Showing posts with label சின்மயி. Show all posts
Showing posts with label சின்மயி. Show all posts

Saturday, October 27, 2012

ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி

http://www.pustaka.co.in/img/upload/jeyamohan.jpg

சமீபத்தில் ஒரு சிறிய நண்பர்குழாமில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எல்லாம் அதிகம் வாசிக்கும்பழக்கமற்ற நண்பர்கள், ஆனால் உண்மையாகவும் தீவிரமாகவும் சமூகக் களப்பணியாற்றக்கூடியவர்கள். ஊடகம் பற்றி பேச்சுவந்தது. நான் இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாதென்றும், ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே என்றும் சொன்னேன்.



உதாரணமாக எந்த ஊடகவியலாளரும் மதுரை தினகரன் அலுவலகத்தில் நிகழ்ந்த கொலையைப்பற்றி இன்று எழுதிவிடமுடியாது. அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. அடையாளமில்லாமல் அலையும் ஒரு நாடோடி மனிதனைக்கூட இன்று எளிதாக தாக்கமுடியாது, அவர்கள் கத்தி ஆர்ப்பாட்டம்செய்து ஊரைக்கூட்டுவார்கள். அந்த உரிமைகூட இல்லாதவர்கள் நம் ஊடகவியலாளார்கள். அந்தக்கூட்டமா இந்தியாவை காப்பாற்றும் என நாம் நம்புகிறோம் என்றேன்



ஊடக முதலாளிகளுக்கும் அந்த சுதந்திரம் இல்லை. அவற்றுக்கான முதலீட்டை பெருந்தொழிலதிபர்க்ள் மட்டுமே செய்ய முடியும். அவர்களின் தொழில்கள் மீது இந்திய அரசுக்கிருக்கும் முழுமையான அதிகாரம் அவர்களை முழுமையாகவே கட்டுப்படுத்தும் , அவர்கள் அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது என்றேன். 



அப்படியென்றால் இணையம் ஒரு நல்ல ஊடகம் அல்லவா என்று என்னிடம் கேட்டார்கள். நான் அது உண்மை என்றேன். இன்றிருக்கும் நிலையில் இணையம் சுதந்திரமான ஊடகம். அது நேரடியான கட்டுப்பாடு ஏதும் இல்லாதது. செலவு இல்லாதது. ஆகவே அதை சுந்தந்திரமாக செயல்படச்செய்ய முடியும். பலநாடுகளில் இணையம் சுதந்திர ஊடகமாக பெரும்பணிகளை ஆற்றியிருக்கிறது. ஆனால்- என்றேன்



நண்பர்கள் ’எதற்கும் ஒரு ஆனாலை சொல்லிவிடுகிறீர்கள்’ என்றார்கள். ‘…இந்த ஆனால் மிக அடிப்படையான ஒரு நடைமுறைச்சிக்கல்’ என்றேன். ‘இணையத்தை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் அனைவருமே படித்தவர்கள். அதுவே அதன் பிரச்சினை’
நண்பர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்றே புரியவில்லை. ‘படித்தவர்கள் இணையத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நல்லதுதானே?’ என்று ஒருவர் கேட்டார். அவர் ஒரு கிறித்தவப் போதகர். நான் பார்த்ததிலேயே எளிய மனிதர். அவருக்கு அப்படித்தான் கேட்கவரும். ’நீங்கள் ஒரு மாதம் நம் இணையச்சுழலில் உலவுங்கள். நமது படித்தவர்க்கம் எப்படிப்பட்டது என்று தெரியவரும்’ என்று சொன்னேன்.’ஆனால் அதை தவிர்ப்பதே நல்லது. அதன்பின் நீங்கள் கிறிஸ்துவை அணுகமுடியாது’



நாம் படித்தவர்ர்கள் என்று சொல்லக்கூடிய இந்த மக்கள்திரள் எப்படிப்பட்டது? நாம் அதை ஒட்டுமொத்தமாக, புறவயமாக அணுகக்கூடிய ஒரு வாய்ப்பை இணையம் நமக்கு உருவாக்கியளிக்கிறது. அதிலிருந்து வரும் நமது மனப்பிம்பம் என்ன? இங்கே இணையத்தில் உலவக்கூடிய பலர் இருக்கிறீர்கள். கடந்த பத்தாண்டுகளில் நான் வந்தடைந்துள்ள மனச்சித்திரத்துக்கு மாறான சித்திரமுள்ள எவரேனும் இங்கே இருக்கிறீர்களா? 



நமக்கு இணையம் ஒரு சுதந்திரவெளியை அளிக்கிறது. அந்தவெளியில் நாம் ரகசியமாகச் செயல்படும் வாய்ப்பையும் அளிக்கிறது. இவ்விரண்டையும் நம்முடைய படித்த இளையதலைமுறை எப்படி பயன்படுத்திக்கொள்கிறது?
தமிழில் ஓரளவேனும் தீவிரமான விஷயங்களை வெளியிடும் இணையதளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றை வாசிப்பவர்கள் மிகச்சிறுபான்மையினர். மிகப்பெரும்பாலான இணையவாசகர்கள் வாசிக்கும் இணையதளங்கள் சினிமா அரட்டைகள், கிசுகிசுக்கள், வம்புச்சண்டைகள் மட்டுமே நிரம்பியவை.



நண்பர்களே, முன்பு ஒரு பேச்சு இருந்தது. குமுதமும் விகடனும் எல்லாம் மக்களின் ரசனையை சீரழிக்கின்றன என்று. இன்று நம் மக்களுக்கு அவர்களே தங்கள் இதழ்களை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கையில் குமுதத்தையும் விகடனையும் விட பலமடங்கு கீழ்த்தரமான இணைய தளங்களைத்தான் உருவாக்கி வாசிக்கிறார்கள். நம்மை குமுதமும் விகடனும் கெடுக்கவில்லை, நாம்தான் அவர்றை கெடுத்து குட்டிச்சுவராக்கினோம். இன்னும் இன்னும் கீழே வா என்று நம் படித்த இளையதலைமுறை நமது ஊடகங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது.



எனக்கு வரும் எதிர்வினைகளில் இருந்து ஒன்றை கவனிக்கிறேன். மிகப்பெரும்பாலான இணையவாசகர்களால் நாலைந்து பத்திகளுக்கு மேல் வாசிக்க முடியாது அந்த மொழிநடை அரட்டைபோல இருக்கவேண்டும். மிகச்சாதாரணமாக, துண்டுதுண்டாக சொல்லப்பட்டிருக்கவேண்டும். அதாவது கொஞ்சம் கூட தீவிரமோ கனமோ இருக்கக்கூடாது. அவர்களுக்கு தெரிந்த, அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அரட்டைபோல அது இருக்கவேண்டும்



எந்த ஒரு கருத்தையும் ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் உள்வாங்கிக்கொள்ள இவர்களால் முடியாது. எதை எப்படி விரிவாகச் சொன்னாலும் அதிலிருந்து ஒற்றைவரியை உருவி அதை மட்டும் புரிந்துகொள்வார்கள். எதையும் அதன் சாதகபாதக தளங்களை ஒப்பிட்டு தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள இவர்களுக்கு ஆற்றலில்லை.அவர்கள் எழுதும் இணையப்பதிவுகளையும் அவர்கள் அளிக்கும் எதிர்வினைகளையும் பார்க்கையில் அவர்களின் சிந்தனைத்திறன் மீது ஆழமான சந்தேகம் வந்தபடியே இருக்கிறது.




இன்னொரு அம்சம், அவர்களுக்கு எந்த பிரச்சினையிலும் உண்மையான ஈடுபாடில்லை என்பதுதான். ஈடுபாடில் இருந்துதான் அறிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்கிறது. அந்த ஆர்வமில்லாத நிலையில் அவர்கள் இணையத்திற்கு வருவது வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே. வேலையிலும் குடும்பத்திலும் அவர்கள் அடையும் மன அழுத்தங்களுக்கான வடிகால்தான் இது. வெறுமே வேடைக்கை பார்த்து அரட்டையடிப்பவர்கள் கணிசமானவர்கள்



இன்னொரு சாரார் உக்கிரமாக உள்ளே புகுந்து கண்டபடி வசைபாடி அவதூறுசெய்து தாறுமாறாக நக்கலடித்து உளவியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள். இணையம் இன்று இவர்கள் உலவும் காடு. உங்கள் வீட்டுப்பெண்களையோ குழந்தைகளையோ நீங்கள் இந்த தமிழ் இணைய உலகுக்கு அறிமுகம் செய்ய மாட்டீர்கள். இன்று இணையத்தில் பெண்கள் அவர்களின் சுய அடையாளத்துடன் புழங்கவேமுடியாது. எங்கள் நிகழ்ச்சிகள் முடிந்தபின் அவற்றில் பங்குபெற்ற பெண்களின் படங்களை புகைப்படங்களிலிருந்து நீக்கித்தான் வெளியிடுகிறோம்.



 நம் இணையப்புலிகள் சென்ற காலங்களில் செய்த கீழ்த்தரவேலைகளினால் பெண்கள் அந்த அளவுக்கு அஞ்சுகிறார்கள். திருப்பூர் பேருந்துநிலையத்தில் நடு இரவில் பெண்களுக்கிருக்கும் பாதுகாப்புகூட தமிழ் இணையச்சூழலில் கிடையாது.



இவர்களெல்லாம் யார்? நம்மைப்போல சாதாரண மக்கள். குடும்பமும் வேலையும் உடையவர்கள். இணையத்தில் அவர்களின் கௌரவமான சமூக முகத்தை கழட்டிவிட்டு மனநோயாளிகளாக உலவுகிறார்கள். இப்படி இணையத்தில் பெண்களை அவமதித்த மூர்த்தி என்ற ஒருவரை புகாரின் அடிப்படையில் போலீஸார் பிடித்தபோது கதறியழுது தன் வாழ்க்கையை அழித்துவிடவேண்டாம் என்று அவன் கெஞ்சினானாம். அவனைப்போன்றவர்களே இதையெல்லாம் செய்கிறார்கள்..



