Showing posts with label FILM REVIEW. Show all posts
Showing posts with label FILM REVIEW. Show all posts

Tuesday, February 26, 2013

MURDER 3 - சினிமா விமர்சனம்



மல்லிகா ஷெராவத் கிளாமரை நம்பி  ஹாலிவுட் கில்மா கம் சஸ்பென்ஸ் படமான UNFAITHFULL  படத்தை ரீமேக்கி மர்டர் பாகம் 1 எடுத்தாங்க , THE CHASER என்ற கொரியன் மூவியை  உல்டா பண்ணி மர்டர் 2 எடுத்தாங்க , இப்போ  The Hidden face   படத்தை ( கொலம்பியா) உல்டா பண்ணி  மர்டர் 3 எடுத்திருக்காங்க . மற்ற இரு பாகங்களை விட இது சஸ்பென்ஸ் , த்ரில்லிங்க் ஜாஸ்தி .

  ஹீரோ ஒரு ஃபேமஸ் ஆன ஃபோட்டோ கிராஃபர். அவரோட காதலி அவரை விட்டுப்போன சோகம் தாங்காம சரக்கு சங்கர லிங்கம் ஆகிடறாரு  .தண்ணி அடிக்க ரெகுலரா வர்ற பார்ல ஒரு ஃபிகரைப்பார்க்கறாரு, பார்ல ஒர்க் பண்ணுது . 


 ஹீரோ   கட்டதுர மாதிரி கடலை போட்டே  தன் சொந்தக்கதையை அள்ளி விட்டே அதை கரெக்ட் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து மேட்டரை முடிச்சிடறாரு .

இப்போ புதுக்காதலி ஹீரோ வீட்ல யாரோ பேய் அல்லது ஒரு தீய சக்தி நடமாட்டம் இருப்பதா உணர்றா. ஆனா போலீஸ் ஹீரோ மேல சந்தேகப்படுது. அவரோட முதல் காதலி காணாம போனதுக்கு காரணமே அவர் தான்னு நினைக்குது , கொலை பண்ணிட்டாரோன்னு சந்தேகப்படுது 


ஆனா சஸ்பென்ஸ் முடிச்சுகள் அவிழ அவிழ திரைக்கதை பட்டாசைக்கிளப்புது . எதிர்பார்க்காத திருப்பங்கள் படத்தின் பின்பாதியில் அசர வைக்குது .


 




 ஹீரோவா  ரன் தீப் , அண்ணனுக்கு முக்கிய வேலையே 2 ஃபிகர்களையும் கரெக்ட் பண்றதுதான். இதுக்கு லட்சக்கணக்குல சம்ப்ளம் வேற . கரும்பு தின்னக்கூலி . ஸ்டொமக் பர்னிங்க் . நடிக்க வெல்லாம் தேவை இல்லை, சும்மா வந்து நின்னாலே போதும்.


 ஹீரோயின்கள் 2 பேரு . 2 வது காதலியா வர சாரா லோரன்  தேங்காய் பர்பி மாதிரி இருக்குது . கடிச்சுப்பார்த்தியா?ன்னு எல்லாம் லாஜிக் கேள்வி கேட்கக்கூடாது . வழு வழுன்னு வெண்ணெய் தடவிய தேகம் . செம கலர் , லக்கி நெம்பர் 38.படத்தின் முன் பாதி பூரா இவர் ராஜ்ஜியம் தான் . பேய் இருக்கோன்னு நம்மையே நம்ப வைக்கும் அளவு இவர் ரீ ஆக்‌ஷன் இருக்கு. நல்லா வருவாங்க பிற்காலத்துல


 அடுத்த ஹீரோயின்அதிதிராவ் .ஒல்லியா இருக்கும் தர்பூசணிப்பழம் மாதிரி கலரு,பால்கோவா மாதிரி உடம்பு .( சரியான சாப்பாட்டு ராமண்டா நீ) இவர் நடிப்புதான் படத்தின் ஆணிவேர். படத்தின் மெயின் கேரக்டரே இவர் தான் ,அறைக்குள் மாட்டிக்கொண்டு துடிக்கும் துடிப்பென்ன? தன் கண் முன்னே காதலன் வேறொரு பெண்ணுடன் கில்மா பண்ணும்போது அடையும் வலி ,  என  அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம் . தமிழ் சினிமா இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்






இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்தின் பின் பாதியில் பிரமாதமான சஸ்பென்ஸ் காட்சிகள் இருக்கு என்ற தைரியத்தில் முன் பாதியில் அசால்ட்டாக கதை சொல்லாமல் ஏதோ கில்மாப்படம் போல் காட்சிகள் வைத்தது . ஒரிஜினல் அளவுக்கு இல்லைன்னாலும் ஹிந்திக்கு இது நெம்ப ஓவருங்கோ


2. ஹீரோயின்  செலக்‌ஷன்ஸ் பிரமாதம் , தொப்பை இல்லாம , அதே சமயம் ஒல்லிப்பிச்சானாக இல்லாம நச் ஃபிகர் 2 பேரை புக் பண்ணி  முடிஞ்சவரை இருவரையும் பேலன்ஸ் பண்ணி ஐ மீன் காட்சிகளில்  பிரமாதப்படுத்தி இருப்பது


3.  படத்தின் பின்னணி இசை எனப்படும் பி ஜி எம்  பின் பாதியில் கலக்கல் ரகம் , ஒளிப்பதிவும் பக்கா


4. கதைக்களம் சவுத் ஆஃப்ரிக்கா அப்டினு சொல்லிக்கிட்டாலும்  படம் முழுக்க ஒரே வீட்டில் முடிச்சது லோ பட்ஜெட்டுக்கான இலக்கணம் , குறைந்த முதலீடு , நிறைந்த லாபம்


5. திகில் , சஸ்பென்ஸ் படங்கள் என்றால் பி ஜி எம் டொம் டொம்னு  அடிக்கனும் என்றில்லாமல் தேவையான இடங்களில் மட்டும் அதை யூஸ் பண்ணி பெரும்பாலான இடங்களில் அமைதியாய் அப்படியே விட்டது . அமைதியும் ஒரு இசையே என உணர்த்தியது


6. பாலிவுட்டின் டாப் 10 சஸ்பென்ஸ் த்ரில்லர் என ஒரு லிஸ்ட்  எப்போ எடுத்தாலும் இந்தப்படத்துக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு


 



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. என்னோட முத கேள்வியே என்னோட ஜி கே வை வளர்த்துக்க , சும்மா தெரிஞ்சு வெச்சுக்க.. அதாவது முதன் முதலா அப்போதான் மீட் பண்ணும் ஒரு ஃபேமிலி ஃபிகரை பேசியே கரெக்ட் பண்ணி அன்னைக்கு  நைட்டே மேட்டரை முடிக்க முடியுமா?



2. அறையில் மாட்டிய ஃபிகர் கண்ணாடி வழியே எல்லாத்தையும் பார்க்க முடியுது , ஆனா அவங்க கூப்பிடும் குரல் வெளில கேட்காது என்ற வரை ஓக்கே , அந்த கண்னாடியை உடைக்கக்கூட முடியாதா?  ரூம்ல சேர் டேபிள் இருக்கு . உடைக்க முடியாத கண்ணாடி என்பதை காட்டிக்கவாவது ஹீரோயின் முயற்சி பண்ணி தோற்பது போல் ஒரு காட்சி வெச்சிருக்கலாம் .


3. ஹீரோ மேல சந்தேகப்படும் போலீஸ்  ஹீரோ வீட்டை தரோவா செக் பண்ணி இருந்தா அந்த ரகசிய அறையை கண்டு பிடிசிருக்கலாமே?  அட்லீஸ்ட் வீட்டை செக் பண்ற மாதிரி கூட சீன் வெக்கலையே?


4. அறையில் மாட்டிக்கொண்ட ஹீரோயின் சாப்பிட , குடிக்க ஏதும் இல்லாம  எப்படி அத்தனை நாள் உயிரோட இருக்க முடிஞ்சுது?



5. பல நாட்கள் பட்டினி கிடந்த ஹீரோயின் நெம்பர் 1  கொழுக் மொழுக் ஹீரோயின் நெம்பர் 2 வை திடீர்னு அவ்வளவு ஆவேசமா எப்படி தாக்கி வீழ்த்த முடியும் ? அவளே சொங்கிப்போய் இப்பவோ அப்பவோன்னு கிடக்கா


6. நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பாதாள அறைக்கு முதன் முறையா ஹீரோயின் 1 போகும்போது  சுத்தமா ரூம் இருக்கு , சிலந்தி வலை கட்டி  தூசும்  குப்பையும் இருக்கற மாதிரி காட்டி இருக்க வேணாமா?



 


 மனம் கவர்ந்த வசனங்கள் 


 படத்துல வசனத்துக்கு வேலையே இல்லை , கொஞ்ச நஞ்ச வசனமும் ம் ம் ஹா ஹேய் அப்படி முக்கல் முனகல் வசனம் தான்




 ரேட்டிங்க் - 7 /10


 சி பி கமெண்ட் - சஸ்பென்ஸ் , திகில்  ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பிரமாதமான திருப்பம் உள்ள படம், இந்தப்படத்துக்கு தமிழ் நாட்டில் சரியான ஓப்பனிங்க் இல்லாததுக்குக்காரணம் மார்க்கெட்டிங்க் சரி இல்லாததே.. இந்தப்படம் கண்டிப்பா தமிழ்ல யாராவது ரீ மேக்குவாங்க ..

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்





Film: Murder 3

Cast: Randeep Hooda, Aditi Rao Hyadri, Sara Loren, Rajesh Shringapure, Shekhar Shukla, Bugs Bhargava



Director: Vishesh Bhatt



Producer: Vishesh Films, Fox Star Studios


Writer: Mahesh


 

Friday, February 22, 2013

ஆதிபகவன் - சினிமா விமர்சனம்

a


தமிழ் நாட்டை விட்டு ஒரு இஞ்ச் கூட நகராத என் கண்ணுக்கே டொக்கு ஃபிகரா தெரியற ஒரு 50 மார்க் ஃபிகர் ஹீரோயினை தாய்லாந்து , பாங்காங்க் , மும்பை என பல  இடம் பார்த்த பல ஃபிகர் பார்த்த  தாதா ஹீரோ பார்த்ததும் லவ்வுல தொபுக்கடீர்னு விழறாரு. அந்த டொக்கு ஃபிகரு  ஹோட்டல்ல சர்வரா இருக்கு .5 ரூபா டிப்ஸ் குடுத்தாலே  மடங்கிடும் அந்த  ஃபிகருக்கு ஹீரோ  5000 ரூபா டிப்ஸ் தர்றாரு. அது உடனே “ நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை “ அப்டிங்குது 


இதுல என்ன காமெடின்னா அந்த மாதிரி பொண்ணுங்களே ஓப்பனிங்க்ல கெத்து காட்ட அப்டி பில்டப் குடுப்பாங்களாம், போய்ட்டு வந்த சிலர் சொன்னாங்க .ரொம்ப பிகு பண்ணின பிறகு அந்த டொக்கு ஃபிகர் எங்கப்பா உன்னை பார்க்கனும்னு  சொல்லி கூட்டிட்டுப்போறார். ( நல்ல வேளை , அவங்கம்மா பார்க்கனும்னு சொல்லி இருந்தா இன்னொரு கில்மாக்கதை சிக்கி இருக்கும் ) 


இப்போ பயங்கரமான 2 ட்விஸ்ட். 20 நாளாவது ஓடற  படமா இருந்தா சஸ்பென்சை வெளியே சொல்லாம கமுக்கமா இருந்திருப்பேன், ஆனா எப்படியும் இது ஊத்திக்கப்போகும் படம் தான். எப்படியும் நீங்க யாரும் படம் பார்க்கப்போறதில்லை , அதனால சொல்லிடறேன். ட்விஸ்ட் 1. ஹீரோயின் நிஜமாவே ஹீரோவை லவ் பண்ணலை , எல்லாம் டிராமா ( இந்த டொக்கு ஃபிகருக்கே இவரைப்பிடிக்கலையே..... ) ட்விஸ்ட் 2 .  பிரசாந்த் நடிச்ச அப்பு படத்துல வில்லனா வந்த பிரகாஷ்ராஜ் மாதிரி , விஸ்வரூபம் டான்ஸ் மாஸ்டர் கமல் மாதிரி  , வரலாறு அஜித் மாதிரி பெண்மைத்தனம் கொண்ட இன்னொரு ஹீரோவோட ஆள் தான் ஹீரோயின் . 

