Thursday, November 04, 2010

தீபாவளி சரவெடி ஜோக்ஸ்


1. பறவைகள்  பறந்த  சுவடு
வான  வீதியில்  இருப்பதில்லை.
அது  போல்தான்...
உன்  பார்வைகள்  எனக்குள்
ஏற்படுத்திய  பாதிப்புகளும்...



2. கவிதை  எழுதாத  காதலர்கள்
உலகில்  இல்லை,
கவிதை  எழுதாவிட்டால்
அவர்கள்  காதலர்களே  இல்லை.



3. தலைவருக்கு  விபரமே  பத்தலை,  தியேட்டருக்கு  போறப்ப  எதுக்கு ஊறுகாய்  பாக்கெட்டோட  போறாரு?

வ குவாட்டர்  கட்டிங்  படம்.  தொட்டுக்க  வேணாமா?



4. ஏட்டய்யா,  இவன்  கிரிக்கெட்  ஸ்டேடியத்துல  சீட்டு  ஆடிட்டு  இருந்தான்,

யோவ்,  அதுக்காக  கிரிக்கெட்  சூதாட்ட  கேஸ்ல  இவனை  உள்ளே  தள்ளுவதா?



5. வாழ்க்கையே  எனக்கு  வெறுத்துடுச்சு.

தலைவரே!  உங்களைப்  பார்த்து  வாழ்க்கைதான்  வெறுத்துடனும்.



6. மாப்ளை  டைடல்  பார்க்ல  இருக்காருனு  சொன்னீங்க,  கம்ப்யூட்டர்  எஞ்சினியரா?

அட  நீங்க  வேற,  டைட்டல்  பார்க்ல  பொழுதுபோகாம  உக்காந்திருப்பாரு, வெட்டாஃபீஸ்ங்க.



7. உங்க  படத்துக்கு  எருமைச்சேலைனு  டைட்டில்  வெச்சிருக்கீங்களே, எருமை  எங்கேயாவது  சேலை  கட்டுமா?

நீங்க  வேற,  எருமைச்சேலை  அப்படிங்கறது  ஈரோடு  மாவட்டத்துல  உள்ள ஒரு  ஊரோட  பேருங்க.(மாட்டுத்தாவணி வைக்கலாம்,,  எருமைச்சேலை வைக்கக்கூடாதா?)



8. தியேட்டர்  ஓனர்  ஏன்  கோபமா  இருக்கார்?

பின்னே  என்னங்க?  அய்யனார்  படம்  ஓடற  தியேட்டர்ல  வந்து  அய்யனார்  பட்டாசுகள்  கிடைக்குமா?-னு  கேட்டா?



9. ஹைவேஸ்  ரோடுன்னா  அது  ஹைவே (HIGH WAY) யாக  இருக்கும். ரிங் ரோடுன்னா  அதுல  ரிங்  இருக்குமா?

by  தத்துவங்களை  கவரிங்  பண்ணி  எழுதுவோர்  சங்கம்.



10. தலைவருக்கு  கேரளா  ஸ்டேட்  ரொம்ப  பிடிக்குமாம்.

அதுக்காக  குளிக்கறதுகூட  எர்ணாகுளத்துலதான் -னு  சொன்னா  எப்படி?



11. ஜட்ஜ்: எதுக்காக  உன்  மனைவியை  கொலை  செஞ்சே?

கைதி: இது  என்ன  கேள்வி  எஜமான்?  செத்து  தொலையட்டும்-னு  தான்.



12. ஜட்ஜ்: நீ கொலை  செஞ்சதைப்  பார்த்த  சாட்சிகள்  12  பேர்  இருக்காங்க.

கைதி: யுவர்  ஆனர்  அதைப்  பார்க்காதவங்க  21 பேர்  இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா?



13. தலைவருக்கு  தண்ணி  அடிக்கறதுல  அலாதி  பிரியம்.

அதுக்காக  உங்களுக்கு  பிடிச்ச  டூர்  ஸ்பாட்  எது?-னு  கேட்டா  சாலக்குடி, காரைக்குடி,  பரமக்குடி,  தூத்துக்குடி  அப்டினு  சொல்லனுமா?



