இயக்குநர் சுதா கொங்கரா இயக்குநர் மணிரத்னத்திடம் பணியாற்றியவர்.இவரது முதல் படம் துரோகி (2010) சரியாகப்போகவில்லை எனினும் வித்தியாசமான படம்.இறுதிச்சுற்று(2016) கமர்சியல் ஹிட்,சூரரைப்போற்று (2020) நேரடி ஓடிடி ரிலீஸ்,அனைவரது பாராட்டையும் பெற்ற படம்.மேக்கிங்கில் இவருக்கு என்று தனித்தரம் இருக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் கல்லூரி மாணவர்.மொழிப்போராட்டத்தில் அதாவது ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் ஒரு ரயிலுக்கு மாணவர்களுடன் சேர்ந்து தீ வைக்கிறார்.அந்தப்போராட்டத்தில் அவரது நண்பர் இறந்து விடுகிறார்.இதனால் மனம் வெறுத்த நாயகன் இந்தப்போராட்டம் எல்லாம் வேண்டாம் என ஒதுஙகி குடும்பத்தை கவனிக்கிறார்.
நாயகனின் தம்பி சில வருடங்கள் கழித்து மாணவர்களுடன் சேர்ந்து அதே போலப்போராட்டம் செய்கிறான்.ஆரம்பத்தில் தம்பியை எதிர்த்த நாயகன் ஒரு கட்டத்தில் அவனும் களத்தில் இறஙகுகிறான்.
இந்தப்போராட்டத்தில் நாயகனின் இழப்புக்கள் என்ன?அவர் வெற்றி அடைந்தாரா? என்பது மீதி திரைக்கதை.
நாயகன் ஆக சிவகார்த்திகேயன் ஆக்ரோசமாக நடித்திருக்கிறார்.நல்ல பண்பட்ட நடிப்பு.
நாயகனின் தம்பியாக அதர்வா அட்டகாசமாக நடித்திருக்கிறார்.அவர் வரும் காட்சிகள் எல்லாம் உயிரத்துடிப்பானவை.
வில்லன் ஆக ,ஸ்பெசல் ஆபீசர் ஆக ஜெயம் ரவி செம வில்லத்தனத்துடன் பட்டையைக்கிளப்பி இருக்கிறார்.
நாயகி ஆக ஸ்ரீலீலா அழகாக இருந்தாலும் அவரது கேரக்டர் டிசைன் ,நடித்த விதம் சரி இல்லை.இது இயக்குனரின் தவறா?இவர் கிட்டெ சரக்கே அவ்ளவ் தானா? தெரியவில்லை.நடகத்தனமான நடிப்பு
பாட்டியாக வரும் கொலப்புளி லீலா கச்சிதம். அறிஞர் அண்ணாவாக வரும் சேத்தன் கெட்டப் அசத்தல்.கலைஞர் ஆக கெஸ்ட் ரோலில் குரு சோமசுந்தரம் வருகிறார்.
கேமியோ ரோலில் ராணாவும் ,பசீல் ஜோசப்பும் கச்சிதம்
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.பல காட்சிகளில் இருவர் ,ஆய்த எழுத்து பாதிப்பு தெரிகிறது.
இசை ஜி வி பிரகாஷ குமார்.பாடல்கள் 3 செம ஹிட்.பின்னணி இசை முறுக்கேற்றுகிறது.
சதீசு சூர்ய வின் எடிட்டிஙகில் 150 நிமிடஙகள் ஓடுகிறது.பின் பாதி இழுவை.முதல் பாதியில் லவ் போர்சன் ஸ்பீடு பிரேக்கர்.
அர்ஜூன் நடேசன் ,கணேசா ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் சுதா கொங்கரா.இருவர் ,ஆய்த எழுத்து, சாயல் ஆங்காஙகே தெரிகிறது. நாயகனுக்கான காட்சிகளில் தளபதி. நினைவு வருகிறது.
சபாஷ் டைரக்டர்
1 மொழிப்போராட்டத்தைப்பதிவு செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப்பெறுகிறது.
2 வெறும் ஹிஸ்டாரிக்கல் டிராமாவாக எடுத்தால் டாகுமெண்ட் ரி ஆகி விடும் என்ற பயத்தில் கமர்ஷியல் அயிட்டங்கள் சேர்த்திருப்பது புரிகிறது
3 இக்கதைக்கு பெஸ்ட் சாய்ஸ் சூர்யா தான்.அது தான் இயக்குநரின் முதல் சாய்ஸ்.ஆனால் சூர்யா மறுத்ததால் சி.கா.
4 படத்தில் வசனஙகள் செம.பல இடஙகளில் கை தட்டலை அள்ளுகிறது.
செம ஹிட் சாங்க்ஸ்
1 நமக்கான காலம்
2 முத்தாரமே
3 நெஞ்சுக்குழி
4 ரத்னமாலா
ரசித்த வசனங்கள்
1 தமிழ் தவிர மற்ற எல்லா மொழிகளும் எங்களுக்கு அந்நிய மொழிகள் தான்
2 யூ மஸ்ட் பி எ பிரில்லியண்ட்
வில்லன் பஞ்ச் - ஐ ஆம் வாட் ஐ ஆம்
3 ஹிந்தித்திணிப்புக்குத்தான் நாங்க எதிரானவங்க ,ஹிந்தி பேசறவஙகளுக்கு எதிரானவங்க இல்லை
4 நாங்க தமிழை மொழியாத்தான் பார்க்கிறோம்,அவஙக தான் மொழி வெறியரா மாத்தறாங்க
5 எதிர் வீட்டுக்குப் போறப்பக்கூடக்குளிச்சுட்டுப்போறான்,அப்போ நிச்சயம் லவ் தான்.