சமீபத்தில் பிரபலமான பாடகி ஒருவர் இணையதளத்தில் பொதுத்தொடர்புக்கு வந்தபோது இணையத்தின் இந்த முரட்டுமூடர்கள் அந்தப்பெண்ணை வசைபாடி, அவதூறுசெய்து, மிரட்டி சிறுமைசெய்தனர். ஆபாசப்படங்கள் வெளியிடுவதாக மிரட்டினர். அவரது தாயை ஆபாசமாக வசைபாடினர். பொறுமை மிஞ்சிய ஓர் எல்லையில் காவல்துறைக்குச் சென்று அந்தப்பெண் புகார் கொடுக்க நேர்ந்தது. ஆறுபெயர்களையும் சின்மயி குறிப்பிட்டிருக்கிறார். அவர்களை காவலர் கைதுசெய்திருக்கிறார்கள்.
இணையத்தில் மலினத்தைக்கொட்டும் பலநூறுபேரில் சிலர் இந்த ஆறுபேரும். இதுவரை இணையம் அளித்த சுதந்திரத்தில் இவர்கள் இப்படி கீழ்மையில் திளைத்தார்கள். ஒரு சாலையிலோ வணிகவளாகத்திலோ இருந்த அற்பர்கள் கௌரவமானவேடத்தில்தான் உலவ முடியும். இணையத்தில் அந்த பாவனையே தேவையில்லை. ஆம், இன்றும் இதுதான் நம் இணையச்சூழல். உங்கள் வீட்டுப்பெண்ணின் படம் குமுதத்தில் வரலாம். ஆனால் இணையத்தில் வரமுடியாது. உங்கள் வீட்டுப்பெண் ஒரு பேருந்துநிலையத்தில் நள்ளிரவில் நின்றிருக்க முடியும், இணையத்தில் முடியாது.



பொதுவாக நாம் நம்முடைய சமூகத்தளத்தில் சில மதிப்பீடுகளை கடைப்பிடிப்போம். ஓர் அன்னியப்பெண்ணிடம் பேசுவதில் நமக்கென ஓர் எலையை கொண்டிருப்போம். நம் வீட்டுப்பெண்ணிடம் பிறர் அப்படி பேசவேண்டும் என நினைப்போம். ஆணாதிக்கவெறியோ பாலியல்காழ்ப்போ நமக்குள் இருந்தாலும்கூட அதை பொதுமேடையில் காட்டாமலிருக்கும் பாவனையாவது நம்மிடம் இருக்கும். இணையத்தில் இயங்கும் இந்த அற்பர்களுக்கு அந்தத் தடைகள்கூட இல்லை. கிட்டத்தட்ட பண்பாடற்ற மிருகங்களாகவே செயல்படுகிறார்கள். 



இந்த மனச்சிக்கலுக்கு ஏதாவது கொள்கைமுலாம் பூசிக்கொண்டால் அதற்கான கும்பலைச் சேர்த்துவிடலாம் என்பதை இவர்கள் கண்டடைந்திருக்கிறார்கள். குறிப்பாக வசைபாடியான ஈவேராவின் பெயரைச்சொல்லும் ஒருவர் எந்தக்கீழ்மையிலும் துணிந்திறங்கலாம். அவர் எங்கிருந்தாவது ஈவேராவின் வரிகளை தனக்குத் துணையாக இழுத்துக்கொண்டுவந்துவிடமுடியும். 



ஆம், தமிழைப்பொறுத்தவரை இணைய ஊடகமென்பது பிற ஊடகங்களை விட மிகமிக கீழ்த்தரமானதாக இருக்கிறது. இணையவெளி என்பது நம்முடைய சமூகவெளியைவிட பண்பாடற்றதாக உள்ளது நமக்கு நவீனத் தொழில்நுட்பம் அளித்த மாபெரும் வாய்ப்பை நம்முடைய மனநோய்க்கூறுகளை வெளிப்படுத்தும் ஒரு கழிப்பறையாக நாம் ஆக்கிக்கொண்டுவிட்டோம்.



படித்தவர்கள் என நாம் சொல்லும் இந்த அசட்டு பாமரர்களுடன், நாகரீகமில்லா கும்பலுடன் மட்டுமே இணையம் பேசமுடிகிறதென்பதே இணையத்தின் மிகப்பெரிய பலவீனம். அடிப்படையில் அது பயனற்ற ஒன்றாக இன்று இருப்பதன் காரணமும் இதுவே.



இன்றைய தமிழ்ச்சூழலில் ஓர் ஊடகம் எளிய படிக்காத மக்களிடம் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றால் அதனால் பெரியபயனேதும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் படித்தவர்கள்ர் பெரும்பாலும் சுயநலமும் மனச்சிக்கல்களும் கொண்ட கோழைகளாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்களிடம் எந்த ஒரு சமூக, அரசியல், அறம்சார் பிரச்சினைகளையும் பேசிவிட முடியாது. அவர்கள் செவிகொடுப்பதில்லை. போலியாக மட்டுமே எதிர்வினையாற்றுவார்கள்.



இங்கே எழக்கூடிய முக்கியமான வினா இதுதான். இப்படி இவர்களை ஆக்கியது எது? திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் அனைத்து சமூக ஆய்வாளர்களும் சமூகச்செயல்பாட்டாளர்களும் சொல்வார்கள். இங்கே நமக்களிக்கப்படும் கல்வியின் அடிப்படையானது பிரிட்டிஷ்காலத்தில் வரையறைசெய்யப்பட்டது. அதை நாம் ‘கருங்காலிக்கல்வி’ என்று சொல்லமாம். சொந்த சமூகத்துக்கும் சொந்த மக்களுக்கும் எதிரான ஒரு மக்கள்கூட்டத்தை உருவாக்கும்நோக்குடன் வடிவமைக்கப்பட்ட கல்வி அது.
அந்தக்கல்வியை பெறும் ஒருமனிதர் முதலில் தன்னை தம்மைச்சர்ந்த பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார்.



 தான் அவர்களைவிட மேல் என்றும் அவர்களிடமிருந்து கூடுமானவரை விலகியிருப்பதே தனக்கு கௌரவம் என்றும் நினைக்க ஆரம்பிக்கிறார். ஒரு படித்த மனிதன் எவ்வகையிலும் அவனுடைய சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. அதற்காக அவன் அக்கறை காட்டுவதில்லை, போராடுவதில்லை. அதை சுரண்டுவதற்கும் அடக்கியாள்வதற்கு அவனை பிறர் உரிய கூலிகொடுத்து எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம். அவன் படிப்பின்மூலம் துரோகியாக, கருங்காலியாக மட்டுமே உருவாகிறான்.




படித்த பிள்ளைகள் படிக்கவைத்த பெற்றோரை காட்டுமிராண்டிகளாக எண்ண ஆரம்பிக்கின்றன. படிக்கும்தோறும் அந்தப்பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி அதிகரித்து ஒருகட்டத்தில் அவர்கள் நடுவே ஓர் தொடர்பே நிகழாத நிலை உருவாகிவிடுகிறது. சென்றகாலங்களில் ஆண்களைப்பற்றி இந்த குறையை எல்லாரும் சொல்லிவந்தனர் .இப்போது படித்த பெண்களைப்பற்றிய மனவருத்தங்களையே அதிகமாகக் காண்கிறோம்.
ஆங்கிலக்கல்வியை கூர்ந்து அவதானித்த காந்தி பதிவுசெய்யும் முதல் விஷயமே இதுதான். இன்று இக்கணம் வரை நமது கல்விமுறை உருவாக்குவது இந்த மனநிலையைத்தான். இதற்கான மாற்றுக்களை அவர் தொடர்ந்து சிந்தித்திருக்கிறார். காந்தியக் கல்வி என்று சொல்லும் ஒரு வழிமுறையை உருவாக்கும் முன்முயற்சிகளை அவர் கண்டடைந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பலர் சிந்தித்திருக்கிறார்கள். 



காந்தி நமக்கு பிரிட்டிஷார் உருவாக்கியளித்த கல்வியை ஒரு வெறும் மூளைப்பயிற்சி என்று நினைக்கிறார். ஒரு நல்ல குமாஸ்தாவாக உருவாவதற்கு அவசியமான மொழித்தேர்ச்சியையும் அடிப்படைத் தகவல்களையும் மூளைக்குள் திணிக்கும் பயிற்சி மட்டுமே. அதை நாம் கல்வி [education] என்று தவறாகச் சொல்கிறோம். அது வெறும் பயிற்சி [Training]தான்.




கல்விக்கும் பயிற்சிக்குமான வேறுபாடு என்ன? பயிற்சி என்பது எப்போதுமே ஏதேனும் ஒரு அம்சத்தில் மட்டுமே அடையப்பெறும் தேர்ச்சிதான். யானையை முக்காலியில் உட்காரவைக்க சர்க்கஸில் அளிக்கப்படுவது பயிற்சி. மனிதனை பதவிகளில் அமரச்செய்யவும் அதுதான் அளிக்கப்படுகிறது.



பயிற்சி என்பது திரும்பத்திரும்பச் செய்யப்படுவதன்மூலம் மனதுக்கோ உடலுக்கோ கைவரும் ஒரு பழக்கம். தட்டச்சுப்பயிற்சி என்கிறோம். வண்டிமாடு நுகத்திற்குப் பழகுவதை ப்யிற்சி என்கிறோம். நாம் நம் கல்விச்சாலைகளில் அளிப்பதும் இதுவே. கணிப்பொறியாளராக ஆவதற்கான பயிற்சி. பொறியியலின் ஏதேனும் ஒருபகுதியில் பயிற்சி. மருத்துவப்பயிற்சி.
பயிற்சி ஒருபோதும் ஆளுமையுருவாக்கத்தில் பங்கெடுப்பதில்லை.



 ஒரு குறிப்பிட்ட பயிற்சியை அதிதீவிரமாக எடுக்கும்போது உண்மையில் ஆளுமையில் ஒரு கோணல்தான் உருவாகிறது. பிற எதுவுமே தெரியாத ஓர் அசட்டுப்பிறவியாக அது மனிதனை ஆக்கிவிடுகிறது. இன்றைய நம் உயர்கல்விபெற்ற இளைஞர்களில் பெரும்பகுதியினரை பார்த்தாலே இது தெரியும். ஓர் அடிப்படை ஆளுமைத்திறன்கூட இல்லாத அற்பர்கள் அல்லது அசடுகள் அவர்கள்.



