Showing posts with label ஹாலிவுட் சினிமா. Show all posts
Showing posts with label ஹாலிவுட் சினிமா. Show all posts

Wednesday, March 14, 2012

THE WOMAN IN BLACK -ஹாலிவுட் திகில் சினிமா விமர்சனம்


http://www.covershut.com/covers/The-Woman-In-Black-2012-Front-Cover-64080.jpg
திகில் படம், பேய்ப்படம்னா பேன்னு கத்தறது, ரத்தம் குடம் குடமா கொட்டறதை காட்றது,கோரைப்பல்லோட பேய் உருவங்களை காட்டறதுன்னு நிறைய பேர் தப்பான டெஃபனிஷன் வெச்சிருக்காங்க.. அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கி ரொம்ப டீசண்ட்டா ,கண்ணியமா ( 2ம் 1 தான்) ஒரு திகில் படம் கொடுத்திருக்காரு டைரக்டர்.. அவருக்கு முதல்ல வாழ்த்துகள்.. 

இந்தப்படம் ஃபாரீன்ல மெகா ஹிட்டாம்.. நம்ம ஊர்ல எந்திரன் ஏற்படுத்திய பரபரப்பை இது அங்கே ஏற்படுத்தி இருக்கு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல 3 சின்னப்பொண்ணுங்க அமைதியா வந்து முகத்துல எந்த வித உணர்ச்சியையும் காட்டாம பல அடுக்கு மாடி ஜன்னல் வழியா எட்டி குதிச்சு தற்கொலை செஞ்சுக்குதுங்க..

http://www.filmcritic.com/assets_c/2012/02/womaninblack-cropped-proto-filmcritic_reviews___entry_default-thumb-560xauto-42444.jpg

அந்த கிராமத்துல ஏதோ சாபம்.. குழந்தைங்கள் வரிசையா சாகறாங்க..ஹீரோ ஒரு வக்கீல்.. அந்த குழந்தை இறந்த எஸ்டேட் செட்டில்மெண்ட் சம்பந்தமா ஹீரோ அங்கே போறார் . ஹீரோவுக்கு, ஒரு குழந்தை..சம்சாரம் ஆல்ரெடி டெட்.. ஒரு கார்டியன் லேடி( அதாவது நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா வேலைக்காரி கம் பணியாள்) அவங்களை ஊர்ல விட்டுட்டு 2 நாள்ல வந்துடறேன்னு சொல்லிட்டு லண்டன்ல இருக்கற அந்த அமானுஷ்ய கிராமத்துக்கு ஹீரோ போறார்..



அவருக்கு அங்கே பல திடுக்கிடும் அனுபவங்கள் கிடைக்குது. பல விசாரணைக்குப்பிறகு குழந்தையை இழந்த ஒரு பெண்ணின் சாபம்  அல்லது பழி வாங்கல் தான் இதெல்லாம் அப்டிங்கறதை கண்டு பிடிக்கறாரு.. அந்த பெண் பேய் தான் விமன் இன் பிளாக்  ( அந்த ஃபிகரு பிளாக் கலர்லயும் இல்லை , சொந்தமா ஒரு பிளாக் ஸ்பாட்டும் வெச்சிருக்கலை, யாரையும் பிளாக் பண்ணிடுவேன்னு மிரட்டலை,ஆனாலும் சும்மா ஒரு எஃபக்ட் தர அப்படி டைட்டில்)

2 நாள் முடியுது.. இருந்தாலும் ஹீரோ கிளம்பலை.. பொதுவா இந்த சம்சாரங்க வேலை என்னான்னா புருஷன் எங்கே இருக்கானோ அங்கே போய் அவன் உயிரை எடுக்கறதுதான்.. அவனை நிம்மதியா தனியா இருக்க விட மாட்டாங்க.. ஆக்சுவலா அவங்க வந்த பிறகு தான் அவன் நிம்மதியே போகும்..இந்த சம்பிரதாயம் ஆல் ஓவர் வோர்ல்ட்லயும் இருக்கு.. சம்சாரம் மாதிரியே அந்த கார்டியன்  ஹீரோவை தேடிட்டு குழந்தையை கூட்டிக்கிட்டு அந்த கிராமத்துக்கு வந்ததும் ஹீரோ பதட்டம் ஆகிடறான்.. ஏன்னா அங்கே இருக்கற பேயோட வேலையே குழந்தைகளை தற்கொலை செய்ய வைக்கறதுதான்

 ஏன்னா ஹீரோவோட குழந்தையோட உயிருக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதே?அவசர அவசரமா அவன் இடத்தை காலி பண்றான்.. ரயில்வே ஸ்டேஷன்ல என்ன நடக்குதுங்கறதை திக் திக் திகிலோட பார்க்கலாம்.. 

ஹாரிபாட்டர் படத்துல சின்னப்பையனா வந்து  பலரது உள்ளங்களை கொள்ளை அடிச்சு, ஃபாரீன் ஃபிகரு ரெண்டை அட்டர் டைம்ல  கரெக்ட் பண்ணின டேனியல் ராட் கிளிஃப் தான் ஹீரோ. அதுல பால் மணம் மாறாத பாலகனா வர்றவர் இதுல அமலா பால்க்கே அண்ணன் மாதிரி கொஞ்சம் ஓல்டு கெட்டப்ல ( 25 வயசு) வர்றார்.. நல்ல நடிப்பு.. அவரை இன்னும் யூத்தாவே காட்டி இருக்கலாம்.. இந்தக்காலத்துல 18 வயசுலயே பிஞ்சுலயே பழுத்துடுதுங்களே.. 

 டைரக்டர் ஹீரோவை அப்படி ஏஜ்டு பையனா காட்ட முக்கிய ரீசன் ஹீரோ 8 வயசுப்பையனின் அப்பான்னு காட்ட வேண்டிய சூழல் தான்.. ஓக்கே

http://horrornews.net/wp-content/uploads/2011/12/the-woman-in-black-movie-2012-3.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  கிராமம் வரும் ஹீரோ அந்த ஹோட்டல்ல தங்கிட்டு நைட்ல கதவு சாவித்துவாரம் வழியா பார்க்க அதே மாதிரி பேயும் பார்ப்பது செம திகில்

2. ஹீரோவுக்கு அந்த கேஸ் பற்றிய துப்பு கிடைப்பது குழந்தையை இழந்த அம்மாவின் லெட்டர் மூலமா.. அந்த லெட்டர்ஸை அப்படியே ஆடியன்ஸ் கிட்டே பகிர்ந்ததன் மூலம் டெரர் டெம்ப்போ ஏத்துனது.. 

சாம்ப்பிள் -a  என்னை மெண்ட்டல்-னு சொல்லி என்னை என் மகள் கிட்டே இருந்து பிரிச்சு வெச்சே.. 

b என்னதான் நீ பிளான் பண்னாலும் என்னை என் மக கிட்டே இருந்து பிரிக்க முடியாது

c. என் மகளை நீ புதைக்கக்கூட இல்லை.. உனக்கு நரகம் தான் கிடைக்கும்.. 

3. பின்னணி இசையில் அடக்கி வாசித்தது.. பெரும்பாலான படத்தை சைலண்ட் மோடில் கொண்டு சென்று தேவையான இடத்தில் மட்டும் அதிரடி இசையை உபயோகித்த லாவகம்..


4. த சிக்ஸ்த் சென்ஸ் படத்தை நினைவு படுத்தினாலும் உறைய வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சி ட்விஸ்ட்

5.  வீட்டில் உள்ள குருவிகுஞ்சை  ஹீரோ எடுத்து அதன் கூட்டில் விடும்போது மடார் என்று  காகம் வந்து ஹீரோ முகத்தில் மோதிச்செல்லும் சீன்   சவுண்ட் எஃபக்ட், ரீ ரெக்கார்டிங்க், எடிட்டிங்க் கட் எல்லாம் செம

6.  ஹீரோ படுத்திருக்கும் கட்டில் மெத்தையில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் பரவி அப்படியே குழந்தையாக எழும்  பேய் செம திக் திக் சீன்

7. ஃபயர் ஆக்சிடெண்ட்டில்  சிக்கி நெருப்புக்கிடையில் மாட்டிக்கொண்ட குழந்தை டக் என்று பெட்ரோல் கேனை உடைத்து தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளும் உறைய வைக்கும் காட்சி

8. குழந்தை நலன் விரும்பி பேயை வர வைக்க ஹீரோ ரூமில் உள்ள எல்லா பொம்மைகளையும்  சாவி கொடுத்து இயக்கி வர வைக்கும் தந்திரம்.. அந்த சீனில் மெல்ல மெல டெம்ப்போ ஏற்றிய விதம் மார்வலஸ்

http://paracinema.net/wp-content/uploads/2012/02/The-Woman-in-Black-front.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் ( அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு இங்கிலீஷ் தெரியாது, ஐ ஜாலி, என்ன வேணாலும் கேட்கலாம்)


1. ஹீரோ எங்கே வேலை செய்யறார் என்பதே அவர் கார்டியன்க்கு தெரியாது, ஹீரோ போகும்போது எந்த ஊர்க்கு போறேன்னு சொல்லாம போறாரு, பின் எப்படி சரியாக அவர் அங்கே வந்தார்?

2. கிராமத்தில் அமானுஷ்ய சக்தி இருக்குன்னு  ஹீரோவுக்கு தெரிஞ்சுடுது.. தான் வீட்டை விட்டு கிளம்பறப்ப  2 நாள்ல வந்துடறதா சொல்லி இருக்கார், அவர் ஏன் கார்டியன்க்கு ஃபோன் பண்ணி என்னை தேட வேண்டாம், வேலை முடிய இன்னும் நாள் இருக்குன்னு சொல்லலை?

3. குழந்தை பாசத்தால் தவிக்கும் பேய் எதுக்காக குழந்தைகளை குறி வெச்சு கொல்லனும்? தன் கணவன் போல அயோக்கிய ஆண்களை கொன்னா  அதுல லாஜிக் இருக்கு.. தான் எப்படி மழலையை இழந்து கஷ்டப்படறோமோ அதே போல் ஊர் மக்கள் அனைவரும் கஷ்டப்படட்டும் என்பது மோசமான லாஜிக்கா இருக்கே?

 படத்தில் மனதைக்கவர்ந்த ஒரே வசனம் 


சமூக சேவை செய்ய இங்கே யாரும் வர்லை.. சம்பாதிக்க வந்திருக்கோம்.. அதை முதல்ல ஞாபகம் வெச்சுக்கிட்டு அப்புறம் வேலை செய்..

http://mimg.sulekha.com/english/the-woman-in-black/stills/the-woman-in-black-movie-013.jpg
வழக்கமான திகில் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம், ஆனால் ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு ,வித்தியாசமான திகில் பட விரும்பிகளுக்கு  மிகவும் பிடித்தமான படமாக இருக்கும்.. ஆண்கள், பெண்கள் அனைவரும் பார்க்கலாம்..

 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் சீன்கள் நிறைய இருப்பதால் மனோ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்

ஈரோடு அண்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்



Friday, March 09, 2012

JOHN CARTER -ஏலியன்ஸ் உடான்ஸ் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.disneydreaming.com/wp-content/uploads/2012/01/John-Carter-International-Movie-Poster.jpg 

இந்தக்கதைல மொத்தம் 3 கிரகம் இருக்கு. உதாரணமா அதிமுக கட்சில சசிகலா, நடராஜன்,இளவரசின்னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி.. தமிழ் நாட்ல கலைஞர், ஜெ, டாக்டர் மான மிகு ராம்தாஸ்-னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி,நயன் தாராவை சுத்தி சிம்பு, பிரபுதேவா,ஜெயம் ரவின்னு 3 கிரகம் இருக்கே அது மாதிரி ( ஜெயம் ரவி லேட்டஸ்ட் கிரகம் ஹி ஹி ).

மார்ஸ்னு ஒரு கிரகம்.. இங்கே தான் ஹீரோயின் கொஞ்சம் முற்றிய முகத்தோட,வற்றாத , 2 கைகளால் அணைத்தால் பற்றாத தேகத்தொட கிட்டத்தட்ட டிம்பிள் கபாடியா இன் விக்ரம் மாதிரியும் தூரத்தட்ட கேத்ரினா கைஃப் மாதிரியும் இருக்காங்க .. பூமியில் இருக்கற ஒரு குதிரைப்படை வீரர் தான் ஹீரோ ஜான் கார்ட்டர்.. வில்லன் வில்லனோட மகன் இருக்கற கிரகம் தான் ஹீலியம் ..

பூமில இருக்கற ஹீரோ ஏதோ ஒரு தங்கப்புதையல் இருக்கற தங்கக்குகையை தேடிப்போறார்.. போற வழில அவருக்கு ஒரு பவர் கிடைக்குது.. அதாவது ஸ்பிரிங்க் மாதிரி ஜம்ப் பண்ற பவர்.. காலை ஒரு உந்து உந்துனாருன்னா ஜொய்ங்க்னு ஆகாசத்துல 2 கி மீ போய்ட்டு வருவார்.. கால் சுளுக்காது.. இதை நம்ப முடியாதவங்க கால் கிலோ மல்லிகைப்பூவை  வாங்கிட்டு தியேட்டருக்கு வரவும் .. அப்பப்ப நம்ம காதுல வெச்சுக்க.. 

