Showing posts with label சித்தார்த். Show all posts
Showing posts with label சித்தார்த். Show all posts

Tuesday, March 17, 2015

நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் பட்டியல் - 2014

ஆறாவது ஆண்டாக நார்வே தமிழ் திரைபப்ட விழா சினிமா கலைஞர்களோடும், ஆர்வலர்களோடும் கொண்டாட உள்ளது. சமீபத்தில் 2014ம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. வரும் ஏப்ரல் 23- 26 வரை நான்கு நாட்கள் நார்வேயில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
நார்வே திரைப்பட விருதுகள் பட்டியல்:
சிறந்த படம் - குக்கூ
சிறந்த இயக்குநர் - வசந்தபாலன் (காவியத்தலைவன்)
சிறந்த நடிகர் - சித்தார்த் (காவியத்தலைவன்)
சிறந்த நடிகை - வேதிகா (காவியத்தலைவன்)
சிறந்த கதாபாத்திர நடிகர் - சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (காவியத்தலைவன்)
சிறந்த குணச்சித்திர நடிகை - குயிலி (காவியத்தலைவன்)
சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா, குக்கூ )
சிறந்த தயாரிப்பு - ராமானுஜன் (கேம்பர் சினிமா)
சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி(குக்கூ)
சிறந்த பாடகர் - ஹரிச்சரண் (காவியத்தலைவன்)
சிறந்த பாடகி - வைக்கம் விஜயலட்சுமி (என்னமோ ஏதோ)
சிறந்த ஒளிப்பதிவாளர் - வெற்றிவேல் (கயல்)
சிறந்த எடிட்டர் - விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் - சிகரம் தொடு
வாழ் நாள் சாதனையாளர் விருது - கே.பாலசந்தர்
கலைச்சிகரம் விருது - சிவகுமார்
சிறப்பு ஜுரி விருது - வின்சென்ட் (கயல்)
பாலுமகேந்திரா விருது - ரா.பார்த்திபன் (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்)
பாலசந்தர் விருது - விவேக்