சுதந்திர இந்தியா தன்னுடைய கல்வியை பொருளியல் வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொண்டு வடிவமைத்தது. அதற்கு பழைய பிரிட்டிஷ்பாணி கல்விமுறையில் கூடுமானவரை தொழில்நுட்பப் பயிற்சியை சேர்த்துக்கொண்டால் போதும் என முடிவெடுத்தது. சென்ற ஐம்பதாண்டுக்கால நம் கல்விச்சீர்திருத்தங்களைப் பார்த்தால் ஒருங்கிணைந்தகல்வி, ஆளுமைத்தேர்ச்சி என்றெல்லாம் பேச்சுகள் இருந்தாலும் நடைமுறையில் தொழில்நுட்பம் சார்ந்த தகவலறிவை அதிகரிப்பதன்றி வேறெந்த இலக்கும் அவர்களிடமில்லை என்பதைக் காணலாம்



விளைவாக தொழில்நுட்பப் பயிற்சி அன்றி எந்த கல்வியும் இல்லாத ஒரு தலைமுறையையே உருவாக்கி நம்மைச்சுற்றி நிறைத்துவிட்டிருக்கிறோம். அவர்களைத்தான் நாம் இன்று இணையத்தில் கண்டுகொண்டிருக்கிறோம்.



கல்வி என்பது பயிற்சியில் இருந்து வேறுபடுவது ஒரு அடிப்படை இயல்பால்தான். கல்வி ஒருபோதும் குறைபட்டதாக இருக்கமுடியாது. கல்வி என்பது முழுமையானதாக, ஆளுமையை வளர்ப்பதாக மட்டுமே இருக்கமுடியும். நம்முடைய பல்லாயிரமாண்டுக்கால மரபு சொல்லும் வரையறை இதுவே. சான்றோனை உருவாக்குவதே கல்வி. திறமையுள்ளவனை, தேர்ச்சியுடையவனை உருவாக்குவதல்ல. எது ஒரு மனிதனை முழுமையானவனாக படிப்படியாக மாற்றுகிறதோ அதுவே கல்வி.
பயிற்சிக்கும் கல்விக்குமான அடுத்த வேறுபாடு இங்கேதான் வருகிறது. பயிற்சிக்கு ஓர் எல்லை உண்டு. 


கல்வி முழுமையை நோக்கிச் செல்வது. முழுமை என்பது முடிவின்மையில் எங்கோ இருக்கும் ஒரு புள்ளி. ஆகவே கல்விக்கு முடிவே இருக்காது. ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் என மரபு அதைச் சொல்கிறது. கடைசிக்கணம் வரை கல்வி நீடித்தாகவேண்டும். கல்விக்காலகட்டம் என ஒன்று இல்லை. கல்வியில் இருந்து வெளியேறும் புள்ளி என எதுவும் உலகியல் வாழ்க்கையில் இல்லை.

இப்படிச் சொல்லலாம். பயிற்சி என்பது செல்பேசி கோபுரங்களை நட்டுவைக்கும் சிமிண்ட் மேடை போன்றது. உறுதியாக ஒருவனை அதில் நட்டு வைக்கிறது. கடைசிவரை அவன் அதுதான். பொறியாளர் பொறியாளர் மட்டுமே. வேறு எவனும் அல்ல. மருத்துவன் எந்நிலையிலும் மருத்துவன் மட்டுமே, நல்ல மனிதனாக ஆவான் என்பதற்குக்கூட ஆதாரமில்லை. ஆனால் கல்வி என்பது ராக்கெட்டின் ஏவுதளம் போல. அது அங்கிருந்து எம்பிப்பறப்பதற்கான ஒரு இடம். தன் மீதமர்ந்தவனை வான் நோக்கி ஏவும் மேடை அது.



கல்வி என்பது உறுதியான திட்டவட்டமான நிராகரிப்பு வழியாக அல்லது தாண்டிச்செல்லல் முன்னகர்கிறது. நான் ஒன்றை அறிந்துகொண்டதும் அதை ஏற்கிறேன் அல்லது நிராகரிக்கிறேன். ஏற்றுக்கொண்ட விஷயத்தை பற்றிக்கொண்டு மேலேறி இன்னும் நுட்பமான இன்னும் தீவிரமான இன்னும் விரிவான விஷயங்களை கற்க ஆரம்பிக்கிறேன். ஏற்றவற்றை கடந்துசெல்கிறேன்


.
கல்வி என்பது நம்மை முன்னால் செலுத்திக்கொண்டே இருக்கக்கூடிய எலிவேட்டர் போன்றது. படிகளில் ஏறலாம். சும்மா நின்றாலும் அது மேலேதான் கொண்டுசென்றுகொண்டிருக்கிறது. 



நம்முடைய கல்விக்கூடங்களில் கல்வி இல்லை, பயிற்சிதான் உள்ளது. ஆகவேதான் நம் இளைஞர்களால் எதையுமே அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்களால் மனப்பாடம்செய்ய திரும்பிச்ச்சொல்ல மட்டுமே முடியும். மேற்கோள் காட்டமுடியும். எல்லா தரப்பையும் கருத்தில்கொண்டு சாராம்சத்தை உள்வாங்கி தன்னுடைய முந்தைய அறிதல்களுடன் இணைத்துப்பரிசீலித்து ஓர் ஒட்டுமொத்த அறிதலை உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடியாது. மிக உயர்ந்த கல்விகற்று மிக முக்கியமான வேலைகளைச் செய்யும் இளைஞர்களிடம் கூட இந்த ஆற்றல் இருப்பதில்லை. ஆகவேதான் நாம் அளிப்பது கல்வியை அல்ல பயிற்சியை மட்டுமே என நான் சொல்கிறேன்.



யோசித்துப்பாருங்கள் நம் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்? எட்டாம் வகுப்புக்குப் பின் உக்கிரமான வெறிபிடித்ததுபோன்ற மனப்பாடக் கல்வி. டியூஷன் கல்வி. அபப்டியே பிளஸ்டூ. அச்சுநகலாக பாடப்புத்தகத்தை திருப்பி எழுதும் பயிற்சி. உயர்கல்வி முடிப்பது வரை இதுதான் நம் கல்வி. இருபத்திரண்டு வயதில் கல்விமுடித்து நேரடியாக வேலை. சம்பளம். ஒரு முழு ஆண்மகனாக ஆகிவிட்டதாக அவனுக்கு நினைப்பு வருகிறது. ஆனால் அவன் மனவளர்ச்சி எட்டாம் வகுப்புடன் நின்றுவிடுகிறது.



நம் இளைஞர்கள் இணையத்தில் எழுதுவதை அவ்வப்போது பார்ப்பேன். அவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். ஆனால் உலகத்தை அவர்கள் எழுத்தில் பார்க்கமுடியாது. எட்டாம் வகுப்பு படித்துவிட்டு கொத்தனார் வேலைக்குச் செல்லும் பையன்கள் மாலையில் பார்வதிபுரம் முனையில் நின்று பேசும் அதே விஷயங்களைத்தான் அவர்களும் பேசுவார்கள். அதாவது சினிமா. சரி, சினிமாவைத்தான் எப்படிப் பேசுகிறார்கள் என்று பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. வணிகசினிமாவை அந்த சினிமாவின் தரத்தை விட கீழே போய் பிய்த்துப்போடுவதுதான் இவர்களால் முடிகிறது



இந்த இளையதலைமுறைதான் இன்றைய இந்தியாவின் சாபக்கேடு. சமீபத்தில் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வேகம்கொண்டபோது தென்னிந்தியாவில் மட்டும் அது எந்த அலையையும் கிளப்பவில்லை. ஏனென்றால் இங்குள்ள படித்த நடுத்தரவர்க்கம் அப்படி ஒரு தார்மீகமான கோபத்தை புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டதே அல்ல. அவர்களுக்கு அண்ணா ஹசாரே ஒரு’காமெடியனாக’ தான் தெரிந்தார். அரைலட்சம் சம்பளம் வாங்கி வார இறுதியில் மப்படிக்கும் தங்கள் வாழ்க்கை மிக உயர்வானதாக தோன்றியது. கேலிகள் கிண்டல்கள். 



அவர்கள் கல்விகற்றவர்கள் அல்ல. பயிற்சி பெற்றவர்கள். ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பயிற்றுவிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படும் உயிர்கள். ஒரு திரைப்படத்தில் சர்க்கஸ்புலிகள் இரண்டை அதன் உரிமையாளன் காட்டில் கொண்டுசென்று விட்டுவிடுவான். அவை வளையம் வழியாக பாய மட்டுமே கற்றவை. அது பயிற்சி, கல்வி அல்ல. ஆனால் காட்டுப்புலி தன் குழந்தைக்கு முழுமையான காட்டையே சொல்லித்தந்துவிடுகிறது. காட்டுப்புலிக்குள் இருப்பது காடு. சர்க்கஸ் புலிக்குள் இருப்பது வளையமும் சாட்டையும் மட்டுமே. நம் பிள்ளைகள் சர்க்கஸ்புலிகள்.



அந்த சினிமாவில் சர்க்கஸ்புலிகள் காட்டுக்குள் வாழத்தெரியாமல் ஊர் அருகே ஒண்டிக்கொள்கின்றன. ஊர்மக்களை வேட்டையாட ஆரம்பிக்கின்றன. அவற்றை கடைசியில் வேட்டைக்காரர்கள் சுட்டுத்தள்ளுகிறார்கள். இங்கே நம் சர்க்கஸ்புலிகளும் உண்மையான வாழ்க்கையை அதன் விரிவுடனும் வீச்சுடனும் எதிர்கொள்ளத்தெரியாமல் ஒரு சிறு வட்டத்துக்குள் ஒண்டிக்கொள்கின்றன. அதுதான் இணையவெளி. அங்கே நக்கல்கள் கொக்கரிப்புகள். பாவம், அய்யோ பாவம் என பரிதாபம் நெஞ்சை அடைக்க நினைத்துக்கொள்கிறேன். 




அந்த சினிமாவில் அந்த சர்க்கஸ் புலி குட்டிபோடும் இடம் ஒன்று உண்டு. சர்க்கஸ்புலியை கொல்ல வரும் வேட்டைக்காரன் அது குட்டிபோடுவதைக் கண்டு திரும்பிவிடுவான். அந்த குட்டி சர்க்கஸ்புலி அல்ல. அது காட்டுப்புலி. அபாரமான அர்த்தம் அளித்த காட்சி அது. எல்லா குட்டிக்குள்ளும் காடு இருக்கிறது. வளையத்தையும் சாட்டையையும் காட்டி நாம் அதை அழிக்கிறோம்,



மசானபு ஃபுகோகா இயற்கைவேளாண்மையின் தந்தை. அவரது புகழ்பெற்ற ஒற்றைவைக்கோல்புரட்சி என்ற நூல் இயற்கையின் விதிகளை மீறாமல் வேளாண்மைசெய்வதைப்பற்றி சொல்லக்கூடியது. ஆனால் அந்நூலை வாசிக்கும் ஒரு பாடப்புத்தக வாசகன் ஆச்சரியமடைவான். அந்நூலில் வேளாண்மையைப்பற்றி மட்டும் பேசப்படவில்லை. வேளாண்மையில் தொடங்கி படிப்படியாக ஒரு மேலான வாழ்க்கை பற்றி அது பேசுகிறது. பிரபஞ்சவியலை பேசுகிறது. ஆன்மீகமான உச்சநிலை நோக்கி அந்த உரையாடலை அது கொண்டுசெல்கிறது.