மார்ஸ் கிரகத்துல இருக்கற ஜீவராசிகள்க்கு  4 கை, 2 கால்.. மத்ததெல்லாம் எத்தனைன்னு தெரியலை.. என்னமோ ஈரோடு எலிகெண்ட் டெயிலர்ட்ட டிரஸ் தெச்ச மாதிரி அந்த ஏலியன்ஸ்ங்க டிரஸ் போட்டிருக்குங்க.. அவங்க ஹீரோவோட பறக்கும் சக்தியை பார்த்துட்டு வியக்காங்க.. இது எப்படின்னா ஏதோ எதேச்சையா தனுஷ் கொலை வெறி பாட்டை பார்த்து மயங்கி பிரதமரே பார்ட்டிக்கு கூப்பிட்டாரே? கமல் பொண்ணு ஸ்ருதி 3 படத்துல ஷூட்டிங்க் ஸ்பாட்ல தனுஷ் ஐஸ்வர்யா பார்க்க பார்க்க கில்மா பண்ணுச்சே அந்த மாதிரி ஒரு லக்கி பிரைஸ்.. 


http://media1.onsugar.com/files/2012/03/10/2/192/1922283/03ca4b8024337481_FishingThumb.xxxlarge_2/i/John-Carter-Movie-Pictures.jpg

ஹீரோயினை வில்லனோட மகன் கல்யாணம் பண்ண ட்ரை பண்றான்.. ஹீரோ அதை தடுத்து  எம் ஜி ஆர் மாதிரி காப்பாத்தி அவன் பண்ணிடறான்.. அதாவது கல்யாணத்தை.. அவ்ளவ் தான் கதை.. 

 செம காமெடியான மேட்டர் என்னான்னா நம்ம ஊர்ல ஜிகிடிங்க எல்லாம் அரைகுறையா ஜின்ஸ், ஸ்லீவ்லெஸ் அப்படி சென்னை பஜார்ல சுத்தும்ங்க.. மேரேஜ் அன்னைக்கு பார்த்தா முக்காடு போட்ட முனிஸ்புரி மாதிரி, சீதா தேவிக்கு அக்கா மாதிரி பாந்தமா பட்டு சேலை கட்டி அடக்க ஒடுக்கமா இருக்கும்.. ஆனா இந்தப்படத்துல ஹீரோயின் கல்யாண டிரஸ் செம காமெடி..  மேலே ஒரு பிரா , கீழே ஒரு கோவணம் ஹி ஹி அது அவங்க கிரக  வழக்கமாம்.. அடக்கிரகமே..

 டைரக்டருக்கு ஃபோன் போட்டு கேட்டப்ப ( ஏன்? அவர் மட்டும் தான் படத்துல ரீல் விடனுமா? நாம விடக்கூடாதா? ஹி ஹி ) அவர் சொல்றாரு. கோடிக்கணக்குல சம்பளம் தர்றோம்.. முடிஞ்சவரை உரிச்சுக்காட்டிடனும் அப்டிங்கறார்.. நம்ம ஊரா இருந்தா டூயட் சீன்ல சீன் காட்ட வைக்கலாம்.. அவங்க நாட்டுல இந்த மாதிரி பாரம்பரிய உடை அப்டினு ஏதாவது சொல்லி ஏமாத்தனும் போல.. 


http://bestmoviesevernews.com/wp-content/uploads/2012/02/john-carter-movie-image-31-e1329520416937.jpg

ஓக்கே .. இப்போ நடிப்பை பார்க்கலாம்.. ( நல்லா கேட்டுக்குங்க.. நான் நடிப்பை மட்டும் தான் பார்த்தேன்) ஹீரோ ஆள் ஜெகஜோதியா இருக்கார் ( சரவணா ஸ்டோர் அண்னாச்சி கணக்குப்பண்ணி குடித்தனம் வெச்சாரே அந்த ஜீவஜோதி மாதிரி ஹி ஹி )அவர் எக்சைஸ் எல்லாம் நல்லா பண்ணி பாடியை கட்டு மச்தா வெச்சிருக்காரு.. மிச்ச வேலை எல்லாம் கிராஃபிக்ஸ் பார்த்துக்குது. பாதி நேரம் அண்ணன் ஆகாயத்துல பறக்கறாரு.. மீதி நேரம் ஹீரோயின் கையை  அணடர் லைன் கையை மட்டும் தடவிட்டு இருக்காரு .. 

ஹீரோயின் இந்திய ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி முக அமைப்பு.. தமிழர்களுக்கு பிடித்தமாதிரி குஷ்பூ, ஹன்சிகா உடற்கட்டு ( சுந்தர் சி, பிரபு, கார்த்திக் மன்னிக்க , மற்றும் பிரபுதேவா மன்னிக்க ஹி ஹி )

இந்தப்படத்துல ஒரு சீன்ல லிப் டூ லிப் சீன் இருந்ததா பக்கத்து சீட் ஆள் சொன்னாரு.. எனக்கு ஏன் தெரியலைன்னா நான் தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி /. சின்னகுழந்தைங்க பார்க்கக்கூடாத மாதிரி சீன் வந்தா நானே எட்டனாவை கீழே போட்டு பொறுக்கிட்டு இருப்பேன் ( பொறுக்கிப்பய ஹி ஹி )

கேப்டன் எல்லாம் என்னய்யா ஆள்? நரசிம்மாவுல 86 பேரைத்தானே அடிச்சார்? இதுல ஹீரோ 1876 பேரை ஒரே ஒரு வாளை வெச்சு அடிச்சு தள்ளறாரு  



 அடங்கப்பா சாமி .. ஒளிப்பதிவு  ஓக்கே .. லொக்கேஷன்கள் நல்லாருக்கு //ஹீரோயின் கூட நிக்கற 5 ஜிகிடிங்க நல்லாருக்காங்க ஹி ஹி 

http://static.moviefanatic.com/images/gallery/lynn-collins-and-taylor-kitsch-in-john-carter_433x278.jpg

  மனதில் நின்ற வசனங்கள்

1.  சின்ன வயசுல இருந்தே நீ இப்படித்தான்.. நடக்காத விஷயத்தை நடத்திக்காட்டறேன். முடிச்சுக்காட்டறேன்னு சொல்றவ. முற்போக்கு எண்ணம் உள்ளவ,.. 

2. ஹீரோ - நான் தான் உன்னை காப்பாத்த வந்தேன்.. ஆனா நியாயமா பார்த்தா நான் தான் ஒதுங்கி நிக்கனும் போல.. 

 ஹீரோயின் - ஆமா.. ஏதாவது டேஞ்சர்னா என்னை கூப்பிடு.. நான் பார்த்துக்கறேன்.. 

3.  யுத்தம் அவமானச்சின்னம்

 ஆனா நல்ல விஷயத்துக்கு நடந்தா அது மக்களைக்காக்கற கலங்கரை விளக்கம் ( ஆனா இந்தியாவுல மட்டும் 2 நாள் கூட தாங்காதாம் அவ்வ்வ் )


4.  நீ சொல்றதை உண்மைன்னு எப்படி நம்பறது?

 ஏன்? நீ சொல்றதை நான் நம்பலையா? என்னை நம்பித்தான் ஆகனும் ( பாப்பா அவன் ஆம்பளை, நம்பலாம்.. நீ பொம்பளை எப்படி நம்பறது?)

5.  ஏய்.. கை கொடுன்னா வெறும் விரலை மட்டும் தர்றே.. இதை எப்படி குலுக்க?

இதே போதும் ..... 

6.  மூளை இல்லாதவன் போல் நடிக்கறது கஷ்டம் , அது எல்லாருக்கும் வராது.. 

7. எந்த ஒரு ராஜ்யத்தையும் ஆள மக்கள் ஆதரவு ரொம்ப முக்கியம் 

 புரியலை 

 உனக்குப்புரியலைன்னா  அதை புரிஞ்சவனை வாரிசா தேர்ந்தெடுக்க வேண்டி வரும்..   ( மக்கள் ஆதரவு கிடைக்க எளிய வழி.. எதையாவது இலவசமா தர்றதா சொல்லி ஏமாத்தறதுதான் )

http://www.ropeofsilicon.com/Images/stories/2012/mar/collins-interview-john-carter_0352012_020045.jpg


8.  வில்லன் - எனக்கு மனசாட்சி இருக்கு

 ஹீரோயின் - மனசே இல்லாத உனக்கு மனசாட்சி இருக்குறது எப்படி?

9. இந்த கிரஹத்துல ஆண்கள் உப்பை விட சப்பை.. பெண்கள் பாறையை விட கடினமானவங்க  ( அடப்பாவமே அப்போ எதுக்கும் யூஸ் ஆக மாட்டாங்களா?)

10. ஒரு வீரன் ஆயுதத்தை மாத்துவான் , ஆனா மனசை மாத்த மட்டான்

11.  சாகா வரம் பெற்றவர்களால மட்டும் தான் மரண பயம் இல்லாம வாழ முடியும்

12.. நான் இருக்கறவரை இந்த கிரகத்தை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது.. 

 உயிர் போற நேரத்துலயும் ஊக்கம் குடுக்கறியா?

13. சில நேரங்கள்ல நமக்கு விருப்பப்படாததை விரும்பித்தான் ஆகனும்


http://spinoff.comicbookresources.com/wp-content/uploads/2012/03/john-carter-collins4-570x380.jpg

 படம் பார்க்கற யாரும் இந்தக்கதையை நம்பவே முடியலையே அப்படின்னு சொல்லிடக்கூடாதுன்னு ஒரு முக்கியமான டயலாக்கை 7 இடத்துல ரிப்பீட்டறாங்க

 அந்த டயலாக் “ என்னால நம்பவே முடியல “ - இந்த டயலாக்கை ஹீரோ 4 தடவை, ஹீரோயின்  3 தடவை சொல்றாங்க.

 சி.பி கமெண்ட் - ஸ்கூல் பசங்க, பொழுது போகாதவங்க மட்டும் இந்தப்படத்தை பார்க்க்கலாம் மோசம் இல்லை.. கொஞ்சம் டகால்டி .... 

 ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfEa41mGxPvazWehVrqt4CowXkSaeJ53LmVY3N7zDgOEeaNdOuhJbmrd5St7Dy3Xht3momS5CrflyJYrT1fiJaUUsh_CJNFlFiZP3JlXn7l7_hYTvNR_qMVnoCkLgmt9leRWjCtp-I9zE/s1600/2207220-dejahthoris_lynn_collins.jpg

Thursday, March 08, 2012

SINBAD AND THE MINOTAUR - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyUbhd840sGT5VgvuWTTbnzz_-402d0vudeulYzDX2SekEc47QSa6woAXskzGSgJoDyyFHKnHfzkHp13N-Rkl84TLr2yS0PZhiaUx9IH-0hunCQ2IlJWNWjpS4mA_DbdTpXtBrldYkkB1c/s1600/sinbad-and-the-minotaur.jpg 

தினத்தந்தில  நான் குழந்தையா இருந்தப்ப கன்னித்தீவு கதை வந்தது வருது இன்னும் வந்துட்டே இருக்கும் போல.. முடிவே கிடையாதா? அந்த சிந்துபாத் மூசா அப்படிங்கற அரக்கன் கிட்டே இருந்து லைலாங்கற ஃபிகரை காப்பாத்த செய்யும் சாகசப்பயணம் தான் கதை.. ஆனா இந்தப்படக்கதை வேற .. ரசிகர்களை கவர்றதுக்காக டைட்டிலை மம்மி அண்ட் சிந்துபாத்னு வெச்சிருக்காங்க தமிழ் டப்பிங்க் போஸ்டர்ல .. ஆனா கடைசி வரை மம்மியோ, ஜெவோ யாரும் படத்துல வரவே இல்லை.. 

எல்லா அட்வென்ச்சர்ல வர்ற புளிச்சுப்போன அதே கதைதான். ஒரு தீவுல தங்கப்புதையல் இருக்கு.. அதை தேடி ஹீரோ போறான்.. பார்க்கற நமக்கும், போற அவனுக்கும் போர் அடிக்கக்கூடாதுங்கறதுக்காக ஒண்ணுக்கு 2 ஹீரோயின்.. அவன் சந்திக்கற துக்கங்கள் , துயரங்கள் , சாகசங்கள் தான் கதை.. ஹீரோ வழில 2 ஜிகிடிகளை சந்திக்கறான்.. அது கணக்குல வராது .. 

