Wednesday, April 01, 2026

நீ For Ever (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)

 நீ For Ever (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)


     


       


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு சினிமாப்பட இயக்குநர்.ஒரு நிறுவனத்திடம் கதை சொல்லப்போகிறார்.காதல் கதையாக இருந்தால் தேவலை என்கிறார்.நாயகியிடம் காதல் கதை இல்லை.ஒரு அனுபவத்துக்காக காதலிப்பது போல் நடித்து அந்த அனுபவத்தைப்படம் ஆக்கலாம் என நினைக்கிறார்.


நாயகன் ஒரு டேட்டிங்க் ஆப்  உருவாக்கும் முயற்சியில் இருக்கிறான்.அதற்கு முதலீடு செய்ய ஆள் தேவை.அவரோ உனக்குக்காதலில் அனுபவம் இருக்கா?எனக்கேட்கிறார்.அந்த அனுபவத்தைப்பெற காதலித்துப்பார்ப்போம் என நாயகன் முடிவு செய்கிறான்.


நாயகன் ,நாயகி இருவரும் ஒரு டேட்டிங்க் ஆப் மூலம் அறிமுகம் ஆகி நண்பர்கள் ஆகிறார்கள்.பிறகு காதலிக்கிறார்கள்.இருவருமே உண்மையாகக்காதலிக்கவில்லை.இது பரஸ்பரம் இருவருக்கும் தெரியாது.ஒரு கட்டத்தில் நடிப்புக்காதல் மறைந்து நிஜமாகவே ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.


நாயகிக்கு பெற்றோர் இல்லை.ஆனால் நாயகனுக்கு அம்மா உண்டு.அம்மாவும் லவ் மேரேஜ் தான்.ஆனால் அப்பா விட்டு விட்டுப்போய் விட்டார்.லவ் மேரேஜை எதிர்த்த நாயகனின் தாத்தாதான் நாயகனின் அம்மாவுக்கு அடைக்கலம் தந்தவர்.அவருக்கு லவ் என்றாலே பிடிக்காது.

இதற்குப்பின் நாயகன் நாயகி காதல் என்ன ஆனது ?என்பது தான் மீதித்திரைக்கதை.


நாயகி ஆக அர்ச்சனா ரவி அழகாக ,குடும்பப்பாங்காக இருக்கிறார்.நல்ல நடிப்பு.


நாயகன் ஆக சுதர்சன் கோவிந்த் ஆள் நல்ல உயரமாக அருண் பாண்டியன மாதிரி இருக்கிறார்.ஆனால் அவரைப்போலவே இவருக்கும் நடிப்பு வரவில்லை.


நாயகனின் அம்மாவாக  வித்யா ,அப்பாவாக நிழல்கள் ரவி இருவரது குணச்சித்திர நடிப்பும் அருமை.

தாத்தாவாக ஒய் ஜி மகேந்திரன்.அனுபவம் மிக்க நடிப்பு,ஆரம்ப காலத்தில் இவர் காமெடியனாக மொக்கை போடுவார்.ஆனால் இது போன்ற கேரக்டர் ரோலில் கச்சிதமான நடிப்பு.


நாயகியின் தோழி ஆக வரும் சினேகா சக்தி நல்ல நடிப்பு.துடுக்குத்தனம் ரசிக்க வைக்கிறது.அதே போல் நாயகனின் நண்பன் ஆக வரும் விஜே பப்புவின் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன.


அறிமுக இயக்குநர் அசோக் குமார் கலைவாணி கதை ,வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு,இசை,பின்னணி இசை ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்.படத்தின் ரன்னிங் டைம்  133 நிமிடங்கள்.

சபாஷ்  டைரக்டர்

1  இருவருமே சுயநலத்துக்காகக்காதலிப்பது போல் நடிப்பது,பின் நிஜமாகவே காதலிப்பது இந்த கான்செப்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

2 நாயகியின் ஆடை வடிவமைப்பு ,கண்ணியமான தோற்றம் அழகு.

3 காதல் கதையில் குடும்ப செண்ட்டிமெண்ட்டை இணைத்த விதமும் அருமை

4  காதல் பற்றிய தத்துவ வசனங்கள் அனைத்தும் இயக்குனர் அனுபவப்பூர்வமாக  உணர்ந்து எழுதி இருக்கிறார்.



ஹிட்  சாங்க்ஸ்


1. நீ தானா ? மாஸ் தானா?

2 அடி ஏண்டி ஏண்டி 


  ரசித்த  வசனங்கள் 


1_ ஹீரோ மாதிரி இருக்கும் பசங்க 10% தான்.சுமாரா இருக்கும் பசங்க தான் 90%


2 வாய் எவ்ளோ வேணா பொய் சொல்லும் ,ஆனா கண் காட்டிக்குடுத்துடும்.

3 பெத்த பையனைப்பிரிஞசிருப்பதை விட ஒரு அம்மாவுக்கு வேற என்ன கஷ்டம் இருக்க முடியும்?