14. அந்த  புதுமுக  நடிகை  ஸ்க்ரீன்  பிரிண்டிங்  பற்றி  படிச்சிட்டிருக்கே,  ஏன்?

இன்னைக்கு  ஸ்க்ரீன்  டெஸ்ட்  வைக்கறதா  டைரக்டர்  சொன்னாராம்.



15. கபாலி  வீட்டு  வாசல்ல  வெச்சிருந்த  போர்டைப்  பார்த்து  போலீஸ்  அதிர்ச்சி  அடைஞ்சிடுச்சாமே?

ஆமா.  மாமூல்  நிலையம்-னு  போர்டு  வெச்சிருக்கானாம்.



16. கபாலி  கிட்டத்தட்ட  தொழில்  அதிபர்  மாதிரியே  செயல்படறான்.

எப்படி  சொல்றே?

போலீஸ்  ஸ்டேஷன்ல  எல்லாருக்கும்  மாமூல்  குடுக்கறானே?

Wednesday, November 03, 2010

அனுஷ்கா,அலாஸ்கா,அலாக்கா



















1. இது விஜய் வெடியா?

ஆமா. பற்ற வைக்க வேண்டியது இல்லை. பஞ்ச் டயலாக் பேசுனா போதும்.



2. சிநேகா வெடி-அனாகா வெடி என்ன வித்தியாசம்?

குடும்பப்பாங்கான பொண்ணுங்க வெடிக்கறதுக்கும்-கிளாமர்
பொண்ணுங்க வெடிக்கறதுக்கும் உள்ள வித்யாசம்தான்.



3. இலியானா படம் போட்டிருக்கே இந்த வெடில?

’கேடி’ வெடி. கேடிப்பசங்க மட்டும் வெடிக்கற வெடி.



4. லவ்வர்ஸ் வெடியா இது?

ஆமா! இங்கே பற்ற வெச்சா ஊர் எல்லையைத் தாண்டிப்போய்
வெடிக்கும்.





5. பட்டாசுக் கட்டை அப்படியே பற்ற வைக்காம ஒவ்வொரு வெடியா
உருவி பற்ற வெச்சு வெடிக்கறீங்களே! ஏன்?

கண்ணா! கோழைங்கதான் கட்டோட வெடிப்பாங்க. வீரன் சிங்கிள்
சிங்கிளாத்தான் வெடிப்பான்.



6. இது அர்ஜூன் வெடியா?

ஆமா. பற்ற வெச்சா ‘வந்தேமாதரம்’-னு கோஷம் போட்டுக்கிட்டே வெடிக்கும்.



7. தீபாவளி அன்னைக்கு எதுக்கு அஜீத் வீட்டுக்கு கிளம்பிட்டே?

 ‘தலை’-க்கு எண்ணெய் தேய்ச்சுட்டு அப்புறமா குளி-னு சொன்னாங்க. அதான் ‘தல’ வீட்டுக்கு போறேன்.



8. கம்யூனிஸ்ட்ங்களைக் கண்டாலே தலைவருக்கு பிடிக்கறதில்லை.

அதுக்காக எந்தப் பட்டாசும் சிவப்புக் கலர்ல ரெடி பண்ணக்கூடாதுன்னா எப்படி?



9. சிவகாசி வெடி இருக்குங்களா?

சிவகாசி ஜெயலட்சுமி வெடிகூட இருக்கு.



10. அண்ணே! சிவகாசி வெடி குடுங்க.

அது பழசுங்க. சுறா வெடி புதுசு. அதை வாங்கிட்டுப் போங்க.



11. இணைய தளத்துல பிளாக்ஸ்பாட் [வலைப்பூ] ஆரம்பிக்கறவங்க எவ்வளவுதான் வெள்ளையா இருந்தாலும் அவங்களை ‘பிளாக்’கர்ஸ்-னு தான் சொல்லுவாங்க.  by  பிளாக் ஆரம்பிக்கும் போதே பிளான் பண்ணுவோர் சங்கம்.



12. போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?



13. திருச்சி மாவட்டத்துல சரக்கு சாப்பிடற ஆளுங்க அதிகம்-னு தலைவர் சொல்றாரே?

 ‘உறை’யூர் அங்கே தானே இருக்கு?


14.தலைவரு ஜிம்முக்கு போறாருன்னு எப்படி சொல்றே?


50 கிலோ எடை உள்ள அவரு 80 கிலோ எடை உள்ள அனுஷ்காவை அலாக்கா தூக்கிடுவேன்னு சவால் விடறாரே?



15. ஸ்டோரி டிஸ்கஷனை எப்பவும் நைட் டைம்லயே வைக்கறீங்களே, ஏன் டைரக்டர் சார்?

STORY KNOT (ஸ்டோரி நாட்) NIGHT-ல தான் KNIGHT (குதிரை) மாதிரி கிளம்பும்.



16. மன்னர் தாராபுரம் போயிருக்காரா? எதற்கு?

தாராபுரம் என்றால் அங்கே ஏகப்பட்ட அந்தப்புரம் இருக்கும் என்று எண்ணிவிட்டார்.



17. கூட்டணிக்காக அலையற ஆளு நான் இல்லை-னு தலைவர் சொல்றாரே?

ஆமா... அவரு வழக்கமா பொம்பளைக்காகத்தான் அலைவாரு.



18. இவதான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு, இவ அவளோட தங்கை...

ஓஹோ... உன்னோட நாளைய இயக்குநரும், நாளைய மயக்குனரும்-னு சொல்லு.


டிஸ்கி - தீபாவளி ஸ்பெஷல் ஜோக்கில் சம்பந்தமில்லாமல் எதற்கு அனுஷ்கா ஜோக்.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் தொட்டதை விளம்பரம் பண்ணவேணாமா?

Tuesday, November 02, 2010

கவுத்துட்டாரே கவுத்துட்டாரே




இராஜாஜி அவர்கள், அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக்,
1937ஆம் ஆண்டில் இருந்தார். அப்போது அவர் தமது பணியாளர் ஒருவரிடம் ஓர்உறையைக் கொடுத்து, அதில் தபால் தலை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார்.
பணியாளர் அந்த உறையில் தபால் தலையை கவனக் குறைவாகத் தலைகீழாகஒட்டிவிட்டார்.

            அதைக் கவனித்த இராஜாஜி, சிரித்துக்கொண்டே,“சரியான வேலை
செய்தாய் அப்பா! நாங்கள் எல்லாம் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்ப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நீ ஒரே நிமிஷத்தில் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்த்து விட்டாயே” என்றார்.

Monday, November 01, 2010

ச்சே,நீ எல்லாம் ஒரு பதிவரா?

பதிவுலகில் யாராவது யார் கூடவாவது சண்டை போட்டால் தான் சுவராஸ்யம் என சிலர் சொல்கிறார்கள்.எனக்கென்னவோ அது சரியாகப்படவில்லை.எல்லோரும் ஒரே குடும்பம் போல் பழக வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

முதலில் எனக்கு ஒரு மெயில் வந்தது,உங்கள் பேட்டி வேணும் என.நான் சொன்னேன் நல்லா விசாரிச்சுக்குங்க,நான் பிரபல பதிவர்தானா?என நல்லா தெரியுமா? என தயங்கி தயங்கி தான் பேட்டி குடுத்தேன்,

பதிவுலகில் பிரபலமான / பிரபலமாகிவரும் பதிவர்களை பேட்டி கண்டா ( எடக்கு மடக்கா கேள்வி கேட்டா ) அவங்க என்ன செய்வாங்கன்னு பாக்கறதுதான் இந்த "பதிவர்கள் பேட்டி " பகுதி. இதில் முதலில் நாம் பார்க்கப் போவது சி.பி.செந்தில்குமார்....."அட்ரா சக்க" என்ற வலைப்பூவில் சக்கை போடு போடுபவர் தான் சி.பி.செந்தில்குமார்... சி.பியின் ஸ்பெஷாலிடி... ஜனரஞ்சக ஸ்டைல்... டீக்கைடை பெஞ்சு தலைப்புகள்.... பிட்டு படம் முதல் அட்டு ஃபிகர் வரை புட்டு புட்டு வைக்கிறார்...இப்போது சி.பி யின் பேட்டியைப் பார்ப்போம்.