Monday, March 09, 2015

கன்னட லூசியா அளவு எனக்குள் ஒருவன் மெகா ஹிட் ஆகலையே ஏன்? - த இந்து ஆய்வு

திரையரங்கில் வேலை பார்ப்பவர் விக் னேஷ் (சித்தார்த்). துரை டாக்கீஸ் திரையரங்கை நடத்தும் துரையண் ணனின் (ஆடுகளம் நரேன்) அன்புக்குப் பாத்திரமான விக்னேஷ் தூக்கமின்மை யால் அவதிப்படுகிறார். இந்நிலையில் அவருக்கு லூசியா என்னும் மாத்திரை கிடைக்கிறது. உறக்கத்துடன் விருப்ப மான கனவையும் தரும் அதிசய மாத்திரை அது. கனவில் பிரபலமான நடிகர் விக்னேஷாக வலம் வருகிறார். தியேட்டரில் வேலை பார்க்கும் விக்னேஷுக்குக் காதல் வருகிறது. அந்தக் காதலில் பிரச்சினை வரும்போது அதே காதல் கனவில் கைகூடுகிறது.
இப்படிப் பல விதங்களில் ஒன்றுபோல வும் சில நுட்பமான வித்தியாசங்களுட னும் பயணிக்கும் இந்தக் கனவு நனவுப் பயணங்கள் ஒரு கட்டத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இந்த மாய விளையாட்டை திரைக்கதையாக்கி ஒவ் வொருவருக்குள்ளும் இருக்கும் இன்னொருவரைப் பற்றி யோசிக்கவைக் கிறார் இயக்குநர் பிரசாத் ராமர்.
கனவு நனவென சம்பவங்கள் மாறி மாறி நிகழும் படம் மாறுபட்ட கதைக் களத்தைக் கொண்டுள்ளது ‘எனக்குள் ஒருவன்’. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘லூசியா’ படத்தின் மறு ஆக்கம் என்ற போதும் தமிழ்ப் படமாகவே உள்ளது. நனவுலகில் நடிகர் விக்கி மருத்துவமனை யில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக் கிறார். அது தொடர்பான விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கியை அவருடைய காதலியே கொலை செய்ய முயல்கிறார். எது கனவு? யார் நிஜம்? ஏன் இந்தக் கொலை முயற்சி? காதலி யின் பிரச்சினை என்ன? நாயகனின் உண்மையான பிரச்சினை என்ன? இறந்து போவது யார்? இப்படிக் குழப்பமான பல விஷயங்கள் எந்தக் குழப்பமுமின்றி அழ கான திரைக்கதையாக்கப்பட்டுள்ளன.
முக்கியமான எல்லாக் கதாபாத்திரங் களும் இரு வேடங்களில் வருகின்றன. படமும் வண்ணத்திலும் கறுப்பு வெள்ளையிலும் மாறி மாறி காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இரு வேறு உலகம் என்றபோதிலும் இரண்டையும் அழகாக அடுக்கியுள்ளனர். இரு இணை கோடுகளாகப் பயணிக்கும் திரைக்கதை யில் எந்தக் கோடு நிஜம் எது கனவு என் னும் கேள்வி எழுப்பப்படுவது புதிய சிந்தனை. இரு கதைகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் தொடக்கத்தில் ஆர்வமூட்டினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பூட்டுகின்றன. ஆனால் வித்தியாசத்தின் மெல்லிய திரை இரு கதைகளினூடே படர ஆரம்பிக்கும்போது திரைக்கதை மீண்டும் உயிர்பெறுகிறது.
இணை கோடாகச் செல்லும் இரு கதைகளுக்கு நடுவில் புலனாய்வு என் னும் இன்னொரு இழையையும் பின்னி யிருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் புத்திசாலித்தனத்தை விடவும் தற்செயல் திருப்பங்கள் புலனாய்வை முன்னெடுத்துச் செல்வது புலனாய்வை மந்தமாக்குகிறது.
இரு கதைகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆக வேண்டும் என் பதும் அதுவரையில் பார்வையாளர் களின் குழப்பம் அல்லது எதிர்பார்ப்பு தக்கவைக்கப்பட வேண்டும் என்பதும் இதுபோன்ற படங்களில் கட்டாயம். அதை இயக்குநர் ஓரளவு சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். ஆனால் புலனாய் வுக் கட்டத்தில் பங்கு பெறும் நாயகனின் காதலி சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அந்தக் குழப்பத்தைத் தக்கவைப் பதற்காகச் செய்யப்பட்டுள்ள செயற்கை யான திணிப்பாகவே உள்ளது.
கனவில் மூழ்குவதற்கான காரணம் ஒரு செய்தியாக நம்மைக் கவர்கிறது. ஆனால் அது திரை அனுபவமாக உருப் பெறவில்லை. இதற்கான சவாலை இயக்குநர் எதிர்கொள்ளவே இல்லை.
சாதாரண மனிதன் என்றால் அவன் முகத்தில் கரியைப் பூச வேண்டுமா? சாதாரணமானவர்களும் படிக்காதவர் களும் அப்பாவிகளும் கறுப்பாகத்தான் இருக்க வேண்டுமா?
சித்தார்த் இரு வேடங்களிலும் தன் னால் இயன்ற அளவு மாறுபாடான நடிப் பைத் தந்துள்ளார். இரு வேறு ஆளுமை களைச் சித்தரிப்பதில் தேறிவிடுகிறார். ஆனால் படம் அவரைச் சுற்றியே நகரும் நிலையில் அவரது பாத்திரங்கள் மேலும் அழுத்தமானதாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதது அலுப்பையே தருகிறது.
அறிமுக நடிகை தீபா சன்னிதியும் இரு கதைகளிலும் நன்கு வித்தியாசம் காட்டியுள்ளார். நரேன், ஜான் விஜய், அஜய் ரத்னம், யோக் ஜப்பி ஆகியோர் படத்துக்கு வலிமை சேர்க்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இசை படத்தை உயிர்ப்பான ஒன்றாக மாற்றவில்லை. கோபி அமர்நாத் தின் ஒளிப்பதிவு படத்தின் சிறப்பம்சங் களில் ஒன்று. பாதிப் படம் கறுப்பு வெள் ளையில் நகர்ந்தாலும் எந்தக் காட்சியி லும் பழைய நெடி அடிக்கவே இல்லை.
தியேட்டர்கள் நவீன மால்களாகும் காலத்தில் சினிமாவையே நேசிக்கும் துரையண்ணன் போன்ற ஒருவர் யதார்த் தத்துக்குப் பலியாக மறுத்து உயிரை விடுகிறார். எல்லோரும் கனவு காண் கிறோம். வேறு ஆளாக மாற வேண்டும் என்னும் விருப்பமும் இருக்கிறது. இப் படிச் சமகாலச் சிக்கலைப் பேசும் படம், கனவு நிஜமாகிறது என்ற கற்பனையைத் தரும் படம், மிகவும் உயிரோட்டமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் அப்படி அமையவில்லை.
என்றாலும் வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இப்படத்தை வரவேற்கலாம்.