ஒரு மேலைநாட்டு வேளாண்மைநூலில் நீங்கள் இதை எதிர்பார்க்கமுடியாது. அந்நூலை ஒரு ஐரோப்பிய நூல்தொகுப்பாளர் செப்பனிட்டிருந்தால் அந்நூலின் கால்பகுதி அது பேசும் பொருளைவிட்டு வெளியே செல்கிறது என்று சொல்லியிருப்பார். வேளாண்மை விஞ்ஞானிக்கு பிரபஞ்சவியல் பற்றி பேச அடிப்படை இல்லை என்று சொல்லியிருப்பார். ஆனால் அதுதான் கீழைமரபு. 



நான் ஃபுகோகாவின் நூலை வாசித்த அதேவருடம் ஒரு நூலை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தேன். இயற்கைஉணவு விஞ்ஞானியாக இருந்த சிவசைலம் நல்வாழ்வு ஆசிரம நிறுவனர் ராமகிருஷ்ணன் அவர்களின் ‘நோயின்றி வாழமுடியாதா?’ என்ற நூலை. அதில் சமைக்காத உணவே உடலுக்கான இயல்பான உணவாகும் என வாதிடுகிறார் ஆசிரியர். ஆனால் அவரது பார்வை கலை இலக்கியம் தத்துவம் சிந்தனை எல்லாவற்றையும் தொட்டு ஆன்மீகமான ஒரு முழுமைநோக்கை முன்வைக்கிறது



ஆம், நம் மரபு அதுதான். எந்த கல்வியானாலும் அது தனக்கான முழுமைநோக்கைக் கொண்டிருக்கவேண்டும். இளவயதில் நான் எங்களூரின் வர்மக்கலை நிபுணர்களின், சிலம்பக்கலை ஆசான்களின் கல்விக்கூடங்களை கவனித்திருக்கிறேன். அவர்கள் வர்மம் அல்லது சிலம்புசுற்றுதல் என்னும் ஒரு கலையை மட்டும் கற்பித்தவர்கள் அல்ல. அதன் வழியாக வாழ்க்கை பற்றிய ஒரு முழுமை நோக்கை அளித்தவர்கள்.



நம்முடைய மரபில் எந்த ஒரு கலையை கற்கச்சென்றாலும் அது கடைசியில் ஆன்மீகக் கல்வியை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிறபமானாலும் மருத்துவமானாலும். பிறநூல்களில் உள்ள அதே ஆன்மஞானம் அந்த தொழில்நுட்ப நூல்களிலும் உள்ளது. ஏனெனென்றால் கல்வி என்பது ஞானத்துக்கான பாதை. ஆம், மெய்ஞானத்தை நோக்கி கொண்டுசெல்லும் திராணி அற்றது கல்வியே அல்ல.



பயிற்சி தெரிந்துகொள்ளுதலை அளிக்கிறது. கல்வி அறிவை அளிக்கிறது. பயிற்சி தேர்ச்சியை அளிக்கிறது. கல்வி ஆளுமை வளர்ச்சியை அளிக்கிறது. தெரிந்துகொள்ளுதல் அரைகுறையானது. அறிவு முழுமையும் சமநிலையும் கொண்டது. 



ஞானம் என்ற ஒன்றை அதன் அடுத்தபடியாக முன்வைத்தார்கள் நம் முன்னோர். ஞானம் என்பது அறிவுதான். ஆனால் அறிதல் அல்ல. நாராயணகுரு அதை அறிவலமர்தல் என்று சொல்கிறார். அறிதலும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாலும் நிலை. அதுவாதல். எதை அறிகிறோமோ அதுவேயாகும் நிலை. அதுவே அறிவின் முழுமை. 



நாம் அறிவது மண் துளியாக இருக்கலாம் இலைநுனியாக இருக்கலாம் புழுவாக இருக்கலாம் அந்த அறிதல் ஏதோ ஒரு கட்டத்தில் நம்மை முழுமையறிதலை நோக்கிக் கொண்டு செல்லமுடிந்தால் அதுவே உண்மையான கல்வி



நமக்கு இப்பிரபஞ்சத்துக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான திரை உள்ளது. நம் அறியாமையின் திரை இது. மிக விசித்திரமான திரை. இந்த திரை நம் அகங்காரத்தாலும் ஆசைகளாலும் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ளது. நாம் நமக்கு தேவையானதை, நாம் விரும்புவதை மட்டுமே அறிகிறோம். நாம் அறிந்ததை வைத்து மேலே அறியவேண்டியதை தடுத்துவிடுகிறோம். 



இளமையில் குழந்தை கல்விக்கான பேராசையுடன் இருக்கிறது. எதை புதியதாகச் சொன்னாலும் குழந்தை கவனிக்கும். ஆனால் வளர்ந்ததும் ஒரு கட்டத்தில் எந்த புதிய விஷயத்தையும் நாம் உள்வாங்காதவர்களாகிறோம். ஆசையாலும் அகங்காரத்தாலும் அறிதல் நிலைத்து நின்றுவிடுகிறது.அந்த அகங்காரத்தையும் ஆசையையும் கடந்துதான் அறியாமைத்திரையை கிழித்து முழுமையறிவை அடையமுடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுவே ஞானத்தின் பாதை.



ஒருமனிதன் தன் வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்கவேண்டிய தேடலையே கல்வி என நாம் சொல்கிறோம். கல்விக்கூடங்கள் மிகமிக ஆரம்ப நிலையில் உள்ளவை. ஒருவன் மிக அதிகமாக கற்றால்கூட இருபத்தைந்து வயதில் அக்கல்வி முடிந்துவிடுகிறது. அதன்பின்னர் ஆரம்பிப்பதே உண்மையான கல்வி. ஞானமளிக்கும் கல்வி.



நாம் கற்றிருப்பது கல்வியல்ல பயிற்சி என அறிபவன் கல்வியை அடையாளம் காணமுடியும். கல்வி அவனுக்கு ஞானத்தை சுட்டிக்காட்டும்.



ஒரு விழியிழந்த மனிதர் ஞானியின் வீட்டைவிட்டு கிளம்பும்போது இரவாகி விட்டது. அவர் தனக்கு ஒரு கைவிளக்கு கேட்டார். ’பார்வையற்ற உனக்கு ஏன் விளக்கு?’ என்றார் ஞானி ’விளக்கொளியில் ன்னை மற்றவர்கள் பார்ப்பார்களே, அவர்கள் என் மேல் மோதாமலிருப்பார்கள் அல்லவா?’ என்றார் பார்வையற்றவர். 



வழியில் ஒருவர் பார்வையற்றவர் மேல் மோதிக்கொண்டார் ‘மூடா, நீ விளக்கை பார்க்கவில்லையா?’ என்றார் பார்வையற்றவர் கோபமாக. அவர் சொன்னார் ‘சகோதரா விளக்கு ஏற்கனவே அணைந்துவிட்டிருக்கிறது’ 



பார்வையற்றவர் விளக்கின் எல்லையை அப்போதுதான் உணர்ந்தார். ஞானியிடம் திரும்பிவந்தபோது அணையாத ஒரு விளக்கை அவர் அவருக்குச் சுட்டிக்காட்டினார்



இந்த விஜயதசமிநாளில் அந்த அணையாவிளக்கை நாம் உணர்ந்துகொள்வோம்


நன்றி - ஜெயமோகன்



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html




டிஸ்கி 6 -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html



Friday, October 26, 2012

மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic4smqbzXhbxA3xZ5pMvEq6RlmHRlKZpPVx7Fi1L2gnAR18N0M0K4RJ10q6ybCd3N5Jq_J7sYBAWk1ChB9f3_vJzzI2yn_4iGlXB0R8098efXx4060TCYHD2lb-k3DbxFjtHgOTDtqeUC9/s1600/manushya+puthiran.jpgசின்மயி விவகாரம் பற்றி இனி எழுத நேரக்கூடாது என்று நேற்றிரவு கடவுளை பிரார்த்தித்துவிட்டு தூங்கப் போனேன். ஆனால் கடவுள் சின்மயி பக்கம் இல்லாததாலும் நேற்று நான் எழுதிய குறிப்பிற்கு நண்பர்கள் ஆற்றியிருக்கும் எதிர்வினை காரணமாகவும் சில வார்த்தைகள் மீண்டும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. ஒரு இளம் எழுத்தாளர் என் வாழ்க்கையில் முதன் முதலாக உருப்படியாக பேசுகிறேன் என்று பாராட்டுகிறார்.


 ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் சுஜாதாவிடம் இல்லாத ஆபாசமா சின்மயிடம் இருக்கிறது என்று கேட்கிறார். இதுபோன்ற அபத்த களஞ்சியங்களுக்கு இடையே நான் முகவும் மதிக்கும் வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்ற நண்பர்களும் இந்த விவாத்தில் பங்கேற்றிருப்பதால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது.



புதிய தலைமுறை, சத்யம் இரண்டிலும் நடந்த விவாதத்தில் பெண்கள் உடல் சார்ந்து ஆபாசமாக விமர்சிக்கப்படுவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறேன். சின்மயிக்கு செய்யப்பட்ட எதிர்வினையை நான் எந்த இடத்திலும் ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை. இதில் சம்பந்தபட்ட இரண்டு தரப்புமே ஒரு விவாதத்தை நடத்துவதற்கான தகுதியற்றவர்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.



ஆனால் இந்த பிரச்சினை வெறும் பாலியல் விவகாரம் மட்டும் அல்ல. ஒரு இனப்படுகொலையை புலால் உண்ணும் பழகத்திற்கு இணையாக பேசுகிறார் சின்மயி. இது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்றும் புலால் உண்ணும் பழக்கமுள்ள என்னை புண்படுத்துகிறது என்றும் நான் காவல்துறையிடம் சென்றால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? இணையத்தில் மீனா கந்த கந்தசாமிமீது தொடுக்கப்பட்ட ஆபாசத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்?



