Showing posts with label முன்னோட்ட பார்வை. Show all posts
Showing posts with label முன்னோட்ட பார்வை. Show all posts

Friday, November 27, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27/11// 2015 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

1 இஞ்சி இடுப்பழகி
2 உப்புக்கருவாடு
3 144 # 27/11/2015



1 இஞ்சி இடுப்பழகி
ஆர்யா, அனுஷ்கா நடித்திருக்கும் 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம் தெலுங்கில் 'யு/ஏ' சான்றிதழுடனும், தமிழில் 'யு' சான்றிதழுடனும் வெளியாக இருக்கிறது.


ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். பி.வி.பி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் நாளை (நவம்பர் 27) வெளியாக இருக்கிறது.


இப்படம் இரண்டு சென்சார் சான்றிதழ்களுடன் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் இப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். 'யு/ஏ' சான்றிதழ் இருந்தால் வரிச்சலுகை கிடையாது என்ற சட்டம் ஆந்திராவில் கிடையாது என்பதால் இதுகுறித்து படக்குழு கவலைப்படவில்லை.


அதே வேளையில், தமிழில் இப்படத்தை சென்சார் செய்தபோது இங்கும் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். ஆனால் 'யு/ஏ' சான்றிதழ் என்றால் வரிச்சலுகை கிடைக்காது என்பதால் படத்தில் உள்ள முத்தக் காட்சியைக் குறைத்து 'யு' சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள்.


இப்படத்தில் நாகார்ஜூன், ஜீவா, பாபி சிம்ஹா, ராணா, ஹன்சிகா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, ரேவதி, காஜல் அகர்வால், உள்ளிட்ட நட்சத்திரங்கள் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.


உடல் அமைப்பிலோ, தோற்றப் பொலிவிலோ இருப்பது அழகு அல்ல; நல்ல எண்ணம் தான் உண்மையான அழகு என்பது தான் இப்படத்தின் மையக் கருவாகும். அழகாக இருப்பதற்கு இயற்கையான முறைகளே போதும், செயற்கையான முறைகள் வேண்டாம் என்றும் இப்படத்தின் மூலமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.


பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் குண்டான தோற்றம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். அதன் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. உடனே சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றது.



முதலில் வெளியிடப்பட்ட போஸ்டர்:



2 உப்புக்கருவாடு

மொழி’, ‘அபியும் நானும்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். வித்தியாசமான கதையும் திரைக்கதையும் கொண்டு வெளியான இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. அதன் பிறகு நாகார்ஜூனாவை வைத்து ‘பயணம்’ படத்தை இயக்கினார்.

இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கௌரவம்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இப்படத்தையடுத்து அடுத்ததாக படம் இயக்க தயாராகிவிட்டார். இவர் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘உப்பு கருவாடு’ என்று பெயர் வைத்துள்ளார்.
இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான சதீஷ், நந்திதா ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் இடம் பெறும் மற்ற கதாபாந்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் கூடிய விரைவில் வெளியிட உள்ளனர்.

அறிமுக இசையமைப்பாளர் பிரபல கிடார் இசைக்கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறாராம். பர்ஸ்ட் காபி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராம்ஜி நரசிம்மனுடன் இணைந்து உப்புக்கருவாடு படத்தை தயாரிக்கிறார் ராதாமோகன்.

கடல் வாழ் மக்கள் கடல்சார்ந்த பகுதிகளில் முழுவதுமாக படமாக்கப்படும் ‘உப்புக்கருவாடு' அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் கதை என்கிறார் ராதாமோகன்.

நகைச்சுவை கதை உப்புக்கருவாடு முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டுள்ளதாம். லட்சியம் உள்ளவர்கள் சமரசம் ஆகக்கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும் என்கிறார் ராதாமோகன் இதை அடிப்படையாக வைத்தே உப்புக்கருவாடு படத்தினை இயக்கியுள்ளாராம்.

இந்தப்படத்தில் ஜிகர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் நடித்த கருணாகரன் ஹீரோவாக நடிக்கிறார். நந்திதா ஜோடியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, புதுமுகம் ரக்ஷிதா, டவுட் செந்தில், ஆகியோர் நடிக்கின்றனர்.
3 144


சிவா நடித்த கலகலப்பு தவிர்த்து சமீபத்திய எந்தப் படமும் ஓடவில்லை. அதனால் சிவாவை வைத்து படம் தயாரிக்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
 
மூன்று ஹீரோக்களில் ஒருவராக சிவா நடிக்கும் மசாலாப் படம் என்ற ஒரேயொரு படம் மட்டுமே தற்போது அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் 144 என்ற புதிய படத்தில் சிவா ஒப்பந்தமாகியுள்ளார்.
 
அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தை சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். இதில் சிவா திருடனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சி.வி.குமாரின் படங்களுக்கு ரசிக மட்டத்திலும் சரி, விமர்சகர்களிடத்திலும் சரி ஆரோக்கியமான எதிர்பார்ப்பு உண்டு. குறும்பட இயக்குநர்கள் பலரைப் பெரும்பட இயக்குநர்களாக்கிய பெருமை சி.வி.குமாருக்கு உண்டு.
அந்த வகையில் அடுத்த ஆச்சரியமாக இதுவரை குறும்படம்கூட இயக்காத ஜி.மணிகண்டனுக்கு தன் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஒரு படம் இயக்க வாய்ப்பு வழங்கியிருக்கிறார். அந்தப்படம் ‘144’.
மிர்ச்சி ஷிவாவும், அசோக்செல்வனும் நாயகர்களாக ஓவியாவும், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நாயகியராகியிருக்கும் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமாருக்கு எப்படி ஜி.மணிகண்டன் மீது நம்பிக்கை வந்தது. மணிகண்டன் விளக்கினார்.
“சிறிய வயதிலிருந்து சி.வி.குமார் என் நண்பர். ஒன்றாகவே படித்தோம். அப்போதெல்லாம் சின்னச் சின்னதாக நிறைய கதைகள் டிஸ்கஸ் செய்திருக்கிறோம். நான் எந்த இயக்குநரிடமும் அஸிஸ்டண்டாக இருந்ததில்லை. குறும்படம் கூட இயக்கியதில்லை. சி.வி.குமாரின் ‘அட்டகத்தி’ படத்தில் சில கிராபிக்ஸ் காட்சிகள் செய்து கொடுத்தேன்.
144-Audio-Launch-Stills-3
ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து நான் அவரிடத்தில் சொன்ன 144 கதையைப் படமாக திடீரென்று அறிவித்துவிட்டார். எனக்கே என் மீது நம்பிக்கை இல்லாதபோது “உன்னால் முடியும்…” என்று நம்பிக்கை வைத்தது மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் எனகு முழு சுதந்திரம் கொடுத்தார். அவர் இல்லாமல் நான் இயக்குநராக ஆகியிருக்க முடியாது..!”

144 படம் பற்றி சி.வி.குமார் சொன்னது…
“நான் நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன். அவர்களிடம் உள்ள பொதுவான குறை, எவ்வளவு புட்டேஜ் தேவையோ அந்த அளவுக்கு எடுக்காமல் நிறைய எடுத்துவிடுவது. என் படங்கள் பெரும்பாலும் ஐந்து மணிநேரம் ஓடக்கூடியவையாக இருந்திருக்கின்றன. அவற்றை சிதையாமல் வெட்டி ஒரு முழுமையான படமாக அளிப்பதில் முதல் இடம் வகிப்பவர் எங்கள் எடிட்டர் ‘லியோ ஜால்பால்’தான்.
144 படம் கூட கொஞ்சம் அதிகமாகத்தான் வந்தது. அதைக்கூட இரண்டேகால் மணிநேரத்தில் தந்தது ‘லியோ’தான். ஆனால், மணிகண்டன் என் நண்பர். எங்கள் வீட்டுக்கு அருகில்தான் அவர் வீடும் இருக்கிறது. அவர் திறமை மீது உள்ள நம்பிக்கையால் இந்தப்படத்தை அவருக்குத் தந்தேன். 144 வரும் 27ம் தேதியன்று திரைக்கு வருகிறது..!”
சி.வி.குமார் பாராட்டிய லியோ என்ன சொல்கிறார்..?
“படம் எத்தனை நீளமாக வந்தாலும் பரவாயில்லை. நமக்குக் கதையில் நாட்டம் இருந்தால் போதுமானது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் எனக்குப் பிடித்திருந்தது. சின்ன கதைதான். ஆனால், பத்து நிமிடத்துக்கு ஒரு திருப்பமாக பல கிளைக்கதைகள் இருக்கும்.
கிட்டத்தட்ட நாற்பது கேரக்டர்கள் படத்தில் வருவார்கல். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். அந்த வகையில் வித்தியாசமான கதைக்களம். அது சிதைந்து விடாமல் படத்தைத் தொகுப்பது ஒரு சவால். அந்த வகையில் அதை ரசித்துதான் செய்கிறேன்..!”
சி.வி.குமாரின் படங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதன் ரகசியம் சரியானவர்களின் தேர்வும், இந்த படைப்பாளிகளின் ஈடுபாடும்தான்..!
-webduiya
























