால்  அதுக்குப்பின்  வரும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அபாரம்



  ரசித்த  வசனங்கள் 


 1  என்  அம்மாவுக்கு  நல்ல  மகனா  இருக்க  முடியாத  நான்  எப்படி  உனக்கு  நல்ல  க்ணவனா  ஆக  முடியும் ? 


2  மத்தவங்க சந்தோஷத்துக்காகவே   நீ  இத்தனை  வருசம்  வாழ்ந்துட்டே , இனி   உன்  சந்தோஷத்துக்கு  வாழ் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    ஃபாரீன் ல  ரிட்டர்ன்  ஆகற  நாயகியின்  பெற்றோர்  மூட்டை  முடிச்சுகள்  சூட்கேஸ்  பெட்டி  படுக்கையோடு  அப்படியே  நாயகன்  வீட்டுக்கு  வர்றாங்க . அப்றம்  ஒரு  நாள்  கழித்து  ஹோட்டலில்  ரூம்  புக்  பண்ணி  தங்கறாங்க . யாரை  வேணாலும்  கேட்டுப்பாருங்க . எல்லாரும்  முதல்ல  ஹோட்டல்ல  தங்கிட்டு  ரிஃப்ரெஸ்  ஆகிட்டு  பின்  தான்   இப்படி  கெஸ்ட்டா  ஒரு  வீட்டுக்குப்போவாங்க 


2 நாயகனின்  தங்கை  என்ன  படிக்கிறார்?  அது  என்ன  சப்ஜெக்ட்? என்பதெல்லாம்  தெரியாமலேயே  அவரோட  அப்பா  இருப்பாரா? பிஹெச்  டி  முடிச்சு  பல  வருசம் கழிச்சு   என்னது?  அவளுக்கு கல்யாணம்  ஆகிடுச்சா? என  ஆரோரா  ஆரிராரோ  படத்தில்  வரும்  அதிர்ச்சிப்பைத்தியம்  போல்  இவர்  கேட்பது  நகைக்க  வைக்கிறது (  ஆடியன்சுக்கு  நாயகனின்  தங்கை  கேரக்டர்  டிசைனை  புரிய  வைக்க  எடுத்த  காட்சி  அது. ஆனா  நாயகனின்  அப்பவின்  கேரக்டர்  டிசைனுக்கு  ஆப்பு  வெச்சிடுச்சு 


3  மாப்ளையைபிடிச்சிருக்கா? கட்டிக்கோ  மாப்ளையோட  அம்மாவுக்கெல்லாம்  டெஸ்ட்  வைக்கற  வேலை  வேணாம்  என  யாருமே  பொங்கவில்லை.அது  ஏன்?


4  பொதுவா  காண்டம்  வாங்குவது , காயகல்பம்  வாங்குவது  வயாக்ரா  வாங்குவது  போன்ற  ரகசியமான  வேலைகளை  தாங்கள்  குடி  இருக்கும்  ஏரியாவில்    செய்ய  மாட்டார்கள் . வேலை  விஷயமாக  வெளில  ;போகும்போது  அந்த  புது  ஏரியாவில்தான்  வாங்குவார்கள் . நாயகனின்  அப்பா  குடி  இருக்கும்  வீட்டுக்கு  அருகில்  இருக்கும்  மெடிக்கல்  ஷாப்ல  வாங்கி  மாட்டிக்கறார். அதை  விடப்பெரிய  லாஜிக்  மிஸ்டேக்  அவங்க  வீட்டுக்குப்பக்கத்து  வீட்டு  லேடியும்  காயகல்பம்  வாங்குவது. இப்படி  லேடீஸ்  வாங்குனா  அந்த  ஏரியாவில்  நடமாட  முடியுமா?  கலாய்த்துத்தள்ளிட  மாட்டாங்க ? 


5   படம்  போட்டு  ரெண்டரை  மணி  நேரம்  வரை  எல்லா  கேரக்டர்களும்  என்ன  விதமான  எண்ணத்தில்  இருக்காங்களோ  அதுக்கு  நேர்  மாறாக  க்ளைமாக்சில்  ஸ்விட்ச்  போட்டது  போல்  மாறுவது  நம்ப  முடியலை 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மனதில்  தங்கும்  திரைக்கதை  தான். மாமூல்  மசாலாபடங்கள்  பார்ப்பவர்களுக்குப்பிடிக்காது . பெண்களுக்குப்பிடிக்கும். அடல்ட்  கண்ட்டென்ட்  விஷூவலாக  இல்லாவிட்டாலும்  இது  குடும்பத்துடன்  பார்க்க  முடியாத  சப்ஜெக்ட், ஆனா  குடும்பத்தினர்  எல்லாரும்  தனித்தனியா  பார்க்கலாம். ரேட்டிங்  3 / 5 


Maja Ma
Directed byAnand Tiwari
Written bySumit Batheja
Produced byAmritpal Singh Bindra
Starring
CinematographyDebojeet Ray
Edited bySanyukta Kaza
Music byShishir Samant
Production
company
Leo Media Collective
Distributed byAmazon Prime Video
Release date
6 October 2022
Running time
134 minutes
CountryIndia
LanguageHindi

அரசிளங்குமரி (1961) (தமிழ்) - சினிமா விமர்சனம்


  எம் ஜி ஆர்  ரசிகர்களுக்கு  ஒரு  அதிர்ச்சியான  செய்தி  , இந்தப்படத்தில் நாயகன்  எம் ஜி ஆரை  விட  வில்லன்  நம்பியாருக்குதான் காட்சிகள்  அதிகம், முக்கியத்துவமும்  அதிகம் , திரைக்கதை  முழுவதும்  வில்லனைச்சுற்றியே  தான்  பின்னப்ப்ட்டிருக்கும், ஹீரோ  சும்மா  பேருக்குத்தான்  வருவார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்



வில்லனான  தளபதி  தான்  ஒரு  சாதாரன  படை  வீரன்  என  சொல்லிக்கொண்டு நாயகனின்  தங்கையை  காதலிப்பது  போல  நடிக்கிறான். சாதாரண  விவசாய  குடும்பமான  நாயகனும்  நாயகனின்  தங்கையும்  அவன்  சதி  தெரியாமல்  திருமணத்துக்கு  ஏற்பாடு  பண்றாங்க 


 திருமணமும்  நடக்குது.  மூன்று  மாதங்கள்  ஒன்றாக  குடித்தனம்  நட்த்தி  விட்டு  அவள்  கருவுற்றதும்  கம்பி  நீட்டுகிறான்  வில்லன்.  அரசாங்கப்பணி  என்னை  அழைக்கிறது , விரைவில்  வருகிறேன்  என  சொல்லிட்டுப்போறான்


 இடைப்பட்ட  அந்த  மூன்று  மாதங்களாக  தளபதி  இல்லாம  அந்த  நாடு  என்ன  பாடுபட்டுச்சோ? ஒருவர்  கூடவா  தளபதியைத்தெரியாமல்  இருப்பாங்க ? 

