Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Wednesday, July 18, 2012

Pushpaka Vimanam -பேசும்படம் - கமல்-ன் மைல் கல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdIlagKUDv2VR7OdHJs-_Ea4ZgoOdrbAAGKWKejquE-xoc3-miPRLdYBH22lz_b3OOnKZsBhh45NaQr45kCrLBln9UyVquuMNeXr0XIfiW0ZCWfsuzTjNEmK-WiJK8bWYbO5bXmv4FC9qV/s1600/358c3cy.jpg

பரீட்சார்த்தமான முயற்சிகளை எடுப்பதிலும்,தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதிலும் கமல் ஒரு நல்ல கலைஞர்.அவரது சினிமா உலக சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. அதுவும் நாயகன் படத்தில் இயக்குநர் மணி ரத்னத்துடன் இணைந்து பணி ஆற்றிய பின் அவரது கலை தாகம் அதிகரித்தது. ஒவ்வொரு படத்துக்கும் புதிய கெட்டப், கேரக்டருக்காக தன் உடலை, முகத்தை மாற்றிக்கொள்வது என பயணப்பட்டார்.. அப்படிப்பட்ட உன்னத கலைஞனின் உலகப்படம் தான் பேசும் படம்.,.


டைட்டிலில் தான் பேசும் படம் ,படத்தில் வசனங்களோ, பாடல்களோ இல்லை, சில காட்சிகளில் மட்டும் ரேடியோ வாசகங்கள் வந்தன,.. ஆனால் பக்கம் பக்கமாக வசனம் பேசி புரிய வைக்க முடியாததை காட்சிகள் மூலமாகவே புரிய வைக்க முடியும்,மக்களை ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்தவர் சிங்கீதம் சீனிவாசராவ்.


கன்னடத்தில் புஷ்பக விமான , தெலுங்கு, மலையாளத்தில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என ரிலீஸ் ஆச்சு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9ONt5AgWRzQED8L43XU27MvP-ZvGHLzM0fyVxow1Sk9UqW69Mg0yr2myU6S132gG27pneuZkDbFWp_y0KSoUvtZ__oNJ_koAP35sCDqNzid_op04-xalN7cMU7K3ZJ0W4ZcL9iN2G4e-R/s400/4.png


 படத்தோட கதை என்ன? ஹீரோ வேலை வெட்டி இல்லாத வெட்டாஃபீஸ்.. இண்ட்டர்வியூவுக்கெல்லாம் போய்ட்டு இருக்கார்.. ஹீரோயின் ஒரு மேஜிக் மேன் உடைய பொண்ணு.. 2 பேரும் சந்திக்கறாங்க. அன்பை பரிமாறிக்கறாங்க.

ஒரு கோடீஸ்வரர் , சரியான தண்ணி வண்டி.. சரியா தன் சம்சாரத்தை கவனிக்காம எப்போ பாரு பிஸ்னெஸ் பிஸ்னெஸ்னு சுத்திட்டு இருக்கார்.. அதனால அவர் சம்சாரம் டிராக் மாறிடுது. அவர் மனைவியின் கள்ளக்காதலன் கோடீஸ்வரரை  கொலை பண்ணிட்டா இந்த சொத்துக்களை எல்லாம் ரூட் விட்டுடலாம்னு மூணாறுத்தனமா திட்டம் போடறாரு.. அதுக்கு ஒரு ஆளை நியமிக்கறாரு..


 அந்த கோடீஸ்வரர் ஒரு ஹோட்டல்ல தங்கறார்.. ஏதோ வேலையா வெளீல போறப்போ மப்பு ஜாஸ்தி ஆகி  ரோட்டோரம் விழுந்து கிடக்காரு விக்கி மாதிரி.. அந்த வழியா வந்த ஹீரோ அவர் பேண்ட் பாக்கெட்ல ஹோட்டல் சாவி பார்த்து ஒரு திட்டம் போடறார்.. அதன் படி அவரை தன் ரூம்க்கு கொண்டு போய் கட்டில்ல கட்டி வெச்சுட்டு அவர் ஹோட்டல் ரூமுக்கு போறார். ஆள் மாறாட்டம்.. ஹோட்டல் ரூம்ல  லட்சக்கணக்குல பணம்.. ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு இருக்கார்..

 அந்த வாடகைக்கொலையாளி ஹீரோவை  கோடீஸ்வரர்னு நினைச்சு கொலை பண்ண முயற்சி பண்றாரு.. அதுல இருந்து ஹீரோ எப்படி தப்பிக்கறாரு? க்ளைமேக்ஸ்ல என்ன நடந்தது?இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDLtzyXo28uPpAHqV8KIwEQup4x7ui_GSYS1q2j0hPSkkALwgZ89ZoWBFDDE8EGymP0iE_WjtrI_OIAKueLTRwFtYPG3MMxbNu0AwKiDrKF8L-7ZizVxs3Zr1Y2PrC7rlYBTNWUqMj0nZ7/s400/push.jpg



படத்தோட முதல் ஹீரோ இயக்குநர் தான்.. படத்துல வசனம் இல்லைன்னு முடிவு பண்ணுனதுமே டிஸ்கஷன்ல எப்படி எல்லாம் காட்சிகள் வெச்சா போர் அடிக்காம போகும்? ஆடியன்சுக்கு புரியும்? சிரிக்க வைப்பது எப்படி? என்று ஹோம் ஒர்க் பக்காவா பண்ணிட்டு படத்தை எடுத்ததுக்கு.. சரியான பாத்திரத்தேர்வுக்கு ஒரு சபாஷ்..



அடுத்து கமல். பிச்சைக்காரனிடம் அவமானப்படும் சீன், மீண்டும் கைக்கு பணம் வந்ததும் முதல் வேலையாக பிச்சைக்காரனிடம் அதை காட்ட முனைவது, காதலியிடம் சைகை மூலமே உரையாடுவது என பல காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன..இந்தப்படத்தில் ஹிந்திப்பட ஹீரோக்களுக்கு சவால் விடும் பர்சனாலிட்டி..


அமலா.. ஏசியில் வைத்த ரோஸி மாதிரி இவர் கண்களும் , கலரும் கலக்கல்.. அசால்ட்டான நடிப்பு. கமல் கடையில் இருக்கும்போது கம்மல் வாங்கி தன் காதில் வைத்து ஓக்கே? என கண்களாலேயே கேட்பதும் பின் அவர் பார்க்கும்போது யதேச்சையாக மரைப்பது போல் தன் கூந்தல் இழைகளால் காதுகளை மறைத்து வெட்கப்படுவதும் ஆஹா!!!


கொலையாளி வில்லனாக டினு ஆனந்த் , காமெடி வில்லன்,, வந்த வரை ஓக்கே. கோடீஸ்வரராக வரும் சமீர்க்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை.. ஆனாலும் படத்தில் பாதி நேரம் இவரை காட்டித்தான், கட்டிப்போட்டுத்தான் கதையே நகருது.


