Showing posts with label INTERVIEW. Show all posts
Showing posts with label INTERVIEW. Show all posts

Wednesday, December 26, 2012

சாத்தானே! அப்பால் போ புகழ் செர்ரிப்பழ உதட்டழகி சுனைனா பேட்டி

http://s4.hubimg.com/u/4108351_f520.jpg 

ஆச்சர்ய சுனேனா

அழ வைத்தார் சீனுராமசாமி!

ராகவ்குமார்

ஒரு சிறிய இடைவெளி, அதுக்குள்ள இத்தனை நாளாய் எங்கிருந்தாய்ன்னு கேட்டா எப்படி?" என்று அழகாகச் சிரிக்கிறார் சீனுராமசாமியின்நீர்ப்பறவையில் எஸ்தராக நடித்து, நம்மையெல்லாம் அழவைத்த சுனேனா.
என்னோட கலரை கம்மியா காட்டறதுக்காக, டைரக்டர் சீனுராமசாமி தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் கடும் வெயிலில் நடக்க விட்டார். ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்த சமயத்தில் நான் ஒரு பாறையில மோதி காலில் அடிபட்டேன். கால் சரியாகற வரைக்கும் ஷூட்டிங்கை தள்ளி வைச்சார். ஒருநாள் ஸ்பாட்டில் எங்க யூனிட் ஆட்களுடன் கலகலப்பா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தேன். திடீரென வந்த சீனு சார் இப்படியா சத்தம் போட்டு சிரிச்சுக்கிட்டிருப்பன்னு சொல்லி நல்லா திட்டி விட்டாரு. எனக்கு அழுகை முட்டிக்கிட்டு வந்திடுச்சு. அடக்கிக்கிட்டேன். உடனே டேக். ஒரு இறப்புக்காக வாய்விட்டு அழ வேண்டிய சீன். டைரக்டர் திட்டியது எனக்குள் குமுறிக்கிட்டே இருந்தது. டேக்கில் நிஜமாகவே கத்தி அழுதுட்டேன். டேக் முடிஞ்சதும் எல்லோரையும் கைதட்டச் சொன்னார் சீனு ராமசாமி.

என்கிட்ட வந்து, உன்னைத் திட்டினது உண்மையிலேயே நீ அழுது நடிக்கணும்ன்றதுக்காகத்தான், நான் திட்டியதால்தான் கிளசரின் போடாம உன்னால நடிக்க முடிஞ்சது. சூப்பர்ன்னு பாராட்டினார்.
சர்ச்சில் வேலை செய்யும் பெண் கேரக்டரில் நடித்த நான் அமைதியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் நடக்கும் ஸ்பாட்டில் கூட அதிகமாக பேச விடமாட்டார் டைரக்டர். ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, திட்டு வாங்கி, ஷூட்டிங்கில் யார்கிட்டேயும் பேசாம நடிச்சதுக்குப் பலனை, ‘நீர்ப்பறவையின் ரிசல்ட்டில் உணர முடியுது. தேங்க்ஸ் டு டைரக்டர்."
இவ்வளவு சிவப்பா இருக்கீங்களே? கருப்பா காண்பிச்சது வருத்தமில்லையா?
கடல் பகுதியைச் சார்ந்தவங்க கொஞ்சம் கலர் கம்மியாத்தான் இருப்பாங்க. இருக்கறதை உள்ளபடியே காட்டியதில் வருத்தமில்லை. சந்தோஷம்தான்."
உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVqrtR74uJjyzNvjhwfyQKUbrfErEfM2Dg1U-CNciXSbJDoGZ5fDTjDew-kr_b_Skd-OqkCErwbo_oc2uFE9Y_woI40Uo0MS99l97WH84QwD1jDFqn4cpiW2HBd5C0r7ZLIoXwS8_Vesc/s1600/masilamani_sunaina_hot_photos-12.jpg

எல்லா ஹீரோக்களையும் பிடிக்கும்ங்றதுதான் இதமாதிரி வம்புல மாட்டிவிடும் கேள்விக்கு நான் சொல்ற பதில்."
நாம் செய்ய முடியவில்லையே என ஏங்கும் கேரக்டர் எது?
பிளாக்படத்தில் ராணிமுகர்ஜி செய்த கேரக்டர்."
லவ் யூன்னு யாராவது உங்ககிட்ட சொல்லியிருக்காங்களா?
நான் கோபக்காரி. அதனால பயந்துகிட்டே லவ் யூன்னு யாரும் சொன்னதில்லை."
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்...?
ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளிவந்தபறபறபாடல்."
அடிக்கடி வரும் கனவு...?

மேலே உயரமான இடத்திலிருந்து கீழே விழுற மாதிரி அடிக்கடி கனவு வருது."
கீழே விழாம தாங்கிப் பிடிக்கும் ஹீரோ யாரு?
இப்படி விபரீதமா எதையாவது கற்பனை பண்ணாதீங்க. அதிகாலை கனவுகளோட தூங்கிக்கிட்டிருக்கும்போது நான் வளர்க்கும் நாயும், பூனையும் என் காலை பிராண்டி எழுப்பி விட்டுடும்."
எந்த டைரக்டர் படத்தில் நடிக்க ஆசை?
நல்ல ஸ்க்ரிப்ட் இருக்கும் அனைத்து டைரக்டர்களின் படங்களில் நடிக்க ஆசை."
படித்த நாவலில் பிடித்தது?
தி அல்கமிஸ்ட்நாவல்."
உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்சது?
என் சிரிப்பு."
எப்ப கல்யாணம்...?
சின்னப் பொண்ணுகிட்ட கேட்கற கேள்வியா இது?"