இங்கு அரசியல் அதிகாரம், ஊடக அதிகாரம், காவல்துறை அதிகாரம், நீதிதுறை அதிகாரம் அனைத்திலும் சாதிய ரீதியான – சமூக பொருளாதார அந்தஸ்து ரீதியான பாரபட்சங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதைத்தான் நான் இந்தப் பிரச்சினையில் மைய்யபடுத்த விரும்புகிறேன்.



மீனவர் படுகொலை, இட ஒதுக்கீடு போன்றவை தமிழ் சமூகத்தின் அரசியல் சரித்திரத்திரம் சார்ந்த ஆதாரமான பிரச்சினைகள். கோடிக்கணகான மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக ஒருவர் எந்த ஒரு வரலாற்றுப் பார்வையும் சமூகப் பார்வையும் இல்லாமல் பேசுவது என்பது கருத்துச் சுதந்திரம் என்று மட்டும்தான் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?



ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா?



குஷ்புவின் மீது தமிழகம் முழுக்க தாக்குதல் தொடுக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சின்மயி விவகாரத்தில் வெளிப்படும் இனவாதத்தையும் சாதிதிமிரையும் அதிகார வர்க்க தொடர்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளமல் அவர் மீதான பாலியல் விமர்சங்களை மட்டும் தனியாக எடுத்து விவாதிக்க முடியாது.



நீங்கள் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் உங்கள் தலையில் தன் வீட்டு மாடியிலிருந்து குப்பையைக் கொட்டுகிறார். நீங்கள் அண்ணந்து பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறீர்கள். ஆனால் குப்பையைக் கொட்டுகிறவருக்கு அது அவருடைய உரிமை என்றும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியவர் மட்டும் சமூக விரோதி என்றும் விவாதிப்பது என்ன நியாயம்?



கூடங்குளத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய காவல்துறையினர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?



எல்லாவற்றிலும் நுண் அரசியல் பேசும் நண்பர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் சின்மயியின் மனோபாவம், காவல்துறையின் அதீத அக்கறை, இணையத்தின் மீது கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கொண்டுவர விரும்பும் அரசு… இது போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறது என்பதையெல்லாம் இணைத்து பேச மறுப்பது ஏன்?



நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

வாசகர்கள் கருத்து


1.

Kraja Raja இது அவசர உலகம். முன்பெல்லாம் சாலையில் செல்லும் போதெல்லாம் யார் மீதும் தவறாக இடித்து விட்டால் "சாரி" கேட்போம்.
இப்போது அப்படி இல்லை நம் மீது தவறு இருந்தாலும் கண்ணு தெரியலையாஃபார்த்து போ என்கிறோம்.
வேணாம் வலிக்குது இத்தோடு விட்டுறுங்க
2.
Anbarasan Vijay இந்த வெளிப்படையான பகிரங்கமான கருத்தைதான் உங்களது முந்தைய தொலைகாட்சி நேர்காணலில் எதிர்பார்த்தேன், எந்த ஒரு கருத்தையும் எதற்காகவும் தயங்காமல் முன் வைக்கும் உங்களிடம் ஏதோ பின்வாங்குதல் இருப்பதாக நினைத்தேன், இந்த பதிவை படித்த பிறகு அந்த குறை தீர்ந்தது, சின்மயியினுடைய சாதிய ரீதியிலான கருத்துக்களால் பாதிக்கப் பட்ட ஆயிரமாயிரம் பேர்களில் நானும் ஒருவன், 
சின்மயி முற்போக்கு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவரது புகாரின் மீது காவல்துறை அதீத அக்கறையும், அவசரமும் காட்டியுள்ளது, இந்த அக்கறை ஏன் மீனாகந்தசாமி விவகாரத்தில் காட்டப் படவில்லை?,சாதீயம் எல்லா மட்டங்களிலும் தலை தூக்கி நிற்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம், உங்களது நிலைப்பாட்டை வழிமொழிகிறேன் உங்களோடு நானும் கைகோர்க்கத் தயார்
3.
Arul Ezhil நன்றி சார். ராஜன்லீக்ஸ், சரவணகுமார் அகியோரை யாரென்றே எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட அவர்கள் கைதாகி இரண்டாம் நாள் வரை நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் அதன் பின்னர் வந்த செய்திகள் எல்லாம் இவர்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்த பிறகுதான் நான் எழுதினேன். உங்களைப் பொன்றோர் ஒரு தரப்பை ஆதரிக்காலம் எழுதுவது மன ஆறுதல் அளிக்கிறது.
4.
Mani Kandan ஒரு தனிப்பட்ட பகை, காழ்புணர்ச்சி, உயர் சாதி/மேட்டு குடி வளர்ப்பு முறை, சக நண்பர்கள் உசுப்பு - மொத்த உருவகம் சண்டை இட்ட இரு தரப்பினரும்.

இதில் சின்மை கை ஓங்கி இருபது அவரின் அதிகரவர்க்கத்துடன் இருக்கும் நெருக்கத்தை பட்டவர்தமாக வெளிபடுதிவிட்டார். இது சமூ
கத்துக்கு பெரிய சவால்.
இவருக்கு முன் உள்ள 19 வழக்குகள் பற்றி முச்சி விடாத ஜர்ஜ் - இவருக்கு மட்டும் வரிந்து கட்டுவதில் அப்பட்டமாக தெறிகிறது.

சின்மை அகம்பாவத்தில் பெரும் பங்கு - ஆஹா ஓகோ என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திய காலன் போல் தோன்றி இருக்கும் வண்ணமிகு தொலைகாட்சி நிறுவனங்களை சேரும்.

பாடினால் / ஆடினால் எதோ உலகத்தில் பெரிய சாதனை புரிந்த போன்று ஒரு மாயை உருவாக்கும் தொழில்சாலையாக தொலைகாட்சி நிறுவனங்களை செயல்படுகின்றன. இவற்றின் இயங்கு தளம் சென்னை அதை சார்ந்த இடம் மட்டுமே, அதனால் தமிழகத்தின் மற்ற பகுதிகள் பற்றி புரிந்து கொள்ளும் தன்மை இவற்றில் உள்ள என்னோயோருக்கு தெரிவது இல்லை - சின்மை உட்பட.

அவர்கள் இதுதான் உலகம் என்று நம்புகிறார்கள், ஆனால் சமுகம் இதைவிட பெரியது, அதை அவ்வளவு எளிதாக நேர்கொள்ள முடியாது.இதை புரியாமல் இதற்கு முதல் பலி - சின்மை.

அதிகம் பாதிப்பு அடைவது சின்மை - அவரின் / அவரை போல் உள்ள சென்னை வாழ் மேட்டு குடி மக்களின் மறு முகம் கிழிந்து விட்டது.

இதனால் சின்மை - இனிமேல் தமிழகத்தின் செல்ல பிள்ளை இல்லை.

பெண்ணிடம் கிழ்த்தரமாக நடந்துகொண்டவன் தமிழன் இல்லை.

இதை தவிர, இந்த விசயத்தில் இரு தரப்பினர் பற்றி விவாதிக்கும் அளவுக்கு தகுதி இல்லை. இருவரும் வேவ்வேறு குட்டையில் ஊறின ஒரே மாதிரி மட்டைகள்.

ஒருவேளை நீங்கள் அய்யா ராகவா ஐயங்கார் வழிமுறை இருந்தால், அவர் பெயருக்கு களங்கத்தை செய்யதிர்கள், தயவுசெய்து.

அய்யா ராகவா ஐயங்கார் அவர்களின் தமிழ் தொண்டு, பற்று கருதி - சின்மை மன்னிப்போம், மறப்போம் - அவர் பாடலை புறக்கணித்து.

நன்றி.
5. Mansoor Ali Khan சின்மாயி செய்தது தவறு என்று கூறுபவர்கள் - ராஜன் செய்ததும் தவறு என்று ஒத்துக்கொள்ளதான் செய்கிறார்கள், மேலும் இது திசை திருப்பபட்ட வழக்கு என்பது தான் அவர்களின் வாதம், ஆனால் சிம்னயின் ஆதரவாளர்கள் - அந்த பெண் கூறியது தவறு என்று ஒத்துக்கொண்டதாக தெரியவில்லை - இது ஆணவத்தின் வெளிபாடாக தான் பார்க்கமுடிகிறது
6. Prasanna Kumar ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா? - உங்களின் இந்த கட்டுரை சின்மயி விவகாரம் என்பதையும் மீறி நீங்கள் சொன்ன எந்த வாக்கியம் பொதுவானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்
நன்றி - மனுஷ்ய புத்திரன் ஃபேஸ் புக்  



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


டிஸ்கி 9 - கோர்ட்டில் சின்மயி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/10/blog-post_6680.html



சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து


கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான்.  ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது.  நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம்.  ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா?  இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்?  ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள். அதுவும் அவர் ஒரு பெண்ணாக இருந்தால் கதை கந்தல். மீனா கந்தசாமி விவகாரத்தில் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்.  ”நடுத்தெருவில் வைத்து உன்னை ரேப் பண்ண வேண்டும்” என்றெல்லாம் சில பொறுக்கிகள் எழுதினார்கள்.   அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.



என் மீது பகைமை கொண்டவர்கள் அதிகம் என்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவன் நான்.  எனக்கு வரும் வசைக் கடிதங்களைப் படிப்பதிலிருந்துதான் என் நாளே துவங்குகிறது.  முதல் வார்த்தையைப் படித்ததுமே delete செய்து விடுவேன் என்றாலும் இவ்வளவு நீளமான கடிதத்தை கஷ்டப்பட்டு டைப் செய்திருக்கிறார்களே என்ற ஆச்சரியம் மட்டுமே எஞ்சும் எனக்கு.  இவர்கள் என் மீது ஏன் இத்தனை கோபம் கொண்டு அசிங்கமாகத் திட்டுகிறார்கள் என்றும் புரியாது.  என் அம்மாவிலிருந்து ஆரம்பித்து என் மனைவி, என் பிறப்புறுப்பு வரை திட்டுவார்கள்.  பரிதாப உணர்ச்சியே மிகும்.