எதுக்காக இந்த டிராமா? இந்த குப்பைப்படத்துக்கு எதுக்கு இந்த பில்டப்.  இயக்குநர் அமீருக்கு யோகி  வாங்குன அடி பத்தலையா?  ஏன் இப்படி ? என்பதை டி வி ல அடுத்த வாரம் எப்படியும் போட்ருவாங்க , அப்போ பார்த்து தெரிஞ்சுக்குங்க

ஹீரோ ஜெயம் ரவிக்கு இது முக்கியமான படம் ( அப்டினு அமீர் ஏமாத்தி கால்ஷீட் வாங்கிட்டாரு )  ஓப்பனிங்க் ல சி பி ஐ டெபுடி கமிஷனர் என கெத்து காட்டும்  ரெய்டு காட்சியில் சுஜாதா திரைக்கதையில் வந்த செல்லமே விஷால் நினைவு வருது . பின் தாதாவாக வரும்போது நாயகன் கமல் நினைவு வருது ( கமல் ரசிகர்கள் மன்னிக்க - சும்மா ஒரு பேச்சுக்கு ) .திருநங்கை கெட்டப்ல வரும்போது ஆணழகன் பிரசாந்த் நினைவு வருது . ஆனாலும் அந்த கேரக்டரில் ஜெயம் ரவி கலக்கிட்டார். என்னா ஒரு பாடி லேங்குவேஜ் .

அந்த கேரக்டரில் அவர் வரும் காட்சிகளெல்லாம் அப்ளாஸ் அள்ளுது ( எல்லாம் ரசிகர்களாத்தான் இருக்கும் )

ஹீரோயின் கழுவாத விடியா முகரையா நீது சந்த்ரா . ஆயில் ஸ்கின் ஃபேஸ். க்ளோசப் ல பார்த்தாலும், லாங்க் ஷட்ல பார்த்தாலும் , சைடுல பார்த்தாலும் தேறாத முகம்,. இந்த லட்சணத்துல நெத்தில குங்குமம் வேற இல்லை. ரசிக்கறதுக்கு அங்கே ஏதும் லேது .அடிக்கடி லோ கட் சுடி வேற . ஆனா க்ளைமாக்ஸ் ல ஹீரோ கூட ஒரு ஃபைட் இருக்கு , பின்னிப்பெடல் எடுத்துட்டார். ஷங்கை எக்ஸ்பிரஸ் ஜாக்கிசான் படத்துல பார்த்த அதே ஸ்டெப் என்றாலும் பிரமாதமான முயற்சி 

படத்துல காமெடி மருத்துக்கு கூட இல்லை .

 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. சென்னை சாலி கிராமத்திலேயே எடுத்து முடிச்சிருக்க வேண்டிய கதையை இது ஒரு இண்ட்டர்நேசனல் சப்ஜெக்ட் என நம்பவெச்சி தயாரிப்பாளர் காசுல பாங்காங்க் , தாய்லாந்து , மும்பை என சுற்றிப்பார்த்த லாவகம்

2. படத்தோட கதை எப்படியும் தேறாதுன்னு முடிவு பண்ணி ஜெயம் ரவி ரசிகர்களைக்கவர்வதற்காக  அந்த திருநங்கை கேரக்டரை உருவாக்குனது , ரவியிடம் நல்ல நடிப்பை வாங்கியது

3.  ஆதி , பகவன் என டைட்டில்  வைக்காம ஆதி பகவன் என டைட்டில் வெச்சு பலரது எதிர்ப்பை சம்பாதிச்சு நெகடிவ் பப்ளிசிட்டியை ஓ சி ல பெற்றது

4. ஹீரோ தன் தங்கையின் காதலனிடம்  காம்ப்ரமைஸ்க்கு பேசிப்பின் பலன் அளிக்காமல் தங்கையின் எதிரிலேயே காதலனை போட்டுத்தள்ளும் காட்சி அபாரம்

5. பாடல்கள் 2 தேறுது . பி ஜி எம் ஓக்கே , யுவன் ராக்ஸ்



 



 இயக்குநரிடம் சில கேள்விகள்

1. துரோகம் பண்ணினது காதலியாகவே இருந்தாலும் அவளை உண்மையா காதலிச்ச காதலன் அவளுக்கு எந்தக்கெடுதலும் கனவிலும் நினைக்க மாட்டான், இதுதான் ஆண்கள் சைக்காலஜி . ( அவ(நா)ங்க நாசமாப்போவதும் அதனால தான் ) அதை உன்னை நினைத்து படத்துல சூர்யா கேரக்டர் மூலம் அழகா சொல்லி இருப்பார் இயக்குநர் விகரமன்,. ஆனா இதுல ஹீரோ ஹீரோயின் தன்னை காதலிப்பதா ஏமாத்துனது தெரிஞ்சதும் அவரை வில்லன் ரேஞ்சுக்கு ஃபைட் போட்டு கொல்வதெல்லாம் கொடூரம் , கேரக்டர் மதிப்பே போச்சே.


2.ஓப்பனிங்க் ரெய்டு சீனில் மொட்டை மடியில் தண்ணி டேங்கில்  கோடிக்கணக்கில் தங்கக்கட்டிகள் ஒளிச்சு வைப்பதெல்லாம் ரீலோ ரீல் , முடியல

3. ரெய்டு முடிஞ்ச அடுத்த நிமிடமே ஏர்போர்ட் , அலெர்ட் கொடுத்திருந்தால் மந்திரியின் கோடிக்கணக்கான சொத்தை ஈசியா காப்பாற்ரி இருக்கலாமே?

4. எதுக்கும் இதவாத அந்த திருநங்கை கேரக்டரை ஹீரோயின் லவ் பண்ணுவது ஏன்? அவன் அவளுக்கு துரோகம் பண்ணியும்  அவ அவன் மேல உயிரையே வெச்சிருப்பதுக்கு லாஜிக்கே இல்லையே? பொண்ணுங்க எதை வேணாலும் மன்னிச்சுடுவாங்க ( சமையல் பண்ணலைன்னாக்கூட ஹோட்டல் கூட்டிட்டுப்போய் சமாளிச்சுக்கலாம்) ஆனா அவங்களுக்கு துரோகம் பண்றதை மன்னிக்கவே மாட்டாங்க  அதுவும் ஹீரோயின் கண் முன்னால  ஹீரோ நெம்பர் 2 துரோகம் பண்றார்.

5.க்ளைமாக்ஸ் மகா நீளம் , இழுவை , சுருக்னு முடிக்க வேணாமா? ஹீரோ ஹீரோயின் கூட ஃபைட் போட்டு  , அப்புறம் வில்லன் கூட ஃபைட் போட்டு உஷ் அப்பா .. 

 



 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  பார்க்கறதுக்கு பால் குடிக்கற பையன் மாதிரி இருக்கான் , இவனா  கொலை செஞ்சான் ?

2. மாஸ்டர் பிளான் என்னோடது

 அதை எக்ஸ்சிக்யூட்டிவ் பண்ணுன மாஸ்டர் மைண்ட் என்னோடது

3.  ஒரே நாள் ல மேலே  வரனும்னு ஆசைபப்டறியா? மேலே போகனும்னு ஆசைப்படறியா?

4. தொழில யார் கூட மோதறோம்கறது முக்கியம் இல்லை , யார் முன்னால போறாங்க என்பதுதான் முக்கியம்


5. பணத்தோட ருசி உனக்குத்தெரியல

6. அம்மா, நல்லா இருன்னு சொல்லாட்டி பரவாயில்லை , தொலைஞ்சு போ அப்டின்னு சொன்னாக்கூட நல்லாருக்கும்

7. டியர், யார் உன்னை விட்டுட்டுப்போனாலும் உன் கூடவே இருப்பேன் 



 



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி. பி கமெண்ட் - ஜெயம் ரவியின்  திருநங்கை கேரக்டர் மட்டுமே  புதுசு, அதை ரசிக்க நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம். மற்ற படி ஆதி பேதி , அரே பகவான் அமீரிடமிருந்து எம்மை காப்பாற்று

ஈரோடு  அபிராமியில் படம் பார்த்தேன்

a


vedio review =http://www.youtube.com/watch?v=2MQQbyFO7Mo&feature=youtu.be

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம்

விஸ்வரூபம் படத்தின் ட்ரைலரை வைத்தே படத்தின் கதையை யூகித்துவிடலாம். கமல், படத்தின் ஆரம்பத்தில் பெண் தன்மையுடன், நாட்டியம் கற்றுத்தருபவராக வருகிறார். கமலின் மனைவி பூஜா, அவரை கண்காணிக்க ஒருவரை அனுப்புகிறார். அந்த துப்பறிபவர், கமலைப் பற்றிய ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கிறார். அதிலிருந்து விஸ்வரூபம் எடுக்கிறது கதை.

இந்த மாதிரி கதைக்கு படம் முழுவதும் விறுவிறுப்பாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் விஸ்வரூபத்தின் பின்பாதியில் விறுவிறுப்பு கொஞ்சம் கம்மியாக இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு அபாரம். ஆஃப்கானிஸ்தான் காட்சிகள் அருமையாக இருக்கிறது. தமிழ் படங்களுக்கு இது புதுசு என்பதால் நிச்சயம் மக்களை கவரும்.

இசை நவீனமாக இருக்கிறது. படத்தில் கதக் நடன பாட்டு மட்டும் தான் இருக்கிறது. இன்னொரு பாடல், காட்சிகளின் பின்னணியில் வரும். பாட்டுகளை குறைத்ததற்கு கமலை பாராட்ட வேண்டும்.

பல இடங்களில் வசனம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. வசவச என்று இல்லாமல், வாய்க்குள்ளயே பேசாமல் கூர்மையான வசனங்கள்.

