Showing posts with label ஜூ வி. Show all posts
Showing posts with label ஜூ வி. Show all posts

Saturday, August 18, 2012

என்னை டார்ச்சர் பண்ணாங்க -ஜெ வழக்கு புகழ் வக்கீல் ஆச்சார்யா பேட்டி


a

நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி



ஆச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.



14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர்.


அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!

http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/Sasikala-DC.jpg.crop_display.jpg


1.''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''




''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).



2. ''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''




''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா?


எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''





3. ''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'



''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர்.


ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட்.


 இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s640/jj-cartoon.jpg

4. ''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''



(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!'' 



'5. 'அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''



''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''



6. ''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''




''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/j-sasi.jpg




7. ''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''



8. ''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''




''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''




9. ''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''



''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''



10. ''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''






''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''





http://www.envazhi.com/wp-content/uploads/2012/03/JAYA-WORTHLESS-RULE.jpg
11. ''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''



''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''



12. ''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''

''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''



13. ''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''




''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.



'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!

நன்றி - ஜூ வி



http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/jaya-marriage.jpg

Saturday, August 11, 2012

35,000 கோடி ஊழல்!!! அடேங்கப்பா சி டி ரெடி

35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.! 


இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்தும் முக்கிய அம்சமாக இருப்பது கனிமக் கொள்ளைதான் போலும்! ஆந்திராவில் நடந்தது மாபெரும் கொள்ளை. கர்நாடகாவில் ஆட்சியையும் முதலமைச்சர் களையுமே ஆட்டுவிப்பதும் இதுதான். வடகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பசுமை வேட்டைக்குத் தூண்டுதலாய் அமைந்ததும் கனிம வளங்கள்தான். அரசாங்கத்தின் சொத்தை தனியார் கொள்ளை அடித்துப் பதுக்கிக்கொள்வது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக இந்த முதலைகள் சிக்க ஆரம்பித்து உள்ளனர்!



கனிம வளங்கள் குவிந்துகிடக்கும் நிலப் பகுதி மலையாக, காடாக, மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அவை உடனடியாக தேசியச் சொத்தாக மாற்றப்படும். அதன் பின் அவை அடிமாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குக் குத்தகை என்ற பெயரில் தாரைவார்க்கப்படும். இப்படித்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதற்கு ஆப்பு வைப்பதுபோல் ஒரு முடிவு எடுத்து கனிமக் கொள்ளையர்களைக் கதிகலங்க வைத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.



ஜார்கண்ட் மாநிலத்தின் காத்குரி மற்றும் மேற்கு சிங்பும் பகுதிகள் இரும்புத் தாது நிரம்பிய மாவட்டங்கள். இங்கு இரும்புத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்போகிறோம் என்று கூறி ஆறு தனியார் நிறுவனங்கள் மாநில அரசிடம் அனுமதி பெற்றன. பிறகுதான் அவை அனைத் துமே, இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. 

உடனே அவர் களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஜார்கண்ட் அரசு ரத்து செய்தது. ஜார்கண்ட் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெச்.எல்.கோகலே ஆகியோர், 'கனிம வளங்கள் தேசிய சொத்து. தேசிய சொத்தைக் குத்தகைக்கு விடுவது, விடப்பட்ட குத்தகையை ரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகள் சுரங்கம் மற்றும் கனிம சட்டங்களுக்கு உட்பட்டது.



 இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. கனிம வளங்கள் உள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அவர்கள் அதை குத்தகைக்குப் பெற்றிருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் கனிமங்கள் அரசுக்குச் சொந்தமானவைதான். கனிம வளங்களை அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி வேறு யாரும் அதற்கு உரிமை கோர முடியாது’ என்று கூறி தனியார் நிறுவனங்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டனர். ஜார்கண்ட் அரசின் நடவடிக்கையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்தில்கொண்டால், மதுரை கிரானைட் குவாரிகளுக்கும் இந்தத் தீர்ப்பு அப்படியே பொருந்தும்.



இந்த நிலையில், ''கிரானைட் குவாரி மோசடி வழக்கில் சிலதனியார் முதலாளிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளது தமிழ்நாடு கனிம வள நிறுவன ஊழியர் சங்கம். அதன் செயலாளர் விஜயனைச் சந்தித்தோம். 



''அதிகாரிகளின் தில்லுமுல்லுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், டாமின் நிறுவனம் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தை 1979-ம் ஆண்டு, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இதன் பிரதான நோக்கம், கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதும், மண்ணுக்கு அடியில் வீணாகப் புதைந்துகிடக்கும் கனிமங்களைக் கண்டுபிடித்து, அவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நாட்டின் வருவாயை உயர்த்துவதும்தான். டாமின் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீடு 100 கோடி ரூபாய். கனிம வளங்களைக் கண்டுபிடிப்பதும், அவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்வதும் முழுக்க முழுக்க டாமின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதேபோல், கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருந்தாலும், அவை அரசுக்குத்தான் சொந்தம் என்ற நிலை இருந்தது.



10 ஆண்டுகளுக்கு முன்பு டாமின் நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் உள்ள கனிமங்களை வெட்டி எடுக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை நிலத்தின் சொந்தக்காரர்களே வெட்டி எடுத்து விற்பனையும் செய்யலாம் என்று விதிமுறைகள் மாற்றப்பட்டன. இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் டாமின் அதிகாரிகள் தங்கள் வசம் வைத்திருந்தனர். இதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருந்ததைப்போல், தனியார் முதலாளிகள் தங்கள் தகிடுதத்தங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.



டாமின் நிறுவனத்தில் கனிமங்கள் வெட்டி எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அதற்கு அருகிலேயே ஒரு பட்டா இடத்தை வாங்குவார்கள். அங்கு கிரானைட் கிடைக்கிறதோ இல்லையோ... அங்கும் கற்கள் வெட்டும் பணி நடைபெறும். அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் தனியார் குவாரிக்குக் கடத்தப்படும். பின், அந்தக் கற்கள் தனியார் குவாரியிலேயே வெட்டி எடுக்கப் பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்படும். இதை கண்காணித்துப் பதிவுசெய்ய வேண்டிய உதவி இயக்குனர் (சுரங்கம்), வருவாய்த் துறை கோட்ட மேலாளர் போன்றவர்களை தனியார் முதலாளிகள்  கவனித்துவிடுவார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலாளிகளுக்குப் போய்ச்சேரும். உதாரணமாக மதுரையில் உள்ள அரசு டாமின் குவாரிக்கு 30 அடி தூரத்தில், அரசியல் செல்வாக்குள்ள மனிதரின் மகனுக்குச் சொந்தமான  கிரானைட் குவாரி உள்ளது. அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் எல்லாம், இந்தக் குவாரியில் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப் பட்டு உள்ளது

.

இதேபோல், வேலூர் மாவட்டம் மகிமண்டலம் என்ற ஊரில் வெட்டி எடுக்கப்பட்ட 45 கன மீட்டர் அளவுள்ள கற்களை 3 க.மீ அளவுள்ள கற்கள் என்று போலியாகக் கணக்கு காட்டி உள்ளனர். ஒரு க.மீ. கறுப்பு கிரானைட் கல்லின் விலை 70 ஆயிரம் ரூபாய். அப்படியானால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதேபோல், மேலூரில் பி.ஆர்.பி. நிறுவனம் 100 அடி ஆழத்துக்குக் கற்களை வெட்டி எடுத்துள்ளது. இதைப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.



இந்தத் தொழிலில், தனியார் நிறுவனங்கள் லாபம் மட்டும் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்போது, தமிழக அரசின் கனிம வள நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே லாபம் ஈட்டியுள்ளது. தனியார் முதலாளிகளின் கைக்கூலிகளாக அவர்கள் செயல் பட்ட காரணத்தால்தான், இத்தனை முறைகேடுகளும் நடந்தன. தற்போது, விதிமுறைகளை மீறி கொள்ளை லாபம் சம்பாதித்த சில தனியார் முதலாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த முதலாளிகளின் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். அதோடு முழுக்க முழுக்க கனிம வளத்தைத் தோண்டி எடுக்கும் பணிகளை முன்பு போல் அரசே செய்ய வேண்டும்'' என்றார் விரிவாக.



''மதுரை கலெக்டராக இருந்த சகாயம் ஒரு கணக்குப் போட்டு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மதுரை வட்டாரத்தில் இருக்கும் கனிம வளங்களைக் கணக்கிட்டு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வந்துள்ளோம்'' என்று இப்போது சொல்லும் சில உயர் அதிகாரிகள், ''வருவாய்த் துறை, கனிமவளத் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இதுவரை இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்துள்ளன என்பதற்கான பட்டியலை சி.டி.யாக தயாரித்து வைத்துள்ளார்கள்.


டைரியில் எழுதியும் வைத்துள்ளார்கள். அதன் விவரங்கள் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இப்படி மாமூல் வாங்கிய மந்திரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் பட்டியல் பெரியது!'' என்கிறார்கள். இதனைத் தெரிந்துகொண்ட குவாரி அதிபர் ஒருவர், ஆட்சியை மிரட்டும் தொனியில் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியதாகவும் அவர் அதனை டேப் செய்து கோட்டைப் பிரமுகர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது அரசு நடவடிக்கையின் வேகத்தை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது.



அதிரடி தொடரட்டும்!



'சத்யராஜ், சரத்குமார் சொன்னதால பணம் போட்டோம்!''



ஈமு ஓட்டம்... பதறும் முதலீட்டாளர்கள்!



எத்தனையோ முறை சொன்னோம். ஆனால், பட்டால்தான் திருந்துவோம் என்ற முடிவோடு ஏமாந்தவர்களை என்னவென்று சொல்வது!



ஈமு கோழியில் முதலீடு செய்பவர்களைத் தொடர்ந்து எச்சரித்து வந்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன், கோபிசெட்டிபாளையத்தில் கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது புகார் கிளம்பியது. இப்போது, பெருந்துறையைச் சேர்ந்த சுசி ஈமு ஃபார்ம்ஸ் காவல்துறையின் பிடிக்குள் சிக்கி இருக்கிறது. ஏமாற்றப்பட்டு நொந்துபோய் இருக்கும் விவசாயிகள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடவே, இந்த நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் செய்யவே ஏரியா கலகலக்கிறது.



ஈமு வளர்ப்பு மோசடிக்கு எதிராக பல வருடங்களாகப் போராடி வரும் வழக்கறிஞர் தளபதியைச் சந்தித்தோம். ''சுசி ஈமு நிறுவனத்தின் அதிபர் குரு என்ற குருசாமி. இவர், பெருந்துறை நகர பா.ம.க. செயலாளராக இருந்தவர். இத னால் அவருக்கு ஒரு அறிமுகம் இருந்தது. மேலும், ஈமுவுக்காக விளம்பரம் செய்த நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சரத்குமார் மீது மக்களுக்கு நிறைய மரியாதை இருக் கிறது. 

 

அதனால்தான், பாமர கிராம விவ சாயிகள் உட்பட 25,000 பேருக்கும் மேல் முதலீடு செய்தனர். மொத்த முதலீடு 600 கோடி ரூபாயைத் தாண்டி இருக்கலாம். இந்த மோசடிக்கு மாவட்ட நிர்வாகம், கால்நடைத் துறையும் உடந்தையாக இருந்துள்ளன. இவர்கள் அனைவரின் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் ஆவேசமாக.



சுசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பேசியவர்கள், ''எங்க நிறுவனத்தின் உரிமையாளர் குரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இங்கே உள்ள ஆதிக்க சமுதாயத்தினரும், காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் மாமூல் கேட்டு தொடர்ந்து அவரை மிரட்டி வந்தனர். ஆனால், மாமூல் கொடுக்க குரு மறுத்து விட்டார். அதனால், ஆட்களைத் தயார் செய்து, ஒரே சமயத்தில் எங்கள் நிறுவனத்தை முற்றுகையிட வைத்து பிரச்னை ஆக்கி விட்டனர். முதலீட்டாளர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றனர்.



விளம்பரத்தில் நடித்த நடிகர் சத்யராஜிடம் பேசினோம். ''ஈமு கோழி விளம்பரம்னு சொன்னாங்க. நடிச்சுக் கொடுத்தேன். மத்தபடி அதுல இருக்கும் நல்லது கெட்டது எல்லாம் எனக்குத் தெரியாதுங்க'' என்று சொன்னார்.




சரத்குமார் தரப்பிலோ, ''சுசி ஈமு நிறுவனத்தினர் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகின்றனர். அதற்கான விளம்பரத்தில், ஈமு கோழியின் கறி உடலுக்கு நல்லது. ஈமு கோழி சாப்பிடுங்க என்பது மட்டும்தான் சரத்குமார் சொல்வதைப் போல வரும். மற்றபடி எந்த இடத்திலும் ஈமு வளர்த்தால் லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர் சொல்லவில்லை. அதுவும் இல்லாமல் விளம்பரத்தின் நம்பகத் தன்மைக்கு அதில் நடித்தவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இதை சட்டரீதியாக சந்திக்க சரத்குமார் தயாராக இருக்கிறார்'' என்றார்கள்.

ஆனால், மாமூல்

ஈமு தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன. 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. புகார் தருபவர்கள் சத்யராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் சொன்னதனால்தான் முதலீடு செய்தோம் என்கின்றனர். இந்த விஷயத்தில் நடிகர்களும் பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பக்கம் இருக்க... அந்தப் பண் ணைகளில் இருக்கும் ஈமுவுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லை. அதன் பசியைப் போக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.



ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்!



நன்றி - ஜூ வி

Thursday, June 07, 2012

கட்சி ஆரம்பித்த பிரபல பத்திரிக்கையாளர் - ஜூ வி கேள்வி பதில்கள்

1.  ஜனாதிபதி வேட்பாளராக லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை முன்னிறுத்துகிறாரே மம்தா?


மக்களவையில் யார் என்ன திட்டு திட்டினாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார் மீரா குமார். இந்தத் தகுதியால் இருக்குமோ?



2. ஜெயலலிதாவின் உருப்படியான சாதனை என்ன?

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பியது மட்டும்தான்!
இன்று தன்னுடைய சாதனைகளாக ஜெயலலிதா சொல்பவை அனைத்தும் ஓர் அரசாங்கம் தனது குடிமக்களுக்குச் செய்துதர வேண்டிய அடிப்படைக் கடமைகள், அவ்வளவுதான்.

 இதை ஜெயலலிதாவும் செய்யலாம். கருணாநிதியும் செய்யலாம். ஏதாவது ஒரு கவர்னரும் உட்கார்ந்து கொண்டு செய்யலாம். பரீட்சை எழுதி பாஸ் ஆன அனைவரும் சாதனை செய்தவர்களாக சொல்லப்படுவது இல்லை. அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றிக் காட்டினேன். ஏழ்மை இல்லாத நிலையை உருவாக்கினேன். மின் பற்றாக்குறை இல்லாத தமிழகம் இது. வேலை இல்லாப் பட்டதாரிகள் கிடையவே கிடையாது என்பது மாதிரியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையே சாதனைகளாக வரவு வைக்கவும், வரவேற்கவும் முடியும்!


3.'புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்களைக் கொல்லவில்லை’ என்கிறாரே, இலங்கை மாஜி ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா?


ராஜபக்சேவால் கைது செய்யப்பட்டவர் என்பதற்காக ஃபொன்சேகா புனிதராகி விட முடியாது. ஐ.நா. மனித உரிமை அமைப்பு பகி ரங்கப் போர் விசாரணையை நடத்துமானால், முதல் குற்றவாளி ராஜபக்சே என்றால், இரண்டாவது குற்றவாளியாகப் பதில் சொல்ல வேண்டியவர் ஃபொன்சேகா. எனவே, 'அப்பாவிகளைக் கொல் லவில்லை’ என்றுதான் அவரும் சொல்வார்.


4. அரசியலில் ஆன்மிகம், ஆன்மிகத்தில் அரசியல் - எது சரியானது?


இரண்டுமே தவறானவை. பக்தி, ஆன்மிகம், கடவுள், மதம் ஆகியவை ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை, தனிச்சொத்து. நம்பிக்கை சார்ந்த விஷயம். அந்த விருப்பங்கள், அரசியல் ரீதியாக விமர்சிக்கத்தக்கவையும் அல்ல. எனவே, அரசியலில் ஆன்மிகத்தைப் புகுத்தி ஆதாயம் தேடுவதும் தவறு. ஆன்மிகவாதிகள் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து செயல்படுவது அதைவிடத் தவறு.


ஆனால், தங்களது சுய லாபங்களுக்காக ஆன்மிக விஷயங்களைக் கபளீகரம் செய்ய அரசியல்​வாதிகள் நினைக்கிறார்கள். அதற்கு அப்பாவிகள் பலியாகிறார்கள்!


5. மதுரை ஆதீனம் பிரச்னையில் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்?


மௌனமாக இல்லை. உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முதல்வரைச் சீண்டிப்பார்க்கும் சில கமென்ட்ஸ்களை நித்தியானந்தா தரப்பு வைத்ததாக மேலிடத்துக்குத் தகவல் வந்துள்ளது. அதனுடைய ரியாக்ஷன் போகப் போகத்தான் தெரியும்!


6. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே போவது குறித்து மத்திய அரசுக்கு கவலையே இல்லையா?


இந்தியாவின் மதிப்பு எப்போதோ குறைந்து​போய்விட்டது. அதைப் பற்றியே கவலைப்​படவில்லையே!


வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியப் பணத்தை மீட்டு வருவதற்குக் கூட இவர்கள் மனப்பூர்வமாக முயற்சி செய்யவில்லை. இந்தப் பணத்தை மொத்தமாக மீட்டு வந்தால் ரூபாயின் மதிப்பு உயருமா, இல்லையா என்பதை விட, இந்தியாவின் மதிப்பாவது உயரும்!



7. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பது அரசியலுக்குப் பொருந்துமா?


அரசியல் என்பதே தனி​மனிதப் போட்டியை அடிப்​படையாகக் கொண்டதாக மாறிவிட்டது. ஒருவர், அடுத்தவரை வீழ்த்துவதன் மூலமாகவே லாபம் அடைய முடியும் என்பது யதார்த்தமாக உள்ளது. இந்த நிலையில் குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்குபவர்களால் மட்டுமே அரசியலில் கோ​லோச்ச முடியும்.


இதுபற்றி கண்ணதாசன், 'அரசியல் சதுரங்​கத்தில் இரண்டு வகை உண்டு. நேரடி​​யாக இறங்கிஉள்ளதை உள்ளபடியே சொல்லி, உண்மை, நேர்மை என்று பாடுபட்டு இறுதியில் இருக்குமிடம் தெரியாமல்​போ​வது. இன்​னொன்று, குறுக்கு வழியில் காய்களை நகர்த்தி, நண்பனையோ உற​வினனை​யோ கொல்ல வேண்டுமானால் கொன்று, அரங்கத்தில் நேர்மையாக நடித்து அந்தரங்கத்தில் வஞ்சகனாகி எந்த வழியில் வெற்றி கிடைக்குமானாலும் அந்த வழியை நாடுவது. இவை இரண்டுக்கும் உதா​ரணம் காட்டுகிறது மகாபாரதம். நேர்வழிக்குப் பரந்தாமன். குறுக்கு வழிக்கு சகுனி’ என்று எழுதினார்.


இது, சகுனிகளின் காலம். அண்ணா சொன்ன அந்த உதாரணம் வெறும் கனவு!


8. 'எந்த வேலையையும் செய்ய இந்த ஆட்சியில் ஒப்பந்தக்காரர்கள் முன்வருவது இல்லை’ என்கிறாரே கருணாநிதி?


கமிஷன் தொகையையும் அதிகரித்து​விட்டார்கள். யாரிடம் கொடுப்பது என்பதிலும் குழப்பம். எப்படி வரு​வார்கள் ஒப்பந்தக்காரர்கள்? ஆனால் இதுதான், சில அதிகாரிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. கொழிக்கிறார்கள். 'வருமானத்​துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு’ இப்போதே சில அதிகாரிகள் மீது
போடலாம்! 


9. தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிகையாளராவது கட்சி ஆரம்பித்திருக்கிறாரா?


உடனடியாக நினைவுக்கு வருகிறார், சி.பா. ஆதித்தனார். முதலில் அவர் வக்கீல். ஆனால், பத்திரிகையாளராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். 'தமிழப் பேரரசு’ என்கிற கொள்கை ஈர்ப்பால், 'நாம் தமிழர் கட்சி’ தொடங்​கினார். பின்னர், அவர் தி.மு.க-வில் ஐக்கியம் ஆகிவிட்டாலும், அந்தக் காலத்தில், குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை அந்தக் கட்சி உருவாக்கியது.


மற்றபடி, கட்சி ஆரம்பித்தவர்கள் அனை​வருமே தங்களுக்கென ஒரு பத்திரிகை​​யையும் ஆரம்பித்தார்கள். அதற்கு எத்தனையோ உதார​ணங்கள் உண்டு!


10. ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள், மர்ம நபர்களால் தாக்கப்​பட்டுக் கொல்லப்படுவது பற்றி?


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரக்கூடிய கேள்விகள் கேட்கும் அனைவருக்குமே அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனால் சட்டத்தின் பாதுகாப்பு, இத்தகைய தகவல் போராளிகளுக்கு இல்லை. போலீஸ், இதைக் கண்டுகொள்வதும் இல்லை. அதனால், இதுபோன்ற கொலையை, சாதாரணக் கொலை வழக்காக இல்லாமல், சிறப்பு வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்.


Monday, June 04, 2012

எழுத்தாளர் சோலை - சில நினைவுகள்

ளிமையான எழுத்து, ஆழ்ந்த அனுபவம், கம்யூனிஸ சிந்தனை, தெளிவான பார்வை, வெகுஜன அக்கறை, நிகழ்காலப் பரபரப்பு  - இந்தக் கலவைதான் எழுத்தாளர் சோலை. பத்திரிகை​யாளராக, அரசியல் விமர்சகராக அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் பணியாற்றிய சோலை, கடந்த 29-ம் தேதி காற்றில் கரைந்து போனார். அவரைப் பற்றிய நினைவுகள்...

1. நல்லகண்ணு (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி): சோமசுந்தரம் என்ற சோலை அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே பூமி தான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, நிலம் இல்லாதவர்களுக்காகப் போராடினார். பூமி தானப் பிரசாரத்துக்குப் போன தோழர் ஜீவானந்தம், சோலை அவர்களின் எழுத்து ஆற்றலைக் கண்டு 'ஜனசக்தி’யில் பணியாற்ற 1959-ல் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்தார். கட்சியில் பிளவு ஏற் பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். பிறகு, எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். சோவியத் யூனியன் சென்று வந்ததும் அவர் எழுதிய, 'சிவப்பு ரோஜா’ பலராலும் பாராட்டப்பட்டது.
முற்போக்கு எண்ணம் கொண்ட சிறந்த பத்திரிகை​யாளர். எளிய தமிழில், அழுத்தமான கிராமப்புற வார்த்தைகளுடன் அவர் வடிக்கும் கட்டுரைகள், அனைத்து மக்களையும் வெகுவாகக் கவர்ந்தவை. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை, விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆழ்ந்து யோசித்து எழுதும் வல்லமை படைத்தவர். எனக்கும் அவருக்கும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு. சில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும், அதை நட்புடன் விமர்சித்துக் கொள்வோம். நீண்ட அரசியல் அனுபவம்​கொண்ட ஒரு பொக்கிஷத்தை இன்றைய தலைமுறை இழந்துவிட்டது. அவரது வாழ்க்கை அனைத்து பத்திரிகை​யாளர்களுக்கும் பாடம்.



2. ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று 'தீக்கதிர்’ இதழைத் தொடங்கி நடத்திய நால்வரில் முக்கி யமானவர் சோலை. அடுத்தடுத்து அரசியல் ரீதியாக அவர் பல மாறுபட்ட தளங்களில் இயங்கினாலும், மிகச்சிறந்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் பொன்விழா ஆண்டு, வரும் ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது. அந்த விழாவுக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என்று நான் சொன்னபோது, அழைப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அவர் தொடங்கிய பத்திரிகையின் பொன்விழாவைக் காண்பதற்கு முன்பே இயற்கை அவரை அழைத்துக்கொண்டு விட்டது. தீக்கதிர் இதழின் பொன் விழாவுக்கு அவர் ஒரு சிறப்புக் கட்டுரை தீட்டி வைத்திருப்பதாகச் சொன்னார். அதைத் தீக்கதிர் இதழில் பிரசுரிப்போம். இதுதான் அந்த எளியவருக்கு நாங்கள் செலுத்தும் நன்றி கலந்த அஞ்சலி.



3. துரை கருணா (பத்திரிகையாளர்): எம்.ஜி.ஆர் நடத்திய, 'அண்ணா’ பத்திரிகையின் ஆசிரிய​ராக சோலை அவர்கள் இருந்தபோது, நான்கு ஆண்டு காலம் அங்கு நான் நிருபராகப் பணியாற்றி​னேன். எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை முன்னிறுத்​தியபோது, சோலை அவர்களைத்தான் ஜெயல​லிதாவுக்கும் அரசியல் ஆலோசகராக நியமித்தார். உட்கட்சிப் பிரச்னைகளைத் தீர்த்து​வைப்பதில் சோலை வல்லவர். ஒரு முறை திருநெல்வேலி தொகு​திக்கு இடைத்தேர்தல் வந்தபோது, கருப்பசாமி பாண்டியனை அழைத்த எம்.ஜி.ஆர், 'நீதான் வேட்பாளர்... போய் வேலையைத் தொடங்கு’ என்று சொல்லி விட்டார். தேர்தல் நேரத்தில் ஆர்.எம்.வீரப்பனின் எம்.எல்.சி. பதவி போய் விட்டது. 


எனவே, ஆர்.எம்.வீரப்பனை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டிய கட்டாயம். அதனால் வேறுவழி இல்லாமல் ஆர்.எம்.வீரப்பனை வேட் பாளராக எம்.ஜி.ஆர் அறிவிக்கவே, கருப்ப​சாமி பாண்டியன் கோ​பத்தில் தலைமறைவு ஆகிவிட்டார்.  சோலையை  அழைத்த எம்.ஜி.ஆர், 'கானாவை சமாதானப்படுத்துங்கள்’ என்றார். அடுத்த சில நாட்களில், 'கருப்பசாமி பாண்டியன்தான் எனது முழுத்தேர்தல் பயணத்தையும் பார்த்துக்​கொள்வார்’ என்று, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். இதைப்பார்த்து கலங்கிப் போனார் கருப்ப​சாமிப் பாண்டியன். 


இதுதான் சோலை அய்யாவின் திறமை. எம்.ஜி.ஆர். - இந்திரா காந்தி ஆகியோருக்கு இடையே அரசியல் ரீதியான நெருடல் வந்தபோது, டெல்லி சென்று இந்திராவின் பிரதமச் செயலாளரான பி.சி.அலெக்சாண்டரிடம் பேசி, இருவருக்குள் இருந்த இடைவெளியைக் குறைத்தவர் சோலைதான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், அரசியல் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணிகளை மட்டும்தான் கவனித்தார். அவரது மறைவு பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் இழப்பு.


4. இரா.ஜவஹர் (விமர்சகர்): அனைத்துத் தலைவர்களையும், 'அண்ணே... அண்ணே...’ என்று அழைத்து வந்த மூத்த பத்திரிகையாளர் சோலை, எனக்கு மட்டும் 'சோலை அண்ணன்’.  என் குருநாதர். 1977-ல், 'மக்கள் செய்தி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை, ஆசிரியர் சோலை எனக்கு அளித்தார். அதுதான் பத்திரிகைத் துறையில் எனது முதல் பணி. ஒரு நாளிதழ் ஆசிரியராக அவர் பணியாற்றும் பாங்கு, இப்போது நினைத்துப் பார்த்தாலும் வியக்கவைக்கும்.


செய்திகளைத் தேர்வு செய்வது, நிருபர்களுக்குப் பணி ஒதுக்குவது, தலையங்கம், கட்டுரைகள் எழுதுவது, தொலைபேசியில் வரும் செய்திகளை மின்னல் வேகத்தில் எழுதி அச்சுக் கோக்க உடனுக்குடன் கொடுப்பது, தேவையானால் மெய்ப்பு (புரூஃப்) பார்ப்பது, இதழ் விற்பனை நிலவரத்தைக் கண்காணிப்பது... எதைத்தான் செய்யவில்லை அந்த மனிதர்! ஆனால், அனைத்தையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் செய்தார்.
 பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை மேம்படுத்தி, சத்துணவுத் திட்டமாகச் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். இது ஐ.நா. சபை வரை பேசப்பட்டது. இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தவர் சோலைதான். இது அப்போதே பிரபல வார இதழில், 'மாங்குயில் கூவிடும் இடத்தைப் பெயராகக்கொண்டவர்தான் இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தார்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இத்தகைய திடீர் யோசனைகள் அவருக்கு  பிரத்யேகமானவை. இறந்தாலும் எண்ணற்ற பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் வழிகாட்டியாகத் தொடர்வார் அண்ணன்!''     

நன்றி - ஜூ வி

Saturday, May 26, 2012

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? ஜூ வி கட்டுரை

ரத்தம் கொடுத்தாத் தான் பெட்ரோல் கொடுப்பாங்களா?

மக்களை உறிஞ்சும் மத்திய அரசு
 

ப்பாவி மக்களைப் பற்றி மத்திய அரசாங்கத்துக்கு எவ்வளவு அலட்சியம் இருக்கிறது என்பதன் அடை​யாளம்தான் பெட்ரோல் விலை உயர்வு. மூச்சுக் காற்றைப் போல முக்கிய​மானதாக ஆகிவிட்டது பெட்ரோல். அதைப் பெறு வதற்கு இனிமேல் பாக்கெட் பணத்தை மட்டுமல்ல... உடம்பில் இருந்து ரத்தத்தையும் எடுத் துக் கொடுத்தால்தான் பெற முடியும் என்ற நிலைமையை மத்திய அரசு உருவாக்கி விட்டது! 


'பிரணாப் முகர்ஜியை நிதி அமைச்சரா வெச்சிருந்தா, இப்படித்தான் பண்ணுவார். பேசாம ஜனாதிபதி ஆக்கிடுங்க’ என்று, பொதுமக்கள் கொந்தளிக்கும் அளவுக்கு பெட் ரோல் விலையை உயர்த்தி விட்டார்கள்.


'பெட்ரோல் விலை விரைவில் உயரப்​போகிறது’ என்பதை, கடந்த 9.5.12  இதழில் எழுதி இருந்தோம். எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 7.67 இழப்பை சந்தித்து வருவதையும் சொல்லி இருந்தோம். ஆனால், ஒரேயடியாக லிட்டருக்கு 7.98 உயர்த்தி, மக்களின் வயிற்றில் இடியை இறக்கி இருக்கிறது மத்திய அரசு. படிப்படியாக உயர்த்தினாலாவது ஓரளவுக்கு அரசாங்கத்துக்கு தங்களது பிரஜைகள் மீது கரிசனம் இருப்ப​தாகச் சொல்லலாம். ஆனால், ஒட்டு​மொத்தமாக உயர்த்துவது ஆட்சியாளர்​களின் சர்வாதிகார மனோபாவத்தையே காட்டுவதாகப் பொது​மக்கள் கதறுகிறார்கள்.


விலை ஏற்றம் பற்றி செய்தி கிடைத்தவுடன் உயர்​ரக சொகுசு காரில் இருந்து சாதாரண டி.வி.எஸ். 50 வரை, பழைய ரேட்டில் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேகவேகமாக பங்க் வாசலில் தவம் கிடந்தன. ஆனால், பெட்ரோல் தீர்ந்து விட்டதாக பல பங்க்குகளும் அடைக்கப்பட்டு இருந்தன


. (அவர்களால் முடிந்த சேவை அது!) அதனால் அவசரத்துக்குப் பெட்ரோல் போட வந்தவர்களும், அவதிப்பட நேர்ந்தது.
இதுவரை இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று விலை ஏற்றி வந்த அரசு, இப்போது திடுமென ஒரேயடியாக உயர்த்தியதைத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கொதிக்கிறார்கள் மக்கள். 


இத்தனைக்கும் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறையவே செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 105 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், இப்போது 90 டாலர்களாகச் சரிந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் விலையும் குறைவதுதானே நியாயம். ஏன் கூடுகிறது?



எல்லாம் டாலர் செய்யும் மேஜிக்!


கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது. கடந்த இரண்டே மாதங்களில் சுமார் 15 சதவிகிதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. முன்பு 49 ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கினால், இப்போது 56 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்க வேண்டிய நிலை. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில்தான் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை என்றாலும் டாலருக்கு நிகராக அதிக ரூபாயைச் செலவழிக்க வேண்டி இருப்பதால், நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கிறது. அந்த விலை ஏற்றம் நம் தலையில்தான் விடிகிறது.


அது சரி. ரூபாய் மதிப்பு ஏன் திடீரென சரிகிறது? அதற்குக் காரணமும் கச்சா எண்ணெய்தான்.


அமெரிக்க டாலருக்கும் இந்திய ரூபாய்க்குமான சப்ளை மற்றும் டிமாண்டைப் பொறுத்துத்தான் ரூபாயின் ஏற்றம் இருக்கிறது. இந்திய அரசு செய்யும் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருக்கிறது. அந்த இறக்குமதிக்கான பணத்தை இந்திய அரசு, டாலரில்தான் கொடுக்க வேண்டும். இதனால் டாலருக்கு அதிக டிமாண்ட் ஏற்படுகிறது. அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது.


இறக்குமதிக்காக நாம் செய்யும் செலவு​களில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானதுதான். இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகித்தை நாம் இறக்குமதிதான் செய்கிறோம். அதிகஅளவில் இறக்குமதி செய்ய வேண்டி இருப்பதால், ரூபாய் மதிப்பு சரிகிறது. ரூபாய் சரிவதால் நாம் பயன்படுத்தும் பெட்ரோல் விலை உயர்கிறது.


இந்திய அரசாங்கத்தால் பெட்ரோல், டீசல் நுகர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ரூபாயின் சரிவையும் தடுக்க முடியவில்லை. எதிர்காலத்தில் விலை ஏறாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதாவது, எதுவும் செய்யத் தெரியவில்லை என்பதே இதற்கு முழுமையான அர்த்தம்.


பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், மாநில முதல்வர்கள் என்று பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வருகின்றன. ஆனால், எந்த மாநில முதலமைச்சரும், மாநிலங்கள் வசூலிக்கும் வரியில் சலுகை காட்டிவிடாமல், ஒட்டுமொத்தமாக மத்திய அரசையே போட்டுத் தாளிக்கிறார்கள். (மாநிலம் வசூலிக்கும் வரியில் சலுகை காட்டாத காரணத்தால்தான் டெல்லியைவிட சென்னையில் நான்கு ரூபாய் விலை அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டன அறிக்கை விடும் ஜெயலலிதா உணர வேண்டும்!)


இப்போது எழுந்திருக்கும் கடும் கண்ட னம் காரணமாக, ஓரிரு ரூபாய் வரை விலைக் குறைப்பு செய்யப்படலாம். ஆனால், இதில் சந்தோஷப்பட எதுவும் இல்லை. இன்று இல்லா விட்டால் நாளை மீண்டும் விலை உயரத்தான் போகிறது. வயிற்றெரிச்சலுடன் பங்க் வாசலில் நிற்கப்போகிறோம். அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகவும் பெட்ரோல் ஆகிவிட்டது. வாங்கவும் முடியவில்லை. வாங்காமல் இருக்கவும் முடியாது என்ற நிலைமையில் மத்தியதர வர்க்கம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது. அக்னி வெயிலை விட மத்திய அரசாங்கம் நடத்தி இருக்கும் இந்த அவஸ்தை வெயில் ரொம்பவே மக்களை வாட்டு கிறது!


Saturday, March 17, 2012

ஈழத்தமிழருக்கு ஆதரவு கேட்டு பாரதப்பிரதமருக்கு தமிழருவி மணியனின் சாட்டையடி கடிதம்

ன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு... வணக்கம்! 


இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன்.


தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல் விழுமியத்தை, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற வேத வாசகத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்கள். இந்தியாவின் ஓர் அங்கமாக இவர்கள் இருப்பதே இந்த மண்ணின் மகத்தான பெருமை என்பதை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீங்கள் முதலில் உணர வேண்டும்.


எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை. அன்பிற்கினிய அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று மேடைதோறும் முழங்கினார். அவரை நாங்கள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம். ஆனால், அவருடைய பிரிவினைக் கோரிக்கையை நிரா கரித்தோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், 'சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழரசு காண்போம்’ என்று எங்கள் கைகளைப் பிடித்து வேண்டினார். 


தேசிய மயக்கத்தில் இருக்கும் நாங்கள் அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்தோம். இன்றும், 'தமிழ்த் தேசியம்’ பேசுபவர்களை நாங்கள் பெரிதாக ஆதரித்து விடுவது இல்லை. இன்றுவரை இந்தியராய் இருப்பதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். ஆனால், இறுதிவரை நாங்கள் இந்தியராய் நீடிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் மகாத்மா​வாக மலர்ந்ததற்கு முதற்காரணம் தமிழர்கள். 'அடுத்த பிறவியில் வள்ளுவத்தை வாசிப்பதற்காகத் தமிழனாய்ப் பிறக்க விரும்புகிறேன்’ என்றார். இந்தியாவைவிட்டு வெளியேறி அந்நிய மண்ணில் வெள்ளையருக்கு எதிராக நேதாஜி படை திரட்டியபோது, அவருக்குப் பின்னால் வெள்ளமெனத் திரண்​டவர்கள் தமிழர்கள். 

 அதனால்தான், 'இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாய்ப் பிறக்கும் வரம் எனக்கு வாய்க்க வேண்டும்’ என்றார் அந்த வீரத்தின் விளைநிலம். ஆனால், உங்கள் அரசோ தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதையே ஆட் சிச் சாதனையாக அரங்கேற்றி வருகிறது.



விடுதலை வேள்வியில் நாட்டு மக்கள் ஈடுபட்டி​ருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி ஆயிரம் வாக் குறுதிகளை அன்றைய காங்கிரஸ் தலைமை அள்ளி வழங்கியது. 'ஒவ்வொரு மாநிலமும் பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்’ என்று இடை விடாமல் வலியுறுத்தினார் மகாத்மா. 


புதுடெல்​லி யில் 2.4.1942 அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, 'ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் இருக்கும்படி வற்புறுத்த விரும்பவில்லை’ என்று தீர்மானம் தீட்டியது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களை மாண்புமிகு மாநகராட்சிகளாக மாற்றிவிட்டது. இந்தியராய் இருப்பதற்கு எங்கள் உரிமைகளை இழந்து நின்றோம். எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கவில்லை.



சுதந்திர இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தெலுங்கர்கள் 'விசால ஆந்திரா’ வேண்டும் என்றனர்; கன்னடர் 'சம்யுக்த கர்னாடகா’ என்று குரல் கொடுத்தனர். மலையாளிகள் 'ஐக்கிய கேரளா’ என்ற கோரிக்கை வைத்தனர். இந்தியராய் இருக்க விரும்பிய நாங்களோ அகன்ற தமிழகத்துக்கு ஆசைப்படவில்லை. சித்தூர், புத்தூர், திருப்பதி, திருக்காளத்தி ஆகிய தமிழர் பகுதிகளைத் தெலுங்கருக்குத் தாரை வார்த்தோம்.

 மாதேசுவரன் மலை முதல் நந்திமலை வரை வாழ்ந்த நிலப் பரப்பையும், பெங்களூரு முதல் தங்கவயல் வரை சொந்தமான தமிழர் மண்ணையும் எங்கள் கன்னட சகோதரர்களுக்குச் சீதனமாகத் தந்து மகிழ்ந்தோம். ஏராளமான ஆறுகள் பெருக்கெடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை, 'குளமாவது? மேடாவது? எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன’ என்று தேசியத் தத்துவம் பேசி மலையாளிகளுக்கு 'மொய்’ எழுதிவிட்டு, இன்று முல்லை - பெரியாறு அணைக்காக அழுது​கொண்டு இருக்கிறோம். பிரதமரே... இவ்வளவு இழப்புகளும் எதற்காக? இந்தியராய் தமிழர் இருப்பதற்காக!


பிரிட்டனின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டு 1948 பிப்ர வரியில் சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்பே காடாய், மேடாய், களர்நிலமாய் இருந்த மத்திய மேட்டு நிலத்தை ரப்பர், காபி, தேயிலைத் தோட்டங்களாக மாற்றி இலங்கையின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்குத் தங்கள் வியர் வையை, ரத்தத்தைச் சிந்திய எங்கள் தாயகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து, ஆதரவற்ற அனாதைகளாக்க முதல்பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மூன்று மசோதாக்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முயன்றபோது, நேருவின் மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. மலையகத் தமிழர்களின் உரிமை காக்க 1939-ல் 'இலங்கை இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்ததே நேருதான் என்பது எவ்வளவு பெரிய இயற்கை முரண்!



விடுதலை பெறுவதற்கு முன், இலங்கை நாடாளு​மன்றத்தில் எட்டு உறுப்பினர்களையும், 'செனட்’ எனப்படும் மூத்தோர் அவையில் இரண்டு உறுப் பினர்களையும் பெற்றிருந்த இந்தியத் தமிழர்கள், ஒரு நொடியில் நாடற்றவர்களாக ஆக்கப்​பட்டனர். இந்த அநீதியை எதிர்க்காமல், அவர்களை அகதிகளாக்க 1964-ல் சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தை இந்திய அரசு அங்கீகரித்து, ஐந்து லட்சம் தமிழர்களைத் திரும்ப அழைத்து நடுத்தெருவில் நிறுத்தி நிலைகுலையச் செய்த போதும், நாங்கள் ஈர விழிகளுடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம், 'இந்தியர்’ என்ற மகுடத்தை இழந்து விடாமல் இருக்க!


தமிழகத்தின் தென்பரப்பில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள கச்சத்தீவு எங்க ளுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளாக ஒரு தேசியஇனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பை, அந்த இனத்தின் அனுமதி இன்றிப் பக்கத்து நாட் டுக்குப் பரிசாய் வழங்கும் பாதகச் செயலை எந்த அரசும் செய்யத் துணியாது. ஆனால், இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்னுடைய சீதனப்பொருளை அடுத்தவருக்குத் தருவது போல் திருமதி பண்டாரநாயகாவிடம் 1974-ல் கச்சத்தீவை ஒப்படைத்தது எந்த வகையில் நியாயம்?


காங்கிரஸை 1969-ல் தன் சுயநலத்துக்காக இரண்​டாகப் பிளந்த இந்திரா காந்தியின் குடும்ப அரசியலை, அன்று தொட்டு எதிர்த்த கூட்டத்தில் நான் ஒருவன். இந்திரா காந்தியின் எந்த அரசியல் நிலைப் பாட்டையும் ஏற்றவன் இல்லை நான். உலகின் மீன் வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான கச்சத்தீவை நேருவின் மகள் சட்ட வரம்பை மீறி இலங்கையிடம் சமர்ப்பித்​த போதும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டோம். ஏன்..? இந்தியராய் இருப்பதற்கு!


இந்தியப் பிரதமரே... உலகில் உள்ள கடற்கரை நாடுகள் அனைத்திலும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது உண்டு. எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சொல்லி எந்த நாட்டுக் கடற்படையும் மீன​வரைச் சுடுவது இல்லை. நம் பகை நாடான பாகிஸ்தான்கூட, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்தியரை எல்லை தாண்டியதாக ஒரு முறையும் சுட்டது இல்லை.

 ஒருவரையும் கொன்றது இல்லை. உலகிலேயே மீனவரைச் சுட்டுக் கொல்லும் ஈனச் செயலை இலங்கை மட்டும்தான் இன்று வரை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழகத்து மீனவரை - அதாவது நம் 'இந்திய’ மீனவரை ஊனப்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களின் - அதாவது 'இந்திய’ மீனவர்களின் உயிர் குடித்த இலங்கை அரசுக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் உங்கள் அரசு ஆனந்தம் அடைவதைப் பார்த்தும் நாங்கள் ஆத்திரப்படவில்லை. 'தேசியஉணர்வு’ எங்களைத் தேம்பி அழச் செய்வதோடு தடுத்து விடுகிறது; எங்கள் முதல்வர்களை உங்களுக்குக் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி விடுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கள் உயர் தமிழுக்கு வட்டார மொழிக்குரிய தகுதியைத்தான் தந்திருக்கிறது. 'இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மொழியே உயர்தனிச் செம்மொழி’ என்று மொழியியல் அறிஞர்கள் வைத்திருக்கும் வரையறையைப் புறந்தள்ளி, எங்கள் தமிழோடு கன்னடமும் தெலுங்கும்கூட 'உயர் தனிச் செம்மொழிகள்’ என்று அங்கீகரித்திருக்கும் உங்கள் 'அரசியல்’ நியாயமானது என்று எந்த நேர்மை யாளரும் ஏற்க முடியாது.
இந்தியைப் போன்று தமிழும் தேசத்தின் ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று மதுரை ஒத்தக்கடை வீதியில் நாங்கள் ஓங்கிக் குரல் கொடுப்பதற்கு மேல் எதையும் செய்ய மாட்டோம். எங்களுக்குத் தமிழா முக்கியம்? 'இந்தியர்’ என்ற அடையாளம் அல்லவா அதிமுக்கியம்!