ஆனால் ஒரு கட்டத்தில் இது வசைக் கடிதங்கள் என்பதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேறொரு கிரிமினல் தன்மையை அடைந்தது.  எனது நண்பர்களின் அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதி அவர்களைப் போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  அவர்களுக்கு வேலை போய் நடுத்தெருவில் நிற்க வேண்டும் என்பது அந்த நலம் விரும்பிகளின் விருப்பம்.  எனது வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சில பெண்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  (உங்கள் மனைவியை இந்த வாசகர் வட்டத்திலிருந்து விலகச் சொல்லுங்கள், அவர்களெல்லாம் கெட்டப் பசங்கள்… இன்னும் நீங்கள் யாரும் கற்பனையே செய்ய முடியாத பயங்கரங்களையெல்லாம் எழுதியிருக்கிறார்கள்).  இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? அந்தப் பெண்களின் குடும்ப வாழ்க்கை இதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் காரணம்?  இதற்கெல்லாம் நான் சும்மாவே இருந்தேன்.  ஏனென்றால், என்னுடைய புகார்ப் பெட்டி, கடவுள் மட்டுமே.


சுமார் ஒரு பத்து ப்ளாகர்கள் இருப்பார்கள்.  நான் என்ன எழுதினாலும் அதை அப்படியே நகல் எடுத்து வரிக்கு வரி என்னைத் திட்டி, அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்தி தன் ப்ளாகில் எழுதி விடுவார்கள்.  இதற்காக அவர்கள் மணிக் கணக்கில் செலவிட்டதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம்.  இப்படித் தனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு எழுத்தாளனைப் படித்து, அவனைத் திட்டி பக்கம் பக்கமாக தன் ப்ளாகில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை அவர்கள் தங்கள் குழந்தையையோ மனைவியையோ கொஞ்சுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தால் இப்படி ஸைக்கோவாக மாறி இருக்க மாட்டார்கள்.  இவர்களின் எழுத்தைப் படித்தால் இவர்கள் கிரிமினல்கள் மட்டும் அல்ல, ஸைக்கோக்கள் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.


நேர் வாழ்க்கையிலோ அல்லது அச்சு ஊடகத்திலோ இவர்கள் இப்படி ஸைக்கோ வேலைகள் செய்ய முடியாது.  உடனடியாகத் தூக்கி உள்ளே தள்ளி விடுவார்கள்.  இணைய வெளி கொடுக்கும் எல்லையில்லாத சுதந்திரமே இவர்களை இப்படி ஸைக்கோக்களாக்கி விடுகிறது.  தகுதியில்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் இப்படித்தான் ஆகும்.  அதனால்தான் நான் எப்போதும் சுதந்திரம் பற்றிப் பேசும்போதெல்லாம் பொறுப்பு (responsibility) பற்றியும் பேசி வருகிறேன்.  பொறுப்பற்ற சுதந்திரம் இப்படித்தான் பொறுக்கித்தனமாக வெளிப்படும்.



ஊடக வெளி தரும் எல்லையற்ற சுதந்திரத்தினால் ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருப்பவன் கூடத் தன்னை சே குவேராக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.  இலங்கைத் தமிழர் ஆதரவு, கருணாநிதி-ஜெயலலிதா எதிர்ப்பு, தலித் ஆதரவு, பிராமண எதிர்ப்பு (பிராமண என்று எழுதக் கூடாது; பார்ப்பன என்று எழுத வேண்டும்), தமிழ்ப் பாசம் போன்ற templates-ஐ நெற்றியில் ஒட்டிக் கொண்டால் முடிந்தது கதை – நீங்கள் ஒரு சே குவேரா.  எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்; யாரையும் திட்டலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  கேட்க நாதி இல்லை.  இல்லாவிட்டால் ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் “உன்னை நடுத்தெருவில் வைத்து ரேப் பண்ண வேண்டும்” என்று சொல்லத் துணிவானா?



இந்தப் பொறுக்கித்தனத்துக்கு எப்போது தீர்வு வரும் என்று காத்துக் கொண்டே இருந்தேன்.  இன்று சின்மயி அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  நான் சின்மயி ஆதரவாளன் அல்ல.  நேற்று வரை அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது.  நான் தமிழ் சினிமாப் பாடல் கேட்பவன் அல்ல.  ஆனால் அவருடைய கருத்துக்களுக்காக அவரை உளவியல் சித்ரவதை செய்த பொறுக்கிகள் தண்டிக்கப் பட வேண்டும்.  சின்மயி சொன்னது என்ன?  சின்மயி என்ன அருந்ததி ராயா?  அருந்ததி ராயைப் போலவே எல்லாப் பெண்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி இல்லாவிட்டால் பொறுக்கித்தனம் செய்வதும் ஃபாஸிஸம் அல்லவா?



மேலும், இப்படி இணையத்தில் சே குவேரா வேஷம் போடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் எலிக்குஞ்சாக இருக்கிறார்கள்?  போலீஸ் என்றதுமே தன் ஒரு வயதுக் குழந்தையைக் காட்டி, “என் குழந்தைக்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று காலில் விழுகிறார்களே, இவர்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்?


என்னை இந்தப் பொறுக்கிகள் எப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார்கள் தெரியுமா? நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதினால் அந்தப் பத்திரிகைக்கு நூறு பெயர்களில் என்னைப் பற்றி அவதூறாகக் கடிதம் எழுதுகிறார்கள்.  என் மொழிபெயர்ப்பாளர்களை அச்சுறுத்துகிறார்கள்.  என்னுடைய மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஒரு வாரம் முன்னால் குழந்தை பிறந்திருக்கிறது.  அந்தக் குழந்தையைத் திட்டி ட்வீட் போட்டிருக்கிறான் ஒரு பொறுக்கி.  அவனும் ஃபேஸ்புக்கில் ஒரு ஹீரோ தான்.  அவனையும் 5000 பேர் ஃபாலோ செய்கிறார்கள்.  என்னை இவர்கள் செய்யும் டார்ச்சருக்கு வேறு வேறு ஆளாக இருந்தால் தற்கொலைதான் செய்து கொள்வான். அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.   நானோ வெளியில் கூட சொல்லிக் கொள்வதில்லை.  ஏனென்றால், இவர்களின் செயல்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற ஒரே நம்பிக்கைதான் காரணம்.



இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால், என் மீது பொறுக்கித்தனமான அவதூறுகளை எழுதிய ஒரு இணைய ”சே குவேரா”  இன்று போலீஸிடம் மாட்டிக் கொண்டவர்களை பொறுக்கிகள் என்று எழுதியிருக்கிறார்.  சக பதிவரை ஒருமுறை கொலை செய்ய முயன்றவர் இவர்.  இவர் போலீஸிடம் மாட்டவில்லை.  அதனால் இவர் சே குவேரா.  மாட்டிக் கொண்டவர்கள் மாட்டிக் கொண்டு விட்டதால் பொறுக்கிகள்.  இல்லை?


சமூகப் பொதுவெளியில் நாம் நாகரீகம் தவறினால் அடுத்த கணமே பொளேர் பொளேர் என்று தர்ம அடி கிடைக்கும்.  போலீஸ் வரும் வரையெல்லாம் பொதுமக்கள் காத்திருக்க மாட்டார்கள்.  இணைய வெளியில் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.


பொதுவாக, இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய தேசம் அல்ல.  தினந்தோறும் வரும் கற்பழிப்புச் சம்பவங்களைப் பார்த்தாலே அது தெரியும்.  நம் தமிழ் சினிமாவும் ஆண் வர்க்கப் பொறுக்கித்தனத்தையே பிரதானப் படுத்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றிரண்டு பேர் தான் பங்கேற்க முன்வருகிறார்கள்.  அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றால் இந்தச் சமூகத்தில் ஆணாதிக்கம் என்பது எவ்வளவு கொடூரமாக செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதையும் மீறி இத்தளங்களில் செயல்படும் ஒருசில பெண்கள் இந்த இணைய தாதாக்களிடம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  தாதாக்களுக்கு மாமூல் கொடுப்போம் இல்லையா, அது போல இந்த இணைய தாதாக்களுக்கு லைக் போடுவது, retweet போடுவது, follow செய்வது இதெல்லாம்தான் மாமூல்.  இந்த மாமூலைக் கொடுத்தால்தான் அந்தப் பெண்களைப் பற்றி இணைய தாதாக்கள் அசிங்கமாக எழுத மாட்டார்கள்.  இந்த மாமூலை சின்மயி கொடுக்கத் தவறி விட்டார்.  அதனால்தான் அவர் இரண்டு ஆண்டுகளாக அனுபவித்த சித்ரவதை.



சுதந்திரம் என்பது பொறுக்கித்தனம் இல்லை;  பொறுப்புணர்வு என்பதை இணைய தாதாக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வெறும் தமிழ் சினிமா பார்த்து விட்டு ப்ளாகில் எழுதி, எழுத்தாளன் என்று பேர் சூட்டிக் கொள்ளும் இந்த தாதாக்கள் இப்படித்தான் சீரழிய வேண்டியிருக்கும்.  தன் குழந்தையைக் காட்டி மன்னிப்புக் கேட்டால், இந்தியாவில் இருக்கும் அத்தனை சிறைக் கைதிகளுக்கும் கூட மன்னிப்பு வழங்கி விடலாம்.  ஏனென்றால், அவர்கள் எல்லோருக்குமே குழந்தைகள் இருப்பார்கள்.  இந்தியாவில் மிகச் சுலபமாக உற்பத்தியாவது குழந்தைகள்தானே?

நன்றி - சாரு ஆன் லைன்



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html





டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


Thursday, October 25, 2012

சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள்

A









ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை

http://static.flickr.com/90/205023921_20231f4f25.jpg

சின்மயி VS கீச்சர்கள்! (ட்வீட் தமிழர்கள்)

க.ராஜீவ்காந்தி

ட்விட்டர், ஃபேஸ்புக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சின்மயி. காரணம், அவர் பதிவிட்டதாகச் சொல்லப்படும் சில ட்வீட்களும் அதற்கான எதிர்வினைகளும். போலீஸ் புகார், இணைய உலகில் கருத்து மோதல் என்று கலவர நிலவரம்.
 பிரச்னைகளுக்கு சின்மயியின் ட்வீட்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பிரபல ட்வீட்டர்கள் 'ராஜன்லீக்ஸ்’ ராஜன், 'தோட்டா’ ஜெகன், 'ஃப்ரீயாவிடு’ டேவிட். ராஜனிடம் பேசினேன்...