நன்றி - கல்கி , புலவர் தருமி  

http://lh5.ggpht.com/-WjruIfxCu5c/T_sUCqP7ruI/AAAAAAAAL-Q/icNceZFPOk0/Sunaina%252520hot%252520in%252520green%252520bra%25252C%252520Sunaina%252520without%252520saree%25252C%252520Sunaina%252520in%252520bra.jpg

Wednesday, August 22, 2012

இந்து ராம் பேட்டி @ புதிய தலைமுறை - அக்னி பரீட்சை

 
 
 
நன்றி -  ‏@austinvijay,யாழ்
ஹிந்து ராம் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் பற்றி புதிய தலைமுறை தொலைக் காட்சியில் அக்கினிப் பரீட்சை நிகழ்ச்சியில் குணசேகரன் கேள்விகளால் துளைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார். எந்தக் கேள்விக்கும் ராமிடம் நேர்மையான பதில் இல்லை  

Monday, August 20, 2012

டெசோ-கலைஞரின் ஆகச்சிறந்த நாடகம் - டாக்டர் ராம் தாஸ் பேட்டி @ கல்கி

https://athikalai.files.wordpress.com/2012/03/eelam-mathi-cartoon-2.jpg 

அதிரடிப் பேட்டி!



பறிபோகுது பேச்சுரிமை!



- பதறுகிறார் ராமதாஸ்


ப்ரியன்


டாக்டர் ராமதாஸை நாம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தபோது, அவர் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்குப் போட்டிருப்பதாகத் தகவல் வந்தது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வரின் செயல்பாடு மீது ஆக்கபூர்வ விமர்சனம் செய்ததற்கு அவதூறு வழக்கா?" என்று கொதித்தார் டாக்டர். அவரிடம் டாஸ்மாக் விவகாரத்திலிருந்து பேட்டியை ஆரம்பித்தோம்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB0ZSyTcEMVTI3x6CvLRudt2Tdpms7ZzQ_VbUiWihWL-XcsZpZXdHC_2PY5km1Kct-5dmq7jBD43u_gVmas9QY2sqA4cDCt5hPj06POK-xs7SAM9hwt0pRFPVcELJE6GI9elAmGXK3eMRs/s1600/WR_540716.jpeg

1. டாஸ்மாக்களுக்குப் பூட்டுப் போடும் போராட்டம்?




பா.ம.க.வால் 1989-ல் தொடங்கப்பட்ட பா.ம.க. மகளிரணி மூன்றே மாதங்களில், மதுக்கடைகளுக்கு முன் போராட்டம் நடத்தியது. பிறகு, இந்த 23 வருடங்களில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். சமீபத்தில் நடத்திய பூட்டுப் போடும் போராட்டம், ஓர் அடையாளம். உண்மையிலேயே பூட்டுப் போடும் அதிரடி போராட்டம் டிசம்பரில் நடக்க இருக்கிறது. மது ஒழிப்புக்காகத் தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான்!"



2. மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லையே?



ஏன் இல்லை? காங்கிரஸ் மற்றும் பல்வேறு காந்திய, சமூகநல இயக்கங்கள் எங்களின் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆதரிக்க மாட்டார்கள். காரணம், டாஸ்மாக் மூலம் அரசுக்குப் பெருத்த வருமானம். தவிர, அரசியல்வாதிகளின் பாக்கெட்டுகளுக்கும் பணம் சென்று குவிகிறது. எனவே, இந்தக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை மது ஒழியாது. அந்த வருமானத்தில்தான் ‘இலவசங்களை’ அள்ளிவிட்டு வோட்டுக்களை பறிக்கிறார்கள்.


இந்தக் கட்சிகள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால்தான் மதுவை ஒழிக்க முடியும். மாற்று இல்லாத நிலையில் மாறிமாறி இவர்களே தொடர்கிறார்கள். எங்களின் இந்தப் போராட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது! ‘வளர்ச்சி அரசியலை’ முன்வைத்து எங்கள் அரசியல் பயணம் அமையும்."


3. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பா.ம.க. செல்வாக்குப் பெற்றுவிட்டதா?



‘திராவிடம்’ என்று பெயர் வைத்திருக்கும் எந்தக் கட்சிகளோடும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்; காங்கிரஸ், பா.ஜ.க.வோடும் கூட்டணி கிடையாது! நான் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளுக்குச் சவால் விடுகிறேன். நீங்கள் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடத் தயாரா? மதுவை ஒழிப்போம் என்று கூறி வாக்குக் கேட்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? ஒரு ரூபாய்கூட மக்களுக்குக் கொடுக்காமல் வோட்டுக் கேட்க முடியுமா?



இவற்றை நாங்கள் கடைப்பிடிக்கப் போகிறோம். உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள், எங்களின் இந்த நோக்கத்துக்குத் தோள்கொடுக்கத் தயாராக இருக்கின்றன. மக்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது."


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTkzPBAWWGD1QcG_lBzZgQENkCH2rg7nkBYwDoRwoNKs_DS7jCwlQEIKk63kvdtoQy7FHKvStTkCuVWoW1wxCcovtFUJXbLK3HZbKKZ1RM0ysjj8Rx_RzcETzMsf9Hj5PqC2HgApyHV9QF/s1600/WR_397537.jpeg
4. பா.ம.க.விலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட விலகினார்களே?



