Showing posts with label ஆர்.கே.வி ஸ்டூடியோ. Show all posts
Showing posts with label ஆர்.கே.வி ஸ்டூடியோ. Show all posts

Sunday, January 10, 2016

சென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை- 2 செம சீன் படம்

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »
காலை 9.45 மணி
The sap head/ The saphead Dir.:Buster Keaton USA| 1920| 77’
பஸ்டர் கீடன் நடிப்பில் உருவான படம். பணக்கார நிதியாளர் குடும்பத்தில் பொறுப்பின்றி வளரும் மகன், தனது பொறுப்பை உணரும் பயணமே தி சாப் ஹெட் படத்தின் கதை.
காலை 11.45 மணி
Barbara/Barbara Dir.:Nils Malmoros Denmark | 1997| 143’
கிராமங்களில் பணிபுரியும் இளம் புரோகிதர் பால். தேவாலய ஊழியத்திற்காக ஃபெரோ தீவுகளுக்குச் செல்கிறான் அங்கே இளம்பெண்ணான பார்பராவைச் சந்திக்கிறான். இருமுறை திருமணம் ஆனவளான பார்பராவின் கணவர்கள் இருவரும், சந்தேகமான முறையில் மரணித்திருக்கின்றனர். மெல்ல மெல்ல அவனையும் அறியாமல் பார்பராவிடம் காதல் வசப்படுகிறான். சுற்றியிருக்கும் மக்களின் எச்சரிக்கைக் குரல்களும், சொந்த மதக் கோட்பாடுகள் சொல்வதையும் அவனால் கேட்க முடியவில்லை. பார்பராவின் காந்தக் கண்களும், அப்பாவித்தனமும் அவனைக் கவர்ந்திழுக்கின்றன. அவர்களின் காதல், பல அபாயகரமான சோதனைகளுக்கு வித்திடுகிறது.
மதியம் 2.45 மணி
Carte Blanke/ Dir.:Jacek Lusinski Poland |2015| 106’
ஆச்சரியமான உண்மைக் கதையான கார்ட்டி பிளான்ச்சியைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. வரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர் கேஸ்பர், கொஞ்சம் கொஞ்சமாகக் கண் பார்வையை இழப்பதை உணருகிறான். வேலைக்காகவும், மரியாதை போய்விடுமே என்ற பயத்திலும், எல்லோரிடம் இருந்து உண்மையை மறைக்கிறான். மரபணுக் கோளாறின் காரணமாக, மருத்துவர்களும் அவனுக்கு குறைவான நம்பிக்கையையே கொடுக்கின்றனர். சீக்கிரத்திலேயே நிரந்தரப் பார்வையற்றவனாக ஆவதற்கான வாய்ப்புகள் அதிமாக இருப்பதை உணர்கிறான் கேஸ்பர்.
உடைந்த இதயத்தோடு, தன் மேலதிகாரிகளிடம் உண்மையை மறைக்கிறான். தன்னுடைய கனவு வேலையை நல்லபடியாக மேற்கொள்ள வேண்டும்; ஆண்டின் இறுதித் தேர்வுகளுக்காக, மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதே கேஸ்பரின் ஆசையாக இருக்கிறது. தன்னுடைய நெருங்கிய நண்பனான விக்டரிடம் மட்டும் உண்மையைச் சொல்கிறான். கூட வேலை பார்க்கும் எவாவுடன் மட்டும் நன்றாகப் பழகுகிறான் கேஸ்பர். அதே நேரத்தில் ஏதோ ஒரு ரகசியத்தைத் தன்னிடம் இருந்து மறைக்கும் மாணவி க்ளாராவுக்கும் உதவுகிறான்.
இப்படம் நோயால் துன்புறும் தனி மனிதனைப் பற்றி மட்டும் பேசவில்லை. எழ நினைக்கும் ஒவ்வொரு முறையும், விழுந்து கொண்டே இருக்கும் மனிதர்களைப் பற்றியும், ஒரு கடினமான விஷயத்தில் தேர்ச்சி அடைய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்களைப் பற்றியும் பேசுகிறது. ஒவ்வொரு மனிதனும் வெளிக்கொணர வேண்டிய, வளர்த்துக்கொள்ள வேண்டிய சக்தியைப் பற்றியும் பேசுகிறது; வடுக்களில் இருந்தும், நம் வாழ்க்கையை அழகாய் அமைக்கவும் வழி சொல்கிறது.
மாலை 4.45 மணி
The Summer of Sangaile/ SANGAILĖ Dir.:Alanté Kavaïté Lithuania| 2015| 88’
17 வயது சங்காய்லே சாகச விமானங்களால் கவரப்படுகிறாள். உயரத்துக்கு அச்சமுறும் அவள், விமானிகள் இருக்கையில் அமர்வது வரையிலும் கூட ஒருபோதும் தையரியமாக இருந்ததில்லை. அருகிலுள்ள ஏரிக்கரை வீட்டில் பெற்றோர் இருக்க, கோடையில் நடைபெறும் ஏரோநாட்டிகல் சாகசக் கண்காட்சி விழா ஒன்றில் அவள் வயதேயான ஆஸ்டே எனும் உள்ளூர் பெண்ணை சந்திக்கிறாள். அவள் சங்காய்லே போல இல்லை. அவளது வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யமாகவும் துணிச்சலாகவும் இருக்கிறது. இரு பெண்களும் காதலர்களாக மாறுகிறார்கள். சங்காய்லே தனக்கு நெருக்கமான உறவாக ஆஸ்டேவை ரகசியமாக அனுமதிக்கிறாள். அவள் விமானத்தில் பறப்பதை தனது பதின்ம காதலின் நபர் மட்டுமே ஊக்கப்படுத்துவதையும் உணர்கிறாள்.
மாலை 7.15 மணி
Ma Folie/ Ma Folie Dir.: Andrina Mracnikar Austria | 2015| 99’
ஹன்னா எனும் இளம்பெண் யான் இளைஞனைக் காதலிக்கிறாள். யானும் ஹன்னாவைக் காதலிக்கிறாள். ஆனால் அவளை நம்பவில்லை. அதற்குக் காரணம் தன் அந்தரங்கத்தை அடிக்கடி செல்போனில் எடுக்கும் அவனது செயல்தான். ஹன்னா அவனை ஒருநாள் கடுமையாகத் திட்டிவிடுகிறாள். உடனே அவன் அவளை விட்டு விலகி விடுகிறான். ஆனால் தனியாக அவளைத் விட்டுவிட்டுப் போகவில்லை.
அவனது படமாக்கல் கருவி ஒன்று அவளைக் கண்காணிக்கிறது. ஒரு அச்சுறுத்தலாகவும் தன்னையே நம்ப முடியாதவளாகவும் அவள் இருக்கிறாள். ஒரு பைத்தியக் காதலை இப்படம் பேசுகிறது. படிப்படியாக உணர்தல், நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மை, கற்பனை மற்றும் மாயை ஆகிய வெவ்வேறு பாதைகளில் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லராகவும் இப்படம் பயணிக்கிறது.


த இந்து