ஆன்ட்ரியா எதற்கு வருகிறார் என்று ஒருவர் விமர்ச்சித்து இருந்தார். ஆனால் படத்தில் கமல் ஆளுமை செலுத்தும் காட்சிகளே சுமார் ஒரு மணி நேரோமோ ஒன்னேகால் மணி நேரோமோ தான் இருக்கும். மற்ற இடங்களில் கதையோடு வருகிறார்.

பல காட்சிகளில் ரத்தமும், தூக்கு போடுவது, கழுத்தை அறுப்பதையும் காண்பிக்கிறார்கள். ஆதலால் சிறு குழந்தைகளை இந்தப் படத்திற்கு கூட்டிட்டுப் போகாமல் இருப்பது நல்லது.

தடை செய்யும் அளவிற்கு இந்தப் படம் ஒர்த்தா? ஒரு காட்சியில் தீவிரவாதி ஒருவர் தான் மதுரை, கோவை மற்றும் இன்னும் இரண்டு ஊர்களில் ஒழிந்து இருந்ததாக கூறுகிறார். பின் ஒரு காட்சியில் தீவிரவாதிகள் தொழுகை செய்வது போல் இரண்டு நொடிகள் காண்பிக்கிறார்கள். படத்தில் குரானை காண்பித்ததாக எனக்கு நினைவில்லை. இதை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

படத்தின் ஆரம்பத்தில் பிராமணர்களை சீண்டும் வகையிலும் ஒரு வசனம் வருகிறது.

படத்தில் பெரிய ரகசியம் ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொண்டால், இந்த தடை விசயம் நகைச்சுவையாக இருக்கும்.

இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். நியுயார்க் மற்றும் ஆஃப்கானிஸ்தான் காட்சிகளின் பிரமாண்டம் அப்படி. கிராஃபிக் ஹெலிகாப்டர்களை குறைத்திருந்திருக்கலாம் :) ஏ மற்றும் பி சென்டர்களில் நன்றாக ஓடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. விஸ்வரூபம் - பார்க்க வேண்டிய பொழுதுபோக்கு படம். 



 





அவர் போட்ட ட்வீட்ஸ் ரிலேட்டட் த ஃபிலிம்


1.விஸ்வரூபம் ஓகே. கதைக்கு ஏற்ற விருவிருப்பு கொஞ்சம் கம்பி.



2. தியேட்டரில் செம கூட்டம் முன்னாடி உட்காரத்தான் இடம் கிடைத்தது.


3. ஆஃப்கானிஸ்தான் காட்சிகள் தமிழ் படங்களுக்கு புதுசு. ஒளிப்பதிவு அருமை. இசை ஓக்கே



4. அந்த கதக் பாட்டு மட்டும் தான். இன்னொரு பாட்டு பின்னணியில் மட்டும் வருது!


5. தடை பண்ணும் அளவிற்கோ 150 கோடி அள்ளும் அளவிற்கோ ஒர்த் இல்லை!



6. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் வசனங்கள்.


7. ஒரு தீவிரவாதி தான் மதுரை, கோவை மற்றும் 2 ஊர்களில் மறைந்து இருந்ததாகக் கூறுவார். அவ்வளவு தான்


8,. வழக்கு தொடுத்தவர்கள் நீதிபதியிடம் திட்டு வாங்கலாம் 


9. இந்தியா மாதிரியே ஒருத்தன் தியேட்டரில் போனில் பேசினான். கமல் வரும்போது கத்தி, கை தட்டினார்கள் :)


10. விஸ்வரூபம் படத்தின் முழுக்கதையை யாரிடமும் கேட்காமல் போய் பார்த்தால் படம் சுவாரசியமாக இருக்கும்.


11. ஆரம்பத்தில் பூஜா கவர்ச்சியாக சில நொடிகள் வருவார். அவ்வளவு தான். ஆண்ட்ரியாவிற்கு கவர்ச்சி காட்சிகள் இல்லை :)



12. படம் 150 கோடி கலெக்சன்னுக்கு வொர்தா?இல்லையா?


அந்த அளவிற்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் நல்ல வசூல் வரும். எந்திரன் மாதிரி இருந்தால் தான் 150 கோடி அள்ள முடியும் 1

எந்தவித எதிர்ப்புமே இல்லாமல் படம் வெளிவந்திருந்தால் நல்ல லாபம் பார்க்க வாய்ப்பே இல்லைல..

Carmike Galleria 6, Pittsburgh இல் படம் பார்த்தாராம்







விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு
Posted Date : 13:35 (25/01/2013)Last updated : 13:50 (25/01/2013)
சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இரு தரப்பினரும் அமர்ந்து பேசி இவ்விவகாரத்திற்கு தீர்வு காணவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படப் பிரச்னைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

கமல்ஹாசன் எனது 40 ஆண்டு கால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்துகோள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இத்திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததில் இருந்தே இஸ்லாமிய சமூகத்தின்மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும், கமல்ஹாசன் இந்தப் படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது.

கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்குக் காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில்கொண்டு இந்தப் படத்தை முழுதாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் மாறி, கமல் வந்த பிறகு கலந்துபேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துகளுடன் இஸ்லாமிய சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


 




விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு ஆன்லைனில் குவி்கிறது ஆதரவு!
Posted Date : 12:31 (25/01/2013)Last updated : 12:31 (25/01/2013)
- சரா

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில்,  நடிகர் கமல்ஹாசனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.
சினிமா ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பாலிவுட் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கமல்ஹாசனுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழில் பதிவிடும் இளைஞர்களும், ஆர்வலர்களும் கமல்ஹாசனின் முயற்சியைப் பாராட்டியும், விஸ்வரூபம் விவகாரத்தில் அவருக்கு எதிரானச் சூழல்களை விமர்சித்தும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அளவில் கமல்ஹாசனுக்கு ஆதரவுகள் குவிந்துவரும் சூழலில், தமிழகத்தில் இருந்து திரையுலகினரின் ஆதரவுக் குரல்கள் குறிப்பிடத்தக்க அளவில் எழுப்பப்படாததையும் அவர்கள் கண்டித்துப் பதிவிட்டுள்ளனர்.
ட்ரெண்டிங்கில் கமல்ஹாசன்...

டிவிட்டர் டிரெண்டில் கமல்ஹாசனின் பெயர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞனான கமல்ஹாசனின் படைப்புச் சுதந்திரத்தை பறிப்பது சரியல்ல என்கிற ரீதியில் டிவிட்டரில் நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் இடப்படுகிறது.

'இந்தியா ஒரு சுதந்திர நாடு. கமல்ஹாசன் தனித்துவம் வாய்ந்த திறமையாளர். அவர் தனது கருத்துகளைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு' என்று ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் டிவிட்டியுள்ளார். அந்த ட்வீட் 1000-க்கும் மேலானவர்களால் பகிரப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் குறும்பதிவுகள் #Kamal Haasan #Vishwaroopam முதலான ஹேஷ்டேக்-குகளுடன் ஆயிரக்கணக்கில் வலம் வந்துகொண்டு இருப்பதால் இந்திய அளவிலும், சென்னை அளவிலும் டிரெண்டிங்களில் பேசுபொருள் ஆகி இருக்கிறார் கமல்ஹாசன்.

டிவிட்டரில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் பதிந்த குறும்பதிவுகள் அப்படியே...

Shekhar Kapur: “I stand up for #kamalhassan right 2 show d world #vishwaroopam n let d people decide, especially after Censor Board has passed the film.You?”

Ronnie Screwvala: “I think we are all going to another extreme – being moral police for “everythin” – not good at all.”

Anubhav Sinha: “Is the Tamil Nadu government saying that they do not recognise CBFC? Or they can’t handle law and order? Or they subscribe to the objection? When a government needs to ride on a movie star, you should know how intellectually and politically bankrupt they are.”

Siddharth: “Ban on ‘Vishwaroopam’ is a regressive, back to the dark ages blow to Tamil cinema by the Tamil Nadu government… how do we make a change?”

R Madhavan: “My Anbu Tamil Makkale.We have been one of the most secular states ever.Let not that ever be snatched from us.Vishwaroopam deserves a release.”

Madhur Bhandarkar: “I am appalled by the Tamil Nadu government’s decision to ban Kamal Haasan’s ‘Vishwaroopam’. After the film has been passed by the censor board. Not done.”

Manoj Bajpayee: “It is disappointing to hear that state government of Tamil Nadu banned ‘Vishwaroopam’ after the film is censored. That brings the importace of censor in question.”

Amit Khanna: “The ban on Kamalhaasan’s Vishwaroopam is totally uncalled for!Condemnable.”

Lakshmi Manchu: “It is appalling what’s happening with #vishwaroopam.. Pls don’t mix films w cheap politics. This insane cultural mafia shd end!!!”
 நன்றி - விகடன் 


 



மக்கள் கருத்து


1. கமல் அவர்களுக்கு வணக்கம் ,

படம் எடுக்க எவ்வளவோ கதை இருக்கிறது . அதே போல் நல்ல கதைகளை மக்களுக்கு தந்து இருகிறேர்கள் . இப்படி கூட எடுக்கலாம் .
1. இலங்கை அரசு என் தமிழன் அனைவரும் விடுதலை புலி என்று கொள்கீரதே அதை பற்றி எடுக்கலாம்.
2. தண்ணீர் தராமல் தமிழனை பாகிஸ்தான்காரன் போல் பாக்கும் கர்நாடக பற்றி எடுக்கலாம் .
3. நம் அணையை வைத்து கொண்டு நமக்கு தண்ணீர் தராமல் இருக்கும் கேரளா பற்றி எடுக்கலாம் .
4. உங்களின் அருமையான கல்யாணங்களை பற்றி எடுக்கலாம்.
5. குஜராத் கலவரம் பற்றிய உண்மையான சம்பவங்களை பற்றி எடுக்கலாம்.
6. தெனாலி, அவ்வை சண்முகி , பஞ்ச தந்திரம் போல நெறைய நகை சுவை படம் எடுக்கலாம்.
7. தமிழ் நாட்டில் நடக்கும் சாதி கலவரம் பற்றி படம் எடுக்கலாம்.
8.ஆப்கான் மற்றும் ஈராக் நாட்டில் நடக்கும் அமெரிக்காவின் வீரத்தை பற்றி எடுக்கலாம் .
9. நம் நாட்டில் நடக்கும் ஊழல் பற்றி படம் எடுக்கலாம்
10.நம் நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறை வண்ணம் தடுக்கும் முறையில் படம் எடுக்கலாம்.
11.அப்துல் கலாம் , ஏ ஆர் ரஹ்மான் , சானியா மிர்சா , திப்புசுல்தான் , முஸ்லிம்களின் சுதந்திர பங்கு , தமிழ் முஸ்லிம்களின் வரலாறு ஆகிய வற்றை பற்றி எடுக்கலாம்.
12. இந்தியாவின் இந்து , இஸ்லாமியர்களின் ஒற்றுமை பற்றி எடுக்கலாம்

இதை எல்லாம் விட்டு விட்டு திவீரவதிகளாக எங்களை காட்டி எங்களிடமும் பணம் சம்பதிகாதே , தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்காதே -


2.தமிழக சினிமாத்துறையினரும் சந்தர்ப்பவாதிகளே, தமிழக அரசியல்வாதிகளைப்போல....இன்னைக்கு கமலுக்கு ஆதரவு தெரிவித்தால் ஒரு வேளை நாளைக்கு நம் படத்தை பார்க்க வர மாட்டார்களோ, காசு பனம் பாக்க முடியாதோ என்ற கோழைத்தனம்...அதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு தான் நினத்ததை சொல்லும் துணிச்சல் கமல் போன்ற வெகு சிலருக்குத்தான் உண்டு...அதனால் தான் இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து நிற்கிறார் அவர்...அழுத்தம் கொடுக்க கொடுக்கத்தான் வைரம் மென் மேலும் ஜொலிக்கும்... நீ வென்று வா தலைவா... வெற்றி விழா நாயகன் நீ.