4  டேட்டிங்க்  கல்ச்சர்ல ரெண்டே வகை 1 ஏமாத்தறவங்க 2 ஏமாறுகிறவங்க

5  நாம எல்லோரும் சோகத்தையும் ,வலியையும் உள்ளே வெச்சுக்கிட்டு  சந்தோஷத்தையும் ,காதலையும் வெளியே தேடறோம்


6. ஒரு சில விஷயத்தை தூரத்தில் இருந்து பார்த்தாதான் நல்லாருக்கும்.

7 கடந்த காலத்தில் யாரை வேணா நாம் இழந்திருக்கலாம்,அது நம் கையில் இல்லை.ஆனா நிகழ் காலத்தில் நாம் யாரையும் இழக்கக்கூடாது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

, திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன் படம் முழுக்க உம்மணாம்மூஞ்சியாக வருவது எரிச்சல்.தாடி வேற. நடிப்பு வர்லை

2. நாயகனின் தாத்தா. ஒய் ஜி. காதலை எதிர்த்து தூக்குப்போட்டு சாக முயற்சிக்கும் காட்சி படு செயற்கை.ஒட்டவே இல்லை.

3 நாயகன் ,நாயகி இருவருமே பரஸ்பரம் சுயநலத்துக்காகத்தான் காதலிப்பது போல் நடிக்கிறார்கள்.ஆனால் நாயகி மட்டும் மன்னிப்புக்கேட்பது எதற்கு?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள் மட்டுமல்ல ,அனைவருமே பார்க்கலாம்.குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் தான் இருக்கிறது.ஒரே ஒரு இடத்தில் டபுள் மீனிங் ஜோக் வருகிதது.ரேட்டிங்க் 3/5


Thanks அனிச்சம் மின் இதழ். 1/4/2026





Tuesday, March 31, 2026

YOUNG SHERLOCK (2026) -ஆங்கிலம்/தமிழ்-வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் @அமேசான் பிரைம்

                  


     YOUNG SHERLOCK (2026) -ஆங்கிலம்/தமிழ்-வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் @அமேசான் பிரைம் 


       இது ஒரு பிரிட்டிஸ் வெப் சீரிஸ். மொத்தம் 8 எபிசோடுகள்,ஒவ்வொரு எபிசோடும் 43 நிமிடங்கள் டூ 55 நிமிடங்கள். ஆக மொத்தம் ஆறே கால் மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது.மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் ஆக வந்திருக்கிறது.


ஆர்தர் கனான் டோலே எழுதிய யங்க் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்க்கு நாவலின் டைட்டிலே வைக்கப்பட்டது.


ஸ்பாய்லர்  அலெர்ட்

1870 ஆம் ஆண்டு நடக்கும் கதை.


நாயகன் 19 வயது நிரம்பிய இளைஞன்.பணத்தேவைக்காக இல்லாமல் ஒரு சாகசத்துக்காக,சவாலுக்காக ,திரில்லிங்க் அனுபவத்துக்காக பிக் பாக்கெட் அடித்து மாட்டிக்கொள்கிறார்.கோர்ட்டில் ஜட்ஜையே எதிர்த்துப்பேசுகிறார்.இதனால் கோபம் ஆன ஜட்ஜ் பிக் பாக்கெட் குற்றத்துக்காக 2 மாதங்கள் ,எதிர்த்துப்பேசியதற்கு தண்டனையாய் 4 மாதங்கள் ஆக மொத்தம் 6 மாதங்கள் சிறை தண்டனை என தீர்ப்புக்கொடுக்கிறார்.


சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த நாயகனை நாயகனின்  அண்ணன் அழைத்து வந்து ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் புரொபசர்களுக்கு உதவியாளராக சேர்த்து விடுகிறார்.


அங்கே நிகழும் ஒரு வெடி குண்டு விபத்து சம்பவம்,ஒரு புரொபசர் கொலை,ஒரு திருட்டு சம்பவம்  ஆகிய 3 வழக்குகளில் நாயகன் கைது செய்யப்படுகிறார்.

சிறையில் இருந்து தப்பி வந்த நாயகன் தான் நிரபராதி என்பதை நிரூபித்து உலகிற்குக்குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதுதான் மொத்தக்கதை.

நாயகன் ஆக ஹீரோ பியன்னெஸ் டிபின் பிரமாதமாக,இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.இவர் ஒவ்வொரு முறை துப்பு கண்டு பிடிக்கும் லாவகம் அருமை.

நாயகனின் நண்பன் ஆக டோனல் பின் நையாண்டித்தனமான காமெடி செய்வதில் கை தட்டல் பெறுகிறார்.மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதாவின் நாவல்களில் வரும் வசந்த்  கேரக்டரை நினைவுபடுத்துகிறார்.

நாயகனின் அண்ணன் ஆக மேக்ஸ் அயன்ஸ் பொறுப்பாக நடித்திருக்கிறார்.ஒவ்வொரு முறை நாயகன் சிக்கலில் மாட்டும்போதெல்லாம் அவருக்குப்பக்க பலமாக இருந்து உயர் அதிகாரிகளிடம் வாதிடுவது அருமை.

நாயகனின் அம்மாவாக நடாசா மெக்கலின் தரமான நடிப்பு.