நாட்டின்  தளபதி  தான்  வில்லன். மன்னரைக்கடத்தி  மறைத்து  வைத்து  விட்டு  மன்னர்  எழுதியது  போல  பொய்யான  சாசனம்  ஒன்றை  அவர்  ரெடி  பண்றார். அதில்  பட்டத்து  ராணி  இளவரசிதான், ஆனால்  அவரை  தளப்தி  தான்  கட்டிக்கொள்ள  வேண்டும், ஆட்சியில்  உதவி  புரிய  வேண்டும் . 


 தன்னைத்தேடி  அரண்மனைக்கே  வந்த  தன்  மனைவியை  யார்  என்றே  தெரியாது  என  சாதித்து  துரத்துகிறான்  துணைக்குக்கூட  வந்த  மாமாவையும்  கொன்று  விடுகிறான்


நாயகனின்  தங்கை  வேறு  வழி இல்லாமல்  தற்கொலைக்கு  முயல  அவளைக்காப்பாற்றி  தன்  வீட்டில்  சேர்த்துக்கொள்கிறாள்  அரண்மனை  சலவைக்காரி 


நாயகனின்  தங்கைக்கு  குழந்தை  பிறக்கிறது . குழந்தையின்  அப்பா  யார்  என்று  கேட்டும்  செய்து  கொடுத்த  சத்தியத்தால்  சொல்ல  மறுத்து  விடுக்றாள்


நாட்டின்  இளவரசிக்கு  நாயகனின்  மீது  காதல். தளபதியை  வெல்ல  நாயகனுக்கு  இருக்கும்  ஒரே  வழி  வாள்  சண்டை  கற்றுக்கொண்டு  அவனை  வெல்வதே .


 ஒரு  குருநாதரிடம் ஒரு  நாட்டின்  இளவரசன்  என  பொய்  சொல்லி  வாள்  சண்டை  கற்றுக்கொண்டு  எப்படி  தளபதியை  வெற்றி  கொள்கிறான்  நாயகன்  என்பதே  கதை 


 நாயகனாக, அறிவ்ழகனாக  எம் ஜி ஆர் . முன்  பாதி  முழுக்க  வில்லனின்  ஆக்ரமிப்பே  என்பதால்  பின்  பாதியில்  நாயகன்  ஆக்கிரமிப்பு . மன்னாதி மன்னன்ல  பத்மினியை  ஜோடியாகப்பார்த்து  விட்டு  இதில்  தங்கையாகப்பார்க்க  என்னவோ  மாதிரி இருக்கிறது . அபூர்வ ராகங்கள்  படத்தில்  கமலுக்கு  ஜோடியாக  நடித்த  ஸ்ரீ  வித்யா  அபூர்வ  சகோதரர்கள்  படத்தில்  கமலுக்கு  அம்மாவாக  நடிக்கவில்லையா?  அந்த  கொடுமைக்கு  இந்தக்கொடுமை  எவ்வளவோ தேவலாம் 


நாயகனின்  தங்கையாக  அன்புக்கரசியாக  பத்மினி  கணவன்  வஞ்சகன்  என  அறிந்தும்  அவனைக்காப்பாற்றும்  அபலைப்பெண்ணாக  அபாரமாக  நடித்திருந்தார் 


எம்  ஜி  யாருக்கு  ஜோடியாக  அழகு  ராணியாக  ராஜ  சுலோசனா . கச்சிதமான  நடிப்பு 


மணி  மாற  பூபதியாக  அசோகன்  , அதிக  வாய்ப்பில்லை , புலிகேசியாக  முத்து ராமன்  கொடுத்த  வேடத்தை  கச்சிதமாக  செய்திருக்கிறார் 


  வேலப்பன்  என  பொய்  சொல்லி  தளபதி  வெற்றி  வேலாக  கலக்கலான  வில்லன்  வேடத்தில்  நடித்திருக்கும்  எம்  என்  நம்பியார் தான்  கதையின்  முதுகெலும்பு . 

டாக்டர்  கலைஞர்  தான்  கதை ,  வச்னம். பல  இடங்களில்  சபாஷ்  போட  வைக்கிறது 


ஜி  ராமநாதன்  இசையில்   11  பாடல்கள்  , கவிஞர்  கண்ணதசன் , உடுமலை  நாராயண  கவி , பட்டுக்கோட்டை  கல்யாண  சுந்தரம்  உட்பட  6 கவிஞர்கள்  இணைந்து  தந்திருக்கிறார்கள் . 


சின்னபயலே  சின்னப்பயலே  சேதி  கேளடா  கலக்கலான  பாட்டு 

தாரா  அவர்  வருவாரா?  செம  மெலோடி 

அதே  மெட்டில்  அத்தானே  ஆசை  அத்தானே    பாடல்  செம 


சபாஷ்  டைரக்டர்


1    நாயகன்  சாதாரணன் , நாயகி  அரச  குடும்பம்  எனும்  சாதா  ஃபார்முலாதான்  கதைக்கரு , ஆனா  சுவராஸ்யமான  திரைக்கதை  உட்கார  வைக்கிறது


2  பெண்கள்  செண்ட்டிமெண்ட்டைக்கவரும்  வகையில்  வில்லனான  கணவனைக்காட்டிக்கொடுக்காத  நாயகனின்  தங்கை  கச்சிதமான  திரைக்கதை 


3   காமெடி  டிராக்  தனியே  துருத்துக்கொண்டிராமல்  கதையோடு  ஒட்டி   வருவது 


4  கலைஞரின்  வசனத்தில்  நாட்டின்  சமூக  சீர்கேடுகளை  சாடிய  விதம் 


5  இரும்புக்கை  மாயாவி  போல  கைகளில்  இரும்புக்கவசத்துடன்  சாண்டோ  சின்னப்ப தேவ்ருடன்  எம் ஜி ஆர்  போடும்    ஃபைட்  புதுமை . அந்தக்காலத்தில்  ஏகோபித்த  வரவேற்பு  பெற்ற  சண்டைக்காட்சி 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  நாட்டின்  தளபதி  சாதா  ஆளாக  ஊருக்குள்  வந்து  3  மாதம்  தங்கி  ஒரு  பெண்ணின்  வாழ்வில்  கணவனாக  நடித்துச்செல்வது  நடைமுறையில்  சாத்தியம்  இல்லாதது 


2  ஹீரோவுக்கு  வாள்  சண்டை உட்பட  வீர  சாகசக்கலைகள்  ஏதும்  தெரியாது  என  வசனம்  வருகிறது. பயிற்சி  பெறுகிறார்  ஆனால்  அதற்கு  முன்பே  ஒரு  மல்யுத்த  வீரனிடம்  போராடி  ஜெயிப்பது  எப்படி ? 