.1. ஹைக்கூலேர்ந்து ஹாலிவுட் வரை எல்லாம் தெரிஞ்ச மாதிரியே எழுதறீங்களே , அது எப்படி பாஸ் ?

எல்லாம் வாசிப்பு அனுபவம்தான்,சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி ஆக முடியும் என்ற சுஜாதாவின் அட்வைஸ் ஃபாலோ பண்றேன்.இந்த கேள்வி சீரியஸா இருந்தாலும் ,கலாய்க்கறதா இருந்தாலும் இதே பதில்தான்.


2. ப்ரொஃபைல்ல பத்திரிக்கை துறைன்னு போட்டிருக்கே என்ன பத்திரிக்கை?

ஹி ஹி எல்லா பத்திரிக்கைக்கும் எழுதறேன்,நான் ஒரு ஃபிரீலேன்ஸ் எழுத்தாளன் (ஆனா காசு குடுத்தா வாங்கிக்குவேன்).என் படைப்புகள் அதிகமா வந்தது பாக்யா,ஆனந்த விகடன் (இது நாங்க கேட்டமா?னு கேக்கக்கூடாது ஒரு ஃபுளோவுல வந்துடுச்சு.


3. தேவ லீலை பட விமர்சனம் உங்க ப்ளாக்லயே படிச்சுட்டோம்.. படம் பார்த்த அனுபத்த எங்ககிட்ட சொல்லுங்க...

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்,ஆஃப் த ரெக்கார்டா சொல்றேன்,வெளியிட்டு மானத்தை வாங்கிடாதீங்க.ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல அந்த படம் பார்த்தேன்.பொதுவா இந்த மாதிரி படம் நைட் ஷோ தான் போறது,எல்லாம் யாரும் பார்த்துடக்கூடாதுனு ஒரு பயம்தான்.முதல்லியே போயிட்டாலும் படம் போட்டு 5 நிமிஷம் கழிச்சுதான் உள்ளே ;போகனும்,இது சீன் படம் பாக்கறதுக்கான எழுதப்படாத ரூல்.ஓப்பனிங்க்ல சீன் இருந்தா முதல்லியே போயிடனும்,டிக்கெட் கிழிக்கறவர் கிட்டே கேட்டா விபரம் சொல்லிடுவார்.மத்த படம் செகண்ட் கிளாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான் போவோம் ஆனா இந்த மாதிரி படத்துக்கு அது ஆபத்து,பின்னால இருந்து யார் நம்மை பாக்கறாஙகனு தெரியாம போயிடும்.சோ பால்கனில கடைசி ரோ.பெரிசா சீன் இல்லைன்னாலும் இந்த மாதிரி படத்துக்கு சுவராஸ்யமே படத்துல சீன் இருக்கா ?இல்லையா?இருந்தாலும் கட் பண்ணாம போடுவாங்களா?பிட் ஏதாவது சேத்துவாங்களா?இப்படி பல எதிர்பார்ப்புகளோட போவோம்.பி பி எகிறிடும்.இடைவேளை விட்டதும் லைட் போடறப்ப ஒரு புக்கை வெச்சு முகத்தை மூடிக்கனும் (படிக்கற மாதிரி).படம் விடறதுக்கு 10 நிமிஷம் முன்னால கிளம்பிடனும்.பைக் எடுக்கனுமே?பெரும்பாலும் இந்த மாதிரி படத்துல கிளைமாக்ஸ்ல சீன் இருக்காது. (விதி விலக்கு ஏ மேன் அன்ட் டூ விமன்).