போகட்டும். இந்தியராய் இருப்பதற்கு இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டோம். எங்கள் இனம் ஈழத்தில் அழிவதற்கு இலங்கை அரக்கரிடம் ஆயுதம் அளித்தீர்களே... அதைப் பொறுத்தோம். முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர் பலியிடப்பட்ட போதும் ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் 'ரத்தினக் கம்பள வரவேற்பு’ வழங்கி ரசித்தீர்களே... அதையும் பொறுத்தோம். 


முள்வேலிக் கம்பிகளுக்கிடையில் மூன்று லட்சம் தமிழர் முடக்கப் பட்டபோது, இலங்கை அரக்க அரசுக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துக் கொலைகாரக் கூட்டத்தையே மறுவாழ்வு தரும்படி வேண்டி நின்றீர்களே... அதையும் பொறுத்தோம்.


'உயிரினும் சிறந்தன்று கற்பு’ என்று போற்றி வாழ்ந்த எம் குலப் பெண்களைச் சிங்களர் வன்புணர்ச்சி செய்து வதைத்த செய்தி வந்ததே... அதையும் பொறுத்தோம். பிரிட்டனின் 4-வது சேனலில், எம் இனத்தவரை எட்டி உதைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கண்களைத் துணியில் மறைத்துச் சுட்டு வீழ்த்திய மனிதகுல அநாகரிகத்தைக் கண்டபோதும் பொறுத்துக்கொண்டோம். இன்​னமும் பொறுப்பதற்கு என்ன இருக்கிறது பிரதமரே?


தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று 24 நாடுகளின் ஆதரவோடு ஐ.நா-வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடிக்க இந்திய அரசு முனைந்தது நியாயந்தானா? இன்று, ஜெனிவாவில் மனித உரிமைகள் அமைப்பின் முன் இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை உங்கள் அரசு ஆதரிக்கத் தயங்குவது நாகரிக அரசின் நல்ல​ அடையாளமா? அபிசீனீயா மீது ஆக்கிரமிப்பு நடத்தி​யதற்காக, ரோமாபுரியில் விமானத்தில் வீற்றிருந்த நேருவை விருந்தோம்ப வருந்தி அழைத்த முசோலினியைச் சந்திக்க மறுத்த ஆசியஜோதி அமர்ந்து ஆட்சி நடத்திய நாற்காலியில் நீங்கள் அமர்ந்து இருப்பதை மறந்து விட்டீர்களா?


ஈழப்போரில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் குரல் கொடுக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தது உங்கள் செவிகளில் சேரவில்லையா? 'சேனல் 4 ஒளிப்பதிவைக் கண்டு உறைந்து போய்விட்டேன்’ என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சொன்னது உங்கள் சிந்தையில் பதியவில்லையா?  ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்​தின் கண்டனம் உங்கள் கண்களில் படவில்லையா?


மாண்புமிகு பிரதமரே... உங்கள் மனச்சான்றோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள். காஷ்மீர் தீவிரவாதி களை அழிக்க இந்திய ராணுவம் என்றாவது விமானத் தாக்குதல் நடத்தியது உண்டா? 'ஈழத் தமிழரும் இலங்கை மக்களே’ என்று சொல்லும் ராஜபக்ஷே அரசு சொந்த மக்கள் மீதே வான் வழியாக ரசாயனக் குண்டுகளைப் பொழிந்து பல்லாயிரவரைப் படுகொலை செய்தது மனித உரிமை மீறல் இல்லையா?

 இன அழிப்பு இல்லையா? சர்வதேசப் போர் விதிமீறல் இல்லையா? எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவருவது இந்திய மரபு இல்லை என்று சொல்லி இந்த மண்ணின் பண்பாட்டுப் பெருமையைப் படுகுழியில் தள்ள எப்படி உங்கள் அரசுக்கு மனம் வந்தது?


'தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்றார் பெரியார். உண்மைதான். முல்லை-பெரியாறு, காவிரி, பாலாறு என்று எந்தப் பிரச்னையிலும் தமிழர் உரிமை நிலைத்திட 'இந்தியன்’ என்ற உணர்வு இதுவரை உதவவில்லை. 'ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தால், மம்தாவுக்கு அள்ளிக் கொடுப்போம். சாமரம் வீசவில்லை என்றால், 'தானே’ புயல் அழிவுக்கும் கிள்ளியே கொடுப்போம்’ என்று ஓரவஞ்சனையோடு நடக்கும் நியாயமற்ற உங்கள் அரசு எங்களுக்கு எதற்கு?


கட்சி ரீதியாக நாங்கள் பிரிந்துகிடந்ததுவரை எங்களை உங்களால் எளிதில் புறக்கணிக்கமுடிந்தது. இன்று உலகின் எட்டாவது அதிசயமாய் முதல்வர் ஜெயலலிதாவும், கலைஞரும், காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஈழத் தமிழரின் இன்னல் தீர்க்க ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

 இலங் கைக்கு ஆதரவாக இந்திய அரசு இனி இருந்தால், தமிழ் நிலத்தில் காங்கிரஸ் கல்லறைக்குச் சென்று விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் என்று சரித்திரம் படைத்த உங்களுக்கு அதுகுறித்துக் கவலைப்பட நேரம் இருக்காது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலைப்பட்டாக வேண்டும்.


இந்தியஅரசு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து எங்களை முதலில் தமிழராகவும், முடிவில் இந்தியராகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழில் தீட்டப்பட்ட என் கடிதத்தின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்வார் என்று நம்புகிறேன்.


இனஉணர்வை மதித்து என்னை இந்தியனாக இருக்க விடுவீர்கள் என்ற ஆழ்ந்த    நம்பிக்​கையுடன்,


தமிழருவி மணியன்

Wednesday, September 14, 2011

சன் டி வி சக்சேனா பழி வாங்கப்படுகிறாரா? பலிகடா ஆக்கப்படுகிறாரா? ஜூ வி கட்டுரை - காமெடி கும்மி

சக்சேனா, அய்யப்பன் கஸ்டடி சித்ரவதைகள்... கண்ணீர் காட்சிகள்...

நடந்ததைச் சொல்லியிருந்தா என்கவுன்ட்டர் நிச்சயம்!
செப்டம்பர் 8. சைதை நீதிமன்றம்... 

சன் பிக்சர்ஸ் (முன்னாள்) அதிகாரி சக்சேனாவையும், சினிமா விநியோகஸ்தர் அய்யப்பனையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

வீங்கிய கால்கள், அதில் வரி வரியாகத் தழும்புகளுடன் வேனில் இருந்து இறங்கிய அய்யப்பன், நடக்க முடியாமல் நொண்டி நொண்டி முன்னேற... முற்றிலுமாக கம்பீரம் தொலைத்து, வெலவெலத்து இருண்ட முகத்துடன் அவருக்குக் கைத்தாங்கலாக உடன் வந்தார் சக்சேனா. ஓடோடிப் போய் அய்யப்பனைச் சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், 'எப்படிக் காயம் ஏற்பட்டது?’ என்று கேட்டதுதான் தாமதம்... இருவருமே கதறி அழ ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் சொன்னதைக் கண்டு, 'இப்படியும்கூட நடக்குமா?’ என்பதான திகைப்புடன் பார்த்தனர் நிருபர்கள்.


சி.பி - அவங்க ஆட்சில இருந்தப்ப என்னமா ஆட்டம் போட்டிருப்பாங்க?எத்தனை பேரை மிரட்டி இருப்பாங்க? உலகம் ஒரு வட்டம்.. 


தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அய்யப்பன் சில வார்த்தைகளை நிருபர்களிடம் சொன்னார். 'சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, 'சன் குரூப் கலாநிதி மாறன் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு எங்கெங்கே சொத்துகள் இருக்கு?’னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. 


சி.பி - முதல் டைம் கேட்டப்பவே ஒழுங்கா பதில்சொல்லி இருந்தா அவங்க ஏன் திரும்பத் திரும்பக் கேட்கப்போறாங்க?

'அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை’னு சொன்னேன். உடனே ஆத்திரத்தோடு போலீஸ்காரங்க கண்மூடித்தனமா அடிச்சாங்க. என்கவுன்ட்டர் நடக்கப்போகுதுன்னு மிரட்டுறாங்க’ என்று பீதியோடு சொன்னார்.


சி.பி - என்னது ? பார்த்தது கூட இல்லையா? அடங்கோ!!!கேட்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுது, சங்கவி கொண்டைல சன் டி வி தெரியுதுன்னு சொல்வீங்க போல!!
தங்களை போலீஸார் தாக்கிய​தாக நீதிபதியிடமும் இவர்கள் சொன்னார்கள். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்!


சக்சேனா, அய்யப்பனின் வழக்​கறிஞர் செந்தில்குமார் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டு​சென்றுள்​ளார். அவரை சந்தித்தோம்.
''கடந்த இரண்டு மாத காலமாக சக்சேனாவையும் அய்யப்பனையும் திட்டமிட்டு வேண்டுமென்றே போலீஸார் மாறி மாறி வழக்குகள் போட்டு, தொடர்ந்து சிறையில்வைத்துச் சித்ரவதை செய்து வந்தனர். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் இன்னொரு வழக்கில் கைது என்ற ரீதியில் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தன.

 சி.பி - அத்தனை வழக்கு போடற அளவுக்கு ஏம்ப்பா அட்டூழியம் பண்றீங்க? 

இறுதியாக, 'தம்பிக்கோட்டை’ படம் தொடர்பான புகாரில் இருவரை​யும் கைது செய்து இருந்தார்கள். 'தம்பிக்கோட்டை’ தயாரிப்பாளர் படத்துக்காக 5 கோடி செலவு செய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, 'இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.

 சி.பி - அதானே? பகல் பூரா பின்னி பெடல் எடுத்தா நைட் தூக்கம் தன்னால வந்துடும், அதுக்கு அனுமதி கொடுத்தாத்தானே அடித்த நாள் மறுபடியும் கும்ம முடியும்?

கடந்த 6-ம் தேதி மாலை எனது கட்சிக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கு போன் செய்தேன். அவரோ தொடர்ந்து மீட்டிங்... அது... இது... எனக் காரணம் சொல்லி என்னை சந்திக்க விடாமல் தடுத்து சதி செய்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவு குறித்து நான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிய பிறகே, என்னால் உள்ளே நுழைய முடிந்தது. 

சி.பி - வால்டர் வெற்றிவேலுக்கே வார்னிங்க் மெசேஜா?ன்னு உங்களை உள்ளே தள்ளி கும்மி எடுக்கலையா? அடடா!! வட போச்சே!!!!

'அய்யப்பனிடம் விசாரணை நடக்குது... சக்சேனாவை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்’ என்று அவர்கள் கூறியபோதே எனக்கு சந்தேகம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சக்சேனாவை சந்தித்து, 'நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தார்களா? வேற ஏதாவது பிரச்னை இருக்கா?’னு கேட்டேன். 'ஒரு பிரச்னையும் இல்லை சார்’னு சக்சேனாகிட்ட இருந்து பதில் வந்தது. ஆனால் அவர் குரலில் வாட்டம் தெரிஞ்சது.


சி.பி - போலீஸ் லாக்கப் போனா கும்மத்தான் செய்வாங்க... ஃபிகரை பக்கத்துல உக்கார வெச்சு கொஞ்ச சொல்வாங்களா? 
அடுத்த நாள் விசாரணை முடிந்து 20 போலீஸ் புடைசூழ ரெண்டு பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அய்யப்பன் தாங்கித் தாங்கி நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியான நான், 'என்ன நடந்தது அய்யப்பன்? பயப்படாமச் சொல்லுங்க’னு கேட்டேன். அருகில் இருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அய்யப்பனின் கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதைக்கு அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை.