''2011 ஜனவரி மாசம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இணைய எழுத்தாளர்கள் ஓர் இயக்கம் ஆரம்பிச்சோம். அதில் இணையச் சொல்லி சின்மயியிடம் கேட்டோம். மறுத்துட்டாங்க. அது வரைக்கும் அவங்க உரிமை. ஆனா, 'மீனவர்கள் மீன்களைக் கொல்லலாம். கப்பல் படை மீனவர்களைக் கொன்றால் தப்பா?’னு ட்வீட் பண்ணாங்க. கோபத்தில் நாங்க சின்மயியை விமர்சிச்சு ட்வீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பிரச்னை. தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ட்வீட்களை சின்மயி போஸ்ட் பண்ணிட்டே இருந்தாங்க.


இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு விவாதத்தில், 'தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காண்பித்து, சலுகைகள் பெற்றுத் தருகின்றனர்’னு எழுதினாங்க. இப்படி அதிகப்பிரசங்கித்தனமா அவங்க போடுற ட்வீட்களுக்கு நாங்க பதிலடி கொடுத்துட்டே இருப்போம். அது அவங்களுக்குப் பிடிக்கலை. தமிழ்நாட்டின் பிரபல பதிவர்கள் பட்டியலில் அவங்களுக்கு அடுத்து என் பேர் இருந்தது அவங்களை எரிச்சல்படுத்தி இருக்கு.


http://akamai.maastars.com/wp-content/uploads/2012/04/Chinmayi_Cool_Saree_00.jpg
 அதைப் பத்தியும் தப்புத் தப்பா ட்வீட் பண்ணிஇருந்தாங்க. இது எல்லாம் சேர்ந்துதான் இப்போ போலீஸ் புகார் வரை போயிருக்கு. இத்தனைக்கும் சின்மயியுடன் ஆரோக்கியமான விவாதத்தில் இருந்த பலரைப் பற்றியும் புகார் சொல்லி இருக்காங்க சின்மயி. இணையவெளி ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கும். அந்தத் தைரியத்தில் சிலர் சின்மயியை பெர்சனலாப் பேசியிருக்கலாம். ஆனா, அதுக்காக ஏதோ சின்மயி தப்பே பண்ணாத மாதிரி பேசுறது நியாயம் இல்லை. பிடிக்காதவங்களை, தன்னைப் பத்தித் தப்பாப் பேசுறவங்களைத் தன் அக்கவுன்ட்டில் பிளாக் பண்ணியிருக்கலாம். பிரச்னையே இருந் திருக்காது!'' என்றார்.



சின்மயி அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொடர்புச் சட்டம் 66ஏ பிரிவின் கீழ் ராஜனைக் கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்காக தமிழகத்தில் முதல்முறையாகக் கைது செய்யப் பட்டு இருக்கும் நபர் ராஜன்தான்.



சின்மயியிடம் பேசினேன், ''இதைப் பத்தி நான் திரும்பத் திரும்பப் பேச விரும்பலை. நான் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கேன்னு என் அம்மாகிட்ட கேட்டுக்கங்க!'' என்று ஒதுங்கிக்கொண்டார்.


http://static.ibnlive.in.com/pix/slideshow/06-2012/in-pics-south/simmaardpart34222612_11.jpg



சின்மயியின் தாயார் பத்மஹாசினி பேசினார். ''ஃபேஸ்புக், ட்விட்டர்ல என் பொண்ணைப் பத்தித் தப்பாப் பேசுறது இன்னைக்கு நேத்து இல்லை. பல வருஷமாவே இருக்கு. எத்தனை நாள்தான் நாங்களும் பொறுமையா இருக்கிறது? என் பொண்ணைத் தப்பாப் பேச ஆரம்பிச்சு, அப்புறம் என்னையும் தப்பாப் பேசி... ரொம்ப தனிப்பட்ட தாக்குதலா இருந்ததுனாலதான் போலீஸ்ல புகார் கொடுத்தா சின்மயி.



'ஜெயலலிதாவையே கேள்வி கேக்குறோம். நீ என்னடி பெரிய இவளா?’னு கேட்டா, எங்களால் என்ன சொல்ல முடியும்? மீனவர் பிரச்னையோ, இட ஒதுக்கீட்டுப் பிரச்னையோ ஒவ்வொருத்தருக்கும் தன் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல உரிமை இல்லையா? இதே சின்மயிதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டிச்சும் ட்வீட் பண்ணியிருந்தா. அதுக்கு, 'நாங்க குழந்தைகளை ரேப் பண்ணினா உனக்கு என்னடி?’னு ட்வீட் போடுறாங்க. இளையராஜா ரசிகர்கள்லாம் சேர்ந்துக்கிட்டு, 'நீ ரஹ்மான் குரூப்தானே’னு திட்டித் திட்டி ட்வீட் போடுறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?




முதல்வர் பதவிக்கு உண்டான மரியாதைகூடக் கொடுக்காம ஜெயலலிதாவை ரொம்ப மோசமா விமர்சிக்கிறாங்க. கனிமொழி, குஷ்பு, நயன்தாரானு எல்லாரையும் ரொம்ப ரொம்ப ஆபாசமா விமர்சிச்சு எழுதுறாங்க. இப்ப இந்த வரிசையில சின்மயி. த்ரிஷா ஒரு நாயைத் தத்தெடுக்கப் போறேன்னு எழுதினா, அதுக்கு உடனே, டபுள் மீனிங்ல கமென்ட் பண்றாங்க. ஒரு டான்ஸ் மாஸ்டரோட பிரா சைஸ் என்ன இருக்கும்னு விவாதிச்சுட்டு இருக்காங்க. பெண்கள் மீதான வக்கிரத்தை வெளிப்படுத்தத்தான் இவங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் பயன்படுதா? சின்மயி, சாதி பத்தி பெருமையாப் பேசித் தம்பட்டம் அடிச்சதா சொல்றாங்க. சாதிப் பெருமை பேசுற, 'இந்த சாதிக்காரன்’னு சொல்லி போஸ்டர் அடிச்சுக்கிற ஆட்கள் இங்கேதானே இருக்காங்க. அவங்களை எல்லாம் ஏன் இவங்க தட்டிக் கேட்கலை?




ஃபேஸ்புக்லயோ, ட்விட்டர்லயோதலைவர் களைத் திட்டிட்டா போதுமா? அது தமிழர் களுக்காகப் பாடுபட்டோம்னு அர்த்தம் ஆகிடுமா? ஆபீஸ்ல இருக்கிற வரைக்கும்,  வீட்ல கரன்ட் இருக்கிற வரைக்கும் ட்வீட் பண்ணிட்டு, அப்புறம் சொந்த வேலைகளைப் பார்க்கப் போறவங்கள்லாம், ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீதியில் இறங்கிப் போராட லாம்ல. இதோ... சோஷியல் நெட் வொர்க்கிங் சைட்களில் பெண்கள் மீது அவதூறு பரப்புறவங்களை எதிர்த்து என் பொண்ணு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போராட ஆரம்பிச்சுட்டா. நீங்களும் அப்படி வாங்களேன் பார்ப்போம்!'' என்றார் கோபமும் வேகமுமாக!


http://www.moviecloudz.com/wp-content/uploads/2012/10/Chinmayi-Playback-Singer.jpg



பின்குறிப்பு: இதழ் அச்சுக்குச் செல்லும் சமயம் இரு தரப்பினரிடையே சமாதானப் பேச்சுகள் துவங்கிவிட்டதாகத் தகவல்!

 நன்றி - விகடன்

Wednesday, October 24, 2012

சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள்

http://www.tolly9.com/uploads/news/politics/thumb/professor-arrested-for-harassing-female-singer.jpg 

ட்விட்டர் ஆல்தோட்ட பூபதி ( கரூர் ஜெகன்)  எழுதிய கடிதம் -


சகோதரி சின்மயி அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை. இதுவரை உங்களுடன் பேசியதில்லை, அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் குரலின் இனிமையை ரசிக்கும் ஒரு கடைக்கோடி ரசிகனால் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாய் நினைத்து வாசியுங்கள்.


 இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடைய நீங்கள், வெறும் ஒரு தனி மனிதனின் குடும்பத்திற்காகவும் அந்த பச்சிளம் குழந்தையின் புன்சிரிப்புக்காகவும் தயவு கூர்ந்து பெரிய மனதுடனும், பெருந்தன்மையுடனும் அவர்களை மன்னித்தருள வேண்டுகிறேன். ஒரு அன்பான தாயாரால் வளர்க்கப்பட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி புகழ்ந்து சந்தோஷப்படும் ஒரு மகளான உங்களுக்கு நிச்சயம் இந்த பச்சிளம் பெண் குழந்தையின் பரிதவிப்பு புரியும் என நம்புகிறேன். 



ஒரு விளையாட்டில் ஜெயித்த நான்கு லட்ச ரூபாயை குழந்தைகள் நல அமைப்பிற்கு நன்கொடையாக கொடுக்குமளவு நல்ல நெஞ்சம் இருக்கும் உங்களால் நிச்சயம் இன்னமும் ஒரு பிறந்தநாள் கூட கொண்டாடாத இந்த குழந்தைக்காக  மிக மிக பெருந்தன்மையும் நீங்கள் வளர்ந்த உயர்ந்த முறையையும் காட்டி மன்னிதருளலாம். இது போல ஒவ்வொருவர் வீட்டிலும் இன்னமும் உலகத்தை அறியா குழந்தைகள் இருக்கலாம், வயதானவர்களும் இருக்கலாம். ஒருவரின் செயலுக்காக எல்லோரும் பாதிக்கப்பட வேண்டுமா என கொஞ்சமே கொஞ்சம் யோசியுங்கள். 



உங்களின் வார்த்தைகளின் மூலம், உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலும், பெரும் மன வருத்தமும், இறுக்கமும், கால விரயமும் புரிந்துக்கொள்ள கூடியது. உண்மையில் ஒரு சக மனிதனாக அதற்கு வெட்கமும் வேதனையும் படுகிறேன். நிச்சயமாய் அது மறக்க கூடியது இல்லை, ஆனால் உங்களை போன்ற பெருந்தன்மையான ஆளுமைகளுக்கு அது மன்னிக்க கூடியது தான். புகாரின் பேரில் இருக்கும் அந்த ஐந்து / ஆறு நபர்கள் செய்ததை நியாயப்படுத்த நான் இதனை எழுதவில்லை. அதில் எந்நாளும் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதில் சிலருடன் (இருவர்) பழகி இருப்பதாலும் இதனை எழுதவில்லை. ஏன், உங்களின் மனதை புண்படுத்தியதற்கு பொதுவிடத்தில் மன்னிப்பு கேட்கவும் வைக்க கூட எனக்கு தோன்றுகிறது.ஏன், ஒரு ஆணாக நானே கூட கேட்கலாம்.


http://lh4.ggpht.com/_leK5390n0fE/TNlabtJQefI/AAAAAAAAEu8/gA4USvRjxd8/Single-Photo-.jpg

நான் இந்த வேண்டுகோளை வைப்பதற்கும் எழுதுவதற்கும் காரணம், நானும் ஒரு ஒன்னரை வயது பெண் குழந்தையின் தகப்பன் என்பதால், ஒரு குழந்தையின் தேடலும் ஆசையும் விளையாட்டும் புன்சிரிப்பும் தவிப்பும் எப்படி இருக்கும் எதை நோக்கி இருக்கும் என்று அறிந்த ஒரு சக சகோதரனாய் தான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு.