4. அந்த ஏடாகூடா ஜோக்குங்களையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க நண்பா ?

பெரும்பாலும் சொந்த சரக்கு தான்,சரக்கு இல்லைன்னா இங்கிலீஷ்,ஹிந்தி புக் படிப்பேன்.எம் ஏ ஹிந்தி படிச்சது இதுக்குதான் உதவுது.ரக்பி ஜோக்ஸ்,குஷ்வந்த்சிங்க் ஜோக் புக்னு வீட்ல ஒரு மினி லைப்ரரியே இருக்கு.ஆபாசமா இருந்தா கொஞ்சம் அதை டீசண்ட்டா மாத்தி (கவுரவ்மா உல்டானு சொல்லிட்டு போயிருக்கலாம்) போடுவேன்


5. விஜய் பட்டங்களிலேயே உங்களுக்கு பிடிச்சது டாக்டர் பட்டமா ? இளையதளபதி பட்டமா?

ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.


6. கலாய்ப்பதற்கு ரொம்ப வாட்டமா இருக்கற ஹீரோ யாரு ? தலயா தளபதியா?

சந்தேகமே வேணாம்,தளபதிதான்


7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே... எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி


8. ப்ரொஃபைல்ல பி.எஸ்.ஸீ மேத்சுன்னு போட்டுட்டு ஆனா கணக்கெல்லாம் 18 + ஆகவே இருக்கே... அதப்பத்தி..

பிளஸ் டூ படிக்கறப்ப சயின்ஸ் டீச்சர் செந்தாமரை செல்வி,தேவி டீச்சர் இவங்களை மேத்தமேட்டிக்ஸ் பண்ண நினைச்சேன்,நடக்கலை,நாம் கணக்குல இவ்வளவு வீக்கான்னு கோபத்துல அந்த சப்ஜெக்ட் எடுத்தேன்.


9. தொடங்கி சில மாதங்கள்ளயே உங்க வலைப்பூவோட அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்குது ? புது பதிவர்களுக்கு அட்வைஸ்...

நான் பதிவுலகிற்கு வந்து இன்றோடு 105 நாட்கள் ஆகுது.ஜனரஞ்சகமா பதிவு போட்டா ஒர்க் அவுட் ஆகும்.

அப்புறம் நான் ஒண்னு கவனிச்சேன்,பெரும்பாலும் எல்லாரும் நேரம் கிடைக்கறப்ப பதிவு போடறாங்க.ரெகுலரா ஒரு டைம் வெச்சுக்கனும்.தினமும் காலை 7 டூ 8 நான் பதிவு போட்டுடுவேன்.ஆஃபீஸ் ல இருந்து வந்து பார்ப்பேன் விசிட்டர்ஸ் டு டே 500 தாண்டிடுச்சுன்னா விட்டுடுவேன்.குறைஞ்சிருந்தா பதிவு ஊத்திக்குச்சுனு அர்த்தம்,மாலை அல்லது இரவு இன்னொரு பதிவு போட்டுடுவேன்

10. உங்க பதிவுகள்ள உங்களுக்கு பிடிச்ச மூணு லிங்க் கொடுங்க...

கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?
கேனை டிவி வழங்கும் கெக்கெக்கே பிக்கெக்கே விருதுகள்
கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை

இது போக கடும் எதிர்ப்பை சந்தித்த பதிவு
அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.



மூன்றாம் கோணத்திற்கு பேட்டியளித்த சி.பி.க்கு நன்றி. இந்த ஈரோட்டுப் பதிவர் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

டிஸ்கி - டைட்டிலுக்கு விளக்கம் என்னன்னா நான் கண்ணாடியைப்பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என.

