Showing posts with label MAJA MA(2022) = மஜா மா ( ஹிந்தி ) - சினிமா விமர்சனம் ( சோஷியல் டிராமா). Show all posts
Showing posts with label MAJA MA(2022) = மஜா மா ( ஹிந்தி ) - சினிமா விமர்சனம் ( சோஷியல் டிராமா). Show all posts

Friday, November 11, 2022

MAJA MA(2022) = மஜா மா ( ஹிந்தி ) - சினிமா விமர்சனம் ( சோஷியல் டிராமா) @ அமேசான் பிரைம்


1988 ல் ரிலீஸ்  ஆன  தேசாப்  ஹிந்திப்படத்தில் இடம் பெற்ற ஏக்  தோ  தீன்  சார்  பாஞ்ச்  ச்சே  சாத்  ஆட்  நவ்  தஸ்  க்யாரஹ்  பாரஹ்  தேரஹ்    பாடல்  அதிரி  புதிரி  ஹிட்  ஆனது  .   மாதுரி  தீக்சித்தை  அப்போது  ரசித்தது. நீண்ட  இடைவெளிக்குப்பின்  மாறுபட்ட  சவாலான  ரோலில்  கலக்கி  இருக்கார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  இந்தியர், ஆனா  பணி  புரிவது  யு எஸ்  ல  அங்கே  நாயகியை  சந்திக்கிறார். என் ஆர்  ஐ  ஆக    வாழும்  அவரது  குடும்பத்தினர்  இந்திய  பாரம்பர்யம் மிக்கவர்கள் . கலாச்சாரம், ஆச்சாரம்  எல்லாம்  பார்ப்பவர்கள் . நிஜமாவே  தங்கள்  ,ம்களைக்காதலிக்கிறானா? அல்லது  சொத்துக்கு  ஆசைப்பட்டு  காதலிப்பது  போல்  நடிக்கிறானா?  என  சந்தேகம்,  உண்மை  கண்டறியும்  லை  டிடெக்டர்  மெஷின்  மூலம்  செக்  பண்ணி  நாயகன்  உண்மையான  காதல்  கொண்டவன்  மேலும்  அவன்  ஒரு  வெர்ஜின்  என்பதை  உறுதி  செய்து  திருமணத்துக்கு  சம்மதம்  தெர்விக்கின்றனர் 


நாயகனின்  குடும்பத்தைப்பற்றி  அறிந்து  கொள்ள  இந்தியா  விசிட்  அடிக்கறாங்க  நாயகியின்  பெற்றோர் 


  நாயகனின்  அம்மா  ஒரு  பிரமாதமான  டான்சர் . ஹவுஸ்  ஒயிஃப் .நாயகனுக்கு  ஒரு  தங்கை. அவர்  டாக்டர்  ஷாலினி  போல  செக்சாலஜி  படிச்ச  நபர் . லெஸ்பியன்  ஹோமோ போன்ற  நிலைகளில் ஆதரவு  தர  வேண்டும், அவர்கள்  விருப்பபப்டி  அவர்கள்  வாழ  இந்த  சமூகம்  வழி  விட  வேண்டும்  என்ற  எண்ணம்  கொண்டவர் . அதற்காக  அவ்வப்போது  போராட்டமும்  செய்பவர் 


 அம்மா , மகள்   இருவருக்குமான  வாக்குவாதத்தில் அம்மா  மகளின்  போராட்டம்ம் கொள்கைகளை  ஆட்சேபித்து  கருத்து  சொல்லும்போது  மகள்  “ அம்மா, நான்  லெஸ்பியனாக  இருந்தால்  என்னை  ஏற்றுக்கொள்ள  மாட்டிர்களா? என  கேட்க  ஒரு  கோபத்தில்  அம்மா  “ நான்  அப்படி  இருந்தால்  என்னை  அம்மாவாக  ஏற்றுக்கொள்வாயா? என  கேட்டு  விடுகிறார்


 இந்த  அந்த  ஏரியாவில்  இருக்கும்  சிறுமி  ஹோம்  மேடு  வீடியோவாக  விளையாட்டாக  எடுத்து  விடுகிறது 


