Showing posts with label மாஸ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label மாஸ் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, May 29, 2015

மாஸ் - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமா வுக்கு  இப்போ  பேய் சீசன் ,இதுவரை கோடம்பாக்கத்தில்  கோலோச்சிய பேய்ப்படங்கள் லிஸ்ட்  எடுத்தா  ஜெகன்மோகினி, நீயா?யார்?,சந்திரமுகி,அருந்ததி,பீட்சா , யாவரும் நலம் .அரண்மனை ,முனி, காஞ்சனா1, காஞ்சனா 2 , யாமிருக்க பயமே ,டார்லிங், டிமாண்டிகாலனி  அப்டினு  பட்டியல் நீண்டுக்கிட்டே போகும் .அந்த வகைல   சூர்யா தன்னோட பங்குக்கு  ஒரு பேய்ப்படம்  கொடுத்திருக்கார் .


வெங்கட் பிரபு வுக்கு  ஒரு ராசி உண்டு . இதுவரை அவர் ஃபிளாப்  படமே தர்லை . செம ஹிட் படங்கள் , சராசரி வெற்றிப்படங்கள் என எப்பவும்  அவர் பாதுகாப்பான  எல்லையில்  தான் இருக்கார். சென்னை -28,சரோஜா, மங்காத்தா இவை 3ம் அவர் உச்சபட்ச ஹிட்சுன்னும், கோவா, பிரியாணி  சுமார்  ரக ஹிட்சும்னும்  சொல்லலாம். மாஸ்  எந்த  ரகம்னு பார்ப்போம் .


ஹீரோவும் , ஹீரோவோட ஃபிரண்டும்  2ஜி அளவோ , டான்சி அளவோ  இல்லாம  சின்ன அளவில் திருடும் திருடர்கள் .( இந்தக்காலத்துல திருடனையும் , கொள்ளைகாரனையும், தான் ஜனங்களுக்குப்பிடிக்குது, உயர் பதவியில் அமர வெச்சு வேடிக்கை பார்க்கறாங்க ) 2 பேரும்  ஒரு விபத்தில்  சிக்கிக்கறாங்க . இதுல ஹீரோவோட ஃபிரண்ட் ஸ்பாட் அவுட். அவரு இயக்குநரோட தம்பி என்பதால் சாகாம  பேயா மாறி   படம் முழுக்க  ஹீரோ  கூடவே பேயா சுத்தறாரு .

ஹீரோக்கு  தலைல அடிபட்டுடுச்சு. தமிழ்  சினிமா  ஹீரோக்கு  தலைல  அடிபட்டா  என்ன ஆகும்? ரெண்டே சாய்ஸ் தான் . நான் யாரு? எங்கே இருக்கேன்?னு பேக்கு மாதிரி  கேட்டு பழசை  எல்லாம் மறந்துடுவாரு . அல்லது அவருக்கு  அபூர்வ சக்தி  ஏதாவது  வந்துடும் . இதுல  ஹீரோக்கு  பேய்களை  மனித  உருவில் காணும்  வாய்ப்பு கிடைக்குது.


ஹீரோ இதை வெச்சு பணம் பண்ண நினைக்கறார். உங்க வீட்ல பேய் நடமாட்டம் இருக்கு அவங்களை விரட்றேன்னு சொல்லி காசு சம்பாதிக்கறார். ஹீரோவோட அபூர்வ சக்தியை  அறிஞ்சுக்கிட்ட பேய்ங்க  தங்களோட  நிறைவேறாத ஆசைகளை  நிறைவேற்ற  ஹீரோவைப்பயன்படுத்திக்குதுங்க . எப்படி காங்கிரசும் , திமுக வும் ஒருவருக்கு ஒருவர் ஊழல்ல துணையா  இருந்தாங்களோ அந்த  மாதிரி. ஜெ வும் , சசிகலாவும் போல .

அப்போதான்  ஒரு வீட்டுக்கு பேய் ஓட்டப்போன ஹீரோ  தன் அப்பா பேயை  சந்திக்கறார். அப்பாவோட குடும்பத்தையே அழிச்ச  கும்பலை  பழி  வாங்க ஹீரோ  எப்படி  உதவி பண்றார் என்பதுதான்  கதை


 சுருக்கமா சொல்லனும்னா  அப்பா அம்மா, அக்காவைக்கொன்னவங்களைப்பழிவாங்கும்  வழக்கமான  பழி வாங்கும், கதைதான்  பேய்  , திகில் வகையறால  சொல்லி இக்ருக்காங்க


ஹீரோவா   அகரம் ஃபவுண்டேஷன்  சூர்யா . அஞ்சான்ல  வாய்ல குச்சியோட வந்தாரு, இதுல காதில்  ஹூக்கோட வர்றாரு. பேய்  சூர்யா ஹேர் ஸ்டைல்  , கெட்டப்  எல்லாம் ஹாலிவுட்  தர மேக்கப் . கலக்கல்  ரகம் . 2 கெட்டப்  என்பதால் ஆக்சன் காட்சிகளுக்கே  டைம்  சரியா  இருக்கு , பாவம்  ரொமான்ஸ் ஏரியா  கவர்  பண்ண முடியல .