Friday, November 06, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 06/11// 2015 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை


கிரிங் கிரிங் (திகில்)
உயிர் வரை இனித்தாய் (காதல்)
இனிய உளவாக (பேமிலி) #6/11/2015 ரிலீஸ்


1/கிரிங் கிரிங் (திகில்)
kumar
எட்டே நாட்களில் எடுக்கப்பட்டுள்ளக்ரைம் திரில்லர் படம் ‘கிரிங் கிரிங்’.செய்யாத கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொள்கிற நாயகன்அதிலிருந்து மீளப்போராடுகிறான்.அதிலிருந்து வெளியே வர அவன்தவிக்கிற தவிப்பும்  பதைபதைக்கிற பதற்றமும் .
போராட்டமும்தான்கதை. இது ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர். இது ஒரே இரவில் நடக்கும் கதை. நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார் இவர்ஏற்கெனவேசிலபடங்களில் தோன்றியவர். நாயகியாக காவ்யா நடித்துள்ளார். படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் ராகுல். இவர் வின்சென்ட்செல்வாவின் மாணவர். படத்தில் நடித்துள்ள நாயகன் ரோஹன் உள்பட பெரும்பாலானநடிகர்கள் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். படத்தின் பரபரப்புக்கு வேகத்தடையாக இருக்குமென்று பாடல்கள்படத்தில் இடம் பெறவில்லை.

IMG_3081
சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் எண்ணி எட்டே நாட்களில்படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார் இயக்குநர் ராகுல். படத்துக்கு ஒளிப்பதிவு துவாரகேஷ், இசை ஜூடு, படத்தொகுப்புசிவதர்மா. நிறைய குற்றங்களில் துப்பு துலங்கி குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கஉதவியாக இருப்பது மொபைல் போன்தான். படத்தில் மொபைல்போனின் ‘கிரிங் கிரிங்’ ஒலி பெரிய திருப்பங்களுக்கு வழி வகுப்பதால் படத்துக்கு இப்பெயர் வைக்கப் பட்டுள்ளது.
எட்டே நாளில் ஒரு படமா? அவசரக் கோலமாக இருந்து விடாதாஎன்று இயக்குநர் ராகுலிடம் கேட்டபோது ” நன்றாகத் திட்டமிட்டால்எதையும் செய்ய முடியும். இது ஒரே இரவில் நடக்கும் கதை. எதையும் செய்ய முடியும். இது ஒரே இரவில் நடக்கும் கதை.அதனால் எட்டே நாட்களில் எடுத்து முடித்தோம். இதன் பின்னால்சரியான திட்ட மிடலும் பலரது உழைப்பும் இருந்தது. இது அவசரமாகஎடுக்கப்பட்ட படமல்ல. விறுவிறுப்பான திரைக்கதை.இருக்கும்.எனவே பரபரப்புக்குப்  பஞ்சமிருக்காது.
இன்று 2 கோடி 10 கோடி பணம் இல்லாமல் படம் எடுக்க முடியாதுஎன்று பேசுகிறார்கள்.. ஆனால் படத்தின் தயாரிப்பு ச் செலவைக் காட்டிவியாபாரம் செய்ய முடியாது. படத்தில் புதுமை, இருக்க வேண்டும்.கதை சொல்லும் விதத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும். அப்படிஎடுக்கப் படுகிற படத்துக்கு வியாபாரிகள் வருவார்கள். வியாபாரம்நடக்கும்.” என்கிற இயக்குநர், தனக்கு இயக்கத்துடன் தயாரிப்புத்திறமையும் இருப்பதால் ‘ஆர்பி எம் சினிமாஸ் ‘சார்பில் படத்தைத்துணிந்து தயாரித்ததாகக் கூறுகிறார்