படத்தை பத்தி சொல்றதுக்கு முன்னால ஒரு செம காமெடி சீன்  சொல்றேன்.. ஹீரோ ஒரு மன்னரோட அரண்மனைக்கு திருட்டுத்தனமா போறான்.. புதையல் பத்தின ரகசியங்கள் அடங்கிய மேப்.. அங்கே அப்போதான் முதன் முதலா ஒரு ஜிகிடியை பார்க்கறான்.. அந்த பாப்பாவும் அப்போதான் ஹீரோவை பார்க்குது.. உடனே “நீ  என்னையும் உன் கூட கூட்டிட்டு போயிடு”ங்குது.. அவ்வ்வ்வ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifaEACGFYm4omjFd1RifgOMO1FyrtI6UCtPJns-P1-8u-we4KhLVLRs2QkWvf8uECdvVdn9zq6DFCY3-rTtVadeQnaDZ384u3f_vtjK8BdAQTe_-Qcrk7sXE2-TUoxUt0JX8MUmt06EjiV/s1600/Sinbad+kissy+face+2.jpg

அதுக்கு டைரக்டர் ஒரு லாஜிக் வெச்சிருக்கார்.. அதாவது ராஜா ஒரு கொடுமைக்காரன்.. பாப்பாவை ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கான்.. அதனால எப்படியாவது தப்பிக்க பாப்பா வெயிட் பண்ணி இருக்கு.. கிடைச்ச ஃபிகரை மடக்கி போடு பாலிசி பிரகாரம் ஹீரோவை பார்த்ததும் கிளி தொத்திக்கிச்சுனு சொல்றார்.. ம் ம் 

கதைப்படி 1000 வருஷங்களூக்கு முன்னால மகாராஜா  ஒரு தங்க முத்திரை உள்ள தங்கத்தலையை எங்கேயோ புதைச்சு வெச்சுட்டு அது பற்றின குறிப்பை எழுதி வைக்கறாராம்.. அந்த குறிப்பு 1000 வருஷமா எதுவும் ஆகாம ஃபிரிட்ஜ்ல வெச்ச தக்காளி மாதிரி ஃபிரஸா இருக்காம்.. அட போங்கப்பா.. காது குத்தி இருக்கு எங்களுக்கு..

ஹீரோ ஆள் பார்க்க ஆளவந்தான் மொட்டை கமல் மாதிரி பாடியோடதான் இருக்காரு.. ஆனா அவர் முகம் ராமராஜன் முகம் மாதிரி எந்த விதமான உணர்சியையும் காட்டாம தேமேன்னு இருக்கு.. அட்லீஸ்ட் 2 ஜிகிடிங்க கூட ஏதாவது ரொமான்ஸ் பண்றாரா?ன்னா அதுவும் இல்லை.. சிடு சிடுன்னு முகத்தை வெச்சுட்டு இருக்காரு.. நாங்க எல்லாம் 20 நிமிஷம் டவுன் பஸ்ல போற குட்டி பயணத்துலயே குட்டி கூட  ஏ 4 ஷீட்ல 23 பக்கம் பேசி முடிச்சுட்டு அடிஷனல் சீட்க்காக தேடுவோம்.. இவர் என்னடான்னா யாருமே இல்லாத பாலை வனத்துல அவ்ளவ் சின்சியரா வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்க்கறாரு..  

 http://s3.imgimg.de/uploads/encounterssiundemi1080psample2722de11mkv201105101230342722de11jpg.jpg

 மனதில் நின்ற வசனங்கள்

1.  ஒரு வாரத்துக்குத்தேவையான உணவு கிடைச்சுடுச்சு டோய்.. 

இதுவா? இது ஜஸ்ட்  ஒரு வேளைக்குத்தான் பத்தும்

2.  பொண்ணு பார்க்கறதுக்கு நல்லா தான் இருக்கு.. ஆனா சமையலுக்கு ஒத்து வருமா?ன்னு தெரியலையே? ( மையலுக்காவது ஒத்துவருதா?ன்னு பாருங்க )

3.  இந்த சுந்தரி வந்த பிறகு உன் சுறுசுறுப்பு கூடி இருக்கே எப்படி?

4. ஹீரோ - இந்த தீவுல ஸ்பெஷல் என்ன ?

 ஹீரோயின் ( லைக் கவுதமி,கவுசல்யா டைப்) பார்க்க பெருசா எதுவும் இல்லை 

ஹீரோ - ஹூம்... பார்த்தாலே தெரியுது.. எல்லாம் சிறுசுதான்

5. ஜெயிச்சதுக்காக இந்த வெற்றியை கொண்டாடலை.. உயிரை தியாகம் செஞ்சவங்களுக்காக 

6. புதையல் கிடைச்சதும் ராஜா மாதிரி வாழனும்..

உன்னை யார் ராஜாவா ஏத்துப்பாங்க 

 ஐ மீன் ராஜா மாதிரின்னா ராஜாவா இல்லை.. ராஜா மாதிரி இஷ்டப்படி...

என்னமோ செஞ்சு தொலை

அப்போ ஏதாவது தொலையறப்ப  உங்களை கூப்பிடறேன்

 http://www.contactmusic.com/pics/l/cystic%20fibrosis%20%20310507/cystic_fibrosis_024_wenn1345006.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள், லாஜிக் சொதப்பல்கள், யார் எல்லாம் இந்தபப்டம் பார்க்கலாம் என்பதற்கு எல்லாம் இடமே இல்லை.. ஏன்னா அந்த அலவு இந்தப்படம் ஒர்த் இல்லை.. சுருக்கமா சொன்னா இது அதுக்கு சரிப்பட்டு வராது.. 

 இந்த டப்பா படத்தை ஈரோடு ராயல் தியேட்டர்ல பார்த்தேன். 

 ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை  போன்ற அனைத்து தொழில் நுட்பங்களும் சராசரிக்கு கீழே

சி.பி கமெண்ட் - எஸ் ஆகிடுங்க


Monday, February 27, 2012

GHOST RIDER - 2 - SPIRIT OF VENGEANCE - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.filmofilia.com/wp-content/uploads/2011/12/ghost_rider_2.jpgஅம்புலிமாமா, பாலமித்ரா படிக்கற சின்னப்பசங்கள் எல்லாம் வரிசையா வாங்க.. சண்டை போடாம வரிசையா உக்காருங்க, கதை விடறேன்.. சாரி. கதை சொல்றேன். குறுக்கே யாரும்  பேசக்கூடாது. எனக்கு சொல்ல வந்தது மறந்துடும். ஹி ஹி


கால பைரவன்னு ஒரு கேரக்டர்.. அவர் நம்ம இரும்புக்கை மாயாவி மாதிரி ஒரு இண்ட்ரஸ்ட்டிங்க் கேரக்டர்.. அதாவது கரண்ட்டை டச் பண்ணுனா அவர் மாயமா மறைஞ்சு கை மட்டும் தெரியும்.. (இப்போ அந்த கேரக்டரை வெச்சு படம் எடுக்க முடியாது, ஏன்னா கரண்ட்டே இப்போ அடிக்கடி மாயமா மறைஞ்சுடுதே.:( அவ்வ்)

அந்த மாதிரி அநியாயம் எங்கே நடக்குதோ, எங்கே தலை விரிச்சு ஆடுதோ அங்கே ரப்பர் பேண்ட் போடாமயே அதை அடக்குவார்.. அப்போ அதாவது கால பைரவன் அவதாரம் எடுக்கறப்ப அவர் தலை காணாம போயிடும் , அதுக்குப்பதிலா தீயில் எரியும் மண்டை ஓடு மட்டும் இருக்கும்.. கோட் சூட் எல்லாம் போட்டிருப்பார்.. அதெல்லாம் எரியாது. 

தீயை எதிரிங்க மேல கக்குவார்.. அதை விட காமெடி என்னான்னா  அவர் ஒரு பைக்ல தான் வருவார். அந்த பைக்கும்  24 மணி நேரமும் எரிஞ்சுட்டே இருக்கும், ஆனா டயர்க்கு எதும் ஆகாது.. அவர் ஒரு சங்கிலி வெச்சிருக்கார்.. பெண்களோட வாய் தான் அல்லது நாக்குதான் உலகத்துலயே ரொம்ப நீளம்னு சொன்னவங்க இவர் சங்கிலியை பார்க்கலை போல.. அந்த சங்கிலியை ஒரு வீசு வீசுனாருன்னா அது  எமனோட பாசக்கயிறு மாதிரி.. எதிராளிகளை அழிச்சிடும். 


http://wpc.556e.edgecastcdn.net/80556E/img.news/NEtFzUR0KHADxz_1_2.jpg

இஷ் அப்பாடா.. ஹீரோ அறிமுகம் முடிஞ்சுதா.  இப்போ வில்லன் அறிமுகம்.. சாத்தான் தான் வில்லன்.. இவர் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் செஞ்ச வேலையை செய்யறார். அதாவது  பூலோகத்துல இருக்கற மேரேஜ் ஆன பொண்ணை மேத்தமேட்டிக்ஸ் பண்ணி  அவங்க கிட்ட பிசிக்கல் டச் வெச்சு பயலாஜிக்கல் எஃப்ஃபக்ட் ஏற்படுத்திடறார்.. ரிசல்ட் ஒரு பேபி.. 

அதெப்பிடி ஒரு பேய் கம் சாத்தான் மனித பெண்ணுடன் ஜல்சா பண்ன முடியும்னு லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது..... எனக்கும்  தெரியாது. 

பிறந்த குழந்தை 13 வயசு ஆகும்போது ஏதோ பூஜை செஞ்சா சாத்தானுக்கு இன்னும் பவர் அதிகமா வருமாம்.. ஏன் இப்போ சாத்தான் கிட்டே பவர் இல்லையா?ன்னு கேட்காதீங்க.. இப்போ சாத்தான் கிட்டே இருக்கறது கலைஞர் பீரியட்ல இருந்த மைனாரிட்டி ஆட்சி மாதிரி.. பூஜை முடிச்சுட்டா இப்போ நடக்கற ஜெ ஆட்சி மாதிரி... யாரும் கேள்வி கேட்க முடியாது.. சஸ்பெண்ட் பண்ணிடலாம்..

இப்போ ஹீரோயின் அறிமுகம். இவங்க தான் நயன் தாரா மாதிரி ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வெச்சவங்க. அதாவது கட்டுன கணவன் இல்லாம எதுக்கும் இருக்கட்டும்னு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்கா சாத்தான் கூட ஃபிரண்ட்ஷிப் வெச்சு குழந்தை பெற்றவர்.. இப்போ சாத்தான் கிட்டே இருந்து குழந்தையை காப்பாற்ற  ஓடுபவர்.. 

இப்போ க்ளியரா.. வில்லன் தன் குழந்தையைத்தான் சேஸ் பண்றார்.. ஹீரோ  அதை தடுக்கறார்.. அவ்ளவ் தான் கதை.. 

ஹீரோ நிக்கோலஸ் கேஜ்க்கு நடிக்க வாய்ப்பு ரொம்ப குறைவு.. ஏன்னா 70% காட்சிகளில் அவர் கால பைரவனா அவதாரம் எடுத்துத்தான் வர்றார்.. மண்டை ஓடு தான் தெரியுது.. ஆனா அவர் அவதாரம் எடுத்து வர்றப்ப தியேட்டர்ல செம கிளாப்ஸ்.... சூப்பர் ஹீரோன்னாலே ஜனங்க கிட்ட ஒரு மவுசு இருக்கத்தான் செய்யுது..

ஹீரோயின் ஹீரோக்கு ஜோடி இல்லை.. அதனால ”எதிர்ப்பார்த்த”  அளவு ஒண்ணும் இல்லை.. அந்த சின்னப்பையன் அசால்ட்டா நடிச்சு இருக்கான்.. வில்லனா வர்ற ஆள் நம்ம காதல் தண்டபாணி மாதிரி இருக்கார்.. 

ஆக்‌ஷன் காட்சிகள் சின்னப்பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.. காமிக்ஸ் கதை போல் இருக்கு.. 

http://www.indiewire.com/static/dims4/INDIEWIRE/003ae04/4102462740/thumbnail/680x478/http://d1oi7t5trwfj5d.cloudfront.net/19/e44be0598511e19869123138165f92/file/ghostriderspiritofvengeance-thismeanswar.jpg


மனதில் நின்ற வசனங்கள்

1.  உலகத்துல ஒவ்வொரு மனுஷனுக்கும் 2 முகங்கள் இருக்கு.. கொலை செய்ய்றது தப்புன்னா கொசுவை அடிக்கறதும் ஒரு கொலை தானே?

2. ஏய். மிஸ்டர்.. ஏன் ரொம்ப நேரமா என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?

 ஏன்? பார்க்கக்கூடாதா? நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. வந்து வந்து.....

மம்மி, சரியான பேக்கா இருக்கான்.. உங்க கிட்டே அவன் கடலை போட்டப்ப பிக் பாக்கெட் அடிச்சது கூட அவனுக்கு தெரியலை.. 

3.  பாஸ்.. பேசுனதை விட அதிக பணம் வேணும்,ஓவர் ரிஸ்க்..

 அக்ரிமெண்ட்டை மாத்த முடியாது.. என்ன பேசுனோம்னு மறந்துட்டியா?

ஆமா, நீங்க பெரிய அமெரிக்க அதிபரு, நான்  யுனைட்டட் கிங்க்டம் கவர்னரு மீற மாட்டோம்.. போய்யாங்க்..

4.  என் நிலைமையைக்கேட்டா உனக்கு கிண்டலா இருக்கா?

 மேடம்.. சும்மா ஊத்தாதீங்க, சாத்தான் கூடவே குடும்பம் நடத்திட்டு..... 


5.  இப்போ சாத்தான் எங்கே இருப்பார்?

 நாம பாட்டுக்கு போய்ட்டே இருப்போம்.. புனித மலைக்கு.. அவன் எப்படியும் அங்கே வந்து ஜாயின் பண்ணிக்குவான்.. 


http://scifipop.com/wp-content/uploads/2012/01/Ghost-Rider-Spirit-of-Vengeance-image-2.jpg


 இதுல லாஜிக் மிஸ்டேக்ஸ் எதுவும் கேட்கமுடியாது.. ஏன்னா இது அதையும் தாண்டி புனிதமானது.. 