சைனீஷ் இளவரசியாக வில்லித்தனம் காட்டும் ஜின் செங்க் ஆக்சன் சீக்வன்சில்  தூள் பரத்துகிறார்.மார்ஷியல் ஆர்ட்ஸ் நிஜமாகக்கற்ற ஒருவரால் தான் இப்படிப்பட்ட சாகசங்களை செய்ய முடியும்.


மற்ற அனைத்து நடிக,நடிகையரின் பங்களிப்பும் கன கச்சிதம்.


ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்.


இயக்கி இருப்பவர் கை ரிக்சி.


சபாஷ்  டைரக்டர்

1 நாயகனின் தங்கை சிறுவயதில் இறந்ததாகவும்,அதற்கு நாயகன் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்படுவதும் அந்த மர்மங்கள் விலகுவதும் ஒரு மர்ம நாவல் படித்த திருப்தி

2 சைனீஷ் இளவரசி ஏன் வில்லியாக செயல்படுகிறார்?நாயகனை எதனால் மாட்டி விடுகிறார் என்பதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை.

3 ஆரம்பத்தில் 3 கேஸ்கள் என்று காட்டிவிட்டு மொத்தத்தில் ஒவ்வொன்றாகப்பல கேஸ்களை டீல் செய்வது அருமை.

4  நாயகன்,நாயகனின் நண்பன்,நாயகனின் அண்ணன் இந்த மூன்று கேரக்டர்களின் கேரக்டர் டிசைன்,நடிப்பு அனைத்தும் அருமை.

5  இது ஒரு பீரியாடிக் ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி என்பதால் ஆர்ட் டைரக்சன்,ஆடை வடிவமைப்பு,புரொடக்சன் டிசைன் எல்லாம் பிரம்மாண்டம்

6 ஷெர்லாக் ஹோம்சின் இளமைப்பருவம் எப்படி இருந்தது என்பது நாம் இதுவரை கேள்விப்படாதது.அதனால் காட்சிகளில் ரொம்பவே சுவராஸ்யம்.

7:இன்வெஸ்டிகேசன் போர்சன்ஸ்,ட்விஸ்ட்,காமெடி என ஜனரஞசக அம்சங்களைக்கலந்து கட்டித்தந்த விதம் பிரமாதம்.


  ரசித்த  வசனங்கள் 


1 மனுசன் செய்யும் பெரிய தப்பே எதிரி வெளில இருக்கான்,உள்ளே இல்லை என்று நம்புவதே.

2 உன் எதிரியைப்பற்றித்தெரிய வேண்டும் எனில் நீயே உன் எதிரி ஆக மாறு

3. எதிரியைக்குழப்புவதில் தான் நம் திறமை இருக்கிறது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 மெயின் கதை என்ன?என்பதை நாம் ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டுமோ?என்று நினைக்கும் அளவு திரைக்கதையில் ஏகப்பட்ட லேயர்கள்,மானாவாரியான சம்பவங்கள் குழப்பி அடிக்கின்றன.

2  பரபரப்பு , வேகம்,விறுவிறுப்பு குறைவு.கொஞ்சம் மெதுவாகத்தான் காட்சிகள் நகர்கின்றன.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ ஒரு இதழ் முத்தக்காட்சி உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர். விரும்பிகளுக்கு  ஒரு வரப்பிரசாதம்.ஆனால் பொறுமை தேவை.முதல் 2 எபிசோடுகள் மெதுவாகத்தான் நகரும்.கடைசி எபிசோடில் பல திருப்பங்கள் உண்டு.ரேட்டிங்க் 3/5


Young Sherlock
GenreMystery
Created byMatthew Parkhill
Inspired byYoung Sherlock Holmes
by Andrew Lane
Sherlock Holmes canon
by Arthur Conan Doyle
Developed by
Starring
Opening theme"Days Are Forgotten" by Kasabian
Country of originUnited Kingdom
Original languageEnglish
No. of series1
No. of episodes8
Production
Executive producers
  • Guy Ritchie
  • Ivan Atkinson
  • Simon Kelton
  • Dhana Rivera Gilbert
  • Marc Resteghini
  • Simon Maxwell
  • Harriet Creelman
  • Colin Wilson
  • Matthew Parkhill
ProducerMax Keene
Running time43–55 minutes
Production companies
Original release
NetworkAmazon Prime Video
Release4 March 2026

Sunday, March 29, 2026

VLADIMIR (2026) - ஆங்கிலம்/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்

             

      VLADIMIR (2026) - ஆங்கிலம்/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்


         5/3/2026 முதல் நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி இருக்கும் ரொமாண்டிக் காமெடி டிராமா இது.மொத்தம் எட்டு எபிசோடுகள்.ஒவ்வொரு  எபிசோடும்  30 நிமிடங்கள், ஆக மொத்தம் 4 மணி நேரம் ஒதுக்கினால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.


பெண் எழுத்தாளர் ஜூலியா மே ஜோனாஸ் எழுதிய வ்ளாடிமிர் என்ற நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு அதே டைட்டிலில் வெளியாகி இருக்கும் அமெரிக்கன் வெப் சீரிஸ் இது.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு எழுத்தாளர்.சில நாவல்களை எழுதி இருக்கிறார்.40 வயது ஆகிறது.இவர் ஒரு காலேஜில் புரொபசராகப்பணி ஆற்றுகிறார்.இவரது கணவர் இதே காலேஜில் புரொபசராகப்பணியாற்றுகிறார்.இந்தத்தம்பதிக்கு 24 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.இவளுக்கும் திருமணம் ஆகி விட்டது.