ஹீரோயினா , அப்பாவுக்கு  ஜோடியா  பிரனீதா. வெண்ணெயில்  செஞ்ச  மிதக்கும் சிலை மாதிரி  ஒரு  தேகம் .வெய்யில்ல  போனா நிச்சயம் உருகிடுமோனு பதற  வைக்கும்  பளபளப்பு.பேருக்கு  ஏற்ற வகையில் சில காட்சிகளில் ப்ரா நஹி தா .காஸ்ட்யூம் செலவை  மிச்சம் பண்ணும் நல்ல மனசுக்காரி போல .


மகன் கேரக்டருக்கு ஜோடியா நயன் தாரா . சுருக்கமா சொல்லனும்னா  பிரனீதாவுக்கு  முன்னாடி  நயன் எடுபடலை .  பின்னாடி  எடுபட்டுதா?னு கேட்கக்கூடாது .தமிழன்  புற முதுகிட்டு  ஓடவும் மாட்டான், புற முதுகை  பார்க்கவும்  மாட்டான்.  சோகமான  வசனம் பேசும்  காட்சிகளில் அந்தக்கால  தேவயானி போல்  தலையை ஆட்டி ஆட்டி பேசுது . இதென்ன புதுப்பழக்கம் > மேடம்?


இயக்குநரோட  தம்பி அப்டிங்கற  ஒரே ஒரு காரணத்துகாக  படம்  முழுக்க  சும்மானாச்சுக்கும் வந்து  மொக்கை  போடும் பிரேம்ஜி  முடியல  ஜி . க்ளோசப்ல வேற  அடிக்கடி  காட்றாங்க . கருணை காட்டுங்க


சமுத்திரக்கனியை எல்லாம்  கேரக்டர் ஆர்டிஸ்ட்டா பார்த்து  தமிழன்  பழகிட்டான் . வில்லனா  காட்னா  ஏத்துக்குவானா?

 ஆர்  பார்த்திபன்  போலீஸ்  ஆஃபீசரா  இடைவேளைக்குப்பின்  வந்து  கலக்கறார்,ஒன்  லைன்  பஞ்ச் 8  சொல்றார் . ஓக்கே . பின் பாதி  போர் அடிக்காம  இருக்க  இவரும்  ஒரு காரணம்

மொட்டை  ராஜேந்திரன்  கெஸ்ட்  ரோல் . ஓக்கே





யுவன்  சங்கர்  ராஜா  பிஜிஎம்மில்  வழக்கம் போல் . வீரம் , கத்தி ,துள்ளாத மனமும் துள்ளும் , மான் கராத்தே  என ஆங்காங்கே டச்  பண்ணிட்டு  வர்றார். எதுக்கு? சொந்த  மியூசிக்  கடல்  போல்  இக்ருக்குமே?


 வெங்கட்   பிரபுக்கு ஒரே  ஒரு  அட்வைஸ் . நமக்கு  எது வருமோ அதை மட்டும் பண்ணனும், அடுத்தவன் பண்ணுனது  ஹிட் ஆகிடுச்சு நாமும்  அதே  போல்  ட்ரை  பண்ணலாம்னு பண்ணா இப்படித்தான்  சொதப்பிடும் .  காமெடி , த்ரில்லர் , நெகடிவ்  ஸ்டோரி தான்  உங்க  ஏரியா . அதிலே யே  ஸ்கோர்  பண்ணவும்

 வசனகர்த்தா வுக்கு  சம்பள  பாக்கி  போல ,.  கடனே -ன்னு  எழுதி  இருக்கார்

 ஒளிப்பதிவு  எடிட்டிங்  , ஆர்ட்  டைரக்சன்  ஓக்கே ரகம்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  சொல்லிட்டு ஏமாத்தற பழக்கம் என் அகராதிலயே கிடையாது - சூர்யா பஞ்ச் ( கவுதம் மேனன் க்கு துப்பறியும் ஆனந்த் கேன்சல் பதிலடி)


2 பெஸ்ட்டா யார் தர்றாங்க முக்கியம் இல்லை.பர்ஸ்ட்டா யார் தர்றாங்க?இதான் முக்கியம் - ஆர் பார்த்திபன் .சிம்பு உல்டா # மாஸ்

3 ஆர் பா = ஆன்ட்டனியைத்தெரியுமா?