 சி.பி கமெண்ட் -  போர் அடிக்காம பொழுது போக்கும் ஆக்‌ஷன் படம்..

Wednesday, February 15, 2012

JOURNEY-2 THE MYSTERIOUS ISLAND - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu6phEAwFIQqfsC2l__Rmt1D44nD7QK5mqVwxMaTXEAmvyHwY2IkziL85fUG2BxAowp-41ayI2FjOv-e_5Njvwkdo3mvgHsDs1p3RG5zI4UxJV5M2Ba6qS2xvvkstx22pcQ8o4tzd8ovkq/s1600/Journey+2+The+Mysterious+Island+3D.jpgஜூராசிக் படம் பார்த்தப்போ குழந்தைகள் முதல் பெரியவங்க வரை எப்படி ஒரு புதிய அனுபவம் அனுபவிச்சாங்களோ, அந்த அளவு இல்லைன்னாலும் ஒரு ஜாலியான ஃபேண்டசி அனுபவத்தை இந்தப்படத்துல உணர முடியும்.. செம ஜாலியான குழந்தைகளுடன் பார்க்க தகுந்த ஒரு  அட்வென்ச்சர் ஃபிலிம் இது..

ஹீரோ 19 வயசுப்பையன் , அவனோட அம்மா கூட வசிக்கறான்.. அப்பா பிரபு தேவா மாதிரி சம்சாரத்தை அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போனவர்.. அதனால ஹீரோவோட அம்மா கவுதமி எப்படி கமல் கூட கெட் டுகெதரா வசிக்கறாங்களோ அப்படி இருக்காங்க.. ஆனா பையனுக்கு “சித்தப்பாவை” பிடிக்கலை.. 

ஹீரோவோட தாத்தா ஒரு ஆராய்ச்சியாளர்.. அவர் ஒரு தீவுல மாட்டிக்கறார்.. ராம் தாஸ் எப்படி  தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன் அப்டினு புலம்பிட்டு இருக்காரோ அது மாதிரி தனித்தீவுல மாட்டி இருக்கார்... இப்போ ஹீரோ தாத்தாவை தேடி கிளம்பறார்.. 

கூட சித்தப்பாவும் போறார்.. அந்த தீவுக்கு போக ஒரு ஹெலி காப்டர் அரேஞ்ச் பண்ணனும்.. ஏன்னா படம் முக்கா வாசி தீவுலயே நடக்குதுன்னா நமக்கு போர் அடிக்காம இருக்கறதுக்கும், ஹீரோவுக்கு ஒரு ஜாலிக்காவும் ஒரு ஹீரோயின் வேணும்.. அதனால கரெக்ட்டா 18 வயசு மகள் உள்ள ஒரு  ஹெலிகாப்டர் டிரைவர் கம் ஓனர் கூட கிளம்பறாங்க .. 

அந்த தீவுல போய் இறங்குனதும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கு.. அதாவது HONEY I SHRUNK THE KIDS படத்துல வர்ற மாதிரி ஒரு டெக்னிக்.. அந்த தீவுல இருக்கற எல்லா ஜீவராசிகளும் நாம ரெகுலரா  பார்க்கற சைஸ்க்கு ஜஸ்ட் ஆப்போசிட்.. 

அதாவது யானை பூனை மாதிரி குட்டியூண்டு.. பல்லி டினோசர் மாதிரி பெரிசு..குழந்தைகளை கவர்றதுக்காக இந்த ஐடியா.. அங்கே ஜாலியா ரவுண்ட் அடிச்சுட்டு எப்படியோ தாத்தாவை கண்டு பிடிக்கறாங்க.. அந்த தீவுல இருந்து எப்படி அவங்க மீண்டு வர்றாங்க அப்டிங்கறது தான் கதை.. 

Dwayne Johnson தான் அந்த சித்தப்பா கேரக்டர்.. நம்ம ஊர் நடிகர்கள் எல்லாம் இவரோட ஜிம் பாடியை பார்த்துக்கறது நல்லது. சும்மா 42 இஞ்ச் செஸ்ட்டை வெச்சுக்கிட்டே அர்னால்டு மாதிரி ஃபிலிம் காட்ற ஹீரோக்கள் எப்படி அலட்றாங்க. இதுல ஜான் அவ்ளவ் கட்டுக்கோப்பான பாடி இருந்தும் சிம்ப்பிளா வர்றார்.. இவருக்கு நடிக்க வாய்ப்பு கம்மி. ஆனா ஜாலியான டயலாக்ஸ் அவரை காப்பாத்துது.. 

Josh Hutcherson தான் அந்த 19 வயசுப்பையன் கேரக்டர்.. செம துறு துறு.. நம்ம பாய்ஸ் பட சித்தார்த் மாதிரி ( ஸ்ருதி கமலோட முத பாய் ஃபிரண்ட் )அவர் ஹீரோயிண்ட்ட ஜொள் விடறது, கடலை போட பம்மறது எல்லாம் ஓக்கே.. சித்தப்பா கிட்டே வாதிடும் இடங்களெல்லாம் செம.. 

vanessa hudgens தான் ஹீரோயின்.. இந்தியத்தயாரிப்பு மாதிரியே இருக்கார்.. தமிழர்களுக்கு பிடித்த முக வெட்டு.. நிறம் கூட மாநிறம்.. படம் பூரா ஒரே காஸ்ட்யூம் என்பதால் இயக்குநர் புத்திசாலித்தனமாக  அவருக்கு ஒரே ஒரு ஷார்ட்ஸ், லோ கட் பனியன்  குடுத்துட்டார் போல .. படம் பூரா ரசிக்க ஏராளமான காட்சிகள்.. 

ஒளிப்பதிவும், லொக்கேஷன்ஸூம் செம .. பறக்கும் தேனிப்பூச்சில எல்லாரும் சவாரி செய்யும் காதில் பூச்சுற்றும் காட்சிகள் இருந்தாலும் குழந்தைங்க ரசிக்கற மாதிரி இருக்கு..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF2Vmbtnr7FvnuAFuqUOjkE9iRP5ykDFs3n9ECePo52etA3KnMeXcI-ycoho5E67yy68SLDGmxMYB5QeasVicBf16s0Hfpi_Px3_noeFPIhQI0-2sWs45OGeG7LNrV-ux11omU1pAmYox5/s320/vanessa-hudgens-diesel-delicious.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  உங்கப்பாவும் உன் கூட தீவுக்கு வருவார்..

மம்மி அவர், எனக்கு  எனக்கு டாடி இல்ல, ஜஸ்ட் கார்டியன் தான்.. 

நான் இல்லைன்னா நீ இந்நேரம் களி சாப்பிட்டுட்டு இருந்திருப்பே.. ஜெயில்ல.. மைண்ட் இட்.. 

ம்க்கும், உங்க கூட குப்பை கொட்றதுக்கு அதுவே பெட்டர்.. 

2.  டொக் டொக் டொக் 

நான் உள்ளே இல்லை..

 ஆர் யூ பிஸி..?

3.  என்னை நீ ஃபிரண்ட்டா ஏத்துக்கிட்டா சில மேட்டர்ஸ் மனம் விட்டு பேச முடியும்..

 ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.. கிளம்புங்க.. 

4.  பணம் குடுக்கறீங்க அப்டிங்கறதுக்காக பங்காளி ஆகிட முடியுமா?

5.  இந்த ஊர்லயே ஷோக்கான ஹெலிகாப்டர் நம்மளுதுதான்.. 

ஒரு சின்ன கரெக்‌ஷன்.. சீக்கான ஹெலிகாப்டர்னு சொல்லுங்க.. 

6.  இந்த மாதிரி ஒரு கேப்டனை நான் பார்த்ததே இல்லை ( நீங்க இன்னும் தமிழ் நாட்டு கேப்டனோட சட்டசபை சீன் ஆக்‌ஷன் பார்க்கலையே..?)

7.  மிஸ்...  என்னை பற்றி நீ என்ன நினைக்கறே..?

ரொம்ப ஓவரா வழியறே.. துடைச்சுக்கோ.. 

8.  யாரும் அசையாதீங்க.. நாம எல்லாரும் நின்னுட்டு இருக்கறது பாறைகளல்ல.. முட்டைகள்.. ராட்சச முட்டைகள்.. 

அப்போ ஆம்லேட் போடலாமா?

9.  வெல்கம் டூ  மை ஹோம்..  இங்கே கிடைக்கற பழங்களை வெச்சு ஜூஸ் தயாரிச்சு இருக்கேன்

சரக்கா இருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும் ஹி ஹி

10.  நான் என் அனுபவத்துல இருந்து சிலது சொல்றேன் கேட்டுக்கோ..

1. உன் மனசு என்ன சொல்லுதோ அதை கேட்காதே..

2. ஓப்பனா பழகு, ஆனா உணர்ச்சி வசப்படாதே

3.  உன் மனசுல என்ன இருக்கோ அதை வெளிப்படையா எல்லார் கிட்டேயும் சொல்லிடாதே.


http://cdn.teenstarsworld.com/wp-content/uploads/2010/11/Vanessa-Hudgens-Journey-2-The-Mysterious-Island.jpg

11.. என்ன பம்பறே? அவ உனக்கு ஒர்க் அவுட் ஆகலையா?

ஹூம், மடிய மாட்டேங்கறா..

12.  பொண்ணுங்களை கரெக்ட் பண்றது ஒரு தனிக் கலை..  நான் எல்லாம் உன் வயசுல மன்மத ராசாவா இருந்திருக்கேன்.. சொன்னா நம்ப மாட்டே.

அப்போ சொல்லாதே..

13.  பாதுகாப்பா போகனும்னா கடற்கரை ஓரமா போனா அந்த இடத்துக்கு போயிடலாம், ஆனா ரொம்ப லேட் ஆகும், சீக்கிரமா போகனும்னா காட்டுக்குள்ள புகுந்து போகனும். எப்படி வசதி?

செலக்ட் ஆப்ஷன் 2.  காட்டு வழி..

14.  ரொம்ப நேரம் நடக்கறமே.. அந்த இடம் வந்திடுச்சா?

யாருக்கு தெரியும்?நான் மட்டும் என்ன டெயிலி இங்கே காலைல ஒருக்கா, மாலைல ஒருக்கா வந்துட்டு போய்ட்டா இருக்கேன்.. ?

15. உதவி பண்றேன்னு சொல்லிட்டு நம்ம பேரண்ட்ஸ் நம்மை டாமினேட் பண்றது செம கடுப்பு..

ஆனா எனக்கு அப்படி அவங்க பண்னலைன்னா த்தான் கடுப்பாகும்..

16. ஆஹா. பட்டாளத்தான் பட்டையை கிளப்பறானே?

17.  உண்மையை சொல்லுங்க, இவ்ளவ் உயரத்துல இருந்து குதிக்க உங்களுக்கு பயம் தானே?

உண்மையை வெளீல சொல்லக்கூடாது//

18. காந்த திசை காட்டி செயல் இழந்தாச்சு. இப்போ எப்படி வழி கண்டு பிடிக்க?

ஸ்பைடர் எப்பவும் தெற்கே நோக்கிதான் தன் வலையை பின்னும்.. அதை வெச்சு கண்டு பிடிக்கலாம்..

19.  வேணாம். இப்படி செய்ய்றது பைத்தியகாரத்தனம்.

அதுதான் கிக்..

20.  நீ இதை ஓட்டு..  சுனாமிலயே ஸ்விம்மிங்க் போனவன் ஆச்சே..

http://movies.maxupdates.tv/wp-contents/uploads/2011/11/Hollywod-Movie-Journey-2-The-Mysterious-Island-2012-First-LookBannerCastWallpaperStillTrailerCrewMovie-PlotBudgetPostersPicture9.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. லொக்கேஷன் செலக்‌ஷன்ஸ், ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ் அனைத்தும் ரசிக்கும்படி செய்தது..

2. ஹீரோயின் செலக்‌ஷன் நச்.. பில்லா நயன் தாரா மாதிரி அவரை பனியனிலேயே உலா வர வைத்தது..

3. அவதார், ஜூராசிக் பார்க் பட வரிசையில் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் விதமாக  காட்சிகளை வடிவமைத்தது.

4. வன்முறை, ரத்தம், வல்கர் காட்சிகள் எதுவும் இல்லாமல் ஃபேண்டசியாக கதையை நகர்த்திய விதம்..


http://collider.com/wp-content/uploads/journey-2-the-mysterious-island-image.jpg

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1.  நல்ல வசதி படைத்த ஹீரோவும், சித்தப்பாவும் டஞ்சனான ஹெலிகாப்டரில் ஆபத்தான தீவுக்கு போக முடிவு எடுத்தது. ஏன்? வேற நல்ல ஹெலிகாப்டரே கிடைக்காதா?

2. முன் பின் பழக்கம் இல்லாத ராட்சச தேனியின் முதுகில் 4 பேரும் தனித்தனியாக அமர்ந்து கொண்டு பறந்து உலா போவது.. எந்த வித லகானும் இல்லாமல் எப்படி பேலன்ஸ் பண்ண முடியும்?

3. க்ளைமாக்ஸில் பேட்டரிக்கு மின்சாரம் எடுக்க ஹீரோவின் சித்தப்பா எடுக்கும் முயற்சி சரியான  கேலிக்கூத்து.. நம்பவே முடியாத விசித்திரம்..

