Thursday, April 30, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ஏப்ரல் 4 ம் வாரம் 30/4/26 தியேட்டர் ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் 3 தமிழ்ப்படங்கள் ,ஒரு தெலுங்கு டப்பிங்க் படம் ஆக மொத்தம் 4 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

தனுஷ்,சரத் குமார்,பிரபுதேவா ஆகிய மூவரும் மோதுகிறார்கள்





கர - சரத் குமார் + அசோக் செல்வன் காம்போவில் உருவாகி வெளியான போர்த்தொழில் என்ற பிரம்மாண்டமான க்ரைம் திரில்லர் ஹிட் படத்தைத்தந்த  விக்னேஷ் ராஜா வின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் இது.இது ஒரு க்ரைம் திரில்லர் மூவி.

இயக்குநரின் முதல் படமே விமர்சன ரீதியாகவும் ,கமர்ஷியல் கலெக்சன் ரீதியாகவும் வெற்றி பெற்றதால் அவரது இரண்டாவது படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதில் நாயகன் தனுஷ் கொள்ளைக்காரன் அல்லது திருடன் ரோலில் வருகிறார் போல் தெரிகிறது.அவரைப்பிடிக்க முயலும் போலீஸ் ஆபீசர் ஆக த கிரேட் இண்டியன் கிச்சன் புகழ் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்திருக்கிறார்.

நாயகி ஆக மமிதாபைஜூ கிராமியப்பெண்ணாக முதன்முதலாக தாவணி கெட்டப்பில் வருகிறார்.கிளாமர் க்யூன் ஆகப்பார்த்துப்பழக்கப்பட்டவரை கிராமத்துக்கிளி ஆகப்பார்க்க ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?என்பது தெரியவில்லை.

இவர்கள் போக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ,கருணாஷ் ,ஜெயராம்,ஸ்ரீஜா ரவி. ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜி வி பிரகாஷ் குமார் தான் இசை.தேனி ஈஸ்வர் தான் ஒளிப்பதிவு.

ரன்னிங்க் டைம்  161 நிமிடங்கள் 


ரசித்த வசனங்கள்

1 அவன் திரும்பி வந்தபோதே எனக்கு ஒரு டவுட்.

ஏண்டா இப்படிப்பேசறே?அவன் திருந்தி தான் வந்திருக்கான்.

2. ஓட்டைப்பிரிச்சு இறஙகித்திருடறது ,கொள்ளையடிக்கறது இது தான் எனக்குத்தெரியும், என்னை என்ன பண்ணச்சொல்றே?

3 பயிறோ,களையோ,பாவமோ,புண்ணியமோ அவனவன் விதைச்சதை அவனவன் தான் அறுவடை பண்ணியே ஆகனும்.

4 என் பேரு கர சாமி,எல்லாரும்  என்னை கர-ன்னுதான் கூப்பிடுவாங்க

5 என் மேல் படிஞ்சிருக்கும் கறையைத்துடைக்கனும்.என்னை நம்பி இருப்பவர்களைக்கரை சேர்க்கனும்.



2. விடியல்- சரத்குமார்  + சினேகா ஜோடி நடிக்கும் ஆக்சன் திரில்லர் மூவி இது.இயக்கம் செல்வராஜ்.இந்தப்படத்தில் சரத்குமார் பெரிய அரிவாள் மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார்.சினேகா கிளாமர் ரோலில் வருகிறார்.ஸ்ருதி பிரகாஷ் கெஸ்ட் ரோலில் வருகிறார்.இசை தீனா



3. சுயம்பு (தெலுங்கு/தமிழ்)

பாகுபலி பாணியில் வெளியாகும் ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் டிராமா இது.
நிகில் சித்தார்த் போர் வீரனாக நடிக்கும் இந்த சரித்திரப்படத்தில் கே ஜி எப் படத்தின்  இசை அமைப்பாளர் ரவி பாஸ்ரூர் இசை அமைக்கிறார்.இயக்கம் பாரத் கிருஷ்ணமாச்சாரி


இழந்த செங்கோலை மீட்கப்போராடும் போர் வீரனின் கதை இது

நாயகி ஆக சம்யுக்தாமேனன் நடிக்கிறார்

ரசித்த வசனங்கள்


1 இன்னும் எத்தனை காலம் வதந்திகளை வாள்  கொண்டு அடக்குது?

2 காலம் கத்தி மாதிரி தாக்கும்போது காப்பாற்றக்கேடயம் வேண்டும்

3 பணம் உன்னைக்கொஞ்ச நேரம் தான் கூட்டிட்டுப்போகும்.துணிவு தான் கடைசி வரை  கூட வரும்.

4 இது நீதி அல்ல நிஜம்





4. பிளாஸ்பேக்.   தமிழ்


பிரபுதேவா ரெஜீனா கசண்ட்ரா ஜோடி நடித்த படம்.அனசூயா பரத்வாஜ் இன்னொரு நாயகி.

இசை சாம் சி எஸ்.

தனது வாழ்வை வடிவமைத்த தன்னை விட வயதான பெண்ணுடன் ஏற்படும் நாயகனின் காதல் தான் கதை.2020 ல் வெளியான Malena என்ற ஹாலிவுட் படத்தின் பட்டி. டிங்கரிங்க் அட்லீ வெர்சன் என்பது ட்ரெய்லர் பார்த்ததும் தெரிகிறது.அப்பட்டமான திருட்டு

ட்ரெய்லரில் வெளியான 2 நிமிடப்படத்தில் வரும் 16 காட்சிகளில் 12 காட்சிகள் மலீனா வின் சாயல் அப்படியே இருக்கிறது.

டான் சாண்டி தான் இயக்கம்.


ரசித்த வசனங்கள்

1 நாம் எழுதும் எழுத்தில் உயிர் இருக்கனும்.நாம் எழுதறப்ப சிரிப்பு வரும் இடத்தில் வாசகன் சிரிக்கனும் ,அழுகை வரும் இடத்தில் வாசகன் அழனும்

2 இவர் யார் தெரியுதா?

பொறுக்கி ரைட்டர்?