ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் . ஒரு மிகப்பெரிய உல்லாச க்கப்பலில் 3 நாட்கள் பயணம் செய்ய வேண்டிய பணி அவருக்குத் தரப்படுகிறது . ஒரு பெரிய கோடீஸ்வரியும் , அவளது கணவனும் தான் அந்தக்கப்பலில் விருந்தினர்களை அழைத்து செல்பவர்கள் . பார்ட்டி கொடுப்பவர்களும் அவர்களே !அந்த பயணத்தின் முடிவில் ஒரு பெரிய அறிவிப்பை அந்தக்கோடீஸ்வரி வெளியிட இருக்கிறாள்
முதல் நாள் இரவு நாயகி தனக்குக்கொடுக்கப்பட் ட அறையில் தங்கிய போது பக்கத்து அறையான 10ம் எண் அறை யில் இருந்து ஒரு பெண் கப்பலில் இருந்து கடலில் தள்ளிக்கொலை செய்யப்படுவதைப்பார்க்கிறாள் . அறையில் ரத்தக்கறையும் இருக்கிறது
உடனே கப்பலில் அனைவரையும் எழுப்பி விஷயத்தை சொல்கிறாள் . ஆனால் கப்பல் சிப்பந்திகள் ரொமபக்கூல் ஆக 10ம் எண் அறை யில் யாரும் தங்கவே இல்லை , அங்கே வர வேண்டிய விருந்தினர் வரவே இல்லை என்கின்றனர் ,,ரத்தக்கறை இப்போது இல்லை . எனவே அனைவரும் நாயகி கண்டது பிரமை , அல்லது கற்பனை என நினைக்கின்றனர்
ஆனால் நாயகி இதில் எதோ மர்மம் இருக்கிறது என நினைக்கிறாள் .இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகி ஆக கெய்ரா நைட்லி பிரமாதமாக நடித்து இருக்கிறார் . அவரது கண்கள் , ஹேர் ஸ்டைல் இரண்டும் கொள்ளை அழகு .நாயகியின் முன்னாள் காதலன் ஆக வருபவர் டேவிட் அஜாலா பிளேபாய் ஆக வந்து கலகலப்பு ஊட்டுகிறார் கோடீஸ்வரி ஆக வரும் லிசா நடிப்பு உருக்கம் . நோயால் பலவீனம் அடைந்த தளர்ந்த நடையை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் வில்லன் ஆக கை பியர்ஸ் மிரட்டி இருக்கிறார்
பென் டேவிஸ் ஒளிப்பதிவு அபாரம் . படம் முழுக்க ஒரே ஒரு கப்பலில் நடக்கும் கதை என்பதால் கடலின் ரம்மியத்தை பல ஷாட்களில் அள்ளி வழங்கி இருக்கிறார் .இசை பெஞ்ச்மின் . பின்னணி இசையில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம் . மார்க் டே தான் எடிட்டிங்க் . 90 நிமிடங்களில் ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 வில்லன் ஆள் மாறாட்டம் செய்கிறான் என்ற ட்விஸ்ட் டை யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்த விதம் அபாரம்
2 நாயகி சந்திக்கும் பிரச்சனைகள் நிஜமா?கற்பனையா? என்ற சஸ்பென்ஸ் கச்சிதம்
3 நாயகியின் முன்னாள் காதலன் கேரக்ட்டர் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லையே என நாம் யோசிக்கும் பொது இயக்குனர் அதில் வைத்த டிவிஸ்ட் குட்
ரசித்த வசனங்கள்
1 மனிதன் என்பவன் மிருகமா மாறக்கூடியவன் தான்
ஆமா ,சில சமயங்களில் அப்படி மிருகமா மாறாம இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்
2 உங்க ரெண்டு போரையும் பார்த்தா ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க மாதிரி தெரியுதே ?
எங்க ரெண்டு பெருக்குள்ளே எல்லாமே முடிஞ்சிடுச்சு
3 நோயாளியாக இருப்பது வாழ்வின் பெரிய போராட்டம்
4 சாக இருக்கும் நேரத்தில் யாருக்கும் ஈகோ இருக்காது
5 நான் ஒரே தப்பைத்திரும்பப்பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன்
6 நான் செய்த தவறுகளில் ஒரு நல்ல தவறு நீ தான்
7 அமைதி கிடைக்குபோது நாம் அதை அனுபவிக்கனும்
8 மனித நேயமே இல்லாத காலக்கட்டத்துல நீங்க செய்ததுமனித நேயத்துக்கு உதாரணம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மொத்தமே 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படத்தில் மெயின் கதைக்குள் வரவே 20 நிமிடங்களாகிறது . இன்னமும் க்ரிஸ்ப் ஆக கட் பண்ணி இருக்கலாம்
2 ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரி ஒரு செக்யூரிட்டி போலீஸ் கூட உடன் இல்லாமலா இருப்பாள்
3 கோடீஸ்வரியின் குடும்ப வக்கீல் கப்பலில் , பின் எப்படி உயிலை மாற்ற முடியும் ?
4 க்ளைமாக்சில் எல்லோருக்கும் உண்மை தெரிந்த பின் வில்லன் செய்வது மடத்தனம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் ,க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் அவசியம் காண வேண்டிய தரமான படம் . ரேட்டிங்க் 3 / 5
| The Woman in Cabin 10 | |
|---|---|
Promotional poster | |
| Directed by | Simon Stone |
| Screenplay by |
|
| Based on | The Woman in Cabin 10 by Ruth Ware |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Ben Davis |
| Edited by |
|
| Music by | Benjamin Wallfisch |
Production company | Sister |
| Distributed by | Netflix |
Release date |
|
Running time | 95 minutes[1] |
| Countries |
|
| Language | English |
.
.jpg)