Showing posts with label beauty barlour. Show all posts
Showing posts with label beauty barlour. Show all posts

Tuesday, April 26, 2011

அழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி

http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/SjfoH-BxzfI/AAAAAAAABkY/9fozEEn9lk8/s400/beauty_parlour_mumbai_PE_1_20061106.jpg

 தரமான பியூட்டி பார்லர்களுக்குப் போக வேண்டுமென்றால்... ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் வளாகத்தில் இருக்கக்கூடிய பார்லர்களுக்குத்தான் போக வேண்டும் என்றிருந்த காலகட்டத்தில், 'எல்லா தரப்புப் பெண்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில், ஐந்து நட்சத்திர பார்லர்களின் சர்வீஸை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்!’ என்ற கனவோடு பத்து ஆண்டுகளுக்கு முன் வீணா சென்னையில் ஆரம்பித்ததுதான், 'நேச்சுரல்ஸ்!’ இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களையும் தாண்டி, இந்தியாவின் பல பாகங்களிலும் படர்ந்திருக்கிறது!

'சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அதுபோல உடம்பு, சருமம், முடி... இந்த மூன்றும் பூரண ஆரோக்கியத்தோடு பொலிவாக இருந்தால்... அதுதான் பேரழகு. இந்த மூன்றையும் மாசு மருவில்லாமல் எப்படி பொலிவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதுதான் எங்கள் பிரதான வேலை!'' என்று சொல்லும் வீணா, 'என்ன அழகு... எத்தனை அழகு..!’ எனும் இத்தொடரை படைக்கிறார்.

இதைப் படிக்கப் போகும் உங்களின் அழகையும் பொலிவையும் கூட்டுவதோடு அவர் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை... உங்களை அழகுக்கலை நிபுணராகவே மாற்றப்போகிறார்... பின்னே... உங்களின் கணவர், அம்மா, அப்பா, மாமியார், மாமனார், மகள், மகன், நாத்தனார், சகோதரிகள் என்று குடும்பம் மொத்தத்தையும் நீங்கள் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமே!ஓவர் டு வீணா!

 http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/Sjfo3PqHt5I/AAAAAAAABkg/DmmZ_umo9uQ/s400/chd5.jpg
''வெறும் மஞ்சளும் சந்தனமும் மட்டுமே அழகு சாதனங்களாக இருந்த அந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகு சாதனங்களுக்கென்று பிரத்யேக சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்படும் இந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகுக்கான இலக்கணம் மட்டும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது!


'மீனை ஒத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’ என்று எண்ணத் திரையில் கற்பனை செய்து வைத்திருக்கும் எல்லாமும் ஒரு பெண்ணிடம் இருக்கிறது. ஆனால்... அந்தப் பெண் கூன் வீழ்ந்த முதுகோடும், சோர்வான முகத்தோடும் பொலிவிழந்து காணப்பட்டால்... நிச்சயம் அது அழகில்லைதானே! ஆகவே, ஒளிபடைத்த கண்களும், உறுதி படைத்த உடலும் நெஞ்சமும்தான் அழகுக்கான அடிப்படை தேவை.

அழகுக்கு பல பரிமாணங்கள் உண்டு. நமது உடம்பின் மிகப் பெரிய அவயம்... ஸ்கின் எனப்படும் சருமம். வெளி உலகத்தோடு நேரடியான தொடர்பில் இருப்பதும் இந்த ஸ்கின்தான். புறத்தின் அழகை மட்டுமல்ல... உடல் ஆரோக்கியம் எனும் அகத்தின் அழகையும் முகத்தில் இருக்கும் ஸ்கின் காட்டிவிடும்.

அந்த ஸ்கின்னுக்கு போடுவதுதான் 'மேக் - அப்’ (Make-up). இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம், சமாளித்தல்! எதைச் சமாளித்தல்? ஒரு முகத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை தூக்கலாக காட்டிச் சமாளிப்பது!
 http://tym.dinakaran.com/Ladiesnew/L_image/ld521.jpg
வறவறவென்று இருக்கும் 'ட்ரை ஸ்கின்’, எண்ணெய் பிசிறுள்ள 'ஆய்லி ஸ்கின்’, அதுவாகவும் இல்லாமல்... இதுவாகவும் இல்லாமல் இருக்கும் 'காம்பினேஷன் ஸ்கின்’, 'நார்மல் ஸ்கின்’ என்று சருமத்தின் வகைகளை நான்கு விதமாகப் பிரிக்க முடியும். யாருக்கு எந்த வகையான சருமம் இருக்கிறது என்று கண்டுகொண்டால்தான் அவருக்கு என்ன மாதிரியான மேக் - அப் சரி வரும் என்பதை முடிவு செய்ய முடியும். - தொடரும்

நன்றி - அவள் விகடன்

 டிஸ்கி- இந்தப்பதிவுக்கு உண்மையான டைட்டில் -  மேக்கப் போடுவது எப்படி?
( ஒன்லி ஃபார் லேடீஸ்) என்பது தான்.. ஆனால் எனக்கு இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளதால் தலைப்பை மாத்தீட்டேன் ஹி ஹி