கோடீஸ்வரரின் மனைவியாக வரும் ரம்யா கிருஷ்ணன், கள்ளக்காதலனாக வரும் பிரதாப் போத்தன் என எல்லாருக்கும் நடிக்க கொஞ்சம் கொஞ்சமே வாய்ப்பு.. 4 காட்சிகளில் வந்தாலும் பிச்சைக்காரராக வரும்  பி எல் நாராயணா கலக்கிட்டார்.. படத்தின் டர்னிங்க் பாயிண்ட் கேரக்டர் வேற..


அந்த கிளு கிளு கில்மா வேலைக்காரி என்னா தெனாவெட்டு?

http://www.our-kerala.com/newgallery/images/photos/images/old_actress_amala_hot_stills1.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வேலைக்காரி கேரக்டரையும், ரேடியோ வாசகத்தையும் மேட்ச் பண்ணி எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான காட்சி அமைப்பு..


2. ஹீரோ ரூமுக்கு வரும் முன் சாவித்துவாரம் வழியே வேலைக்காரி நோட்டம் இடுவதும், கில்மா புக்ஸை பார்த்து ஹீரோவுக்கு தெரியாமல் ரசிப்பதும்..


3. முதன் முதலாக ஏகப்பட்ட பணத்தை பார்த்ததும் ஹீரோ அந்த பணக்கட்டின் மேல் படுத்துக்கொள்ளும் சீன்..

4. மேஜிக் கலைஞரான அமலாவின் அப்பா தன் மனைவிக்கு டிமிக்கு கொடுத்து சரக்கு அடிக்கும் லாவகம்.. அது போக படம் பூரா ஆங்காங்கே மேஜிக்கை உபயோகித்துகொண்ட விதம்..


5. ஹீரோவிடம் சுத்தமா பணம் இல்லை என தெரிந்து பிச்சைக்காரன் நக்கலாக தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்காட்டி ஹீரோவை வெறுப்பேற்றுவது.. அதே ஆள் இறந்த பின் மக்கள் அவனை கண்டுக்காம பணத்தை பங்கு போட அடிச்சுக்குவதைப்பார்த்து ஹீரோ மனம் மாறுவது சினிமாத்தனம் என்றாலும் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி


6. வில்லன் உபயோகிக்கும் ஐஸ் கத்தி செம ஐடியா. எனக்குத்தெரிஞ்சு எந்த படத்திலும் வர்லை.. ( பேசிக் இன்ஸ்டிங்க்ட்ல அப்படி ஒரு சீன் லைட்டா வரும். )


7. அமலா பின்னால் நிற்கும் சின்னப்பையன் ஐஸ் கட்டியை அவர் முதுகில் போட்டுட்டு ஓடி விட கமல் தான் அதைச்செய்தார் என அவர் மேல் அமலா கோபப்படுவதும், பின் உண்மை உணர்ந்து வெட்கப்படுவதும் ரொமாண்டிக் காட்சிகள்

http://www.teakada.com/wp-content/uploads/2012/02/PesumPadam.png


இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஒரு ஆளை கொலை செய்யனும்னா முதல் வேலை அவன் ஃபோட்டோவை கொலையாளியிடம் காட்டனும், அல்லது நேர்ல லாங்க் ஷாட்லயாவது இவன் தான் நீ கொலை பண்ண வேண்டிய ஆள்னு சொல்லனும்.. இதுதான் நடை முறை, இதை விட்டுட்டு ஹோட்டல் ரூம்  நெம்பர் சொல்லி அங்கே தங்கி இருக்கறவன் தான் கொலை செய்யப்பட வேண்டிய ஆள்னு மொட்டையா சொன்னா எப்படி?அப்போதான் ஆள் மாறாட்டக்காமெடி வரும்னாலும் வேற மாதிரி திங்க் பண்ணி இருக்கனும்


2. ஹீரோ அந்த கோடீஸ்வரரை கை காலை கட்டி கட்டிலில் போட்டுட்டு வெளீல போயிடறார்.. அது டேஞ்சர் ஆச்சே? அவர் அப்படியே ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி வந்து கதவு அருகில் வந்து தட தடன்னு தட்டுனா என்ன ஆகி இருக்கும்? ( ஆனா அவர் அபப்டி செய்யலை)


3. அடை பட்ட கைதி நெம்பர் 1 , நெம்பர் 2 போக அவனை பாத்ரூம் போக விட்டா வேலை முடிஞ்சது. அதை விட்டுட்டு காமெடி பண்றதா நினைச்சுட்டு ஹீரோ பண்ற சீனெல்லாம் உவ்வே,,


4, முதன் முதலா பிரதாப் போத்தனும், டினு ஆனந்த்தும் டீலிங்க் பேச ஹோட்டல் ல சந்திக்கறாங்க. அப்போதான் கொலை பற்றியே பிளான் வருது.. எதுக்கு சம்பந்தமே இல்லாம ஃபிளாஸ்க்கும் கையுமா அவர் வரனும்?கொலை செய்யப்போகும்போதுதானே ஐஸ் கத்தி வைக்க ஃபிளாஸ்க் தேவை?



5. கொலையாளி டினு ஆனந்த் ஹோட்டல்ல நைட் டைம்ல கூட கூலிங்க் கிளாசோட சுத்துவது ஏன்?


6. ஹீரோ, ஹீரோயினை  சந்திக்கறார், பழகறார்.. அப்பவெல்லாம் விட்டுட்டு  ஹீரோயின் திடீர்னு கிளம்பறப்போ அட்ரஸ் கேட்பதும், அவர் வீசி எறியும் அட்ரஸ் பேப்பர் தொலைவதும் வலியத்திணிக்கப்பட்ட மென் சோகம்


7. கோடீஸ்வரர் மனைவி மனம் மாறுவது ஏன்? என்பதற்கு அழுத்தமா சீன் வைச்சிருக்கனும்.. அவர் திடீர்னு மனம் மாறுவது கமல் மனம் மாறுவது போல்  மனதில் பதிவது  இல்லை...


8, க்ளைமாக்ஸ்ல ஹீரோ மனம் திருந்துனதும் கோடீஸ்வரர் கண் விழிச்ச பின் அவர்ட்டயே உண்மையை சொல்லிட்டா  வேலை முடிஞ்சது.. அதை விட்டுட்டு எங்கே அவரைப்பார்த்தாரோ அதே இடத்தில் விட்டு வந்தால் அவரை மாதிரியே இன்னொருத்தன் அவரை மிஸ் யூஸ் பண்ண சான்ஸ் இருக்கே?