நாயகியின் கணவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.காலேஜ் மாணவிகளைத்தவறாக உபயோகித்துக்கொண்டார் என சில மாணவிகள் புகார் தொடுக்கிறார்கள்.அந்தக்கேஸ் விசாரணைக்கு வருகிறது.


நாயகி தன் கணவரைக்கண்டிக்காமல் ,அவருக்கு ஆதரவாக செயல்பட்டதால் நாயகியைப்பணி நீக்கம் செய்யுமாறும் கோரிக்கை. விடப்படுகிறது.

நாயகியின்  கணவர் இன்னமும் சில மாதங்களில் ரிட்டயர்ட் ஆக இருக்கிறார்.இந்த வழக்கில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப்பென்சன் கிடைக்காது.

இதனால் நாயகியிடம் கணவர் தன் கேசுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்குமாறும் ,தனக்கு ஆதரவாகப்பேசுமாறும் வேண்டுகோள் விடுக்கிறார்.


இந்த சமயத்தில் நாயகியின் காலேஜில் புதிய இளம் வயது புரொபசர் பணியில் சேர்கிறார்..அவர் தான் கதையின் நாயகன்.நாயகிக்கு அவர் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படுகிறது.


நாயகனுக்குத் திருமணம் ஆகி மனைவி,ஒரு கைக்குழந்தை  என இனிமையான குடும்பம் தான்.

நாயகியின் கணவர் மீது இருக்கும் வழக்கு என்ன ஆனது? நாயகியின் மகளது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பஙகளுக்குத்தீர்வு கிடைத்ததா?நாயகி நாயகன் மீது கொண்ட  ஈர்ப்பு என்ன ஆனது?

இந்த மூன்று கேள்விகளுக்குமான விடை தான் இந்த வெப் சீரிசின் மொத்தக்கதையுமே!


ரொம்ப சீரியசாகத்தோன்றும் இந்தக்கதையைக்காமெடி டிராமாவாகப்படைத்திருப்பதில் இருக்கிறது இயக்குநரின் வெற்றி.



நாயகி ஆக ரேச்சல் ஹென்னா கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இவர் 5 விருதுகளை வென்றவர்.நம்ம ஊர் ஆண்ட் ரியா போல் முகத்தோற்றம் கொண்டு இருப்பதால் நம்மால் எளிதில் கனெக்ட் ஆகிக்கொள்ள முடிகிறது.


நாயகன் ஆக டைட்டில் ரோல் ஆன வ்ளாடிமிர் ஆக வரும் லியோ வூட்டால் டைட்டானிக் நாயகன் லியோ டி காப்ரியோவை நினைவுபடுத்துகிறார்.ஆனால் இவருக்கு நாயகியை விடக்காட்சிகள் குறைவுதான்.

நாயகனின் மனைவி ஆக ஜெசிக்கா ஹென்விக்  சிறிது நேரமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார்.

நாயகியின் மகள் ஆக எல்லன் ராபர்ட்சன் பாய்ஸ் கட்டிஙகில் ஆண் பிள்ளை போல் வருகிறார்.

நாயகியின். கணவர் ஆக ஜான் ஸ்லாட்டரி  கெத்தாக வருகிறார்.ஏகப்பட்ட தப்புக்கள் செய்தும் குற்ற உணர்வே இல்லாத கல்லுளி மங்கனாக இவர் நடிப்பு அருமை.தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பாரீன் வில்லன் கெட்டப் இவருக்கு.

இந்த முக்கியமான 5 கேரக்டர்கள் தவிர மற்ற அனைத்து சின்ன சின்ன கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.


டிம் பிலிப்சின் பின்னணி இசை படத்தின் ஜீவநாடியாக அமைந்திருக்கிறது.

டிம் ஆன்,பிராங்காயிஸ் ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள்.நாயகிக்கான க்ளோசப் ஷாட்கள் கவிதை.

நான்கு பேர் இணைந்து எடிட்டிங் செய்து இருக்கிறார்கள்.ரன்னிங் டைம் 4 மணி நேரம்


சபாஷ்  டைரக்டர்

1 ஒவ்வொரு சீன் முடியும்போதும் நாயகி ஆடியன்சைப்பார்த்து ஒரு கமெண்ட் அடிப்பது புதுமையான பாணி.அந்த ஐடியா,தாட் பிராசஸ் அருமை.

2 கதையின் முக்கியமான கேரக்டர்கள் 5 பேர்தான் என்பதால் கதையைக்குழப்பம் இல்லாமல் காட்ட  முடிகிறது

3 கதையில் வரும் முக்கியமான கேரக்டர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள் என்பதால் பிரபல ரைட்டர்சின் கோட்பாடுகள்,கொள்கைகளை மேற்கோள் காட்டும் விதம் அருமை.