3. bvimalnath 3 Hours ago
முச்லிம்கலை தவராக சித்தரித்து இருக்கிரார்கல் என்பது ஒருதரப்பாரினது வாதம் ஆனால்மும்பையில் 26\11ல் நடைபெட்ட்ர தீவிரவாத தாக்குதலில் கையில் க்லர் கயிரை கட்டிக்கொன்டு 56 பேர்கலை சுட்டுக்கொன்ரவன் யார் அவன் யென்ன இனம்? கார்கில்லில் தீவிரவாதியைப்போல நுழைந்து மரைமுக தாக்குதலில் ஈடுபட்டானே அவ்ன் எந்த நாடு நாட்டுனடப்பினைச் சொல்லக்கூட கருத்துச்சுதந்திரம்யில்லையென்ரால் ஜனனாயகனாடென்ரு சொல்லிக்கொல்லுவதில் அர்த்தம் என்ன இருக்கிரது
 

Saturday, January 19, 2013

சிவா மனசுல சக்தி ( 2009) - சினிமா விமர்சனம்

http://cineidentity.com/wp-content/uploads/2011/08/Siva-Manasula-Sakthi.jpgகூரியர் ஆஃபீஸ்ல வேலை செய்யற ஹீரோவை ஹீரோயின் மிலிட்ரிமேனா?ன்னு லூஸ் மாதிரி கேக்குது ,  இதுக்கு முன்னால மிலிட்ரி ஆளுங்களையே பார்க்காதவர் போல . கூரியர் பாய் ஆன ஹீரோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம ஆமாங்கறார். ஹீரோயின் அவர் பங்குக்கு தான் ஒரு ஏர் ஹோஸ்டல்னு ஒரு பொய்யை அள்ளி விடறார். முதல் ரயில் சந்திப்புல இவங்க 2 பேரும் சந்திப்பு பின் அடிக்கடி  மீட்டிங்க், கலாட்டா , ஊடல் , காதல் ஆகுது . இவங்களோட ஜாலி கலாட்டா சந்திப்புகள் தான் கதை 

எம் ராஜேஷ் தான் இந்தப்படத்தோட முதல் ஹீரோ . இவரோட படங்கள்ல எப்பவும் கதை 1 தான் , திரைக்கதை சம்பவங்கள் மட்டும் கொஞ்சம் மாறும் , ஆனா எல்லாப்படங்களும்  ஹிட் .


ஜீவா தான் ஹீரோ . இவருக்கு ரொமாண்டிக் காட்சிகளை விட சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் காட்சிகள் நல்லா கை கொடுக்குது. டிரஸ்ஸிங்க் சென்ஸ் ரொம்ப மோசம் இதுல . நல்லா நீட்டா பண்ணி இருந்திருக்கலாம்,. 


 அனுயா தான் ஹீரோயின். பெரும்பாலான தமிழர்களுக்குப்பிடிக்காத சதுர முகம். அளவில் மாறுபட்டாலும் அழகில்  ஒன்று பட்ட இரு உதடுகள் . இவரது டிரஸ்ஸிங்க் சென்ஸ் அபாரம். எந்த டிரஸ் போட்டாலும் டைட்டா போடனும் என்ற இவரது உயரிய லட்சியம் வாழ்க . பாட்டம் லெக்கின்ஸ் டைட்டா போடுவது போல டாப்ஸும் டைட்டாவே போடறார்.  இவர் லோ கட் பனியனில் வரும் காட்சிகள் 7 . லோ ஹிப்பில் வரும் காட்சிகள் 5 .  ( காட்சியை மட்டும் தான் எண்ணுனேன், வேறு எதையும் பார்க்கலை ) 


 காமெடிக்கு சந்தானம் .  ஷூட்டிங்க் ஸ்பாட்டையே கலகலப்பாக்கி விடும் சுபாவம் உள்ளவர் படத்தை கொண்டாட்ட மூடுக்கு கொண்டு போவதில் மன்னன்.  படத்துல 48 காமெடி விட் அடிக்கறார்.. 



ஹீரோவின் அம்மாவாக வரும் ஊர்வசி கலக்கல் காமெடி நடிப்பென்றால் , ஹீரோயின் அப்பாவாக வரும் பேராசிரியர் கு ஞான சம்பந்தன்  செம குணச்சித்திரம்


 http://www.kollyfans.com/wp-content/uploads/2009/06/2151.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1.  எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் காட்சியில் அனுயாவின் டிரஸ்ஸிங்க் அபாரம் .டார்க் ப்ளூ சார்ட்ஸ் , லைட் ஸ்கை ப்ளூ டாப்ஸ்ல அவர் ஸ்டைலாக நடந்து போகும்போது  கேமரா மேன் அவர் பின்னாலயே ஃபாலோ பண்ணி நம்மையும் அழைத்து செல்கிறார். 


2. எல்லா பாடல்களுமே ஹிட் .  எம் ஜி ஆரு இல்லீங்கோ  நம்பியாரு இல்லீங்கோ நாங்க எல்லாம் நடுவிலங்கோ ,  ஒரு அடங்காப்பிடாரி உன் மேல நான் ஆசை வெச்சேன் , எப்படியோ மாட்டிக்கிட்டேன் , ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ( சூப்பர் ஹிட் )  , தித்திக்கும் தீயாய் , ஒரு பார்வையில்  என 6 பாடல்களும் ஓக்கே 



3. ஹீரோ ஹீரோயினிடம் சமாதானம் பண்ணும் சீனில் 10 நிமிஷம் கழிச்சு ஹீரோயின் தன் காதில் மாட்டி இருந்த வாக் மேன்  ஒயரை கழட்டிகாட்டி அவனை நோஸ் கட் பண்ணும் காட்சி , அப்போது காட்டப்படும் ரிவர்ஸ் ஒயிட் & பிளாக் காட்சி  குட் . அந்த சீனுக்கு காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பி ஜி எம் அழகு 



4. சந்தானத்தின்  புது செல் ஃபோனை ஹீரோ உடைக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் காமெடி கலாட்டா 




5. ஹீரோயினின்  அண்ணன் சத்யன் காதலுக்கு ஹீரோ உதவுவது , அதுவும் ஹீரோயின் ஹீரோ மேல் காதல் கொள்ள ஒரு காரணம் என மென்மையான முக முறுவலில்  சொல்வது கிளாசிக் 



6. க்ளைமாக்சில் ஊர்வசி & கோ ஹீரோயின் வீட்டில் செய்யும் அலப்பரைகள்  செம . ஹீரோவின் தங்கை கேரக்டர் எப்போதும் ஒரே ஒரு பனியனுடன் வருவதும் இளமைக்கண்காட்சி


7. ஹீரோயின் உட்பட பல பெண் கேரக்டர்கள் ஸ்லீவ் லெஸ்ஸில் வருவதும் அவர்கள் கூந்தலை சரி செய்யும் காட்சியும் போனஸ் போஸ் 

http://www.cinemahour.com/gallery/gossip/54549503anuya.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்




1. ஹீரோ ஹிப்பி தலையுடன் , தாடியுடன் இருக்கார் , அவரைப்பார்த்து ஹீரோயின் நீ மிலிட்ரி மேனா? என கேட்பது.. இத்தனைக்கும்  ஹீரோ அப்போதான் கேம்ப்ல இருந்து வர்றதா சொல்றார். 




2. ஹீரோயின் மவுண்ட் ரோட்டில் ஆட்டோ கிடைக்குமா? என பார்க்கறார். மவுண்ட் ரோட்ல ஊர்வலம் என்று ஹீரோ சொல்லி பைக்கில் லிஃப்ட் தர்றார். பின் ஹீரோயின் ஹீரோவை கழட்டி விட்டுட்டு அவர் பாய் ஃபிரண்ட்டிடம்  ஜாயின் ஆகறார். எதுக்கு தலையை சுத்தி மூக்கைத்தொடனும் . அந்த பாய் ஃபிரண்ட் கூடவே பைக்ல வரலாமே? 




3. ஒரு சீனில் ஹீரோயின் “ உன்னைத்தவிர என்னை யாரும் இவ்வளவு உரிமையா நீ வா போ என ஒருமைல கூப்டதே இல்லை , எல்லாரும் வாங்க போங்க என மரியாதையா தான் கூப்பிடுவாங்க என  ஹீரோவிடம் உருகறார். ஆனா அந்த தாடிக்காரன் எப்பவும் ஹீரோயினை “ ஒருமைல நீ வா போ என தான்  அழைக்கிறார். அப்போ ஹீரோ பக்கத்துலயே தான் இருக்கார். டக்னு ஏன் ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏதும் கேட்கலை? 




4. மாடர்ன் கேர்ள் ஆன ஹீரோயின் முதல் முறை விசிட் செய்யும் ஹீரோவின் வீட்டில் ஹீரோவின் அம்மா தண்ணீர் தரும்போது ஏன் கவ்விக்குடிக்கறார்? அண்ணாந்துதானே குடிக்கனும்? 



5. ஹீரோ கலைஞர் மாதிரி ஒரு பொய்யர் எனவும் , டாக்டர் ராம்தாஸ் மாதிரி மாத்தி மாத்தி பேசற ஆள் எனவும் ஹீரோயினுக்கு ஓப்பனிங்க்லயே தெரிஞ்சுடுது. மிலிட்ரி ஆஃபீசர்னு பொய் எக்சட்ரா.  அப்படி இருக்கும்போது அவரோட பிறந்த நாள் எப்போன்னு சொன்னதை  மட்டும் எப்படி நம்பி ஏமாறுகிறார்? அவர் வீட்டுக்கு வந்தவர் ஒரு வார்த்தை கூட  ஹீரோவோட அம்மா கிட்டேயோ தங்கை கிட்டேயோ அதை ஏன் கன்ஃபர்ம் பண்ணலை?