9. ஹீரோ வேலை இல்லா பட்டதாரி , அவரை வறுமையின் நிறம் சிவப்பு கமல் மாதிரி ஓப்பனிங்க்ல காட்டி இருக்கனும், அப்புறமா அவர் பணக்காரர் கெட்டப் காட்டி இருந்தா பார்க்க நல்லாருக்கும்.. ஆனா ஓப்பனிங்க்லயே அவர் கெட்டப் ஜமீன் தாரர் மாதிரி காட்டிட்டாங்க.


10. தன்னைக்கொலை செய்ய வந்த டினு ஆனந்த்தை ஹீரோ. போலீஸ்ல காட்டிக்குடுக்கவே இல்லை..


11.திரைக்கதைல தொய்வு விழும் இடமே கமல்- கோடீஸ்வரர் சம்பந்தபப்ட்ட காட்சிகள் தான், அதனால கோடீஸ்வரர் மனைவியை கடத்தற மாத்தி எடுத்திருந்தா இன்னும் கிளுகிளுப்பு கூடி இருக்கும்

http://i14.lulzimg.com/i/a45742.jpg




படத்தில் வசனம் இல்லை என்றாலும் சைகை மூலம், ரேடியோ மூலம் காட்சியால் இயக்குநர் உணர வைத்த வசனங்கள் ( விட மாட்டோமில்ல)



1. வேலைக்காரி ஒரு திமுசுக்கட்டை ( திமுக கட்டை என படிச்சுடாதிங்க, வேற ஒரு பிராப்ளம் வந்துடும்).. அவர் குனிஞ்சு கூட்டும்போது ஒரு பெருசு ஜொள் விட்டுட்டே வேடிக்கை பார்க்குது, அப்போ ரேடியோவில் -


பின்னோக்கி செல்லும் இந்தியாவை முன்னோக்கி கொண்டு வர நாம் பாடுபடுவோம்.சமூகத்தில் ஏற்ற இறக்கங்களை சரி செய்து மேடு பள்ளங்கள் இல்லாத சம தளமாய் அனைத்தையும் சரி செய்வோம்


2. இந்தக்கமமல் நல்லாருக்கா?

ம்ஹூம்

 இது?

ம்ஹூம், உவ்வே

 அட போப்பா எதை காட்னாலும் குறையே சொல்லிட்டு..


 ஆஹா.. இது சூப்பர்..



3. ஹீரோயின் - எங்கம்மா , அப்பா எல்லாம் வெளீல போறாங்க வர 2 மணி நேரம் ஆகும், நாம மீட் பண்ணலாமா?.


எங்கே?

 கோயில்ல

ம், ஓக்கே



4. உங்கம்மா என்ன பண்றாங்க?

 ஹவுஸ் ஒயிஃப்

 அப்பா?

 மேஜிக் மேன்.. சரி உங்கம்மா?


 அவங்க மேலே போய் இருக்காங்க..

 மொட்டை மாடிக்கா?

 அடங்கோ, அவங்க இறந்துட்டாங்க..

 அப்பா?

 போய்ட்டாரு


 யூ மீன், அம்மா மாதிரியே அவரும்  செத்துட்டாரா?


 ம்ஹூம், எங்களை எல்லாம் விட்டுட்டு வேற ஒரு பொண்ணை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டார்.


 ஓ! சாரி..

 இட்ஸ் ஓக்கே./.


4. ஹீரோ -  உங்க ஃபேஸ் செமயா இருக்குங்க..

 ஹீரோயின் - உங்க கார் கூட நல்லா இருக்கு ( ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் வித்தியாசம் பாருங்க. ஹீரோ முகத்தை பார்த்து ரசிக்கறப்ப ஹீரோயின் காரை ரசிக்குறா..)


அய்யோ, அது என் காரு இல்லைங்க, சும்மா நிக்கறேன்.. பக்கத்துல


http://shotpix.com/images/97375489296903738286.png



சி.பி கமெண்ட் - சமீபத்தில் கலைஞர் டி வியில் படம் போட்டாங்க பார்த்தேன் (14.7.2012  மதியம்  1.30 மணிக்கு ) சான்ஸ் கிடச்சா டோண்ட் மிஸ்.. நல்ல படம்.. பார்க்க வெண்டிய படம். டைட்டிலுக்கான விளக்கம், ஹீரோ தங்கும், ஆள் மாறாட்டம் செய்யும் ஹோட்டல் பெயர் புஷ்பக்.இந்தப்படத்திற்கு நான் பரிந்துரைக்கும் அல்லது தேர்வு செய்யும் டைட்டில் - ஐஸ் கத்தி
National Film Award
  • Best Popular Film Providing Wholesome Entertainment


Actor/Actress Character
Kamal Haasan Unemployed youth
Amala Magician's daughter
Tinu Anand Killer
P. L. Narayana Beggar
Farida Jalal Magician's wife
Sameer Khakhar The millionaire
Ramya Krishnan Millionaire's wife
Loknath Hotel owner
K. S. Ramesh Magician
Prathap K. Pothan The lover




Official DVD cover
Directed by Singeetham Srinivasa Rao
Produced by Shringar Nagaraj
Written by Singeetham Srinivasa Rao
Starring Kamal Haasan
Amala

Tinu Anand

Farida Jalal

P. L. Narayana

K.S Ramesh
Pratap Pote
Loknath
Music by Vaidhyanathan
Release date(s) September 10, 1987
Running time 131 min
Language Silent Film



Tuesday, June 05, 2012

கமல் பேட்டி BY சிவசங்கரி @ விகடன் பொக்கிஷம் -1983


மல்ஹாசனைச் சந்திக்க அவர் இல்லத்துக் குச் சென்றபோது கூடத்தில் பழுப்பு நிற கதர் சட்டை, நாலு முழ வேட்டியில் இருக்கும் பெரியவரிடம் என்னை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.


அவர், கமலின் தந்தை... மென்மையாகச் சிரிக்கிறார்.

''பரமக்குடியில் இருந்து எப்போது வந்தீர் கள்?''

''இரண்டு நாள் முன்பு... நாளை இரவு திரும்புகிறேன்.''

''ரயிலிலா?''

மீண்டும் அதே மென்மையான சிரிப்பு... ''முப்பது வருஷமாக பஸ்தான்...''


''சின்ன வயசு கமலைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?''


''ம்ம்ம்? கமலுக்கு அவன் அம்மாவிடம் ஏக ஆசை. சின்னப் பையனாக இருக்கையில் நினைத் துக்கொண்டு அவளிடம் ஓடி வருவான். வயிற்றைத் தடவிக் கொடுத்து, 'இங்கேதானேம்மா நான் இருந்தேன்; இங்கிருந்துதானே வந்தேன்?’ என்று கேட்டு வாஞ்சையுடன் அந்த வயிற்றில் முத்தம் கொடுப்பான்.''



