Thursday, December 04, 2025

Sisu: Road to Revenge ( 2025 ) சினிமா விமர்சனம்(ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் ட்ராமா)

           

                 

இந்தியாவில் மட்டுமல்ல,ஹாலிவுட்டிலும் முதல் பாகம் ஹிட் ஆகி விட்டால் சின்ராசுவைக்கையில் பிடிக்க முடியாது.இரண்டாம் பாகம் எடுத்தே தீர்வார்கள்.12 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 8 மில்லியன் டாலர் மட்டுமே வசூல் செய்த படம்.ஆனாலும் ஆக்சன் ப்ரியர்கள் படத்தைக்கொண்டாடுகிறார்கள்.


சத்ரியனுக்கு சாவே இல்லைடா என்று கேப்டன் பஞ்ச் டயலாக் பேசியது போல சிசு என்றால்  அழிக்கவே முடியாதவன் என்ற பில்டப் டயலாக்குடன் தொடங்கும் படம் பின் பாதியில் ஆடியன்ஸ் காதில் 2 முழம் கனகாம்பரிப்பூ. சாரி கனகாம்பரப்பூவை சுற்றுகிறது.

2022ல் வந்த சிசு படத்தின் 2ம் பாகம் இது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  முதல் பாகத்தில் போட்ட சண்டை எல்லாம் முடிந்தபின்  சோவியத் யூனியனில் உள்ள தன் வீட்டுக்குப்போகிறார்.அங்கே அவரோட சம்சாரம் ,வாரிசுகள் யாரும் இல்லை.வில்லன் கொன்றிருக்கலாம்.


அது ஒரு மர வீடு.அதனாஅதனால் அதை பார்ட் பார்ட் ஆகப்பிரித்து ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு நாயகன் கிளம்புகிறான்.பின்லாந்து போய் அமைதியான வாழ்வு வாழலாம் என்பது நாயகனின் எண்ணம்.


ஆனால் வில்லன் அதை விரும்பவில்லை.தடுக்கிறான்.டூ வீலர் ,போர் வீலர் ல எல்லாம் துரத்துனது போதாதுன்னு விமானம் ,ராக்கெட் ,ஜெட் எல்லாம் வெச்சுத்துரத்தறான்.நாயகன்  செங்கோட்டையன் மாதிரி கடைசி வரை தாக்குப்பிடித்தாரா? என்பது மீதிக்கதை.


சபாஷ்  டைரக்டர்


1 ஒளிப்பதிவு பிரமாதம்.சி ஜி ஒர்க் கும் அருமை.பின்னணி இசை தெறிக்கிறது


2 மலையூர் மம்பட்டியான் படத்தைப்பார்த்துக்காப்பி அடித்தாரோ என எண்ண வைத்தாலும் நாயகனைக்கட்டிப்போட்டிருக்கும் சீன் பதை பதைக்க வைக்கிறது


3 ரயிலில் வரும் ஆக்சன் சீக்வன்ஸ்


  ரசித்த  வசனங்கள் 


படத்தில் பேச்சு இல்லை. வீச்சு தான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகன் வாயிலிருந்து துப்புவது உடைந்த பல்லா? எனப்பார்த்தால் அது துப்பாக்கிக்குண்டு.அடஙகப்பா சாமி.ரீல் அந்து போச்சுடா

2 குற்றுயிரும் குலை உயிருமாய்க்கிடக்கும் நாயகன் அசையவே முடியாது.ஆனால் வில்லனைப்பழி வாங்குவதெல்லாம். ஓவர்


3 ஓவர் வயலென்ஸ்.க்ளைமாக்சில் நாயகன் மேல் 2 பக்கெட் ரத்தத்தை (சாயத்தை) ஊற்றி விட்டு ஷூட்டிங்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ வயலன்ஸ் ஓவர்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆக்சன் பிரியர்கள் பார்க்கலாம்.எனக்குப்பிடிக்கலை.ரேட்டிங்க் 2/5


Sisu: Road to Revenge
Finnish theatrical release poster
Directed byJalmari Helander
Written byJalmari Helander
Produced by
  • Petri Jokiranta
  • Mike Goodridge
Starring
CinematographyMika Orasmaa
Edited byJuho Virolainen
Music by
  • Juri Seppä
  • Tuomas Wäinölä
Production
companies
Distributed by
Release dates
  • 21 September 2025 (Fantastic Fest)
  • 22 October 2025 (Finland)
  • 21 November 2025 (United States)
Running time
89 minutes[2]
CountriesFinland
United States
Languages
  • English
  • Finnish
Budget$12.2 million[3]
Box office$8.4 million[4][5]