அவர்கள் விலகியதால் பா.ம.க.வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; வரவும் வராது! ஒரு பெரிய கட்சியில் சிலர் விலகுவதும் சேருவதும் நடந்துகொண்டுதான் இருக்கும். விலகுபவர்கள் சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு விலகுவார்கள். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் எங்கள் லட்சியத்தை அடைய முடியாது."



5. மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் அன்பு மணி மீது சி.பி.ஐ. வழக்குப் பாய்ந்துள்ளதே?






சுதந்திர இந்தியாவில் சுகாதாரத் துறையில் அன்புமணி அமைச்சராக இருந்த போது கண்ட வளர்ச்சியை, அதற்கு முன் எப்போதும் இந்தியா கண்டதில்லை. புகையிலையை ஒழிக்க அவர் எடுத்த நடவடிக்கைகளால் கடுப்பாகிப்போன புகையிலை தொழில் சார்ந்த தொழிலதிபர்கள் அவரைப் பழி வாங்கத் துடித்தார்கள். அன்புமணி மீது போடப்பட்ட வழக்குக்குப் பின்னால் அரசியல் சதி இருக்கிறது. சரியான சமயத்தில் அம்பலப்படுத்துவேன். நீதிமன்றத்தில் எங்கள் நியாயம் வெல்லும்."




6. ஜெ. ஆட்சி?



தி.மு.க. ஆட்சிக்கு ஜீரோ மார்க் கொடுத்தேன். இந்த ஆட்சிக்கு மைனஸ் ஜீரோ கொடுக்க வேண்டியிருக்கிறது. விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது. அந்த வேலைக்கு ஆளும் கிடைக்கவில்லை; விளைபொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை. விளைநிலங்கள் வீட்டு மனைகளாக லே-அவுட் போடப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர எந்தத் திட்டமும் இல்லை. மணல் உட்பட இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.


 தி.மு.க. ஆட்சியில் போட்ட திட்டங்களை மாற்றுவதும், ரத்து செய்வதும்தான் இந்த ஆட்சியின் வேலையாக இருக்கிறது. விமர்சனங்களை ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டு திருத்திக் கொள்ளாமல் அவதூறு வழக்குப் போடுகிறார்கள்.




ஜெயலலிதா 1991-ல் இருந்து முதல்வராக இருந்த காலகட்டத்தில் மட்டும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது 250க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளைப் போட்டிருக்கிறார்! அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள பேச்சுரிமையைப் பறிப்பதாக இருக்கிறது தமிழக அரசின் செயல்பாடு. இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்."


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW3g-MeVTbQJoll_tKGj-g86_I7R4peM0EEuC36LrtHCCHhY6JOvImLKsyOWqMuXHqgX0e7s2Pnc_9ujXAw2b4p8-EbQMpLINLATDC76gYek4z_hJomkW8HAz98QhuY7qLMyJx3ObEkgme/s1600/WR_776373.jpeg

7. டெஸோ - கருணாநிதி?



ஈழத் தமிழர்களுக்கு அவர் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு போட்ட நாடகம். அவர் எப்போதெல்லாம் எதிர்க் கட்சியாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் ஈழப் பிரச்னையைக் கையிலெடுப்பார்; ஆளும்கட்சியாக இருக்கும் போது துரோகம் செய்வார். இந்த டெஸோ பொதுக் கூட்டத்தால் எந்தப் பலனும் இல்லை. தமிழகத்தில் எந்த அரசியல் திருப்பமும் இதனால் ஏற்படாது.


என் ஆச்சர்யமெல்லாம் உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் விஷயத்தில் உளமார்ந்த ஈடுபாட்டுடன் போராடும் தொல்.திருமாவளவன், கருணாநிதியின் நாடகத்துக்கு எப்படித் துணை போனார் என்பதுதான்! காங்கிரஸைச் சங்கடப்படுத்துவதுதான் கருணாநிதியின் நோக்கம் என்றால் அதுவும் நடக்காது. இவருக்குத்தான் காங்கிரஸை அண்டியிருக்கிற நிலையிருக்கிறதே தவிர, அவர்களுக்கு இவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.


 1994-ம் வருடமே பா.ம.க. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியது. அப்போது சென்னையில் திரண்ட கூட்டம் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தடுமாற்றங்களின் தாக்கம் ஏதுமில்லாமல் ஈழத் தமிழர் பிரச்னையில் ஒரே நிலைப்பாடு எடுத்து வருவது நாங்கள்தான்" - என்கிற டாக்டர் ராமதாஸின் முகம் சீரியஸாகப் பேசியதில் சிவந்திருக்கிறது!


நன்றி - கல்கி , புலவர் தருமி



http://lh4.ggpht.com/_IEYubfMaOJM/TI47QuILB5I/AAAAAAAACGM/AM4kSmr1nyk/rahul_gandhi_farmers1%5B4%5D.jpg

Monday, July 30, 2012

மு.க. ஸ்டாலின் சமாளிஃபிகேஷன் பேட்டி @ கல்கி - 60 வயசாகியும் ஏன் இளைஞர் அணித்தலைவர் போஸ்ட்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 


இளைஞர் அணிக்கு வயது 33!



எங்கள் எழுச்சி எதிரிகள் வீழ்ச்சி!



ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பு!

ப்ரியன்



தி.மு.க. பொருளாளரும், அதன் நம்பிக்கை நட்சத்திரமுமான மு.க. ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். அவரது குஷிக்குக் காரணங்கள் இரண்டு


. ஒன்று, தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களுக்கு விஸிட் செய்து ஒன்றிய, நகர, பகுதி, மற்றும் பேரூர் இளைஞர் அணிக்கு, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்தது;


 அடுத்து, சமீபத்தில் நடத்திய சிறை நிரப்புப் போராட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாக நடந்தது. எங்கள் இளைஞர்களின் எழுச்சியால் எதிரிகள் நடுங்குகிறார்கள்" என்கிறார் ஸ்டாலின்.


 முப்பத்தி இரண்டு ஆண்டுகள் முடித்து முப்பத்தி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞர் அணி குறித்து இங்கே பேசுகிறார் ஸ்டாலின்.



சென்ற சட்டமன்றத் தேர்தலில் கழகம் தோல்வியடைந்த பின் இளைஞர் அணியை இன்னமும் பலப்படுத்தி, அதற்கு புத்துணர்வு ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கழகம் தோல்வியடைந்திருந்த நிலையில், தொண்டர்கள் விரக்தியினால் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும் கழக இளைஞர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை தளரவில்லை. மாவட்டம் மாவட்டமாக விஸிட் செய்தேன். ஆளும்கட்சி கிளப்பிய கைது பயத்தை தூக்கியெறிந்து விட்டு இளைஞர்கள் வெள்ளமென திரண்டார்கள். தமிழகமெங்கும் 4649 அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.


 ஒன்றிரண்டு மாவட்டங்களில், சில உரசல்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து அந்த மாவட்டங்களிலும் நிர்வாகிகளைப் போட்டிருக்கிறோம். இப்போது மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் போடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்கிறார் இளைஞர் அணியின் செயலாளராக விளங்கும் ஸ்டாலின். 1984 முதல் இந்தப் பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/cartoon-kagidha-odam.jpg


1949-ல் தோன்றிய தி.மு.க.வில் 1980ல்தான் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறதே!



பேரறிஞர் அண்ணாவின் பின்னால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அணி திரண்டார்கள். மொழி, இன உணர்வு, சமூக நீதி என்று கழகத்தின் இலட்சியப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களின் மொழி உணர்வின் உச்சகட்ட வெளிப்பாடு. தொடர்ந்து 1967ல் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பிறகு, கழகத்தில் இளைஞர்களின் புது வரவு கணிசமாக குறைந்து வருவது தெரியவந்தது.


 அண்ணாவின் பின் அணிவகுத்த இளைஞர்களும் முதியவர்களாகி வர, இந்த விஷயத்தில் புதிய பார்வையும், அணுகுமுறையும் தேவை என்று உணரப்பட்டது. மாறிவரும் சூழலை முற்றும் உணர்ந்து, காலத்திற்கேற்ற தேவையாக டாக்டர் கலைஞர் அவர்களால், கழகத்தில் மற்றொரு அணியாக இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. மதுரை ஜான்சி ராணி திடலில் இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது கழகம் ஆட்சியில் இல்லை. இருந்தும் அந்தத் தொடக்கம் மிகப் பெரிய எழுச்சியாக இருந்தது




உடனேயே நீங்கள் அதன் செயலாளர் ஆகிவிட்டீர்களா?!



இல்லையில்லை... இரண்டு வருட காலம் நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. 1982ல் திருச்சி வாசவி மகாலில் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பலரும் என்னை செயலாளர் ஆக்க வேண்டும் என்று மிக வலியுறுத்திப் பேசினார்கள். ஆனால் தலைவர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ‘மகனை நியமித்து விட்டார்’ என்ற விமர்சனம் வரும் என்று கடைசி வரை ஒப்புக் கொள்ள மறுத்தார். எனவே பேராசிரியர் மாற்று ஏற்பாடாக நானும் உள்ளிட்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவில் திருச்சி சிவா, பரிதிஇளம் வழுதி, தாரை மணியன், வாலாஜா அசேன், ஜெயம் ஜூலியஸ், பஞ்ச வர்ணம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


 அடுத்த இரண்டு வருடம் நாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட அளவில் நிர்வாகிகள் போட்டோம். அந்தக் காலகட்டம் மறக்க முடியாதது. ஒரே காரில் நாங்கள் செல்வோம். பெரும்பாலும் நான்தான் கார் ஓட்டுவேன். இந்தச் சமயத்தில் என் நெஞ்சில் என்றும் பசுமையாக இருக்கும் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



1967-68ல் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற பெயரில் சார்பு மன்றம் வைத்திருந்தோம். அதன் சார்பாக அண்ணா பொன்விழா கொண்டாட முடிவு செய்தோம். ம.பொ.சியை அணுகினோம். அவர் வர ஒப்புக் கொண்டார். நான் நண்பர்களுடன் அண்ணா அவர்களை விழாவுக்கு அழைக்கச் சென்றேன். அண்ணா மாடியில் உடம்பு முடியாமல் படுத்திருந்தார். கீழே என்.வி. நடராசன், சத்தியவாணி முத்து ஆகிய தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ‘அண்ணாவைப் பார்க்க முடியாது’ என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து, அண்ணாவின் கார் என் வீட்டுக்கு வந்தது. ஓட்டுநர் வந்து, ‘அண்ணா அழைத்தார்’ என்று கூப்பிட்ட போது பிரமிப்பு; ஆச்சர்யம். சந்தித்து விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்