தொடர்ந்து பேசுவதற்குள் கமல், கங்கை அமரன் சிரித்துக்கொண்டே உள்ளே வருகிறார் கள்.


''அமரனின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? 'கால்வாய்க் கரை’... முதலில் 'கோழி கூவுது’, பிறகு 'கொக்கரக்கோ’... தொடர்வது கால்வாய்க் கரைதானே?''


பலத்த சிரிப்பு கூடத்தில் உள்ள அனைவரையுமே ஆக்கிரமிக்கிறது. இரண்டு நிமிஷங்களில் கங்கை அமரன் விடைபெற்றுக்கொண்டு புறப் பட, கமல் எதிரில் உள்ள திவானில் அமர்கிறார்.


''ஸாரி... உங்களை முதலில் ஐந்து மணிக்கு வரச் சொல்லிவிட்டு, பின் ஆறு என்று மாற்றியதற்கு. நிறைய ரசிகர்கள் 'இலங்கைத் தமிழர் படு கொலையை எதிர்த்து நாமும் ஓர் ஊர்வலம் போகலாம்’ என்ற கோரிக்கை யுடன் கூட்டமாக வந்துவிட்டார்கள்.

'அவசரப்படக் கூடாது. இது இந்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்னை. நாம் தனிப்பட்டரீதியில் எதையாவது செய்யப்போக, அது அங்கு ஏற்கெனவே அவதிக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் இனத்தை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தி விடக் கூடாது. யோசித்து, ஆக்கபூர்வ மான காரியத்தை அவசியம் செய்ய லாம்’ என்று கூறி அனுப்பினேன்.''


ரசிகர்களைப் பற்றி கமல் குறிப்பிட்ட தால், ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட கேள்வியுடனேயே பேச்சைத் தொடங்கு கிறேன்.



1. ''வெகு சீக்கிரமே நீங்கள் அரசியலில் நுழையப்போகிறீர்கள்... அதன் அஸ்தி வாரம்தான் இந்த விரிவான ரசிகர் மன்ற நடவடிக்கைகள் என்கிறார்களே?'' 


உதட்டைப் பிதுக்குகிறார். கைகளை விரித்து, தோளைக் குலுக்கி 'நான் என்ன சொல்வேன்’ என்கிற பாவனையுடன் ஏறிடுகிறார். ''லயன்ஸ் கிளப் போல முழுக்க முழுக்க சமூக சேவை பிரக்ஞை கொண்ட ஓர் அமைப்பை உண்டாக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவுதான் என் ரசிகர் மன்றம். 1980 வரை ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, சமூக சேவை என்ற விழிப்பு உணர்வு வந்த பிறகு, ஏன் ரசிகர்மன்றத்தைத் தோற்றுவித்து ஆக்கபூர்வமாகச் செயல்படக் கூடாது என்று தோன்றியது.


தயவுசெய்து என் ரசிகர் மன்ற அலுவல கத்துக்குப் போய் நாகராஜனைச் சந்தியுங்கள். முதன்முதலில் பஸ் ஸ்டாப்பில் 'இன்ன எண் பஸ்... இன்ன இடத்துக்குச் செல்லும்’ என்ற விவரம் அடங்கின பலகையை மாட்டி, எங்களுக்குத் தெரிந்த விதத்தில் சமூக சேவையை ஆரம்பித்ததைப் பற்றிக் கூறுவார்!''


2. ''அப்படியென்றால், நீங்கள் பணம் கொடுப்ப தாகவும் அரசியலில் புக இதன் மூலம் படிக்கட்டுகள் கட்டுவதாகவும் கூறுவதில் நிஜம் இல்லையா?'' 


''சத்தியமாக இல்லை. இன்று வரை என் ரசிகர் மன்றத்துக்காக நான் பைசா செலவழித்தது இல்லை. போன் பில்கூட அவர்களேதான் பார்த்துக் கொள்கிறார்கள்.''


3. ''உங்கள் ரசிகர் மன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள் என்னென்ன?'' 


''இறந்த பிறகு கண் தானம் செய்ய பெயரைப் பதிவுசெய்துகொண்டு இருக்கிறோம். நல்ல புத்தகங்களை வாங்கி நூலகங்களை உருவாக்க இருக்கிறோம். ஆகஸ்ட்-15 போன்ற விசேஷ தினங் களில் நான் உட்பட மன்றத்தைச் சார்ந்த பலரும் இலவசமாக ரத்த தானம் செய்து ஆஸ்பத்திரி களில் ரத்த வெள்ளத்தை உண்டாக்கப் போகிறோம். எங்காவது இறப்பு நடந்தால், அங்கு சென்று கண் தானத்தின் மேன்மையை விளக்கி, இறந்தவரின் கண்களைத் தானமாகப் பெற முயற்சிக்கப்போகிறோம்!''




4. ''கைக் காசைச் செலவழித்து... உங்களுக்காக, உங்கள் வார்த்தையை நிறைவேற்றப் பாடுபடும் ரசிகர்களை நினைக்கையில்..?'' 



''நெகிழ்ந்துபோகிறேன். எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்று தவித்துப்போகிறேன். முடிந்த வரைக்கும் தனித்தனியே அனைவரையும் சந்தித்து என் குறிக்கோள், நன்றி, சந்தோஷத்தைத் தெரிவிக்கப் போகிறேன். இத்தனை ஆயிரம் பேர் உழைப்பும் கமல்ஹாசன் என்ற தனி நபருக்குப் பெருமை சேர்க்கத்தான் என்பதை நினைத்தால் சிலிர்த்துப்போகிறது. 'பதிலுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?’ என்று மனசு பரபரக்கிறது.


என் ரசிகனுக்குத் தேவையான படத்தைக் கொடுத்து, அவனை மகிழ்விப்பது ஒன்றுதான் என்னால் முடிந்த சமாசாரம். 'சகல கலா வல்லவன்’ போன்ற படங்களை நான் அதிகம் இப்போது ஒப்புக்கொள்வதற்குக் காரணம், இந்த விதத்திலாவது என் ரசிகர்களைத் திருப்தி செய்யலாமே என்றுதான். நிஜமாகச் சொல்கிறேன், பணமும் புகழும் அடுத்த காரணங்களே!''


5. ''வரதட்சணைக் கொடுமை, முதியோர் பிரச்னை, வறுமை, வேலை இல்லாமை என்று இன்றைக்குத் தாண்டவமாடும் இன்னும் பல பிரச்னைகள் குறித்து..?'' 


''தனி மனிதனாக என்னால் முடிந்ததை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால், எங்கள் இண்டஸ்ட்ரி மாபெரும் சக்தி வாய்ந்தது. இதைச் சரிவரப் பயன்படுத்தினால், பட்டிதொட்டிகளில் உள்ள பாமர மக்களிடமும் நல்லவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துவது சுலபம்!''