4  ஏற்கனவே தமிழில் வெளிவந்த உயிர்,கலாபக்காதலன்,வாலி ஆகிய படங்களில் வரும் சம்பவங்கள் இதிலும் வருவதால் நம்மால் ஈசியாகப்படத்துடன் கனெக்ட் ஆக முடிகிறது


  ரசித்த  வசனங்கள் 

1 சின்ன வயசிலேயே பெரிய வெற்றி கிடைத்து விட்டால்  வாழ்க்கையில் திரில் இருக்காது.

2 ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கனும்னா இந்த உலகத்திலேயே நீ தான் பெரிய புத்திசாலி என உன்னை நீயே நம்ப வைக்கனும்

3. மனிதர்கள் பொதுவா பயந்தாங்கொள்ளிகள்.

4  கல்யாணம்,டைவர்ஸ் இந்த இரண்டுமே ஒரு முள் தான்.உங்களுக்கான முள்ளைத்தேர்ந்தெடுங்க.

5. எத்தனை எழுத்தாளர்களுக்கு அவர்களின் ஹாபிஸ்க்கு நேரம் இருந்திருக்கு?

6 எப்பவும் அதிகமா ஆசை வெச்சாப்பிரச்சனை தான்


7 நிரந்தரப்பிரிவு என்பதை 30 வயது ஆட்கள் தான் நம்புவார்கள்.

8 தன் மீது ஒரு அட்டென்சன் விழுவதை உலகில் உள்ள எல்லோரும் விரும்புவார்கள்.

9 நம் கைப்பட உருவாக்கிய பரிசை நமக்குப்பிடித்தவருக்குத்தருவதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கு.

10 ஆண்கள் தன் பின்னந்தலையில் இரு கைகளைக்கோர்த்து நிற்பது ஆண் மயில் தோகை விரித்து ஆடும் அழகுக்கு நிகரானது.

11 ட்ராஜடி என்பதன் அடிப்படையே கஷ்டமான ஒண்ணை  எடுத்துக்கறதுதான்.

12 இளமைல அழகோட மதிப்பு நமக்குத்தெரியாது.

13 தடை செய்யப்பட்ட  பொருள் கையில் சிக்கினா ஒன்றையாவது. எடுத்து வெச்சுக்கனும்.


14 அவன் கிட்டே எனக்குப்பிடித்ததே ஒண்டர்புல் ஐ காண்டாக்ட் தான்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகிக்குத்தன் கணவன் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை.இருவரும் பிரிய இருக்கிறார்கள்.ஆனால் கணவன்  செய்த குற்றத்துக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்பதற்கு  வலுவான காரணஙகள் இல்லை.

2 குற்றம்  செய்தது கணவன்.ஆனால் மனைவியான நாயகியைப்பணி நீக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

3 க்ளைமாக்சில் நாயகியின் கணவன் மகளிடம் நீ பிரமாதமாக வாதிட்டாய்! எனப்பாராட்டுகிறான்.ஆனால் அந்த ஆர்க்யூமண்ட்டை  விஷூவலாகக்காட்டவில்லை.முக்கியமான போர்சன் அது.

4. என் வாதம் முடிந்தது.தீர்ப்பு வரும்போது நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மகள் கூறுவதும் ஏற்புடையதாய் இல்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பிரமாதமான கதை என்று சொல்லி விட முடியாது.நமக்குப்பழக்கமான கதை தான்.ஆனால் ட்ரீட்மெண்ட் நன்றாக உள்ளது. ரேட்டிங்க் 2.5 / 5


Vladimir
GenreComedy drama
Created byJulia May Jonas
Based onVladimir
by Julia May Jonas
Starring
Music byTim Phillips
Country of originUnited States
Original languageEnglish
No. of episodes8
Production
Executive producers
ProducerChris Pavoni
Cinematography
  • Tim Orr
  • Francois Dagenais
Editors
  • John Grenham
  • Tim Streeto
  • Ken Eluto
  • Meg Reticker
Running time27–32 minutes
Production companies
Original release
NetworkNetflix
ReleaseMarch 5, 2026

Friday, March 27, 2026

ஹேப்பி ராஜ் -2026) ғதமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )

 


தொடர்ந்து 3 வெற்றிப் படங்களை இயக்கி நாயகனாக நடித்து மூன்றையும்  100 கோடி வசூல் கிளப்பில் சேர்த்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர் ஆகப்பணியாற்றிய மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கிய முதல் படம் இது.




கடந்த வாரம் வெள்ளி அன்று யூத் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியக்காரணமாக இருந்த  இசையை அமைத்த ஜி வி பிரகாஷ் இந்த வாரம் அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியனுடன் கை கோர்த்து ஒரு ஜாலி ரொமாண்டிக் டிராமாவைத்தர முயன்றிருக்கிறார்.அவர் முயற்சி வெற்றி பெற்றதா?என்பதைப்பார்ப்போம்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகனின் அப்பா உருவத்தில் ,உயரத்தில் ஒரு மாற்றுக்குறைவாக இருப்பதால் ஊர் மக்கள் அவரை குதிரை முட்டை என கிண்டல் செய்து உருவகேலியில் ஈடுபடுகின்றனர்.

அதனால் நாயகன் குழந்தையாகப்பிறந்த போதே அவருக்கும் சின்னக்குதிரை முட்டை என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது.