6. ஹீரோயின் கோபத்துல க்ரீட்டிங்க்ஸை அவர் வீட்டு மாடில இருந்து தூக்கி வீசறார் , அப்போ காட்டுவது சாதா பேப்பர்ஸ் , கீழே விழுந்து கிடப்பது கலர் க்ரீட்டிங்க்ஸ் ( காரணம் க்ரீட்டிங்க்ஸ் லேசா இருக்காது எஃபக்ட்டோட பறக்காது என்பதால் பேப்பரை தூக்கி போட்டு ஷூட் பண்ணிட்டாங்கனு நினைக்கறேன் )



7. மேரேஜ்க்கு முன்பே மேட்டர் முடிக்கறேன், அப்போதான் மேரேஜ் என்ற ஹீரோவின் கண்டிஷனுக்கு ஹீரோயின் கொஞ்சம் கூட யோசிக்காம ஒத்துக்கொள்வது அபத்தம் . எதேச்சையா மேட்டர் நடந்தா அது சகஜம், ஆனா பிளேன் பண்ணி கண்டிஷன் போட்டு இந்தக்காலத்துப்பொண்ணுங்க அதுக்கு ஒத்துக்குவாங்கன்னு தோணலை ( நான் யார்ட்டயும் கேட்கலை, எனக்கா தோணுச்சு )


8. ஹீரோயின் மேட்டர் முடிஞ்ச பின் நடக்கும் ஊடலில் பிரிவது ஓக்கே , ஆனா ஹீரோ போய் ஓவரா பம்முவது நம்ப முடியல . மாசமா இருப்பது ஹீரோயின். பம்ம வேண்டியது அவர் தானே?

 http://wetactress.files.wordpress.com/2010/11/anuya-sundarc-nagaram-tamil-movie-wet-saree-photo-pics-stills-gallery-0001.jpg





 மனம் கவர்ந்த வசனங்கள்



1.  மிஸ் , ஓடற ட்ரெயின்ல படிப்பது கண்ணுக்கு நல்லதில்லை , பேசலாமே?



2. மிலிட்ரில இருக்கறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

 ரொம்ப தாங்கஸ்ங்க


 நான் ஜெனரலாத்தான் சொன்னேன்


 அந்த பொது வுல நானும் வந்துடறேனே?




3.  நான் ஏர்ஹோஸ்டலா இருக்கேன்


 ஏர்ஹோஸ்டல்னா ஃபிளைட்ல சாக்லேட் கொடுத்து லட்டு மாதிரி இருப்பாங்களே அவங்க தானே?



4. எப்போ நாம மறுபடி மீட் பண்ணலாம்?


 2 நாள்ல காஷ்மீர் போகனும்னு சொன்னீங்க?


 அது பிராப்ளம் இல்லை , ஆஃபீசர் கிட்டே பேசிக்கலாம்




5. பக்கத்துல ஒரு ஃபிகர் வந்துடக்கூடாது , ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க




6.  டேய்.. ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டியா?


 ஏண்டா இப்படி லோக்க்கலா பேசறே?



7.   ஏர்ஹோஸ்டல்னா ஃபிளைட்ல சரக்கு  கொடுத்து ஸ்மைலி பண்ணுவாங்களே அவங்க தானே?  டேய் டேய் இண்ட்ரோ குடுடா.


 உனக்கு ஒத்து வராது விடுடா..




8.  சத்யன் - டென்ஷனா இருக்கேன் , அதான் தண்ணி அடிச்சுட்டு இருக்கேன்

 நீ அடிக்கறதுக்குப்பேரு தண்ணின்னா . நாங்க அடிக்கறதுக்குப்பேரு.. 




9.  நான் ஒரு முஸ்லீம் ஃபிகரை லவ் பண்றேன்


 பிரியாணிக்கு ஆசைப்பட்டு ...?




10.  வண்டலூர் ஜூவுக்கு


 பிக்னிக்கா போறோம்? சைட் அடிக்கப்போறோம். எதுக்கு ஃபேமிலி?



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmHwb-hvtu1z-jip752Mdn-XDzJ5QbQgobi8tOsb5XtuM0HPeebWVnXppASfzfzXBFzkyzUBtjw4NARp2G9FjpisK1rDqpyerAw8HX7miTcasVa4MCqgd0kr5rjpuwE5WJDRnoC5cUl0E/s1600/Anuya9.jpg



11. எங்கடா இங்கே?

 திருப்பதில மொட்டை அடிக்க இங்கே டோக்கன் தர்றதா சொன்னாங்க




12,.  நம்ம கண்ட்ரிலயே ஏன் இந்த உலகத்துலயே ஃபிகரை கரெக்ட் பண்ண ஃபேமிலியோட வந்த முத ஆள் நீ தான்



13.  இங்க்லீஷ்   புக் ? பொம்மை தானே பார்க்கறே? உண்மையை சொல்லிடு




14.  ஜூராசிக் பார்க் ல வர்றது மாதிரி தண்ணீர் டம்ளர் எல்லாம் அதிருது  ஏதோ பூகம்பம் வருது போல, எல்லாரும் தாழ்வான இடத்தை  நோக்கி போங்க..


 அட ஷகீலா



15.  ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபிலிங்க்



`16.  ஷகீலா -   என் பேக் கிரவுண்ட் தெரியாம பேசாதீங்க


டேய், பேக்ல ஏதோ கிரவுண்ட் இருக்காம் , வாங்கி வளைச்சிப்போட்றலாமா?


17.  நீங்க ஏர் ஹோஸ்டல்னு பொய் சொன்னது கூட ஓக்கே , ஆனா ஃபிளட் சவுண்ட் வெச்சே அது எந்த கம்பெனி ஃபிளைட்னு சொன்னீங்க்ளே ஒரு ரீலி முடியல




 18.  ஸ்கூல் படிக்கும்போது கூட இவ்ளவ் ஃபாஸ்ட்டா ரைமிங்க் சொன்னதில்லையே? நீ? எப்படிடா?



19.  மச்சி ஃபோன்ல ஸாரி கேட்கறாடா


 கேட்டா ஸாரியோட பிளவுசும் வாங்கிக்குடுடா மச்சான்



20. பச்சைத்தண்ணி குடிக்கறதைக்கூட பாயாசம் குடிப்பது மாதிரி சீன் போடும் வேலை எல்லாம் இங்கே வெச்சுக்காதே



 http://media.mademan.com/chickipedia/uploaded_photos/8/88/Anuya_Bhagvath-skin-eyes-lovely-hot-chickipedia_thumb_585x795.jpg



21. லேட்டஸ்ட் மாடல் ஃபோனா?  அவ கட் பண்ண பிறகும் அவ பேசறது கேட்குதே?



22.  என்ன வேண்டிக்கிட்டே?


 உனக்கு 40 வயசு வரை மேரேஜே ஆகக்கூடாதுன்னு



23.  நீ என்ன வேண்டிக்கிட்டே>?


 என்னை மாதிரி ஒரு நல்ல பையன் உனக்கு புருஷனா வரனும்னு



24. நீங்க என்ன வேண்டிகிட்டீங்க? சொல்லப்பிரியம்னா சொல்லலாம்


 சொல்லலைன்னா விடவா போறீங்க?


25.  அந்தப்பொண்ணால நீ பிளாக்ல டிக்கெட் வைக்கும் நிலைமைக்கு வருவே நு சத்தியமா  நான் நினைச்சுப்பார்க்கலை , ஆனா நீ சத்யம் தியேட்டர் வாசல்ல டிக்கெட் வித்துட்டு இருக்கே


26. சாரி , நான் ஆம்பளைங்களோட சினிமா பார்ப்பதில்லை



27. எனக்கு வர்றதெல்லாம் இங்க்லீஷ் கால் தான், ஐ டோண்ட் நோ ஒய்? ஆட்டோமேடிக்கலி கம்மிங்க் யூ நோ ?



28.  என்னது ? நைட் ஷோ போலாமா?னு கேட்கறா? அவங்கப்பன் வாட்ச்மேனோ?



29.  ஓடாத நல்ல படத்துக்கு கூட்டிட்டு வந்து ஓரமா உக்கார்ந்து படம் பார்க்கனும்


30. அய்யய்யோ இப்போ என்ன பண்றது?

 இந்த ஸ்க்ரீனை கிழிச்சு தூக்குப்போட்டுக்க


 http://s2.hubimg.com/u/3636329_f520.jpg



 31.  அதிகமா ஆஃப் அடிக்கற ஆம்பளையும் , அதிகமா பீர் குடிக்கும் பொம்பளையும்  வாமிட் எடுக்காம வீட்டுக்குப்போனதா சரித்திரமே இல்லை


32,.  என்ன சொன்னா?

 திருந்திடறேன், ஒரு வாரம் டைம் குடுன்னு கேட்டா


33. போற பாதை தப்பா இருந்தாலும் போய்ச்சேரும் இடம் கோயிலா இருக்கனும்


 எவ்ளவ் பெரிய வார்த்தை சொல்லீட்டீங்க ?


34.  ஓ! உனக்குத்தான் கல்யாணமா?

 ஏன் குரு? எனகெல்லாம் மேரேஜே ஆகக்கூடாதா?



35.  உனக்காக அவனுங்களை அடிச்சதா நினைச்சியா? நமீதா, அசின்,, த்ரிஷா இவங்களை எல்லாம் மொக்கை ஃபிகர்னு சொன்னானுங்க.. அதுக்குத்தான் அடிச்சேன்

 அப்போ எனக்காக அடிக்லையா? டொண்ட்ட டொண்ட்ட டொண்ட்டடொயிங்க்  ( நாயகன் தீம் மியூசிக் )




36.  என்னைக்கேக்காமலேயே கேக் வாங்கிட்டு வந்திருக்கே?


 37. இதுவரை எந்தப்பெண் கிட்டேயும் நான் சாரி கேட்டதில்லை, யூ ஆர் வெரி லக்கி யூ நோ?

38. லவ் பண்றவனுங்க கூட மட்டும் தண்ணி அடிக்கக்கூடாது


39.  உங்க லவ் ஸ்டோரியை எடுத்து விடுங்க


ஆடோகிராஃப் மாதிரி 7 மணீ நேரம் இழுக்கும்..


40 பொண்ணுங்களை நம்புனா நடு ரோட்டுக்குத்தான் வரனும்

 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/ce/SMS_Poster.JPG/220px-SMS_Poster.JPG





41.  வீட்டுக்குப்போய் சேர்ந்துட்டியா? நடு ரோட்ல கிடக்கிறயா? அதை தெரிஞ்சுக்கத்தான்  கூப்பிட்டேன்

 எப்டி மச்சி கரெக்ட்டா கண்டு பிடிச்சே? நடு ரோட்ல தான் கிடக்கேன்




42.  எனக்கு உனை பிடிக்கலை .. உவ்வே



43.  டேய் அவ போய் 6 மாசம் ஆகுது. யார் கிட்டே பேசிட்டு இருக்கே?


44.  கோயில் கோயிலா ஏன் என்னை அலைய விடறே?  கல்யானம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னா சொல்லிட வேண்டியதுதானே?


 சரி இஷ்டம் இல்லை


45,.  உன்னை நம்ப முடியாது . நாளைக்கே நமக்கு குழந்தை பிறந்தா
க்கூட இது நமக்குப்பிரந்ததா?ன்னு கேட்டு நக்கல் அடிப்பே , அப்புறம் எல்லாம் தமாஷ்ம்பே..