  ஃபாரீனிலிருந்து  இந்தியா  வந்த  நாயகியின்  பெற்றோர்  நாயகன்  வீட்டில்  விருந்து  சாப்பிட்டு  அங்கே  நடக்கும்  க்ஜலை  நிகழ்ச்சிகளைக்கண்டு  மகிழ்கிறார்கள் 


 அப்போது  யாரும்  எதிர்பாராத  திருப்பமாக  அம்மா  மகள்  பேசிய  கான்வோ  உள்ள  வீடியோ  க்ளிப்  அங்கே  திரையில்  ஒலிபரபாகிறது. நாயகியின்  பெற்றோருக்கு  அதிர்ச்சி 


 இந்த  மாதிரி  குடும்பம்  நமக்கு  ஒத்து  வராது  என  தயங்குகின்றனர் . அவர்களை  நாயகி  சமாதானப்படுத்துகிறார்.  பின்  அவர்கள்  இறங்கி  வந்து   நாயகனின்  அம்மா  உண்மை  கண்டறியும்  சோதனையில்  கலந்து  கொண்டு  தான்  லெஸ்பியன்  இல்லை  என  நிரூபித்தால்  தான்  திருமணம்  என  கண்டிஷன்  போடுகின்றனர் 


இதற்கு  நாயகனின்  அம்மா  சம்மதித்தாரா? அதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  என்ன? க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என்ன  ? என்பதை  திரையில்  காண்க 


ரித்விக்  பவுமிக்  நாயகனாக  அசால்ட்டாக   நடித்திருக்கிறார். காதலியிடம்   பழகும்போது  சின்சியரான  காதலானக , மாமனார்  மாமியாரிடம்  கச்சிதமான  மாப்பிள்ளையாக  நடந்து  கொள்ளும்  இவர்  தங்கையிடம்  சண்டை போடுவது  அம்மாவிடம்  அடங்கி  நடப்பது  அப்பாவிடம்  ஃபிரண்ட்லியாக  பேசுவது  என  பல பரிமாணங்களில்  நல்ல  நடிப்பை  வெளிப்படுத்துகிறார்


 பர்க்கா  சிங்க்  தான்  நாயகி . கச்சிதமான  நடிப்பு  காதலன்  பெற்றோர்  இருவருக்கும்  இடையே  இருதலைக்கொள்ளி  எறு,ம்பாய்  தவிக்கும்போதும் , இருவரையும்  பேலன்ஸ்  பண்ணும்போதும்  வாவ்  சொல்ல  வைக்கிறார் 


நாயகனின்  அம்மாவாக  மாதுரு  தீக்சித் .  மொத்தப்படத்தையும்  இவரது  நடிப்புதான்  தாங்கிப்பிடிக்கிறது, அருமையான  ரோல் . மகளிடம்  குற்ற  உணர்ச்சியுடன்  பேசுவது , கணவனிடம்  அன்பாக  நடந்து  கொண்டாலும்  உங்கள்  மேல்  எனக்கு  காதல்  இல்லை  என்பது  காஞ்சனா  எனும்  தோழியிடம்  அவர்  வைத்திருக்கும்  சஸ்பென்ஸ்  ரிலேசன்ஷிப்பை  க்ளைமாக்ஸில்  வெளி[ப்படுத்துவது  என   பல  காட்சிகளில்  அப்ளாஸ்  அள்ளறார் 


நாயகனின்  அப்பாவாக கஜராஜ்ராவ்  நல்ல  குணச்சித்திர  நடிப்பு .  மனைவியுடனான  உரையாடலில்   கண்ணியம்  காட்டும்போதும் , மெடிக்கல் ஷாப்பில்  காயகல்ப  மருந்து  கேட்கத்தயங்கும்போது  காமெடியான  உடல்  மொழியை  வெளிப்படுத்தும்போதும்  அட  போட  வைக்கிறார்


நாயகனின்  தங்கையாக    சிருஷ்டி  துணிச்சலான  கதாபாத்திரம். இதை  ஏற்று  நடிக்க  ஒரு  கட்ஸ்  வேண்டும்.  புர்ட்சிகரமான  வசனங்கள் , ஆத்மார்த்தமான  நடிப்பு  இவருடையது 