Wednesday, December 03, 2025

ரிவால்வர் ரீட்டா (2025)-தமிழ் -- சினிமா விமர்சனம்(பிளாக் ஹ்யூமர் காமெடி க்ரைம் ட்ராமா)@நெட் பிளிக்ஸ்

 

             

         2024ல் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படம்.லேட்டாக இப்போது வந்திருக்கிறது.28/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் விரைவில் நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் வெளி வர இருக்கிறது    


ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1 பிளாஸ்பேக் 1


நாயகிக்கு 5 வயது இருக்கும்போது அவரது அப்பா ஒரு பெரிய தாதாவிடம் 30 லட்ச ரூபாய் பணத்தை ஏமாந்து விடுகிறார்.நிலம் வாங்கித்தருவதாக சொல்லி ஏமாற்றப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.நாயகிக்கு ஒரு அக்கா,ஒரு தங்கை ,அம்மா 


சம்பவம் 2

ஒரு தாதா தொழில் போட்டி காரணமாக இன்னொரு தாதாவைப்போட்டுத்தள்ளி விடுகிறான்.உடனே கொலையான தாதாவின் மகன்  அப்பாவின் மரணத்துக்குக்காரணமான தாதாவைப்போட்டுத்தள்ளினால்  5 கோடி பரிசு என அறிவிக்கிறான்.

உடனே ஒரு க்ரூப் அந்த தாதாவுக்கு ஸ்கெட்ச் போடுகிறது.ஒரு கில்மா லேடியின் வீட்டுக்கு தாதாவை வர வைத்து அங்கே தீர்த்துக்கட்ட பிளான்

கதை நடப்பது இப்போது.

தாதா கில்மா லேடியின் வீட்டுக்குப்போவதற்குப்பதிலாக தவறுதலாக நாயகியின் வீட்டுக்கு வந்து விடுகிறான்.

25 வயதான நாயகியைப்பார்த்துத்தவறுதலாக கில்மா லேடி என நினைக்கிறான்.கடுப்பான நாயகி தாதா தலையில் ஒரே போடு.ஆள் அவுட்


நாயகி அண்ட் கோ அந்தப்பிணத்தை அப்புறப்படுத்த என்னென்ன எல்லாம் செய்தார்கள்? அந்தப்பிணத்தைக்கைப்பற்ற யார் யார் எல்லாம் முயற்சித்தார்கள்?இறுதியில் என்ன நடந்தது ? என்பதுதான் மொத்தக்கதையுமே.


நாயகி ஆக கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்திருக்கிறார்.ஆனால் அவரது இளமைத்துடிப்பு மிஸ்சிங்க்.கண்களில் இன்னமும் அதே கவிதை மிச்சம் இருக்கிறது


நாயகியின் அம்மாவாக ராதிகா ஓவர் ஆக்டிஙக் என்றாலும் பெண்கள் ரசிக்கிறார்கள்.சித்தி சீரியல் எபெக்ட்.


கொலை ஆகும் தாதாவாக சூப்பர் சுப்பராயன் கச்சிதம்.அவரது மகன் ஆக வரும் ரெடின் கிங்க்ஸ்லீ ஆங்காஙகே சிரிக்க வைக்கிறார்.

போலீஸ் ஆபீசர் ஆக வரும் ஜான் விஜய் வழக்கம் போல் ஓவர் ஆக்டிஙக்.


சென்றாயன் ,சுனில்  போன்றோர் கொடுத்த பாத்திரத்தைத்திறம்பட ஏற்று நடித்திருக்கிறார்கள்.


