Wednesday, October 22, 2025

ராம்போ (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் @ சன் நெக்ஸ்ட்,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

           



          இயக்குனர்  முத்தையா  எடுத்த எல்லாப்படங்களிலுமே  சாதி இருக்கும் . ஒரு மாறுதலுக்கு  இது  மாமூல்  மசாலாப்படம் .நடிகர்  அருள்  நிதி  படங்களில்  எப்போதும்  மாறுபட் ட  திரைக்கதை   இருக்கும் , ஹீரோயிசம் இருக்காது . ஆனால்  இதில்  மாமூல   கதை . ஓவர் ஹீரோயிசம்    .

இவர்கள்  இருவரின் காம்போவில் வந்த ராம்போ எப்படி இருக்கு எனப்பார்ப்போம்   


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  சின்னப்பையனா இருக்கும்போது   அவன் தான் க்ளாசில்   மார்க்கில் நெம்பர் 2 . உடனே  வில்லனின் அப்பா நெம்பர் 1  மாணவனைக்கொலை பண்ணிடறார் .. வில்லன் பெரியவன் ஆகி  ஒரு பெரிய கல்வி நிறுவனம் நடத்தறான் . அது  தான்  நெம்பர் 2 , ஆல்ரெடி நெம்பர் 1 ஆக  இருக்கும்  ஒரு பெரிய கல்வி நிறுவனம் ஓனர்   கூட  தொழில்  முறை  போட்டி  நடக்கிறது .  இரு தரப்பும்  மாறி மாறி செய்யும் சதி வேலைகளில்  வில்லன்  ஒரு கட்டத்தில்  தன சொந்த  அப்பாவையே  கொலை செய்கிறான் .அதைப்பார்த்த சாட்சி   வில்லனின் தங்கையான நாயகி . தன அண்ணனுக்கு  எதிராக  கோர்ட்டில்  சாட்சி    சொல்ல   இருக்கும்  நாயகியை  வில்லன்  கொலை   செய்யத்துடிக்கிறான் . நாயகன்  அதை எப்படித்த்தடுக்கிறான் என்பதே மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக   அருள் நிதி .பேராண்மை  படத்தில்  வரும் ஜெயம் ரவி மாதிரி  ஹேர் ஸ் டைல் . நடிக்க   வாய்ப்பு அதிகம் இல்லை , அடிக்க வேணா  நிறைய வாய்ப்பு 


 நாயகி ஆக   தான்யா ரவிச்சந்திரன்  அழகுப்பதுமையாக வருகிறார் .


 வில்லன் ஆக ரஞ்சித் சஜீவ்  ,அவருக்கு ஜோடியாக வில்லி ஆக ஆயிஷா , இருவரின் வில்லத்தனங்கள் கன  கச்சிதம் 


வீணடிக்கப்படட நல்ல நடிகர்கள் சரண் ராஜும், அபிராமியும் 


 வி டி வி கணேஷ்  இருக்கிறார் , ஆனால் காமெடி இல்லை 

 ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. ஆக்சன்  ஸீக்வன்சில்  பொறி பறக்கிறது  வெங்கட்  ராஜனின் எடிட்டிங்கில்  படம் 105 நிமிடங்கள்  ஓடுகிறது , ஜிப்ரானின்  இசை சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை ரகம் 


சபாஷ்  டைரக்டர்


1   சாதி அடையாளங்கள் இல்லாமல் ஒரு படம் இயக்கிய சாதனை 


2  நாயகனை  விட வில்லனை  நல்லவனாகக்காட்டியது . செய்த தப்புக்கு அப்பாவுக்கே தண்டனை தருகிறான் வில்லன் 


3   நாயகன் - நாயகி  கெமிஸ்ட்ரியை விட வில்லன் - வில்லி கெமிஸ்ட்ரி  நன்கு   ஒர்க் அவுட் ஆகி இருப்பது 



  ரசித்த  வசனங்கள்



1 நாம  எப்பவும்  மேலே  தான்  இருக்கணும்  , நமக்கு மேலே  யாரையும் வர விடக்கூடாது 


2 ரல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது , நமக்கு என்ன கிடைக்குதோ அதை வைத்து மகிழ்ச்சியா இருந்துக்கணும் 


3  வாழ்க்கைல நமக்கு மேலே  இருக்கறவங்களைப்பார்க்கக்கூடாது ,நமக்கு கீழே இருக்கறவங்களைப்பார்க்கனும் , அப்போதான்  கொஞ்சமாவது  சந்தோஷமா இருக்க முடியும் 


4 உன்னை வெச்சு   நான் தான் சம்பாதிப்பேன் ,எ ன்னை வெச்சு     நீ  சம்பாதிக்க நினைக்கிறே 


5  நல்லவங்க  தப்புப்பண்ணக்கூடாது , நல்லவங்களை   தப்புப்பண்ண  விடவும் கூடாது 


6 தப்புப்பண்ணி   வர்ற   பணத்துக்கு  ஆயுசு  கம்மி , நல்லது வர்ற   பணத்துக்கு  ஆயுசு  அதிகம் 

7    நம்ம மேல  நம்பிக்கை வைத்திருப்பவங்க தான் தெய்வம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  அப்பாவைக்கொன்னதைக்கூட மன்னிச்சுடுவேன்,ஆனா அப்பாவிக்குழந்தைகளைக்கொன்னதை எப்படி மன்னிப்பேன்னு நாயகி தன அண்ணனான வில்லனிடம் கேட்பது  லாஜிக்கே  இல்லை .அப்பாவைக்கொன்னதை எப்படி மன்னிக்க முடியும் ? 


2   நாயகன் அனாதைக்குழந்தைகள்  200  பேருக்கு  சாப்பாடு , தங்கும் இடம் தருவதெ ல்லாம் சரி , அனைவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைக்க சிரமப்படுவது எதனால் ?  அரசுப்பள்ளியில்,  படிக்க வைக்கலாமே? 


3  10 கோடி ரூபாய் பணத்தை சின்ன பேக்கில்  போட்டு எடுத்து வருவது எப்படி ? அதில் 3 செட் டிரஸ் செட் கூட வைக்க முடியாது .500   ரூபாய் நோட்டு  என்றாலும் 200  கட்டு   வைக்க  வேண்டாமா? 


4   நாயகி இருக்கும் இடமே தெரியலை என வில்லன் தேடுவது சிரிப்பு .அவர் என்ன   மாறு வேடத்திலா இருக்கிறார் ? 


5  நாயகன்  சண்டையில்  அடி  வாங்கி  முகம் எல்லாம் காயம் , அடுத்த   ஷாட்டில்   க்ளீன்  முகம், அதற்கு  அடுத்த    சீனில்  ஆறிய வடு .எதுக்கு இவ்ளோ  குழப்பம் ?  கண்ட்டினியுட்டி  பார்க்க மாட் டார்களா? 


6 1985 1990 களில்  வந்திருக்க வேண்டிய அரதப்பழசான கதை 

7  மெயின் கதைக்கு சம்பந்தம்  இல்லாத க்ளைமாக்ஸ் பைட் சீன் . ஹீரோ  , வில்லன் சோலோ பைட்  தேவையே இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கொஞ்ச்ம  கூட சுவராஸ்யம் இல்லாத பழைய கதை , டி வி ல     போடும்போது  பார்க்கலாம் . ரேட்டிங்க் 1.75 / 5