------
மேலே பாத்தா ஆன்ட்டனா தான் தெரியும் # ஆர் பார்த்திபன் ராக்ஸ்




4 லேடி போலீஸ் = வெளியூர் போறதா இருந்தா சொல்லிட்டுப்போங்க


ஏன்?ட்ராவல்ஸ் வெச்சிருக்கீங்களா? # மாஸ்


5 இரு இரு.நீ சிலோனா?


ஹீரோ = தமிழன் ( அப்போ விஜய்?) # மாஸ்



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  நயன் தாரா வும் ப்ரனிதா வும் சம அளவு திறமையைக்காட்டி இருக்காங்களாம்.அதெப்டி.ப்ரணிதா நயனை விட குண்டாச்சே? # மாஸ்


2 எ வெங்கட் பிரபு சிக்சர் னு போடறாங்க.அஞ்சான் க்கு அடுத்து ஆறான் என்பதன் குறியீடா?


இந்தப்படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை.


ஆமா.ஒன்லி ஆடியன்ஸ்?


4 சூர்யா ஓப்பனிங் சீன் சிங்கம் பாணி


5 ஹீரோ முகத்தை க்ளோஸப்ல காட்டும்போதெல்லாம் பிரேம்ஜி பக்கத்தில வந்து பயமுறுத்தறாரு


6 படத்துக்குப்படம் இளமை கூடிக்கொண்டே போவது விஜய்க்கும் சூர்யாவுக்கும்

7 கத்தி தீம் இசை அடிக்கடி வருதே.யுவன் யூ டூ?

8 மருதாணியை கை விரலுக்கு வைக்கச்சொன்னா நயன் கூந்தலுக்கு வெச்சுடுச்சு போல

செம்பட்டை கலரிங் ஹேர்

9 சரக்கடிக்கலாம் வா அப்டிங்கற டயலாக் என்ன அவ்ளவ் பெரிய காமெடியா?பிரேம்ஜி அடிக்கடி அவரே சொல்லி அவரே சிரிக்கறாரு.முடியல


10 பைக் ல ஹீரோ வரும்போது பேக் சீட் ஹைட் கம்மி பண்ணிதான் வேறு ஒரு ஆளை உட்கார வைக்கனும்.பின் சீட் ஆள் ஹீரோவை விட ஹைட்டா தெரியக்கூடாது

11 சேசிங் காட்சிகள் எடுப்பதில் வெங்கட் பிரபு ஒரு விற்பன்னர்


12 நல்ல நாள்லயே யுவன் பிஜிஎம் ல பின்னுவாரு.பேய்ப்படம்னா கேட்கனுமா? மிரட்டல்


13 பெரிய பெரிய கண்டங்கள்ல இருந்து எல்லாம் தப்பி வந்தவன்டா நீ னு ஹீரோவைப்பாத்து சாமியார் டயலாக்.லிங்குசாமியைச்சொல்றாரோ?


14 சூர்யா மாதிரி ஒரு லீடிங் ஹீரோ ராகவா லாரன்ஸ் பாணி யில் பேய்ப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது பலமா?பலவீனமா?னு மக்கள் தீர்மானிப்பாங்க


15 ஆந்திரா கவுண்டமணி பிரம்மானந்தம் என்ட்ரி.டயலாக் டெலிவரி டாப்


16 பூ பூ பூச்சாண்டி பாடல் இசை கவர்ந்த அளவு பிக்சரைசேசன் கொரியோகிராபி கவரவில்லை


17 மாசு மட்டும் தான் சீன் போடனும்

வேற யாரும் இங்கே சீன் போடக்கூடாது - பிரேம்ஜி பஞ்ச் ( இது எந்த ஹீரோவுக்குனு நான் சொல்லத்தேவை இல்லை)


18 பேய்ப்படம் என்பதால் சூர்யாவை பெரிதாக ரசிக்க முடியவில்லை என்ற மைனசுடன் சராசரிப்பட தரத்துடன் இடைவேளை


19  கண்ணா! மேட்சை மட்டும் ஆடு. FOUR அடிச்சியா?போர் அடிச்சியா? சிக்சர் அடிச்சியா ?சிக்கல்ல மாட்னியா?னு மக்கள் சொல்வாங்க.அவங்கதான் அம்பயர்ஸ்


20 ஆர் பார்த்திபன் = சிரிப்பைப்பார்த்து பேர் வெச்சிருப்பாங்க போல.ரம்யா னு


21 கொழுக் மொழுக் சீமையிலே பிரனீதா என்ட்ரி


22 மொட்டை ராஜேந்திரன் ஓப்பனிங் சீன் க்கு வீரம் பிஜிஎம் .ஏதோ உள்குத்தா?எதேச்சையானதா?