நன்றி  -த இந்து

Sunday, March 01, 2015

எனக்குள் ஒருவன் -லூசியா’ கன்னடத்தில் ஹிட் ஆன அளவு தமிழில் ஆகுமா?-தனுஷின் முன்னாள் சகலை பேட்டி

  • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
    ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
  • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
    ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
பாய்ஸ் படத்தில் விடலைப் பையனாக அறிமுகமாகி ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களுக்கு நகர்ந்திருப்பவர் சித்தார்த்.
தனக்கென்று தனிப் பாணி கொண்ட அவரைச் சந்தித்தபோது, “ கடந்த 12 வருடங்களில் 25 படங்கள்தான் நடித்திருக்கிறேன். எனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. அதற்காக நான் பண்ணிய படம்தான் ‘எனக்குள் ஒருவன்’.” தரமான சினிமா தர வேண்டும் என்ற தாகம் வெளிப்படப் பேச ஆரம்பித்தார் அவர்.
‘லூசியா’ கன்னடத்தில் ஹிட். அதன் மறு ஆக்கத்தில் நடித்தால் வெற்றி உறுதி என்பதால்தான் ஒப்புக்கொண்டீர்களா?
இப்படத்தை ‘லூசியா’ ரீமேக் என்ற ஒரு வார்த்தையில் அடக்க முடியாது. அடிப்படைக் கதைக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்படத்துக்காக இயக்குநர் பிரசாத் எழுதியிருக்கும் வசனங்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். ‘லூசியா’ பார்த்தவர்கள் இப்படத்தைப் பார்த்தால், இந்த வேறுபாட்டை உணர்வார்கள். பார்க்காதவர்களுக்கு இரட்டை விருந்து.
முதல் முறையாக ஒரே படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ஒரேநேரத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரிடம் சொல்லிவிட்டேன்.
முதலில் ஹீரோ கதாபாத்திரத்தை நடித்துவிட்டுப் பிறகு திரையரங்கப் பணியாள் கதாபாத்திரம் செய்தேன். அதற்காக முகத்தைக் கறுப்பாக்கினேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. இருபது நாட்கள் திரையரங்கு ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். அது எனக்கே புதிய அனுபவம். அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.
மக்களோடு மக்களாக நின்று கொண்டிருப்பேன். ‘ஹீரோ யாருப்பா… எங்க இருக்காருன்னு’ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘இன்னும் வரலை. மேக்கப் போட்டுட்டு நானே இருக்காருப்பா…’ என்று பதிலளித்தேன். அதே போல தீபா சன்னிதி, நரேன் இருவருக்குமே என்னை முதல் முறையாகப் பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை. இப்படி நிறைய நிஜ காமெடியை அனுபவித்தேன்.
உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நேரத்தில் படம் வெளியாகிறதே?
எங்கள் படத்துக்கு முன்னர் ‘காக்கிச் சட்டை’ வெளியாகிறது. அவங்க எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறார்களோ, அதே நம்பிக்கையில்தான் நாங்களும் வெளியிடுகிறோம்.
போன வருடம் இதே மார்ச் மாதத்தில், ‘எனக்குள் ஒருவன்’ படம் ஜெயிச்சுருக்கு, அந்த நம்பிக்கையில் நம்ம படத்தை வெளியிடலாம் என்று சொல்லி அடுத்த வருடம் நிறைய படங்களை வெளியிடுவார்கள். அந்தப் பெயர் எங்களுக்குக் கிடைக்கும்.
இந்தி, தெலுங்கில் படம் பண்ணுவதை ஏன் குறைத்துக்கொண்டீர்கள்?