6. ''சரி... அதைச் செய்வதற்கு என்னதடை?'' 


''அதிகமாக வரி கொடுக்கும் தொழிலாக இருப்பினும், அதற்கு உரிய மரியாதை எங்களுக்குக் கிடைக்காதது வருத்தப்பட வேண்டிய விஷயம். செக்யூரிட்டியே இல்லாத தொழில் எங்களுடையது. ஒரு ரசாயனத் தொழிற்சாலை ஆரம்பிக்கப் பண உதவி செய்ய முன் வரும் வங்கிகள், ஒரு படம் எடுக்க எங்களுக்கு உதவுவது இல்லை. ஏன் இந்தப் பாரபட்சம்? கேட்டால், பாதுகாப்பு இல்லை என்பார்கள். அரசாங்கம் மட்டும் எங்கள் தொழிலை மதித்து, படத் தயாரிப்புக்குப் பண உதவி செய்ய முன்வந்தால், நிச்சயமாகச் சொல்கிறேன்.


.. பத்தில் ஆறு படங்களாவது உயர்ந்த குறிக்கோளுடனும் சமூகப் பிரக்ஞையுடனும் அமையும். சந்தேகமே இல்லை!''


7. ''இந்த அளவுக்கு வளர்ந்த பின்னர், யாருடைய இழப்பையாவது வெகுவாக உணர்கிறீர்களா?'' 


''என் அம்மா! எதற்கும் இவன் உதவ மாட்டான் என்கிற முடிவுக்கு அனைவரும் வந்துவிட்ட பின், 'எதிர்காலத்தில் என்ன பண்ணுவான், இவனுக்கு என்று கொஞ்ச மாவது வருமானம் வேண்டாமா?’ - என்ற ஆதங்கத்தில் வாசலில் இருக்கும் கடைகளைக் கட்டக் காரணமாக இருந்தவர். I miss her alot!''


8. ''உங்களையே விமர்சித்துக்கொள்ளும் பக்குவம் உண்டா?'' 


''கொஞ்சம் என் பலம், பலவீனம் எனக்குத் தெரியும். எனக்கு வேண்டும், வேண்டாததைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் விவேகத்தை மெதுவாக வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். முன் கோபம், ஆத்திரம் என் மைனஸ் பாயின்ட்ஸ். ஆனால், எப்பேர்ப்பட்ட விரோதிக்கும் அவர் என் பிடிக்குள் வரும்போதுகூடக் கெடுதல் செய்ய முடியாதது என் ப்ளஸ் பாயின்ட்!''


9. ''தொடர்கதை எழுத முனைந்திருப்பதன் மூலம் எழுத்துலகில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறீர்கள். இந்தக் கதையை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்...'' 


''இது ரொம்ப வருஷங்களுக்கு முன் என்னுள் ஜனித்தது. நண்பன் ஒருவனுக்கு உண்டான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. இதை முதலில் திரு.பாலசந்தரிடம் கூறினேன். அவர், 'நன்றாக இருக்கிறது, ஆனால், மிt வீs ரீஷீக்ஷீஹ். ரொம்ப பயங்கரம்’ என்று சொன்னார். இந்தக் கதை என்னுள் முழுமையாக உள்ளது. நடிகன் கமல்ஹாசனால் வெளிப்படுத்த இயலாத எல்லைகளை எழுத்தாளன் கமல்ஹாசன் தொட்டுக் காட்ட வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது!''


10. ''பாட, ஆட, நடிக்க, எழுதத் தெரிவதன் மூலம் நீங்கள் ஒரு All Rounder என்பதை நிரூபிக்கிறீர்கள். இன்னும் எந்தக் களத்திலாவது தேர்ச்சி பெற ஆசை உண்டா?'' 


''கர்னாடக இசையை முழுமையாக அறிய, திரு.பாலமுரளியிடம் சங்கீதம் கற்கிறேன். மேடையில் நான் கச்சேரி செய்ய வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இது எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்னை ரொம்பப் பயமுறுத்துகிறது. இன்னும் சில வருஷங்களில் கம்ப்யூட்டரின் முன் நான் ஒரு ஞானசூன்யமாகி விடுவேனோ என்ற மிரட்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் பற்றின அறிவைச் சமயம் கிடைக்கும்போது எல்லாம் வளர்த்துக்கொள்கிறேன்!''


11. ''இன்றைய கமல்ஹாசனின் வளர்ச்சியில் உங்கள் மனைவி வாணிக்குப் பங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?'' 


''ரொம்ப... ரொம்ப! முரட்டுத்தனம் நிறைந்த என்னைப் பல விஷயங்களில் ஒருநிலைப் படுத்தியது அவள்தான். என் அம்மாவின் இழப்பை ஓரளவுக்குத் தாங்கிக்கொள்கிறேன் என்றால், அது வாணி தரும் இதத்தால்தான். எல்லாவற்றையும்விட, வாணி எனக்கு ஒரு நல்ல Companion!''


12. ''இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத நினைப்பை என்னிடம் சொல்வது சாத்தி யமா?'' 


''ம்ம்...'' - கமல் சிந்திக்கிறார். தீவிரமான பார்வையுடன் மெதுவாகப் பேசுகிறார். ''விட்டுக்கொடுத்து, விட்டுக்கொடுத்து அதாவது, கலையுலகில் Compromise செய்து செய்து நாளடைவில் எனக்குள் இருக்கும் கலைஞன் கமல்ஹாசன் உருவமற்றுப் போய்விடுவானோ என்ற பயம் எனக்கு உண்டு. 'ராஜபார்வை’ நடிகன் கமல் இன்றைக்கும் அதே வீரியத்துடன் உள்ளே நடமாடிக்கொண்டு இருக்கிறானா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

உண்மையிலேயே கலைஞன் கமல்ஹாசன் இறந்து விடுவானோ என்ற பயம். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?''
பேட்டி முடிந்துவிடுகிறது.


கமலின் கடைசி வாக்கியங்கள் ஒருவித வேதனையை உண்டுபண்ண... அப்படியே அமர்ந்து சிந்திக்கிறேன்.


வசதி இருந்தும் எளிமையான வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்று வாழும் தந்தை ஸ்ரீனிவாஸன், அண்ணன் சாருஹாஸன். அன்பையும் சிரிப்பையும் தவிர, வேறு எதையும் தரத் தெரியாத மன்னி. நடிகை என்ற பந்தா இல்லாமல், எந்தக் குடும் பத்திலும் காணப்படும் ஒரு பொறுப்புள்ள பெண் போல காபி கலந்து எடுத்து வரும் சுஹாசினி. சுமுகமாகப் பேசும் சாருஹாஸனின் மூத்த மகள் டாக்டர் நந்தினி. வெட்கத்துடன் 'ஹலோ’ சொல்லி உட்காரும் கடைசிப் பெண் சுபாஷிணி. நாட்டியப் பயிற்சியில் இருந்தாலும் கீழே இறங்கி வந்து நட்புடன் பேசும் வாணி -


இவர்கள் நடுவே வசிக்கும் கமல்...