நாயகன் வளர்ந்து பெரியவன் ஆன பின் கன்னிப்பெண்கள்,இளம்பெண்கள் அனைவரும் அவரை உருவ கேலி செய்து வருவதால் நாயகனுக்கு எந்தக்காதலும் செட் ஆகவில்லை.


நாயகனின் லட்சியமே ஒரு பெண்ணைக்காதலித்து மணக்க வேண்டும் என்பதே.தன் உயர்ந்த லட்சியம் நிறைவேற உள்ளூரில் வழி இல்லை என்பதை  உணர்ந்த நாயகன் வெளியூர் போய் வாழ நினைக்கிறான்.

பெங்களூரில் பணி கிடைக்கிறது.அங்கே தன் சக ஊழியை ஆன நாயகியை சந்திக்கிறான்.

இருவருக்கும் காதல் மலர்கிறது.இரு உள்ளங்களுக்குள் மலர்ந்த காதல் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் ஆக மலர நாயகன் முயற்சி எடுக்கிறான்.

நாயகியின் அப்பா பெரும் செல்வந்தர். கோடீஸ்வரர்.பாரின் ரிட்டர்ன். வேற.அவருக்கு நாயகனின் அப்பாவின் கிராமியத்தனம்,எதார்த்தம் பிடிக்கவில்லை.கிண்டல் செய்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் நாயகனின் அப்பா,நாயகியின் அப்பா இருவருக்குமான ஈகோ கிளாஸ் மோதலாக வெடிக்கிறது.

இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக ஜி வி பிரகாஷ் முதல் பாதி முழுக்க இவர்  ராஜ்ஜியம் தான்.ஜாலி,கேலி,காதல் கலாட்டாதான்.உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஆனால் நாயகனின் கேரக்டர் பெயரே ஹேப்பி ராஜ்.எப்போதும் ஹேப்பி ஆக இருக்கும் நபர் எதற்குப்படம் முழுக்க தாடியோடு சுற்றுகிறாரோ?தாடி என்பது சோம்பேறித்தனத்தின் அடையாளம்.காதல் தோல்வி கண்டவரின் முகமூடி.

இந்தக்கேரக்டருக்கு க்ளீன் ஷேவ் கெட்டப் தான் சரி.மற்றபடி நடிப்பில் குறை இல்லை.

நாயகி ஆக லவ்வர் படத்தின் நாயகி ஸ்ரீ கவுரிப்ரியா  கச்சிதமான நடிப்பு.அழகு முகம்.ஆனால் இவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு தான்.

நாயகனின் அப்பாவாக ஜார்ஜ் மரியான் கலக்கி இருக்கிறார்.பின் பாதியில் இவர் ராஜ்ஜியம் தான்.பிளாஸ்பேக் காட்சியில்  உருக வைக்கிறார்.

நாயகியின் அப்பாவாக காதல் தேசம் புகழ் அப்பாஸ் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார்.தர்மதுரை ரஜினி வயதான கெட்டப்பில் வருகிறார்.நிஜ வாழ்வில் கே பாக்யராஜ் தற்போதைய தோற்றத்தை நினைவுபடுத்துகிறார்.

இயற்கையாகவே அப்பாஸ் முகத்தில் பணக்காரக்களை தாண்டவம் ஆடுவதால் அவரது வில்லத்தனம் எடுபடுகிறது.

கீதா கைலாசம்  நடிப்பும் நிறைவு.
கொஞ்ச நேரமே வந்தாலும் பிரார்த்தனா நடிப்பு ஓக்கே ரகம்

அதிர்ச்சி அருணின் காமெடி ஒன் லைனர்கள் அருமை.முயற்சித்தால் சந்தானம் போல்  வரலாம்.

பத்திரிக்கைகளில் பிரசுரமான ஜோக்ஸ்களை மனப்பாடம் செய்து தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் போல் அபாதமாகத்தொகுத்து வழங்கும் ஆற்றல் பெற்ற மதுரை முத்து  இதில் காமெடியன் ஆக வருகிறார்.பரவாயில்லை ரகம்.

ஜஸ்டின் பிரபாகரன் தான் இசை.இரு பாடல்கள் தேறுகின்றன.பின்னணி இசை ஓக்கே ரகம்.


ஒளிப்பதிவு மதன் கிறிஸ்டோபர்.வில்லேஜ் சீனரிஸ்,சிட்டி லொக்கேஷன்ஸ் இரண்டிலும் முத்திரை பதிக்கிறார்.


பிரதீப் ரங்கநாதனிடம் பயிற்சி பெற்றவர் என்பதால் இயக்குநருக்கு தியேட்டரில் அப்ளாஸ் வாங்கும்படி காட்சிகளை வடிவமைப்பது சுலபம் ஆகி விட்டது.அவரது பாணியும் ஆங்காங்கே தெரிகிறது.

சபாஷ்  டைரக்டர்

1 கைதி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்திய ஜார்ஜ் மரியான் இந்தப்படத்தில் நாயகனின் அப்பாவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மனதுக்கு நெருக்குமாய்  எமோஷனல் கனெக்ட்டைக்கொடுக்கிறது.சிறந்த கதாப்பாத்திர வடிவமைப்பு.அதற்கு உயிர் கொடுத்த விதம் அருமை.