3  இளவரசியிடம் இருக்கும்  மனன்ரின்  சாசனத்தை  இளவரசி  க்ளைமாக்ஸ்  வரை  படிக்காமல்  இருப்பது  எப்படி ? 


4 நாட்டின்  இளவரசியை  தளபதி  அடிமை  போல்  நடத்துவது  எப்படி  ?  வீரர்கள்  எப்படி  அதை  சகித்துக்கொள்கிறார்கள் ? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நல்ல பொழுது  போக்கு சித்திரம்  தான். பாடல்காட்சிகள்  அருமை .  நம்பியார்  ர்சிகர்கள்  கொண்டாடுவார்கள்  ரேட்டிங் 2.5 / 5 

அரசிளங்குமரி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
யூப்பிட்டர் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
பத்மினி
வெளியீடுசனவரி 11961
ஓட்டம்.
நீளம்17875 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்


திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், உடுமலை நாராயண கவி, இரா. பழனிச்சாமி, முத்துக்கூத்தன் ஆகியோர் இயற்றினர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எஸ். ஜானகி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]a


எண்.பாடல்பாடியவர்/கள்பாடலாசிரியர்கால அளவு
1சின்னப் பயலேடி. எம். சௌந்தரராஜன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்03:39
2ஏற்றமுன்னா ஏற்றம்டி. எம். சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன்03:11
3கண்டி கதிர்காமம் ... கழுகுமலை பழனிமலைசீர்காழி கோவிந்தராஜன்01:58
4நந்தவனத்தில் ஓர் ஆண்டிடி. எம். சௌந்தரராஜன்00:54
5செத்தாலும் உனை நான் விடமாட்டேன்என். எஸ். கிருஷ்ணன் & எஸ். சி. கிருஷ்ணன்03:32
6தில்லாலங்கடி தில்லாலங்கடிபி. சுசீலாகண்ணதாசன்03:32
7தாரா அவர் வருவாராஎஸ். ஜானகிகு. மா. பாலசுப்பிரமணியம்03:36
8ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலாஇரா. பழனிச்சாமி02:19
9அத்தானே ஆசை அத்தானேபி. லீலாகே. எஸ். கோபாலகிருஷ்ணன்02:10
10தூண்டியிலே மாட்டிக்கிட்டு முழிக்குதுகே. ஜமுனாராணி, சீர்காழி கோவிந்தராஜன் & எஸ். சி. கிருஷ்ணன்முத்துக்கூத்தன்02:39
11ஆவ் ஆஹாவ் என் ஆசை புறாவே ஆவ்பி. சுசீலாஉடுமலை நாராயண கவி

Thursday, November 10, 2022

சினம் (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர் / க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


 அருண்  விஜய்  திறமை  இருந்தும்  அதிர்ஷ்டம்  கூடி வராத ஒரு  நல்ல  நடிகர் . பாண்டவர்  பூமி  அவர்  நடித்த  நல்ல  படங்களில்  ஒன்று . தடம் நீண்ட  இடைவெளிக்குப்பின்  அவர்  நடித்த  மாறுபட்ட த்ரில்லர்  மூவி . தடையறத்தாக்க , குற்றம் 23  போன்ற வித்தியாசமான  வெற்றிப்  படங்கள்  நடித்தும்  அவருக்கான  பிரேக்  இன்னும்  கிடைக்காமல்  போனது  வருத்தமே அவர்  சினிமா  உலகத்தில்  அடி  எடுத்து  வைத்து  25  வருடங்கள்  ஆகின்றன   என்பது ஆச்சரியமான  விஷயம்தான்,  

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர் . நாயகி  ஒரு  லேப்  டெக்னீஷியன் . ஆதரவற்ற  நோயாளிகளுக்கு  ரத்த  தானம்  அளிக்க  வைப்பதில்  முனைப்பு  காட்டி  தொண்டு  செய்து  வ்ருபவர். நாயகிக்குத்தெரிந்த  நபருக்கு  ரத்த   தானம்  வழங்குவது  மூலம்  நாயகன் - நாயகி  அறிமுகம்  உண்டாகிறது. நாள்டைவில்  இது  காதல்  ஆகிறது 


நாயகியின்  அப்பா  காதலுக்கு  சம்மதம்  தெரிவிக்கவில்லை . நாயகன் - நாயகி  இருவரும்  திருமணம்  செய்து  கொள்கின்றனர் .இவர்களுக்கு  ஒரு  பெண்  குழந்தை . 5  வருடங்கள்  கழித்து  நாயகியின்  அப்பாவிடம்  இருந்து  அம்மா  மூலம்  அழைப்பு  வருகிறது ., நாயகியின்  தங்கைக்கு  திருமணம்  நிச்சயம். அந்த  நிகழ்வுக்கு  அழைக்கிறார்கள் 


 நாயகி  அம்மா  வீட்டுக்குப்போறா. நாயகன்  ட்யூட்டியில்  பிசி  என்பதால்  போகவில்லை . விழா  முடிந்து திரும்பும்போது  நாயகி கொலை  செய்யப்படுகிறாள்


 நாயகன்  அந்த  கொலை  கேசை  துப்பு  துலக்கி குற்றவாளி  யார்  என்பதைக்கண்டு பிடிப்பதே  மிச்ச  மீதிக்கதை 


