Showing posts with label கெஜ்ரிவால். Show all posts
Showing posts with label கெஜ்ரிவால். Show all posts

Saturday, November 17, 2012

ஸ்விஸ் பேங்க்கில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்துக்கணக்கை வெளியிட்ட கெஜ்ரிவால்

தொடரும் சர்ச்சையில் முகேஷ் அம்பானி- விடுவதாக இல்லை கெஜ்ரிவால்




 Ambanis Deny Kejriwal S Charges

மும்பை: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ளனர் என்ற சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டை அம்பானி சகோதரர்கள் உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் நிராகரித்துள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் சுவிஸ் வங்கியானது முகேஷ் அம்பானியின் கடிதத்தை வைத்து மீண்டும் புயலைக் கிளப்பி வருகிறார் கெஜ்ரிவால்.



இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் ரூ6 ஆயிரம் கோடி அளவுக்கு சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ளனர் என்பது அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டு. ஒவ்வொரு தொழிலதிபரும் எவ்வளவு தொகையை பதுக்கியுள்ளனர் என்ற விவரத்தையும் கெஜ்ரிவால் குழுவினர் நேற்று வெளியிட்டிருந்தனர்.



முகேஷ் அம்பானி மறுப்பு


இதனை மறுத்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், உலகின் எந்த பகுதியிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசுக்கோ, முகேஷ் அம்பானிக்கோ சட்டவிரோதமான எந்த வங்கி கணக்கும் கிடையாது. வழக்கமான வணிகத்தின் அங்கமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு எச்எஸ்பிசி உள்ளிட்ட பல்வேறு உலக வங்கிகளில் கணக்குகள் உண்டு. ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. தீய சக்திகளின் தூண்டுதலால் அவை சுமத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.



அனில் அம்பானி நிராகரிப்பு



இதே போன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டினை மறுக்கப்பட்டிருக்கிறது. ஜெனிவா எச்எஸ்பிசி வங்கியில் அனில் அம்பானிக்கு கணக்கு கிடையாது. இருப்பினும் தீய சக்திகளின் தூண்டுதலால் இத்தகைய குற்றச்சாட்டினை சுமத்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



அனு டான்டன்



இதேபோல் காங்கிரஸ் கட்சி எம்.பியான அனு டான்டன் சுவிஸ் வங்கியில் தாம் பணத்தை பதுக்கியிருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதை நிராகரித்திருக்கிறார். கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டு அனைத்தும் ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார். மேலும் தமது கணவர் இறந்துவிட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.


ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், டாபர் குழுமத்தின் பர்மன் சகோதரர்கள் ஆகியோரும் இதனை மறுத்துள்ளனர்



ஹெச்.எஸ்.பி. மன்னிப்பு ஏன்?



இதனிடையே ஹெச்.எஸ்.பி. நிறுவனமானது இந்த ஆண்டு ஜனவரி மாதமே முகேஷ் அம்பானிக்கு ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியிருப்பதாகவும் அதில் அவரது பெய தவறாக இடம்பெற்றுவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது என்றும் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.



கம்ப்யூட்டரே தானாக தப்பு செய்ததா?



அதாவது சுவிஸ் நாட்டின் ஹெச்.எஸ்.பி. வங்கியானது கடந்த ஜனவரியில் ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. அதில், வெளிநாட்டில் பணம் பதுக்கியோர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் பெயர் இடம்பெற்றிருப்பது தவறானது. ஆனால் இந்த பட்டியலை ஹெச்.எஸ்.பி. தயாரிக்கவும் இல்லை.. கொடுக்கவும் இல்லை..


 இந்தப் பட்டியலை தயாரித்தது பிரான்சு அரசுதான். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? பிரான்சு அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். ஹெச்.எஸ்.பி. சர்வரில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ளதாக தெரிவித்திருக்கும் கெஜ்ரிவால், அப்படியானால் அந்த வங்கியின் கணிணியே தானாக முகேஷ் அம்பானியின் பெயரை பதிவு செய்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.