4. இந்த தீவு கடலில் மூழ்கப்போகிறது என சித்தப்பா சும்மா தரையில் பரவி இருக்கும் தண்ணீரை வைத்தே ஜோசியம் சொல்வது  ( நான் நேவில இருந்தவன், அதனால தெரியும் என்று சமாளிஃபிகேஷன் வேற )

http://media.screened.com/uploads/0/45/601288-2011_journey_2_the_mysterious_island_008.jpg

சி.பி கமெண்ட் -லாஜிக் எல்லாம் பார்க்காம ஜாலியா போய் ரசிக்க நல்லதொரு அட்வெஞ்ச்சர் படம்..

 ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல் படம் பார்த்தேன்


Monday, February 06, 2012

IP MAN 2 -குங்க்ஃபூ மாஸ்டர் ஸ்டோரி (புரூஸ்லீ யின் குரு) -சைனீஷ் சினிமா விமர்சனம்

http://www.moviedeskback.com/wp-content/uploads/2011/01/IP-Man-2-Legend-of-the-Grandmaster-Wallpapers-1.jpg

 டைட்டிலை பார்த்துட்டு நம்மூர் வி ஐ பிங்க ஐ பி கொடுத்துட்டு ஓடிடுவாங்களே, அந்த மாதிரி கதையோன்னு யாரும் பயப்பட தேவை இல்லை.. ஆக்‌ஷன் ஃபிலிம் தான்.. ஃபாரீன்ல சூப்பர் ஹிட் ஆன படம்.. ஒரிஜினலா நடந்த கதையாம்

வறுமை தாண்டவமாடும் இடங்களில் கூட திறமை நாட்டியம் ஆடும்.. இயற்கை ஒரு வாசலை மூடும்போது மற்றொரு வாசலை திறந்து விடுகிறது.. 1949.ல் ஹாங்க்காங்க்கில் வாழ்ந்த ஒரு குங்க்ஃபூ மாஸ்டரின் உண்மைக்கதைதான் இது.. 2008-லேயே இதன் முதல் பாகம் வந்தது.. இப்போது (2010) வந்திருப்பது அதே கதை, ஆனால் நடிகர்கள் வேறு.. புரூஸ்லியின் குரு இவர் தான் என்று படம் முடியும்போது சில க்ளிப்பிங்க்ஸ் காட்றாங்க..

படத்தோட கதை என்ன?ஹாங்க்காங்க்கில் ஒரு புது ஊருக்கு பிழைப்பு தேடி தன் நிறைமாத கர்ப்பிணி, மகனுடன்  வர்றார் ஹீரோ.. அவருக்கு குங்க் ஃபூ மட்டும் தான் தெரியும்.. தற்காப்புக்கலை , மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்கூல் நடத்த முடிவு பண்றார்.. கொஞ்சம் கொஞ்சமா பசங்க சேர்றாங்க.. டியூஷன் மாதிரி எடுக்கறார்.. அப்போ தான் மதுரை அழகிரி மாதிரி லோக்கல் தாதா சோமோ ஹங்க் இடஞ்சலா வர்றார்.. 

ஜாக்கிசானின் படங்களில் எல்லாம் குண்டா ஒருத்தர் வருவாரே ( ஸ்பானிஷ் கனெக்‌ஷன் ) அவர்தான்.. அவரும் ஒரு மாஸ்டரே.. அவர் ஒரு கண்டிஷன் போடறார்.. இங்கே இருக்கற மாஸ்டர் கூட ஃபைட் போட்டு ஜெயிச்சா ஸ்கூல் நடத்தலாம்னு.. ஃபைட்டுக்கு ஃபைட்டும் ஆச்சு.. திரைக்கதையை விறு விறுப்பா நகர்த்துன மாதிரியும் ஆச்சு.. 

ஹீரோ ஜெயிச்சுடறார்.. அழகிரியையும் ஜெயிக்கிறார்.. இப்போ அவர் ஸ்கூல் நடத்த பர்மிஷன் கிடைச்சுடுது.. இப்போ அழகிரி அண்ணனுக்கு ஸ்டாலின் மாதிரி ஒரு இடைஞ்சல் வருது.. அதாவது வேற ஒரு குத்துச்சண்டை சாம்பியன். அவர் ஒரு மேடைல பப்ளிக்கா சவால் விடறாரு...

ஜெ கேப்டன் கிட்டே திராணி இருந்தா தனியா நி ந்னு சங்கர மடம்ல ஜெயிச்சு காட்டுங்கன்னு சொன்னாரே அந்த மாதிரி அந்த சாம்ப்பியன் சவுண்ட் குடுக்கறார்.. 

விறு விறுப்பான ஃபைட்டில் சாமோ ஹங்க் காலி ஆகிடறார்.. சாம்ப்பியன் அறை கூவல், ஹால் கூவல், போர்ட்டிகோ கூவல் எல்லாம் விடறார்.. நம்ம ஹீரோ அந்த சவாலை ஏற்று க்ளைமாக்ஸ் ஃபைட்ல ஜெயிக்கிறார்.. அவ்ளவ் தான் சண்டை  அடச்சே அவ்ளவ் தான் கதை..

ஜீன் கிளாடு வாண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட் படத்துலயே இதெல்லாம்  பார்த்தாச்சு என்றாலும் ஹீரோவா நடிச்சவரோட தோரணை, பாடி லேங்குவாஜ், ஃபைட் பண்ணும்போது அமைதியான லாவகம் செம,.. 

புரூஸ்லீ, எம் ஜி ஆர்  வரிசையில் சண்டைக்காட்சியில் கூட அமைதியான புன்னகையில் நிதானமான வேகம் காட்டும் அவரது அணுகு முறை அழகு.. 

சாமோ ஹங்க் ஆள் வயசானாலும் கலக்கறார்.. அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர் வரும் காட்சிகளில் க்ளாப்பிங்க் .. 

http://www.differentvideos.info/wp-content/uploads/2010/12/IP-Man-2-Legend-of-the-Grandmaster-Teaser-Official.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ, ஹீரோயின் அறிமுகம் எந்த பில்டப்பும் இல்லாமல் மிக சாதராணமாக, எளிமையாக இருந்தது பாராட்ட வைத்தது

2. வில்லனின் பாத்திரத்தேர்வும், சாமோஹங்க்கின் கேரக்டரைசேஷனும் செம.. 


3. ஒளிப்பதிவு எந்த ஜால வித்தையும் புரியாமல் மிக சாதாரணமாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தந்தது..

4. வசனங்கள் பல இடங்களில் தன்னம்பிக்கையை ஊட்டும் விதத்தில் எழுதி, குடும்பத்துடன் பார்க்கும்படி மிக கண்ணியமாக இயக்கியது.. 

http://www.betalevel.com/images/ip_man_2.jpg
லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. மிக ஏழ்மையாக வாடகையே கொடுக்க முடியாத சூழலில் இருக்கும் ஹீரோ ஏன் அவ்ளவ் ஆடம்பரமான வீட்டில் குடி வந்தார்? சாதாரணமான வீட்டில் ஏன் குடி போகலை?

2. கிட்டத்தட்ட 27 மாணவர்கள் அவரிடம் பயில்கிறார்கள்.. அவர்கள் ஃபீஸ் குடுத்தும் ( அதுல 3 பேர் மட்டும் தர்லை) அது வாடகைக்கே போதலை.. அப்போ பூவாவுக்கு அவர் என்ன செய்வார்? ஹவுஸ் ஒயிஃப்.. இவருக்கும் வேற தொழில் தெரியாது.. 

3. க்ளைமாக்ஸ்சில் ஹீரோ ஜெயிக்கும் சூழல் வந்ததும் நடுவர் குழு அவரிடம் இனி காலால் உதைக்கக்கூடாது ஒன்லி கை தான் யூஸ் பண்ணனும்னு சொல்றாங்களே, அது பாக்ஸிங்க் ரூல்ஸ் தானே.. அது எப்படி அது வரை ஹீரோ காலால் உதைக்கிறார்? 

4. க்ளைமாக்ஸ் ஃபைட் பயிற்சிக்காக வீட்டில் பயிற்சி எடுக்கும்போது எழும் சத்தங்கள்  நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கு இடஞ்சலாக இருக்கக்கூடாது என அவரை ஹவுஸ் ஓனர் வீட்டில் விட்டுட்டு வந்து ஹீரோ பயிற்சி எடுக்கறாரே.அது எப்படி? வாடகையும் தர்லை.. இவர் சம்சாரத்தையும், மகனையும் பார்த்துக்க ஹவுஸ் ஓனர் என்ன  காப்பகமா வெச்சு நடத்தறார்?. 

5.  ஒரு ரவுண்ட் டேபிள், அதுல ஹீரோவும், சோமோ ஹங்க்கும் ஃபைட் போடறாங்க,யார் அந்த டேபிளை விட்டு விலகறாங்களோ அதாவது கீழே விழறாங்களோ அவங்க ஜெயிச்சவங்க, ஒரு இடத்துல அந்த டேபிள் ரெண்டா உடையுது.. அது மேலே போய் ரெண்டா பிரிஞ்சு வருது.. இவங்க 2 பேரும் பறந்து போய்  ஆளுக்கு ஒரு அரை வட்டப்பலகையை பிடிச்சு அதுல காலை வெச்சு ஸ்டெடியா நிக்கறாங்களே.. உஷ் அப்பா முடில.. செம காமெடி சீன் .. 

http://f.imagehost.org/0933/ip_man_2small.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1.  மாஸ்டர்.. யாராவது ஸ்டூடண்ட்ஸ் இப்போ இங்கே வருவாங்களா?

நோ, ஏன் கேட்கறீங்க?மேடம்


இல்ல, காலியா இருக்கற இடத்துல துணி காயப்போட..  ( தக்காளி , எந்த நாட்டுக்கு போனாலும் பொண்ணுங்க புத்தி!!!!!!!!)

2.  ஆளைப்பார்த்தா லாண்ட்ரி மாஸ்டர் மாதிரி இருக்காரு? இவரா ஃபைட் மாஸ்டர்? புரோட்டா மாஸ்டரோ?

3.  ஒரு ஃபைட்டருக்குத்தேவையானது - தாக்கறதுல வேகம் இருக்கனும், தடுக்கறதுல விவேகம் இருக்கனும்

4.  மாஸ்டர். ஒரே சமயத்துல 10 பேரை அடிப்பீங்களாமே?


ஆமா.. 

அவங்க ஆயுதங்களோட வந்தாலுமா?

வரட்டும், பார்க்கலாம்.. 

5.  மாஸ்டர். அப்பாடா, 10 பேரை ஈஸியா அடிச்சுட்டீங்க. 

ஹூம், இதனால தான் பிரச்சனை.. அவங்க ஆளுங்க 80 பேர் வந்திருக்காங்க.. 

6.  உங்க பணம் ரொம்ப பேடு ஸ்மெல் அடிக்குது, பட் ஐ லைக் இட் 

7. ஹிப்மேன், உங்க கூட அவர் தாக்கு பிடிப்பாரா?

இப்படி உசுப்பேத்தி வம்புல மாட்டி விடறதே  உங்களுக்கு பிழைப்பா போச்சு

8.  மாஸ்டர்.. அவர் கூப்பிடறாரு. நீங்க போங்க.. ஃபைட் போடுங்க./. 

இரப்பா.. யாராவது போறாங்களா?ன்னு பார்ப்போம், நாமளா ஏன் வலுவுல போய் மாட்டனும்?

9. சரி.. இப்போ நான் போறேன்

போங்க போங்க, போய் வாங்கி கட்டிக்குங்க.. 

10.  டேபிள்  ரொம்ப வழுக்குது.. இல்லைன்னா இன்னும் கொஞ்ச நேரம் நான் தாக்குப்பிடிச்சிருப்பேன் ஹி ஹி 

11.  உங்க சுய லாபத்துக்காக ஃபீஸ் கேட்டா நான் கட்ட மாட்டேன், ஆனா அதே சமயம் யாராவது சவால் விட்டா அதை ஏத்துக்க தயாரா இருக்கேன் ( சைனீஷ்லயும் பஞ்ச் டயலாக் பேசலாம் போல )

12.  எல்லாருக்கும்  முதுமைன்னு ஒண்ணு வரும்.. அதனால  நெம்பர் -ஒன் என யாரும் நிரந்தரம்  கிடையாது ( ஹி ஹி , சைனாக்காரங்க கூட நம்மை தாக்க ஆரம்பிச்சாச்சா? அவ்வ்)

13. வெள்ளைக்காரனுக்குக்கூட வேப்பிலை அடிக்க ஒருத்தன் வராமலா போவான் ( வேலாயுதம் எஃபக்ட்?0

14. ஜெயிச்சவன் தோத்தவன் கிட்டே மன்னிப்பு கேட்கனும்னா நான் டெய்லி ஒரு ஆள்ட்ட மன்னிப்பு கேட்கனும்


15.   சீஃப் எதிரே நிக்கறியே.. யாரு நீ? உனக்கு என்ன பிரச்சனை?