2/உயிர் வரை இனித்தாய்
u
கடந்த ஞாயிறு (27/07/2014) மாலை பாரிஸ் மாநகரில் உயிர் வரை இனித்தாய் அலைமோதும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் பிரமாண்டமாக வெளியானது, இளைஞர்கள் தொடங்கி பெண்கள் வரை திரளாக வருகை தந்ததை காண கூடியதாக இருந்தது.
மாலை 6h30 மணியளவில் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன் பிரான்ஸ் வாழ் கலைஞர்களை ஒன்றுதிரட்டி கௌரவிக்க பட்டது அத்துடன் மதிய விருந்து உபசாரமும் சிறப்பாக நடைபெற்றது
இச் சிறப்பு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார் டென்மார்க்கிலிருந்தும் இத் திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள் அனைவரும் பங்கு பற்றினார்கள்
உயிர் வரை இனித்தாய் திரைப்பட உருவாக்கத்திற்கு பக்க பலமாக இருந்த கலைஞர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். பல கலைஞர்களை மேடையேற்றி கௌரவித்து, படத்தின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.பின்பு மாலை 300 க்கும் மேற்பட்ட மக்களின் அலை மோதும் கூட்டம் அரங்கை நோக்கி வருகை தந்த வண்ணம் இருந்தார்கள் 6h40 மணியளவில் உயிர் வரை இனித்தாய் திரைப்படம் திரையிடப்பட்டது.
அங்கு வருகை தந்த மக்களின் கருத்துக்களை தமிழிதழ் நேரடியாக வீடியோ பதிவு செய்த காணொளியை இவ் இணைப்பில் பார்வையிடலாம்.
மேலும் திரைப்பட விமர்சனம் விரைவில் தமிழிதழில் பிரசுரிக்கப்படும்.
எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் திரைக்கு வருகிறது. பார்க்க தவற விட்டவர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறார்கள் பட குழுவினர்கள்.
திரைப்பட கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் மென்மேலும் வெற்றிப் படிகளைத் தொட வாழ்த்துக்கள்.


3/இனிய உளவாக


-

Friday, September 04, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/09// 2015 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

சவாலே சமாளி படத்தை 170 தியேட்டர்களில், திட்டமிட்டபடி திரையிடுவேன்'' என்று நடிகர் அருண்பாண்டியன் கூறினார்.


விஷால்-காஜல் அகர்வால் நடித்து, சுசீந்திரன் டைரக்ஷனில் வேந்தர் மூவீஸ் தயாரித்த 'பாயும் புலி'படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் தரப்பில் திடீர் தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து, ''4-ந் தேதி (நாளை) முதல் எந்த தமிழ் படமும் வெளியிட மாட்டோம்'' என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.



பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், பானு ஆகிய 4 படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருவதாக இருந்தது. தயாரிப்பாளர்களின் போராட்டம் காரணமாக இந்த 4 படங்களும் இன்று திரைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில், 'சவாலே சமாளி'படத்தை தயாரித்துள்ள நடிகர் அருண்பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு தன் உறுப்பினர்களுக்கே பாதிப்பாக அமைந்துள்ளது. 'பாயும் புலி'படத்துக்கு ஏற்பட்டிருப்பது தனிப்பட்ட பிரச்சினை. 24 மணி நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, சக தயாரிப்பாளர்களுக்கு பாதகமான முடிவு.



நாங்கள் தயாரித்துள்ள 'சவாலே சமாளி'படம் எந்த சவாலையும் சமாளிக்கும். படம் திட்டமிட்டபடி இன்று திரைக்கு வரும். 170 தியேட்டர்களில் படம் திரையிடப்படும்.
படம் திரைக்கு வருவதை திடீர் என்று தள்ளி வைத்தால், வெளிநாடுகளில் எங்கள் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவார்கள். மேற்கொண்டு எந்த படத்தையும் அங்கு திரையிட முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே திட்டமிட்டபடி, 'சவாலே சமாளி'படத்தை திரைக்கு கொண்டு வருவோம்.''
இவ்வாறு அருண்பாண்டியன் கூறினார்.


இதேபோல், ''பாயும் புலி படம் திட்டமிட்டபடி இன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும். கடின உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு'' என்று அந்த படத்தின் கதாநாயகன் விஷால் சமூகவலைத்தலங்களில் அறிவித்து இருக்கிறார்.


