
பரபரப்பான உண்மை சம்பவங்கள் அடிக்கடி நடக்குது.. ஆனா வீரப்பன் கதையை 5 பேர் படமா எடுத்தாலும் ஒரு ஆர் கே செல்வமணியால மட்டும் தான் பிரம்மாண்டமான வெற்றி கண்ட கேப்டன் பிரபாகரனைத்தர முடிஞ்சுது.அதனால எடுத்துக்கற கரு எந்தளவு முக்கியமோ அதை விட ரொம்ப முக்கியம் அதை எப்படி மக்கள்ட்ட எடுத்து சொல்றோம்கற திரைக்கதையும்,எடுக்கப்படும் விதமும்.. வாச்சாத்தி உண்மை சம்பவ கதையை மையமா வெச்சு எடுக்கப்பட்ட கதை எப்படி எடுத்திருக்காங்கன்னு பார்க்கலாம்.
மனிதனோட குணாதிசியம் தனியா இருக்கறப்ப ஒரு மாதிரியும் , கூட்டமா இருக்கறப்ப வேற மாதிரியும் சிந்திக்கும்னு மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்க, உதாரணமா 8 பெண்கள் இருக்கற ஒரு காலேஜ் கேட் வாசல்ல ஒரு பையன் மட்டும் இருந்தான்னா அவன் ஒழுக்கமா, அடக்கமா இருப்பான், அல்லது அப்படி நல்லவனாட்டம் நடிப்பான், ஆனா அதே இடத்துல 20 பசங்க இருந்தா அவங்க பண்ற அலப்பறை இருக்கே?
அது போல் தான் இந்த காட்டிலாகா அதிகாரிகள், போலீஸ் ஆஃபீசர்ஸ் எல்லாருமே.. அதிகமான மக்கள் நடமாட்டம் இல்லாத, மீடியாக்கள் கவனத்துக்கு வராத ஒரு குக்கிராமத்துல யாருக்கு தெரிஞ்சுடப்போகுதுங்கற அதிகார மமதைல செஞ்ச அட்டூழியங்கள் தான் கதை..
வாச்சாத்தி கிராமத்துல ஒரு பழக்கம்,அந்த கிராமத்துல எந்த பொண்ணு வயசுக்கு வந்தாலும் உடனே அந்த ஊர்ல இருக்கற வனத்துறை அதிகாரி டேஸ்ட் பார்த்துடுவார்.. ( அந்தக்கால ராஜாக்கள் அந்தப்புரம் அமைச்சதே இந்த நாட்டு நலன் பணிக்காகத்தான் )ஒரு முறை அந்த ஊர் தலைவர் பொண்ணு வயசுக்கு வருது.. அவசர அவசரமா அவர் தன் பெண்ணுக்கு முறைமாமனையே கட்டி வெச்சுடறார்..
ஆனா முதல் இரவு நடக்கறதுக்கு முன்னமே அந்த அதிகாரி ஆட்களோட வந்து கலாட்டா பண்றார்.. விறகு வெட்டி வாழ்க்கை நடத்தும் ஜனங்களை சந்தன மரம் வெட்டி பதுக்கி வெச்சிருக்கறதா குற்றம் சாட்டறார்.. உண்மைல அவர் தான் அந்த வேலையை பண்றார்..
விசாரணை பண்ண வந்த 4 காட்டிலாகா அதிகாரிகளை ஊர் மக்கள் காரசாரமா பேசி அனுப்பறாங்க.. அதனால வெறி கொண்ட வேங்கைகளா அவங்க 2 லாரி நிறைய போலீஸ் ஆட்கள், வனத்துறை ஆட்களை கூட்டிட்டு வந்து கிராமத்தில் இருக்கற பெண்களை எல்லாம் கேங்க் ரேப் பண்ணிடறாங்க.. விசாரணை செய்ய கூட்டிட்டுப்போறோம்னு சொல்லி இந்த அக்கிரமம் நடக்குது..
சமூக நல ஆர்வலர்கள் கவனத்துக்கு இந்த மேட்டர் கொண்டு செல்லப்பட்டு சி பி ஐ விசாரணை நடக்குது.. ரிட்டயர்ட் ஆகப்போற ஒரு ஆஃபீசர் தன் கடைசி கேஸா இதை எடுத்துக்கிட்டு திறமையா ஆராய்ந்து பாதிக்கப்பட்டது உண்மைதான் என்று ரிப்போர்ட் தர்றார்..
அவ்ளவ் தான் கதை.. கோர்ட்ல கேஸ் நடந்த விதம்,சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என எதுவும் காட்டலை..