மாதுரி  தீக்சித்தின்  தோழியாக  வரும்  காஞ்சனாவாக   சைமன்  சிங்  நடிப்பில்  முத்திரை  பதிக்கிரார்.   ரோப்  காரில்  பயணிக்கும்போது  நாயகியின்  அம்மாவுடனான  உரையாடலில்  அவரை  மடக்கும்  விதம்  பிரமாத்ம், அடுத்து  என்ன  நடக்குமோ? என்ற  பதை பதைப்பை  ஏற்படுத்தும்  காட்சி  அது 


அதே  போல  க்ளைமாக்சில்  வரும்  உண்மை  கண்டறியும்  சோதனைக்காட்சி  பரப்ரப்பாக  ப்டம் ஆக்கப்பட்டுள்ளது .  படம்  முழுக்க  நாயகனின்  அம்மாவை  சந்தேகப்பட்டு  கேள்வி  கேட்கும் நாயகியின்  அம்மா  க்ளைமாக்ஸில்    தன்  கணவனை  கேள்வி  கேட்பது  பொங்குவது  எல்லாம்  எதிர்பாராத  திருப்பம் 


ஒளிப்பதிவு  , இசை  , பாடல்கள்  அனைத்தும்  கச்சிதம்


 கத்தி  முனையில்  செரு[ப்பு  இல்லாமல்  நடப்பது  போன்ற   ஆபத்தான  வித்தியாசமான  கதைக்கரு . அதை  துளி  கூட  ஆபாசம்  இல்லாமல்  திரைக்கதை  எழுதி  இயக்கிய  இயக்குநர்   சுமித்  பதேஜாவுக்கு  ஒரு  பூங்கொத்து . 


திரைக்கதையில்  வரும் பல  சம்பவங்கள்   பத்து  சிறுகதைகள்  படித்த  அனுபவம்  தருகிறது . 

சபாஷ்  டைரக்டர்


1  மாதுரி  தீக்சித்தும்  காஞ்சனாவும்  உரையாடும்  காட்சிகளை  நான்  லினியர்  கட்டில்  சொன்ன  விதம், கடைசி  வரை  அவர்களுக்கு இடையே  ஆன  நட்பு  எம்மாதிரியானது  என்பதில்  சஸ்பென்ஸ்  மெயிண்ட்டெயின்  பண்ணிய  விதம் 


2   நாயகனின்  குடும்பம், நாயகியின்  குடும்பம்  உட்பட  படத்தில்  வரும்  அனைத்து  கேரக்டர்க்ளும்  டிசைன்  பண்னப்பட்ட  விதம், அனைவரின்  நடிப்பு  எல்லாமே  பிரமாதம் 


3  மெடிக்கல்  ஷாப்  காயகல்ப  காமெடி  காட்சி  அவ்ளோ  இயல்பு.  மிக  நாசூக்கான  காட்சி  அமைப்பு


4   ரோப்  காரில்  பயணிக்கும்போது  மாதுரி  , காஞ்சனா , சம்பந்திய,ம்மா  மூவருக்குமான  உரையாடலில் பொறி  பறக்கிறது . சபாஷ்  டயலாக்  ரைட்டர் 


5    உண்மை  கண்டறியும்  சோதனையில்    வெற்றி  பெற்ற  பின்  நடக்கும்  மாதுரி - காஞ்சனா  டான்ஸ்  கலக்கல்  என்றால்  அதுக்குப்பின்  வரும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அபாரம்



  ரசித்த  வசனங்கள் 


 1  என்  அம்மாவுக்கு  நல்ல  மகனா  இருக்க  முடியாத  நான்  எப்படி  உனக்கு  நல்ல  க்ணவனா  ஆக  முடியும் ? 