1.பாயும் புலி
2 சவாலே சமாளி
3 போக்கிரி மன்னன்  
4 பானு#  4/9/2015


Paayum Puli


அதாவது, படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறாராம். அது யார் என்பது படம் பார்க்கும் போது தெரியும் என்றார்.
படம் பார்த்த பிறகும் தெரியாமலிருக்க, அவர் ஒன்றும் இன்விசிபிள் மேன் இல்லையே.
சரி, பாயும் புலியின் கதை என்ன?
படத்தில் விஷால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார். கெட்டவர்களை போட்டுத் தள்ளுவதுதான் இவர் டூட்டி. தன் மீது கை வைத்தால் சாதாரணமானவனே சும்மாயிருக்க மாட்டான்.
ஒரு போலீஸ்காரன் அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மீது கை வைத்தால்...? இதுதான் பாயும் புலி படத்தின் கதை என்றார் சுசீந்திரன்.
பாஸ்... இதுக்கு பேரு கதையில்ல, பில்டப்.


1971ல் வெளிவந்த சிவாஜி நடித்த படம் - சவாலே சமாளி! இப்போது இந்தத் தலைப்பில் புதிய படம் ஒன்று வெளிவரவுள்ளது.
தெகிடி புகழ் அசோக் செல்வன் நடிக்கும் இந்தப் படத்தில் பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இதன் இயக்குநர். தயாரிப்பு - அருண் பாண்டியன்.
சிவாஜி படத்தலைப்பை இதற்குச் சூட்டியது ஏன்? பதில் சொல்கிறார் இயக்குநர்.
இந்தத் தலைப்பு கிடைக்க மிகவும் சிரமமாக இருந்தது. தயாரிப்பாளர் அருண் பாண்டியன் 3 மாதங்களாகப் போராடி இந்தத் தலைப்பைப் பெற்றார். காமெடி படம் என்பதால் முதலில் கெக்கே பிக்கே என்றுதான் தலைப்பு வைத்தோம். ஆனால் படத்தில் கதாநாயகன் பல சவால்களைச் சந்திப்பதால் சவாலே சமாளி என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என எண்ணினோம் என்றார்.
சிநேகன் வரிகளில் 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் எஸ். தமன். செப்டம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாக உள்ளது.


டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் நாயகனாக அறிமுகமாகும் போக்கிரி மன்னன் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.
நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் உதவியாளராக இருந்தவர் ஸ்ரீதர். கூட்டத்தோடு கூட்டமாக நடனமாடிக் கொண்டிருந்தவர் படிப்படியாக நடன மாஸ்டராக உயர்ந்தார். தொலைக்காட்சியில் நடக்கும் நடனப் போட்டிகளின் நடுவராகவும் செயல்பட்டார். காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்கமுக்க பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலம் ஸ்ரீதர் சினிமா வட்டாரத்திலும், வெளியிடும் தனித்து அடையாளப்படுத்தப்பட்டார். இன்று ஸ்ரீதர் நடனம் அமைக்காத படங்கள் குறைவு என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.
இவர் சில படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நாயகனாக அறிமுகமாவது போக்கிரி மன்னன் படத்தில். ராகோ மாதேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. 
விரைவில் படம் திரைக்கு வருகிறது.


பசவா புரொடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கமல்தீப் பிச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பானு.’
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜி.வி.சீனு இயக்குகிறார். கே.அப்துல் ரஹ்மான் ஒளிப்பதிவு செய்ய, உதயராஜ் இசையமைக்கிறார். படத்தின் கதாநாயகர்களாக G.V.சீனு மற்றும் உதயராஜ் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக நந்தினிஸ்ரீ நடிக்கிறார்.
மேலும் ஜவஹர், கவிப்ரியா, நதிஷா, சுஜிபாலா மற்றும் கோவை செந்தில், சிசர் மனோகர், லொள்ளு சபா மனோகர், போண்டாமணி, குள்ளமணி, தினேஷ்மணி என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடித்திருக்கின்றனர்.
ஒரு நாத்திக இந்து வாலிபனுக்கும், முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டம்தான் இத்திரைப்படம். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு குத்தாட்ட பாடலுக்கு சுஜிபாலா ஆடியுள்ளார்.
இப்படத்தின் பாடல்களை அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், சத்யன், லதா ராஜ்குமார் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான உதயராஜ் ஆகியோர் பாடியுள்ளனர். அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையிலுள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