ஹீரோ தண்டம்.. ஹீரோயின் சுமார் அழகு நல்ல நடிப்பு.. வில்லன் நடிப்பு பக்கா

படத்தில் இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. சென்சார் பிரச்சனை வரும் என்ற பயம் இல்லாமல் இந்த கருவை எடுத்துக்கொண்ட தைரியத்துக்கு ஒரு ஷொட்டு.. அதே போல் சம்பவம் நடந்த அதே இடங்களில் படப்பிடிப்பை நடத்தியது..
2. ஹீரோயின் மற்றும் அவரது தந்தையாக வரும் ஊர்த்தலைவர் இருவரின் இயற்கையான நடிப்பு..
3. வில்லனாக வரும் காட்டிலாகா அதிகாரியின் பாடி லேங்குவேஜ் , தெனாவெட்டு, கம்பீரம் கலக்கல்
4. கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு,லொக்கேஷன்கள் அழகு.. சிறு மல்லிகை மல்லிகை பெண்ணானதே, தொடத்தொட மெல்ல ,மச்சக்கன்னி, காலம் செய்த கொடுமை, உயிராசை வார்க்கும் கனவுகள் என 5 பாடல்களும் படத்தில் கேட்கும் விதத்தில் சராசரி பாடல்களாக இருப்பது
இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், சில ஆலோசனைகள்
1. உண்மை சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் செய்த இந்த பாதக செயலை அதன் வீரியம் குறையாமல் படம் ஆக்கி இருக்க வேண்டாமா? என்னமோ சும்மா 38 பேரை மட்டும் வெச்சு ஷூட் பண்ணா அந்த எஃபக்ட் கிடைக்குமா?
2. ஓப்பனிங்க் ஷாட்ல ஒருத்தர் “ 30 வருஷமா என் அத்தை பொண்ணுக்காக காத்திட்டு இருக்கேன்கறார்.. அவருக்கு வயசு 24 மாதிரி தான் தெரியுது.... அந்த பொண்ணுக்கு 19 வயசு மாதிரி இருக்கு..
3. வழக்கமாக திருநெல் வேலி பாஷையில் அசத்தும் நெல்லை சிவா இதில் ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.. அலட்டல் சகிக்கலை..
4. கிராமங்களில் குறிப்பா கதை நடக்கும் தர்மபுரி மாவட்ட பெண்கள் வயதுக்கு வரும்போது குடிசையில் வைத்திருக்கும் நாட்களில் அவர்கள் ரெட்டை ஜடை போடக்கூடாது, ஆனா ஹீரோயின் ரெட்டை ஜடைல வருது..
5. ஹீரோயினை காணோம்னு ஊர்மக்கள் சிலர், ஹீரோ தனித்தனியா தேடறாங்க.. ஹீரோ ஹீரோயினை கண்டு பிடிச்சதும் முதல் வேளையா ஊர் மக்கள்ட்ட தேடறதை நிறுத்துங்க..கிடைச்சுட்டான்னு சொல்லாம கில்மா பண்ணிட்டு இருக்கார்... பொழப்பைக்கெடுத்துட்டு தேடிட்டு இருக்கறவன் கேனயனா?
6. வருவாய்த்துறை-னு ஒரு பழைய வெள்ளை பேப்பர்ல எழுதி ஒட்டிக்கிட்டு ஒரு கார் வருது.. பொலீஸ் டிபார்ட்மெண்ட்க்கே அவமானம்..
7. ஊர்ல கலவரம் நடக்கறப்ப ஆஜானுபாகான ஒரு கமிஷனரை சோப்ளாங்கி மாதிரி இருக்கற ஒரு ஆள் அடிக்க வர்றார்.. கமிஷனர் கெஞ்சிட்டு இருக்கார்.. அடிக்காதீங்க அடிக்காதீங்கன்னு .. அய்யோ ராமா..
8. மச்சக்கன்னி பாட்டு வரிகள், இசை ஓக்கே, ஆனால் பிக்சரைசேஷன் மகா ஒர்ஸ்ட்.. எந்த ஆளாவது சம்பங்கி கலர்ல ( கிட்டத்தட்ட காக்கி கலர் )பேண்ட் போட்டு, சிந்தாமணி கலர்ல சர்ட் போட்டுட்டு டூயட் பாடுவானா? ராமராஜன் கூட அப்படி செய்ய மாட்டார்..