2  முதல் பாதியில் ஜாலி ,கலாட்டா என செல்லும் திரைக்கதை பின் பாதியில் எமோஷனல் டிராமா ஆகிறது.நன்றாக பேலன்ஸ் செய்திருக்கிறார்கள்.


3 அப்பா-மகன் பாண்டிங் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.


4 ஆடின்னே இருப்பேன்  பாடல் நல்ல ஹிட்.அதற்கான கொரியோகிராபியும் அருமை.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பா தான் முதல் ஹீரோ.ஆனால் இதில் நாயகன் அப்பாவை அவரது உருவத்தை வைத்து மதிப்பிடுவது ஏற்புடையதாய் இல்லை

2. எந்தப்பெண்ணும் ஆளைப்பார்த்துத்தான் எடை போடுவாள்.ஆளின் அப்பாவை வைத்து கிண்டல் செய்வது நடைமுறையில் இல்லை.மிக செயற்கையான காட்சி அது.

3  முதல் பாதி திரைக்கதை தடுமாறுகிறது.பின் பாதி திரைக்கதை போல் சுவராஸ்யம் இல்லைம்


4 டபுள் மீனிங் டயலாக்ஸ் தவிர்த்திருக்கலாம்

5 மாடர்ன் பெண் என்றால் தம் அடிக்க வேண்டுமா?எதற்கு பெண் தம் அடிக்கும் காட்சி?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல் பாதி சுமார் ,பின் பாதி அருமை .சராசரி காதல் கதை.ரேட்டிங்க் 2.5 /5

Wednesday, March 25, 2026

1000 கோடியை எட்டுமா ரஜினி+கமல் காம்போ நெல்சன் படம்?


1000 கோடியை எட்டுமா ரஜினி+கமல் காம்போ நெல்சன் படம்?

 

தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் படம் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த  சிவாஜி படம் தான்.அதற்குப்பின் ஒவ்வொரு முன்னணி ஹீரோவும் தன் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார்கள்.

 

கமல் படங்களில் மரோசரித்ரா (தெலுங்கு)1978,ஏக் துஜே கேலியே(ஹிந்தி)1981 ஆகிய இரு படங்களும் 500 நாட்கள் ஓடி வசூல் செய்திருந்தாலும் கமலின் சகலகலா வல்லவன் (1982) தான் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம்.அந்தக்காலத்திலேயே 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

தசாவதாரம்(2008) பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு  இடையே வெளியாகி 200 கோடி  வசூல் செய்தது.விஸ்வரூபம்(2013) மிகுந்த போராட்டஙகளுக்குப்பின் வெளியாகி 220 கோடி வசூல் செய்தது.

2022 ம் ஆண்டு வெளிவந்த கமலின்  விக்ரம் படம் அதிரி புதிரி ஹிட் ஆகி 500 கோடி வசூலைத்தொட்ட முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையைப்பெற்றது.

இதற்குப்பின் கமலின் மார்க்கெட் லெவல் வேறு எங்கோ போனது.

அதுவரை ரஜினி படங்கள் அளவுக்குக்கமல் படங்கள் வசூலிப்பதில்லை என்ற நிலை தான் இருந்தது.

கமல் படங்கள் செண்ட்டர் ஆடியன்சை அதிக அளவு கவரும்.சி செண்ட்டர் ஆடியன்சிடம் அதிக  ரீச் இருக்காது.

ஆனால் ரஜினி படங்கள் பி ,சி செண்ட்டர் ரசிகர்களைப்பெரிதும் கவர்ந்து வசூல் மழை பெய்யும் அளவுக்கு ஓடியது.

ரஜினியின் ஒரு தோல்விப்பட வசூல் கமலின் ஒரு வெற்றிப்பட வசூலுக்கு இணை ஆகும்.

 

2024ல் வெளியான ரஜினி படம் வேட்டையன்.இது சுமாராகத்தான் ஓடியது.ஆனால் அதன் வசூல் 250 கோடி.

 

அதே போல பேட்ட(2019) ,தர்பார்(2020) இரண்டும் சுமார் ரகப்படஙகள் தான்.ஆனால் இரண்டுமே 250 கோடி வசூல்.

 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளி வந்த எந்திரன்  (2010) 320 கோடி ரூபாய் வசூல்.

எந்திரன் பாகம் 2 ஆக வெளிவந்த  2. (2018)

800 கோடி வசூலித்து இதுவரை வந்த தமிழ் சினிமா வசூலில் நெ 1 இடத்தில் இன்னமும் இருக்கிறது

ரஜினி நடிப்பில் வெளி வந்த கபாலி (2016) படம்  ரூ 305 கோடி வசூலித்து இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சி ஒரு டிக்கெட் ரூ 1000 என்ற அளவில்  விற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைபெறுகிறது.

 

விக்ரம் புகழ் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கூலி(2025) படம் ரூ 675 கோடி வசூல் என்றாலும்படத்தின் தரத்தில் ரஜினிக்குத்திருப்தி இல்லை.

 

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர்(2023) படம் ரூ 650 கோடி வசூலித்தது.