சி.பி - யோவ்.. அவங்க முறுக்கையும் பிடிக்கலை, ஜிலேபியும் பிடிக்கலை .. அண்ணன் தப்பி ஓடக்கூடாதுன்னு கெட்டியா பிடிச்சிருப்பாங்க.. 


'தம்பிக்கோட்டை’ வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால், மறுநாளான 8-ம் தேதி அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியில் வர இருந்தனர். அன்று மாலை அவர்களை சந்திக்க நான் புழல் சிறைக்குச் சென்றபோது, என்னைப் பார்த்ததும் மொத்தக் காயங்களையும் காட்டி கண்ணீர்விட்டார் அய்யப்பன். 'நேத்து கோர்ட்டுல இதை நான் சொல்லி இருந்தா... திரும்பிக் கூட்டிட்டுப் போகும்போது என்கவுன்ட்டர்ல போட்டுருப்பாங்க...’ என்று அய்யப்பன் சொன்னார். 


வெள்ளைச் சட்டை அணிந்த 30 போலீஸார் ஷிஃப்ட் முறையில் அய்யப்பனை அடித்து இருக்கிறார்கள். கால் பகுதி முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 'டாய்லெட் போகக்கூட உட்கார முடியலைண்ணா...’ என்று அழுதார்.



இந்த சூழலில் இருவரையும் நித்தியானந்தா வழக்கில் மீண்டும் கைது செய்யப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால், 'இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நீதிபதியிடமும் மீடியாக்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியதைப் பற்றித் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நானும் கோர்ட்டுக்கு விரைந்தேன்.
எதிர்பார்த்ததுபோல, அடுத்த வழக்கில் கைது செய்தார்கள். சன் டி.வி. நிர்வாகத்தை அச்சுறுத்தவும், கலாநிதி மாறனுக்குக் குடைச்சல் கொடுக்கவும் சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களின் கைத்தடிகளைப்போல சி.பி.சி.​ஐ.டி. போலீஸ் நடந்து​கொள்கிறது. போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது கைதிகளைத் தாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவான உத்தரவு பிறப்பித்​துள்ளது. 

சி.பி - ஹா ஹா, போலீஸ் எந்தக்காலத்துல சட்டப்படி நடந்திருக்கு?

எனவே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி-யான ஸ்ரீதர், டி.எஸ்.பி-யான ஜெயச்​சந்திரன், இன்ஸ்பெக்டர் காசி உள்ளிட்ட போலீஸார் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களைக் கூண்டில் ஏற்றாமல், நான் ஓய மாட்டேன்!'' என்று கொந்தளித்தார்.



இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஐ.ஜி. ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''கலாநிதி மாறனை இந்த அய்யப்பன் நேரில் பார்த்தது இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, விசாரணையின்போது நாங்கள் கலாநிதி மாறன் பெயரைச் சொல்லும்படி அய்யப்பனைக் கேட்கவில்லை...'' என்றார்.


''அப்படியானால் அய்யப்ப​னின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டதற்கு, மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது.


பொதுவாக 'போலீஸ் அடி'யில் 'காயம் வெளியில் தெரியாது’ என்பார்கள். ஆனால், அய்யப்பன் தரப்பு சொல்வதையும் அவர் காயங்களையும் பார்த்தால்.... என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?


சி.பி - சன் டி வி நடக்காது, படுத்துக்கும்னு நினைக்கறேன்..  


1.  புலமையாளர்கள் பலர் வறுமையாளர்களாக இருக்கிறார்களே? 


'கலையானது தரித்திரத்தில் இருந்துதான் பிறக்கிறது. இது 95 சதவிகிதம் உண்மை’ என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரே சொல்கிறார்...
'கூழுக்குக் கவி பாடினாள் ஒளவை. நாட்டுக்கு நலம் தரும் பாரதி​யாரின் ஆவேசக் கவி​தைகள் வறுமையில்தான் பிறந்தன. என் குடும்பத்தைக் காப்பாற்று​வதற்காக, நான் பல தினங்கள் பட்டினி கிடந்திருக்​கிறேன். அந்தக் காலத்தில்தான் என்னிடம் இருந்த கலை, ஆர்வத்​துடன் வெளியே வந்தது. இன்று நான் உங்கள் முன் நின்று பேசுவதற்கு ஆளாக்கியது அந்த வறுமையான காலங்கள்தான்.’

சி.பி - வறுமையும், புலமையும் உடன் பிறந்தவை.. நம் நாட்டில் எழுத்தாளர்களும் சரி, கவிஞர்களும் சரி உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கிடைக்கப்பெறாதவர்கள் ( விதி விலக்குகள் இருக்கலாம்..)



2. சட்டமன்றத்தில் புகழ்த் துதிகளும், எம்.எல்.ஏ-க்களின் சாஷ்டாங்க நமஸ்காரக் காட்சிகளும் அன்றாடம் அரங்கேறுவதை கவனித்தீர்களா? 


ஜெயலலிதா கண்டிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. தேவையற்ற புகழ்ச்சியும் அவசியமற்ற பவ்யமும் அம்மையாரை மீண்டும் கவிழ்த்துவிடும் காரியங்கள்!

சி.பி - ஜால்ராக்கள் நம்மை கொல்லப்போகும் காலராக்கள்


3. உலகில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியாவுக்கு ஏழாவது இடமாமே...? 


உண்மைதானே! சந்தேகம் இருந்தால், மன்மோகனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 'வேலையே பார்க்காத சில அமைச்சர்களை என்னால் மாற்ற முடியவில்லை’ என்று அவர் புலம்புவது யாரால்?


சி.பி - அதிகாரம் ஆட்சியில் இருக்கும் , அன்பு மட்டும் தான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.. 



4. தமிழகத் தலைவர்களிடம், குறிப்பாக... திராவிட இயக்கத்தினரிடம், ஒரு பிரச்னைபற்றிப் பேசும்போது, கண்ணீர் விடுவதும், அழுவதும், அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுவதும் தனிக் கலாசாரமாகவே இருக்கிறது. இது முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதுபோல் இல்லையா? 


திராவிட இயக்கத்தினரிடம் மட்டும் அல்ல... தலைசிறந்த பேச்சாளர்கள் அத்தனை பேரும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான். பாரதியின் பாடல்கள் தடை செய்யப்பட்டபோது, தீரர் சத்தியமூர்த்தி பேசிய பேச்சும் அப்படித்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டபோது... 'ஏய் மீனாட்சி உனக்கு இது பொறுக்கவில்லையா? சொக்கநாதா உனக்கு இது பொறுக்கவில்லையா?’ என்று ஜீவானந்தம் மதுரையில் கர்ஜித்ததும் அப்படித்தான் இருந்திருக்கும்.

எனவே, இது திராவிட இயக்கத்தினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கிளிசரின் ஊற்றினாலே அழத் தெரியாதவர்கள் மத்தியில் மேடையில் சிலர் கண் கலங்குவது தவறான கலாசாரம் அல்ல. நமக்கு அவர்களது கருத்தின் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால், கண்டிக்கத்தக்க அளவுக்கு கண்ணீர் பாவமானதா என்ன!

சி.பி - உணர்ச்சி வசப்படுவது கலைஞனின் உடன் பிறந்தது..



5. இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்? 

ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!
'அஞ்சு வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்தார்... நல்லா சம்பாதிச்சார்’ என்றுதான் நாமே சொல்கிறோம். 'அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!

இந்தப் பொறுப்பு உணர்வு அற்ற தன்மைதான் அனைத்துக்கும் காரணம். 'ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள். எனவே, அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!

சி.பி - பொது மக்கள் அப்பாவிகள்.. சட்டமும், அதிகாரத்தில் இருக்கும் சில நல்லவர்களும் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்.. இந்தியாவில் ஊழல் வளர காங்கிரஸ் மிக முக்கிய காரணம்.. 


6. கச்சத் தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து? 


எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்​திருக்​கலாம்!


சி.பி - தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்


7. சிறையில் இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அழகிரி சென்று பார்த்ததைக்கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பாய்ந்து தாக்குகிறாரே? 


மத்திய கேபினெட் அமைச்சர் பதவியில் இருப்பவர் என்ற அடிப்படையில் அழகிரியை விமர்சிக்கலாமே தவிர... கட்சியின் முக்கியத் தலைவர் என்ற வகையில் அவர் சிறை சென்று பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை!

சி.பி - அதானே? அவரோட கூட்டாளிகளைப்போய் பார்க்கறதுல என்ன தப்பு? பார்க்காம விட்டா அவன் காட்டி கொடுத்துடுவானே?



8. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் புகழைப் பாடுவதில் விஞ்சி நிற்பது இந்திய கம்யூனிஸ்ட்டா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா? 


இப்போதைக்கு... இந்திய கம்யூனிஸ்ட்!


சி.பி - அவங்க 2 பேரையும் விட ஓ. பன்னீர் செல்வம் தான். அண்ணன் என்னமா பம்பறார்? எல்லாம் எதிர்கால அரசியலை குறி வைத்துத்தான், ஆனா அண்ணன் நினைப்பது, சசிகலா இருக்கும் வரை நடக்காது.. 


9. உங்களுக்கு அம்மா புத்தாண்டா? அய்யா புத்தாண்டா? 

'குடி செய்வார்க்கு இல்லை பருவம்’ என்கிறார் வள்ளுவர்!


சி.பி - எந்தப்புத்தாண்டை கொண்டாடினாலும் ஏழைகளின் நிலை மாறப்போவதில்லை!!


10. தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்? 


அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!


சி.பி - காலையில் வெறும் வயிற்றில்  மரணிக்கும்போது அவஸ்தைகள் கம்மி என்று உளவியலும், மருத்துவ இயலும் சொல்கிறது..


11. முதல்வரைப் பாராட்டி சீமான் நடை பயணம் கிளம்பியதும், பாராட்டு விழா நடத்தியதும் பற்றி..? 


மூன்று தமிழர்களை முழுமையாக மீட்ட பிறகு, நிச்சயமாகச் செய்யலாம். காரியம் முடியாவிட்டால், பின்னோக்கி நடக்க முடியா

சி.பி - சீமான் சீன் போடறார்னு எனக்குத்தோணுது..

THANX - JU VI

Wednesday, September 07, 2011

ஜெவைக்கண்டு விஜயகாந்த் பம்முவது ஏன்? விம்முவது ஜூ வி கட்டுரை

விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?

கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்!
ழுகார் நம்முன் ஆஜராகி செய்திச் சிட்டையைப் பிரிப்பதற்கு முன்னதாக, நாம் முந்திக்கொண்டோம். 

'
''புதிய கவர்னர் ரோசய்யாவை, கருணாநிதி திடீரென்று சந்தித்தாரே! ஏதாவது விஷேசம் உண்டா?''

''ரோசய்யாவுக்கும் கருணாநிதிக்கும் சொல்லிக்கொள்வது மாதிரி நட்பெல்லாம் இல்லை. 'நாங்கள் நெடுநாளைய நண்பர்கள்’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்கிறார். போகட்டும்... மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கருணாநிதி சொன்னாலும், 'கவர்னரை தன் வசம் வைத்துக்கொள்வது நல்லது’ என்று கருணாநிதி நினைத்து, நடந்த காரியபூர்வமான சந்திப்புதான் இது என்கிறார்கள் தி.மு.க-வில். 

 சி.பி - கலைஞர் ஒரு சிறந்த ராஜ தந்திரி, அவரது ஒவ்வொரு மூவ்க்கும் ஒரு அர்த்தம் இருக்கும், ஆதாயம் இல்லாம ஆத்தோட போக மாட்டார்ர்.......