46. மாமா , என்னை மன்னிச்சுடுங்க


 நான் என்ன கட்சியா நடத்தறேன்? என் கால்ல போய் விழுந்துட்டு?




 சி பி கமெண்ட் - காமெடி பிரியர்கள் , சந்தானம் ரசிகர்கள் , காதலர்கள் என அனைவரும் பார்க்கலாம் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx991AN8j03faWXhM7oSkS_JfSSpxxyVJplb9F08RQdcYocL_vmxxBKo_P6g6TT-gTOKrY1PiPTg5rc8SxGM_S1dPGfcQMtynGThkYLkiqU3I3FfkqAcOAYoi6cqY4xJCdgnrQvnLaipOj/s1600/Anuya_Bhagvath_Hot_Photo_Stills_01.jpg



Monday, January 14, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா? - சினிமா விமர்சனம்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/25/Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg/220px-Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg

திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்-ன் இன்றுபோய் நாளை வா படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம்.படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறக்காரணங்கள் 2.  முதல் காரணம் பவர் ஸ்டார். அடுத்தது இது சந்தானத்தின் சொந்தப்படம்.ஒரு காமெடி நடிகர் சொந்தப்படம் எடுத்து இந்த அளவு ஹிட் ஆனது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் ( தமிழில்) 


நண்பர்கள் 3 பேர் . அந்த தெருவில் புதுசா குடி வரும் ஒரு ஃபிகரை  லவ் பண்ணலாம்னு பிளான் பண்றாங்க.ஒருத்தர் அந்த வீட்டு வேலை எல்லாம் செஞ்சு இம்ப்ரஸ் பண்ணப்பார்க்கறார். ஒருவர் ஹீரோயின்  சித்தப்பாவிடம் பாட்டு கத்துக்கறேன் பேர்வழி என வீட்டுக்குள் புகுந்து அலப்பரை பண்றார். இன்னொருவர்  ஹீரோயினின் அப்பாவிடம் டான்ஸ் கத்துக்கறேன்னு ரீல் விட்டு உள்ளே புகுந்துடறார். இவங்க பண்ற காமெடி அலப்பறைகள் தான் படம் .


இந்தப்படத்தின் பெரிய ஹிட்டுக்கு முதல் க்ரெடிட் பவர் ஸ்டாருக்குத்தான். தியேட்டரில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் ஒரே ஆரவாரம், கைதட்டல் . இத்தனைக்கும் அவர் பெருசா எந்த எக்ஸ்பிரசனும் காட்டலை , பிரமாதமான நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது . ஆனாலும் அவரை ரசிக்கிறார்கள் . பல காட்சிகளில் சந்தானத்தையே ஓவர் டேக்குகிறார். 


http://www.cinespot.net/gallery/d/978058-1/Kanna+Laddu+Thinna+Aasaiya+Movie+Photos+_9_.jpg



அடுத்து சந்தானம் . சொல்லவே வேணாம் , சொந்தப்படம் வேற . இவரை 2 விஷயங்களுக்காகப்பாராட்டலாம் . தன்  படம் என்பதால் ஜோடி தனக்கு செட் ஆகற மாதிரியோ , தனக்கு தனி டூயட்டோ வைக்கலை . சராசரி ஆள்ங்க அப்படித்தான் செய்வாங்க . இவர் கேரக்டர் அனலைஸ் பண்ணி சொந்த டயலாக்கை அளி விடுவது , டக் டக்னு கவுண்ட்டர் கமெண்ட் அடிப்பது அழகு. ஒரு கல் ஒரு கண்னாடியில் மொத்தம் 104 ஜோக்ஸ் இருந்தன. இதில்  112 ஜோக்ஸ் . அதில் சந்தானம் மட்டும் 86 ஜோக்ஸ் சொல்றார். வெல்டன் 


ஹீரோவாக  புதுமுகம் சேது . இவர் பெருசா எடுபடலை . கே பாக்யராஜ் மாதிரி அப்பாவி முகம் செட் ஆகலை . இன்னொன்னு காமிரா எப்பவும் சந்தானத்தையும் , பவரையும் கவர் பண்ணி இருப்பதால் இவர் அவுட் ஆஃப்  ஃபோகஸ் ஆகிறார். ஹீரோயின் யாருக்கு ஜோடி சேர்ந்தா என்ன ?  ஜாலியா சிரிச்சமா? வந்தமா?ன்னு இருக்கனும்னு ஒரு மெண்ட்டாலிட்டிக்கு ஆடியன்சை கொண்டு வந்தது இயக்குநர் சாமார்த்தியம் . 


ஹீரோயின்  புடிச்சிருக்கு பட ஹீரோயின்   விஷாகா . த்ரிஷா விளம்பரத்தில் டல் திவ்யா தூள் திவ்யாவாக ஆவாரே அந்த ஃபிகர் தான் என நினைக்கிறேன். உதடு ரொம்ப சின்னது , கண்ணும் . தனித்தனியா பார்த்தா அழகாக இருப்பவை மொத்தமா முகமா பார்க்கும்போது ஏதோ ஒரு வசீகரம் மிஸ்ஸிங்க் . டிரஸ்சிங்க் சென்ஸ் நல்லாருக்கு .  யு நெக் ஜாக்கெட்டுக்கும், வி நெக் ஜாக்கெட்டுக்கும்  இடையில் இஸ்பேட் ஃபிராண்ட் நெக் ஜாக்கெட் போட்டு கலக்குகிறார். தமிழ் சினிமா ஹீரோயின்கள் பேக் நெக் இஸ்பேட் மாடல் ஜாக்கெட் போட்டிருக்காங்க, ஆனா முன்னால் இப்படி அணிவது இதுவே முதல் முறை . ஸ்லீவ் மட்டும் ட்ரான்ஸ்பேரண்ட்  மாடல் வேற . இவர் வரும் எல்லா காட்சிகளிலும் காதுக்கு போடும் ஸ்டெட் ஒவ்வொரு முறையும் புதுப்புது மாடலில் போட்டு நதியாவுக்கு சவால் விடுகிறார். ( உயிரே உனக்காக படத்தில் நதியா போட்டு வந்த ஸ்டெட் மாடல்கள் மட்டும் 87 ) 


இவர் இடை அழகியாக வர நல்ல வாய்ப்பு இருக்கு. ஆனா தொப்பையை குறைக்கனும். நடிப்பு ஓரளவு வருது . முயற்சித்தால்  முன்னணி ஹீரோயின் ஆகலாம் . 



http://gallery.oneindia.in/ph-big/2012/12/kanna-laddu-thinna-aasaiya_135521984215.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 




1. டைட்டில் போடும்போதே கே பாக்யராஜ்க்கு க்ரெடிட் கொடுத்தது  நல்ல விஷயம் . 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவர் கோர்ட்டுக்குப்போனபோது நைச்சியமாகப்பேசி 60 லட்சம் ரூபாய் கொடுத்து காம்ப்ரமைஸ் பண்ணீயதும் குட்.. 



2. அதான் ரீமேக் படமாச்சே என காட்சிக்கு காட்சி ஜெராக்ஸ் எடுக்காமல் கொஞ்சம் மெனக்கெட்டு சில கேரக்டர்களை மாற்றியது 



3.பவர் ஸ்டாரின் ரியல் லைஃபில் அவர் பண்ணும் அலப்பறைகள் , காசு கொடுத்து ஆள் கூட்டி வருதல் , பணம் செலவு பண்ணும் ஜாலித்தனம் எல்லாவற்றையும் சாமார்த்தியமாக படத்தில் சேர்த்து அதுக்கும் மக்களை கை தட்ட வைத்தது . 



4. ஒரிஜினல் படமான இன்றுபோய் நாளை வா படத்தில் ஹீரோயின் ராதிகா அதில் குணச்சித்திரமாக வந்து போவார் , இதில் கிளாமராய் , இன்னும் அழகாய் காட்டி இருப்பது பாராட்டக்கூடியது 


5. ஆசையே அலை போல ரீமிக்ஸ் பாட்டு , அடியே  என் அன்னக்கிளியே பாட்டு இரண்டும் ரசிக்க வைக்கும் மெட்டு  ( இசை - தமன் ) . பின்னணி இசையும் நல்லாருக்கு 


6. இந்தப்படத்தில் நடிக்க பவர் ஸ்டாரிடமே 10 லட்சம் ரூபாய் , புது முக ஹீரோ  சேதுவிடம் 3 லட்சம் கறந்ததாக ஒரு தகவல் . அது உண்மையாக இருந்தால்
 இது செம லாபம். படமும் ஹிட் . வசூலும் அள்ளிடும் . எல்லாம் லாபம்/. 



http://newtamillyrics.com/wp-content/uploads/2012/12/kanna_laddu_thinna_aasaiya_tamil_movie_song-lyrics-padal-varigal.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. அரங்கத்தில்  ஒரு இடத்தில் சந்தானம் பாட்டு பாடுகிறார்.  அப்போ ஆடியன்ஸ் எல்லாரும் 100% தங்கள் 2 கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கை தட்றாங்க . நிறைய படத்தில் இதே மாதிரி காட்சி வந்துட்டே இருக்கு. எப்போதும், எங்கேயும் தலைக்கு மேலே உயர்த்தி எல்லாம் கை தட்ட மாட்டாங்க.  உங்க கேமரா ஆங்கிள்க்கு வசதியா இருக்கட்டும், பிரம்மாண்டமா இருக்கனும்கறதுக்காக  இஷ்டப்படி எடுக்கறது தப்பு 




2. ஹீரோயின் யாரை லவ் பண்ணப்போறார் என்ற எதிர்பார்ப்பே வரவில்லை 



3. ஹீரோவிடம் ஹீரோயின் லவ் வருவதற்கான சிச்சுவேஷன் ஓக்கே , ஆனா அந்த சீனில் ஹீரோயின் முகத்தில் காதலையே காணோம் . ஹீரோ டக்னு பிடிச்சு முத்தம் தர்றாரே தவிர ,முகத்தில் ஒரு அபார சந்தோஷம் , காதல் பொங்கி வழிய வேணாமா? 