- ஒரு சமயம், கார் டிரைவர் எங்கோ சென்று விட, சட்டென்று கட்டின லுங்கியுடன் தானே வண்டி ஓட்டிக்கொண்டு என்னை வீட்டில் விட்ட கமல்...


- நல்லது, கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் விவேகத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று வெளிப்படையாகத் தன்னை அலசிக் கொள்ளும் கமல்...
சமூக சேவை செய்வதுதான் முக்கியமே தவிர, கமல்ஹாசனின் பேர் நீடிப்பது அல்ல - என்று தெளிவான சிந்தனையுடன் பேசும் கமல்...


- மனைவி தரும் தோழமையில் பெருமை கொள்ளும் கமல்...


- முக்கியமாக,
மனிதாபிமானத்துடன், தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து, அதில் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பும் கமல் -


இவ்வளவு விழிப்பு உணர்வு உண்டாகிவிட்ட பிறகு, மனிதன் கமல், நடிகன் கமல் அழிந்து போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது சாத்தியமா என்ன?


ம்ஹூம்...  இல்லை.


இந்தப் பயம் அநாவசியமானது...


நிச்சயம்...

மனசு தெளிந்துவிட, 'நான் கிளம்புகிறேன்... ஆல் தி பெஸ்ட் கமல்!’ என்று கூறியபடி எழுந்து நிற்கிறேன்!

Thursday, February 23, 2012

ரோபோ கமல் , எந்திரன் ரஜினி -ஷங்கர் ஒப்பீடு - காமெடி கும்மி

http://sirippu.files.wordpress.com/2010/01/dsc_5646.jpg 


1. 'ஷங்கர்... பார்ப்பனச் சிந்தனைகளுக்குக் கொடி பிடிக்கிறார்என்று உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் பற்றி?''

சி.பி - எதுக்கெடுத்தாலும் ஜாதியை இழுக்கறதே தமிழனுக்கு வேலையாப்போச்சு.. எல்லாத்துக்கும் தமிழ் இனத்தலைவர் கலைஞர் தான் காரணம். ஆ ராசாவை கைது பண்றப்ப அவர் ஒரு தலித் என்பதால்தான் அப்படி பண்றாங்கன்னு சொன்னாரு... தலைவர் எவ்வழி.. தொண்டர் அவ்வழி.
 
''ஒரு சாமானியனாகத்தான் என் சிந்தனைகளைப் படங்களில் பிரதிபலிக்கிறேன். 'ஜென்டில்மேன்படம் ஓப்பனிங்ல, ஹீரோ ஊட்டியில கோடிக்கணக்குல கொள்ளை அடிக்கிற மாதிரி, ஒரு ஸ்டைலான ஆக்ஷன் ப்ளாக் வரும். அவர் மேல போலீஸுக்கு சந்தேகம் வராம இருக்கணும்னும் அந்த ஆக்ஷனுக்குச் சம்பந்தமே இல்லாத எதிர் துருவத்தில் ஹீரோ இருக்கணும்னும்தான் அக்ரஹாரத்துல அப்பளம் போடுறவரா அர்ஜுனை ஸ்கெட்ச் பண்ணியிருப்பேன். ஆனா, கதைப்படி அவர் ஐயரா நடிப்பாரே தவிர, உண்மைல ஐயர் கிடையாது. இன்னும் உத்துக் கவனிச்சீங்கன்னா... ஃப்ளாஷ்பேக்ல, 'இவ்வளவு அழகா மந்திரங்களைச் சொல்றியே... நீ பிராமணன் இல்லேன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கனு நம்பியார் சொல்வார்.

'அந்நியன்படத்துலயும் என் கற்பனைல வந்த முதல் விஷ§வல், முகத்தை மறைச்ச மாதிரி முன்னாடி நீளமா தொங்கற முடியோட இருக்கிற 'அந்நியன்கேரக்டர்தான். பொதுவா, நீளமான முடி, சர்தார்ஜிக்களுக்கு, ஐயர், ஐயங்கார்களுக்கு இருக்கிறதைப் பார்த்திருக்கேன். சர்தார்ஜின்னா நேட்டிவிட்டி அடிபடும். ஐயர் வேஷம் 'ஜென்டில்மேன் போட்டாச்சு. அதனால அந்நியனை ஐயங்காரா காட்ட முடிவு பண்ணேன். அது கதையோட, கதாபாத்திரத்தோட தேவைக்காகக் கொடுக்கப்பட்ட கலர். அவ்வளவுதான். என் மத்த ஒன்பது படங்களோட கதாநாயகர்களையும் நியூட்ரல் ஆகத்தான் காமிச்சிருக்கேன்.
நான் சாதிகள்ல உடன்பாடு இல்லாத, எல்லாரும் சமம்னு நினைக்கிற நியூட்ரலான ஆள்!''



சி.பி - வெரிகுட் ஆன்சர்.. நல்ல வேளை நம்மாளுங்க “ ஏன் சார் உங்க படத்துல பாலகுமாரன், சுஜாதா மாதிரி பிராமணர்களுக்கு வசனம் எழுத வைத்து  ஆதரவு தர்றீங்க?:ன்னு கேட்கலை. 

2.  '' 'உங்க படத்தைப் பார்த்து நாங்க மனம் திருந்திட்டோம். இப்ப நாங்க லஞ்சமே வாங்குறது இல்லஎன்று யாராவது உங்களிடம் சொல்லி இருக்கிறார்களா?''