 மொத்தப்படமே  ஒரு  மணி  நேரம்  50  நிமிட்ங்கள்  தான்


நாயகனாக  அருண்  விஜய் . இதில்  மீசை  இல்லாமல்  நடித்திருக்கிறார். மீசை  இல்லாம  கெட்டப்  போட்டு  நடிக்கும்போது  முகத்தில்  கோப  உணர்வுகளை  நன்கு வெளிப்படுத்தி  விட  முடியும்  என  நாயகன்  பட  ரிலீஸ்  டைமில்  கலை  வித்தகன்  கமல்  பேட்டி  அளித்திருந்தார்  ( ஆனால்  நாயகனை  விட  சத்யா  மீசை  தாடி  கெட்டப்ல தான்  கமலின்  அதீத  கோபம் வெளிப்பட்டது ) 


  மீசை  இல்லாத  அருண்  விஜய்  நம்ம  மைண்ட்டுக்கு  செட்  ஆக  கொஞ்ச  நேரம்  பிடிக்கிற்து , ரொமாண்டிக்  காட்சிகளில்  கூட  முகத்தை  விறைப்பாகத்தான்  வைத்திருக்கிறார் . ரெஃப்ரன்ஸ்க்கு  வால்டர்  வெற்றி  வேல்  படம்  பார்த்திருப்பார்  போல 


நாயகியாக  பாலக்  லால் வாணி . ஹிந்தில  லால்  என்றால்  சிவப்பு  என  அர்த்தம்,  குழந்தை  சிவப்பாப்பிறந்ததால்  பாலக்  லால்  வா  நீ  அப்டினு  வெச்சுட்டாங்க  போல . அழகு , நிறம்  இரண்டிலும் பூரணத்துவம்  பெற்ற  நடிகை  நடிப்பிலும்  கச்சிதமாக  இருக்கிறார் . கதைக்குத்தேவைப்படாத  காட்சிகளிலும்  கிளாமராக  வருகிறார். 


போலீஸ் எ ட்டய்யாவாக  காளி  கச்சிதமான  நடிப்பு 


நாயகியின்  அம்மா, அப்பாவாக  வருபவ்ர்கள் நடிப்பு  கனகச்சிதம்., நாயகியின்  தங்கை  அழகு  முகம் . ஒல்லியான  உடல்  வாகு  கவனிக்க  வைக்கிறார் 


இர்வுக்காட்சிகள்  அதிகமாக  இருப்பதால்  ஒளிப்பதிவாளர்  கோபிநாத்துக்கு  சவாலான  பணி  தான்   ஷபீரின்  இசை  ஓக்கே  ரகம்,  பின்னணி  இசையில்  நல்ல  வேகம் 




சபாஷ்  டைரக்டர் ( ஜி என்  குமரவேலன்)


1  ஓப்பனிங்  சீன்ல  நாயகி  தன்  குழந்தைக்கு  ஒரு  கதை  சொல்றா. இது  என்னடா  சம்ப்ந்தம்  இல்லாம  போகுதுனு  நினைக்கறோம், கிட்நாப் செய்யப்படுவதற்கு  முன்  ஃபோனில்  நாயகி  குழந்தைக்கு  ஃபோன்ல  கதை  சொல்லும்போது  அந்த  ஆட்டோல  இருக்கற பொருட்களை  வைத்து  துப்பு  சொல்லும்  காட்சியும்  நாயகன்  அதை  கரெக்டா   கண்டுபிடிப்பதும்  சபாஷ்  ஐடியா 


2  தனா  வின்  அம்மாவாக  நடித்த  பெண்ணின்  நடிப்பு  அபாரம்.  ஒரே  ஒரு  சீன்  தான்  வர்றாங்க ,  கவனிக்க  வைக்கும்  பர்ஃபார்மென்ஸ் 


3  பின்  பாதியில்  வரும் இன்வெஸ்டிகேஷன்  சீன்கள்  கச்சிதமான  பேப்பர்  ஒர்க் 



  ரசித்த  வசனங்கள் 


1  சாதாரணமா  பழகறவங்க  கிட்டேக்கூட  குலம்  , கோத்திரம்  பார்த்துப்பழகறவர்தான்  என்  அப்பா


உலகத்துல  எந்த  உயிருக்கும்  தீங்கு  நேரக்கூடாதுனு   நினைக்கற  கேரக்டர்  நீ, சரியா?


2  அப்பா, நீங்க  பார்த்து  மேரேஜ்  பண்ணி  வெச்சிருந்தாக்கூட  இப்படி  ஒரு  நல்ல  வாழ்க்கை  அமைஞ்சிருக்காது , என்  சந்தோஷம்தான்  உங்க  சந்தோஷம்னு  சொல்லுவீங்களே?  நான்  இப்போ  சந்தோஷமாத்தான்  இருக்கேன்


 ஆனா  நான்  சந்தோஷமா  இல்லையே? 


3  எனக்கு  மட்டுமல்ல , எல்லாருக்கும்  கோபம்   வரனும். அப்போதான்  தப்பு  நடக்காம  பார்த்துக்க  முடியும் 




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அஞ்சு  வருசங்கள்  வரை  தாத்தா , பாட்டியை  நேரில்  பார்த்திராத  ஒரு  பெண்  குழந்தை  முதன்  முதலா  அபோதான்  பார்க்குது .  அன்னைக்கே  அம்மா  அப்பாவை  விட்டுட்டு  2  நாட்கள்  அவங்க  கூட  த்ங்க  ஒத்துக்குது , அது  எப்படி ? 


2  போலீஸ்  சப்  இன்ஸ்பெக்டரான  ஹீரோ  ஒரு  ஃபைட்  சீன்ல  அடியாளை  காலி  பிளாஸ்டிக்  குடத்தால அடிக்கறாரு  தலைல , அவன்  அப்படியே  துடிதுடிச்சு  உக்காந்துடறான். தண்ணிக்குடமா  இருந்தாக்கூட  வலிக்கும், காலி   பிளாஸ்டிக்  குடத்தால  அடிச்சா  குடம்  தான்  உடையும்  வலிக்காது 


3  நாயகி  நாயகனுக்கு  ஃபோன்  பண்ணி  2  மணி  நேரமா  உங்க  கிட்டே  ஒரு  விஷயம்  சொல்லனும்னு  ட்ரை  பண்ணிட்டே  இருந்தேன் , லைனே  கிடைக்கலைனு  சொல்லுது . வாட்சப்ல  வாய்ஸ்  மெசேஜ்  அனுப்பலாமே? ஆண்ட்ராய்டு  ஃபோந்தான்  வெச்சிருக்காங்க 


3 ஒரு  சப் இன்ஸ்பெக்டரோட  மனைவி  ஷேர்  ஆட்டோல  பிரயாணிப்பாங்களா? ஒரு  சீன்ல  அவரு  ஆட்டோல  போய்  இருப்பாரா? ஷேர்  ஆட்டோவா?னு  டிஸ்கஷன்  நடக்குது


4  நைட்  10  மணிக்கு  மேல  நார்மல்  ஆட்டோ  அதிகமா  ஓடுமா? ஷேர்  ஆட்டோ  அதிகமா  ஓடுமா?னு  ஹீரோ  ஒரு  ஆட்டோ  டிரைவர்ட்ட  விசாரிக்கிறார். ஒரு  போலீஸ்  ஆஃபீசருக்கு இந்த  விஷயம்  ஆல்ரெடி  தெரிஞ்சிருக்காதா?