அன்பழகன், துரைமுருகன் ஆகியோருடன்தான் ரோசய்யாவை சந்தித்தார் கருணாநிதி. தான் எழுதிய புத்தகங்களை அவருக்குக் கொடுத்தார். பிறகு துரைமுருகனை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு நிமிஷம் ரோசய் யாவிடம் தனிமையில் பேசினாராம் கருணாநிதி.''


''அது என்னவாம்?''

சி.பி - யோவ், உமக்கு லொள்ளு ஜாஸ்திய்யா, அதான் தனிமைல பேசுனாருன்னு சொல்றாங்க.. அப்புறம் எப்படி அது தெரியும்? ஆனாலும் இப்போ அண்ணன் அளந்து விடுவார் பாருங்க.. பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே?  
''ஜெயலலிதாவின் சில செயல்பாடுகளைச் சொல்லி, கருணாநிதி வருந்தினாராம். 'நில மோசடின்னு சொல்லி கட்சிக்காரங்களைக் கைது செய்றாங்க. எல்லாரையும் குண்டாஸ்ல போடு றாங்க. என் குடும்பத்தையே பழிவாங்கணும்னு நினைக்கிறாங்க. சமச்சீர்க் கல்வி விஷயத்தில் தப்பான முடிவெடுத்து, உச்ச நீதிமன்றம் கண்டிச்ச பிறகு பின்வாங்கிட்டாங்க’ என்று கடகடவென கருணாநிதி கலங்கிவிட்டதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. 


முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் ரோசய்யா கேட்டுக்கொண்டாராம். 


சி.பி - ஏன் அவரு எந்த பாவனாவையும் காட்டலை.? அடச்சே? எந்த பாவனையையும் காட்டலை? மனசுக்குள்ள ராமராஜன்னு நினப்பா? 

அடுத்து, சொற்ப நிமிடங்களிலேயே வெளியே வந்துவிட்டார் கருணாநிதி!''


''இதுபற்றி என்ன நினைக்கிறாராம் ரோசய்யா!''

''இதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று நினைப்பார்!

சென்னைக்கு வருவதற்கு முந்தைய நாள், ஆந்திரப் பத்திரிகையாளர் ஒருவர் ரோசய்யாவை சந்தித்துள்ளார். அப்போது, 'நான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வேன். அந்த மாநில அரசுக்கு உதவியாக இருப்பேன். நான் அரசியல்வாதி மாதிரி கருத்துச் சொல்லமாட்டேன். பப்ளிக் ஸ்பீக்கராக இருக்க மாட்டேன்’ என்று சொன்னாராம். இதை வைத்துப்பார்த்தால் ரோசய்யா... அடங்கிய சமர்த்தராகவே காலத்தை ஓட்டிவிடுவார் என்று நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்கிறதோ...''



சி.பி - காங்கிரஸ் ஃபீமேல் இடம்னு சொல்லுங்க... அப்புறம் கீழே இருக்கற ஃபோட்டோவினைப்பாருங்க.. கேப்டன் மப்புல இருக்காரா?இல்லையா? கண்டுபிடிப்பவர்களுக்கு நயந்தாரா கல்யாண முகூர்த்தம் நேரடி ஒளிபரப்பு வீடியோ லிங்க் அளிக்கப்படும்.. ( ஒன்லி கல்யாண முகூர்த்தம்)

''பர்னாலா உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டாரா?''

''புதிய கவர்னர் வரும்போது முந்தைய கவர்னர் இருப்பது மரபு அல்லவாம்! எனவே, ரோசய்யா மாலையில் பதவி ஏற்கும் அன்று காலையில் பர்னாலா, அவரது மனைவி மற்றும் ஒரே ஒரு பாதுகாவலர் - ஆகிய மூவரும் ராஜ்பவனில் இருந்து பறந்துவிட்டனர். மகன்கள் நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே பொருட்களுடன் போய்விட்டனர். படாடோபமாக வழியனுப்பு விழாக்கள் நடக்காததில் பர்னாலா வருத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் நட்பு சரியாக இல்லை என்பதும் விழா நடக்காததற்குக் காரணமாக இருக்கலாம். 'ஒட்டி உறவாடிய தி.மு.க-வாவது சிறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம்’ என்று பர்னாலா வருந்தியதாக வும் சொல்கிறார்கள்.''


சி.பி - இந்த கழுகார்க்கு, நிருபர்களுக்கு இதே தொழில் போல, சொல்கிறார்கள், நினைத்தார்கள், யோசிக்கிறார்கள்னு இவங்க என்ன மைண்ட் ரீடரா?
''விழா கொண்டாடும் நிலைமையிலா இருக்கிறது தி.மு.க.?''

''அதனால்தான் சண்டிகர் போய் இறங்கிய மறுநாளே அங்கு உள்ள நிருபர்களை அழைத்து பார்ட்டி கொடுத்து பேசினாராம் பர்னாலா. அடுத்து வரப்போகும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களுள் ஒருவராக பர்னாலா இருக்கப் போகிறாராம். பிரகாஷ் சிங் பாதல் - காங்கிரஸ் ஒரு கூட்டணி அமைக்க, அதற்கு எதிராக பர்னாலா ஒரு கூட்டணியைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டார். முதல்வர் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பிர்சிங் பாதல் இருவரும்தான் இனி அவரது இலக்கு! 'இவ்வளவு ஆக்ரோஷமான மனிதர் இங்கே நடந்த பல விஷயங்களைக் கண்டும் காணாமல் மௌனியாக இருந்தது ஏன்?’ என்பதுதான் பலரது கேள்வி. கருணாநிதியுடனான நட்பு என்கிறார்கள் சிலர். பர்னாலாவின் மகனைச் சிலர் காரணம் சொல்கிறார்கள். மொத்தத்தில் பர்னாலா, வெறும் தலையாட்டி பொம்மையாகவே கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட்டுப் போய்விட்டார்!''

''திடீரென ஸ்டாலின் லண்டன் கிளம்பிவிட்டாரே?''

''மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று வருவதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின். லண்டன் செல்வதற்கு முன்னதாக, இங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று செக்-அப் செய்ததாகவும் சொல்கிறார்கள். எனவே, அவர் லண்டன் செல்வதில் ரகசியம் எதுவும் இல்லை! ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுத்த தேதிதான் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது!''


''என்ன?''

''சட்டமன்றத்துக்குள் போவதா வேண்டாமா என்று கட்சிக்குள் பெரும் பிரச்னை நடப்பது அனை வருக்கும் தெரியும். முதலில் போக மாட்டேன் என்றார்கள். ஒரு நாள் போனார்கள். மறுபடியும் பாய்காட் பண்ணினார்கள். மீண்டும் 5-ம் தேதி போகப் போவதாக ஸ்டாலின்தான் அறிவித்தார். சட்டமன்ற தி.மு.க. குழுத் தலைவர் அவர்தானே! அன்றைய தினம் அவர் இல்லாமல் லண்டன் போனது சரியா என்பதுதான் சில தி.மு.க. பிரமுகர்களின் கேள்வி!

'5-ம் தேதி, தான் லண்டனில் இருப்போம் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, அந்த நாளை ஏன் சொல்ல வேண்டும்?’ என்று சிலர் புலம்புகிறார்கள். '

தளபதி இருந்து எங்களை சபைக்கு அழைத்துச் சென்றால்தானே உற்சாகமாக இருக்கும்? சபைக்குள் என்ன முடிவு எடுப்பது என்பதையும் அவர் இருந்தால்தான் உடனடியாகச் சொல்லவும் முடியும்?’ என்பது இவர்களது கருத்து. மேலும், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள கருணாநிதி விரும்புகிறார். ஆனால், அவரது வீல்சேருக்கு வழி இல்லாததால் அவரும் சைலன்ட் டாக இருக்க வேண்டிய நெருக்கடி. மொத்தத்தில் சபைக்கும் தி.மு.க-வுக்கும் ஒட்டவில்லை!''

''சேலம் தி.மு.க. பொதுக் கூட்டத்திலும் ஏதோ கசகசப்பாமே?''

''இத்தனை ஆண்டுகால தி.மு.க. வரலாற்றில் வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமல் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை அவரது எதிரிகள் சேர்ந்து நடத்திக் காட்டிவிட்டார்கள். பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் இதற்கு ஏற்பாடு. ஸ்டாலினின் முழு ஆசியுடன் நடந்த இந்தக் கூட்டத்துக்காக சேலம் போஸ் மைதானத்தில் எக்கச்சக்கமான கூட்டமாம்! 

இதற்கான ஆலோசனை நடந்தபோதே வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவு ஆட்கள் கடும் எதிர்ப்பு கிளப்பினார்களாம். 'அண்ணன், அடுத்த வாரம் ஜாமீனில் வெளியே வரப் போகிறார். அவர் வந்ததும் நடத்தலாம்’ என்று வெளிப்படையாகவே சொல்ல... எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கலையமுதன், சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து, 'தளபதி கலந்துகிடுற தேதியை மாத்தணும்’ என்று சொல்லி... 

வீரபாண்டி ஆறுமுகம் இல்லாத காரணத்தையும் அவர் சொன்னாராம். கடுப்பான கருணாநிதி, 'வீரபாண்டியார் இல்லேன்னா கூட்டமே நடத்தக் கூடாதா? நானே இல்லேன்னாக்கூட கட்சி இருக்கும். கூட்டம் நடக்கும்’ என்றாராம் கருணாநிதி. கலையமுதன் ஓடி வந்துவிட்டார். இதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர் கோஷ்டி பார்க்கிறது. 'மாவட்டக் கழகத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தும் இதுபோன்ற காரியங்களுக்கு தளபதி உதவி செய்வது சரியா?’ எனச் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்! அதேபோல்...''

''மாநிலம் முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் பல மாவட்டங்களில் கைதாகி வருகிறார்கள். எங்குமே நடக்காத காரியம், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. 'பொன்முடியை விடுதலை செய்’ என்று ஆங்காங்கே தி.மு.க-வினர் மறியல் செய்து கைதாவதுதான் அது. கனிமொழி முதல் எத்தனையோ பேர் கைதான போதெல்லாம் இதுபோல் மறியல் நடத்தாத உடன்பிறப்புகள், பொன்முடிக்காக மட்டும் நடத்துவது சரியா?’ என சிலர் கேட்க ஆரம்பித்த நிலையில்... 'விழுப்புரத்தில் நடந்தது மாதிரி எல்லா ஊர்லயும் நடக்கட்டும்’ என்று தூண்டி விடும் காரியத்தையும் ஸ்டாலின் செய்கிறாராம். '


மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் ஆங்காங்கே ஆர்ப் பாட்டம் நடத்துவது தவறு என்று கண்டிக்காமல் தளபதியே இப்படிச் சொல்வது சரியா?’ என்றும் இவர்கள் கேட்கிறார்கள். மொத்தத்தில் கட்சி கலகலத்துக்கொண்டு இருப்பது தெரிகிறது!''


''உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் இருப்பாரா?''