4. ஓப்பனிங்க் ஷாங்க்  கண்ணா லட்டு தின்ன ஆசையா ஒரு கொண்டாட்டப்பாடல், செம ஸ்பீடா பட்டையைக்கிளப்பி இருக்க வேணாமா?  ரொம்ப மெதுவான இசை . சொய்ங்க் சொய்ங்க் ( கும்கி) மாதிரியோ ,ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி பாட்டு ( மைனா) மாதிரியோ கொண்டாந்திருக்கலாம். மிஸ்டு 



5. இப்போ நான் சொல்லப்போவது சிலருக்கு சாதாரணமா இருக்கலாம். ஆனா ரொம்ப சென்சிட்டிவ் மேட்டர். சந்தானம்  என்னதான் காமெடி கிங்க்கா இருந்தாலும் , கவுண்டமணி மாதிரி தானே பண்றார் என்றாலும் அவர் தன்னை விட  சீனியர்களை , குறிப்பா பவர் ஸ்டாரை ரொம்ப நக்கல் அடிப்பது தப்பு . காமெடி என்றாலும்  அதுக்கும் ஒரு வரை முறை இருக்கு 


6. படத்தில் மொத்தம் 2 மணி நேரம் 20 நிடங்கள் காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. ஆனா கே பாக்யராஜ் படங்கள்ல பல காட்சிகள் நெஞ்சில் நிலைத்து நின்றது . லவ் செண்ட்டிமெண்ட் காட்சிகள் 2 வெச்சிருக்கலாம் 





7. சந்தானம் சாதகம் பழகும் காட்சிகளில் உன்னால் முடியும் தம்பி  கமலையும் , காதலை சொல்லும் இடத்தில் சத்யா கமல் என பல இடங்களில் கமலை கிண்டல் செய்வது செம ஜாலியாய் இருந்தாலும் அதை தவிர்த்திருக்கலாம். மற்றவர் சாயல் இல்லாமல் பல இடங்களில் சந்தானம் நல்லாத்தானே பண்றார்? அப்புறமும் எதுக்கு இன்னும் லொள்ளு சபா நக்கல் ?



 Vishakha Singh in Vikram Bhatt`s next film





எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 42


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  ஓக்கே 


 ரேட்டிங்க்  6.5 / 10



 சி.பி கமெண்ட் - காமெடிப்பிரியர்கள் , பெண்கள் , ஆண்கள் எல்லாரும் குடும்பத்தோடு பார்க்கலாம். இன்று  போய் நாளை வா படத்தை அடிக்கடி டி வி யில் பார்த்தவர்கள் , பவர் ஸ்டாரை அதிக அறிமுகம் இல்லாதவர்கள் பெரிதாக ரசிக்க முடியாது .



உள்ளத்தை அள்ளித்தா விற்குப்பின் ஒரு முழுநீளகாமெடிப்படம் 100 நாள் படம் ஆகுது. தியேட்டர் ஓனர்ஸ் ரிப்போர்ட் # பவர் ஸ்டார் , சந்தானம் ராக்ஸ்

 ஈரோடு ராயலில் படம் பார்த்தேன் 


சி பி எஸ் சின் வீடியோ விமர்சனம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா? - 






டிஸ்கி - காமெடி டயலாக்ஸ் மொத்தம் 114 இருக்கு. டைப் பண்ணவே ஒண்ணே முக்கால் மணி நேரம் ஆகும், எனவே அது தனி போஸ்டா பின்னர் வரும் 


 சமர் - த்ரில்லர் வித் லவ் - சினிமா விமர்சனம் -


அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம் - http://www.adrasaka.com/2013/01/blog-post_3065.html




tollywood-actress-visakha-singh-hot-stills-and-photos_123actressphotosgallery.com_11.jpg (328×400)

Sunday, January 13, 2013

சமர் - சினிமா விமர்சனம்

tamil-cinema-samar-movie-first-look04.jpg (575×861)

சிம்பு மாதிரி ரொமாண்டிக்கா இருக்க ஹீரோவுக்கு தெரில .லவ்வுன்னா பொய் சொல்லனும், உருகனும், அட்லீஸ்ட் உருகற மாதிரி நடிக்கனும். நம்ம ஹீரோவுக்குஅதெல்லாம் வர்லை. டக்னு ஹீரோயின் ஹீரோவை  கழட்டி விட்டுட்டு பாங்காங்க் போயிடறா. 3 மாசம் கழிச்சு அவ கிட்டே இருந்து லெட்டர். உன்னை என்னால மறக்க முடியல . வா அப்டினு சொல்லி . கூடவே  பாங்காங்க்க்கு டிக்கெட் இன் கூரியர் கவர் . 


 ஹீரோ பாங்காங்க் கிளம்பறார். அங்கே போனா ஏகப்பட்ட ட்விஸ்ட். ஹீரோயின் அவரை வரவே சொல்லலை . வேற யாரோ கேம் பிளான் பண்ணி இருக்காங்க . இன்னொரு ஹீரோயின் அறிமுகம் . முத லவ்வுதான் புட்டுக்கிச்சு, சரி 2 வது லவ்வையாவது மெயிண்ட்டெயின் பண்ணலாமா?னு ஹீரோ யோசிகும்போது   ஹீரோவோட 2 வது லவ்வரோட  முதல் லவ்வர் எண்ட்டர் ஆகறார். என்ன தலை சுத்துதா? நயன் தாரா கதை மாதிரி இருக்கா? 


 எல்லாத்துக்கும் பின்னால  2 வில்லன்களோட பிளான் இருக்கு. ஆல் டிராமா..  ஏன் அப்டி பண்ணாங்க ? ஹீரோ ஓவர் ஹீரோயிசம் எல்லாம் காட்டாம அண்டர்ப்ளே சாக்சம் செய்வது எப்படி? என்பதை திரையில் காண்க .


 படத்துல முதல் ஹீரோ திரைக்கதை தான். டபுள் ஹீரோ ஆள் மாறாட்டக்கதையோ?  தாதா கதையோ என்றெல்லாம் யோசிக்க வைத்து  கடைசியில் செல்வராகவன் பாணியில் சைக்கோ வில்லன்கள் கேம் என திரைக்கதை அமைத்தது புத்திசாலித்தனம்.


s1.jpg (800×600)


 ஹீரோ முன்னாள் புரட்சித்தளபதி விஷால் . ஆள் ரொம்ப டல் ஆகிட்டார். அவர் முகத்துல பழைய உற்சாகம் மிஸ்சிங்க் . டோண்ட் ஒர்ரி பாஸ். நல்ல கதையா செலக்ட் பண்ணா வின் பண்ணலாம்.. சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார். ரொமான்ஸ் காட்சிகளில்  ஜோடி தன் தோழி த்ரிஷா தான் என்றாலும் அவரிடம் உற்சாகம் இல்லாதது ஏனோ? ஷூட்டிங்க்  ஸ்பாட்ல ராணா இருந்திருப்பாரோ? 


 ஹீரோயின்  த்ரிஷா . மாடர்ன் ட்ரஸ்சிலும் சரி , சேலையிலும் சரி அழகான தோற்றம் தருபவர் .10 வருடங்கள் ஆகியும் இன்னும் இளமையாக இருக்கிறார்,. பாராட்டுக்கள் . சிவப்புக்கலர் புடவை அணிந்து ஒரு பாடல் காட்சியில் ரொமாண்டிக் பிரமாதமா பண்ணும்போதும் சரி, சிந்தாமணிக்கலர் பனியன் போட்டிருக்கும்போது ட்ரான்ஸ்பேரண்ட் சீன் காட்டும்போதும் சரி சபாஷ் போட வைக்கிறார்.  ஒரு சீனில் வில்லன்கள் முன் பேய் லுக் விடும்போது செம . வெல்டன் 3 ஷா.. 


 ஓபனிங்க் காதலியாக சில காட்சிகள் மட்டுமே வரும் அவசரக்குடுக்கை  அல்டாப் ராணியாக  சுனைனா.  இவர் தோன்றும்  7 காட்சிகளில் 6 காட்சிகள் செம லோ கட் . கண்டு களியுங்கள் மக்களே என்று சொல்லாமல் சொல்றார். நடிப்பு காட்ட டைம் இல்லை.. நாங்க யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லை.. 



சைக்கோ வில்லன்களாக தெலுங்கு சத்யா ஹீரோ சக்ரவர்த்தி + இன்னொரு ஆள் . கேனத்தனமான நடிப்பு . சைக்கோ கேரக்டர்ல நடிக்கும்போது இப்படி லூஸ் தனமா விளையாட்டு காட்டிட்டு இருக்கக்கூடாது . செல்வராகவன் , கவுதம் மேனன் ரூமில் ஒரு நாளாவது தங்கி வந்தால் ஆட்டோமேட்டிக்காக ரியல் சைக்கோவாக வே மாறி  விடலாம். ஜஸ்ட் மிஸ். 


 காமெடி டிராக் என்ற பெயரில் அடிஷனல் அட்டாச்மெண்ட் எல்லாம் இல்லாதது ரொம்ப நிம்மதி 



Samar-Movie-Stills-42-255x300.jpg (255×300)


 இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 




1. ஹீரோ ஓப்பனிங்க் சீனில் காட்டுக்குள் கிடைச்ச மலர்கள், புல் எல்லாம் வெச்சு ஆன் த ஸ்பாட் ஒரு பூங்கொத்து ரெடி பண்ணும் லாவகம் கவிதை யான காட்சி 




2. ஏர்போர்ட்டில் த்ரிஷா காட்டும் பதவிசு , அவர் டிரஸ்சிங்க் சென்ஸ் பிரமாதம் . வெளிநாட்டுக்காட்சிகள் , ஏர்போர்ட் காட்சிகள் எடுத்த விதம் கனகச்சிதம் 



3.  படத்துக்கு பெரும் பலம் சேர்ப்பது எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்கள்.  த்ரில்லர் மூவி என்பதால்வசனத்திற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு , கிடைச்ச கேப்ல கிடா வெட்டி இருக்கார் , வெல்டன் 



4. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அழகு . 3 பாடல்கள் நல்லாருக்கு .  த்ரிஷாவின் அழகு மிக நளினமாக வெளிப்பட்ட மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று


samar_tamil_movie_stills_1007120942_022.jpg (1024×681)


இயக்குநரிடம் சில கேள்விகள்





1. ஹீரோ எப்பவும் டியூட்டி நினைவா இருக்கார். ஹீரோயினை கண்டுக்கலை. ஜஸ்ட் அப்போதான் எதிரே வந்து நிற்கும் ஹீரொயின் போட்டிருக்கும் டிரஸ் என்னன்னு கூடவா நினைவு இருக்காது?  அவ்ளவ் தத்தியா? அப்படி டியூப்லைட்டா இருப்பவர் கடைசில எப்படி  புத்திசாலித்தனமா ஆகறாரு?




2.  ஓப்பனிங்க் ஃபைட் சீனைப்பார்த்தா ஹீரோ காட்டிலாகா அதிகாரி மாதிரியும் படமே சந்தன மர தேக்கு மர கடத்தல் மாதிரி பில்டப் எதுக்கு?



3.  ஹீரோ விஷால் ஒரு சீன்ல தூங்கி எந்திரிச்சு அப்பதான் பெட்ல இருந்து எந்திரிக்கிறார் , ஆனா பேண்ட் சர்ட்  போட்டு இன் பண்ணி கைல வாட்ச் கூட கட்டி இருக்கார்..  அப்படி யாராவது தூங்குவாங்களா?



4.  லவ்வர் சுனைனா கேரக்டர் சரியா சொல்லப்படலை . ஓப்பனிங்க் ஃபைட் சீனை கட் பண்ணிட்டு இருவருக்குமான காதல் காட்சி வெச்சிருக்கலாம்.  காதலன் தன்னை சரியா வாட்ச் பண்ணலை , ரொமாண்டிக்கா இருக்கத்தெரியலை என்பதற்காக எல்லாம் ஒரு பொண்ணு காதலனை கழட்டி விடுவாளா?