23 மாசிலாமணியை சுருக்கமா/செல்லமா மாசி /மணி னு தானே கூப்டனும்?படத்துல எல்லாரும் மாசு மாசுனு கூப்டறாங்க

24 நயன் தாரா ,ப்ரனீதா என 2 கொழுக் மொழுக் இருந்தும் கிளாமர் பக்கம் போகாத இயக்குநரை பல்லைக்கடித்துக்கொண்டே பாராட்டுகிறேன்


25 இப்போதான் கவனிச்சேன்.ஹீரோ காதுல என்னமோ ஹூக் மாதிரி குத்தி இருக்காரு.ஆடியன்சுக்கு காது குத்தறோம்னு குறியீடு போல # மாஸ்்


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   போஸ்டர்  டிசைன் , மார்க்கெட்டிங்  டெக்னிக், டி வி விளம்பரங்கள்  எல்லாம் கன கச்சிதம் .


2   பேய்ப்பட  சீசன்  களை  கட்டி  இருப்பதால்  அதை  லாவகமாக பயன் படுத்த  நினைத்த வ் இதம்


3  ஹீரோயினா  நயன் , ப்ரனீதா  என இரு குல்பிகளை  புக்  பண்ணினது 



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 பேயால் மற்ற பொருள்களை  தூக்கவோ பயன் படுத்தவோ  முடியாது  என்பது போல் முன் பாதியில் பேயின் சக்தியின் எல்லைகளை  நிர்ணயிச்சுக்கறீங்க. அதனால அப்பா பேய் தன் மகன் மூலம் எதிரிகளை   பழி வாங்கறதா சொல்றீங்க , ஓக்கே , ஆனா  பின் பாதியில் பேய் கட்டிலை தூக்கி அடிக்குது , நமீதாவை விடப்பெரிய  கிரேனை இயக்குது . இது  எப்படி?இவ்வளவு செய்யும் பேய் பழி வாங்க முடியாதா?


2 படத்தின் பெரிய  பலமாக  இருந்திருக்க வேண்டிய ஆர் பார்த்திபன்  கேரக்டர் இதில்  பெரிய அளவில்  ஈர்க்க வில்லை , அவரது வழக்கமான நக்கல்  மிஸ்ஸிங்


3  பிரேம்ஜி  படம்  முழுக்க  வர்றார், இயக்குநரின் சகோ என்ற  ஒரே காரணத்துக்காக . ஆனா அவரு  பெரிய அளவில் ஸ்கோர் பண்ணலை


4  நிறைவேறாத ஆசைகளுடன்  பேயாக அலையும் கருணாஸ் , ஸ்ரீமன் , சண்முக சுந்தரம் இவங்களை வெச்சு பஞ்ச தந்திரம்  ரேஞ்சுக்கு காமெடி டிராக் அமைச்சிருக்கலாம், ஆனா மின்சாரக்கண்ணா போல்  மொக்கை  போடறாங்க

5  பேங்க்ல  ஃபிங்கர்  பிரின்ட்ஸ்  இல்லாமயே  லாக்கர்  எப்படி  ஓப்பன் பண்றாங்க?


6  பேயா  வரும்  சூர்யா  அடிக்கும்  பணத்தில்  ஆளுக்குப்பாதி  என டீலிங்  பேசும்பொது  பேய்க்கு  எதுக்கு  பணத்தேவை ? என்ற  சந்தேகம்  ஏன்  மனுஷ  சூர்யாவுக்கு  வர்லை?


7   பேயா  வரும்  கேரக்டர்கள்  ஒரு பயத்தையும்  ஏற்படுத்தலை . சிரிப்பும்  வர்லை . நாடகம்  பார்ப்பது  போல்  காட்சிகள்






சி  பி  கமெண்ட் =மாஸ் = அப்பா & பேமிலியைக்கொன்னவங்களைப்பழி வாங்கும் மாமூல் கதை பேய் பேக் கிரவுன்டில்.சுமார்தான்.விகடன் =40 ,ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = சுமார்




 ரேட்டிங் = 2.5 / 5


a




Erode Anna mass
Embedded image permalink
a





சார்.உங்க படம் சீன் பை சீன் நைனா(2002) மாதிரியே இருக்கே? லூஸ் மாதிரி பேசாதே.அதுல ஜெயராம் ஹீரோ.இதுல சூர்யா ஹீரோ # நீ லூஸ்னா நான் பக்கா லூஸ்




மாஸ்= 60% The Frighteners (1996)என்ற ஆங்கிலப் படத்தின் காப்பியாம். + 25% the sixth sense # நெட் தமிழர்கள்