சி.பி - அண்ணன் பம்பறதே அதுக்குத்தானே? உள்ளாட்சித்தேர்தல் முடிஞ்ச பிறகு பாருங்க சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஜெ வை குறை சொல்லி வெளி நடப்பு பண்ணப்போறாரு.. 
''இருக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் நினைக் கிறாராம். 10 மாநகராட்சியில் 4 இடங்களை தே.மு.தி.க. கேட்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழக வட்டாரத்தில் வலம் வருபவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 'ஒரே ஒரு மாநகராட்சியை அம்மா விட்டுக்கொடுக்கலாம்!’ என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

விஜயகாந்த் இதை ஏற்பாரா எனத் தெரியவில்லை. 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என்பதற்காக, கூட்டணிக் கட்சிகளுடன் அம்மா சமரசமாகப் போனார். இறங்கிச் சென்று தொகுதி களை விட்டுக்கொடுத்தார். இப்போது ஆளும் கட்சி ஆகிவிட்டதால், அவ்வளவு இறங்கிப் போகமாட்டார்...’ என்றும் அ.தி.மு.க. புள்ளிகள் சொல்கிறார்கள்.''


''விஜயகாந்த் என்ன நினைக்கிறார்?''

''ஜெ. ஆட்சியின் 100-வது நாள் விவாதத்தில் கலந்துகொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலி தாவை புகழ்ந்து தள்ளிவிட்டு, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணருங்கள்’ என்று சொன்னார்.


சி.பி - யார் யாருக்கு எத்தனை கோடி? நன்மை? 

ஒன்றாக இருப்பதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது என்பது அவரது வாக்கு. இந்த விழா அன்றுகூட சபைக்கு விஜயகாந்த் வராதது, ஜெயலலிதாவுக்கு மனவருத்தம் கொடுத்துள்ளது. 'சபைக்கு வர விஜயகாந்த்துக்கு ஆர்வம் இல்லையா? அல்லது அவாய்ட் பண்ணுகிறாரா?’ என்று குழம்பிப் போயிருக்கிறார் ஜெயலலிதா. 

'எந்த இடத்திலும் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசி கமிட் ஆகிவிடக் கூடாது’ என்று விஜயகாந்த் நினைப்பதாகவும் சொல்கிறார்கள். 


சி.பி - அண்ணன் ஹேங்க் ஓவர்ல , வாமிட் ஆகிடக்கூடாதுன்னு நினைச்சிருப்பாரு.. 





1. மன்னர்களை வீழ்த்தியது எது?  


சி.பி - நோ டவுட். ஒன்லி மண்ணாசை, & பெண்ணாசை
 
அந்தப்புரமும் புத்திர பாசமும்!
அக்பர் இதற்கு நல்ல உதாரணம். பிறந்த பையனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் போர்க்களத்தில் இருந்தபடியே அக்பரின் பிறந்த நாளைக் கொண்டாடினார் அப்பா ஹுமாயூன். 'இவன் புகழ் கஸ்தூரி மணம் போல உலகம் முழுக்கப் பரவ வேண்டும்’ என்றார். அதைப் போலவே 69 ஆண்டுகள் வாழ்ந்த அக்பர், 49 ஆண்டுகள் மன்னராகவே இருந்தார். அவரை நொந்து நூலாக்கி மரணப்படுக்கையில் தள்ளியது ரெண்டு பேர். ஒருத்தி, அந்தப்புரத்தில் இருந்த மாஹம் அனாகா. தன் மகன் ஆதம்கானை வளர்க்க வேண்டும் என்பதற்காக அசைக்க முடியாத மாவீரனான பைராம்கான் பற்றி பொய்களைப் புனைந்து அக்பரிடம் இருந்து பிரித்தாள்.


இன்னோர் ஆள், அக்பரின் மகன் சலீம். 'அப்பாவின் ஆயுள் நீடிக்கிறதே’ என்று நித்தமும் புலம்பி, தனி அணி கட்டியவர் சலீம். இவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் அக்பர் படுக்கையில் சரிந்தார். இதுதான் பல மன்னர்களுக்கும் நடந்தது!



2. 'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே ஜெ.? 

'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே அ.தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே மு.க. இவர்கள் ரெண்டு பேருக்​குமே வேறு வேலையே இல்லையா?

சி.பி - நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கனும்னா திமுக , அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று சக்தி வரனும்...



3. இலங்கையில் 30 ஆண்டுகளாக இருந்த அவசரகாலத் தடை சட்டத்தை ராஜபக்ஷே வாபஸ் வாங்கிவிட்டது நல்ல விஷயம்தானே? 

இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்பதைக்காட்ட ராஜபக்ஷே நடத்தும் நாடகம் இது!
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி-யான சீனித்தம்பி யோகேஸ்வரன் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்தார். 'அவசர கால தடை சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, பயங்கரவாத தடை சட்டத்தை ராஜபக்ஷே பலப்படுத்திவிட்டார்!’ என்று சொல்லி​இருக்கிறார். எனவே, சட்டத்தின் பெயர் மட்டுமே மாறியுள்ளது.
அதைவிட யோகேஸ்வரன் சொல்லியிருக்கும் இன்னொரு செய்தி அதிர்ச்சிக்கு உரியது. '50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா பணம் கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரம் வீடுகள் கூட கட்டித் தரப்படவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். இந்தியா இதையாவது தட்டிக்கேட்க வேண்டும்!



'பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட மூவர் குறித்து தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது’ என்கிறாரே மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்? 

ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளும் வழிமொழிந்த தீர்மானம், குடியரசுத் தலைவருக்குத்தான். எனவே, அது ஏற்கத் தக்கதா இல்லையா என அவர்தான் தீர்மானிக்கவேண்டும். மேலும், ஒரு மாநில சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் ஓர் அமைச்சர், அதுவும் சட்ட அமைச்சர் கருத்துச் சொல்வது அபத்தமானது. ஜெயலலிதா மீதான எரிச்சல் மட்டுமே அவரது வார்த்தைகளில் தெரிகிறது!

சி.பி - கட்டுப்படுத்தாது, ஆனால் கரைக்க , மனம் மாற்ற உதவலாம்..


5.   அண்ணா ஹஜாரே பற்றி, அருந்ததிராய் எழுதிய கட்டுரையைப் படித்தீரா? 

ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியவர் என்கிற அடிப்படையில் ஹஜாரே ஏற்கத் தக்கவர்தான். ஆனால், அருந்ததி சொன்னதில் மிக முக்கியமான விமர்சனம் இருக்கிறது.

'அதிகாரம் கீழ்நிலை வரை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. ஆனால், ஹஜாரேயின் ஜன்லோக்பால் சட்டம், முற்றதிகாரம் கொண்ட கொடிய சட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே அதிகாரம் வாய்ந்த சிறு கும்பல் நாட்டை ஆள்கிறது. ஜன்லோக்பால் குழுவும் இரண்டாவது, அதிகாரம் வாய்ந்த கும்பலாகச் செயல்படப் போகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்.


'காந்திய நெறி சார்ந்ததாக இச்சட்டம் வடிவமைக்கப்​படவில்லை!’ என்று அருந்ததி சொல்​வதற்கு அண்ணாவிடமிருந்து இதுவரை பதில் இல்லை!

சி.பி - துக்ளக் சோ கூட அன்னா ஹசாரேவை ஆதரிக்கவில்லை...நமது பதிவுலகில் அண்ணன்  சேட்டைக்காரன் எடுத்து வைக்கும் அன்னா ஹசாரேவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை.. 

\6. ஸ்டாலின் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? 


'கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிகழ்ச்சிகளுக்குப் போனதுதான் எனது வேலை. இப்போது தி.மு.க. தோழர்களை சிறை சிறையாகப் போய்ப் பார்ப்பதுதான் எனது வேலை’ என்று உங்கள் ஊரில் தான் ஸ்டாலினே ஒப்புக் கொண்டுள்ளாரே!

சி.பி - அழகிரியை ஓரம் கட்டுவது எப்படி? அப்பாவின் மனதில் அவசரமாய் இடம் பிடிப்பது எப்படி? என திங்க்கிங்க்.. 



7. 'தமிழகத்தின் அண்ணா ஹஜாரே!’ என்று நடிகர் விஜய்யை அவரது ரசிகர் மன்றத் தலைவர் 'வேலாயுதம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளாரே! 


நல்லவேளை! இது அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது! இதைக் கேள்விப்பட்டு அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!

சி.பி - அடப்பாவமே?விஜய்க்கு அவ்வளவு வயசாகிடுச்சா?


8. நிலப்பறிப்பு வழக்கு டல் அடிப்பது போல் தெரிகிறதே? 


இதோ அடுத்து வரப்போகிறது, சொத்துக் குவிப்பு வழக்குகள்!

சி.பி - அது வந்தா அம்மாவுக்கும், அய்யாவுக்கும் சேர்ந்தாப்போல் ஆபத்து


9. கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கும் புதிய சட்டம் வரப் போகிறதாமே? 


ஆமாம்! 'கிரிமினல்கள் இல்லாத அரசியல் _ சட்ட மசோதா’ என்று இதற்குப் பெயர். கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களது வேட்பு மனுக்களை இந்தச் சட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்து விடுவார்கள். இன்றைய நாடாளுமன்றத்திலேயே 162 எம்.பி-க்கள் மீது குற்றப்புகார்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால் வரவேற்க வேண்டிய சட்டம் இது. இன்னும் மூன்று வாரத்தில் தாக்கல் ஆகப் போகிறது.


சி.பி - அப்புறம் எலக்‌ஷன்ல நிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுடுமே?


10. பணமா... குணமா... எது முக்கியம்? 


'பணத்தால் அழகான நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால், அதன் வாலை பணத்தால் ஆட்டுவிக்க முடியாது’ என்பார்கள். நல்லவர்களைப் பார்த்தால் நாய் வாலை நளினமாக ஆட்டும். திருடர்களைப் பார்த்தால் வால் வெடைக்கும். எது முக்கியம் என்று தெரிகிறதா?

சி.பி - பொண்ணு வீட்டுக்காரங்க மாப்ளைக்கு சொந்த வீடு இருக்கா? சொத்து பத்து இருக்கா?ன்னு விசாரிக்கறாங்க, அதுக்குப்பிறகுதான் அவர் கேரக்டர் எப்படி?ன்னு விசாரிக்கறாங்க.. ஓவரா சொத்து இருந்து கேரக்டர் முன்னே பின்னே இருந்தாக்கூட அட்ஜஸ் பண்ணிக்கறாங்க.. அப்போ பணம்தானே முக்கியம்? குணம் முக்கியம்னு பேச நல்லாருக்கும், நடைமுறைல ஒத்து வர்றதில்லையே? \


11. கேரளாவில் முதலமைச்சரின் குறை தீர்ப்பு கால்சென்டருக்கு நல்ல வரவேற்பாமே? 

  முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கால் சென்டரை செப்டம்பர் 1-ம் தேதி திறந்தார்கள். முதல் நாளே 2.25 லட்சம் மக்கள் இந்தச் சேவைக்குள் நுழைந்தார்கள். இதை அரசு எதிர்பார்க்கவில்லை. அன்று மட்டுமே 4 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளன. எல்லாப் புகார்களுக்கும் ஒரு மாதத்துக்குள்  பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் உம்மன் சாண்டி. ஜெயலலிதாவும் இதை அமல்படுத்தலாம்!


சி.பி - அந்த சட்டம் அமலுக்கு வந்தா அய்யா, அம்மா 2 பேரும் தானே மாட்டுவாங்க.. ஐ ஜாலி.. 



12. அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை படமாகிறதாமே? 

வில்லன் யார் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?

சி.பி - நோ, 2 பேரும் டம்மி வில்லன்ஸ்.. பாபா ராம்தேவ் தான் மெயின் வில்லன்.. ஹா ஹா , ஏன்னா அவருக்குத்தான் அன்னா மேலே பொறாமை.. எங்கே பொறாமை இருக்கோ அங்கே தான் வில்லத்தனமும் ஜாஸ்தி இருக்கும்.. 

THANX - JU VI