Sunday, October 31, 2010

ஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +

Crank: High Voltage Wallpapers


சின்னப்பசங்க எல்லாம் படிக்கறாங்களே இரும்புக்கை மாயாவி,இந்த லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ்ல எல்லாம் வருமே அந்த கேரக்டரை உல்டா பண்ணி ஒரு ஆக்‌ஷன் படம் (பப்படம்).நான் எப்படி ஏமாந்தேன்னா போஸ்டர்ல டிரான்ஸ்போர்ட்டர் பாகம் 4 அப்படின்னு போட்டிருந்தது.உள்ளே போன பிறகு தான்  மேட்டர்தெரிஞ்சது. (மேட்டரே இல்லாத படம் என)

படத்தோட கதை என்னன்னா (அதாவது என்ன கதை விட்டிருக்காங்கன்னா)
ஹீரோவின் இதயத்தை ஆபரேஷன் பண்ணி எடுத்து ஒரு செயற்கை இதயத்தை பொருத்துகிறார்கள்.அந்த இதயம் வில்லனின் உடம்பில் பொருத்தனும்.ஆனால் ஹீரோ விடுவாரா?என்ன என்னவோ தகிடு தித்தம் பண்ணி தன் இதயத்தை காப்பாற்றுகிறார்.ஆனால்.... (பெரிய சஸ்பென்ஸ்,டப்பா படத்துக்கு என்ன சஸ்பென்ஸ் வேண்டி கிடகக்கு?)


படத்தில் வரும் காது குத்தல் சீன்கள் (சாதா சீன்)


1.எந்த விதமான ஸ்பெஷல் சக்தியும் இல்லாத ஹீரோ ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தொட்டு பவர் ஏத்திக்கிறார். (நல்ல வேளை இந்த படத்தை விஜய் இன்னும் பாக்கலை).இதுக்கு நரசிம்மாவுல கேப்டன் விட்ட ரீல் எவ்வளவோ தேவலை.


2.ஹீரோவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி வீக் ஆனதும் அதை சார்ஜ் ஏற்றிக்கொள்ள ஏதாவது மனித உடலுடன் உராய்வு ஏற்றிக்கொள் என சயிண்ட்டிஸ்ட் ஐடியா தர (இவர் அல்லவோ நல்ல சயிண்ட்டிஸ்ட்) ஹீரோ இருப்பதோ ஓப்பன் ரேஸ் மைதானம்,என்ன செய்வார் பாவம்?ஒரு 60 வயது லேடியை (கிழ போல்ட்டை) இடிக்கிறார்.என்ன கண்றாவி கற்பனை சார் இது.


3. மேலும் சார்ஜ் பற்றாததால் (அது எப்படி பத்தும்?) ஹீரோயினிடம் ஓப்பன் கிரவுண்டில் தள்ளி ஜல்சா பண்றார்.இந்த ஒரு சீனுக்காகவே ஆஸ்கார் தரலாம்.இன்னொவேஷன் அண்ட் கிரியேட்டிவ் மைண்ட் (INNOVATION AND CREATIVE MIND) ( இந்தக்காலத்துல நாய்ங்க கூட ஒதுக்குப்புறமா மறைவிடத்துக்கு போயிடுது.


Bai Ling stars as Ria in Lionsgate Films' Crank: High Voltage (2009)

டைரக்டர் ரசனை உணர்வு என்றால் கிலோ என்ன விலை?என கேட்பவர் என்பதற்கு நல்ல உதாரணம் படத்தின் வில்லி.மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE? இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.



இந்த லட்சணத்தில் இவர் ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.தல தல என அவர் பின்னாலயே அலைகிறார்,ஹீரோவை காதலிப்பவர் ஹீரோயின் தானே எப்படி வில்லி? என புத்திசாலித்தனமாக கேள்வி கேட்போர்க்கு நான் சொல்வது அவர் படத்தில் வில்லி அல்ல, படத்துக்கு அவர் தான் வில்லி.


படத்தோட ஓப்பனிங்க் சீன் வேனா அசத்தல்.ஹீரோ பார்க்க பார்க்க அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது நல்ல் கற்பனை.
அதே போல் நீலப்பட நடிகர் நடிகைகள் கூலி (!) உயர்வு கேட்டு போராடும் சீன் செம காமெடி.