சீன் ரோல்டன் இசையில் 3 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை தேவலை ரகம்.ஒளிப்பதிவு தினேஷ் பி கிருஷ்ணன்.நாயகி,அவரது சகோதரிகளை அழகாகக்காட்டி இருக்கிறார்.பிரவீனின் எடிட்டிஙகில் படம்  140 நிமிடஙகள் ஓடுகிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜே கே சந்துரு



சபாஷ்  டைரக்டர்


1. கில்மா லேடியின் வீட்டைக்கண்டுபிடிக்க அட்ரஸ் விசாரிக்கும்போது இது பேமிலி இருக்கும் வீடு என ஒருவர் சொல்ல அந்த ஏரியாவில் ஒவ்வொரு வீட்டையுமே இது பேமிலி ,முகத்தைப்பார்த்தாத்தெரியல? என ரெடிங்க்ஸ்டன் முந்திக்கொண்டு உளறுவது கலக்கல் காமெடி

2 போலீஸ் ஸ்டேசனில் மாட்டிக்கொண்ட 3 ரவுடிகளும் படும் பாடுகள் நல்ல காமெடி

3. சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழல் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற ஒன் லைனில் ஓரளவு சிரிக்க வைக்கும் திரைக்கதை எழுதிய  விதம்


  ரசித்த  வசனங்கள் 

1 ஒரு நல்லவனோட 30 வருச உழைப்பை ஒரு கெட்டவனால ஒரே நாளில் அடிச்சுட முடியுது


2 டாடி,வயாக்ராவோ நயாகராவோ அதை எடுத்துட்டுப்போஙக


டேய்,கீப் கொயட்


நான் கீப்க்குப்பிறந்தவன் தான் ,அதுக்காக...?


3 அம்மா ,அப்பா செத்து 18 வருடங்கள் ஆகுது,இப்போப்போய் அவருக்கு மோட்டிவேஷனல் க்ளாஸ் எடுத்துட்டு இருக்கே?

4 டெட்பாடியை பிரிட்ஜ்ல வெச்சுட்டா அப்புறம் மாவு பாக்கெட்டை நான் எங்கே வைப்பேன்!?


5 பாஸ்,அவன் நம்ம ஆளு,அவனையே போடப்போறோமா?இது நம்பிக்கைத்துரோகம் ஆகாதா?


ஆமா.ஒருத்தர் மேல நம்பிக்கை போன பின் நம்பிக்கைத்துரோகம் ஆகாது

6 முதல்ல உன் பேரைச்சொல்லு

மிஸ்டர் எக்ஸ்னு வெச்சுக்கோ


வெரிகுட்.உன் பேரு மிஸ்டர் எக்சா? 


7 துப்பட்டா போடுங்கள் தோழி,ஒயின் ஷாப்ல சரக்கு வாங்க வரும்போது ஹெல்மெட் போடுங்க தோழி

ஏய்,நானே கடுப்புல இருக்கேன்,மொக்கை போடாதே

8 ஊரே அந்த தாதாவைப்போடக்காத்திருக்கு,அவரை பிகர் போடப்போய்ட்டாரா?

9 பொண்ணுங்க இந்தக்காலத்தில் சமைக்கறாஙகளோ இல்லையோ ரீல்ஸ் போடறாஙக


10 ஏம்மா.இந்த வயசுல நீ மல்லிப்பூ வெச்சா என்ன? அல்லிப்பூ வெச்சா என்ன?

11 நெஞ்சுவலின்னா அப்போலோ ஹாஸ்பிடல் தானே கூட்டிட்டுப்போகனும்,எதுக்கு மெண்ட்டல் ஹாஸ்பிடல் வந்திருக்கோம்?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகியின் வீட்டில் இருக்கும் டானின் டெட் பாடியை வில்லன் அப்போதே போய் எடுத்திருக்கலாம்.கதை அங்கேயே முடிந்திருக்கும்

ஏன் டிலே பண்றான் என்பதற்கு சரியான காரணம் சொல்லவில்லை

2. பல சீட்டிங்க் பேர்வழிகளைத்தன் வாழ்நாளில் பார்த்திருக்கும் போலீஸ் ஆபீசர் ஒரு பெண்ணிடம் அப்படி ஏமாறுவாரா?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லாஜிக் பார்க்க மாட்டேன்.சிரிச்சா சரி என நினைப்பவர்கள் பார்க்கலாம்.விகடன் மார்க் யூகம் 41  குமுதம்  ரேங்க்கிங்க் ஓக்கே .ரேட்டிங்க் 2.5 / 5