6 அரசியலமைப்பையே எரிக்கப்போறீஙகளா?
நெருப்பால உருக்கப்போறோம்
7 பிறந்ததுல இருந்தே ஹிந்தி பேசறவஙகளுக்கும் ,பின் பழகிப்பேசுபவர்களுக்கும் வித்யாசம் இருக்கு
8 கறுப்புக்கொடி காட்டினாக்கைது பண்ணுவீஙகளா?எங்க தலை முடி கூடக்கறுப்பு தான்.
9 குடியரசு தினத்தன்னைக்குப்போராடினா தேச விரோதம்.அடுத்த நாள் போராடினா அது நமக்கான ஜனநாயக உரிமை.
10 சூதானமா இருப்பது பயம் இல்லை.
11 அண்ணனா சொல்லி இருந்தாக்கேட்டிருக்க மாட்டேன்.தலைவனா சொன்னதால கேட்கிறேன்
12 ஊர்வலம் நடத்த இவஙகளே பர்மிஷன் கொடுத்துட்டு 144 தடை உத்தரவும் இவஙகளே போடறாஙக.இவஙக பைத்தியமா?நாம பைத்தியமா?
13 வெறும் ஒன்றரை லட்சம் போலீசை வைத்து கோடிக்கணக்கான இந்தியர்களை பிரிட்டிஷ்காரன் எப்படி ஆண்டான் தெரியுமா?துப்பாக்கியால ஒரு தடவை சுட்டா ஒரு கோடிப்பேருக்குக்கேட்கும்படி சுடுவான்
14 நம்மாளுஙக பிரியாணியைப்பார்த்தா தன்மானத்தை விட்டுடுவாங்க
15 தெலுங்குல அவ என்ன பேசிட்டுப்போறா?
அவ எல்லா மொழிகளிலும் கெட்ட வார்த்தைதான் பேசுவா
16 சாப்பாடுன்னா மதுரை தான்
17 ஒரு மனிதன் சிந்திக்கத்தேவைப்படும் மிகச்சிறந்த கருவி மொழி
18 எங்க ரத்தத்தில் மொழி உணர்வு கலந்துட்டதாலதான் எங்களை ரத்தம் சிந்த வைக்கறீங்களா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மொழிப்போராட்டத்தை நடத்தும் நாயகன் பின் அவனே ஹிந்தி கற்றுக்கொண்டு ரயில்வே பணி நேர்முகத்தேர்வுக்குப்போய் அதில் தேர்வு பெறாததால் மீண்டும் ஹிந்தியை எதிர்ப்பதாகக்காட்டி இருப்பது கேரக்டரில் சறுக்கல்.நாயகனின் தம்பி கேரக்டர் டிசைன் பக்கா
2. நாயகியின் நடிப்பு படு செயற்கை.அந்த லவ் போர்சன் எடுபடவில்லை
3 மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து ,இருவர் ஆகிய ஒரு படங்கள் ஓடாதவை.அதிலிருந்து இன்ஸ்பிரேசன் ஆகி சில காட்சிகளை வைத்தது ஏனோ?
4 ரயில் பொதுமக்கள் சொத்து.அதை எரிப்பதால் நமக்குத்தானே நட்டம்? தீவிரவாதி இமேஜ் தானே வரும்?
5 எந்த மகனும் அம்மாவைப்பார்த்து சொல்லக்கூடாத வார்த்தையை வில்லன் சொல்வது கொடூரம்
6 டூயட் சீனில் எதுக்கு நாயகனுக்கு திமுக யூனிபார்ம்?
7 இரும்புப்பெண்மணி ஆன இந்திராகாந்தி கேரக்டருக்கு அந்தபெண் சரி இல்லை.அந்த கேரக்டர் டிசைனும் சரி இல்லை.பாரதப்பிரதமர் கெத்து வேண்டும்
ஒரு எம் எல் ஏ ரேஞ்சுக்குக்கூட அமையலை.
8 பின் பாதியில் ஒரே வன்முறை ,அழுகை,மரணஙகள் சலிப்பு ஏற்படுத்தும்
9 சிவாஜி நடித்த பராசக்தி படத்தைப்பார்ப்பது போல் ஒரு சீன் இருப்பதைத்தவிர டைட்டிலுக்கும் ,படத்துக்கும் சம்பந்தமே இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது எல்லோருக்குமான படம் இல்லை.திமுக வினர் பார்க்கலாம்.சி.கா ரசிகர்கள் பார்க்கலாம்.. விகடன் மார்க் யூகம் 42._குமுதம் ரேங்க்கிங்க். ஓக்கேஏற்படுத்தும்
2.5 /5
| Parasakthi | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Sudha Kongara |
| Screenplay by | Sudha Kongara Arjun Nadesan Ganeshaa |
| Dialogues by |
|
| Story by | Mathimaran Pugazhendhi |
| Produced by | Aakash Baskaran |
| Starring | |
| Cinematography | Ravi K. Chandran |
| Edited by | Sathish Suriya |
| Music by | G. V. Prakash Kumar |
Production company | Dawn Pictures |
| Distributed by | Red Giant Movies |
Release date |
|
Running time | 162 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |
| Budget | ₹150–250 crore[2][3][4] |
| Box office | ₹0.70 crore[5] |