நன்றி- த இந்து, மாலைமலர் , தினமணி , வெப்துனியா

Friday, August 28, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28//8/ 2015 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1.தனி ஒருவன் ( ஜெயம் ரவி,நயன் தாரா)
2 அதிபர் ( ஜீவன்,வித்யா)
3 தாக்க தாக்க

3 NO ESCAPE (Lake Bell, Pierce Brosnan,) # 28/8/2015



 அதிபர்

யுனிவர்சிட்டி', ‘திருட்டுப்பயலே', ‘நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜீவன்.

இவர் நடிப்பில் கடைசியாக ‘நான் அவன் இல்லை-2' படம் வெளிவந்தது. இந்த படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து, தனது சொந்த தொழிலை கவனித்துக் கொள்வதற்காக வெளிநாடு போய்விட்ட, ஜீவன் தற்போது மீண்டும் திரும்பி வந்து தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ‘மாயி', ‘திவான்', ‘மாணிக்கம்' ஆகிய படங்களை இயக்கிய சூரிய பிரகாஷ் இயக்கும் புதிய படத்தில் ஜீவன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு அதிபர் என்று தலைப்பிட்டுள்ளனர். இவருடன் சமத்திரக்கனி, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா, சிங்கமுத்து, ராஜ்கபூர், கோவை சரளா, மதன்பாப், வையாபுரி, சம்பத்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். ‘செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் ‘சிவா' என்ற கதாபாத்திரத்தில் ஜீவன் நடிக்கிறார். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ‘ஈஸ்வரன்' கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைக்கிறார். பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.



2 தனி ஒருவன்



 கடைசியில் தனி ஒருவனுக்கு தேதி குறித்துவிட்டார்கள். ஆக.28 படம் திரைக்கு வருகிறது.
ரீமேக் படங்கள் மட்டும் இயக்கி வந்த ராஜா, முதல்முதலாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம், வேலாயுதம். தொடர் தோல்விகளில் இருந்த விஜய்க்கு அப்படம் சுமார் வெற்றியாக அமைந்தது. அதன் பிறகு அவர் இயக்கியிருக்கும் படம்தான், தனி ஒருவன்.
ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஆனால், தனி ஒருவனின் விசேஷம், அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருப்பது.
தமிழில் சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வந்தவர் தனி ஒருவனில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். தனி ஒருவன் மீதான எதிர்பார்ப்பை இதுதான் அதிகப்படுத்துகிறது.


தலை எழுத்தைத்தீர்மானிப்பது 

3  NO ESCAPE

  • In their new overseas home, an American family soon finds themselves caught in the middle of a coup, and they frantically look for a safe escape in an environment where foreigners are being immediately executed.


விக்ராந்த் நாயகனாக நடித்திருக்கும் 'தாக்க தாக்க' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்த், அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், அபிநயா, லீமா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தாக்க தாக்க'. பிஜாய் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுஜித் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெர்சடைல் ஸ்டூடியோ தயாரித்திருக்கும் இப்படத்தை தாணு வெளியிடுகிறார். இப்படம் நாளை (ஆகஸ்ட் 28) வெளியாக இருக்கிறது.
இப்படத்தை விஜய்க்கு திரையிட்டு காட்டினார்கள். "படத்தின் முதல் பாதி கதை சார்ந்து மிக அருமையாக இருந்தது. நான் இரண்டாம் பாதியை மிகவும் ரசித்தேன். அதிலும் கடைசி 40 நிமிட காட்சிகள் அருமை. விக்ராந்த் இரண்டாம் பாதியில் மிக நன்றாக நடித்திருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. அவர் கண்டிப்பாக ஜெயிப்பார்." என்று தெரிவித்திருக்கிறார் விஜய். விக்ராந்த் விஜய்யின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் தங்கள் நண்பன் விக்ராந்துக்காக விஷால், ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் ஒரு பாடலுக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.