 ‘ஏற்பாடு செய்... வருகிறேன்’ என்றார். ஆனால் அண்ணாவின் உடல்நிலை மேலும் மோசமாக அவர் விழாவுக்கு வர முடியவில்லை. ம.பொ.சி. தலைமையில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்தச் சம்பவத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. போன்று தமிழகமெங்கும் இளைஞர் மன்றங்கள் இயங்கி வந்தன. எனவே, நாங்கள் மாநிலம் முழுதும் இளைஞர் அணியை கட்டமைப்பது சுலபமாக இருந்தது. 1984-ல் நான் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டேன். இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி கழக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 25 லட்சம் பேர் இளைஞர் அணி. கழகக் கோட்டையின் காவல் அரணாக இளைஞர் அணி உருவாகியிருப்பது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHmxMbhxFIQZGqbQTJpDKuug3J4VLZlaAyGBQoS37xFVFRby1JXHF6hQ-WzlaBjdUHDMeJginPzXWwS8CTI3bx1UXTPIj8dkHaMPWAVcR-6oE559c4e9bz4y7de2683ByFtMrelyHpGCs/s1600/karuna+retair.jpg

கழகப் பிரமுகர்களின் மகன்கள்தான் இளைஞர் அணியில் பிரகாசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறதே?



தவறான கருத்து. உழைப்பும் பொது நல அர்ப்பணிப்பும் மிக்க இளைஞர்கள் எந்தவித பின்புலமுமின்றி உயர்ந்திருக்கிறார்கள். பொன்முடி, அன்பரசன், மா. சுப்பிரமணியன், முபாரக், கார்த்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம்."



தேர்தல் வந்தால் பெரும்பாலான சீட்கள் இளைஞரணிக்கு என்பதால்தான் ‘அணி திரள்கிறார்கள்’ என்பது உண்மைதானா?



நான் ஏற்கெனவே சொன்னது போல கழகத்தில் உள்ள மற்ற அணிகளைப் போலத்தான் இளைஞர் அணியும் இருக்கிறது. தேர்தலில் சீட் என்பது வெற்றி வாய்ப்பை மனத்தில் வைத்துத்தான் கொடுக்கப்படும். இளைஞர் அணியில் உள்ள திறமையாளர்களைப் போல மற்ற அணிகளிலும் திறமையானவர்கள், விசுவாசமிக்கவர்கள் இருக்கிறார்கள். எனவே இளைஞர் அணியில் இடம்பெற்றிருந்தாலே தேர்தல் சீட் கிடைக்கும் என்பது சரியல்ல."



வர்த்தகமயமாகி விட்ட அரசியலில் பொதுநல அர்ப்பணிப்புடன் இளைஞர்கள் வருகிறார்களா?



சமூகத்தில் பல துறைகள் சீரழிவைச் சந்தித்து வருவதைப் போன்று அரசியலிலும் சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது. சுயநல நோக்கத்துடன் ஒருசிலர் வரக்கூடும். பாசறைக் கூட்டம் என்று பெயரில் இளைஞர்களின் உரத்த சிந்தனையையும், சமூக நோக்கங்களையும் செழுமைப்படுத்துகிறோம். கழகத்தின் அடித்தள லட்சியங்களை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றக்கூடிய அளவில் விதைக்கிறோம். எங்களை நோக்கி வீசப்படும் விமர்சனக் கணைகளை எப்படி எதிர்ப்பது என்ற பயிற்சியும் கொடுக்கிறோம்."



அது சரி ஸார். மாவட்ட அளவில் அமைப்பாளர்களுக்கு முப்பது வயது என்று வரம்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் மேல்மட்ட அளவில் பார்த்தால் அறுபது வயது ஆனவர் கூட பொறுப்பில் இருக்கிறார்களே. உங்களுக்கே கூட அறுபது ஆகிவிட்டதே...?




பொதுவாகவே இதுபோன்ற விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் முப்பது வயதுக்குள்தான் இருக்க வேண்டும். மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு வயது வரம்பு நாற்பது. ஆனால் கழக சட்டத்தின்படி தலைமைக் கழகத்தில் பொறுப்பில் உள்ள எங்களுக்கு வயது வரம்பு இல்லை. களத்தில் இருப்பவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், மேலே வழி காட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்த ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg

கழகத்தில் எதிர்பார்க்கப்படும் உயரத்தைத் தொட காத்திருக்கும் நீங்கள் தகுதிவாய்ந்த மற்றொருவருக்கு இளைஞர் அணி பொறுப்பைக் கொடுக்கும் காலம் வந்துவிட்டதா?



பொருளாளர் பதவியுடன் கூடுதல் பொறுப்பாகவே இளைஞர் அணி செயலாளர் பொறுப்பையும் வகிக்கிறேன். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அனைவரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறேன். மற்றபடி இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வேண்டியவர்கள் தலைவரும், பேராசிரியரும்தான். அவர்கள் தக்க நேரத்தில் முடிவெடுப்பார்கள்."





தலைவரது மகனாக இருப்பதால் இளைஞர் அணி சிறப்புச் சலுகைகளைப் பெறுகிறதா?