5  ஹீரோ  போலீஸ்  வேலைல  சஸ்பெண்ட்  ஆகிடறாரு. ஆனா  ட்யூட்டில  இல்லாத  அவர்  கூட  ட்யூட்டில  இருக்கற  போலீஸ்  ஏட்டய்யா  எப்பவும்  அவர்  கூடவே இருக்காரே?  டிபார்ட்மெண்ட்ல  கண்டுக்க  மாட்டாங்களா? 


6  ஏரிக்கரைல  ஒரு  புருசன்  பொண்டாட்டி  பொணம்  கிட்க்குதுனு  லாரி  டிரைவர்  சொல்றான். அது  தம்பதிகள்தான்னு  எதை  வெச்சு  சொல்றான்?> ஒரு  ஆணும், பெண்ணும்  டெட்  பாடியா  கிடக்கறாங்க  என்ற  டயலாக் தானே  சரி? 


7  இன்வெஸ்டிகேஷன்  செய்யும்  எல்லாக்காட்சிகளிலும்  நாயகன்  போலீஸ் ஏட்டய்யாவுடன் தான்  சுத்திட்டு  இருக்கார் . கரெக்டா  ஃபைட்  சீன்  வரும்போது  தனியாக   வருவது  ஏன்? 


8  ரவுடிகளிடம்  மாட்டிக்கொள்ளும்  நாயகி  நான்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  மனைவி  என்ப்தை  சொல்லி  இருக்கலாம்,  விடறாங்களோ  இல்லையோ  ஒரு  பயத்தை  ஏற்படுத்தி  இருக்கலாம்


9   பொதுவா  ஆட்டோ  பிடிக்கும்  பெண்கள்  அவங்களா  ஒரு  ஆட்டோவை தான்  தேர்ந்தெடுப்பாங்க , ஏம்மா, ஆட்டோ  வேணுமா>? என  அழைக்கும்    ஆட்டோவை  தேர்ந்தெடுக்க  மாட்டாங்க . காலியாக  இருக்கும்  ஷேர்  ஆட்டோவில்  ஆட்டோ  டிரைவர்கள்  இருவர்  மட்டும்  இருக்கும்  ஆட்டோவில்  ஏன்  நாயகி  ஏறுகிறார்?


10  இப்பவெல்லாம்  ஓலா , ரெட்  டாக்சி செம  பிரபலம்  அதை  புக்  பண்ணாம   ஷேர்  ஆட்டோவில்  ஒரு  போலீஸ்  ஆஃபிசர்  மனைவி  ஏன்  வரனும் ? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சராசரியான  ஒரு  பழிவாங்கும்  கதைதான் , சுமாராதான்  இருக்கு , பார்க்கறவங்க  பார்க்கலாம்  ரேட்டிங்  2 / 5 . இந்தப்படம்  2019ல்  பூஜை  போட்டு 2020ல்  ஷூட்டிங்  எல்லாம்  முடிஞ்சுது, ஏனோ  லேட்டாக  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது 


Sinam
Sinam film poster.jpg
Directed byG. N. R. Kumaravelan
Written byR. Saravanan
Produced byR. Vijayakumar
StarringArun Vijay
Pallak Lalwani
CinematographyS. Gopinath
Edited byRaja Mohammad
Music byShabir
Production
company
Movie Slides Pvt Ltd
Release date
  • 16 September 2022
Running time
114 minutes
CountryIndia
LanguageTamil

அர்ச்சனா 31 நாட் அவுட் (2022) (மலையாளம்) - சினிமா விமர்சனம் @ அமேசான் பிரைம்


ஸ்பாய்லர்  அலெர்ட் 

 நாயகி  ஒரு  கிராமத்தில்  பெற்றோருடன்  வசித்து  வருகிறார்.. அரசு  பள்ளியில்  தற்காலிக  ஆசிரியையாகப்பணி  புரிகிறார். வயது 28 .  இவருக்கு  இதுவரை  30  இடங்களில்  மாப்பிள்ளை  பார்த்து  விட்டார்  புரோக்கர். ஒவ்வொரு  வரனும்  ஏதோ  காரணத்தால்  தட்டிக்கழிந்து  விடுகிறது 

31  வது  வ்ரனாக  ஒரு  துபாய்  மாப்பிள்ளை  வருகிறார்.  வீடியோ  காலில்  மாப்பிள்ளை  , பெண்  இருவரும்  பேசிக்கொள்கிறார்கள் . இருவருக்கும்  சம்மதம் . மாப்பிள்ளை  தரப்பு  உறவினர்கள்  பெண்  வீட்டில்  சம்பந்தம்  பேசி  முடிக்கின்றனர் 

  இந்த  சமயத்தில்  நாயகிக்கு  ஆசிரியை  பணி   போய்  விடுகிறது .  இந்தத்தகவலை  நாயகி  மாப்பிள்ளையிடம்  சொல்லி  விடுகிறார்.  மாப்பிள்ளை  பெரிதாக  அலட்டிக்கொள்ளவில்லை . எப்படியும்  துபாய்  தானே  வரப்போகிறாய்? அங்கே  ஏதாவது  வேலை  பார்த்துக்கலாம்  என்று  சொல்லி  விடுகிறார்

நாயகிக்கு  மிக்க  மகிழ்ச்சி , முதிர்  கன்னியாக  காலத்தை  க்ழிக்க  வேண்டி  வருமோ  என்ற  அச்சத்தில்  இருந்தவர்  திருமணம்  நிச்சயம்  ஆனதால்  தன்  சேமிப்புப்பணம்  பூரா  திருமண  ஏற்பாடுக்ளூக்கு  செலவு  செய்கிறார்