நீ தான் பிரச்சனை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKe9D18gPbZ6IgBbh070Qon1cOyir52823viz4Z-QoCVZVb0R8ktvivzFI7bWWGGN0dY5aFqOZUEkoaq_38mCUakwLfr5RHG7CMnnM1aRJYA1kojsHjRK07k8mG10P8mmL4noO0m4qVsMr/s1600/ip+man+2+bj+presscon+donnie+huang+lynn.jpg



சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள், குங்க் ஃபூ பட விரும்பிகள், சாமோ ஹங்க் ரசிகர்கள் பார்க்கலாம்.. பெண்களூம் பார்க்கலாம்.. டீசண்ட்டான டைரக்‌ஷன்.. தலை வலி தராத சண்டைக்காட்சிகள்.. போர் அடிக்காத விறு விறுப்பான திரைக்கதை..

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்




Friday, December 09, 2011

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQekfaJ_7DEHqbRWqKsUGN3QfoRAr3a-kaAKzSpLP2dQkt0FGY5X50QXwR_tVD-MzuOkhWFScI_URUGbsTIFVjWPLSDaqO3Rjc3uzpMlzSYwiU4A1rTJtxBgBc3qPwGVDEokLGRhEyQEzD/s400/beauty-and-the-beast-2009.jpg

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல வேன்ஹெல்சிங்க் -4 -னு  ஒரு பட போஸ்டரை பார்த்தேன்.. ஆச்சரியம், விக்கி பீடியாவுல தேடுனா அதுல 2 பாகம் தான் வந்திருக்கு, ஆஹா யாருக்கும் தெரியாம எடுத்துட்டாங்களா? இவனுங்களே டைட்டில் குடுத்துட்டானுங்களா?ன்னு கண்டு பிடிக்க  படத்துக்கு போனேன், மற்ற படி படத்துல ஸ்விம்மிங்க் வீராங்கனையும் , மாடலும் ஆன ஹீரோயின் Estella Warrenக்காக போனேன்னு யாரும் தயவு செஞ்சு நினைச்சுடாதீங்க, மீ நல்லவன் அப்பாவி ஹி ஹி 


படத்தோட கதையை எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லறேன், வருத்தப்படாதீங்க.. 1000 வருடங்களுக்கு முன்னால நடந்த கதை ..  ஒரு ஊர்ல ஒரு ராஜா .. வயசானவரு .. நம்ம கலைஞர் மாதிரி.. அவருக்கு 2 பசங்க.. அழகிரி, ஸ்டாலின் மாதிரி...பதவி ஆசைல அந்த நாட்டின் தளபதி அண்ணனை போட்டுத்தள்ளிடறார்.. 

அப்படி சாகடிக்கப்பட்ட அண்ணனோட உடம்புல ஒரு சூனியக்காரி ஒரு துர் ஆவியை செலுத்தி நடமாடும் ஆவியா தன் கட்டுப்பாட்டுல வெச்சிருக்கு.தம்பி வாரிசு ஏதோ ஒரு காட்டுல துரத்தி அடிக்கப்பட்டு முகம் எல்லாம் ஓநாய் மாதிரி ஆக்கி விட்டுடறாங்க.


 இப்போ சூனியக்காரி தளபதி கிட்டே பேரம் பேசறா..  என்னை உன் கூட கூட்டணி சேத்துக்கோ ( அதாவதி என்னை கீப்பா வெச்சுக்கோ..) எனக்கு எல்லா பவரும் இருக்கு.. நீ தான் நாட்டுக்கு ராஜா. நான் தான் ராணீ , எப்பூடி? அப்படினு கேக்கறா.. ( மனசுக்குள்ள பவர் ஸ்டார்னு நினப்பு)

http://ladybomb.com/wp-content/uploads/2011/05/estella-warren.jpg


நிற்க... ( யாரும் எழுந்து எல்லாம் நிக்கவேணாம்.. படிக்கறதை நிப்பாட்டுங்க.. )சூனியக்காரின்னு சொல்றானே அவ அம்புலி மாமா கதைல வர்ற மாதிரி பல் எல்லாம் கோரமா, தலை முடி எல்லாம் சடை முடியோட தோல் எல்லாம் சுருக்கமா இருக்குமோன்னு நினைக்க வேணாம்.. பார்ட்டி செம ஃபிகர்.. அதிலும் அபாயகரமான லோ கட் ஜாக்கெட் போட்ட பார்ட்டி ஹி ஹி 

இப்போ தான் ஹீரோயின் Estella Warren அறிமுகம்.. ஃபிகரை பற்றி 4 லைன் வர்ணிக்கலைன்னா என்னை எந்த ஃபிகரும் மதிக்காது என்பதால் ஒரு பேரா  (paragh) அதுக்கு ஒதுக்கிடறேன்.. ( இல்லைன்னா மட்டும் எல்லாரும் உன்னை மதிச்சுட்டுத்தான் மறு வேலை.. )

ஃபிகரு டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டுக்கு சித்தி பொண்ணு மாதிரி முக வெட்டு , ரோஸ்னா ரோஸ் அப்படி ஒரு ரோஸ் கலர் ஸ்கின் அடடா.. அதை விட பாப்பா போட்டிருக்கற ஜாக்கெட் செம கிளாமர்.. பிரம்மாண்டமான யூ நெக் ஜாக்கெட் ஹி ஹி வாழ்க டெய்லர்.. 


அந்த ஓநாய் மனிதன் தான் காட்டுக்குள்ள வர்ற ஆளுங்களை எல்லாம் கொலை செய்யறதா மக்கள் நினைக்கறாங்க.. ஆனா  அந்த வேலையை செய்யறது சூனியக்காரி கை வண்ணத்துல உருவாகும் விநோத ஜந்து.. 

இதுல செம காமெடி என்னான்னா அந்த ஜந்து கிட்டே சூனியக்காரி ஒரு டைம் சொல்லுறா. “ நான் சொன்ன வேலையை நீ செஞ்சுட்டா  ஹீரோயின் உனக்குத்தான். நீ அனுபவிச்சுக்கோ..” அப்டினு சொல்றதுதான். அந்த ஜந்து பார்க்க ஓநாய் மாதிரி இருக்கு. அது எப்படி அனுபவிக்கும்? ஹய்யோ அய்யோ.. 

ஹீரோயின் காட்டுக்குள்ள உலாவற ஓநாய் மனிதனை இளவரசர்னு கண்டு பிடிச்சிடறா.. எப்படி?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது.. ஏன்னா அது டைரக்டருக்கே தெரியாது.. அந்த ஓநாயின் கேவலமான உதட்ல அவ கிஸ் அடிக்கறா.. ஓநாய் கேக்குது.. ஏன்? அதுக்கு பாப்பா சொல்லுது.. இல்ல சாப விமோசனம் கிடைக்குமா?ன்னு ட்ரை செஞ்சு பார்த்தேன்.. அப்போ தியேட்டர்ல ஒருத்தன் சொல்றான்.. இப்போ கில்மா சீன் கண்டிப்பா இருக்கும்னு.. ஹய்யோ அய்யோ  அப்படி எதும் இல்லை.. 

http://www.celebrity-wallpapers.org/bulkupload/13/estella-warren/estella-warren_17.jpg

படத்தில் வரும் நல்ல வசனங்கள்

1.  பேராசை  ஒரு நல்ல மனிதனைக்கூட கெட்ட மனிதன் ஆக்கி விடுகிறது ( ப சிதம்பரம் சார், உங்களுக்குத்தான்.. )

2. ஒருத்தன் ஜெயிக்கனும்னா அதுக்கு குறுக்கு புத்தி அவசியம்.. ( இது கேப்டனுக்கு)

3. நீ வயசானவ-ங்கறதை மறந்துடாதே.. 

வயசைப்பார்க்காதேய்யா..  அனுபவிச்சுப்பாரு.. 

4. ஹீரோயின் - என்னை எதுக்கு குதிரைல உனக்கு முன்னால உக்கார வெச்சுக்கறே.?. விடு பின்னால நான் உக்காந்துக்கறேன்.. 

வில்லன் - எனக்கு இதுதான் சவுகர்யமாவும் இருக்கு.. கில்மாவாவும் இருக்கு ( 1000 வருஷங்களுக்கு முன்னாலயே இந்த கில்மாவை கண்டு பிடிச்சுட்டாங்களா? அவ்வ் )

5. காதல் சுத்தம் பார்க்காது, அப்படி பார்த்தா அது சுத்தமான காதலா இருக்காது..  ( என்ன எழவு வசனம்யா இது..?)

6.  அவர் உருவத்துலதான் அப்படி இருக்காரு.. ஆனா உள்ளத்தால ரொம்ப நல்லவர்..

ஓஹோ.. அவர் இளவரசர்ங்கற மேட்டர் அவருக்கு தெரியுமா?

ம்ஹூம்.. 

7.  எதுக்காக எனக்கு லிப் டு லிப் கிஸ் குடுத்தே?

உன் உருவம் மாறுமா?ன்னு பார்த்தேன் மாறலை.. 

8. இதைச்சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு... ஆனாலும் அந்த சூனியக்காரியை நினைச்சா பயமாவும் இருக்கு.. 

http://image.qpicture.com/image/v/artist-vanessa-gray/vanessa-gray-197627.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காலைல  11 மணிக்கு படம் போட்டு 12.30 மணீக்கு விட்டாச்சு, அந்தளவு சின்ன மொக்கை படம் தந்ததற்கு வாழ்த்து

2. ஹீரோயின், வில்லி 2 பேரும் நல்ல ஃபிகர்ஸ் தான் Estella Warren, Vanessa Gray.. அவங்களை படம் பூரா கண்ணியமா “ காட்டியதற்கு” நன்றிகள்


இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள் 

 ஹாலிவுட் படம் விமர்சனம் எழுதும்போது மட்டும் இந்த பகுதி வந்தா எனக்கு செம ஜாலி.. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு இங்கிலீஷ் தெரியாது ஹே ஹே ஹேய்

1. பயங்கர சக்தி படைச்ச சூனியக்காரி டைரக்ட்டா ராணி ஆகலாமே..? அவங்க ஏன் இன்டைரக்டா சசிகலா மாதிரி சுத்தி வளைக்கறாங்க?

2. ஹீரோயினை குதிரைல கூட்டிட்டு வர்ற வில்லன் ஏன் அவரை போக விட்டுடறான்? ( இல்ல, அநியாயமா ஒரு சீன் போச்சே அந்த ஆதங்கம்)

3. ஹீரோயினுக்கு பயங்கர சம்பளம் குடுத்திருக்கீங்க.. வில்லிக்கும் செம சம்பளம்.. ஏன் படத்துல அவங்களை நல்லா யூஸ் பண்ணிக்கலை? ஹி ஹி 

4. இந்த கேவலமான கதையை எப்படி நம்பி  தயாரிப்பாளர் சான்ஸ் குடுத்தாரு? ஒரு வேளை அந்த ஓநாய் மனிதன் தான் தயாரிப்பாளரா?

இந்தபடத்தை வேலை வெட்டி இல்லாத மொக்க பசங்க கூட பார்க்க முடியாது ஹி ஹி 

 http://day19.com/blog/1009/aussie2/_MG_3056.jpg

டிஸ்கி - 1.

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

 

டிஸ்கி -2 

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

 

 

http://ecx.images-amazon.com/images/I/510LwYH1ggL.jpg

Saturday, November 12, 2011

IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

File:Immortals poster.jpg 

தமிழன் கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருக்கு.. அம்புலிமாமா, பால மித்ரா, பூந்தளிர் புக்ஸ் எல்லாம் குடுத்து நல்ல மாயா ஜாலக்கதைகள் இருக்கு ,படிடான்னா படிக்க மாட்டான்.. எளக்காரமா பார்ப்பான்.. ஆனா  ஃபாரீன் புக்ஸ்ல செம சேல்ஸ்னு ஹாரி பாட்டர் மாதிரி இங்கிலீஷ் புக் வந்தா மட்டும் அரை குறை இங்கிலீஷ் நாலெட்ஜை வெச்சு ஒப்பேத்தி ஆஹா ஓஹ்ஹோ பேஷ் பேஷ்ம்பான்..

அதே மாதிரிதான் உலகின் சிறந்த , கலப்படம் இல்லாத குளுமை பானம் இளநீர்னா கேட்க மாட்டான்.. குடிக்க மாட்டான், கண்டுக்க மாட்டான்.. ஆனா பூச்சிக்கொல்லி மருந்து மாதிரி இருக்கற , உடல் ஆரோக்யத்துக்கு பாதிப்பே வந்தாலும் பரவால்ல, நமக்கு ஸ்டேட்டஸ்ஸூம், பந்தாவும் தான் முக்கியம்னு 50 ரூபா செலவு பண்ணி பெப்ஸி, கோக்கோ கோலா இப்டி குடிச்சு உடம்பை கெடுத்துக்குவான்..

அந்த மாதிரிதான் நம்மூர்ல மாயாஜாலப்படம் வந்தா கிண்டல் பண்ணுவான், இதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லம்பான்... ஆனா ஃபாரீன் படத்துல அது வந்தா மட்டும் ரசிச்சு பார்ப்பான்.. அந்த மாதிரி குழந்தைப்பசங்க ரசிக்கற ஒரு மாயா ஜாலப்படம்தான் இது.. காதுல பூக்கூடையையே சுத்துனாலும் , கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் , ஹீரோயின் கிளாமர் இந்த 3 க்காக எப்படியும் ஆடியன்ஸ் வந்துடுவாங்க அப்டிங்கற தைரியத்துல எடுக்கப்பட்ட படம்.. 