Revolver Rita
Theatrical release poster
Directed byJK. Chandru
Written byJK. Chandru
Produced bySudhan Sundaram
Jagadish Palanisamy
StarringKeerthy Suresh
CinematographyDinesh B. Krishnan
Edited byPraveen K. L.
Music bySean Roldan
Production
companies
Passion Studios
The Route
Release date
  • 28 November 2025
Running time
140 minutes[1]
CountryIndia
LanguageTamil

Tuesday, December 02, 2025

ராஜேஷ்குமார்-ன் ரேகை (2025)- தமிழ் -மினி வெப் சீரிஸ் விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் திரில்லர் )@ஜீ5



       


         1990களில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் எழுதிய உலகை விலை கேள் என்னும் நாவலைத்தழுவி இயக்குனர் எம் தினகரன் உருவாக்கி இருக்கும் மினி வெப் சீரிஸ் இது.     மொத்தம் 6 எபிசோடுகள்.23 நிமிடங்கள் ஒரு எபிசோடு.ஆக மொத்தம் இரண்டே கால் மணி நேரத்தில் பார்த்து விடலாம்.ஒரு தமிழ் சினிமா டைம் ட்யூரேசன் தான்   


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் குற்றாலத்தில் இருக்கும் காவல் நிலையத்தில்  சப் இன்ஸ்பெக்டர் ஆகவும் ,நாயகி ஹெட் கான்ஸ்டபிள் ஆகவும் பணி புரிகிறார்கள்.இருவரும் காதலர்கள்.


ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவனை நாயகன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரிவில் மாதம் ரூ 5000 சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்..

ஒரு நாள் அந்த மாணவன் பாத் ரூமில் குளிக்கும்போது மர்ம மரணம் அடைகிறான்.அந்தக்கேசை நாயகன் விசாரிக்கிறான்.

அதே நாளில் இன்னமும் மூன்று பேர் வெவ்வேறு இடஙகளில் விபத்தில் மரணம் அடைகிறார்கள்.நாயகனுக்கு இந்த நான்கு மரணஙகளும் கொலை ஆக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.


நான்கு பேரின் கை ரேகையும் ஒரே மாதிரி இருப்பது இன்னமும் சந்தேகத்தைக்கிளப்புகிறது.


இந்தக்கேஸ் விசாரணை தான் மொத்தத்திரைக்கதையும்.


நாயகன் ஆக பாலஹாசன் நடித்திருக்கிறார்.ஒரு சாயலில் ஆட்டோகிராப் சேரன் போல இருக்கிறார்..பாடியை பிட் ஆக வைத்திருக்கிறார்.ஆக்சன் காட்சிகளில் இன்னமும் வேகம் காட்டி இருக்கலாம்.


நாயகி ஆக பவித் ரா ஜனனி அழகாக வந்து  போகிறார்.கண்கள் ஒரு ஹைக்கூ கவிதை.காதல் படங்களில் இன்னமுமே சோபிப்பார்.

போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர் ஆக வரும் வினோதினியை இதற்கு முன் காமெடியாகவே பார்த்து இதில் சீரியஸ் ரோலில் பார்க்க என்னவோ போல் இருக்கிறது.ஆனால் அவர் நடிப்பு அருமை.


சைடு வில்லி ஆக வரும் அஞ்சலி ராவ் கச்சிதம்.

மற்ற அனைவரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை சிறப்பாகக்கையாண்டு இருக்கிறார்கள்.


ஒளிப்பதிவு மகெர்ந்திரா எம் ஹென்றி.ஓப்பனிங மர்டர் சீனில் அவரது டாப் ஆங்கிள் ஷாட் அருமை.நாயகியை அழகாகக்காட்டி இருக்கிறார்.

இசை ராஜ் பிரதாப்.பின்னணி இசை ஒரு க்ரைம் திரில்லர் படத்துக்கு எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து இசை அமைத்து இருக்கிறார்.


எடிட்டிஙக் துரை.இரண்டே கால் மணி நேரம் டைம் ட்யூரேசன்.