 ஊரெல்லாம்  பத்திரிக்கை  வைத்து  கல்யாண  மண்டபம  வரை  எல்லாரும்  வந்து  விடுகிறார்கள் . விடிந்தால்  திரும்ண  முகூர்த்தம் . இரவு    திடீர்  என  ஒரு  தகவல்  வருகிறது . , மாப்பிள்ளை   வேறு  ஒரு  பெண்ணுடன்  ஓடி  விட்டார்


நாயகிக்கு  இது  மிகப்பெரிய  அதிர்ச்சி . இந்தத்தகவல்  வெளீல   தெரிந்தால்  அப்பா  ஹார்ட்அட்டாக்கில்  இறந்து  விடுவார் , அம்மா  தற்கொலை  செய்து  கொள்ளக்கூடும்

  நாயகி  என்ன  முடிவு  எடுத்தார்  என்பதே  க்ளைமாக்ஸ் 

  நாயகியாக  ஐஸ்வர்யா  லட்சுமி  ஒரு  டீச்சருக்கான  தோரணையை  மிக  கம்பீரமாக  ஸ்கூலில்  வெளிப்படுத்துபவர்   வீட்டுக்கு  வந்ததும்  சராசரிப்பெண்ணாக   தன்  மீதே  சுய  இரக்கம்  வரப்பெற்றவராக  மாறுவது  அருமையான  நடிப்பு   திரைக்கதையில்  வாய்ப்பிருந்தும்  இவருக்கு  தனி  டூயட்  பாடலோ ,  கனவுப்பாட்டோ , இண்ட்ரோ  சாங்கோ  வைக்காதது  ஏனோ ?

  திரைக்கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  அழையா  விருந்தாளியாக  மண்டபத்துக்கு  வரும்  இந்திரன்ஸ்  கதாபாத்திரத்தை  க்ளைமாக்சில்    அந்த  கேரக்டருக்கு  நியாயம்  செய்திருக்கிறார்கள் . ஆனால்  அவரும்  காட்சிகளில்  இவர்  திருமணத்தை  நிறுத்தப்போகும்  வில்லன்  என்பது  மாதிரி  மாயை  உண்டாகிறது \

ஸ்கூலில்  சுட்டிப்பெண்ணாக  தன்  மாமாவிடம்  சாவியை  பிடுங்கி  ஒளித்து  வைக்கும்  கதாப்பாத்திரத்தில்  வரும்  சிறுமி  அருமையான  நடிப்பு . அந்த  சிறுமியின்  மாமாவாக  வருபவர்  நாயகியை  ஒரு  தலையாய்  காதலித்ததாக  திருமண  தின  இரவன்று  சொல்லும்போது  ஆச்சரியம், ஆனால்  அவரை  மாப்பிள்ளையாக  தேர்ந்தெடுத்து  கல்யாணத்தை  செய்ய  விருப்பமில்லாமல்  ஒரு  வேலை  கிடைக்கட்டும்  என  ஒத்திப்போடுவது   பெண்கள்  பொருளாதார  ரீதியாக  ப்லம்  பெற்றால்  தான்  மனோரீதியான  தன்னம்பிக்கை  பலம்  கிடைக்கும்  என்ற  கருத்தை  வலியுறுத்துகிறது 




ஒளிப்பதிவு  பிரமாதம் . பளிங்குக்க்ண்ணாடி  வழியே  காட்சிகள்  பார்ப்பது  போல்  இருக்கிறது  .  நாயகியின்  ஆடை  வடிவைப்பும்ம்  அலங்காரமும்  எளிமை  + அழகு 


வேறோரு  பெண்ணை  லவ்  பண்ணும்  துபாய்  மாப்பிள்ளை    எதற்காக  மணப்பெண்ணுடன்  வீடியோ  காலில்  அவ்ளோ அந்நியோன்யமாய்  பேசுகிறார்? என்ற  கேள்விக்கு  பதில்  இல்லை 

துபாய்  மாப்பிள்ளையின்  ஜாதகப்பொருத்தம்  பார்க்காமலும்  மாப்பிள்ளை  பற்றி  விசாரிக்காமலும்  உடனடியாக  திருமணத்துக்கு  பெண்  வீட்டார் ஒத்துக்கொள்வதும்  நம்பும்படி  இல்லை 


துபாய்  மாப்பிள்ளை  ஓடிப்போவதாக  தகவல்  வரும்போது  இடைவேளை  வருகிறது ., அது  வரை  திரைக்கதை  கனகச்சிதமாய்  இருந்தது 

 இடைவேளைக்குப்பின்   திரைக்கதை  செல்ஃப்  எடுக்காமல்  தடுமாறுகிறது. திருமணம்  தடை  பெற்றால்  என்னென்ன விளைவுகள்  உண்டாகும்  என  நாயகி  நினைத்துப்பார்க்கும்  கற்பனைக்காட்சிக்ள்  தேவை  இல்லாத  இழுவை 

  அதே  சமயம்  கல்யாண  வீட்டு  கலாட்டாக்களில்  வயசான  ஆட்கள்  டிஸ்கோ  டான்ஸ்  ஆடுவது ,  சிறுவர்  சிறுமிகள்  கொண்டாட்டம்  கலகலப்பு 

மொத்தப்படமே  ஒரு  மணி  நேரம்  50  நிமிடங்கள்  தான்  எடிட்டிங்  கச்சிதம். நாயகியின்  அழகுக்காகவும்  க்ளைமாக்ஸில்  அவர்  சொல்லும்  பாசிட்டிவான  கருத்துக்கும்  பார்க்கலாம் 

சபாஷ்  டைரக்டர் 

1   நாயகி  ஒரு  டீச்சர்  என்பதால்  அந்த  கண்ணியமான  தோற்றத்தை  கடைசி
  வரை  காப்பாற்றிய  விதம் .  நாயகிக்கு  கிளாமர்  டிரஸ்  போட  விடாமல்  கடைசி  வரை  புடவையிலேயே  காட்டியது 

2 காமெடி  டிராக்  என  தனியாக  எதுவும்  வைக்காமல்   ஸ்கூல்  ஸ்டூடண்சை  வைத்தும் , அவர்களைக்காண  வரும்  பெற்றோர்  செய்யும்  செய;ல்க்ளை  வைத்தும்  கலகலப்பாக  முதல்  பாதியைக்கொண்டு  போனது 

 