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/05/Freida-Pinto-Immortals-hot-pics.jpg


படத்தோட கதை என்ன? லைப்ரரியை அழிக்க அம்மா ஜெ முயற்சி பண்ற மாதிரி மனிதர்களை அழிக்க ஒரு தீய சக்தி முயற்சி பண்ணுது.. ஆனா அது கலைஞர் இல்ல.. அந்த தீய சக்தியை கடவுளால கூட தடுக்க முடியலை.. வெறும் பர்வையாளனா மட்டுமே வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நிலை.. இப்போ நம்ம பிரதமர் மாதிரி.. தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஹீரோ தான் அதை செய்யறார்.. அவரோட அம்மா வை கொலை பண்ணிடறாங்க.. ஹீரோ அம்மாவை கொலை செஞ்ச வில்லனை யும், உலகத்தை அழிக்க நினைக்கிற ஆளையும் பழி வாங்கனும்.. 2 வேலையா? நோ நோ ஒரே வேலை.. 2ம் ஒரே ஆள் தான்.. 

சரி ஹீரோயினுக்கு என்ன வேலை? அவங்க தான் கடவுளோட தூதர்.. கன்னித்தன்மை மிக்கவங்க.. (!!!!!!) அவங்க கண்ணுக்கு எதிர்காலத்துல என்ன நடக்குதுன்னு பார்க்க முடியும்.. ஆனா தெய்வ வாக்கு ரேவதி மாதிரி தான் ஆக பாப்பா விரும்பல.. அதனால  ஒரு டெக்னிக்.. இந்தியாவுல இதுவரை யாருமே கண்டுபிடிக்காத டெக்னிக்.. அதாவது ஹீரோ கிட்டே சொல்றாரு.. நீங்க என்னை கெடுத்துடுங்க... (!!!!!!) அப்போதான் நான் சராசரி மனுஷி ஆவேன்கறா.. 

நம்மாளுங்க சும்மாவே  பிட்டை போடுவானுங்க.. எக்ஸாம் ஹால்ல சூப்பர்வைசரே நோட்சை எடுத்து கைல கொடுத்தா? ஹீரோவும் அந்த கஷ்டமான வேலையை செய்யறார்.. ( வில்லன் கிட்டே கேட்டிருந்தாக்கூட அதை செஞ்சிருப்பாரே?)

யாரும் கிளு கிளுப்பு அடைய வேண்டாம்.. அந்த சீன் ரொம்ப நாசூக்காதான் படத்துல சொல்லப்பட்டிருக்கு.. ( சென்சாரின் நாசூக்கில் இடி விழ,.,. )

ஆனா ஒரிஜினல் படத்துல கில்மா சீன் இருக்காம்.. இந்தியாவுக்கு மட்டும் அது கட்டாம்.. ஹீரோயின் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டாராம்.. எனக்கு இந்தியாவுல மரியாதை ,அந்தஸ்து , கவுரவம் எல்லாம்  இருக்கு.. அதனால ஃபாரீன்ல எவ்ளவ் கேவலமாவேணாலும் சீன் காட்றேன்.. ஆனா இந்தியாவுல மட்டும் அதை காட்ட மாட்டேன் அப்டினு சொன்னாராம்.. ( ஆதாரம் - விக்கி உலகம் என்சைக்ளோ பீடியா)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhif-qQyRjM_UtcRYt9O4DfNKZD1NX7zqZvhN5EzGXhT0fd63MXlMPau4Jgfu2UwQLvd2XmSUtg6YQIpFDmmCNwp8ygk7Stja5ebeS7PIdxUvVK0-njGOeBO4dJWOJgOKWG4ZGoHV28u3s/s1600/Immortals+3.jpg

ஒரு மந்திர வில் இருக்கு... அதை கைப்பற்றிட்டா உலகத்தையே வசம் ஆக்கிடலாம்.. அதை கஷ்டப்பட்டு ஹீரோ கைப்பற்றிடறார்.. அப்புறம் லூஸ் மாதிரி  அதை வில்லன் கிட்டே விட்றாரு.. 

வில்லன் அதை யூஸ் பண்ணி போர் புரியாம கைல வெச்சுக்கிட்டு வேடிக்கை பார்க்கறான்..
கடவுளோட தேவ தூதர்கள் கடவுளுக்கே தெரியாம கட் அடிச்சுட்டு பூமிக்கு வர்றாங்க ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ண.. ( அது கூட தெரியலைன்னா அவர் என்ன கடவுள்?னு கேள்வி யாரும் கேக்காதிங்க.. எனக்கு பதில் தெரியாது,, )

கடவுளோட தேவ தூதர்கள்க்கு என்ன அடையாளம்? கலைஞர் போட்டிருக்கற மஞ்சள் துண்டு மாதிரி உடம்பு பூரா மஞ்சள் பெயிண்ட் அடிச்சிருப்பாங்க.. ஆனா பாருங்க அவங்களையும் வில்லன் அழிச்சிடறான்..

 வில்லன் கோஷ்டிக்கு என்ன அடையாளம்னா அவங்க முகத்துல இந்தப்பக்கமா 3 கீறல். இடம் இருந்து வலம்.. அந்தப்பக்கமா 3 கீறல் இடம் இருந்து வலம்.. மொத்தமா 6 கீறல் முகத்துல இருந்தா அவன் வில்லன் கோஷ்டி.. இலைன்னா ஹீரோ கோஷ்டி.. எப்பூடி? இந்த ஐடியா எதுக்குன்னா ஷூட்டிங்க் ட்டைம்ல அவங்களுக்குள்ள குழப்பம் வந்துடக்கூடாதே.. அதுக்குத்தான்.. 

http://www.bollywood-actress-wallpapers.com/wordpress/Freida-Pinto/Freida-Pinto-40.jpg

எல்லா எதிர்ப்புகளையும் சமாளிக்க வில்லன் ஹீரோவுக்கு  தூது அனுப்புறான் என் கூடவே சேர்ந்துக்கோன்னு.. அதாவது கூடன்குளம் பிரச்சனைக்கு அப்துல்கலாமை காங்கிரஸ் அனுப்பிச்ச மாதிரி.. ஆனா பப்பு வேகலை..

போர் புரிந்து ஹீரோ ஜெயிக்கறாரு.. அவ்ளவ் தான் கதை முடிஞ்சுது.. எல்லாம் அவங்கவங்க வீட்டுக்குப்போய் அவங்கவங்க பொண்டாட்டிங்க கூட சண்டை போடுங்கன்னு  டைரக்டர் சொல்லிடறாரு..


ஹீரோ ஆள் செம பாடிபில்டப்.. கட்டுமஸ்தான உடம்பு.. ஃபைட் போடும் லாவகம்.. எல்லாம் அசத்தல்.. மேன் ஆஃப் ஸ்டீல் அப்டினு ஒரு சூப்பர் மேன் படம் அடுத்த வருஷம் வருது.. அதுல அண்ணன் தான் ஹீரோ..  ஆல்ரெடி இவர் கவுண்ட் ஆஃப் மாண்டோ கிறிஸ்டோ, பிளட் க்ரீக் போன்ற மெகா ஹிட் படங்கள்ல நடிச்சவர் தான்.. ஹீரோவைப்பற்றி இன்னும் நிறையா சொல்லலாம், ஆனா ஆம்பளைங்களை புகழக்கூடாதுங்கற அடிப்படை நாகரீகம் (!!!)_ கருதி இத்தோட அதை ஸ்டாப்பிக்கறேன்.. ஏன்னா ஃபிகர்களை புகழவே இடம் பற்ற மாட்டேங்குது..

300 அப்டினு ஒரு ஹாலிவுட் படம் வந்ததே தமிழ்ல கூட நம்மாளுங்க கேவலமா 300 பருத்தி வீரர்கள்னு டைட்டில் குடுத்து ரிலீஸ் பண்னாங்களே.. அந்தப்பட தயாரிப்பாளர் தான் இந்தப்பட தயாரிப்பாளர்.. 

த செல் , தி ஃபால் படங்களை இயக்கிய டார்செம் தண்ட்வார் சிங்க் தான் இதன் இயக்குநர்... இவர் முழுக்க முழுக்க ஒரு இந்தியர்..

 அப்புறம் ஹீரோயின் - ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரீட்டா பிண்டோ.. பாப்பா ஷோக்காத்தான் கீது.. உதட்டழகு செம.. நடிப்பு கொஞ்சம் கொஞ்சம் வருது... பொதுவா நடிகைங்க கிட்டே நடிப்பை எதிர்பார்ப்பது அகில உலக ஜொள்ளர்கள் சங்கத்துல தடை செஞ்சதால அதை நான் கண்டுக்கல.. 


http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/05/Freida-Pinto-Immortals-hot-pictures.jpg


படத்தில் ஹீரோயின் கிளாமரையும் தாண்டி ரசிக்க வைத்த வசனங்கள்

1.  மத போதகர் -கடவுளை நம்பு.. அவர் உனக்கு மோட்சத்தை தருவார்...

வில்லன் - இப்போ நான் உனக்கு அதை தர்றேன்... 


2. ஒரு வீரன் தன் வாழ்நாள்ல எத்தனை பேரை அழிச்சான்கறது முக்கியம் இல்ல..  வாளை எதுக்காக கையில் எடுக்கறான்கறது தான் முக்கியம்.. ( அண்ணே, அழகிரி அண்னே நோட் இட்)

3. கடவுள்ட்ட கருணையை எதிர்பார்த்தேன், மவுனம் தான் பதிலா கிடைச்சது

4. புனிதமான உங்களுக்கு என் கடைசி வணக்கங்கள்

5.  கடவுளை ஏன் நீ நம்பலை..?

இல்லாத ஒண்ணு கிட்டே நடக்கக்கூடாத ஒண்ணை வேண்டிக்கறது வேஸ்ட்... நோ யூஸ் ( 2ம் ஒண்ணுதானே?)

. 6. எந்த சூழ்நிலையிலயும் ஒரு சந்நியாசி எந்த உயிரையும் எடுக்க மாட்டான் , அதுக்கு அவனுக்கு உரிமையும் இல்ல.. ஏன் அவன் தன் உயிரையும் எடுக்க மாட்டான்.. ( தற்கொலை செஞ்சுக்க மாட்டான்)

7. கோபம் தான் ஒரு மனுஷனை தோல்வியை நோக்கித்தள்ளுது.. 

8.  ஃபிகரு - நீங்க திருடனா?

ஆமா... உங்களை தூக்கிட்டுப்போக வந்த திருடன்.. 

9. நீ நடந்த துக்கத்துக்காக வருத்தப்படறே.. நான் நடக்கப்போற துக்கத்துக்காக வருத்தப்படறேன்.. 

10.  டேய்.. ஃபிகர் கூட நைட் தங்குனியே என்னாச்சு?

மருந்து குடுத்தா.. 

பார்த்தா மருந்து  மட்டும் குடுத்தா மாதிரி தெரில்யே கண்ணா./.. 

http://www.bollywoodface.com/wp-content/uploads/2011/02/freida-pinto-hot.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஓப்பனிங்க்  ஃபைட் சீனில் ஹீரோ தன் அம்மாவைக்காப்பாற்ற போடும் ஃபைட் சீன் செம ஸ்பீடு.. தியேட்டரே செம அப்ளாசில் மூழ்குது.. 

2. ஒளிப்பதிவு செம.. ஒரு சீன்ல லாங்க் ஷாட்ல ஏதோ ஒரு புள்ளியை காட்டி அது கடல்ல வர்ற ஒரு போட்னு  ( BOAT)காட்ற சீன் கலக்கல்.. 

3. க்ளைமாக்ஸ் போர் - பிரம்மாண்டம்.. கிராஃபிக்ஸ்..ஒளிப்பதிவு எல்லாம் செம.. 

4. ஹீரோயின் பக்கத்துல இருக்கற அந்த 4 ஃபிகர்ஸ் ஹி ஹி .... படத்தோட கதைக்கு தேவையே இல்லைன்னாலும் அடியன்ஸ் கண்கள் குளுமைக்காக ஹீரோயினை ஹீரோ கூடவே சுத்த விட்டது அழகு,. 

இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள் ( எப்படியும் அவர் தமிழ் படிக்க மாட்டாரு. கண்டபடி கேட்கலாம்)

1.  கடவுள் பூமிக்கு வர்றப்ப அவரோட தேவ தூதர்கள் 3 பேரு போர்ல இறந்துடறாங்க.. அவங்களை காப்பாத்த முடியாதா? அவங்களும் சராசரி மனுஷன் போலவே ஏன் சாகறாங்க?

2. வில்லன் ஹீரோவை படம் ஆரம்பிச்ச 2 வது ரீல்லயே பிடிச்சிடறான்,  ஆனா அப்பவே அவனை கொல்லாம சுரங்கத்துல வேலை பார்க்கட்டும்னு விட்டுடறான். வில்லன் என்ன வேலை வாய்புத்துறை அமைச்சரா? அப்பவே போட்டுத்தள்ள வேண்டியதுதானே?

3. ஹீரோயின் ஃபிரண்ட்ஸ் 4 பேரை வில்லன் ஒரு பொம்மை காலை மாட்டுக்குள்ள அடைச்சு வைச்சு நெருப்பு மூட்டி  4 மாசம் (!!!) சித்திரவதை பண்றான்.. 4 மாசமா வேகாம இருக்கற அந்த ஃபிகர் ஹீரோ வந்து காப்பாத்தறப்ப செத்துடறாங்க.. ஹீரோவுக்கு யாரை தொட்டாலும் சாகடிக்கற சக்தி இருக்கா?