9. போலீஸ் வருது.. ஒளியறவங்க வீட்டுக்கொல்லைல, பின் பக்கம் ஒளிவாங்க, அல்லது ஓடிடுவாங்க, ஆனா ஹீரோயின் வீட்டின் முன்னால கதவுக்குப்பின்னால ஒளியறாங்க.. அவ்வ்வ் வ்
\
10. மேடைல சமூக ஆர்வலர் ரொம்ப சீரியசா இந்த வாச்சாத்தி பிரச்சனையை பேசறார், கூட இருக்கறவர் ஏதோ ஜோக் கேட்ட மாதிரி சிரிக்கறார்.. ஏன்?
11. சி பி ஐ ஆஃபீசரா வர்ற ஒய் ஜி மகேந்திரன் என்னமோ பழநி காவடி எடுக்கற ஆள் மாதிரி லுங்கி கட்டிட்டு வர்றார்.. கெத்தா காட்ட வேணாம்?
12. வில்லனா வர்ற காட்டிலாகா அதிகாரி சி பி ஐ ஆஃபீசர் வர்றார் நம்ம கேஸை விசாரணை பண்ண என பம்மிக்கிட்டே சொல்றார் தன் சக அதிகாரிகள் கிட்டே.. ஆனா அவர் நேர்ல வந்ததும் நேரடியா சி பி ஐ ஆஃபீசரை மிரட்றார்.. யாராவது அப்படி மிரட்டுவாங்களா? எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கற கணக்கா.?
13. ஹீரோ மன நிலை பாதித்து இருக்கறப்ப ஹீரோயின் ரேப் செஞ்ச மேட்டர் அவன் கிட்டே சொல்ல வேணாம்கற முடிவை சொல்ற சீன்ல “ அவனே ஒரு மெண்ட்டல்.. அவன் கிட்ட எந்த அதிர்ச்சியான செய்தியையும் சொல்ல வேணாம்னு வசனம் வருது.. அதை உணரும் பக்குவம் இருந்தா அவன் எப்படி மன நிலை குன்றியவன் ஆவான்?
14.சி பி ஐ ஆஃபீசரா வர்ற ஒய் ஜி மகேந்திரன் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வர்றப்ப வெறும் கையை வீசிட்டு வர்றார்.. ஃபோட்டோ எதும் எடுக்கலை.. ஒரே ஒரு வளையல் துண்டை மட்டும் எடுத்துட்டு போயிடறார்.. அடப்பாவமே, சி பி ஐ என்றால் அவ்ளவ் கேவலமா?

மனம் கவர்ந்த வசனங்கள்
1. ராக்காயி, நீ எப்போ வயசுக்கு வரப்போறே?
சுத்தம், நான் வயசுக்கு வந்து 30 வருஷம் ஆகுது..
சொல்லவே இல்ல? ( ந்க்கொய்யால, போஸ்டர் அடிச்சு ஒட்டுவாங்க இரு )
2. அக்கா, வரிசையா ஆம்பள புள்ளயா பெத்துப்போடறியே, நீ பெத்த 9 குழந்தைகளும் ஆம்பள பசங்க, இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் ஆகாது போல.. ( டேய், நீ ஆப்பிரிக்கா போயிடு, உங்கக்காவை சீனா அனுப்பு )
3. ஆம்பளைங்க எல்லாரும் தலை மறைவாயிடுங்க, பொண்ணுங்களை யாரும், எதுவும் செய்ய மாட்டாங்க..
4. ஆஃபீசர்ஸ். எதுக்காக லேடீஸை அழைச்சுட்டு போறீங்க?
அவங்க தான் உண்மையை சொல்லுவாங்க..
5. போலீஸ் காரரே, உங்க துப்பாக்கில சுட லைசன்ஸ் தேவை, ஆனா எங்க துப்பாக்கில லைசன்ஸே தேவை இல்லை, டப்னு சுட வேண்டியதுதான்..
6. இவ்ளவ் ஃபாரஸ்ட் ஆஃபீசருக்குத்தெரியாம, போலீஸ் ஆஃபீசருங்க அறியாம இந்த அப்பாவி ஜனங்க எதையும் மறைச்சு வெச்சிருக்க வழியே இல்லை..
விழிப்புணர்வு ஊட்டுகிறேன் பேர்வழி என படம் எடுத்த இயக்குநர் முதலில் ஒரு படத்தை எப்படி எடுக்கனும்கற விழிப்புணர்வை பெறனும்..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம்.. ( 18 வயதுக்கு மேற்பட்டவங்க )
ஈரோடு ஸ்டார் தியேட்டரில் படம் பார்த்தேன்