டைரக்டரையும் அறியாமல் அமைந்து விட்ட காமெடி வசனங்கள்


1.வெத்து வேட்டுப்பசங்களெல்லாம் அவங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டா அதை சாக்கா வெச்சு நீ தாதா ஆகிடறதா?


2.இந்த செவல கிட்ட வெச்சுக்கிட்டா செவுலு கிழிஞ்சிடும் (இதுக்கு சிரஞ்சீவி படமே பெட்டர்)


3. நீ வேணாம்,எனக்கு பிடிக்கலை,ஐ எஸ் ஐ முத்திரை குத்துன ஆம்பளைன்னா அது அவர்தான்.


4.போலீஸ் - என்ன குட்டி, பெயிலுக்கு அப்ளை பண்ணி இருக்கியா?


கைதி - பின்னே,உன் கூட குடித்தனம் பண்ணிட்டு இங்கேயே லாக்கப்ல்யே இருப்பேன்னு நினைச்சியா?


5.ஏய், கருத்த குட்டி,நீ சிறுத்த் குட்டி மாதிரி இருக்கே..




6.எல்லா வில்லன்களும் சொல்ற அதே டயலாக் தான் அவன் எனக்கு உயிரோட வேணும்..


7. போலீஸ் - மேடம் நடந்தது என்ன? விபரமா சொல்லுங்க?


லேடி - நான் 60 வயசானவ் அப்படினு கூட பாக்காம அவன் என்னை உரசுனான்.


போலீஸ் - ஏம்மா,லைவ் ரிலே ஓடிட்டு இருக்கு,சென்சார் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்ல ,அடக்கி வாசி.


லேடி- யோவ்,நீதான்யா நடந்ததை சொல்ல சொன்னே?


போலீஸ் - சரி சரி ஆள் பாக்க எப்படி இருந்தான்?

லேடி - ஆள் வாட்டசாட்டமா, கட்டுமஸ்தா ஜம்முனு தான் இருந்தான்.


போலீஸ் - ஏம்மா, நிஜமா இது கம்ப்ளைண்ட்தானா?


லாஜிக் மீறல்கள் பல இடங்களில் குறிப்பாக 2 கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓடி வரும் ஹீரோ வியர்வை துளி கொஞ்சம் கூட இல்லாமல் நிற்பது அநியாயம்.

ஹீரோ தன் பெயரை கெடுப்பதற்காகவே இந்தப்படத்தில் நடித்தார் போல.


படத்தின் விமர்சனம் எங்கே என கேட்பவர்களுக்கு இந்தப்ப்படத்துக்கு விமர்சனம் வேற எழுதனுமா? ஏதோ முடிஞ்ச வரை மொக்க போட்டாச்சு.


கீழே உள்ள படத்தில் தோன்றுவது  ஹீரோயின்.அருகில் இருப்பவர் ஹீரோ அல்ல,அவரது காதலன்.ஹீரோ இறந்து விட்டதாக நினைத்து அவர் இறந்த 37 நாட்களில் காதலிக்கத்தொடங்கிய உத்தம பத்தினி,இறந்து விட்டதாக நினைத்த கணவன் வீடு திரும்பியதும் இந்த பத்தினி என்ன செய்வது என தடுமாறும்போது இந்த காட்சி .20 வருடங்களுக்கு முன் விஜயகாந்த்,ரகுமான்,சுதா சந்திரன் நடித்த கதை இதே சீன் வரும். புதுசா நம்ம ஆளுங்க எங்கே யோசிக்கறாங்க?




டிஸ்கி 1 - 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 வது பட ஸ்டில்லை பார்க்கவேண்டாம்.அதே போல் கலாச்சாரக்காவலர்களும் டிட்டோ.


டிஸ்கி 2 - ஆங்கிலப்பட விமர்சனத்தில் எப்படி வசனத்தை இவ்வளவு தெளிவாக மொழி பெயர்க்க முடியும்? என கேட்பவர்களுக்கு இந்தப்படமே தமிழில்தான் டப் ஆகி வந்தது.



Amy Smart stars as Eve and Corey Haim stars as Randy in Lionsgate Films' Crank: High Voltage (2009)