 ஆனால் உங்களின் பெருந்தன்மையால் அவர்களை மன்னித்தால், அது அவர்களை மட்டும் மன்னித்தது இன்றி, அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றிய அழியா புகழ் உங்களை வந்து சேரும். இரண்டு நிமிடம் மட்டும் என் வேண்டுகோளுக்கு ஒதுக்கி, நல்ல முடிவை எடுங்கள். உங்களை போன்ற படித்தவர்களுக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ' இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண / நன்னயஞ் செய்து விடல்'



( இந்த வேண்டுகோளை பற்றி விவாதிக்கவோ, பெரிது படுத்தவோ நான் விரும்பவில்லை. ஏனினில் இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பத்தையும் உரிமையையும் சார்ந்தது.மீண்டும் சொல்கிறேன், இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனை உங்கள் இருவரை ( / ) தவிர யாருடனும் பேசவும் விவாதிக்கவும் நானும் விரும்பவில்லை )

PS : Please dont think that am negotiating with sentiment(s), am just writing this by considering and believing you as a real peace lover. And importantly, am requesting you and not forcing you ;) Blesses and wishes ;)


http://lh3.ggpht.com/_leK5390n0fE/TNladS4wikI/AAAAAAAAEvM/ht6YBoimxkw/Single-Photo-.jpg


சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை  -1




பிரஷாந்த் , we never wanted this to happen. அதுனால தான் ரெண்டு வருஷம் பொறுத்தோம். இன்னிக்கி மிருகம்னு அழைக்கிரவங்கள நான் approach செஞ்சு as a friend ராஜன் கிட்ட அந்த குழந்தைக்காகவும் அவர் இளம் மனைவிக்காகவும் அவரை சற்று கௌரவமாக இருக்கசொல்லுங்கன்னு கெஞ்சினேனே.. He said no body can talk to Rajan. முயற்சி கூட பண்ண ரெடியா இல்லியே. 


 தொட்டிலையும் ஆட்டி தொடையையும் கிள்ளுவாங்கன்னு சொல்லுவாங்க. அந்தமாதிரி எனக்கு நேற்றைய விஷயங்கள 'அம்மா அம்மா' ன்னு கூப்பிட்டு சொல்லிவிட்டு இன்னிக்கி நல்லவன் போல நடிக்கறதுல என்ன அர்த்தம்னு நான் கேட்டேன்னு கேளுங்க. நல்ல ஒரு ப்ரொஜெக்டை விவரிச்சு அதுல அவர (Rajan) ஈடுபடுத்தி மனசை மாத்தலாம்னு சொன்னேனே. அந்த விஷயத்த ராஜனுக்கு கொண்டு போயானும் சேர்த்தாரா?


 ஒங்க எல்லாரையும் விட நான் தான் தொல்வியடைஞ்சதா நெனைக்கிறேன்.. செந்தில்cp மற்றும் சிலரை நான் அன்பால வென்றது மாதிரி ராஜனையும் வென்றிருந்தா அது என்னோட நிஜமான சந்தோஷமா இருந்திருக்கும் . கூடவே இருந்து இந்தநிலமைக்கி தள்ளி விட்டது வேற யாரும் இல்ல மிருகம்னு அழைக்கிற இவரே தான் . எனக்கும் நிறைய விஷயங்களை அம்மா அம்மான்னு கூப்பிட்டு , தன்மனிதன் போல சொல்லிவிட்டு மனுஷாபிமான இல்லாம இந்த நெலமைக்கி ஆளாக்கினது வேற யாருமே இல்லே இவருக்குத்தான் பெரிய்ய பங்கு .


இனப்பிச்சனை , ஸ்ரீலங்கன் பிரச்சனைன்னு பிறர் வீட்டு இளம் பெண்ணை அவதூறில் மாட்டிவைக்கிறமாதிரி திசை திருப்ப முயற்சி பண்ணற நேரத்தில ஒருமுறை அவரை நல்லதை உணர வைத்திருக்கலாமில்லையா ? யாராவது முயன்றீர்கள ? நான்குநாட்களில் ஒருவருக்கும் தோன்றவில்லையா?


Answering you Prashanth because we feel obligated to you for your stance for Chinmayi in the recent past which made you take a lot of muck. You proved a real anger of a brother when provoked on an issue of his sister. Now that the issue has gone to the police, and judiciery we all have to wait and let us not mince words or be emotional. Let the future bring change in all our minds to be a good and better humanbeings.  


http://gallery.southdreamz.com/cache/music-dance-celebrities/chinmayi/singer-chinmayi-exclusive-photo-gallery-9_720_southdreamz.jpg


பரிசல்காரன் -ன் ( திருப்பூர் கே பி கிருஷ்ணகுமார்) ட்வீட் 

ராஜன் கஸ்டடிக்கு போனது குறித்து மகிழ்ச்சி அடையும் மிருகங்களுக்கு ஆதிரையின் இந்தப் புன்னகையைப் பரிசளிக்கிறேன்.

 ராஜனின் குழந்தை படம் பகிர்ந்தார். அந்த படம் கே டி வி கிருஷ் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது 
ஆ.ராதாமணாளன்

சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை  -2



உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நீங்கள் திருமதி ரேவதியை பற்றி கவலைப்படாத நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். உங்களிடம் நான் முதலில் பேசிய போது உங்களின் தொடர்பு ராஜனுடன் அட்வைஸ் செய்யும் அளவில் இல்லை என்பதால் உங்கள் நண்பர் பரிசலிடம் எத்தனை முறை வாதாடினேன். அவர் நிஜமான நண்பராக இருந்திருந்தால் எங்களுக்காக வேண்டாம் அவர் நண்பருக்காக எடுத்துரைத்து இருக்கலாமில்லையா.


 இங்கு தோட்டா அவர்களின் முயற்சியை மதிக்கிறேன். பரிசலுக்கு எப்படி இப்படி ஒரு ....? அவர் எனக்கும் சரி ராஜனுக்கும் சரி நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார். திருமண வயதில் பெண்ணை வைத்திருக்கும் ஒரு தாயின் மன வேதனையை நீங்களும் மற்ற சிலரும் புரிந்து கொண்டீர்கள். இன்று தோட்டா அவர்களை retweet செய்த யாரவது பேசி இருப்பார்களா? நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். ?


ராஜனை உங்கள் மொழியில் உசிப்பெத்தி உசுப்பேத்தி விட்டு சற்று நேர கேளிக்கை அனுபாவித்தர்களே. அன்று சின்மயி மற்றும் அவளைப்பெற்ற நானும், நிஜமான அண்ணன் போல நீரும் மேலும் சிலரும் துடித்தோம். அதையும் கேளிக்கைப் பொருளாக்கியவர்களுக்கு இன்று ராஜனுக்காக வருத்தப்பட உரிமையில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த குறளை மேற்கோள் காட்டி எத்தனை முறை நான் சின்மயியை சமாதானப்படுத்தினேன் என்று உங்களுக்கு தெரியும்.


எங்கள் பொறுமையை இயலாமை என்றுதானே மிதித்தார்கள்? Please read my tweet reply to .


நானும் சின்மயியும் இந்த கைதுகளால் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இன்று நீங்கள் கதறும் இதே possible நிலைமையை சுட்டிக்காட்டி ராஜனை புரியவையுங்கள் என்று பரிசலிடம் கதறினேனே அன்று வீணாக இருந்துவிட்டு இன்று குழந்தையை போட்டோ பிடித்து போடலாமா? குழந்தையை வெளியில் காண்பிக்கலாமா. மீண்டும் மக்களை தூண்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கும் பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். திரு தோட்டாவின் செண்டிமெண்ட்சை மதிக்கிறேன். 



 தினமணி செய்தி 


பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக 6 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.


தன்னைப் பற்றியும் தன் தாயாரைப் பற்றியும் மோசமாக சித்திரித்து கருத்துகள் எழுதுவதாக அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் நேற்று நிப்ட் மையத்தின் துணை பேராசிரியர் சரவணக்குமார் பெருமாள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

http://haryanaabtak.com/wp-content/themes/NewsTime/thumb.php?src=http://haryanaabtak.com/wp-content/uploads/2012/10/7042_singerchinmayi.jpg&w=568&zc=1&q=80&bid=1

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையிலும், மேலும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடைப்படையிலும், ஏ.ராதாமணாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள தர்பார் ஹோட்டல் முன்பு செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.




திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் இவர். இவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மிகவும் துடிப்பான உறுப்பினர்.



 இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர், சின்மயிக்கு தான் எழுதிய கருத்துகள் குறித்து ஒப்புக்கொண்டார். மேலும், தனது @rajanleaks என்ற பெயரிலான தளம் குறித்தும், தான் அதன் மூலம் சின்மயிக்கு ஆபாசக் கருத்துகளை எழுதியதையும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் இவர் எழும்பூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.




மேலும் சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில், கிரைம் பிரிவு போலீஸார், @losongelesram, @vivajial, @rajanleaks, @senthilchn, @thyirvadai, Asharavkay ஆகிய ஆறு பேர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

@காலைக்கதிர்



@காலைக்கதிர்





டிஸ்கி - சமாதானப்பேச்சு இன்னும் தொடர்வதால் ட்விட்டர் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்போது பொறுமை காக்கவும், ஆவேசமான, ஆக்ரோஷமான எதிர் வாதங்கள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.சின்மயி , மற்றும் அவர் அம்மா பற்றிய தனி மனித தாக்குதல்களை தவிர்க்கவும்.வழக்கை வாபஸ் பெற வைக்க கடைசி நிமிடம் வரை முயற்சிகள் தொடரும். அதற்குள் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி சமாதானத்திற்கு யாரும் பங்கம் விளைவிக்க வேண்டாம்


டிஸ்கி 2 - ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்-
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 3 - சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_7456.html