இதுவரை மூன்று படங்கள் இந்தியில் பண்ணியிருக்கேன். அதில் இரண்டு வெற்றிப் படங்கள். தெலுங்குப் படம் பண்ணி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பவும் இந்தி, தெலுங்கிலிருந்து நிறையக் கதைகள் வருகின்றன. ஆனால் தமிழில் நல்ல தரமான படங்களைப் பண்ணிவிட்டுப் போகலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
எனக்கு இந்த சாக்லேட் பாய், அழகான பையன் என்ற இமேஜ் எல்லாம் போக வேண்டும். சொல்லப் போனால் என்னை சாக்லேட் பாய் என்று சொல்லும்போது கோபம்தான் வருகிறது. அப்படிக் கூப்பிடுவதை நான் வெறுக்கிறேன். ‘எனக்குள் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இந்தப் பிம்பம் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இனிமேல் எந்த மாதிரியான கதையிலும் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள்.
வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் வணிகப் படங்கள் பண்ண மாட்டீர்களா?
எம்.பி.ஏ. படிச்சிட்டு வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் சம்பளத்துல நல்ல வேலையில இருந்தேன். அப்புறம் அந்த வேலை போரடிக்குதுன்னு சொல்லித்தான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துல உதவி இயக்குநராக சினிமாவுக்குள் சேர்ந்தேன்.
எங்கப்பா ‘எதுக்குப்பா இது’ன்னுகூடக் கேட்டாரு. ‘ஒரே வேலைய செய்றது போரடிக்குதுப்பா’ன்னு அவர்கிட்ட சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்.
போதுமான அளவுக்குச் சம்பாதிச்சிட்டேன். இன்னமும் பணம் சம்பாதிக்கணும்னு நினைத்தால், வெளிநாட்டில் போய் டூயட் ஆடி, பூ கொடுத்துக்கொண்டுதான் இருக்கணும். எனக்கு அதுவும் பிடிக்கல… வித்தியாசம் தேடித்தான் சினிமாவுக்குள்ளேயே வந்திருக்கேன். இங்கேயும் ஒரே மாதிரிதான்னா எப்படி..?
அதற்காக வணிகப் படங்களுக்கு நான் எதிரியல்ல. நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘சிங்கம்’ மாதிரியான கதை எனக்கு வரவில்லை. சூர்யாவுக்கு வந்தது; நடித்தார். எனக்கு எது சரியா வரும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்களோ அதில் நடிக்கிறேன். நல்ல வணிகப் படத்துக்கான கதை வரும்போது அதில் கண்டிப்பாக நடிப்பேன்.
‘காவியத் தலைவன்’ படத்துக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லையே…
வசூல் ரீதியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். எனக்கும் வருத்தம் உண்டு. ஆனால் ‘காவியத் தலைவன்’ படம் தப்பான படம் கிடையாது. நான் ரொம்பப் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் எனக்கு அமைந்த படம். வசந்தபாலன் மாதிரியான இயக்குநர்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாட வேண்டும்.
இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்துப் பாருங்கள் அப்படத்தைப் பற்றிப் பேசுவார்கள். இப்போதுகூட நாம் கமல் சார் நடித்த ஓடாத படங்களைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் நடிப்பில் வெற்றியடைந்த படங்களைப் பற்றி நாம் பேசுகிறோமா? இல்லையே!
மறுபடியும் உங்களைப் பற்றிய காதல், பிரிவு செய்திகள் வலம் வருகின்றனவே?
(சிரித்துக் கொண்டே…) எதுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டு…? இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்கட்டும்; என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறேன்.