சி.பி - அப்படி எல்லாம் பாசிட்டிவா இருந்தா யாரும் வெளீல சொல்ல மாட்டாங்க.. புலன் விசாரணை பார்த்து கொலை செஞ்சேன், நூறாவது நாள் பார்த்து ஆட்டோ சங்கர் ஆனேன்,அக்னி பாத் ஹிந்திப்படம் பார்த்து டீச்சரை கொன்னேன்னு ஆரம்பிப்பாங்க..
 ''அப்படி சாமி சத்தியமா இதுவரை யாருமே சொல்லலைங்க. சொல்லியிருந்தா, இந்நேரம் நான் பிறவிப் பலனை அடைஞ்சு இருப்பேன்.
'நீங்க இப்படி எல்லாம் படம் எடுத்துட்டா... நாங்க திருந்திடுவோமா?’
'அது... நம்மளைச் சொல்லலப்பா... லஞ்சம் வாங்குறவங்களைச் சொல்றாங்க!’
'இதுல என்ன தப்பு... எல்லாரும் பண்றதைத்தான நாங்க பண்றோம்!’
'அது சினிமாவுக்கு வேணா சுவாரஸ்யமா இருக்கலாம்... பிராக்டிகலா நடக்காது!’
- இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஃபீலிங்ல லஞ்சத்தை கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்காங்க.
நாமளும் 'இந்தியன் பார்ட் 2, 3, 4, 5’-னு கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்க வேண்டி யதுதான்.
ஆனா, பப்ளிக்ல நல்லவங்க, மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவங்க நிறைய பேர், 'அந்நியன்படத்தைப் பார்த்துட்டு என்கிட்ட, 'படம் பார்த்ததும் பயம் வந்துடுச்சு சார்... நாமெல்லாம் ஒழுங்கா நடந்துக்கலையோனு குற்ற உணர்வு வந்துடுச்சு. இப்பல்லாம் ரெட் சிக்னல்ல நின்னுடுறோம். 'ஸ்டாப் லைனைத் தாண்டுறது இல்லைனு சொல்லிஇருக்காங்க.
'முதல்வன்படம் வந்ததும் நிறைய இடங்கள்ல புகார் பெட்டி வெச்சதா செய்தி வந்தது. நிறைய அரசு அதிகாரிகள் டைப் ரைட்டரோட ஸ்பாட்ல போய், சரியா வேலை செய்யாதவங்களை சஸ்பெண்ட் செஞ்ச தாவும் செய்திகள் வந்தன. அந்த வகையில பிறவிப் பயன்ல ஒரு சின்ன பீஸை அடைஞ்சிட்டோம்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!''


சி.பி - முதல்வன், இந்தியன் படங்கள் நீங்க சொல்ற மாதிரி ஒரு விழிப்புணர்வ ஏற்படுத்தியது உண்மை, ஆனா அந்நியன்ல  அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தலை..  


http://blog.endhiran.net/wp-content/uploads/2010/01/84-150x150.jpg

3. '' 'எந்திரன்படப்பிடிப்பு சமயம் ரஜினி யோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்திருப்பீர்கள்... அப்போது நீங்கள் சொல்லி ரஜினி மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ அல்லது ரஜினி சொல்லி நீங்கள் மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ இருக்குமே... அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள லாமே?''
சி.பி - இவரு அவருக்கு சம்பளத்தை செக்கா கொடுத்திருப்பாரு, அவரு படத்துல நடிக்கறேன்கரதுக்கான அக்ரீமெண்ட்ல சைன் பண்ணி டாக்குமெண்ட்ஸ் குடுத்திருப்பாரு.. அதை எல்லாம் ஷேர் பண்ண முடியுமா? சம்பளம் எவ்ளவ்னு தெரிஞ்சுடுமே?

'' 'எந்திரன்சமயத்துலனு இல்லை... அவரோட படம் பண்றதுக்கு முன்னாடியே அவர்கிட்ட இருந்து ஒரு நல்ல பழக்கத்தை நான் கத்துக்கிட்டேன். ஒரு விழாவுக்கு ரஜினி சார் வந்திருந்தார். எல்லாரும் அவரைப் போய்ப் பார்த்து 'ஹலோசொல்லிட்டு இருந்தாங்க. 'நாம போய் ஹலோ சொல்ல ணுமா?’னு சங்கோஜத்தோட, தயக்கத்தோட, கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டு இருந் தேன். ஆனா என்னைக் கவனிச்சவர், கிட்ட வந்து, 'ஹலோ ஷங்கர்... எப்படி இருக்கீங்க?’னு கேட்டாரு. எனக்கு 'ச்சேனு ஆகிடுச்சு.
விழாக்களில் பலர் இப்படித்தான் நடந்துப்பாங்க. பக்கத்துலயே இருந்தாலும், நேருக்கு நேர் நின்னாலும், யார் முதல்ல ஹலோ சொல்றதுன்னு, யாரு நகர்ந்து கிட்ட போறதுன்னு, நீ பெரியவனா நான் பெரியவனான்னு உள்ளுக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்காம, கண்டுக்காம பக்கத் துல இருக்கிறவங்ககிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுவாங்க. அதை உடைச்சவர் ரஜினி. அன்னைல இருந்து... என் கண்ணுக்கு முன்னால தெரிஞ்சவங்க இருந்தா... பெரியவங்களோ, சின்னவங்களோ நானே முதல்ல போய் 'ஹலோசொல்லிடுவேன்!
ஒரு தடவை ரஜினி சார்கிட்ட, நான் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொன்னேன். அவரால நம்ப முடியலை. 'எவ்ளோ நாளாச்சு?’னு கேட்டார். 'அஞ்சு வருஷமாச்சுன்னேன். 'எப்டி... எப்டி?’ன்னார். நான், 'நிறுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, முடியல. ஒரு தடவை எனக்கு மலேரியா வந்துச்சு. தினமும் ஊசி போட வேண்டியிருந்ததால நான் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். 15 நாள் சிகரெட் பிடிக்கலை. 16-வது நாள் 'இத்தனை நாள் விட்டதை மறுபடி ஆரம்பிக்கணுமா?’னு யோசிச்சு விட்டுட்டேன். அப்புறம் ஒரு மாசம்... ஆறு மாசம்... ஒரு வருஷம்னு, அஞ்சு வருஷம் பிடிக்கலேனு சொன்னேன். ஏன்னா, 'சும்மா ஆறு மாசம், ஒரு வருஷம் விட்டா சிகரெட் பழக்கத்தை விட்டதா அர்த்தம் இல்லை. அஞ்சு வருஷம் நிறுத்தினாதான் உண்டுனு சுஜாதா சார் என்கிட்ட சொல்லிஇருக்கார். அப்புறம் ரஜினி சாரும் படிப்படியா குறைச்சு, ஒரு நாளைக்கு மூணு... அப் புறம் ஒண்ணுங்கிற அளவுக்கு வந்துட்டார்!
'எந்திரன்படத்துக்காக சிட்டி மேக்-அப் இங்கே செட் ஆகாததால, அமெரிக்கால ஸ்டேன்வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு மேக்-அப் டெஸ்ட்டுக்காகப் போயிருந்தோம். ரெண்டு நாளாகியும் அங்கேயும் செட் ஆகலை. லஞ்ச் பிரேக்ல நான் தனியா நின்னு டென்ஷன்ல டேபிளைக் குத்திக்கிட்டு இருந்தேன். என்னைக் கடந்து போன ரஜினி சார், 'இந்தப் படம் முடியறதுக்குள்ள மறுபடி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே படம் முடியற நேரத்துல டென்ஷன் டெரா பைட்டுக்கு ஏறி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, அப்புறம் சுத்தமா விட்டுட்டேன். அவரும் விட்டுட்டார்!''