5.   சுனைனா பாங்காங்க்ல இருந்து கூரியர்ல ஒரு கவர் அனுப்பி இருக்கார். அதுல அட்ரஸ், ஃபோன் நெம்பர் எதுவும் இல்லை. விளக்கம் கேட்டு பதில் அனுப்பி அப்புறமா கிளம்புவாங்களா? சிக்னல் கிடைச்ச்சா போதும்னு உடனே முன்னே பின்னே தெரியாத ஊருக்கு போவாங்களா?




6. பாங்காங்க் ஹோட்டல் நிஜமா அங்கே எடுத்ததா? இங்கே  செட்டிங்க் போட்டு எடுத்ததா? ஃபாரீன் அழகி கம் ரிசப்ஷனிஸ்ட் இண்டியன் மேடு ரோட்டமேக் லெட் பேனா யூஸ் பண்ணுது



7. சுனைனா டுபாக்கூர்னு தெரிஞ்ச பின் ஹீரோ அந்த கவர் வெச்சு கூரியர் ஆஃபீஸ்ல போய் விசாரிக்கவே இல்லையே?


8. ஒரு சீன்ல ஹீரோ கார்ல இன்னொருவர் கூட உக்காந்திருக்கார். பின் கண்ணாடி வழியா த்ரிஷா கார்ல கடத்தப்படறார். டக்னு காரை திருப்பி சேஸ் பண்ணாம காரை  விட்டு இறங்கி  காரைத்துரத்திட்டு ஓடறாரே?  அவர் என்ன ஸ்பைடர்மேனா?


9.  தரண் பில்லா தீம் மியூசிக்கை எதுக்கு பல இடங்கள்ல யூஸ் பண்ணி இருக்கார்?


10. க்ளைமாக்ஸ் கொஞ்சம் இழுவை . ஷார்ட் & ஸ்வீட்டா முடிச்சிருக்கலாம்.

Trisha-hot-sey-photo.jpg (880×1248)

11. சைக்கோக்களா வரும் 2 வில்லன்களும் கேனம் மாதிரி சிரிச்சுட்டு வர்றாங்க , கதையோட சீரியஸ்னெஸ் தெரியாம.. அவங்களுக்கு சம்பளம் சரியாத்தர்லையா?



12. படத்தோட மார்க்கெட்டிங்க் மகா மோசம் .  புரமோ சரி இல்லை



13. படத்துக்கு சமர் என டைட்டில் வெச்சது ராங்க்.  இந்தப்படத்துக்கு என்  செலக்சன் - சுழல்  , இறுதி வரை உன்னோடு  இப்படி டைட்டில் ஓக்கே


14. ஒரு மசாலாப்படத்துல ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் எப்படி காதல் மலருதுன்னு காமிக்கத்தேவை இல்லை. ஆனா லவ் சப்ஜெக்ட்ல அது முக்கியத்தேவை, ஏன்னா காதல் மலரும்  தருணம் அற்புதமானது . அதை காட்சிப்படுத்துவது அவசியமானது , இந்தப்படத்துல சுனைனா , த்ரிஷா 2 பேருமே ஹீரோவிடம் ஏன் காதல் வசப்பட்டார்னு காட்சிப்படுத்தவே இல்லை


15. சில சீன்களில் பில்லா பாதிப்பு , கிடத்தட்ட திரையில் ஹீரோவைத்தவிர எல்லாரும் கூலிங்க் கிளாஸ்ல .. முடியல


16 . ஹீரோ 3ஷா காதலை ஏத்துக்கவே இல்லை . மனசுல காதல் இருப்பதாவும் நமக்கு காட்டலை, ஆனா  அவரோட முதல் லவ்வர் வந்ததும் கத்தியை எடுத்து குத்தப்போவது ஓவர். அந்தளவு தீவிரம் ஒரு காதலனுக்குத்தான் வரும். அதனால சிம்ப்பிளா ஹீரோவுக்கு த்ரிஷா மேல லவ் வந்தாச்சுன்னு ஒரு சீன் காட்டி இருக்கனும் .


17. த்ரிஷா லவ் டிராமா திருட்டுபயலே சோனியா அகர்வால் போர்ஷன் உல்டா



18. பொதுவா யார் செத்தாலும் டெட் பாடியை நேர்ல பார்க்கனும். சும்மா வீடியோ காட்சியை மட்டும்  பார்த்து செத்ததா வில்லன்க எப்படி நம்பறாங்க?



19. இந்தக்கதைக்கு ஃபாரீன் லொக்கேஷன் எதுக்கு ? ஜஸ்ட் வில்லன்க  மும்பை மாதிரி ஒரு ஏரியான்னு காடி இருக்கலாம்.. புரொடியூசர் செலவுல பாங்காங்க் போயிட்டு வந்துட்டீங்க..



Samar-Tamil-Movie-Stills-07102012362636f.jpg (940×625)





மனம் கவர்ந்த வசனங்கள் 




1. நீ எல்லாத்துக்கும் கணக்கு வெச்சிருக்கே.நான் காதலை கணக்கே இல்லாம வெச்சிருக்கேன்



2. பொண்ணுங்க அளவுக்கு பசங்களால எல்லாத்தையும் நினைவு வெச்சுக்க முடியாது.அதுக்காக அவங்க மனசுல உண்மையான காதல் இல்லைனு சொல்லிட முடியாது 

3.  எனக்கு இது ஃபர்ஸ்ட் டைம்


 எது? பொண்ணுங்களை ஃபாலோ பண்றதா? 


 நோ, ஃபிளைட்ல போறது 



4.  காபில  உப்பு போடுங்க 


 வாட்?


 காபி ஷாப்க்கு டெயிலி  300 பேர் 400 பேர் வருவாங்க.. பேரர் எல்லாரையும் நினைவில் வெச்சிருக்க முடியுமா?  இப்போ பருங்க, என் பேரை , நினைவு வெச்சிருப்பார்.. 




5. நீ ட்ரிங்க் பண்ண மாட்டியா? 


 ம், பட் லேடீஸ் இத்தனை பேர் இருக்காங்க.. அதான் தயக்கமா இருக்கு 




6. காட்டையே சுத்திட்டு இரு , காத்லியை கண்டுக்காத 



7.  லவ் ஈஸ் பிலைண் ட்னு சொல்வாங்க.. எனக்கு கலர் பிலைண்ட் போல. நீ என்ன கலர் டிரஸ் போட்டிருக்கேனு  தெரியாம போச்சு 




trisha-new-hot-wallpaper03.jpg (1024×685)



8. கிதார் ப்ளே பண்ற  பசங்களை பொண்ணுங்களுக்கு ரொம்ப  பிடிக்கும் , ஒரு ஃபீல் வரும் 



9. சண்டையே போடாத பொண்ணு , சரக்கே அடிக்காத பையன் கிடைப்பது ரொம்ப சிரமம்



10. பொண்ணுங்களுக்குன்னு தனி டாஸ்மாக் , தனி பார் ( BAR)  வரும் நாள் வெகு தொலைவில் இல்லை 




11. காதலி கிட்டே ஆல்ரெடி இருக்கறதை கொடுக்கறமா? இல்லாததைக்கொடுக்கறமா? இது முக்கியம் இல்லை, ஏதாவது பரிசு கொடுக்கனும், அதான் காதல் 



12.  ஒரு பெக் அடிச்சா காதலி மேல லவ் வரும் ,  2 பெக் அடிச்சா காதலி  மேல சந்தேகம்  வரும் ,3 பெக் அடிச்சா வேற ஒரு பொண்ணு  மேல லவ் வரும் ,   4 பெக் அடிச்சா தூக்கம் வரும்


 எத்தனை பெக் அடிச்சாலும் எனக்கு காதலி மேல நம்பிக்கை வரும் , காதல் மேலயும் 




13.  அவ வரவே மாட்டா-னு முடிவு பண்ணீட்டீங்களா? 


 இல்லை, ஊருக்கு போகலாம்னு  முடிவு பண்ணிட்டேன் 




14. தமிழ் சினிமாவுல எனக்கு பிடிச்ச டயலாக் - குத்துங்க எஜமான் குத்துங்க , இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்  ( சிவப்பு ரோஜாக்கள் - கே பாக்யராஜ் வசனம், டயலாக் டெலிவரி பை கவுண்டமணி ) 



15.  இன்னும் ஒரு நாள் இங்கே நான் இருந்தா என்னையே  நான் சந்தேகப்பட வேண்டி வரும் 



16.  ஒரே மாதிரி 2 பேர் ஓக்கே , ஒரே மாதிரி சிக்னேச்சர் சாத்தியமே இல்லையே? எங்கேயோ தப்பு நடக்குது 




Sunaina%2520hot%2520in%2520green%2520bra%252C%2520Sunaina%2520without%2520saree%252C%2520Sunaina%2520in%2520bra.jpg (405×512)




17.  லவ்ல தோத்துப்பாரு , நீயும் குடிப்பே 




18.  கேம்ல பூ விழுமா? தலை விழுமா? னு கேட்டுட்டு இருக்கக்கூடாது , விழ வைக்கனும் 




19. நான் அவன் கிட்டே “ உன்னை மட்டும் தான் லவ் பண்றேன்”ன்னு சொல்லி இருக்கேன்


 விடு, எல்லாப்பொண்ணுங்களும்  அவங்கவங்க லவ்வர் கிட்டே அப்படித்தான் சொல்றாங்க 




20. நீ இன்னும் மத்தவங்களை அட்ராக்ட் பண்றதுக்காக காபில உப்பு போட்டு குடிச்சுட்டு இருக்கியா? 





21.  இப்படிப்பேசிபேசியேதான்  எல்லாப்பொண்ணுங்களும் பசங்களை சாகடிக்கறீங்க? 



22.  முதல் காதலை விட 2 வது காதல் ஈசியா வரும் 




23. இந்த உலகத்துல எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கு 




24. ஹீரோ பேசும் ஒரே பஞ்ச் டயலாக் - பயமுறுத்துனிங்க, பயந்தேன் ,  துரத்துனீங்க.. ஓடுனேன் , சுத்த விட்டீங்க.. சுத்தலை நின்னேன். நின்னு ஜெயிச்சேன்  ( அண்ணன் யாருக்கோ என்னமோ சொல்ல வர்றாரு ) 


actress-sunaina-hot-beach-photos-5.jpg (1024×683)




எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 43


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  ஓக்கே 


 ரேட்டிங்க்  7 / 10



 சி.பி கமெண்ட் -த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் . பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு .  கொஞ்சம் பொறுமையா பார்க்கனும் . இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இல்லைன்னு மைண்ட்ல செட் பண்ணிட்டு படம் பார்க்கனும் . ஈரோடு சண்டிகாவுல படம் பார்த்தேன்



டிஸ்கி - பலரும் ஃபோன் பண்ணிட்டு இருக்காங்க. இதுலயே பதில் சொல்லிடறேன். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா , பின்னணி இசை  தருண்




சமர் - த்ரில்லர் மூவி ரிவ்யூ - வீடியோ -பை - சி பி எஸ் 






Trisha-Hot-Cleavage-Show-Pictures-Stills-Spicy-Pics-Navel-Show-4.jpg (741×563)