4. கடவுள் க்ளைமாக்ஸ்ல வந்து என்னமோ பண்ணி எல்லாத்தையும் இடிக்க வைக்கறாரு.. அதே வேலையை அவர் அங்கே இருந்தே பண்ண முடியாதா? டவர் கிடைக்காதா? பவர் பத்தாதா?

5. தமிழில் வந்த விட்டலாச்சாரியார் படங்கள் ல பார்த்து ஏன் கேவலமா காபி அடிக்கறீங்க?

http://images.indiascanner.com/image/2010/12/Hot-Freida-Pinto-GQ-Magazine-Photos.jpg


ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்

சி.பி கமெண்ட் - படம் எல்லாருமே பார்க்கலாம்.. மோசம் இல்ல.. ஜாலியா பொழுது போகுது.. 


டிஸ்கி -1 இந்தப்படத்துல பெரிசா சீன் எதுவும் இல்ல.. ஆனாலும் ரசிகர்கள் ஏமாறக்கூடாதுங்கறதுக்காக சில ஸ்டில்களை போடறேன்.. இதெல்லாம் ஃபாரீன்ல மட்டுமே இருக்கு.. படத்துல இல்லை.. 


டிஸ்கி 2 - 

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி - 3

நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

Saturday, November 05, 2011

BLITZ - AN ACTION THRILLER MOVIE REVIEW

http://cinemagateway.com/wp-content/uploads/2011/06/Blitz-poster.jpg 

கடந்த 10 நாட்களா ஊர்ல தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 3 படங்களே எல்லா தியேட்டர்ஸ்ஸையும் ஆக்ரமிச்சுட்டு இருந்ததால  மக்கள் நொந்துட்டாங்க ( நான் தான் மக்கள்.. மக்கள் தான் நான்) இன்னைக்கு புதுசா ஒரு இங்கிலீஷ் படம் ரிலீஸ் ஆனதும் ரிலாக்ஸா கிளம்புனேன்.. 

ட்ரான்ஸ்போட்டர் ஹீரோ Jason Statham தான் இதுல ஹீரோ.. படத்தோட கதை என்ன? போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கற ஆள்ங்களா பார்த்து வரிசையா கொலை பண்றான் ஒரு சீரியல் கில்லர்..அவன் ஏற்கனவே ஒரு சாதாரண அடி தடி கேஸ்ல ஹீரோவான போலீஸ் ஆஃபீசர் கிட்டே போலீஸ் அடி வாங்குனவன் தான்.. அந்த அடிதடி கேஸ்ல ஹீரோ வில்லனை போட்டு கும்மு கும்முனு கும்மிடறார்.. அப்பவே வில்லனுக்கு போலீஸ் மேல செம காண்டு.. 
கோபப்படறவன் நேரா போய் யார் அடிச்சாங்களோ அவனை கொல்ல வேண்டியதுதானே? அப்படி செஞ்சா 2 ரீல்லயே படம் முடிஞ்சிடுமே.. அதனால தலையை சுத்தி மூக்கை தொடற கதையா வில்லன் சுத்தி வளைச்சு கொலை செய்யறார்.. 

இதை ஒருத்தன் பார்த்துடறான்.. அவன் ஒரு பத்திரிக்கைக்காரனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி பேரம் பேசறான்.. எனக்கு 50.000 டாலர் குடுத்தா கொலையாளி பற்றி துப்பு குடுப்பேன்னு சொல்றான்.. பரபரப்பான நியூஸ்க்கு ஆசைப்பட்டு அந்த டீலிங்க்குக்கு ஒத்துக்கிட்டு  பிரஸ் காரர் போறார்.. அந்த ஆதாரங்களை கைப்பற்றும்போது வில்லன் அந்த இன்ஃபார்மரை போட்டுத்தள்ளிடறார்..

photo


 இப்போ ஹீரோ எப்படியோ போராடி சேசிங்க் பண்ணி, துரத்தி ( 2ம் ஒண்ணுதானா?) வில்லனை பிடிச்சிடறாரு.. ஆனா கோர்ட்ல நிரூபிக்க முடியல.. அவர் அசால்ட்டா வெளில வந்துடறாரு.. ஏன்னா எந்த கொலைக்கும் ஆதாரம் இல்லை.. அப்படியே பார்த்த சாட்சி இருந்தாலும் அவங்க டாக்டர் ராம்தாஸ் மாதிரி பல்டி அடிக்கற ஆளுங்களா போயிடறாங்க.. 


இந்த மாதிரி நேரத்துல ஹாலிவுட் ஹீரோ என்ன செய்வார்? நம்ம கோடம்பாக்க ஹீரோக்கள் என்ன செய்வாரோ அதையே தான்.. எஸ் அதே தான் (என்கவுண்ட்டர்ல )போட்டுத்தள்ளிடறார்.

படத்துல வில்லனா நடிச்சவர் தான் புரொடியூசரோன்னு சந்தேகப்படற அளவு அவருக்கு அதிக முக்கியத்துவம்.. ஹீரோ வர்ற சீனை விட வில்லன் தான் அதிக சீன்ல வர்றார்.. அதைக்கூட நாங்க தாங்கிக்கத்தயார்.. ஆனா ஹீரோயினுக்கு மெடிஷனுக்கு கூட ஒரு சீன் இல்லை.. அட்லீஸ்ட் கிஸ்? ம் ம் அதுவும் இல்ல.. அப்புறம் என்ன இதுக்கோசரம் ஹீரோயினை புக் பண்ணனும்.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. 

Still of Zawe Ashton in Blitz


 ரசிக்க வைத்த வசனங்கள்

1.  ஹீரோ - ஏம்மா , ஒரு  போலீஸ் போடற டிரஸ்ஸா இது? 


லேடி - ஏன்.. உன் டிரஸ் மட்டும்?   ( இந்த சீனில் அந்த லேடி அணிந்திருப்பது ஒரு பெட்டி கோட்)

2.  என் ஃபிரண்ட் ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டான், அவனை நீ தான் காப்பாத்தனும்.. 

உன் பாய் ஃபிரண்ட்டா?

ம்ஹூம்.. அவன் சின்னப்பையன்பா.. ( ஏன் பெரிய பையனைத்தான் பாய் ஃபிரண்டா வெச்சுக்கிவீங்களோ?)

3. உனக்குபிடிச்ச நெம்பர் 7? அல்லது 8? 

8

ஓக்கே.. இன்னும் 8 போலீஸ் ஆஃபீசர்ஸை நான் கொல்லப்போறேன்.. 

4.  உன்னை எல்லாரும் முரடன்னு சொல்றாங்களே..?

உன்னைக்கூட நிறைய பேரு வெத்து வேட்டுன்னு சொல்றாங்க..

5.   அது என்னனு தெரியுமா? மைக்கேல் ஜாக்ஸனோட யூரின்.. விலை மதிப்பே இல்லாதது.. சேகரிச்சு வெச்சிருக்கேன்.. 

உவ்வே ( இது மை மைண்ட் வாய்ஸ் )

6. ஃபிகரு - இதுக்கு முன்னால பொம்பளையை பார்த்ததே இல்ல போல.. எப்படி பார்க்கறான் பாரு..  ( ஹூம், ஃபாரீன்லயும் நம்மள மாதிரிதான் போல.. ஹி ஹி )

7. ஃபிகரு - நான் கூப்பிடறவரை இங்கே வராதேன்னு சொன்னேனே?

நீ தான் கூப்பிடவே இல்லையே? ( இதுல மட்டும் நாங்க தெளீவா இருப்போமில்ல?)



Still of Zawe Ashton in Blitz

8. ஃபிகரு - எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.. 

அதுல எனக்கு என்ன லாபம்? 


ஓக்கே.. உனக்கு என்ன வேணும்?

நைட் வீட்டுக்கு வா.. 

சரி வர்றேன்.. ( அடிப்பாவி)

9.  யோவ் .. இந்த தகவலை உனக்கு சொல்லனும்னா எனக்கு 50000 டால்ர் வேணும்.. ஒரு பைசா குறைஞ்சாக்கூட.......

போய் போலீஸ்ல சொல்லு.. பண்றது இல்லீகல் வேலை.. லீகல் பற்றி பேசறே நீ?

10 . எனக்கு போலீஸ் புரொடக்‌ஷன் தருவீங்களா?

கண்டிப்பா.. ஆனா ஜெயில்ல வெச்சு.. 

11.  டியர்.. ஏன் சைலண்ட்டா இருக்கே?

ஃபிகரு - எனக்கு அதுதான் பிடிக்கும் ( அப்டித்தான் சொல்வாங்க.. மெரேஜ்க்கு பிறகுதான் தெரியும் வயலண்ட் கேர்ள்ஸ்னு)

12.  உண்மைலயே நீ புத்திசாலியா இருந்தா....... நீ புத்திசாலி இல்லைன்னு தெரியும்..  குற்றத்தை ஒத்துக்கோ.. 

13.  நீ உள்ளே இருந்தாதான் சேஃப்னு அப்பவே சொன்னேனே? ( ஆ ராசா உள்ளேபோய் 6 மாசத்துக்கு மேல ஆகியும் ஏன் ஜாமீன்  கேட்கலைன்னு இப்போ தெரியுது)


http://0.tqn.com/d/worldfilm/1/0/4/w/620291_DSC_0065a.jpg

 இயக்குநர் கோட்டை விட்ட இடங்கள் ( லாஜிக் சொதப்பல்கள்)

1. நடு ரோட்ல ஒரு போலீஸ் ஆஃபீசரை சுட்டுட்டு கேசுவலா வில்லன் போறான்.. யாரும் கண்டுக்கலை.. அட்லீஸ்ட் ஒரு அலறல்.. பதட்டம்..? ம்ஹூம்

2.  நான் கேபிள் காரன் வந்திருக்கேன்.. கதவை திறங்கன்னு வில்லன் சொன்னதும் ஆல்ரெடி கொலை பயம் உள்ள போலீஸ் டக்னு கதவைத்திறந்து நான் தான் கேபிள் கனெக்‌ஷன் கட் பண்ணீ பல மாசம் ஆச்சே.. ந்னு கேனத்தனமா சொல்றாரே?

3.  ஒரு இன்ஃபார்மரு பிரஸ்காரனை கூப்பிட்டு வில்லனோட கார் டிக்கியை திறந்து அல்வா மாதிரி எவிடன்ஸ் காட்றாரு.. அதை உடனே அபேஸ் பண்ணாம அவனை கூட்டிட்டு போய் டீ வாங்கிக்குடுத்து மறுபடி வந்து பார்த்தா அதை காணோம்.. இப்படியா அசால்ட்டா பிரஸ்காரன் இருப்பான்?

4.  ஹீரோ வில்லனை துரத்திட்டு 4 கி மீ தூரம் ஓடிட்டே இருக்காரு.. 2 அடி தூரத்துலதான் வில்லன் ஓடரான்.. அப்பவே ஷூட் பண்ண வேண்டியதுதானே? சேசிங்க் சீன் வேணும்கறதாலா?

5. ஹீரோயின்க்கு 8 கோடி குடுத்து புக் பண்ணிஎன்ன யூஸ்? ரொமன்ஸ் சீன் உண்டா? ஜாலி கிஸ்ஸாவது உண்டா? தமிழ்ப்படம் பாருங்க 10 லட்சம் ரூபா சம்பளம் குடுத்துட்டு 1 கோடிக்கு ஒர்த்தாகும் அளவு எங்காளுங்க எடுக்கறதை..


http://images.dvdtimes.co.uk/protectedimage.php?image=clydefrojones/RocketScience5.jpg_30012008

திரைக்கதை பின் பாதியில் ரொம்பவே திணறுகிறது.. ஒளிப்பதிவு , இசை எல்லாம் சுமார் ரகம்

ஆக்‌ஷன் காட்சிகளூம் குறைவுதான்..

ஈரோடு ஸ்ரீ லட்சுமி தியேட்டரில் பார்த்தேன்..

 சி.பி கமெண்ட் - பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது.. டப்பா படம்னு தள்ள வும் முடியாது.. சுமார்.. ரகம்


டிஸ்கி 1- போஸ்டரில் ஏ சான்றிதழ் பார்த்து சீன் இருக்குன்னு யாரும் நினைக்காதீங்க.. அது வன்முறைக்கு கொடுக்கப்பட்ட்டது.. படம் அக்மார்க் சைவம்.. அப்போ நான் தான் சீன் படம்னு ஏமாந்து போய்ட்டேனா?ன்னு கேட்காதீங்க.. நாங்க எல்லாம்  போஸ்டர் டிசைன் பார்த்தே, டைட்டிலை வெச்சே கண்டு பிடிக்கற ஆளுங்க ..

டிஸ்கி 2 - blitz அப்டின்னா என்ன அர்த்தம்னு  படம் பார்க்கும்போதே ஒரு கேர்ள் ஃபிரண்டுக்கு மெசேஜ் அனுப்பி கேட்டேன்.. 2 அர்த்தம் சொன்னாங்க.. 1. A PERIOD OF GREAT ACTIVITY FOR SAOME SPECIAL PURPOSE ( INFORMAL) 2. GERMANN (NOUN)

ஆனா படத்துல வில்லனோட பேருதான் ப்லிட்ஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://content.internetvideoarchive.com/content/photos/7283/30589602_.jpg