சபாஷ்  டைரக்டர்

1 மெயின் க்ரைம் கதையை விட சைடு ட்ராக் லவ் ஸ்டோரி இண்ட்ரஸ்ட் ஆக எடுத்த விதம்

2 நாயகியை ஹாஸ்பிடலில் திடீர் எனத்தாக்கும் அந்த லேடி பேஷண்ட்டின் ஆக்சன் சீக்வன்ஸ்

3  முதல் கொலை நடக்கும்போது டாப் ஆங்கிள் ஷாட்டில் கொலைகாரனைக்காட்டும் இடம்

4 பிரமோக்களில் ராஜேஷ் குமாருக்கு முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர்கள் ,ஸ்டில்கள் வெளியிட்டது.சமீபத்தில் எந்த ஒரு ரைட்டருக்கும் கிடைக்காத மரியாதை இது 


  ரசித்த  வசனங்கள் 


1 பொண்ணு பார்க்க அம்மா உங்களை வீட்டுக்கு வரச்சொன்னாங்க


அதான் தினம் உன்னை இங்கேயே பார்க்கிறேனே?


2. குற்றவாளிகளை எப்போதும் சமூகத்தின் எதிரியாகத்தான் பார்க்க வேண்டும்.போலீஸ் ஆபீசர் தன் சொந்த எதிரியாகப்பார்க்கக்கூடாது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 காலேஜ் படிக்கிற பையன் நீ,ஹெல்மெட் போட்டுட்டு பைக் ஓட்ட மாட்டியா?எனக்கேட்கும் போலீஸ் ஆபீசர் ஆன நாயகன் பைக் ஓட்டும் சீன்களில் ஒரு முறை கூட ஹெல்மெட் போடவில்லை.

2 நாயகன் ,நாயகி இருவரும் காதலர்கள்.வீட்டில் தெரிந்து அனுமதியும் அளித்தாயிற்று.நாயகன் நாயகியை வீட்டில் தினம் ட்ராப் செய்கிறார்.ஆனால் நாயகியின் அக்கா கணவரைப்பார்த்ததே இல்லை என்பது எப்படி? போட்டோ கூட  காட்டி இருக்க மாட்டாரா ? நாயகி?


3 ஒட்டுக்கேட்கும் கருவி ஜீப்பில் இருப்பதை கண்டுபிடித்த பின்னும் நாயகன் ஜீப் அருகே நின்றே பேசுவது ஏன்?

4 பொதுவாக ஒரு டாக்டர் தலைல அடிபட்டிருக்கு என சொல்லும்போது தலையைக்கையால் தொட்டு சைகை காட்ட மாட்டார்.அமெச்சூர் நாடக நடிகன் தான் இடம் சுட்டிப்பொருள் விளக்குவான்

5  விசாரணைக்குப்போகும்போது சிவில் டிரஸ் ல (மப்டி))ல தான் போகனும் என சொல்லும் நாயகன் புத்திசாலித்தனம் அருமை.ஆனால் போலீஸ் ஜீப்பில் மப்டில ல போனா வருவது போலீஸ் எனத்தெரியாதா? இதுதான் உங்க டக்கா?

6 போலீஸ் ஆபீசர் ஆன நாயகன் கதை முழுக்க யாரையும் மதிப்பதில்லை.பெரியவர் ,லேடீஸ் என யார் இருந்தாலும் பப்ளிக்கில் ஒருமையில் தான் அழைக்கிறார்.

7 வில்லியைப்பிடித்த நாயகன் நாயகிக்கு என்ன ஆச்சு?அவளை நீ என்ன செஞ்சே? எனக்கேட்கும்போது வில்லி பதில் சொல்ல வில்லை.உடனே கான்ஸ்டபிளிடம் உடனே நீங்க ஜி ஹெச் போய் சந்தியாவுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க என்கிறார்.ஒரு போன் பண்ணி டாக்டரைக்கேட்டால் போதாதா?

8 சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஏழை இளைஞன் ஒரு கட்டத்தில் எந்தப்பின் புலமும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் கேட்டு ஒரு கேங்கை மிரட்டத்துணிவது எப்படி?

9  கொல்லப்பட்ட பலரது கை விரல் ரேகை எப்படி ஒரே மாதிரி இருக்கிறது ?என்பதற்கான விடை தெரிய வரும்போது படிப்பறிவே இல்லாத ஒரு சாதா சி செண்ட்டர் ஆள் அந்த அளவு பிரில்லியண்ட் ஆக யோசிக்க முடியுமா? என்ற கேள்வியும் ,சில சந்தேகங்களும் எழுகின்றன.