க்ளைமாக்சில்   அந்த  சோக  முடிவை  நாயகி  ஏற்றுக்கொண்டு  தைரியத்தை  வெளிப்படுத்தும்  விதம்மைக் முன்  நின்று  அனாயசமாக  அதை  லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  செய்தது  போல  காட்டிக்கொள்வது 

 

 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 

 

1    பார்க்க  சுமாரான  அழகுள்ள  பெண்களுக்கு  ஏகப்பட்ட  ஆஃபர்கள்  வரும்போது  மிக  அழகான  தோற்றம்  உள்ள  நாயகிக்கு  லவ்  ப்ரபோசலோ  , வேறு எந்த  ஆஃபரும்  வராதது  போல  காட்டி  இருப்பது  ஆச்சரியம் .30  ஜாதகம்  தள்ளிப்போக  சொல்லப்படும்  கார்ணங்கள்  எல்லாம்  சப்பையாகவே  இருக்கின்றன. பொதுவா  பெண்  அழகா  இருந்தா  10  பொருத்தத்தங்களில்  அஞ்சு  பொருத்தம்  இருந்தாலே  போதும்  என  ஃபிக்ஸ்  ப்ண்ணுபவர்கள்  தான்  அதிகம் 

 

2    மாப்பிள்ளை  ஃபாரீனில்  இருக்கிறார்பெற்றோர்  இல்லை  அப்படி  இருக்கும்போது  மாப்பிள்ளை  ஸ்பாட்டுக்கு  வராமலேயே  எல்லா  ஏற்பாடுகளையும்  செய்வது  எப்படி

 

 

அம்மா, அப்பா  கட்டாயப்படுத்தியதால்தான்  சம்மதித்தேன் என  சாக்கு  சொல்ல  மாப்பிள்ளைக்கு  வழி  இல்லை , ஏன் எனில்  அவருக்கு  அம்மா  அப்பாவே  இல்லை  அப்படி  இருக்கும்போது லவ்  பண்ணுன  பெண்ணைகல்யாணம்  பண்ண  ஏது  தடை ? எதுக்கு  ஓடிப்போகனும் > எதுக்கு  இந்த  சம்பந்தத்துக்கு  ஓக்கே  சொல்லனும் > ஏன்  மணப்பெண்ணுடன்  வீடியோ  கால்  பேச  வேண்டும் ?

 

 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  திரைக்கதையில்  பின்  பாதியில் கவனம்  செலுத்தி  இருந்தால்  இது மறக்க  முடியாத  ஃபீல்  குட்  மூவி  லிஸ்ட்டில்  சேர்ந்திருக்கும் , ஜஸ்ட்  மிஸ்ரேட்டிங் 2.25 / 5 

 




Wednesday, November 09, 2022

THE GHOST (2022) ( TELUGU) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  இண்ட்டர்போல்  ஆஃபீசர் .  கடத்தல்காரர்கள்  ,  தாதாக்கள்  , கேங்க்ஸ்டர்கள்  எல்லாரையும்  போட்டுத்தள்ளுவதுதான்  அவரது  மெயின்    வேலையே . ஆனா  பணி  நேரத்தில்  அவரால்  ரூல்ஸ்  அண்ட்  ரெகுலேஷன்சை  ஃபாலோ  பண்ண  முடியறதில்லை , என்கவுண்ட்டர் தான் . அதனால  வேலையை  ரிசைன்  பண்ணிட்டு  காண்ட்ராக்ட்  பேஸ் ல  அப்பப்ப  அவங்க  கொடுக்கும்  வேலையை  செய்து  வருபவர் 


நாயகனோட  அக்கா  20  வருடங்கள்  முன்னால்  ஒரு  தொழில்  அதிபரை  லவ்  மேரேஜ்  பண்ணிட்டு  போய்ட்டாங்க . அப்பா  கூட  பேசறதில்லை. 20  வருடங்கள்  கழித்து  ஒரு  ஃபோன்  கால்  வருகிறது. நேரில் சந்திக்க  வேண்டும், உடனே  வா  என்கிறார்  தம்பியான  நாயகனிடம்


நேரில்  போனால் அக்காவின்  ஃபிளாஸ்  பேக்  கதை . அவரது  கணவர்  கொலை  செய்யப்பட்டு  இருக்கிறார்.  கணவரின்  அப்பாவுக்கு    2  மனைவிகள் .  இளைய  மனைவியின்  வாரிசுகள்  சொத்துக்களை  அபகரிக்க  திட்டம்  போட்டு  இவங்களை  தீர்த்துக்கட்ட  நினைக்கறாங்க . இந்த  ஏரியாவி  விட்டே  போய்  விடு  என  மிரட்டல்  கடிதம்  வருகிறது.  தன்  ஒரே மகளுக்கு  பாடிகார்டாக   இருந்து  பாதுகாக்கனும். இதுதான்  அக்காவின்  வேண்டு கோள் 


 நாயகன்  அக்காவின்  மக்ளை  எப்படி  பாதுகாக்கிறார்? வில்லன்களை  எப்படி  ஒழிக்கிறார் என்பதை  ஆக்சன்  பேக்கேஜில்  தந்திருக்கிறார்கள் 


நாயகனாக  நாகார்ஜூன் .பட,ம்  பூரா  இவர் செய்யும்  கொலைகள்  மட்டும்  2300  இருக்கும்/  எல்லாம்  கன்  ஷூட்  தான். இவருக்கு  டூயட்டோ  , சோலோ  ஃபைட்டோ  இல்லை . தெலுங்குப்படத்துக்கு  இது  புதுசு 


 இவருக்கு  ஜோடியாக கொலீக்காக   சோனால்  சவுஹான். இவ்ரும்  ஆக்சன்  அவதாரம்  தான் . இருவரும்  ஓப்பனிங்  சீனில்  ஒரு  தீவிரவாதக்கும்பல் 165 பேரை   ஈசியாக  முடித்துக்கட்டுக்கிறார்கள் , இவங்க  மேல  ஒரு  கீறல்  கூட  விழலல. அந்தக்காட்சி  மிஸ்டர்  அன்ஸ்  மிசஸ்  ஸ்மித்  ஹாலிவுட்   படத்தை  நினைவூட்டுகிறது


நாயகனின்  அக்காவாக  குல்  பனக். தொழில் அதிபருக்கான   கம்பீரத்துடன்  காட்சி  அளிக்கிறார். அக்கா  மகளாக  அனிகா  சுரேந்திரன்   முதல்  பாதியில்  சுட்டித்தனமான  விளையாட்டுப்பெண்ணாகவும்  பின்  பாதியில்  சொக  முகமுமாக  வருகிறார்