நன்றி - த இந்து  , தினமணி , மாலை மலர் , வெப் துனியா, ஆல் சினி வெப்சைட்

Friday, August 21, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/8/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1 திகார் 2 ஜிகினா 3 அலுச்சாட்டியம் 4 வீரபாண்டிய கட்டபொம்மன் ( டிடிஎஸ் பிரிண்ட்) 5 KICK 2 ( TELUGU)
fantastic 4 # 21.8.2015

Madurai theatres list thikaar

1 திகார்
காட்சன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் “திகார்” படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் அலெக்ஸாண்டர் என்ற பிரபலமான தாதா வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நடிக்கிறார்.
மற்றும் இளம் கதாநாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார்.
அகன்ஷாபூரி, கிருதிபாபட் ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் காதல்தண்டபாணி, பாண்டிரவி, எம்.எஸ்.பாஸ்கர்,மனோஜ், கே.ஜெயன்,ரியாஸ்கான்,தேவன்,கிரேன் மனோகர், சிசர்மனோகர், கொட்டாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு   –  சேகர் .வி.ஜோசப்
இசை  –   ஆர்.கே.சபீர்
பாடல்கள்    –  பேரரசு , கலை   –   வல்சன் 
எடிட்டிங்  –  வி.ஜெய்சங்கர் ,ஸ்டன்ட்    –  தீபொறி நித்யா
நடனம்   –   RDX
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பேரரசு
தயாரிப்பு   –   காட்சன் பிலிம்ஸ்
படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்ட போது…..
பாண்டிச்சேரியில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்கு மூன்று அதிரடி சண்டை காட்சிகள் , ஒரு பாடல் காட்சி மற்றும் படத்தில் இடம்பெறும் இருபது காட்சிகள் படமாக்கப்பட்டது.
பார்த்திபன் – மும்பை வில்லன் ஜியாத் உடன் மோதும் அதிபயங்கர சண்டை காட்சிகளும் அங்கே படமானது.  பார்த்திபன் – பிரியங்கா டூயட் காட்சி ஒன்றும் அங்கே படமாக்கப் பட்டது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இதற்கு முன்பு பார்த்திபன் ஏற்றிராத வித்தியாசமான வேடம் இந்த  அலெக்ஸாண்டர் வேடம்.  நகரத்தையே தன் கைகுள் வைத்து ஆட்டிப்படைக்கும் தாதா வேடம் பார்த்திபனுக்கு என்றார் பேரரசு
Fb cheating real story
2 ஜிகினா

ராகுல் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கேடிகே தயாரிக்கும் புதிய படம் ‘ஜிகினா’.
இப்படத்தில் விஜய் வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சானியா தாரா நடிக்கிறார். மேலும் சிங்கம் புலி, ‘கும்கி’ அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களோடு தற்போது தொலைக்காட்சியில் பிரபலகமாகி வளர்ந்து வரும் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்க, புது இசையமைப்பாளர் ஜோன் இசையமைக்கிறார். இதற்கு முன்பு நந்தா பெரியசாமி “ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி” போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஜுலை 28ம் தேதியன்று ஆரம்பமானது. இயக்குனர் லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பை தொடக்கி வைத்தார்.
படத்தின் பெயரைப் போலவே மிகவும் உற்சாகத்துடன் , பிரகாசத்துடன் துவங்கிய ‘ஜிகினா ‘ படத்தின் ஒவ்வொரு காட்சியும்  படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும்,”’ என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.
தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் நாங்கள் திரை உலககிற்கு வர காரணம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான்.எங்களுடைய முதல் பட பூஜைக்கு லிங்குசாமி அவர்களே வந்ததோடு, காமிராவை துவக்கி வைத்து இருப்பது, என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று பெருமையுடன் கூறினார் தயாரிப்பாளர் கே டி கே. இந்த வருடம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
A c centre film

3 அலுச்சாட்டியம்

எந்நேரமும் குடியும், கும்மாளமுமாக அலுச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நாயகன் திருந்தி வாழ்ந்தாரா? அவரது அலுச்சாட்டியம் மேலும் தொடர்ந்தா? என்பதை சொல்லும் படமாக உருவாகி வருகிறது ‘அலுச்சாட்டியம்’. 

இப்படத்தில் ரகு என்ற புதுமுகம் கதாநாயகான நடிக்கிறார். கதாநாயகியாக ரம்யா நரசிம்மன் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும், மீசை ராஜேந்திரநாத், தவசி, போண்டாமணி, பெஞ்சமின், கிங்காங், கோவை செந்தில் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.

படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பிரேம்குமார். நித்யன் கார்த்திக் இசையமைத்துள்ளார். வி.டி.ராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். நிசா பிக்சர்ஸ் சார்பில் விஜயகுமார் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இவரே படத்திற்கு கதையும், வசனமும் எழுதியிருக்கிறார். 

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வருகிறது. பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
Sivaji's the best
4 வீரபாண்டிய கட்டபொம்மன் ( டிடிஎஸ் பிரிண்ட்)


Kick2
5 KICK 2 ( TELUGU)


நன்றி-தினமணி,மாலைமலர்,ஆல்சினி வெப்சைட்

Friday, August 14, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14/8/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1வாலு

2

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க



3அகிலா

4நிராயுதம்


1வாலு

Vaalu Madurai,Ramanathapuram theatre list
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'வாலு' திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'வாலு'. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட முடிவு செய்தது.

Namma aalu vaalu
அதனைத் தொடர்ந்து நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி வாங்கிய கடன் விவகாரங்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 17ம் தேதி வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்டது.
சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒவ்வொரு பிரச்சினையாக முடித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீடு என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்துக்காக உதயநிதி ஸ்டாலின் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துவிட்டதால் 'வாலு' வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினை திட்டித் தீர்த்து வந்தார்கள். இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது குறைவான திரையரங்குகளே கிடைத்திருந்தாலும், 'வாலு' படத்தை வெளியிட டி.ராஜேந்தர் முடிவு செய்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் விளம்பரத்தில் திரையரங்க பெயர்களோடு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீடு என்ற விளம்பர வெளியாகி இருக்கிறது.
மேலும், ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீடு தகவல் குறித்த 10 விநாடிகள் கொண்ட சிறு ட்ரெய்லர்களை யு-டியூப் தளத்தில் பதிவேற்றி வருகிறார்கள். இதனால் ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.



வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க


Vsop santhanam aarya m Rajesh compo.Madurai,Ramanathapuram theatres list
ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். ‘V.S.O.P’ என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் மற்றும் ராஜேஷ் மூவரின் வெற்றி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள்.

Vsop Madurai theatres list
சமீபத்தில் வெளியான V.S.O.P டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மீண்டும் ஆர்யா சந்தானத்துடன் கூட்டணி அமைத்த மகிழ்ச்சியை நம்மிடையே பகிர்கிறார். “காதல், ஃப்ரெண்ட்ஷிப், காமெடிதான் நம்ம ஏரியா மக்களும் நம்மிடம் இருந்து அதைதான் எதிர்பார்க்கிறார்கள். அதையே செய்வதுதான் நமக்கும் உத்தமம்” என்று ஆரம்பித்தார் இயக்குனர். “ V.S.O.Pனா ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ இருவரும் சிறு வயதிலிருந்து நண்பர்கள்.
இவர்கள் இடையே பெண்களால் ஏற்படும் விளைவுகளை மிக கலாட்டாவாக சொல்லியிருக்கிறோம். படம் முழுக்க இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் நிஜ வாழக்கையில் எப்படி கலாய்த்து கொள்வார்களோ அதே இயல்புடன் வருகிறார்கள் ஆர்யாவும் சந்தானமும் வருகிறார்கள்.” “ ரசிகர்கள் அனைவரையும் டீசர் கவர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. படத்தின் ஒற்றை பாடல் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நிரவ் ஷா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு மேற்கொள்ள, D இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது V.S.O.P. ஆகஸ்ட் 14ஆம் தேதி மக்கள் மகிழ்ந்திட திரையரங்குகளில் V.S.O.P வெளியாகவுள்ளது. உங்கள் நண்பர்களோடு நீங்கள் கழித்த அந்த ஜாலியான நாட்களை இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மீண்டும் நினைவில் நிறுத்தும்.” எனக் கூறினார் இயக்குனர் ராஜேஷ்.

A c centre film
3அகிலா


4நிராயுதம்


A gilma crime thriller movie
Embedded image permalink



  1. Brothers
    2015 film
  2. Two estranged, street-fighting brothers (Akshay Kumar, Sidharth Malhotra) square off against each other in a mixed martial arts tournament.
  3. Initial releaseAugust 14, 2015 (USA)
Thriller movie (Hindi)