சி.பி - படிப்பவர்களுக்கு  விழிப்புணர்வை ஊட்டும் பொறுப்பான பதில், வெல்டன்..

4. ''ரஜினி, கமல்பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்... இது உங்கள் ரசிகனின் அன்புக் கட்டளை... மீறாதீர்கள் ஷங்கர்...''

'' 'இந்தியன்கதையை முதன்முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன் என்பது பலருக்குத் தெரியாது. கதை, திரைக்கதை, முழுமை அடையாத ஆரம்பக் கட்ட நிலையில் சொன்னதால் அதைச் செய்வதில் ரஜினி சாருக்குத் தயக்கம் இருந்தது. 'இந்தியன்படம் முடிந்து, அவருக்குப் போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ஓடி வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து, 'சூப்பர்... சூப்பர்...’ எனத் தட்டிக்கொடுத்து, 'இப்படி எனக்கு நீங்க சொல்லவே இல்லியேஎன்று ஆச்சர்யப்பட்டார்.
நீங்கள் உற்றுப்பார்த்தீர்களானால் 'இந்தியன்தாத்தா, இன்டர்வெல் காட்சியில் உட்கார்ந்தபடியே ஈஸி சேர் பலகையால் நெடுமுடி வேணுவைத் தட்டிவிடுவார். வர்மக் கலையில் அவரை வீழ்த்திக் கீழே கிடக்கிற துண்டை எடுத்து ஸ்டைலாகத் தோளில் போடுவார். பிறகு, எழுந்து கலைந்த முடியை ஸ்டைலாகக் கோதி சரி செய்வார். இது ரஜினி சாரை மனதில்வைத்து நான் உருவாக்கிய காட்சி என்பது கமல் சாருக்குத் தெரியாது. அதை முற்றிலும் அவரது ஸ்டைலில் வேறுவிதமாகச் செய்து அசத்தி இருப்பார்.


சி.பி - அவர் எப்படி செஞ்சாரோ, ஆனா பார்க்க ரஜினி ஸ்டைலாத்தான் தெரிஞ்சுது..   ஹரே ராதா ஹரே கிருஷ்ணா படத்துல பாடல் காட்சில ஒரு இடத்துல இதே மாதிரி ரஜினி ஸ்டைல் பண்ணி இருப்பாரு, ஆனா ரஜினி எந்தப்படத்துலயும் கமல் மாதிரி நடிக்க ட்ரை பண்னதில்லை..
ரஜினி சார் இப்போதுகூட, 'நான் முதல்வன் பண்ணாததுகூட எனக்கு வருத்தம் இல்ல... 'இந்தியனைத்தான் மிஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்வார்.
'ரோபோமுதலில் கமல் சாரை வைத்து எடுப்பதாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அதன் முதல்கட்டமாக மும்பையில் கமல் சார், ப்ரீத்தி ஜிந்தா கலந்துகொண்ட போட்டோ ஷூட் நடந்தது பலருக்குத் தெரியாது. கமல் சாரை விஞ்ஞானியாக, ரோபோவாக, வில்லன் ரோபோவாக எல்லாம் போட்டோஸ் எடுத்தோம். அப்போது, வில்லன் ரோபோ பாடல் காட்சியில் ஹிட்லர் போல், இடிஅமீன்போல் வருகிற மாதிரியாகக் கற்பனை செய்துவைத்திருந்தேன். ஒவ்வொரு கெட்-அப்பிலும் கமல் சார் கொடுத்த போஸ்களையும் எக்ஸ்பிரஷன்களையும் பார்த்து ப்ரீத்தி ஜிந்தா, மும்பை

டெக்னீஷி யன்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். அதன் பிறகு, கமல் சார் கொடுத்த தேதிகளை 'நாயக்படத்தினால் என்னால் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை. நான் 'நாயக்முடித்து வந்தபோது, அவர் வேறு ஒரு படத்தில் பிஸி ஆகிவிட்டார். அந்தப் படம் எடுக்க முடியாமல் போனது. ஆனால், அவரைவைத்து எடுத்த இந்தப் படங்களைப் பார்க்கும்போதும், அவர் ரோபோ பேசுவதுபோல் பதிவு செய்திருந்த,
'ஹாய்... நான் ஒரு ரோபோ... மனித உருவம்கொண்ட இயந்திரம்...
ஸ்பீட் ஒன் கிகா ஹெர்ட்ஸ்... மெமரி ஒன் டெரா பைட்...
ஜாக்சனைப் போல் ஆடவும் தெரியும்... ஜாக்கிசானைப் போல் மோதவும் தெரியும்.
நான் கற்றது கடலளவு... கல்லாதது- மனிதனின் பொய், பொறாமை, வஞ்சகம், துரோகம்...
என்னைச் சரியாகப் பயன்படுத்தினால் நண்பன்... தவறாகப் பயன்படுத்தினால்..? ஹா... ஹா... ஹா... (வில்லன் சிரிப்பு)’
- அவருடைய கம்பீரக் குரலைக் கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது!''



சி.பி - ரோபோ படத்துல  கமல் நடிச்சிருந்தா நடிப்புல பல புதிய பரிமாணங்களை கமல் காட்டி இருப்பார் என்பது உறுதி. ஆனா கல்லா கட்ட ரஜினி தான் பெஸ்ட் சாய்ஸ்.. 



5. ''தங்கள் படங்களின் முதல் விமர்சகர் யார்?''


சி.பி - எந்தப்படைப்பாளிக்கும் முதல் விமர்சகர் அவரது மனைவியாகவோ, நெருங்கிய நண்பராகவோதான் இருக்கும்..

 ''நான்தான்! நானே என் படத்தையும் படத்துல வர்ற ஒவ்வொரு விஷயத்தையும் கிண்டல் பண்ணி, ஓட்டி, அலசி, ஆராய்ஞ்சு, பிரிச்சு மேய்ஞ்சு, பின்னிப் பெடலெடுத்து, எல்லா ஸ்கேனர்லயும் விட்டு எடுத்து, அது 'போதும் என்னை விட்டுருப்பானு கதறுன அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது!''


சி.பி - சார், எல்லாம் ஓக்கே , ஊழல், கறுப்புப்பணம் இந்த சர்க்கிளை விட்டு வெளீல வாங்க.. போர் அடிக்குது.. உடனே காதலன், ஜீன்ஸ், பாய்ஸ்னு இறங்கி போகாதீங்க.. புது திரைக்கதைல நீங்க கலக்கனும்.. 

- அடுத்த வாரம்...
''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத் தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''
''ஒரே படத்தில் கமலையும் ரஜினி யையும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''
''நீங்கள் நன்றாகக் கவிதை எழுதுவீர் களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க ப்ளீஸ்?''


 தொடரும்