Saturday, April 30, 2011

சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஜூ வி பேட்டி - காமெடி கும்மி

எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமிகள்

சிறை மீண்ட முத்துலட்சுமி ஆவேசம்
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கர்நாடக சிறையில் இருந்து ரிலீஸ் ஆகி
வெளியில் வந்திருக்கிறார் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.

 ஆமா.. சுதந்திரப்போராட்ட தியாகி .. வெளில வந்துட்டாங்க.. மாலை போட்டு ஆரத்தி எடுக்க வேண்டியதுதான்.. 




மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரி கிராமத்தில், அக்கா வீட்டில் தங்கியிருக்கும் முத்துலட்சுமியை சந்தித்தோம். பேச்சில் ஏகத்துக்கும் இப்போ கன்னட வாசம்! 

பேட்டி எடுத்தா கேள்விகளால் வசப்படுத்தனும்.. இப்படி வாசம் பிடிக்கக்கூடாது.. 

''கிட்டத்தட்ட மூணு வருசம் ஜெயிலுக்குள்ளயே ஓடிப்போச்சு. 2008-ம் வருஷம் நவம்பர் 26-ம் தேதி ராத்திரி ஒரு மணி இருக்கும். எங்க வீட்டுக் கதவை யாரோ தட்டினாங்க. வெளியில ரெண்டு பொம்பளை போலீஸ்  இருந்தாங்க. 'நாங்க
மாதேஸ்வரன்மலை போலீஸ்காரங்க. உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்...’னு தமிழ் கலந்த கன்னடத்தில் சொன்னாங்க.


'எதுக்கு..?’ன்னு புரியாமல் கேட்டேன். '11 தடவை உங்களை கோர்ட்ல ஆஜராகச் சொல்லி​யும், நீங்க ஆஜராகாம கோர்ட்டை அவமதிப்பு செஞ்சதுக்காக, உங்களை கைது செய்யச் சொல்லி பிடி வாரன்ட் போட்டிருக்கு’ன்னு சொன்னாங்க.

 அதெப்பிடி? மாலை 6 மணீக்கு மேலே பெண் கைதியை லாக்கப்ல வைக்க சட்டம் இல்லையேன்னு கேட்க வேண்டியது தானே?

'கோர்ட்ல ஆஜராகச் சொல்லி எந்த நோட்டீஸும் வரவே இல்லை’ன்னு நான் சொன்னது எதையும் அவங்க கேட்கத் தயாரா இல்ல. கட்டின புடவை​யோட அந்த நடு ஜாமத்துல என்னைக் கைது பண்ணிக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.''


1. ''சிறையில் எப்படி உணர்ந்தீர்கள்?''

''என்னை மைசூர் ஜெயில்ல அடைச்சாங்க. சின்ன ரூம், அதுல 16 பேர் தங்கி இருந்தோம். கால் நீட்டிக்கூட படுக்க முடியாது. ஆரம்பத்துல பல நாள் ராத்திரி தூக்கமே வராது. காட்டுக்குள்ள அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சிப் பார்த்​துட்டுப் உட்கார்ந்திருப்பேன்.

பொழுது விடிஞ்சிடும்.
ஜெயிலுக்குள்ள நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரும் இருந்தாங்க. அவங்​களுக்குத் தமிழ், கன்னடம் ரெண்டும் தெரியும். அவங்கதான் என்கூட ரொம்ப அன்பாப் பழகி​னாங்க.

கோர்ட்டுக்கு கன்னடத்துல நான் எழுதச் சொன்ன லெட்டரை எல்லாம் அவங்கதான் எழுதிக் கொடுத்தாங்க. இப்போ ஓரளவுக்கு நானும் கன்னடம் பேசக் கத்துகிட்டேன். கன்னடத்துல கையெழுத்துப் போடவும், கொஞ்சம் படிக்கவும் தெரியும். எல்லாம் அவங்க கத்துக் கொடுத்ததுதான். நான் சோர்ந்துகிடந்தப்ப எல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்ததும் அவங்கதான்!''

 உடனே நம்மாளுங்க நக்சலைட்டுக்கும் ,உங்களுக்கும் என்ன தொடர்பு?ன்னு ஒரு கேஸ் போட்டு இருப்பாங்களே?