தலைவரைப் பொறுத்தவரை எல்லா அணிகளையும் சமநோக்கோடுதான் பார்க்கிறார். ஒரு உதாரணம்: அறிவாலயத்துக்கு கழக அலுவலகம் மாற்றப்பட்ட பின் அன்பகத்தை இளைஞர் அணி பயன்பாட்டுக்குக் கேட்டோம். அப்போது அங்கே தொழிற்சங்கமும் இயங்கி வந்தது. எந்த அணி பத்து லட்சம் கொடுக்கிறதோ அதற்குத்தான் அன்பகம் கொடுக்கப்படும்" என்று சொல்லிவிட்டார் தலைவர். அதன்பின் தமிழகமெங்கும் அலைந்து திரிந்து ரூபாய், ரூபாயாக சேர்த்து பதினொரு லட்சத் தைக் கொடுத்துதான் இளைஞர் அணிக்காக அன்பகத்தைப் பெற்றோம். தலைவர் மகனென்று தூக்கிக் கொடுக்கப்படவில்லை."



இளைஞர் அணியின் அடுத்தகட்ட நடவடிக்கை?



அமைப்பாளர்கள் போடுவது கூடிய விரைவில் முழுவதுமாக முடிந்துவிடும். அடுத்து இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு விரைவில் நடைபெறப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேதியும், இடமும், தலைவர், பேராசிரியர் ஒப்புதலுடன் அறிவிக்கப்படும்!"



அடேங்கப்பா!


இளைஞர் அணி சார்பாக அறக்கட்டளையொன்றை நிறுவியிருக்கிறார்கள். அண்ணா, கலைஞர் பிறந்த நாளின் போது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி என்று அசத்துகிறார்கள். பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு கோடியே பதினேழு லட்ச ரூபாய் பரிசுத் தொகை இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதாம்.



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி,அன்னா கண்ணன்


http://img.photobucket.com/albums/v144/annakannan/ulalal.jpg

Friday, July 06, 2012

முதல் கணவரை விட்டு விலகியது ஏன்? பாடல் ஆசிரியர் தாமரை பேட்டி

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/thamarai1.jpg 

மீட்டு வருவேன் மீண்டு வருவேன்!”

சந்திப்பு: அமிர்தம் சூர்யா


தாமரை உக்கிரம்

பாடலாசிரியர் தாமரை 500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதி, கலைஞர், ஜெயலலிதா இருவரிடமும் தமிழக அரசின் விருதினைப் பெற்றவர். சமூக நோக்கோடும் தமிழ் உணர்வோடும் பயணப்படும் தனித்துவமான படைப்பாளி. காதலுக்கு முன்... காதலுக்குப் பின்; திருமணத்துக்கு முன்... திருமணத்துக்குப் பின்; சினிமாவுக்கு முன்... சினிமாவுக்குப் பின் என மூன்று கட்டங்களில் அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிக் கேட்டபோது, அவரது பதில்கள், தன்னம்பிக்கைப் பாடமாய் விரிந்தது.


நான், புத்தகம் வளர்த்த பிள்ளை. என் தோழமை, பலம் எல்லாமே புத்தகங்கள்தான். வாசிப்பு என்பது எனக்கு மூச்சு விடுதல் மாதிரி. என் வாழ்வின் தன்னம்பிக்கையை நான் புத்தகங்களிலிருந்தும் வகுப்பறையிலிருந்தும்தான் வாங்கிக் கொண்டேன். உண்மையிலேயே அன்று பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக இருந்தனர். பள்ளி ஒழுக்கமாக இருந்தது. இன்று விதிவிலக்காகத்தான் நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள். என் பள்ளியும் பள்ளி ஆசிரியர்களும்தான் என் தன்னம்பிக்கையைத் தட்டித் தட்டிச் செதுக்கியவர்கள


யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் எரிச்சலோடு மனப்பாடம் செய்த திருக்குறளும் தமிழ்ப் பாடங்களும்தான் என் மனதில் ஊன்றி என்னை இப்போதும் வழி நடத்தி வருகிறது என்று சொல்லலாம்," என்று சொல்லிக்கொண்டே வந்த தாமரையை நோக்கி, இந்தத் தன்னம்பிக்கைதான் உங்களின் கசப்பான முதல் காதலிலிருந்தும் முதல் திருமணத்திலிருந்தும் விடுவித்ததா?" என்ற கேள்வித் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்திருந்தேன். தாமரையின் இதழ்களில் இளம் புன்னகை.


நான் மங்கையர் மலர் வாசகிகளுக்கு என் வாழ்வின் ரணமான பக்கங்களையும் அந்தக் காயங்களை ஆற்றிய தன்னம்பிக்கை மருந்தைப் பற்றியும் பகிரங்கமாய்ப் பறை சாற்ற விரும்புகிறேன். இந்தக் கடுமையான கேள்விகள் என்னை எதுவும் செய்யாது நண்பரே! உங்களுக்குத் தெரியுமா?