10  மார்ஷியல் ஆர்ட் கற்காத ஒரு சாதா பெண் எந்த தைரியத்தில் போலீஸ் ஆபீசரை அட்டாக் செய்யத்துணிகிறாள்?

11 மெயின் கதைக்கு ம்,நாயகனின் காதல் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஸ்பீடு பிரேக்கர்

12 ஜி அசோகனின் க்ரைம் நாவலில் முதல் படைப்பாக வந்த நந்தினி 440 வோட்ஸ் நாவலை விட்டுவிட்டு எதற்காக இந்த நாவலைப்படமாக்க வேண்டும்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ராஜேஷ் குமார் ரசிகர்களுக்குப்பிடிக்கும்.1990 காலத்தில் வந்த நாவல் என்பதால் பழைய நெடி அடிக்கிறது.அவரது லேட்டஸ்ட் நாவலை எடுத்திருக்கலாம்.ரேட்டிங்க் 2.5 /5

Monday, December 01, 2025

THE PET DETECTIVE(2025)-மலையாளம்/தமிழ் -சினிமா விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் க்ரைம் ட்ராமா)@ஜீ5

       


          16/10/2025 ல் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 17 கோடி ரூபாய் வசூலைக்குவித்த இந்தப்படம் இப்போது 29/11/2025 முதல் ஜீ 5 ல் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.கோலமாவு கோகிலா,ரிவால்வர் ரீட்டா டைப் கதை          


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின் அப்பா ஒரு டிடெக்ட்டிவ்.அதனால் நாயகனும் டிடெக்ட்டிவ்.அப்பா முதல்வர் எனில் மகனும் முதல்வர் ஆவது போல்.


மெக்சிகோவின் மிகப்பெரிய டான் தான் வில்லன்.அவனை யாரும் நேரில் பார்த்ததே இல்லை.பார்த்தவர்களை போட்டுத்தள்ளிடுவான்.அப்படிப்பட்ட வில்லனை நாயகனின் அப்பா ஒரு டிடெக்ட்டிவ் ஆக போட்டோ எடுத்து விடுகிறார்.அவரை வில்லன் பார்த்து விடுகிறான்.உடனே உயிருக்கு பயந்து நாயகனின் அப்பா தப்பி விடுகிறார்.


இங்கே கட் பண்ணினா 20 வருடங்கள் கழித்து...

நாயகன் தன் அப்பாவைப்போலவே டிடெக்டிவ் ஆக நினைக்கிறான்.அப்பாவின் டிடெக்டிவ் ஆபீசையே தூசு தட்டிக்குடி ஏறுகிறான்.நாயகனுக்கு ஒரு காதலி உண்டு.காதலியின் பக்கத்து வீட்டு ஆண்ட்டியுடைய செல்ல நாய் காணாமல் போகிறது.இந்தக்கேசைத்துப்பு துலக்கி நாயகன் நாயைக்கண்டு பிடித்து விடுகிறான்.

இங்கே கட் பண்ணினா


30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை கடத்திட்டு வரும் பிராஜெக்ட்டில் ஒருவன் அதை ஆட்டையைப்போடப்பார்க்கிறான்.அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.


நாயகன் ஆக சராப்யுதின் காமெடி யுடன் நடித்திருக்கிறார்.ஆக்சன் சீக்வன்சிலும் நல்ல உழைப்பு.

நாயகி ஆக அனுபமா பரமேஸ்வரன் அழகாக வந்து போகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் அருமை.ஆடை வடிவமைப்பும் அசத்தல்.


வில்லன்களில் ஒருவராக வினாயக் நடித்திருக்கிறார்.

விஜயராகவன்  சம்சாரத்துக்கு எடுபுடி கணவர் ஆக வரும் காட்சிகள் கலகலப்பு.

எடுபுடி ஆகப்பார்த்து விட்டு பிற்பகுதியில் ட்ரான்ஸ்பர்மேஷன் சீன்களில் அவரைக்கண்டு பயம் வரவில்லை.திரைக்கதையில் அது ஒரு பின்னடைவு.


இசை ராஜேஷ் முருகேசன்.பாடல் சுமார்.பின்னணி இசை  பரவாயில்லை ரகம்.

ஒளிப்பதிவு சந்திரன்.நாயகியை அழகாகக்காட்டி இருக்கிறார்.எடிட்டிங அபினவ் சுந்தர் நாயக்.116 நிமிடஙகள் டைம் ட்யூரேசன்.