thanx = the hindu



Wednesday, March 05, 2014

ஜிகிர்தண்டா - இயக்குநர் ”பீட்சா” கார்த்திக் சுப்புராஜ் ஒரு கேவலமான கதை சொல்லி -பாய்ஸ் சித்தார்த் அதிரடி பேட்டி


டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கேவலமாக கதை சொல்வார்! - சித்தார்த்

Karthik Subburaj says story very worst says Siddharth
பீட்சா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்து சித்தார்த்தை நாயகனாகக்கொண்டு ஜிகர்தண்டாவை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது படத்தில் நடித்த சித்தார்த், லட்சுமிமேனன், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், கருணாகரன், சிம்ஹா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சித்தார்த் பேசுகையில், பாய்ஸ் படத்தில் அறிமுகமான நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து விட்டேன். ஆனபோதும் என் மீது பதிந்துள்ள ப்ளே பாய் இமேஜை இதுவரை என்னால் மாற்றமுடியவில்லை. அதனால்தான் இனியும் அந்த இமேஜை தொடர விடக்கூடாது என்று அதற்கேற்ற கதைகளை தேடி வந்தேன்.




அப்போதுதான் பீட்சா படத்தை பார்க்க நேர்ந்தது. அந்த படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டதால், எனது டுவிட்டரில் அதுபற்றி விமர்சனம் எழுதியிருந்தேன். அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜூடன் நட்பு கிடைத்தது. அதையடுத்து அவர் என்னிடம் சொன்ன கதை தான் ஜிகர்தண்டா. ஏற்கனவே நான் ஆரம்பத்தில் நடித்த 15 படங்களில் 12 படங்களில் புதியவர்கள்தான் இயக்குனர்கள். நான் அவர்களுக்கு கால்சீட் கொடுத்ததின் காரணம். புதியவர்கள் முதல் படத்தில் தங்களது மொத்த திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைப்பார்கள். அதனால்தான் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்.

மேலும், அவருக்கு முதல் படம் பீட்சாவாக இருந்தபோதும், அவர் முதலில் இயக்குவதற்காக இந்த ஜிகர்தண்டா கதையைத்தான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். பட்ஜெட் அதிகம் தேவைப்பட்டதால் இரண்டாவதாக பண்ணயிருந்த பீட்சாவை முதலில் டைரக்டர் செய்திருக்கிறார். ஆக, கார்த்திக் சுப்பராஜ் முதலில் இயக்கயிருந்த ஜிகர்தண்டாவில்தான் இப்போது நான் நடித்திருக்கிறேன்.ஆக, அவரது முதல்பட ஹீரோ நான்தான்.

இப்படி சொன்ன சித்தார்த், முதலில் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டபோது நொந்து விட்டேன். அந்த அளவுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவே இல்லை. அதன்பிறகு, ஜிகர்தண்டாவின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்தபோதுதான் அற்புதமான கதை என்பதை புரிந்து கொண்டேன். அந்த அளவுக்கு ரொம்ப கேவலமாக கதை சொன்னார் கார்த்திக் சுப்புராஜ். அதனால் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ஹீரோக்கள் அவரிடம் கதை சொல்லுங்கள் என்று கேட்காமல், ஸ்கிரிப்டை கொடுங்கள் என்று வாங்கிப் படிப்பதுதான் சரி என்று தெரிவித்த சித்தார்த், இந்த ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு என் மீது அழுத்தமாக பதிந்திருக்கும் ப்ளேபாய் இமேஜ் முற்றிலுமாக மறைந்து விடும் என்றும் அடித்து சொல்கிறார்.


thanx - dinamalar