கோயம்புத்தூரில் ஒரு முன்னணி தொழிற்சாலையில் முன்னணி பொறியாளர் பணியில் இருந்தேன். காலை 6.30 மணிக்குக் கிளம்பி இரவு நேரங்காலமின்றித் திரும்பும் இயந்திரமாய் இயங்கினேன். கல்லூரியில் என்னுடன் படித்த ஒருவரை விரும்பி இருந்தேன். சாதிகளைக் கடந்து ஆரம்பித்த காதல் அது.

http://3.bp.blogspot.com/-LGiIX4SRbh8/ToSqF7lBwFI/AAAAAAAAN1Q/XV_iPp6gvWs/s1600/Writer_Thamarai_Stills_01.jpg
திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே போராட்டம்தான். அவருக்கு வேலை இல்லை. தொழிலதிபராகும் கனவு மட்டும் இருந்தது. அவர் கனவை நனவாக்க நான் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிப் போனேன். என் கனவுகள், ஆசைகளைப் புதைத்து அவருக்கும் சேர்த்து உழைக்க வேண்டியிருந்தது. என் பெயரில் நிறைய கடனும் வாங்கப்பட்டது. மன உளைச்சலோடு துக்கம் கவ்விய நிலையில் என் முதல் திருமணம் தோல்வி அடைந்ததை உணர்ந்தேன்" என்று வெப்பம் கலந்த பெருமூச்சோடு சற்றே நிறுத்தினார் தாமரை.

தோழி, நீங்கள் சொன்ன சம்பவத்தில் தோல்வி என்று இதை எப்படி ஏற்பது? நீங்கள் கொஞ்சம் அதிகமாகக் கற்பனை செய்து கொண்டது போலத் தோன்றுகிறதே?" என்று சொன்னதுதான் தாமதம். கவிஞரின் கண்கள் சிவக்க ஆரம்பித்து செந்தாமரையாகவே மாறிவிட்டது.


ஓஓ! காதலித்து மனைவியான நான் இருக்கும்போதே இன்னொரு பெண்ணை எனக்குத் தெரியாமல் மணந்து, குழந்தை பெற்று இன்னொரு குடும்பம் நடத்தி வருவது தெரிந்தும் அதை நிரூபிக்க முடியாமல் தத்தளித்து மனதுக்குள் அழுது தற்கொலை உணர்வோடு, சம்பாதித்து மட்டுமே போடும் இயந்திரமாய் இருக்கும் பெண் அந்தத் திருமண வாழ்வைத் தோல்வி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இது கொஞ்சம் அதீதமான கற்பனையா? ஆண்கள் மொழியில் இதை வேறு எப்படிச் சொல்வது?" என்றார். அந்தரங்கத்தின் காயம் அறிந்தபின் அந்த வலியை சக மனிதனாய் நாமும் உணரத்தான் முடிந்தது. உங்கள் தன்னம்பிக்கை இதற்கு என்ன தீர்வு தந்தது. உங்கள் வாழ்வை, உங்களின் தனித்துவத்தைப் பிறகு எப்படித்தான் மீட்டெடுத்தீர்கள்?" என்று கேட்டேன்.

http://2.bp.blogspot.com/-ULDoTDxZZpA/T7cYczEchiI/AAAAAAAABZQ/4YWIWbk-VSg/s1600/2006110900400101.jpg
ஏழு வருடம் செய்த பொறியாளர் பணியிலிருந்து துணிந்து 93-ல் வேலையை விட்டேன். 94லிருந்து 97வரை முதன்முறையாக நான் எனக்காக வாழ ஆரம்பித்தேன். நிறைய படித்தேன். ஏழு ஆண்டுகளில் விட்டதைப் பிடித்தேன். இலக்கியத்தை இரவு பகலாகக் கரைத்துக் குடித்தேன். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவை மீட்டெடுக்க ஆரம்பித்தேன். ‘கல்கி’, ‘மங்கையர் மலர்’ ‘தினமலர்’, ‘குமுதம்’ ‘தினமணிஎன்று இதழ்களின் போட்டிகளுக்கு - கவிதை, கட்டுரை, கதை எழுதி பரிசுகளை வென்றேன். மாணவ நிருபராக விகடனில் இருந்த நான் மீண்டும் விகடனுக்கு எழுத ஆரம்பித்தேன். சிறந்த கதைக்காகசாவியில்தங்கச் சாவிபரிசு பெற்றேன். சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை துளிர்விட்டது. பாடலாசிரியராக வேண்டும் என்ற என் சிறு வயதுக் கனவை தூசித் தட்டி எடுத்துக்கொண்டு 97ல் சென்னைக்கு வந்தேன்.



சன்டீ.வி.க்கு இரண்டுமுறை விண்ணப்பித்திருந்தேன். என் மனுவுக்குப் பதிலே இல்லை. அப்போது உறுதிமொழி எடுத்தேன். இதேசன்டீ.வி., என்னைப் பேட்டி எடுக்கும் நிலைக்குப் போவேன் என்று. பின்னர் அதுவும் நிகழ்ந்தது.


நான் சென்னைக்குத் தனியாக ஒரே ஒரு பெட்டியுடன்தான் ரயில் ஏறினேன். நான் பிறந்து வளர்ந்த கோவையைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், அந்தகோயமுத்தூரையே என்னைத் திரும்பிப் பார்க்க வைப்பேன்என்ற சபதம் அப்படியே புத்தியில் நெருப்பாய்க் கனன்று கொண்டு இருந்தது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_hY7Z7_eD_eyNC84bIo5L7Zu72YH-vIHrhpOnpOpIslUzYnVKaW6gL_83e-esHEeOt28lxKxhXdzhvlyBpOffNgQSzKSrWt4b7LnT15ZOMMCnTfnJCaFzW99e25WEF8crKzj0y5JQZD2G/s400/t.jpg
2008ல் தினமலர் வழங்கியகோவையின் தங்கப் பெண்மணிஎன்ற விருதின் மூலம் அதையும் சாதித்தேன்... இல்லை சாதித்தது சாதிக்க வைத்தது என் தன்னம்பிக்கை" என்று முடித்தார் பாடலாசிரியர் தாமரை.