ஹாலிவுட்  படமான    ஜான் விக்  மாதிரி  ஆக்சன்  அதகளமாகத்தர  நினைத்திருக்கிறார்கள் / லாஜிக்  ஓட்டைகள்  மட்டும்  250  இருக்கலாம் . ரெண்டே  கால்  மணி  நேரபடத்தில்  ஓப்பனிங்   ஆக்சன்  சீன்  மட்டும் 20  நிமிடங்கள் . க்ளைமாக்ஸ்  ஆக்சன்  அதகளம்  30  நிமிடங்கள்   .,  இடைப்பட்ட  ஒரு  மணி  நேரத்தில்  போனால்  போகுது  என  கதை  சொன்ன  மாதிரி  இருக்கிறது

 ரசித்த  வசனங்கள் 


1   நீ  என்  கூட  வரனும்னு  நான்  கூப்பிடலை 


  நீயே  போக  வேணாம்னு  நான்  சொல்றேன்


2   பெண்களிடம்  மன்னிப்புக்கேட்டா  ஏதொ  பெரிய  லாஸ்  ஆகிடும்னு  சில  ஆண்கள்  நினைக்கறாங்க , இல்லையா? 


3  பணமும், வெற்றியும்   நமக்கு  மகிழ்ச்சியை  விட  அதிகமா  எதிரியைத்தான்  சம்பாத்ச்சுக்குடுக்குது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்  சீன்ல  ஹீரோ  மிஷின் கன்  கைல  வெச்சுக்கிட்டே  10  குட்டிக்கரணம்  போட்டுக்கிட்டே  உருண்டு  மேல  இருந்து  கீழே  மணலில்  வர்றார். அதுக்கு  சும்மா  சறுக்கிட்டே  வந்திருக்கலாம். 10  நிமிசம்  முன்னாடியே  ரீச்  ஆகி  இருக்கலாம்


2  ஒரு  லட்சம்  கோடிக்கு  ,மேல்  சொத்துள்ள  ஒரு  தொழில்  அதிபரின்  வாரிசை  பிசாத்து  5  கோடி  ரூபாய்க்கு  பேரம்  பேசும்  வில்லனின்  அடியாளிடம்  பணிந்து  போகும்  ஆள் அந்த  வாரிசிடம்  நடந்ததைச்சொன்னாலே  பல  மடங்கு  பணம்  கிடைக்குமே? 


3   தீ  விபத்தில்  இறந்தாலும்  டெட்  பாடி  எரிந்த  நிலையில்  கிடைக்கனுமே?  எதன்  அடிபப்டையில்  அதிதி  இறந்ததாக  வில்லன்  க்ரூப்  நம்பறாங்க ? 


4   க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன்னால்  வரும்  ஒரு  ஃபிளாஸ்பேக்ல  ஹீரோ  கைல  ஆயுதம்  இல்லாம  வில்லன்  கிட்டே  மாட்டிக்கறாரு, அந்த  பேக்கு  வில்லன்  அப்போ  அடியாளுங்க  287  பேரு  கூட  இருக்கான்.  இந்த  போட்ல  ரத்தம்  சிந்துவதை  நான்  விரும்பலை  அவனை  வெளில  எங்காவது  கூட்டிட்டுப்போய்  கொல்லுங்க  அப்டிங்கறான்.  அய்யோ  ராமா.. அப்பவே  போட்டுத்தள்ளி  இருந்தா அப்பவே படம்  முடிஞ்சிருக்கும் 


5  ஹீரோ ஒரே  ஒரு  கத்தி  மட்டும்  கைல  வெச்சுக்கிட்டு  நிக்கறாரு  அவருக்கு  முன்னால 96  அண்டர்வோர்ல்டு  தாதாக்கள்  கேங்க்ஸ்டர்ஸ்  எல்லாரும்  கைல  மிஷின்  கண்னோட  இருக்காங்க. ஹீரோவை  ஈசியா  போட்டுத்தள்ளி  இருக்கலாம், ஆனா  கால்ல  விழுந்து  அத்தனை  பேரும்  மன்னிப்புக்கேட்கறாங்க 


6   வில்லன்  கூட  ஹீரோ  இருக்கும்போது  அடியாளு   ஃபோன்  பண்றப்ப  வீடியோ கால்  பண்ணி  இருந்தா  உணமை  தெரிஞ்சிருக்குமே? அப்டேட் ஆகுங்கடா  அப்ரசிண்ட்களா


7  தோராயமா ஒரு  500  அடியாளுங்க   துப்பாக்கி  சகிதமா  இருக்கற  கோட்டைக்கு  ஹீரோயின்  போகும்போது  புல்லட்  ஜாக்கெட்  போட்டுட்டுப்போக  மாட்டாங்களா? அவங்க  என்னடான்னா  ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட்  போட்டுட்டுப்போய்  மாட்டிக்கறாங்க . கிளாமர்  காட்ட  இடம்  பொருள்  ஏவல்  இருக்கில்ல? ஏவாள்? 


8  கைதி , விக்ரம் , கேஜிஎஃப்  படங்களின்  க்ளைமாக்சில்  வருவது  போல்     [பீரங்கியால்  சுட்டால்  அந்த  சீனை  சுட்டால்  படம்  எப்படி  சார்  ஹிட்  ஆகும் ? திரைகக்தை நல்லாருக்கனும்  இல்ல?

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தெலுங்கு  ரசிக்ர்களுக்கு  இது  பொழுது  போக்குப்படம்  ., தமிழ்  ரசிகர்களுக்கு  இது  பத்தோடு  பதினொண்ணு  , அத்தோடு  இதுவும்  ஒண்ணு   ரேட்டிங்  1/ 5 



The Ghost
The Ghost film poster.jpg
Promotional poster
Directed byPraveen Sattaru
Written byPraveen Sattaru
Produced by
  • Suniel Narang
  • Puskur Ram Mohan Rao
  • Sharrath Marar
StarringNagarjuna
Sonal Chauhan
CinematographyMukesh G.
Edited byDharmendra Kakarala
Music byBharatt-Saurabh and Mark K. Robin
Production
companies
Sri Venkateswara Cinemas
North Star Entertainment
Release date
  • 5 October 2022
Running time
138 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box officeest. ₹9.05 crore[2]