ஜெய் விஷ்ணு வுடன் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார் அறிமுக இயக்குனர்  பிரணீஷ விஜயன்



சபாஷ்  டைரக்டர்

1 டிடெக்டிவ் ஆன நாயகனும்,போலீஸ் ஆபீசர் ஆன அவரது நண்பரும் சின்ன வயசில் கைகேயி என்ற க்ளாஸ்மேட்டை ரூட் விட்ட விஷயம் இப்போது வரை தொடர்வது நல்ல காமெடி கண்ட்டெண்ட்

2 வீட்டில் எலி வெளில புலி என்பது போல வெளி உலகம் பயந்து நடுஙகும் ஒரு ஆள். வீட்டில் பொண்டாட்டிதாசனாக , வேலைக்காரனாக இருப்பது செம காமெடி


3. கடைசி 20 நிமிடஙகளில் நடக்கும் காமெடிக்கலக்கல் சம்பவங்கள்


  ரசித்த  வசனங்கள் 

1 டிடெக்டிவ்னா என்ன? டிஸ்பென்சரின்னா என்ன? எனத்தெரியாத ஜனஙகளால என் டிடெக்ட்டிவ் ஏஜென்சியை மூட வேண்டியதாப்போச்சு


2 வாழ்க்கைல எப்போ எல்லாம் ரிஸ்க் என்னைத்தேடி வந்துச்சோ அப்போ எல்லாம் நான் ஓடி ஒளசிருக்கேன்

3 உன் வாழ்க்கைல ஒரு ஹீரோ யிக் மொமெண்டாவது இருந்திருக்கா?

4 போலீஸ் - மூவ்


என் கிட்டே இல்லை,கீழேதான் மெடிக்கல் ஷாப் இருக்கு,வாங்கிட்டு வரவா?


5 நேத்து நைட் நீ எங்கே இருந்தே?


கைகேயி கூட அவ வொட்ல இருந்தேன்

நைட் அங்கே என்னடா செஞ்சே?

அது பர்சனல்

பப்ளிக்கா சொல்லு

6 சுனில் எங்கே இருப்பான் ?

இருக்கற இடத்துலதான் இருப்பான்

7. எனக்கு இரண்டில் ஒண்ணு தெரிஞ்சாகனும்

என்னது?

ஒண்ணு நீ என்னைக்கட்டிக்கனும்,அல்லது நான் உன்னைக்கட்டிக்கனும்


8. உனக்கு நான் ஹெல்ப் பண்ணினது வெளில தெரிஞ்சா என் வேலையே போயிடும்


பெஸ்ட் ஆப் லக்.

9.  நீங்க எப் பி ஐ ஏஜெண்ட்டா?


எஸ் பி ஐ ல கூட எனக்கு அக்கவுண்ட் இல்லைஙக .


லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

,1 30  கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு காரின் பின் சீட்டில் இருக்கும்போது ரன்னிஙகில் இருக்கும் காரின் டிரைவரைக்கொல்வது ஆபத்தாச்சே? கார் எங்காவது மோதி தீப்பிடித்தால் சரக்கு எரிஞசிடுமே?

2 க்ளைமாக்சில் ஒர்க் அவுட் ஆன காமெடி சீக்வன்ஸ் படம் நெடுக ஒர்க் அவுட் ஆகவில்லை.



 அடல்ட்  கண்ட்டெண்டவார்னிங் - க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பிளாக் காமெடி ரசிகர்கள் பார்க்கலாம்.பிரமாதமும் இல்லை.மோசமும் இல்லை.பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5 / 5

 

The Pet Detective
Theatrical release poster
Directed byPraneesh Vijayan
Written byPraneesh Vijayan
Jai Vishnu
Produced byGokulam Gopalan
Sharaf U Dheen
StarringSharaf U Dheen
Anupama Parameswaran
Vinayakan
Vinay Forrt
Shyam Mohan
Joemon Jyothir
CinematographyAnend C. Chandran
Edited byAbhinav Sunder Nayak
Music byRajesh Murugesan
Production
companies
Sharaf U Dheen Productions
Sree Gokulam Movies
Distributed bySree Gokulam Movies
Release date
  • 16 October 2025
Running time
116 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Box office17.05 crore[2]