நீறுபூத்த நெருப்பை ஊதிவிடும் காற்றைப்போல அவிழ்த்துப் போட்டேன் வேண்டுமென்றே ஒரு கேள்வியை. ‘சினிமா அதிர்ஷ்டம்தானே உங்களைப் புகழ் உச்சிக்கு ஏற்றியது. அந்த இடத்திலும் எதுக்குக் கொள்கை கோஷம்னு வீம்புப் பிடிக்கிறீங்க?’ என்றதும்தான் தாமதம்.

மன்னிக்க வேண்டும். அது நல்வாய்ப்பு இல்லை. என் அரிய உழைப்பு. விடாமுயற்சிதான் காரணம். 97லிருந்து 2000வரை திரைப்படத் துறையில் போராடினேன். தேடினேன். தேடிக்கிட்டே இருந்தேன். வாய்ப்பு வராது. வந்தாலும் என் ஆங்கிலம் கலக்காத, ஆபாசச் சொல் இல்லாத பாடல் என்ற கொள்கைக்குப் பாடல் கிடைக்காது. கிடைத்தாலும் பாடல் இடம் பெறாது. இடம் பெற்றாலும் படம் வெளிவராது. படம் வந்தாலும் கைக்குப் பணம் கிடைக்காது. இத்தனைக்கும் நான் இதுவரை கடன் வாங்கியது இல்லை என் வாழ்நாளில். குறைந்த வருமானத்துக்குள் என்னை அடக்கிக் கொண்டு வாழப் பழகினேன்.


2000-ல் கௌதமுடன் வாய்ப்பு வந்த போதுமின்னலேபடத்தின்வசீகராபாடல் என்னைத் தூக்கி நிறுத்தி அங்கீகாரம் தந்தது. மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ததை எதிர்த்து, கணவன் மீது குற்றவியல் வழக்குப் போட்டு சென்னைக்கு அவர்களை இழுத்து, நானே நீதிமன்றத்துக்குத் தனியாகப் போய்ப் போராடி விவாகரத்துப் பெற்றேன்.


பிறகு 2002-ல் தோழர் தியாகுவுடன் திருமணம் நடந்தது. கைக்குழந்தையோடு சினிமா வாய்ப்புக்கு நீங்கள் அலைந்து பாருங்கள். அதன் வலி புரியும். சென்னையில் நான் தனியாக வாழ்ந்தபோது, என் அறைக்கு யாரையும் அழைத்துப் பேச மாட்டேன். என்னைச் சந்திக்க வருபவர்களை அறைக்கு வெளியே பொது இடத்தில் வைத்துத்தான் எச்சரிக்கையோடு பேசுவேன். இதுவரை எந்த வதந்தியும் என் மீது படர்ந்தது இல்லை" என்றபோது கொஞ்சம் ஆசுவாசம் படுத்தியபின் பேசினேன்...
நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறீர்கள்" என்றபடி என் இறுதிக் கேள்விக்கு இடம் விட்டேன்...


வதந்திக்கு உட்படாத உங்கள் வாழ்வில் உங்களது இரண்டாவது மணவாழ்வு ஊடகங்களால் இப்போது ஊசலாடுவது போலிருக்கிறதே. இதை எப்படி எதிர்கொள்வீர்கள்?" என்றேன்.


ஒரு நாள் காலை எழும்போது நேற்று வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, உழைத்த உழைப்பு, வைத்த நம்பிக்கைகள் அத்தனையுமே பொய்யானவை என்ற நிலை ஏற்பட்டால் என்ன வலி ஏற்படுமோ அதுதான் எனக்கும் ஏற்பட்டது. கைகால்கள் மரத்துப் போய் செயல் இழந்த நிலையில்தான் அதையும் எதிர்கொண்டேன்.
திருமணம் என்பது இருவர் சேர்ந்து செய்துகொள்வது. அதைத் திடீரென்று இருவரில் ஒருவர் தன்னிச்சையாக, தனிப்பட்ட முறையில், தன் சொந்தக் காரணங்களுக்காக, உடைத்து வெளியேற முடியாது என்பதில் உறுதியாக இருந்தேன்.


அப்படித்தான் எனது இந்தப் போராட்டம் எனக்கு இன்னும் பல அனுபவங்களையும் பார்வைகளையும் கற்றுக் கொடுத்துள்ளது. மீட்டு, மீண்டு வருவேன்" என்றார் உக்கிரமாய்.


தமிழகத்தின் ஹிலாரி போல் தெரியும் தாமரை, கிளிண்டன் போல் தோற்றம் காட்டும் தியாகுவையும் சேர்த்தே வெல்ல வேண்டும். இந்த உரையாடலில் தாமரையை மொழிபெயர்த்தால்தன்னம்பிக்கைஎன்றே வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்லா பெண்களுக்குள்ளும் போராடும் ஒரு செந்தாமரை இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்ற சிந்தனையோடு விடை பெற்றோம்.

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/161967_163686113679931_6652959_n.jpg


நன்றி - மங்கையர் மலர் மாத இதழ் , அமிர்தம் சூர்யா, கல்கி வார இதழ்


 டிஸ்கி - நான் ஈ - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_5455.html