2  மத்தவங்க சந்தோஷத்துக்காகவே   நீ  இத்தனை  வருசம்  வாழ்ந்துட்டே , இனி   உன்  சந்தோஷத்துக்கு  வாழ் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    ஃபாரீன் ல  ரிட்டர்ன்  ஆகற  நாயகியின்  பெற்றோர்  மூட்டை  முடிச்சுகள்  சூட்கேஸ்  பெட்டி  படுக்கையோடு  அப்படியே  நாயகன்  வீட்டுக்கு  வர்றாங்க . அப்றம்  ஒரு  நாள்  கழித்து  ஹோட்டலில்  ரூம்  புக்  பண்ணி  தங்கறாங்க . யாரை  வேணாலும்  கேட்டுப்பாருங்க . எல்லாரும்  முதல்ல  ஹோட்டல்ல  தங்கிட்டு  ரிஃப்ரெஸ்  ஆகிட்டு  பின்  தான்   இப்படி  கெஸ்ட்டா  ஒரு  வீட்டுக்குப்போவாங்க 


2 நாயகனின்  தங்கை  என்ன  படிக்கிறார்?  அது  என்ன  சப்ஜெக்ட்? என்பதெல்லாம்  தெரியாமலேயே  அவரோட  அப்பா  இருப்பாரா? பிஹெச்  டி  முடிச்சு  பல  வருசம் கழிச்சு   என்னது?  அவளுக்கு கல்யாணம்  ஆகிடுச்சா? என  ஆரோரா  ஆரிராரோ  படத்தில்  வரும்  அதிர்ச்சிப்பைத்தியம்  போல்  இவர்  கேட்பது  நகைக்க  வைக்கிறது (  ஆடியன்சுக்கு  நாயகனின்  தங்கை  கேரக்டர்  டிசைனை  புரிய  வைக்க  எடுத்த  காட்சி  அது. ஆனா  நாயகனின்  அப்பவின்  கேரக்டர்  டிசைனுக்கு  ஆப்பு  வெச்சிடுச்சு 


3  மாப்ளையைபிடிச்சிருக்கா? கட்டிக்கோ  மாப்ளையோட  அம்மாவுக்கெல்லாம்  டெஸ்ட்  வைக்கற  வேலை  வேணாம்  என  யாருமே  பொங்கவில்லை.அது  ஏன்?


4  பொதுவா  காண்டம்  வாங்குவது , காயகல்பம்  வாங்குவது  வயாக்ரா  வாங்குவது  போன்ற  ரகசியமான  வேலைகளை  தாங்கள்  குடி  இருக்கும்  ஏரியாவில்    செய்ய  மாட்டார்கள் . வேலை  விஷயமாக  வெளில  ;போகும்போது  அந்த  புது  ஏரியாவில்தான்  வாங்குவார்கள் . நாயகனின்  அப்பா  குடி  இருக்கும்  வீட்டுக்கு  அருகில்  இருக்கும்  மெடிக்கல்  ஷாப்ல  வாங்கி  மாட்டிக்கறார். அதை  விடப்பெரிய  லாஜிக்  மிஸ்டேக்  அவங்க  வீட்டுக்குப்பக்கத்து  வீட்டு  லேடியும்  காயகல்பம்  வாங்குவது. இப்படி  லேடீஸ்  வாங்குனா  அந்த  ஏரியாவில்  நடமாட  முடியுமா?  கலாய்த்துத்தள்ளிட  மாட்டாங்க ? 


5   படம்  போட்டு  ரெண்டரை  மணி  நேரம்  வரை  எல்லா  கேரக்டர்களும்  என்ன  விதமான  எண்ணத்தில்  இருக்காங்களோ  அதுக்கு  நேர்  மாறாக  க்ளைமாக்சில்  ஸ்விட்ச்  போட்டது  போல்  மாறுவது  நம்ப  முடியலை 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மனதில்  தங்கும்  திரைக்கதை  தான். மாமூல்  மசாலாபடங்கள்  பார்ப்பவர்களுக்குப்பிடிக்காது . பெண்களுக்குப்பிடிக்கும். அடல்ட்  கண்ட்டென்ட்  விஷூவலாக  இல்லாவிட்டாலும்  இது  குடும்பத்துடன்  பார்க்க  முடியாத  சப்ஜெக்ட், ஆனா  குடும்பத்தினர்  எல்லாரும்  தனித்தனியா  பார்க்கலாம். ரேட்டிங்  3 / 5 


Maja Ma
Directed byAnand Tiwari
Written bySumit Batheja
Produced byAmritpal Singh Bindra
Starring
CinematographyDebojeet Ray
Edited bySanyukta Kaza
Music byShishir Samant
Production
company
Leo Media Collective
Distributed byAmazon Prime Video
Release date
6 October 2022
Running time
134 minutes
CountryIndia
LanguageHindi