2. ''சிறைக்குள் மண்ணெண்ணெய் கடத்தியதாக உங்கள் மீது புகார் சொல்லப்பட்டதே..?''

''அது ஒரு பெரிய கூத்துங்க! ஜெயிலுக்குள்ள இருக்குற பொண்ணுங்களுக்கு எம்ப்ராய்டரி சொல்லிக் கொடுத்தாங்க. நானும் கத்துக்கிட்டு இருந்தேன். எம்ப்ராய்டரிக்கு டிரேஸ் பேப்பர்ல பயன்படுத்த மண்ணெண்ணெய் தேவைப்பட்டது. அதுக்காகக் கேட்டேன்.

உங்க வீட்டுல இருந்து கொண்டுவந்து கொடுக்கச் சொல்லுன்னு வார்டன் சொன்னார். அக்காகிட்ட சொன்னேன். அவங்க ஒரு சின்ன டப்பாவுல 50 மில்லி கொண்டுவந்தாங்க.
நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக மண்ணெண்​ணெய் கடத்தினதா என் மேல் புகார் பதிவு செஞ்சு விசாரணை நடத்தினாங்க.

அதுக்குப் பிறகுதான் மைசூர்ல இருந்து பெங்களூரு ஜெயிலுக்கு மாத்திட்​டாங்க. ஜெயிலுக்குள் எம்ப்ராய்டரியைத் தெளிவாக் கத்துக்கிட்டேன். நானே ஒரு சேலையில எம்ப்ராய்டரி போட்டேன் பாருங்க...'' என்று ஒரு சேலையைக் காட்டுகிறார்.

அடடா.. இந்த மேட்டரை இப்போ சொல்லி இருக்கீங்களே..? அண்ணன் நக்கீரன் கோபால்ட்ட அப்பவே  சொல்லி இருந்தா  அண்னன் நக்கீரன்ல ஒரு காட்டு காட்டி இருப்பாரு.. அதை வெச்சு 4 வாரம் எக்ஸ்க்ளூசிவ் மேட்டர் ஓட்டி இருப்பாரே..?

3. ''நீங்க ஆரம்பிச்ச மலை வாழ் மக்கள் இயக்கம் எந்த அளவில் இருக்குது..?''
''மலை வாழ் மக்களோட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத்தான் அந்த இயக்கத்தை ஆரம்பிச்சேன். நான் ஜெயிலுக்குப் போயிட்டதால், கடந்த மூணு வருஷமா அதை நடத்த யாரும் இல்லை.

இப்போ அதை நடத்தும் அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல.

 காட்டுல கட்டு கட்டா கணவர் சேர்த்து வெச்ச பணம் எல்லாம் என்னாச்சு?


ஏன்னா, புள்ளைங்க ரெண்டு பேருக்குமே இந்த வருஷம் ஃபீஸ் கட்டணும். பெரியவ, காலேஜ்ல கடைசி வருஷம் படிக்கிறா. சின்னவ, பிளஸ் டூ எழுதி இருக்கா. அவளையும் காலேஜ்ல சேர்த்தாகணும். இப்படி நிறையச் செலவுகள் இருக்குது. அந்தக் கடமையை முடிச்சிட்டு, அதுக்குப் பிறகு முழு நேரமா மலை வாழ் மக்களுக்காகத்தான் சேவை பண்ணப்போறேன்!''

4. ''அரசியல் திட்டம் இருக்கா..?''

''என் கணவர் இறந்த பிறகு, நான் எல்லா சோதனைகளையும் சந்திச்சிட்டேன். எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்துட்டேன். எல்லோருமே சுய நலத்தோடதான் இருக்காங்க.

 ஆமா.. சுய நலமா இருந்தாதான் அவங்க அரசியல் வாதி.. பொது நலமா இருந்தா அவங்க காந்திய வாதி


அதனால, இனி யாரையும் நம்பி அரசியல்ல இறங்குற எண்ணம் எனக்கு இல்லை. நான் உண்டு.. என் குடும்பம் உண்டுன்னு அமைதியா இருக்கணும்.  இனி என் குழந்தைங்களோட எதிர்காலம்தான் எனக்கு முக்கியம்!''

 பார்த்தீங்களா? நீங்களும் சுயநலமாத்தான் இருக்கீங்க.. அப்போ கண்டிப்பா நீங்களும் அரசியல்வாதி ஆக  வாய்ப்பு உண்டு..