 

அதே காம்போ வில் ஜெயிலர் பாகம் 2 விரைவில் வெளி வர இருக்கிறது.இப்போது 500 கோடி ரூபாய் வசூலித்த விக்ரம் படத்தின் நாயகன் கமல் + 800 கோடி ரூபாய் வசூல் செய்த 2. பட நாயகன் ரஜினி  இருவரும் இணைந்து நடிக்கும் படம் 1000 கோடி வசூலைத்தாண்டுமா?என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

 

நெல்சன் பாணி காமெடி ஜர்னர் தான்.பொதுவாகக்காமெடிப்படஙகள் பெரிய வசூலைக்கொடுக்காது.

உள்ளத்தை அள்ளித்தா மெகாஹிட் காமெடிப்படம் தான்.அதன் வசூல் பிரமாதம் எல்லாம் இல்லை.அதனால் தான் சுந்தர் சி இயக்கத்தில்  நடிக்க  ரஜினி படம் ட்ராப்  ஆனபோது ரஜினி ரசிகர்கள் கவலைப்படவில்லை.

ரஜினி காமெடிஹீரோ  ரோலில் நடித்த தம்பிக்கு எந்த ஊரு? குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,வேலைக்காரன் ,ராஜாதி ராஜா  போன்ற படங்கள் எல்லாம் 100 நாட்கள்


ஓடினாலும் பிரம்மாண்டமான வசூலை வாரிக்குவித்த படஙகள் ரஜினியின் ஆக்சன் படஙகள் தான்.

 

அதே நிலை தான் கமலுக்கும்.கமல் நடித்த கிளாசிக்கான காமெடிப்படஙகள் ஆன மைக்கேல் மதன காமராஜன்,பஞ்ச தந்திரம்,வசூல் ராஜா எம் பி  பி எஸ் , பத்திரிக்கைகளின் பாராட்டையும் ,ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பெற்றாலும்

கமலின் இந்தியன் படம் போல் வசூலை வாரிக்குவிக்கவில்லை.

இதிலிருந்து நமக்குத்தெரிய வருவது நெல்சன் பாணி காமெடிப்படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் மூவி ஆக இருந்தால் மட்டுமே இது வசூல் ரீதியான சாதனை படைக்கும் படமாக இருக்கும்.

நெல்சன் வெளியிட்ட பிரமோ வீடியோவில் அது ஒரு ஆக்சன் மூவி மாதிரி தான் தெரிகிறது.

கமல் தான் ஹீரோ ,ரஜினி வில்லன் என பலரும் பேசி வருகிறார்கள்.சந்திரமுகி படத்தில்  படம் முழுக்க வந்த ஹீரோ ரஜினியை விட க்ளைமாக்சில்  10 நிமிடஙகளே வந்த வில்லன் ரஜினி அப்ளாஸ். அள்ளினார். லக லக லக என்ற மாடுலேசன் பஞ்ச் டயலாக் பெரிதும் பேசப்பட்டது

எந்திரன்  படத்தில் ஹீரோவாக வரும்  புரொபசர் கேரக்டரை விட  வில்லன் ஆக வந்த சிட்டி கேரக்டர் தான் பெரிதும் கவர்ந்தது. மே மே என்று சிட்டி ஆடு போல் கத்தி வில்லத்தனம் காட்டிய போது அரஙகம் ஆர்ப்பரித்தது.

எனவே நெல்சன் படத்தில் கமல் ,ரஜினி இருவருமே இரு ஹீரோக்கள் என்று பேலன்ஸ் செய்வதை விட கமல் ஹீரோ ,வில்லன் ரஜினி என்று அமைந்தால் ரசிகர்களுக்குக்கொண்டாட்டமாக இருக்கும்.

 

இதற்கு முன் கமல் + ரஜினி காம்போவில் வந்த படங்களில் படம் முழுக்க கமல் நடித்திருந்தாலும் சில சீன்களில் வரும் ரஜினி கை தட்டல்களை அள்ளிக்கொண்டது வரலாறு.

ரஜினியின் வேகமும் ,ஸ்டைலும்  அனைவரும் அறிந்ததே.

ரஜினி யின் பிறந்த நாள் டிசம்பர் 12.கமல் பிறந்த நாள் நவம்பர் 7

ரஜினி கமல் காம்போ படம் பற்றிய தகவல்கள் ,ப்ரமோ ,டீசர்,ட்ரெய்லர் எது வந்தாலும் 12.07 என்ற டைமிலோ 7.12 என்ற டைமிலோ இருக்கும் என நெல்சன் முடிவு எடுத்து இருக்கிறார்.ஏன் எனில் இருவரின் பிறந்த நாளும் அந்த டைம் பிரேமில் கவர் ஆகி விடும்.

 

எந்த அளவுக்கு இருவரையும் பேலன்ஸ் செய்து காட்சிகள் அமைக்க வேண்டும் என்ற அரிய பணியை நெல்சன் உணர்ந்துள்ளதாகவே தெருகிறது.

பிரமோவில் கமல் ரஜினி இருவரின் ஸ்க்ரீன் பிரசன்சும் அருமை.

திரை ஆளுமைகள் வசூலிலும் 1000 கோடியை அடித்து விடுவார்கள் என்றே நான் கணிக்கிறேன்